Thursday, July 7, 2011

மரணம் : லதானந்த்


கோவையைச் சேர்ந்தவரும், முன்னாள் பதிவருமான லதானந்த் என்கிற ரத்தினவேலு அவர்கள் நேற்று உக்கடத்திற்கு அருகில் தனது மகிழுந்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் பல வார பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் என்பது அறிந்த செய்தி. அரசு பணியில் இருக்கும் இவர் காட்டதிகாரியாக பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். இவருக்கு இரு மகன்கள் உண்டு.

அன்னாரது ஈமக்கிரிகைகள் உடனடியாக செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனை நண்பர் கொல்லான் அவர்கள் பதிவர்களிடம் தெரிவித்தார்.

அன்னாருக்கு சங்கம் சார்பாக அஞ்சலிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம். குடும்பத்தாருக்கு மன உறுதியை அளிக்குமாறு ஆண்டவனிம் வேண்டிக்கொள்கிறோம்.

அன்னாரது செல்பேசி இணைப்பில் இருக்கிறதாம்: 94424-17689

(பிகு:இந்தப் பதிவு முன்பதிவாகவும் பிற்காலத்துக்கு உபயோகப்படும் விதத்திலும் பதியப்பட்டிருக்கலாம் )

Friday, June 17, 2011

ஒரு எலக்கியவாதி உருவாகிறான் :))









நம்ம ஈரோ கோவாலு இருக்கானே அவன் பெரிய வஸ்தாது. எல்லாத்துக்கும் ரெஜிஸ்டர் மெயிண்டெயின் பண்ணுவான். ஆபிசில் அவனோட வேலையைப்பார்த்து மேனேசரு அவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்தாரு. கோவாலு பள்ளிக்கோடத்தில படிக்கும் போதே கம்ப்யூட்டர் க்ளாஸ் போயி அதை உப்பு போட்டு ஊறுகா தொட்டு கரைச்சு குடிச்சவன். நம்பி அவன்கிட்ட ஒரு கம்ப்யுட்டரை ஒப்படைச்சதும் அலுவாச்சியே வந்துடுச்சு. தினம் ஆபிசு வந்ததும் ஒரு துணி எடுத்து துடைச்சு தூசி தட்டி தொட்டுக்கும்பிட்டுட்டுதான் மறுவேலை.

திடீர்னு ஒரு நாள் அவன் கூகுளாண்டவரை எதையோ தேடப்போக அவனுக்கு தமிழ்ல ஒரு கட்டுரை சிக்குச்சு. என்னடா இது தமிழ்ல என்னவோ எழுதிருக்கேன்னு பார்த்தா, அது ஒரு பதிவு. ஆஹா இப்படி ஒரு மேட்டர் நமக்கு இதுவரைக்கும் தெரியாமப்போயிடுச்சேன்னு பயபுள்ள தேடித்தேடி ஒருவழியா ப்ளாக்ன்னா என்னான்னு கண்டுபிடிச்சான்.  கண்டுபிடிச்சானா அன்னைக்கு பிடிச்சுது அவனுக்கு கெரகம்.

முத நாள் ஒரு நாலு லைன் எழுதினான், அதை வெளியிட்டதும் அவனுக்கு அப்படியே புல்லரிச்சுப்போயிடுச்சு. அப்படியே சேர்ல சாய்ஞ்சு உக்காந்தானா.. கொஞ்சம் கண்ணை அசந்துட்டான். அவன் எழுதின பதிவு ஒரே நாளில் வாசகர் பரிந்துரையெல்லாம் தாண்டி எல்லா மணம், எலியிலையும் டாப்ல வந்துடுச்சு. பதிவுலகமே பரபரன்னு ஆயிடுச்சு. பேட்டி வந்து பரபரத்து போன பதிவுலக எஃபெக்ட் திரும்பவும் வந்ததுன்னு மூத்த பதிவர்கள் அறிக்கை விட்டாங்க. அதை பஸ்ல இருக்கும் 13,427 அண்ட் அரை பஸ்ஸர்களும் ரீஷேர் பண்ணி, புதிய எலக்கிய சுனாமியை ஊருக்கு அடையாளம் காட்டினாங்க.

மேற்கு புக் கடை, கண்மை போன்ற எல்லா பதிப்பாளர்களூம் அண்ணே நீங்க கைக்காசு போடவேண்டாம் நாங்க போட்டு அடிச்சுத்தரோம் புக்குன்னு ஆயிரம் காப்பி அடிச்சு எல்லா ஊரிலையும் புத்தக வெளியிட்டு விழா, அறிமுக விழான்னு அமர்க்களப்படுத்தினாங்க. எந்த பதிவர் டாப்ல இருந்தாலும் அள்ளிப்போட்டுக்கும் நொந்த விகடனில் வந்த அந்த பதிவு இன்னும் பிரபலமாக்கிடுச்சு. ஊரெல்லாம் தோரணம், கட் அவுட்டு, எலக்கியத்தை வாழவைக்க வந்த கம்ப்யுட்டர் கம்பன், அவ்வைப்பாட்டிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த அறிவுக்கொழுந்து, எழுத்துலக விடிசனி.. அப்படின்னு கன்னாபின்னான்னு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் பேனரு அதுல நம்ம கோவாலு கையில மவுஸோட ஸ்டைலா நிக்கும் போட்டா.

எந்த புக்கை எடுத்தாலும் கோவாலுவோட எலக்கிய உரை, இந்த மந்திரி அந்த போனை வாங்கினது நல்லதா கெட்டதான்னு நொந்த அகடனிலையும்,ங்ஙே பக்கங்கள்னு சந்தனத்திலையும் வாராவாரம் கோவாலு எடுத்த எலக்கிய வாந்தி. வாசகர் வட்டம், சதுரம் எல்லாம் தாண்டி கோவாலுவோட வாசகர்கள் சர்க்கஸ் பைக் ஓட்டுவாங்கல்ல கூண்டு அதிலேயே இருக்காங்களாம். செர்மனு, லண்டனு, ப்ரான்ஸுனு எல்லா ஊருலையும் இருக்கும் வாஜகர்கள் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிடறாங்க.என்ன நம்ம கோவாலுக்குதான் போகக்காசில்லை, ஒரு எலக்கியவாதியை வேர்ல்ட் டூர் போக வைக்க முடியாத இந்த சமூகம் நாசமாப்போகட்டும்னு ஒரு கவர்ஸ்டோரி எழுதலாம்னு ஐடியால இருக்கான்.

திடீர்னு தமிழ்திரை உலகின் சூறாவளி இயக்குனர் அஸ்குபுஸ்குவிடம் இருந்து போன், அவரோட அடுத்த கதைக்கு ஒரு ஃபுல் பாட்டுக்கு சோலோ டான்ஸ் ஆடி, திரைக்கதை எழுதித்தரனும்னு கெஞ்சி போனிலேயே காலில விழுந்தார். நம்ம கோவாலு பெரிய மனசு பண்ணி தொலைஞ்சு போகுதுன்னு டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டு காஸ்ட்யும் டிசைனரை வீட்டுக்கு வரச்சொல்லி கன்பார்ம் பண்ணினான். நம்ம கெட்ட நேரம் அந்த ஒரு பாட்டு மட்டும் எல்லாச்சேனல்லையும் -டிஸ்கவரி, நேசனல் ஜியாகரபி உட்பட எல்லாச்சேனல்லையும் ஓட்டோ ஓட்டோன்னு ஓட்டி ஓவர் நைட்ல புதிய புயல் கோவாலுவா ஆயிட்டான்.

கோவாலு கட் அவுட்டுக்கு பதிவர்கள் சார்பில் பாலாபிஷேமும் பீராபிசேகமும் நடக்கனும்னு பிரபல, ப்ராப்பள பதிவர்களுக்கு மத்தியில் சண்டை எல்லாரும் ஊர்வலம் போறாக, உண்ணாவிரதம் இருக்காக. புதிய புர்ட்சி தலவலி கோவாலுவை அடுத்த முதல்வரா வேட்புமனு தாக்கசொல்லி...கோவாலுவும் மக்கள் கோரிக்கையை மகேசன் ( அதாங்க அந்த கடேசி வீட்டு மகேசு) கோரிக்கையா நினைச்சு வேட்புமனு தாக்கல் செய்யபோறான். அதுக்குள்ள பஸ்ஸர்கள், பதிவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் மானாவாரியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டான். ஜெயிச்சு கோட்டைக்கு போகும் போது மழை வந்துடுச்சு. அட நாம பிரபலம் ஆனதிலேருந்து மழையில நனையவே இல்லையேன்னு தலையை மட்டும் நீட்டினா, மழை ச்ச்சோன்னு பேய்து...

அய்யே என்னா கோவாலு சாரு, இப்படி தூங்கறே? கம்ப்யுட்டரு வந்தா நல்லா வேலை செய்வேன்னு சொன்னாங்க, இப்படி வாயைத்தொறந்து தூங்கறே. ஒரு பாட்டில் தண்ணி ஊத்தி எழுப்பவேண்டியதா போச்சுன்னு அட்டெண்டர் அய்யாசாமி டெரரா நிக்கறான்....

அடக்கெரகமே. இம்புட்டு நேரம் கனாவா கண்டோம்னு ஃபீல் ஆயிடுச்சு கோவாலுக்கு, அப்படியே கம்ப்யுட்டரை ஷட் பண்ணிட்டு ரெஜிஸ்டரை ஓப்பன் பண்ணிட்டான்.....

மாரல் ஆஃப் தெ ஸ்டோரி : கனாக்காணுங்க...

டிஸ்கி. இதை படிச்சு எந்த பிரபல பதிவராவது நினைப்புக்கு வந்தா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது... ஆங் சொல்லிப்புட்டேன்

Wednesday, May 4, 2011

நன்றி- உண்மைத்தமிழன், சி.பி.செந்தில்குமார்

கலைஞர் டி.வி-க்கு பணம் கை மாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது…!
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வந்தாலும், இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.

இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.



கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன் பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட்வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது!'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம் ரூபாய் 3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் 381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின. ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு. இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள். இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், 209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி). ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக் கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது. இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 209 கோடியில், 200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது. அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த 200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல், சுற்றி வளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.விக்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது. அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர். இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டி.பி. குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக் கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன. முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ. 2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது. கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது. இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர். அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன. 19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம்வரை வாங்கிக் கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து, வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள். இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம்வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2-ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010-ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது. 2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது. ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி. பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன. கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் (70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.





''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!'' என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப் போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!


நன்றி: செய்திகளை உடனுக்குடன் காப்பி பேஸ்ட் செய்யும் அண்ணன்களுக்கு நன்றி

Sunday, January 23, 2011

அகடன் அவசர மீட்டிங்

”என்னா வெயிலு என்னா வெயிலு.”..புலம்பியபடி கூடியது. அகடன் நிருபர்குழு. வெசாலக்கிழமை வரவேண்டிய புக்குக்கு இன்னும் மேட்டர் சிக்கலை, திங்கக்கிழமையாயிபோச்சுன்னு ஒரு ஃபீலிங்தான். சினிமா சின்னி, அரசியல் கோட்டான், எலக்கிய எசக்கி, பீட்டரு எல்லாரும் வெயிட்டிங்...ஆங் எதுக்கா, ஜூசுக்கு தான், அதை குடிச்சுத்தொலைஞ்சாத்தான் கெரகம் பேசவே வருதாம்.

ஏய்யா எசக்கி,  உன்னோட பார்ட் ரெடியா?ன்னி சின்னி கேக்க, எசக்கி ஒரு பெரிய கொட்டாவியை ரிலிஸ் பண்ணிட்டே..ஆங்க்க்க் என்னா கேட்டே, இன்னும் இல்லைப்பா, எடிட்டரு வேற புதுசா எதாவது படிச்சு வெமர்சனம் எழுது உயிரை எடுக்கறாரு, யாரு எழுதறதும் புரிஞ்சு தொலையலை, என்னா பண்றதுன்னு பேஜாராக்கீது. பாரு ஒரு புக், சுமோ ஒரு புக்குன்னு இஷ்டத்துக்கு மாசம் ஒன்னு எழுதுறாங்க, அத்தப்படிச்சு புரியறதுக்குள்ள நாக்குத்தள்ளுதுப்பா...உன் கதை என்ன?

அரசியல் கோட்டான், அதே தான் இங்கயும் இந்த தலீவரு இப்படி சொன்னாரு, அந்ததலீவரு அப்படி சொன்னாருன்னு எதாவது ஒரு வார்த்தையை போல்ட் பண்ணிபோட்டாப்போதும், நம்ம மேட்டர் ஓவரு..ஏப்பா சின்னி நீ என்னா பண்றே?

அட 6 படாவதி படம் ரிலீஸ் ஆவுது, அத்தனையும் பார்க்கனுமாம், இதுக்கு நான் 4 எருமையை மேய்ச்சுட்டு ஊரிலேயே இருந்திருப்பேன். எந்த டைரடக்கரு,ஹீரோ எவனைப்பார்த்தாலும் அவிங்க படம்தான் உலகத்திலே சொல்லாத கதையும் எல்லாப்படமும் 100 நாள் ஓடற மாதிரியுமே பில்டப்பு விடறாங்க, கடுப்பா இருக்குது...இந்த வேகாத வெயிலுல எங்க சுத்தி யாரைப்பார்த்து என்னா செய்யறது...


எசக்கி ஒரு மார்க்கமா சிரிச்சுட்டெ, ம்ம்க்கும் இதுக்கு ஏன் நீ டென்சன் ஆவுறே, நமக்குன்னே இருக்காங்க ப்ளாக்கர்ஸ், கைக்காசைபோட்டோ, ஆபிசிலேயோ டைமை செலவு பண்ணி புக்கை படிச்சு, சினிமாவைப்பார்த்து, அரசியலை அலாசி புழிஞ்சு காய வச்சு, ஒலக படம் முதக்கொண்டு ஊறுகாய் வரைக்கும் அவிங்களுக்கு தெரியாத மேட்டரே இல்லை. என்னா எழவு, அவிங்களுக்கு நம்ம பொஸ்தகம்  மேல ஒரு தனி கிக்கு, அவிங்க பேரை நம்ம பொஸதகத்திலே எங்காவது ஒரு ஓரத்திலே பார்த்தாக்கூட மேடு மேயற அளவுக்கு புல்லரிச்சுடுவானுக, அவங்கள்ல யாரையாவது பிடிச்சு ஃப்ரெண்ட் வச்சுக்க, நம்ம புக்குல 120 பக்கத்துல 40 பக்கம் ஃபுல் பண்ணிடலாம், மீதிக்கு இருக்கவே இருக்கு வெளம்பரம்.


சின்னி, அட ஆமால்ல, எப்பேர்ப்பட்ட டூபாக்கூர் படமா இருந்தாலும் அதையும் அக்குவேற ஆணிவேறையா பிரிச்சு மேய்வாங்க, எந்தப்படம் எதோட காப்பின்னு லின்க் கொடுத்து காட்டிக்கொடுக்கிறாங்க. எப்படித்தான் முடியுதோ? நாலு பேர் எழுதின விமர்சனத்தை படிச்சு அங்கங்க போட்டா போட்டு கவருக்கு தக்கன மார்க் போட்டா ஓவரு. ஏண்டா கோட் போட்டு உக்கார்ந்து மார்க்கா போடறேன்னு ஒரு பய நம்மளை கேள்விகேக்க மாட்டான்.

அது மட்டுமா? பாருவே மறந்துபோன கதையெல்லாம் கட்டம் கட்டி காட்டுவாங்க. ஒரு கவிதை, கதை விடாம படிச்சு சொல்லிடறாங்க, அதை நாம அப்படியே கொஞ்சம் உருவி அந்த எழுத்தாளன் போட்டாவை போட்டுட்டா.. அடடா..அகடனுக்கு இம்புட்டு அறிவான்னு மெச்சிக்கலாம், இதையே தொகுத்து ஒரு பொஸ்தவமா போட்டு கல்லா கட்டிடலாம்.

கூகுள்காரன் இலவசமா ப்ளாக் எழுத கொடுக்கிறான், இவிங்களும் எழுதறாங்க, இவங்க படிப்பாங்கன்னு தானே நாமளும் நல்ல ப்ளாக் கெட்ட ப்ளாக்குன்னு ஒரு பக்கத்தை வச்சு ஹிட்ஸ் வாங்கி வெளம்பரத்தில அள்ளறோம்..

 
ப்ளாக்கர் யாரையாவது ப்ரெண்ட் புடிச்சா அகடனுக்கு நல்லது, வலைமேயுதுன்னு ரெண்டு பக்கம், கல்காடுன்னு ரெண்டு பக்கம் கவிதையை நிரப்பிடலாம்.. அவங்க பேரு வருதுன்னு புக்கும் விக்கும். ப்ளாக்கர்ஸ் இல்லனா நாமல்லாம் நெசமாவே வேலை செய்யவேண்டியிருக்கும்டி, இப்படி நோகாம நோம்பிகும்பிட முடியாது. அவங்களும் இதெல்லாம் வெளியிட காப்பிரைட்ஸ் போட்டான்ங்கன்னு வைய்யி, நம்ம வேலைக்கு சங்குதான், நெச ரிப்போர்ட்டர்ஸ் ப்ளாக்கர்ஸ் தான், ப்ளாக்கர்ஸ்ஸை நம்பித்தாண்டா ஸோ கால்ட் எழுத்தாளர்கள் இருக்காங்க. இவங்க புக் போட்டா சங்கம் வச்சு நட்பு வளர்த்தும் பாசத்துக்காகவாவது 4 பேர் படிப்பாங்க, நாமளே நம்ம புக் விக்க இதை முதல்ல மைண்ட்ல செட் பண்ணி அப்புறமா வாய்ஸ்ல கேளுங்கப்பு. எவனோ ப்ளாக்கர்ஸை கிண்டல் பண்ணிக்கொடுத்தா உடனே பூரிக்கவேண்டாம், அவனே அவன் ப்ளாக்க்ல அகடனுக்கு வச்சிருப்பான் ஆப்பு. சாக்ரதை மாப்பு..

இப்படியே புலம்பிட்டு நெட் ஓப்பன் பண்ணி ஒவ்வொரு ப்ளாக்கா பார்த்து திருட ஆரம்பிச்சு அந்த வார இஷ்யூக்கு மேட்டர் தேத்த ரெடியாயிட்டான்ங்க......


டிஸ்கி.:இன்னும் வரும்