Showing posts with label இராம். Show all posts
Showing posts with label இராம். Show all posts

Monday, July 27, 2009

பிரபல பதிவர் ஆவது எப்பிடி? Guide For Dummies

எங்கன திரும்பினாலும் பிளாக் பிளாக்’னு ப்ளேக் நோய் மாதிரி பெருசா பரவி, அமிதாப் பச்சன்’லே இருந்து எங்கூரூ அரைடவுசரு வரைக்கும் பிளாக் ஆரம்பிச்சிட்டு இருக்குதுங்க.. வெள்ளைக்கார தொரை படிக்கிற டைம்ஸ் ஓப்பன் பண்ணினாலும் ப்ளாக், நாமே எழுத்துக்கூட்டி படிக்கிற இந்தியன் டைம்ஸ், இந்து’ன்னு எடுத்தாலும் ப்ளாக், தினதந்தி, தினமலருன்னு எல்லாபயலுவெல்லாம் ப்ளாக், பளாக்’ன்னு பத்த வைச்சி இப்போ தீயை கொழுந்து விட்டு எரிய விட்டுட்டாய்ங்கே..

ஆக எப்பிடியோ இதை பத்தி தெரிஞ்சி இந்த பக்கம் வந்து பிளாக்’ன்னு ஒன்னு ஆரம்ப்பிச்சி எல்லார்கிட்டேயும் ஐ யூஸ் டூ ப்ளாக்கிங்’னு பீலா விட ஆரம்பிச்சிட்டோம்’லே.. அப்பிடின்னா பேமஸ் ஆகிருக்கனுமின்னு பார்த்தா அதுவுமில்ல.. இப்போ ரெண்டு ப்ளாக்கர் மீட்டை போட்டா ”என்னாங்க நாமளும் நொங்கு நொங்குன்னு கீ-போர்ட் தேய தேய தமிழிலே தட்டச்சி பதிவெழுதினாலும் இன்னும் பிரபலமாகலே’னு மேவளையே சொறிஞ்சிட்டு பேசி கொல்லுறாங்க

அந்த மாதிரி டம்மி பதிவர்களுக்காக பாடம் சொல்லிகொடுக்க போறோம்.. ஒழுங்க கிளாஸ்’க்கு வரனும் ஆமாம் சொல்லிப்பிட்டோம்...




நீங்க எப்பிடி பதிவெழுத வந்தீங்கன்னு முதலிலே ஜீலேபி சுத்தி பார்த்து தெரிஞ்கிட்டாச்சு, அடுத்து தமிழிலே எப்பிடி பதிவெழுத வந்தமின்னும் ஒரு சுத்து சுத்தி பார்த்துக்கோங்க.. எவனோ ஒருத்தன் வீணா போனவன் சும்மா இருக்கிறதை விட்டுட்டு படிச்சதே அப்பிடியே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி மயில் தட்டி விட்டுருப்பான். நீங்களும் அதை படிச்சி பார்த்துட்டு நாமே தட்டுனா கூட தமிழிலே வருமான்னு முன்னர் காலத்திலே டைரி’லே எழுதி வைச்சதெல்லாம் டைப் பண்ணி பார்த்து சுவத்திலே திரிஞ்சிட்டு இருக்கிற பல்லிக்கு கூட பயம் வர அளவுக்கு டெர்ரா போஸ் கொடுத்தீருபீங்க... ஆக ஏரியா’விலே தமிழ் எழுத தெரியுமின்னு பில்ட்-அப் ஆனதும் ப்ளாக்வுலகத்திலே டொப்பக்குன்னு குதிச்சிருப்பீங்க. ஓகே.. அமீர்கான் தன்னோட நாய்க்குட்டிக்கு ஷாருக் பேரு வைச்சிருந்ததே தன்னோட பிளாக்’லே போட்டு பிளாக்-வேர்ல்ட்’லே ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு, சிவாஜி, எம்ஜீஆர்’னு எல்லாரையும் டரியல் ஆக்கி ஜேமோ லைம்-லைட்’க்கு வந்துட்டாரு.. இங்கன ஒன்னு ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. கைய்யா புய்யா’னு கத்துனாதான் எல்லாரும் திரும்பி பார்ப்பானுக.. எப்பிடி கத்துறதுன்னு பார்க்கலாமா?

1) போனமாசந்தான் தமிழிலே டைப் பண்ண தெரிஞ்சாலும் பத்து வருசமா ப்ளாக் படிக்கிறேன். ஏழரை வருசமா பின்னூட்டபதிவரா இருந்தேன்.. இப்போ ஒன்றரை வருசா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்னு சொல்லனும்.. எல்லாரோட பிளாக்’ம் படிப்பேன். எல்லாரையும் கூகிள்-ரீடரிலே சேர்த்து வைச்சிருக்கேன். ஆனா படிக்கதான் நேரமில்லை’னு சீன் போடனும். ஆக எழுதுறது இல்லாட்டியும் நிறைய படிப்பாரு போலே’னு நினைச்சிக்குவாங்க. அப்போ எப்போதான் எழுதுவீஙன்னு ஆரும் கேட்டா இப்போல்லாம் எழுதவே ஒன்னுமே தோணமாட்டேங்கிதுன்னு சொல்லனும். அப்பிடின்னா என்னான்னு அவங்க கேட்டா It's kinda writing stroke’னு பீட்டரு வீட்டுட்டு வெடுக்குன்னு வந்துறனும்.. சொல்லிட்டு அங்கனெ நின்னுங்கன்னு வைச்சிக்கோங்க.. அப்புறம் அவங்க துப்பினதை தொடைக்கிறது கிலோ கணக்கிலே துண்டு வாங்கனும்...

2) இது இன்னொரு முக்கியமான பாயிண்ட்: சொல்லவந்ததை கொலைவெறியோட சொல்லனும், எப்பிடின்னா சன்னலை தொறந்தா காத்து வருதுக்கிறதே’னு எழுதுறதே கூட இப்பிடி எழுதனும், மண்ணின் அடுக்குமுறைக்கு அடங்கா வீரியமிட்டு எழுந்த விதையின் வளர்ந்த விருட்சம், தன் இருந்தலியத்தினை என் சாளரம் நுழைந்து மேனி தழுவி சென்றது காற்றாய்’ன்னு எழுதி இது தமிழா, இல்லே என்னான்னு தெறிக்க விட்டு அந்த பயலை இதுக்கெல்லாம் என்ன அர்த்தமின்னு தயவு செய்து சொல்லிருங்கன்னு கதறவிடனும். நமக்காக ஆராவது கண்ணீரு விட்டா அது ஆனந்தம் தானே? ஆக கொலைவெறி கவுஜனா பார்ம் ஆகிச்சாசு. அடுத்து கதை எழுதுறது, அது எப்பிடி தெரியுமா? ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் எல்லாத்தையும் பழைய பேப்பர் கடையிலே மொத்தமா பத்து கிலோ வாங்கிட்டு வாங்க. அதிலே இருக்கிற ஒரு பக்கத்து கதையெல்லாம் படிச்சி பாத்து அதிலே எது ஒரே மாதிரியான கதையமைப்பிலே இருக்கிறதே எல்லாத்தையும் ஒரே கதையா மாத்துங்க. உண்மையே சொல்லனுமின்னு நம்ம ஊரு பழம்பெரும் எழுத்தாளர்களெல்லாம் ஒரே கதையே கொஞ்சகாணு மாத்தி அப்புறம் தன்னோட புனைபேரையும் மாத்தி மூணு-நாலு பொஸ்தககாரவுங்களும் அனுப்பி வைச்சிருப்பாங்க, அது பிரசுரம் ஆகி வெகுமானம் வாங்கினது பத்தாமே ஏதோ ஒரு ஊரு பேரு போட்டு வாசகர்கடிதத்தை தனக்கு தானே எழுதிருப்பானுக. சரி அதை விடுங்க, நம்ம மேட்டருக்கு வருவோம். கதையே எல்லாத்தையும் கலந்து கட்டி மிக்ஸ் பண்ணிட்டிங்களா? அத அப்பிடியே ஆருக்காவது மயில் தட்டி விடுங்க, ஒன்னொன்னு இங்கன முக்கியமான விசயம், அனுப்பி வைக்கிற ஆளுக்கு அரைகொறயா தான் எல்லாமே தெரிஞ்சிருக்கனும், இல்லன்னா ஒங்களே அது இதுன்னு கேள்வி கேட்டே கொன்னுருவாய்ங்க, அதை விட முக்கியமான விசயம் ஒங்கள மாதிரியே அவரும் டீ-யானை’யா இருந்தா ஒன்னியுமே பண்ணமுடியாது. அதுனாலே பண்ணுற நாதாரிதனத்தை நாசுக்கா பண்ணுங்க.

3) தன்னோட பிளாக்’லே எழுதுறதிலே கொலைவெறி காட்டுறோமின்னு இல்லாமே மத்த இடத்திலே போய் ரத்தபூமியாக்கி, அந்த இடத்தே சொத சொதன்னு ஆக்கி, அந்த ஈரத்திலே கோலியாடிட்டு வரனும்.. அது எப்பிடின்னு கேட்கிறீங்களா? நம்மாளு தட்டுமுட்டி எப்பிடியோ (உண்மையாகவே) கதை எழுதி வைச்சிருந்தா, இதெல்லாம் எப்போவோ சுஜாதா’கிற சின்ன எழுத்தாளர் அந்த காலத்திலே கிறுக்கி வைச்சிட்டாரேன்னு சொல்லனும்.. அப்புறம் இன்னோரு நாளு அதே பதிவர் சுஜாதா பத்தி எதாவது எழுதி வைச்சிருந்தா கூட ”அவர்கள்” படத்திலே ரஜினிக்கு சோடி கட்டி நடிச்சிட்டு அவரோட உழைப்பாளி,பாபா படத்திலேல்லாம் அம்மா வேஷம் கட்டுனாங்களே அவங்களான்னு கேட்டு வைக்கனும்.. ஒடனே சுத்தி இருக்கிறவங்கல்லாம் ஆகா இவரு அவளோ பெரிய ஆளையே சும்மான்னு சொல்லுறாரே.. மண்டை பார்ட்டி’னு சொல்லிரும்.. அப்பிடியே ஃபார்ம் ஆகிறலாம்.

4) இப்போ இன்னொரு முக்கியமான பாயிண்ட்: கூட்டம் சேர்க்கிறது. அது எப்பிடின்னா பாட்சா படத்திலே ரஜினி அன்பாலே சேர்ந்தகூட்டமின்னு சொல்லுறமாதிரி கெத்தா சேர்க்கனும். கூட்டம் சேர்க்கிறது பெரிய கம்பசூத்திரமில்ல, சுமாரா எழுதுறவங்களே லிஸ்ட் எடுத்து வைச்சிக்கிட்டு நீயெல்லாம் இன்னும் எழுதினேன்னா நல்லாவருவே, இன்னும் நிறையபடி! ஒலக சினிமாகள் பாரு! அது இது’னு காதல் படத்திலே வர்ற சொட்டையரு வசனமான “நீங்க நல்லா வருவீங்க தம்பி!! நீங்க நல்லா வருவீங்க!!”னு சொல்லிட்டு வரனும். இதே கேட்கிறதுங்க ஆகா நம்மளையும் நம்புறாங்களேன்னு நீங்க அடிவாங்கிற கைப்புள்ளயா இருந்தாலும் ஒங்களை வைச்சி சங்கமின்னு ஒன்னு ஆரம்பிச்சி புது கோஷ்டி பார்ம் பண்ணிருவானுக.. அப்புறமென்னா நல்லா கூவு.. ஒரக்கா கூவு’ன்னு சொல்லிட்டு கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா போதும்.

5) அப்பிடி இப்பிடின்னு தல’ன்னு நாலு பேரு கூப்பிடுறளவுக்கு ஃபார்ம் ஆகீட்டிங்கன்னா போதாது, அப்பிடியே ரவுடியா வாழனும், வாழ்ந்துகாட்டனும்.ஆஸ்கர் வாங்கின ரகுமானிலிருந்து, இசைஞானி இளையராஜா வரைக்கும் எல்லாரையும் திட்டி தீர்த்து தள்ளனும் மைக்கேல் ஜாக்சனை பத்தி நல்லா எழுதிருந்தா கூட இடையிலே பாப்-மார்லி அளவுக்கெலாம் நானு MJ'வே மதிக்கிறது இல்லை’னு சொல்லனும். எதை எழுதனாலும் அதுக்கு நாலு பாகம் போட்டு இருக்கிறவனை கொன்னு தள்ளனும், உள்ளுக்குள்ளே ஒன்னுமில்லாட்டியும் படிக்கிற அரைப்பேக்கு’ங்க அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்க்’ன்னு மனசாட்சியே இல்லாமே சொல்லுவாங்க. எல்லாத்தையும் பெருமையா எடுத்துக்கிட்டு எனக்கு இப்போ டைம் இல்லை. சீக்கிரமே எழுதுறேன்’ன்னு பொளந்து கட்டனும். அதுக்கொ இல்லே எதுக்கொன்னாலும் சரி எதுக்குமே எதையும் ஒத்துக்க மட்டும் செஞ்சிறக்கூடாது, யாராவது துறை சார்ந்த பதிவெழுதுறேன்னு கிளம்பி வந்தா இந்த வேலையே பார்க்கிறதுக்கு நீங்க பேசாமே உருப்படியா வேலையே பார்த்து முன்னேற வழியை பாருங்கன்னு அட்வைஸ் ஆறுமுகமா அவதாரம்மெடுக்கனும். அப்பிடியும் அவரு அடங்கலைன்னு வைங்க, அவரு எழுதின ஒவ்வொரு எழுத்திலையும் குத்தம் கண்டுப்பிடிச்சி பின்னூட்ட பக்கத்திலே பாண்டியாடனும்.

இது வரைக்கும் பதிவரிலிருந்து, பின்னூட்ட பதிவராகி அப்புறம் எளக்கியவியாதி பதிவர், தல பதிவர், கலவர பதிவர்’ன்னு படிப்படியா பிரபல பதிவர் ஆகிறதுக்கு உண்டான வழிமுறைகளை பார்த்தாச்சு’லே.. எல்லாத்தையும் ஒவ்வொன்னா அதுவும் படிப்படியா பின்பற்றிட்டு சொல்லுங்க. அடுத்து மாபெரும் பிரபல பதிவராவது எப்பிடி? மா-மாபெரும் பிரபல பதிவர் ஆவது எப்பிடின்னு அடுத்த பாகம் போடுறோம்.. இப்போ ஐயம் ஷோ பிஸீ... நோ -டைம்.. யூ சீ.....

Thursday, September 4, 2008

நிஜார் எக்ஸ்பிரஸ் - 02

தல தர தர'ன்னு இழுந்துட்டு வந்த நிஜார் எக்ஸ்பிரஸ் என்னோட ஸ்டேசனிலே ஆணிகளெனும் அவஸ்தை புயலினால் தடம் புரண்டுவிட்டது, தடம் நிமிர்த்தி ட்ராக்'க்கு இழுந்துட்டு வந்தாச்சு.

டவுசர்(aka) நிஜார் அணிந்த காலங்களில் நாம் புரிந்த அக்கப்போருகளை சரித்தரபக்கங்களாக ஆவணப்படுத்தும் சுயமுயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.... (ஹி ஹி)

அந்த சரித்திரத்தை நீங்கள் அறிந்துக்கொள்ள உங்களின் காலச்சக்கரத்தை சென்ற நூற்றாண்டின் இறுதிகளில் சுழற்றி(டிஜிட்டல் கடிகாரமாயிருந்தாலும்) வைக்கவேண்டும், ச(த)ரித்தர நாயகனான அவனும், அவனின் உடன்பிறப்பான தமக்கையாரும் பள்ளி முடிந்து வந்ததும், விளையாட செல்கிறோம் என அவர்கள் வீட்டில் அனுமதி வாங்கி வந்து, அவர்கள் குடியிருந்த தெருவில் தங்கியிருந்த சக வானராங்களுடன் அடித்த கொட்டத்தை எழுதி வைக்க நூறு அல்ல நூறாயிரம் பக்கங்கள் கொண்ட ஏடுகள் தேவை.

சரித்திரநாயகனின் வீடு விசாலமான தெருவில் அமைந்து விட்டதால் அதற்கடுத்த மற்ற தெருக்கள் எல்லாம் குறுகலானது எனபதினால் மற்ற தெரு வானாரங்களும், ஒரே தெருவில் கூடிதான் விளையாடுவார்கள். அந்த விசாலமான தெருவில் அனைத்து வீடுகளும் உயரமான வாசல் அதாவது திண்ணை இருப்பதினால், முதலில் எல்லாரும் ஆரம்பித்து வைப்பது, "கல்லா - மண்ணா" விளையாட்டுதான். பத்து பதினைந்து பேரு கூடி சாட்-பூட் த்ரி போட்டு கடைசியாக மிச்சமாக இருப்பவன்/ள் தவிர அனைவரும் திண்ணையில் ஏறி நின்னு அவன்/ள்'க்கு பழிப்பு காட்டுவார்கள், யாராவது கிழே வந்துவிடுவார்கள் என அவன்/ள்'ம் மிகவும் பிரயத்தன படுவான்/ள். அவன்/ள்'ஐ இவர்கள் வெறுப்பேத்த இந்த திண்ணையிலிருந்து அந்த திண்ணைக்கு தாவி குதிப்பார்கள், தாவி குதிப்பது என்பது ஒரு ஆளாக செய்வதில்லை, மொத்தமாக இந்த திண்ணையிலிருந்து ரெண்டு பேரும், அந்த திண்ணையிருந்து ரெண்டு பேரும் இண்டர்சேன்ஞ் பண்ணி அவனை/ளை போட்டு குழப்பிவிடுவார்கள். அதிலும் கொஞ்சம் சோதா'வான ஒருத்தன் இண்டர்-சேன்ஞ் செய்யும்பொழுது மாட்டிக்கும் பொழுது அவன்/ள் அவுட்.. அப்புறம் அதற்கடுத்து அவர்களிடமிருந்து ஆட்டம் மறுபடியும் தொடங்கும், எப்பிடியும் அவர்களிடம் மாட்டுவது நமது சரித்தரநாயகன் என்பது உள்ளங்கை மாங்கனி,(மங்காணி தான்).

அவன் மண்ணுக்கு வந்துவிட்டதால், நமது சரித்தரநாயகன் சோதா'பய என்பதினாலும் ஓடிச்சென்று திண்ணை மாற்றுபவர்கள் மெதுவாக நடந்துச்சென்று திண்ணையில் ஏறி நின்று வெறுப்பேத்துவார்கள், இவனும் தன்னால் இயன்றவரை முயன்று பார்த்து தன்னுடைய தன்மானம் பெண்ணினத்துக்கு முன்னால் தலைகுனியும் அவலத்துக்கு உள்ளாக்கப்பட்டதை நினைத்து தன்னுடைய ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், தன்மான ஆணினத்தை உசுப்பேத்துவிதமாகவும், "டேய் பசங்களா, நாமே எதுக்குடா பொம்புள்ளபிள்ளக கூட வெளாயாடாணும்? நாமே போயி பச்சக்குதிர தாண்டி வெளையாடுவோமி"ன்னு சங்கத்தை கலைத்து இனம் இனத்தோடு சேர்த்தே தொலையுமின்னு இருக்கிற எல்லாபேத்தயும் உசுப்பேத்தி வைத்து, அவர்கள் எல்லாரும் வேறுவழி இல்லாமல் பச்சக்குதிர வெளயாட ஆரம்பிப்பார்கள். நிரகாரிக்கபட்ட இனமான அந்த பகுதியினர் "போங்கடா வெளக்கெண்ணெய்களா, என ரோட்டில் கவருமெண்ட் போட்டு வைத்த நிரத்தர கோடுகளால் அமைந்த மைதானத்தில் பாண்டியாடுவார்கள். அது எப்பிடின்னா சின்ன சில்லாக்கு எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டே, அந்த கோடு'ஐ மிதிக்காமால் காலை எட்டிவைச்சு நடந்து அடுத்த எல்கைக்கு போயி சேரவேண்டும், அந்த விளையாட்டு ஆரம்பிக்கும் பொழுதே சரித்திரநாயகனின் இனத்தார்கள் இதெல்லாம் பொண்டுக வெளையாட்டு, அலுங்கமே குலுங்கமே வெளயாடுதுக'ன்னு எளக்கார அறிக்கைவிட்டு, வழக்கம்போலே சாட்-பூட் த்ரி'யில் தோற்கும் நமது சரித்திரநாயகனின முதுகில் ஏறி குதிப்பார்கள், சிக்கினது நம்ம சரித்திரநாயகன என்பதினால் தெருவில் போகும் கிழ கட்டைக்கூட ஒரு ஜம்பு அடித்துவிட்டு செல்லும். அனைவரும் பச்சகுதிர தாண்டுவதற்காக, தன்னுடைய முதுகை கவுத்திப்போட்ட 'U'வாக வளைத்துகாட்டியவன் தன்னுடய தாண்டும் முறை வருவதற்குள் சோர்ந்துவிடுவான், கிடைத்தது லாபமின்னு மற்றவர்களும் செவனே'னு உக்கார்ந்துவிடுவார்கள். இப்போழுது விளம்பர இடைவேளை, அல்லது டிரிங்ஸ் பிரேக்.

வெளையாடி வெளையாடி களைந்து போனவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று தண்ணிக்குடிக்க செல்லும் போது, அம்மா "டேய் பசங்களா, இருட்டுற பொழுதாச்சு, வெளாயாண்டது போதும் வந்து வீட்டுப்பாடத்தை எழுதிட்டு படிங்க" என கட்டளை பிறப்பிப்பார். இருட்டுவதற்கு இன்னும் ரெண்டு மணி நேரமிருக்கிற மிதப்பில் அடுத்தக்கட்ட விளையாட்டுப் போட்டிகள் அந்த தெருவான மைதானத்தில் நடக்க ஆரம்பிக்கும். இப்போழுது பம்பரம் சுழற்றுவது. ஆணினம் மட்டும் ஆடும் ஆட்டமெனில் அது பெரும்பாலும் "ஆக்கர்" வகையறவாகே இருக்கும், அனைவரும் சாட்டைய பம்பரத்தில் சுற்றி ரெடி 1 2 3 சொல்லியதும் சுழற்றவிடுவார்கள், அபேஸ் சொல்லும் கணநேரத்தை பம்பரமும், அதன் எஜமானரும் சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். எப்பிடியெனில் பம்பரத்தை சுழற்றிவிட்ட சமயத்தில் சரியாக எல்லாரும் "அபீட்" சொன்னதும் எஜமான விசுவாசத்தின் கட்டமைப்புகளின் தக்கநிலையான கிழ்படிதல் மற்றும் சொல்பேச்சு கேட்டல் ஆகிய காரணிகளை பொறுத்து அந்த பம்பரம் அவர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துக்கொள்ளும். இவ்விடத்தில் உங்களால் எளிதாக யூகித்துக்கொள்ளும் வகையில் நமது சரித்திரநாயகனின் சொல்லிற்கு கீழ்படியாமல் அந்த பாழாய்ப்போன பம்பரம் கிழே இருந்துக்கொண்டு புவியுர்ப்பு சக்திக்கு என்னால் எதிர்ப்பு சக்தி கிடையாது என காந்திவழியில் அறப்போராட்டத்தில் ஈடுபடும். அப்புறமென்ன எல்லாரும் நமது சரித்திர நாயகனின் பம்பரத்தை வட்டத்திற்குள் வைத்து செம சார்ப் "ஆக்கர்" வைப்பார்கள். சில பல என இந்த பேருலகத்தில் சூழ்ந்த எதிரிகளால் அந்த அருமை கொண்டை வைத்த பம்பரம் ரெண்டு முன்று பிளவாக பிளக்கப்பட்டு சரித்திரநாயகனின் வரலாற்று பக்கங்களில் கரும்புள்ளிகளின் பங்கில் ஒன்றாய் பல்லுளிக்கும்.

மாலைகருக்கலின் இறுதியில் வசிறி கம்போடு அம்மா வர எல்லாரும் ஹெ.. ஹெ...ன்னு கத்திக்கொண்டே வீடு என்னும் கூடு அடைந்து வீட்டுபாடங்களும், மறுநாள் ஒப்பிக்க வேண்டிய மனபாடங்களுக்கும் படிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வரு(று)புறுத்தல்கள் காரணமாக நமது சரித்திரநாயகனின் நிஜார் எக்ஸ்பிரஸ் அப்பிடியே நிறைவடைந்தது...

இன்னும் எழுத வேண்டியது நிறைய இருந்தாலும் தடம் புரண்ட தண்டவாளத்தை சரி பண்ணி எக்ஸ்பிரஸ் டிரெயின் ஓடவைக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே கண்ணுக்கு தெரிந்ததால் சரியாக கொசுவர்த்தி சுருளை சுற்றுவதில் கொஞ்சகாணு சிரமம்... ஆன விடமாட்டோமில்ல.... மிச்சமிருக்கிற கதை எல்லாத்தையும் வலையேத்தாமா விடமாட்டோமில்லே..... :))

நான் வந்து திரும்ப எக்ஸ்பிரஸ் ஓட்டிட்டு போறவரைக்கும் வலையுலக விவசாயி'யுடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன்.

முதல் நிறுத்தம் :- சென்னை
இரண்டாம் நிறுத்தம்:- மதுரை
முன்றாம் நிறுத்தம்:- பவானி

Wednesday, April 23, 2008

தாரே வடபழனி பார்..

நம்ம தல'க எல்லாத்தையும் தியேட்டரிலே பார்த்து மக்கள் சிரிச்சிட்டாங்கன்னா, இண்டர்நெட்,சங்கம்,இன்னும் என்னனென மண்ணாங்கட்டியோ அதிலேயெல்லாம் போட்டு தாளிச்சிட்டாங்கன்னு பயங்கர பீலாகி சரக்கை ராவா உள்ளே விட்டுக்கிறாரு முருஹன். இவரு யாருன்னு பார்த்தா ஜோடி நம்பர் - 1 புகழ் நடிக்கவே தெரியாத அடுத்த அஷ்டாவதானி சொம்பாகியா வம்பு பிடித்த சிம்புவின் அஸிஸ்டெண்ட். இவருக்கு கூட சரக்குக்கு கம்பெனி கொடுக்கிறது நம்ம புரச்சி இயக்குநரு பேரரசு அஸிஸெண்ட் அவருக்கு இன்னும் பேரு இன்னும் வைக்கலை. ஏன்னா அவருடைய குருதேவர் வைக்க போற பெயரை வைச்சிதான் படமெடுக்க போறாரு. அதுனாலே இப்போ சின்ன பேரரசு.

முருஹன்:- "என்னாங்க நம்ம நிலமை இப்பிடி ஆகிப்போச்சு.கண்டமேனிக்கு வியர்வை உதிர்த்து உழைச்சு படமெடுத்து ரீலிஸ் பண்ணா ஆனந்தவிகடனிலே மிருகவதை மனிதவதை'ன்னு நம்ம சிம்புசாரை நக்கல் விடுறானுக. கொஞ்சநாளைக்கு முன்னாடி சிகப்புரோஜாக்கள்'லே லேசா டிக்கரிங் பார்த்து எச்சா ஒன்னா சேர்ந்து மன்மதனா காட்டின்னா நல்லாயிருக்குன்னு சொல்லுறாங்களே?"ன்னு பீலிங் டயலாக் பேசி ஒத்த சிப்'லே சரக்கை முடிக்கிறாரு.

சி.பே:- ஆமாம் பாஸ். எங்க தல, எதுகை மோனையா வசனம் பேசி ஹை டெசிபல் மீயூசிக்'லே இண்ட்ரோ கொடுத்தா தியேட்டரிலே வந்துட்டாண்டா கோமாளி'ன்னு பசங்க தம்மடிக்க கிளம்புறானுக. லேடிஸ்'க தூக்கிட்டு வந்த பிள்ளைக கிட்டே இடைவேளையிலே பாப்கார்ன் வேணுமின்னு கேட்டு அடம்பண்ண இன்னொருதடவை இந்த மாமா எடுக்கிற படத்துக்கு கூட்டிட்டு வந்துருவேன்னு டிரெஜிடி பண்ணுறாங்க. நம்ம தல'க பாடுதான் காமெடியா போகுது.

முரு:- "இதுக்கு என்னா பண்ணலாமின்னு சொல்லுங்க. ஊருக்குள்ளே கலவரமான எப்க்ட்'லே எங்க தல'ய பத்தியே அவரு நடிப்பை பத்தியே எல்லாரும் பேசனும். அந்தமாதிரியே ஒரு படத்தை எடுத்துறனுமின்னு துடியா துடிக்கிறேன்."

சி.பே:- நானும் உங்களமாதிரியேதான் இப்பிடிதான் எந்நேரமும் திருத்தணிய பத்தியே நினைச்சிட்டே இருக்கேன்.

முரு:- "அப்பிடியா அதுக்குள்ளே டைட்டில் எல்லாம் வைச்சாச்சா?"

சி.பே:- "இதுக்கே இப்பிடி ஆச்சரியப்படுறீங்க? நாங்க எங்க தல பேசப்போற அடுக்குமொழி பன்ச் டயலாக்'ல்லாம் எழுதியாச்சு.

முரு:- "என்னா பாஸ் அது??"

சி.பே:- "நிறைய கிடைச்சு குடிக்க முடியாத கடல்தண்ணி இல்லாடா, கொஞ்சமா கிடைச்சாலும் தேனாட்டாம் இனிக்கிற சுனைத்தண்ணி, அவந்தாண்டா திருத்தணி, என்னவிட்டு விலகி நில்லு நீ" எப்பிடி??"

முரு:- " கேட்டதும் கால் கட்டைவிரலிலே இருக்கிற நாலு முடியிலே இருந்து உச்சத்தலையிலே இருக்கிற எல்லா முடியும் ஜிவ்'ன்னு கரண்ட் அடிச்சமாதிரி நட்டுக்கு நிக்கிது பாஸ்"

எல்லாரும் நாசமா போகப்போறிங்கடா, இன்னும் கொஞ்சநாளிலே பூமாதேவி சிரிக்க போறா எல்லாரும் உள்ளே போகப்போறீங்கன்னு கொஞ்சம் அதிகமாக பீல் ஆகி சிசர் மனோகர் டேபிளிலே நின்னு கத்துறாரு. அவருக்கு கூட வந்த கஞ்சா கருப்போ அய்யோ நீதான் அடுத்த படத்துக்கு ஹிரோ'ன்னு உப்புக்கு சப்பாணியா போட்டு படுத்துறானுக'ன்னு சரக்கைவிட்டாவது நிம்மதியா இருக்கலாமின்னு வந்த தண்ணிய போட்டு சலம்பலை கொடுத்துட்டு இருக்கானே'னு அவரும் பீல் ஆகுறாரு.

க.க:- "ஏலேய் செவனேன்னு ஒக்காருய்யா. பெரிய வெள்ளக்காரனட்டாம் பெர்முடா போட்டு வந்துட்டு டேபிள் மேலே ஏறிக்கிட்டு உள்ளே போகப்போறீங்கன்னு கத்திட்டு இருக்கே? நீ உள்ள என்னத்தாயவது போட்டு வந்தியா? இருக்கிறவனை நொள்ளைகண்ணாகிறது'ன்னே வந்துறாய்ங்கன்னு சவுண்டு விட்டு சரக்கை அடித்து ஊறுகாயை உறிஞ்சுகிறாரு."

சி.பே:- "இங்க பாருய்யா, இவனுக அலும்பை... ஏலேய் படம் எடுக்கிறேன்னு அதுக்கு பேரு கடவுள் அது இதுன்னு வந்த மொக்கையிலே நடிச்சது நீதானே??"

க.க:- "அண்ணே , ஏண்ணே, அந்த சோகத்தயெல்லாம் போட்டு கெளறிக்கிட்டு கெடக்கீங்க, அந்த சோகத்தை மறக்கதானே தண்ணியாத்த வந்தேன். இங்கன என்னாடா'ன்னா ரெண்டாவது ரவுண்டு'லே சிசர் அலும்பை கூட்டிக்கிட்டு கெடக்கு..

முரு:- "என்னாய்யா இப்பிடி பீல்'ஐ போடுறே? தயாரிச்சது யாரு அடுத்தவன் காசு'லே சமைச்சு திங்கிற ஆளு, அவரு காசு போட்டு சமைச்சு கொடுக்கிறாருன்னா என்னாதயாவது சொல்லி வித்திற மாட்டாரா?"

க.க:- " அண்ணே அதை நம்பிதானே நானும் வந்ததும் வரமிட்டுமின்னு அந்த படத்திலே நடிச்சேன், மருத திருவிழா'க்கு ஆத்துக்கு கூட்டம் கூடுறமாதிரி நைட்'லே தீயேட்டருலே கூட்டம் சேருவாய்ங்க, ஆனா போனவாரம் திருவிழா வந்துச்சு'லே ,மருத போயிருந்தேன், எதிர்சேவை'க்காக அறை எண்'க்கு நடுநீசி 1.30 காச்சின்னு போட்டுருந்தாய்ங்கன்னு நடனா தீயேட்டரு'க்கு ஓடினேன். அங்கன இருக்கிற சேர்களோட அதிகமா கொசு திரிஞ்சுக்கிட்டு கெடந்துதக...

முரு:- "அப்புறம் என்னாய்யா.... இப்பிடி பீல்'ஐ போட்டு திரியுறே?

க.க:- மக்கா எண்ணிக்கைய விட கொசு எண்ணிக்கைதான் அதிகமா இருந்துச்சு'ன்னு சிம்பாலிக்கா சொன்னேண்ணே, அதுக்கூடய புரியல?"

சி.பே:- "நானு செல்லாகாசா போயிட்டேன்னு சொல்லாமே சொல்லுறான்"

முரு:- "அவனா நீயீ? கொஞ்சம் தள்ளி ஒக்காரு, கொஞ்சமா செயிக்கிறவங்களுக்கு பெருசா செயிக்க வைக்கனுமின்னு இருக்கோம், தோத்துப் போனதுகளோட கூட்டு சேர்ந்தா என்னத்துக்கு ஆகுறது?"

சிசர் மனோகர்:- " கூஜா தாங்கியேதாய்யா நீங்கல்லாம் நாசமா போறீங்க, அவனுக எல்லாம் நீங்க சிந்திச்சது எல்லாத்தையும் திஸ் இஸ் .......... ஃபிலிம்'ன்னு போட்டுக்கிறான்."

முரு:- " ஹிம், பெரிய மனுசன் நெஞ்சுல சந்தனத்தை பூசிக்கிட்டு வந்து நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்லிட்டாருய்யா! போய்யா போ எங்கனயாவது அடுத்த படத்துக்கு ஒட்டு ரோலுக்கு சப்போர்ட் ரோலு கிடைக்குதான்னு பாரு"

கஞ்சா கருப்பும், சிசர் மனோகரும் சோகத்திலும் சோகமாய் அடுத்த பாருக்கு நடைய கட்ட ஆரம்பிக்கும் வேளையில் பெருங்கூட்டமாய் சத்தமாய் தானும் முன்னாடி போகாமல் பின்னாடி வந்தவன் பின்னாடி நிக்காமல் முன்னாடிக்கு வந்துருன்னு நடுவிலே நிக்கறவன் கொடுக்கிற ஆதரவுமாக இருக்கிற பெருங்கூட்டமொன்று பாருக்குள்ளே நுழைக்கிறது.

இந்த பார்'க்கு வந்ததை நான் வழிமொழிகிறேன்னு குரல் கேட்க அட ஙொங்யாலே இங்கனயயும் ஆரம்பிச்சிட்டிங்களா?'ன்னு சன்ன குரலிலே அழுவாச்சியோட பாவப்பட்ட ஜீவன் சிணுங்க ஒத்த டேபிளுக்கு சைடுக்கு மூணு மூணு சேரு இழுத்து போட்டு விஷ ஜந்துகளாக அமர்க்கிறார்கள்.(பி.கு:- மனநோயாளிகளை விட விஷ ஜந்துகள் அடைமொழி நல்லாயிருக்குமின்னு நம்புறோம்)

"ஙொங்யாலா என்னாத்தாயாவது ஆர்டர் பண்ணுங்கய்யா! நீயூஸ் வாசிக்கிறக்குமுன்னாடி நான் போயி சிலேடு தூக்கிட்டு நிக்கனும்"

"டவுசர் கிழியுது டாவு தீருது, சாப்பாத்தி திங்கப்போனா மாவூ தீருது, தகரநெடுகாதனுக்கு செவடு ஆகுது, மூணு ரவுண்டுக்கு மேலே அடிச்சதான் போதை ஆகுது, மை தீர தீர எழுதி பார்த்தாலும் சொம்பு'ப்பன் மாதிரி ஆக முடியல'ன்னு உருவம் மருகுது!.

ஐயா சாமி இதுக எதோ வேத்து கெரகத்திலே இருந்து பலத்தரப்பட்ட உயிரினங்கள் ஒன்னாக்கூடி சரக்கு போட வந்திருக்காங்ய்க, இந்த இடத்தை விட்டு கெளம்புனாதான் நம்ம குடும்பத்தையும், நாமே பார்க்கிற தொழிலையும் காப்பாத்தமுடியுமின்னு முருஹனும்,சின்ன பேரரசும் எஸ் ஆக பேரர் ஆர்டர் எடுக்க வர்றாரு.

தள:- "நாங்க உள்ளே வந்ததும் ரெண்டு பேருக முக்காடு போட்டு வெளியே போறாங்களே! அவங்க யாரு"

பேரர்:- "அவங்க ரெண்டு பேரும் சினிமாகாரய்ங்க, இம்புட்டு நேரமா சினிமா எடுக்க போறதா நாலு கட்டிங்க போட்டு கூத்து பண்ணிட்டு இருந்தானுக, ஒங்களுக்கு எத்தனை கட்டிங் வேணுமின்னு சொல்லுங்க"

லக்கி:- "கட்டிங் விடலன்னா நைட் ஒடம்பு நடுங்குது,விடிச்சு எந்திரிச்சா அடுத்த தெரு ஆத்துக்குள்ளே இட்லி வேகுது, பக்கத்து வீட்டிலே சுண்டகஞ்சி ரெடியாகுது, ஆனா எங்கவீட்டிலே மட்டும் அடி விழுகுது. தாவூ தீருது"

பேரர் மெரண்டு போய் பேஸ்தடிச்சு அந்த இடத்தை விட்டு தெறிச்சு ஓடுறாரு, பக்கத்திலே ஒக்கார்ந்தவாய்ங்க எல்லாம் வேப்பிலை மரத்தை கிளையோட பிடுங்கி சாமியடிச்ச மாதிரி வாசலை பார்த்து ஓடுறாங்க.

அடடே நாமே வந்ததும் நார்மல் பிளேசஸ், அன் - நார்மல் பிளேசஸ்'கிருச்சுலா, இதை மாதிரிதான் நான் மலேசியா'விலே இருக்கிறோப்போயும் ஆச்சு'லா'னு சரக்கு விடாமலே தள பொலம்ப ஆரம்பிக்க லக்கி குடிக்க வைச்சிருந்த தண்ணிய எடுத்து குடிச்சு போதையிலே அங்கயும் போலி-தகரநெடுகாதன் இருக்காறான்னு கேட்டு மட்டையாகிறார்.

ஙொய்யாலா சரக்கு வரலை, பெப்சி வரலை, தண்ணி வரலை, முத்தம் கவுஜ எழுதுனா பத்து கமெண்ட் வரலை, நாமெல்லாம் பைத்தியாமன்னு கேட்டு வைச்சா "ஆமாம்"னு ஐம்பது கமெண்ட் போடுறாய்ங்க'ன்னு ஈனஸ்வரத்திலே சுதியோடு கஷ்டஜீவன் சிணுங்கலாய் புலம்ப சிபி வந்து ஆபாந்துவானாக முன்னுக்கு வருகிறார்.

தள:- "ஒங்களுக்கு ஆயிரம் கஷ்டமின்னா அதிலே ஒன்னை ஒன்னையாவது நினைச்சி சிரிப்போம், இப்போ ஒங்களுக்குன்னு இருக்கிற பிரச்சினை போயி ஒட்டு மொத்த பாருக்குள்ளே பிரச்சினை ஆகிப்போச்சே"

ப.பா:- " என்னாய்யா இந்த பாருக்குள்ளே பிரச்சினை?"

தள:- " நாமே வர்றதுக்கு முன்னாடி யாரோ ரெண்டு பேருங்க கோமாளிய வைச்சி படம் எடுக்கிறத பத்தி பேசிட்டு இருந்தாங்களாம், நாமே வந்ததும் சத்தமில்லாமே எஸ் ஆகிட்டாங்க"

ப.பா:- " சரிய்யா, அதுக்கு நீ என்னாய்யா பண்ணப்போற?"

தள:- "அவங்க எடுக்க நினைச்ச படத்தை நான் எடுக்க போறேன்"

ப.பா:- " ஐயா சாமிகளா, எல்லாரும் புல் அடிச்சிம் மட்டையாகிறாதிங்கய்யா, நம்ம தள கதை சொல்ல போறாராம், அந்த கதையிலே படம் எடுக்க போறாரம்"

அய்யோய்யோ சும்மாவே ஆவிக்கே ஆம்பிள்ள பொம்பிள்ள'ன்னு பேதம் பிரிச்ச தெய்வம் இப்போ சினிமா எடுக்கப்போறேன்னு அவதாரம் எடுக்கப்போகுதான்னு உண்மைதமிழன் அந்த படத்துக்கு நாப்பது பக்கதுக்கு விமர்சனம் எழுதிடனுமின்னு மனசுக்குள்ளே கங்கணம் கட்டுக்கிறாரு.

தள:- "அவ்வளவு சீக்கிரத்திலே எல்லாம் வந்துறாது, இப்"போதை"க்கு டைட்டில் மட்டும் போடுவோம். அப்பாலிக்கா இன்னும் வருவோம்.


சங்கம் புரெடக்சன் பெருமையோடு வழங்கும்,


தள சிபியின் கைவண்ணத்தில்,





காஞ்சி தலை மகன்

the joke factory


விரைவில் உங்கள் அபிமான சங்கத்து பதிவுகளில்........

Sunday, August 5, 2007

பதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்!

இன்று காலை இனிதே துவங்கிய சென்னை வலைப்பதிவர் பட்டறை கலந்துக் கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.

1) சங்கத்து சிங்கங்கள்:-



(Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, தல, தேவ் அப்புறம் ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி

2) தல & தல & தள




பதிவர் பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் சங்கம் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் புகைப்படங்களுக்கு இங்கு சுட்டுங்கள்.

Tuesday, July 31, 2007

கவுண்டர்'ஸ் Devil Show - கப்பி பய

"அண்ணே!! அண்ணே!! நீங்க ரொம்ப நாளா டெவில் ஷோ நடத்தாமே இந்த சங்கத்துக்காரய்ங்கே ஓவரா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கானுக! எவனையாவது கூப்பிட்டு ஆப்பு வையிங்க! அப்போதான் சும்மா இருப்பானுக!" ன்னு கோமுட்டி தலையன் கவுண்டர்கிட்டே சொன்னதும் படு சீரியசாக யோசிச்சிட்டு இருந்த கவுண்டர் டக்'குன்னு திரும்பி மேட்டுக்குடி காளிங்கன் ஸ்டைலில் லவ் லுக்கை ஒன்றை காட்டுக்கிறார்.

கோமுட்டி தலையன்:- "அண்ணே? ஏனிந்த கொலைவெறி? எதுக்கு இப்பிடியொரு லுக்?"

கவுண்டர்:- "ஏண்டா, அரைமண்டையா? சங்கத்துக்காராய்ங்கே'கிட்டேயிருந்து ஒனக்கு வரவேண்டியது வரலயா? நீயா கூப்பிட்டு அவியங்களுக்கு டெவில்ஷோ நடத்த சொல்லுறே? நான் இப்போ அடுத்த படத்திலே நமிதா'வே லவ் பண்ணுறமாதிரி சிட்டிவேசனுக்கு யோசிச்சுட்டு இருந்தேன், தேங்காமண்டயா என்னோட மூடு'ஐ கெடுத்துட்டியே?"

கோ:- "அண்ணே! ஒங்க ரொமண்டிக் மூடுக்கு சரியான ஆளு சங்கத்திலே ஒருத்தன் இருக்காண்ணே, அவனை கூப்பிட்டு டெவில் ஷோ நடத்துங்க! அவனுக்கு ஸ்பானிஷ் பேசுற பொண்ணுக பூராவும் சேர்ந்து ரசிகையர் மன்றம் வைச்சிருக்காங்க! "

கவுண்டர்:- "யாருடா? அந்த அரைமண்டயன்?"

கோ:- "ஹைய்யோ, அவரு அரைமண்டயன் இல்லண்ணே! நம்ம அழகுபுயல் கப்பிநிலவர்."

கவுண்டர்:- "ஓ அந்த அழகு மண்டயனே கூப்பிடுறா! இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சு..."

கூகுள் சேட்'ல் 50 சேட் விண்டோக்களுக்கும், யாகூ'வில் 100 சேட் விண்டோக்களையும், ஓர்குட்' ல் 100 ஸ்கிரப்பிங் ரிப்ளை செய்து கொண்டிருந்த கப்பிபய வேகமாக சங்கத்து கட்டிடத்துக்குள் ஓடி வருகிறார்.

கோ:- "பூவையர் மனங்கவர் கள்வன், உருகுவே இளவரசன்,ஸ்பானிஷ் அரசன், சங்கத்தின் லிட்டில் சூப்பர் ஸ்டார் கப்பி நிலவர் வருகிறார்.... வருகிறார்."

கவுண்டர்:- "அடேய், கோமுட்டி, இப்போதானாடா அவனைப் பத்தி என்னோமோ சொல்லிட்டு இருந்தே? அதுக்குள்ளே பாராட்ட ஆரம்பிச்சிட்டே?"

கோ:- "அண்ணே, அவரு என்னோட அக்கவுண்ட்'க்கு மணி டிரான்ஸ்பர் பண்ணிட்டார், அப்புறமென்னா கூவ வேண்டியதுதானே?"

கவுண்டர்:- "ஹிம், அரைமூடி தேங்கா கிடைச்சாலே நீ எம்புட்டு பேசுவே? ஒனக்கு பணம் வேற அனுப்புறானுக அந்த நான்சென்ஸ் பிலோ? எங்கடா அந்த ஆப்பாயில் மண்டயனை?"

கப்பி:- "கவுண்டர் சார், நாந்தான் கப்பி பய... வந்துட்டேன்.."

கவுண்டர்:- "வாடா, வா... எதுக்குடா மண்டயா, கப்பிபய'னு பேரு வைச்சிக்கிட்டே? நீ எதுவும் கொத்தனார் வேலை எதுவும் பார்த்தியா?"

கப்பி:- "அய்யோ... இல்லிங்க சார், நானு கொஞ்சம் அட்வான்ஸாடு பெர்சன், இப்போ எதிர்காலத்திலே நான் ஒரு காப்பி கடை வைச்சா இந்த பேரு சூட் ஆகனும், நீங்க சொன்னமாதிரி படிச்ச ஆஞ்சுனேயர் வேலைக்கு வீடு கட்டி தர போனாலும் இதை சம்பந்தப்படுத்தி இருக்கனுமின்னு தான் அப்பிடி 'கப்பி'ன்னு வைச்சேன்... அதாவது என்னோட பேரு வரலாறு'லே வரனுமின்னு தலைகனத்திலே செய்யலை! இப்பிடியெல்லாம் நாமே இருந்தா அது வரலாற்று பொன் ஏட்டுக்களிலே வந்தே தீரும்கிறது காலத்தின் கட்டாயம்."

கவுண்டர்:- "அட அரை டவுசர் மண்டயா? பேருக்கு காரணம் சொல்லுடா'ன்னா கஜினி படத்திலே வர்ற வசனத்தையே சொல்லிட்டு இருக்கே? மவனே அப்புறம் அவனை மாதிரி இரும்பு ராடு'லே அடி வாங்கி உண்மையிலே அரைகிறுக்கனா போயிறாதே? கப்பி'ன்ன குருட்டு அழுக்குன்னு அர்த்தமிடா அட்லாஸ் மண்டயா! அது ஏண்டா ஒன்னோட புரோப்பலிலே குதிரை குனிஞ்சிட்டு நிக்கிது?"



கப்பி:- "ஆமாங்க ஆபிஸர்.. நான் குதுரையிலே பிகர்வலம் போனப்போ எல்லாரும் அந்த குதுரையேதான் பார்க்கிறாய்ங்கே! என்னை பார்க்கமாட்டேக்கிறாய்ங்கே? அதுதான் நான் குதுரையிலே ஒடகார்ந்து இருக்கிறபோ அதை தலையே குனிஞ்சிக்கிற சொல்லிட்டேன்..."

கவுண்டர்:- "அட ஆட்டுக்கல மண்டயா! சரித்திர சாதனையை சொன்னமாதிரி சொல்லுறே? ஏண்டா ஒரு இடத்துக்கு வாடா'ன்னு சொன்னா வரமாட்டியா நீயி? மறுநாள் நீ ஏன் வரலைன்னு ஒரு லீவுலெட்டர் வேற கொடுக்கிறே? இன்னும் அரைடவுசர் மாட்டிக்கிட்டு ஸ்கூல் போறே பச்சப்புள்ளயா நீ?"

கப்பி:- "ஆபிசர் சார்... நான் எப்பவும் பச்சப்புள்ளதான், நாமே ஒரு இடத்திலே இல்லாட்டியும் அந்த வேலை நடந்துரும், ஆனா நாமே ஏன் இல்லாமே போனோமின்னு காரணக்காரியத்தை சொல்லி ஒரு மொக்கை போடனும்மின்னு எங்க தல' கைப்புள்ள'தான் சொல்லிருக்காரு, அவரு சொல்பேச்சை நான் எப்பிடி மீறமுடியும் சொல்லுங்க?"

கவுண்டர்:- "கீ போர்ட் மண்டயா, ஒனக்கில்லாமே ஒங்க தல'க்கிற அந்த அரைடவுசர் மண்டயனுக்கும் இருக்குடா சீக்கிரமே? ஏனுங்க வெள்ளக்கார தொர வெறும் இங்கிலிஸ் படங்க மட்டுந்தான் பார்ப்பீங்களா? அதுலே வர்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாடா புரொஜக்டர் மண்டயா?"

கப்பி:- "ஸ்டாப் த நான்ஸென்ஸ் கொஸ்டின்ஸ்... அது தெரியாமே எப்பிடி நான் விமர்சனம் எழுதமுடியும்? அந்த படம் போடுற தீயேட்டரிலே போயி அந்த படத்தோட பேரு என்னான்னு தமிழிலே போட்டுருப்பாங்க, அதை மொதல்ல நோட் பண்ணிக்குவேன், அப்புறம் நாலஞ்சு பேரு சேர்ந்ததும் உள்ளே போயி ஒட்கார்ந்துட்டு படத்தை பார்ப்பேன், பக்கத்திலே ஒட்கார்ந்துருவங்க சிரிச்சா நானும் சிரிப்பேன், அவங்க கைத்தட்டினா நானும் தட்டுவேன், எப்பிடியாவது அவங்க பக்கத்திலே இருக்கிறவன்கிட்டே கதையோ, இல்ல வசனத்தையோ பத்தி பேசுவாங்க! அதை அப்பிடியே நோட் பண்ணிக்கிட்டு வந்துருவேன்... எப்பிடி என்னோட தெறமை?"

கவுண்டர்:- "ஒன்னயெல்லாம் தூக்கிப் போட்டு பந்தாடுனா'ன்னு என்னாகும், பாப்கார்ன் பாக்கெட் தலையா! அப்போ நீ வசனமெல்லாம் வெளங்கமாட்டாமேதான் இங்கிலிஸ் படமெல்லாம் பார்த்தியா?"

கப்பி:- "ஆபிசர் சார் இங்கிலிசு படம் மட்டும் இல்ல, ஸ்பெனிஸ் படமெல்லாம் பார்த்துருக்கேன், அதை பத்தி விமர்சனமெல்லாம் எழுதி என்னோட எழுத்துதிறனை இங்கே நிருபிச்சு இருக்கேன்."

கவுண்டர்:- "என்னாலே ஒன்னும் முடியலை'டா! இது வரைக்கும் கோமுட்டி தலையன் மட்டுந்தான் இந்த கிரகத்திலே விசித்திரபிராணி'ன்னு நினைச்சேன், இப்போ நீயும் அந்த லிஸ்ட்'லே சேர்ந்துட்டே?"

கப்பி:- "என்னா ஆபிசர் இதுக்கெல்லாம் இப்பிடி அசந்து போறீங்க.. போனவருசமே துள்ளல்'ன்னுகிற காவியதிரைப்படம் எப்போ ரிலிஸாகமின்னு பதிவு போட்டு அந்த படத்தோட புரொடிஸர்'க்கு போன் மேலே போனை போட்டு போன மாசம் ரிலிஸ் பண்ண வைச்சிடோமில்ல.. அப்போ பார்த்துகோங்க, என்னோட தணியாத கலை தாகத்தே"

கவுண்டர்:- "நீ தானா அந்த கொடும்பாதகன், அந்த படம் ரிலிஸ் ஆனப்போ எவனுக்கோ கொடும்பாவி எரிச்சாங்களே அந்த பாவி நீதானா? ஒன்னெயல்லாம் ஏண்டா நாடு கடத்தமாட்டேன்கிறாங்க இந்த சமுதாயம்"

கப்பி:- "ஆபிசர் இவ்வளோ காலமும் நாங்க வெளிநாட்டிலே தான் இருந்தோம், அங்க கிடைச்ச வாழ்க்கை இங்க கொஞ்சம் கூட கிடைக்கலன்னு ரொம்ப வருத்ததிலே இருக்கேன்."

கவுண்டர்:- "என்ன வருத்தத்திலே இருக்கியா? அப்பிடியே பக்கத்திலே வந்து ஏறி மிதிச்சிருவேண்டா கோழிகாலு மண்டயா! ஒன்னோட ரசிகையர் மன்றத்துக்கு இங்க கிளைகள் இல்லியா? இருந்துச்சுன்னா போயி ஒரு கிளையை பிடிச்சி கொள்ளிவாய் பிசாசு மாதிரி தொங்குடா"

கப்பி:- "ஹி ஹி... இப்பிடியெல்லாம் என்னை சொல்லி இன்சல்ட் பண்ணக்கூடாது, அப்புறம் நீங்க வெளிநாட்டிலே இருக்கிற நீதிமன்றத்திலே வழக்குக்களை சந்திக்க வேண்டியதா வரும்?"

கவுண்டர்:- "வழக்கா? எங்கவீட்டிலே இருக்கிற ஒலக்கையிலெ ரெண்டு அடி போட்டுறுவேண்டா ஆம்லெட் மண்டயா? இந்தமாதிரி விதண்டவாதம் பேசுறனுவனுக எல்லாத்தையும் நான் தூக்கி போட்டு மிதிக்கிறதுதான் என்னோட பழக்கமான வழக்கம்..."

கப்பி:- "அய்யோ வேணாங்க ஆபிசர், என்னோட பவர் ஒங்களுக்கு தெரியட்டுமின்னு தான் அப்பிடி சொன்னேன். ஒங்க பவர் என்னான்னு எனக்கு கோமுட்டியே பார்த்ததிலே தெரிஞ்சுக்கிட்டேன், என்னை விட்டுருங்க நான் அப்பாவி"

கவுண்டர்:- "அடேய் கொலைக்கார பாவி, நீயும் இந்த தலைக்காணி உறையே முழங்கால் வரைக்கும் போட்டுக்கிட்டு திரியுற எழுத்தாள கோஷ்டியா? கதையெல்லாம் எழுதுறீயே? என்னாடா காரணம்?"

கப்பி:- "ஹிம் அந்த கோஷ்டியிலேயும் இருக்கலாம், இல்லான்னா இல்லாமேயும் இருக்கலாம், அந்த கோஷ்டியிலே நான் இல்லாதுனாலே நான் எழுத்தாளன் இல்லைன்னு இல்லை, நான் அந்த கோஷ்டியிலே இருக்கிறதுனாலே அங்க இருக்கிற மத்தவங்க எல்லாம் எழுத்தாளருக இல்லைன்னு இல்லை. ஆனா நாங்க எல்லாம் எழுத்தாளர்'ன்னு தான் ஊருக்குள்ளே எல்லாரும் சொல்லுறாங்க, அவங்கெல்லாம் சொன்னதுனாலேதான் நாங்க எழுத்தாளர் இல்லை. ஆனா அவங்கெல்லாம் அதை சொல்லட்டியும் நாங்க எழுத்தாளர்தான்! நீங்க இதைப் பத்தி என்ன சொல்லுறீங்க?"

கவுண்டர்:- "ஹிம் என்ன சொல்லவா? ஒன்கிட்டே இவ்வளோ நேரம் பேசினதே தப்பு'டா லாப்டாப் மண்டயா? சரி பிர்த்டே பேபி பொழைச்சிட்டு போ'ன்னு விட்டா விசு டயலாக்'ஐ என்க்கிட்டே பேசி காட்டுறீயா?"

கப்பி:- "ஆபிசர் சார், நீங்க கூப்பிடதுக்காக தான் என்னோட 25 மொபலையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வந்தேன், இல்லன்னா இந்நேரம் இந்த ஒலகத்திலே இருக்கிற என்னோட மன்றத்து உறுப்பினர்களுக்கிட்டே இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை வாங்கிட்டு இருந்துருப்பேன்."

கவுண்டர்:- "பொண்ணுக கூட கடலை போடுறதுக்கு 25 மொபைல்'டா! விளங்கிருமடா இந்த ஒலகம்.. ஒனக்கு இருக்குடா இன்னிக்கு பிர்த்-டே பம்ப்ஸ்... ஓடாதா அரைடவுசர், நில், இல்ல டிக்கிலோனா'க்கு கோமுட்டி வாங்கினமாதிரியே நீயும் வாங்கிருவே"ன்னு கப்பியை விரட்டுகிறார் கவுண்டர்.

Monday, June 11, 2007

சங்கம் - சோசியல் சர்வீஸ்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். சென்ற ஏப்ரல் மாதம் வ.வா.சங்கத்து முதலாமாண்டு விழாவை முன்னிட்டு நகைச்சுவை பதிவு எழுதும் போட்டியொன்றெ அறிவித்து அதில் பரிசு பெற்றவர்களாக ஆறு பேரையும் தேர்ந்தெடுந்து இருந்தோம்.

அது அனைவரும் அறிந்த செய்தி!!!!

அப்போட்டியை அறிவித்தப் பொழுது நாங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் ஒருவருக்கு வழங்கப்படும் என்றே குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் அப்போட்டியை அறிவித்த வினாடி முதல் வந்து குவிந்த வரவேற்பை முன்னிட்டு பரிசுத்தொகையை அதிகப்படுத்தி அதை ஆறு பேருக்குப் பங்கிட்டு தரலாம் என முடிவு செய்தோம்,

வந்து மலையெனக் குவிந்த 105 பதிவுகளில் பரிசுக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்றே தடுமாறிதான் போனோம்.

சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் வெவ்வெறு நாடுகள், மாநிலங்கள் என இருப்பதும், காலச்சூழ்நிலை, பணிச்சுமை என பலவகையான காரணங்களையும் தாண்டி போட்டியின் முழுப் பொறுப்பினையும் செவ்வன செய்து முடித்தது இனியதொரு அனுபவமாக அமைந்தது.. அதற்கு நம்ம சங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கிறோம்

போட்டியும் வைச்சாச்சு அதில் ஆறு பேர் ஜெயிச்சாச்சு.. பரிசை அவங்க கிட்டச் சேக்கணும்.. . பரிசை எப்படி அனுப்புவது என ஆலோசிக்கையில்.. பரிசினைத் தாங்கள் பெறுவதை விட தங்கள் வெற்றி இன்னும் பலரை மகிழ்விக்கும் விதமாகப் பரிசினை எதாவது தொண்டு நிறுவனத்திற்கு அளிக்குமாறு மனமுவந்து கருத்துக்கு உடன்பட்டு வெற்றியாளர்கள் இன்னொமொரு வெற்றி பெற்றனர்.. இம்முறை அவர்கள் பல இதயங்களையும் வென்றனர்..

பரிசுத் தொகையான 3000 ரூபாயோடு, நண்பர் சிவிஆர் அனுப்பிய தொகையான 2000 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக இயங்கி வருகின்ற
காக்கும் கரங்களுக்கு நாங்களே நேரடியாக சென்று Rs.5000/- நம் வ.வா.சங்கத்து நண்பர்கள் பெயரில் வழங்கி வந்தோம்.



எந்தவொரு செயலுக்கும் ஊக்கமாய் உறுதுணையாய் என்றென்றும் எங்களுக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சிறம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாக்கட்டும். இன்னும் இதேப்போல பலவகையான சமுகப்பணிகளை மேற்கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம் என்பதை இங்கே அறிய தருகின்றோம். அதற்கும் உங்களின் மேலான ஆதரவுகளை எதிர் நோக்கி என்றொன்றும் உங்களின் நண்பர்கள்

Thursday, May 3, 2007

கல்யாணக்களை (C&P)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி #1:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!

டிஸ்கி #2:-

தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன் :)

Wednesday, April 25, 2007

காணாமல் போன Greg கைப்புள்ள - வெளிவராத உண்மைகள்!

சங்கத்திலே கொண்டாட்டம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஆகிப்போச்சு, ஆனா அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட இணையற்ற ஒப்பிலா தலைவர் கிரேட் கைப்புள்ளயே மட்டுந்தான் காணோம். என்னாச்சு ஏதாச்சு'ன்னு அவருக்காக நைட்பகலா உழைச்சு ஓடாப் போனே சங்கத்து சிங்கங்கள் எல்லாமே கன்னத்திலே கைவைச்சிட்டு கஷ்டத்திலே இருக்கோமின்னு மட்டுமின்னு நினைச்சிராதீங்க, நாங்கெல்லாம் பயங்கரமான சந்தோஷத்திலே மிதந்துட்டு இருக்கோம்.

அதுக்கான காரணம் என்னான்னு பார்த்தா தல கிரேட் கைப்புள்ள'யா இருந்து கிரேக் கைப்புள்ள'யா ஆகி சங்கத்திலே ஆப்பு வாங்கினது பத்தாமே இந்திய கிரிக்கெட் டீம்'க்கே கோச்சா போயி அங்க ஒன்ன முடியாமே இப்போ டோட்டல் டோமேஜ் புள்ளயா ஆகிட்டாரு'லே. அந்த சந்தோஷத்துக்காக ஸ்விட் எடுத்து கொண்டாடி கொண்டாடி களைப்பாகி போயிருக்கோம். இந்தமாதிரி நேரத்திலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டுமின்னு பங்களாதேஷ் vs பெர்முடா விளையாடின சரித்திரபுகழ் மேட்ச பார்த்திட்டு இருந்தோம்.

சரி மேலே இருக்கிறதெல்லாம் கதை சொல்லுறமாதிரி இருக்கு. இனிமே லைவ் கமெண்டரி...

தேவ்:-
"ஏலேய் மக்கா நல்லா என்ஞாய் பண்ணுங்கய்யா! இதிலே நாமே காயப்போட்ட பசங்களும் நம்மளை காயப்போட்ட பசங்களும் ஒன்னுக்கூடி மேட்ச் விளையாடிட்டு இருக்காங்க!"

சிபி:- "ஹி ஹி.... இன்னிக்கு யாரு ஜெயிச்சாலும் தோத்தாலும் நம்ம தல'க்கு பெரிய ஆப்பு வைக்கனும்"

ஜொள்ளு:- "டூட்ஸ், அந்த கேமிரா மேன்ஸ் எல்லாரையும் மாத்தனும்! ஒரு பயலுகளும் எனக்கு ஏத்த மேட்சை காட்டமாட்டேன்கிறாய்ங்கே"

வெட்டி:- "ஆனாலும் பாண்டி நீயி அநியாத்துக்கு கடமை வீரனா இருக்கீயே? நாங்கெல்லாம் மேட்ச் பார்த்திட்டு இருந்தா நீ அங்க திரியிற பட்சி தெரியலைன்னு அங்கலாய்க்கிறே?"

ஜொள்ளு:- "சுமா சுமா என்னையவே சொல்லாதீங்கய்யா? நீங்களெல்லாம் வாய் விட்டு சொல்லலை! நான் வாய் விட்டு ஜொள்ளிறேன்! அம்புட்டுதான் வித்தியாசம்!"

புலி:-" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இளா:- "என்ன புலி பசிக்கிதா? இந்த பாப்கார்ன் சாப்பிடு சரியா போயிரும்!"

புலி:- "யோவ் விவ், அந்த டிவி பின்னாடி இருக்கிற ஜன்னலிலே பாருங்கய்யா! ஏதோ கை தெரியுது? அய்யோ இங்க ஏதோ ஒரு ஜகன்மோகினி உள்ளே வந்துருக்கு சாமியோவ்!"

சிபி:- "நான் இங்கேதானே ஒட்கார்ந்து இருக்கேன்! யாரு எனக்கே தெரியாமே ஜகன்மோகினியா??"

சட்டென்னு ஒரு உருவம் உள்ளே நுழைக்கிறது, ஆளு பார்க்க பூனை பழமொழியிலே வர்ற விலங்கினத்தோட சுத்தமான நிறம், அந்த நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமே முட்டியை தொடற அளவுக்கு கிளிப்பச்சை கலருலே ஜிலுக்கு பர்முடா, ஜிவு ஜிவுன்னு கண்ணை பறிக்கிற செவப்பு கலருலே ஒரு தேநீர் சட்டையும் போட்டுக்கிட்டு "தல" சங்கத்து குடிசைக்குள்ளே என்டர்..

தேவ்:- " தல எங்க போயிருந்தே? நீ கொஞ்சநாளு இல்லைன்னோதும் நிறைய ஸ்கூப்நீயூஸ் பரவிருச்சு! அதுவுமில்லாமே ஒனக்கு எங்கதான் இப்பிடியெல்லாம் அட்ராக்ட்வான கலருலே டிரெஸ்ல்லாம் கிடைக்கிது?"

தல:- "ஏலேய் போர்வாளு, ஒனக்கு ரொம்பதான் ஏத்தம்? ஸ்கூப்நீயூஸ் போட்டதே நீதானே? ஏண்டா ஒழுங்கா கிரிக்கெட் விளையாடுங்கன்னு கூட்டிட்டு போனா அதே விளையாடமே அங்க இருக்கிற பொண்ணுகளோட செல் நம்பர்ஸ் வாங்கி SMS அனுப்பி அனுப்பி அங்கயிருக்கிற செல்போன் கம்பெனிஸ் எல்லாமே இன்னவரைக்கு ஜாம்'தான்! இப்போ நான் கொலைவெறியிலே இருக்கேன்! டிரெஸ் எங்ககிடைக்கிது'ன்னு கேட்டு இன்னும் என்னோட கோவத்தை ஏத்தாதே?"

ஜொள்ளு:- "தல நோ டென்சன்! கூல் மேன்! வேணுமின்னா இந்த மேட்ச நிப்பாட்டிட்டு இலியானா நடிச்ச பாட்டை போட்டு விடவா? தெலுங்கு பாட்டுதான்! நமக்கு அர்த்தம் புரியலைன்னா வெட்டிக்காரு செப்புவாரு!"

தல:- "வேணாம் விடு பாண்டி! இப்போ நான் இருக்கிற கோவத்துக்கு அந்த தோத்து போன பசங்களை டெவில் ஷோவிலே கவுண்டர் கேட்கிறமாதிரி கேள்வி கேட்கணும், So கிரிக்கெட் விளையாட போறன்னு சொன்ன அந்த வீணாப்போனவங்களுக்கு போனை போடு! நான் பேசியே ஆகனும்"

ஜொள்ளு எல்லார் நம்பர்'க்கும் போன் பண்ணுறார், வழக்கபோலே எல்லாரும் போனை எடுத்துட்டு "We are busy now"ன்னு கட் பண்ண இவனுகளை இப்பிடிதான் சாய்க்கனுமின்னு விளம்பர ஏஜென்ஸியிலே இருந்து பேசுறோமின்னு சொல்லி டெண்டுல்கர்,டிராவிட்,யுவராஜ் முணு பேத்தையும் ஒரெ லைனில் பிடிச்சி கான்பரன்ஸிலே போடுறார்.

தல:- "அடேய் வீணா போனாவய்களா! காசுன்னுதும் ஓடி வந்திட்டிங்களா? பொணம் எந்திருச்சு ஒட்கார்மின்னு சொன்னதுக்கப்புறம் நீங்களல்லாம் எம்மாத்திரம்!"

கிரிக்.கோஷ்டி:- "ஹலோ! நீங்க யாரு?"

தல:- "ஹிம் மும்பை தாதா! ஆட்டுக்காலு மண்டயனுகளா! நாந்தாண்டா கிரேக் கைப்புள்ள பேசுறேன்!"

டிராவிட்:- "ஹய்யா! ஒங்களை தான் டீமை விட்டு தூக்கிட்டாங்களே? இப்போதான் சந்தோஷமா இருக்கு!"

தல:- "ஏண்டா மண்டையா நீ பேசமாட்டே? நூறடி தூரத்திலே இருந்து லொங்கு லொங்குன்னு ஒருத்தன் ஓடிவந்து பந்து போட்டா அந்த இடத்திலே நிப்பாட்டுறவன் தானே நீயீ?"

டிரா:- "ஹலோ மிஸ்டர் கைப்பு! அது என்னோட திறமை! 100 மைல் வேகத்திலே வந்தாலும் ஒரே இடத்திலே நிப்பாட்டி வைக்கிறது திறமை.."

தல:- "மண்ணாங்கட்டி திறமை! நிப்பாட்டி வைக்கிற திறமையே அடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருந்தா நாமெல்லாம் போன வேர்ல்ட் கப்'லெ ஜெயிச்சு இருப்போமிடா? ஏண்டா நீ மட்டுமே பேசுறே? அந்த குள்ளகத்திரிக்காவும், சடைமண்டையனும் பேசமாட்டக்கிறாய்ங்கே?"

டெண்டுல்கர்:- "இப்போதான் புது ரூல் போட்டுருக்காங்களே? தலைவர் தவிர யாரும் பேசக்கூடாதுன்னு? அதுதான் நாங்கெல்லாம் பேசலை!"

தல:- "ஏலேய்! சடைமண்டையா? ஒனக்கு என்ன வந்துருச்சு??"

தோனி:-" நான் மவுனவிரதம்"

தல:- "ஒங்களுக்கெல்லாம் ஏத்தம்தாண்டா! அடேய் இம்புட்டு சம்பாரிச்சிங்களே? அதுக்கு ஏத்தமாதிரி விளையாடுனீகளா??"

டிரா:- "ஆமாம் ஒங்களுக்கு கூடந்தான் 1,7500 டாலர் சம்பளம்! அதுக்கு ஏத்தமாதிரி டிரெய்னிங் கொடுத்தீங்களா??"

தல:- "அடபாவிகளா! எனக்கு ஒன்னே முக்கா ரூவா'க்கு கோலிசோடா வாங்கி அதை பெருமையா எல்லார்கிட்டேயும் காட்டி குடி'ன்னு தீர்ந்து போன மினரல் வாட்டர் கேன்'லே தான் கொடுந்தானுக!"


டிரா:- "இப்போ இதுவரைக்கு ஒங்கிட்டே பேசுனதுக்கு அமெண்ட் எப்போ செட்டில் ஆகும்? டாலரா வருமா ? இல்லை ரூபாய்'வா?"

தல:-" என்னது ரெண்டு வார்த்தை பேசுனுதுக்கே காசா? இவிய்ங்களே எதை கொண்டு அடிக்கலாம்? அடேய் புலி இவியங்களே ஒரு உருமி உருமி பயமுருந்துடா?? பாவிபசங்க தொலைஞ்சு போகட்டும்!"

புலி:- "ஓகே தல.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

தல:- "ஏண்டா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா? சங்கத்தோட முதலாமண்டு போட்டின்னு சொல்லி ஆயிரம் ஓவா தாரேன்னு சொல்லிருக்கீங்களே? மறுபடியும் கஜானாலே கைவைச்சிட்டிங்களா??"

இளா:- "ஆமாம் அந்த கஜானா'விலே பொன்னும்,வைரமும் குவிஞ்சு கிடைக்கிறமாதிரியே பேசு? அதிலே ஒன்னோட ஜிலுக்கு ஜிப்பாவும்,நீ அழுதா ஆட்டுறதுக்கு கிலுகிலுப்பையுதான் இருக்கு! அதே கொண்டு போயி சேட்'கிட்டே அடகு வைக்க கொண்டு போன அவன் அதை பார்த்திட்டு வைச்சிறக்கிறதே நாமே தான் காசு கொடுக்கனுமின்னு எகாந்தாளம் பேசுறான்!"

தல:- "நீரெல்லாம் எலெக்சனிலெ நிக்கலாமய்யா! முச்சு விடாமே பேசிட்டு இருக்கே? யாருடா புதுசா சங்கத்திலே கமலா காமேஷ்'ன்னு யாரோ சேர்ந்து இருக்காலமே! யாரு அது?"

ஜொள்ளு:- "தல அது கமலா காமேஷ் இல்லே? அவங்க ஒரு ஆண்ட்டி, அவங்களை சங்கத்திலே சேர்ந்து என்னா ஆகப்போகுது? அவரு பேரு கமலேஷ் கண்ணன்"

தல:- " அது சரி? நீ நமிதா,இலியானா'ல்லாம் சேர்ந்திருந்தா குஷியா ஆகிருப்பே?"

ஜொள்ளு:- "ஏந்தான் தல என்னைமாதிரியே நீயும் குடையை தலையிலே கவுத்தி போட்டு இருக்கே?"


தல:- "ஹிம் அப்பிடி கேளு கேள்வியை? தோத்திடோம்மின்னு எல்லாபயலுகளும் என்னை கொட்டி கொட்டியே பூசணிக்கா சைஸ்க்கு தலை வீங்கி போயி கிடக்கு! அதை வெளியே தெரியமே இருக்கிறதுக்காக தான் அதை மூடி மறைச்சி வைச்சிருக்கேன்"

இராம்:- "தல! எல்லாரும் பருத்திவீரன் படம் பார்த்திட்டு ஒன்னை பிணந்திண்ணி'ன்னு நினைச்சிட்டாங்களா??"

தல:- "ஏலேய் ராயலு நக்கலா? என்னாட ஆச்சு 105 போட்டி பதிவுகளும்? எவ்வளோ பேரை சார்ட் லிஸ்ட் பண்ணிருக்கீங்க? அதை சொல்லுங்கடா அயோக்கிய அப்ரெண்டிஸ்களா??

போர்வாள்:-" ஓகே தல! மக்களே நாலு நாளா கண்முழிச்சி 105 பதிவுகளும் படிச்சி 14 பதிவுகளை இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுந்து இருக்கோம்."


  1. செல்வன்
  2. அம்பி
  3. செந்தழல் ரவி
  4. சவுண்ட்
  5. சந்தோஷ்
  6. அருண்
  7. jayashree
  8. அபி அப்பா
  9. மை ஃபிரண்ட்
  10. சைலஜா
  11. டுபுக்கு
  12. CVR
  13. கோல்மால் கோபால்
  14. கண்மணி
இறுதி முடிவுகள் சங்கத்தின் தொடக்க நாளான நாளை அறிவிக்கப்படும்.

Friday, April 13, 2007

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி


சுட்டெரிக்கும் வெயிலில் நெடுந்தொலைவு கடக்க முற்படும் பயணிக்கு சிறிது இளைப்பார சின்ன இடமும் தாகம் தீர்க்க குளிர்ந்த நீரும் கிடைந்தால் அப்பயணி அடைவது என்ன? அதைவிட அவன் இளைப்பாற ஒதுக்கும் நிழல் கொடுக்கும் இடத்தில் மெல்லிய சாரல் என குளிர்ந்த காற்று அப்பயணியை உரசி சென்றால் அவன் அடையும் நிலை என்ன??

டேய் மண்டயா? நீ என்ன சொல்ல வர்றே'ன்னு நீங்க கேட்கிறது புரியுதுங்க, எல்லாத்தையும் வித்தியாசமாக செஞ்சு பழக்கப்பட்டு போன நமக்கு இதெயும் கொஞ்சம் வித்தியாசமா ஆக்கனும்மின்னு ஆசைதாங்க... இங்க பயணி சொன்னது உங்களைதான், பயணமின்னு சொன்னது உங்க வாழ்க்கையை, வெயில்ன்னு சொன்னது உங்க வேலையை, குளிர்ந்த நீர்ன்னா நகைச்சுவைங்க.. அப்புறம் நீங்க இளைப்பாற வர்ற இடம் நம்ம வ.வா.சங்கம்... :)




சரி மேட்டருக்கு வாறேன். சங்கத்தோட முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்த்தில் உங்களை மேலும் மகிழ்விக்க போட்டியென்ற நடத்தலாமின்னு சென்ற பதிவென்றில் அறிவித்து இருந்தோம்.











பரிசுப்போட்டி:-

நகைச்சுவையாக ஒரு பதிவு எழுதி அதோட முகவரியை இங்கே பின்னூட்டமிடுங்கள்.

விதிமுறைகள்:-

1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.
7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)


பரிசுத்தொகை:-


1000 பொற்காசுகள் இல்லை........................ (இந்திய பண மதிப்பில் பரிசு, புத்தக வடிவில்)

கடைசி தேதி:-

21-04-2007 11.59 PM IST

உங்களின் நகைச்சுவை சாரல் நம் எல்லாரையும் குளிர்விக்க அன்புடன் வரவேற்கிறோம்.



அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thursday, March 15, 2007

கவுண்டர் Devil Show - ஜொள்ளுப்பாண்டி



கவுண்டர்:- "ஏண்டா கோமுட்டி தலையா சும்மா ஒன்னையே மிதிக்கிறதுக்கு பதிலா சங்கத்திலே திரியறய்வங்களுக்கு ஆப்பு அடிக்கலாமின்னு வந்தா ஒரு பயலுகளையும் காணோம், எல்லா பேரும் வீராசாமியண்ணே நடத்துற அரட்டை அரங்கத்தை வேடிக்கை பார்க்க போயிருப்பாங்களோ?"

கோமுட்டி தலையன்:- "அண்ணே அந்தளவுக்கெல்லாம் அவங்களுக்கு சத்து பத்தாதுண்ணே, லேசா யாராவது சவுண்ட் விட்டாலே பயந்து பம்மிருவாய்ங்கே? வீராசாமிண்ணே பத்தாயிரம் வாட்ஸ்'லே அவரு மட்டுமே மைக் பிடிச்சிட்டு பேசுறாரு, இவிய்ங்கே அந்த சவுண்ட்'க்கே விழுந்துருவானுக...! அண்ணே அங்கே பாருங்கண்ணே! சங்கத்து குடிசையை பார்த்து ஒருத்தன் வாறான், அதிலே பேக்கிரவுண்ட் மிசிக்கெல்லாம் கேட்கிது, அனேகமா ஜொள்ளாதான் இருக்கும், நான் கிளம்புறேன்"

க: "ஏலே கரிச்சட்டி மண்டையா, அவன் வந்ததும் நீ ஏண்டா ஓடுறே? சங்கத்து பயலுகளுக்கு இவனுக்கு ஏதோ இருக்கு? தூரத்திலே ஒருத்தன் தொப்பின்னு சொல்லிட்டு என்னத்தயோ கவுத்துட்டு வாறான், வாடா, வாடா??"

ஜொள்ளு: "அண்ணே என்னாண்ணே நான் உள்ளே வர்றப்போ பெரிய பெரிய அடைமொழியெல்லாம் சொல்லி வரவேற்கன்னு கோமுட்டியண்ணே'கிட்டே சொல்லிருந்தேனே?"

க:"அதானே பார்த்தேன், அதுதான் ஒன்னை பார்த்ததும் கோமுட்டி மண்டையன் ஓடிட்டானா? ஏண்டா அரைடவுசர் மண்டையா? இந்த அட்டு விளம்பரமெல்லாம் தேவைதானா ஒனக்கு?"

ஜொ:"இந்த காலத்திலே பூக்கடைக்கும் வெளம்பரம் வேணுமிண்ணே"

க:"ஒன்னோட மொகரகட்டைக்கு பழமொழி வேறயா? ஒன்னோட மண்டையிலே கவுத்து போட்டுருக்க அந்த கூடையை எடுக்கமாட்டியா நீ?"

ஜொ: "என்னோட அழகை பார்த்து நீங்க மயங்கி விழுந்துட்டா அப்புறம் என்ன பண்ணுறது?"

க: "அப்போ நீ நம்ம கோமுட்டி தலையன் மாதிரி அழகா தான் இருப்பே? முஞ்சியே காட்டுறேன்னு சொல்லி என்னை பயமுருந்திராதே?? ஊரெல்லாம் ஒன்னையே தேடி கடைசியிலே பொம்பளை பிள்ளைக காலேஜ் பக்கமா கூட திரிஞ்சிட்டு இருந்தோம்? நீ இங்கிட்டு வந்திருக்கே?"

ஜொ: "அண்ணே எல்லா நேரமும் முழுநேர வேலையே பார்த்துட்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் சேஞ்சு வேணுமில்லே அதுதான் காத்து வாங்கலாமின்னு சங்கம் பக்கம் வந்தேன்"

க:"ஆமாம் இவரு பெரிய நெத்தி வேர்வை நெலத்திலே விழறமாதிரி உழைச்சிட்டாரு? சேஞ்ச் வேணுமாம் சேஞ்ச்? பெர்முடாஸ் மண்டையா? ஏண்டா ஜொள்ளுப்பாண்டி'ன்னு பேரு வைச்சிக்கிட்டே?"

ஜொ: "அண்ணே! அது நானா வைச்சிக்கிட்டே பேரு இல்லிங்கண்ணா? அது மக்களா எனக்கு கொடுத்த பட்டமிண்ணா? அது நான் செய்யும் சமுதாயபணிக்கு மக்களா கொடுத்த வெகுமதியா நினைச்சு ஏத்துக்கிட்டேன்"

க:" ஆமாம் இவரு பெரிய சமுதாயகாவலரு? டேய் கூடைமண்டையா! நீ பண்ணுறது சேவையாடா? வார்த்தையை கேட்டா ஜீரணிக்கிறமாதிரி பேசுங்கடா"

ஜொ: "கிரேட் இன்சல்ட்! அண்ணே வேற கேள்வி கேளுங்கண்ணே?"

க:" ஏண்டா மண்டையா ஃபீல்'ஆ பண்ணுறே? பாவம்'டா அந்த ஃபீல், அதை விட்டுறா? ஆராய்ச்சியெல்லாம் பண்ணுறேன்னு சொல்லிட்டு நாலஞ்சு கட்டுரையெல்லாம் போட்டுருக்கீயே? அதை சப்மிட் பண்ணி லண்டன் யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டமா வாங்கப்போறே?"

ஜொ:"அண்ணே என்ன இப்பிடி கேட்டுபிட்டியேளே? நான் ஆராய்ச்சி பண்ணி போட்டதுக்கு மக்களே எனக்கு டாக்டரு பட்டம் குடுத்துட்டாங்க.. எதுக்கு லண்டன் யுனிவர்சிட்டியெல்லாம்? நான் வரைஞ்ச கட்டை சில குறிப்புங்கிறே பதிவுக்காக அமெரிக்கன் யூனிவர்சிட்டியிலே கெளரவடாக்டர் பட்டம் குடுக்கவந்தாங்க! நாந்தான் ஓவரு விளம்பரமெல்லாம் ஒடம்புக்கு ஆவாதுன்னு வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: "அடேய் தண்ணிக்குள்ளே முக்கியெடுத்த பஞ்சுமிட்டாயி மண்டையா! பொய் சொன்னாலும் பொருந்துறமாதிரி சொல்லு? அது என்னாடா எல்லா பித்தளைகாரங்களுக்கு வாறத சந்தேகம் ஒனக்கு எப்பிடி வந்துச்சு, அதிலே எதுக்காவது உருப்படியா பதில் கிடைச்சதா?"

ஜொ: "அண்ணே! அது கோடிக்கணக்கான ஆம்பிளைச் சிங்கங்கள் மனசிலே இருந்துச்சு, அதை நான் எல்லாருக்கும் பொதுவா இருந்து கேள்விகணைகளை தொடுத்து பார்த்தேன்?"

க:"அடேய் கிபோர்ட் மண்டையா? கிணத்துக்குள்ளே கல்லை தூக்கிப்போட்டுந்தேன்னா ஒரு சொட்டு தண்ணியாவது ஒன்னோட முஞ்சிலே தெரிச்சிருக்கும், ஆனா நீ கேட்ட கேள்விக்கு ஒன்னாவது விடை கிடைச்சதா? அதுக்கு பதிலா ஒன்னாருவா ஆமவடையை வாங்கி தின்னுட்டு போயிருக்கலாமில்லே நீ?

ஜொ: "அண்ணே அதுக்கு நானெல்லாம் அசந்தேனா? ஆபாசத்துக்கும் கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசத்தை பத்தி ஆராய்ச்சிப் பண்ணினதுக்காக இந்தியாவிலே இருக்கிற யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டம் குடுக்கவந்தாங்க! வழக்கம்போலே நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: அடேயே போதுமிடா, அத்து தொங்குதுடா, விட்டுறுடா அந்த இத்து போன ரீல்சுத்துற வேலையே! ஏண்டா ஆட்டுக்கல் மண்டையா அஞ்சரைக்குள்ளே வண்டின்னு ஒன்னு எழுதுனேயே? அந்த தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருந்துச்சா'ன்னு சொல்லு, ஏண்டா இப்பிடியெல்லாம் கலவரமா தலைப்பை போட்டு படிக்க ஓடிவர வைச்சிட்டு ஏமாத்திறீங்க?

ஜொ:"அண்ணே! நான் படத்தோட கதையே சொல்லிருந்தை விட நான் படம் பார்க்க போன கதைதானே நல்லா இருத்துச்சு, இம்புட்டு ஞாபகமா வச்சு எப்பிடிண்ணே கேள்வியெல்லாம் கேட்கிறீங்க? ஒங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிதுண்ணே?

க: "ஏண்டா அதை தேடி படிச்சு நீ எங்கயோ அடி வாங்கினதை எழுதி வைச்சிருந்தை பார்த்ததும் ஒன்னையே நேரா பார்த்தா தூக்கி போட்டு பந்தாடலமின்னுதான் இருந்தேன்..? ஆனா நீ போட்ட நாட்டுக்கட்டை ஆராய்ச்சி கட்டுரை நல்லா இருத்துச்சுடா ஜொள்ளுமண்டையா? ஆனா எப்பிடிரா நாளைக்கோ நாளைன்னக்கோ வேணுமின்னு நினைச்சு கூட பார்க்கமே ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கே?"

ஜொ: "அண்ணே இதைதான் ஜொள்ளானந்தா ஜொள்ளு விடறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை ஜொள்ளு விடாதவன் எல்லாம் நல்லவனும் இல்லை'ன்னு ஜொள்ளீருக்காரு, அவரு ஜொள்ளுரையை பின்பற்றுபவன் நானு "

க:"பின்பற்றுபவன்,ஊக்குபற்றுவன்னு ஏதாவது உளறுனே அப்பிடியே வந்து காதை கடிச்சிபிடுவேன், ஏண்டா வேகாத முட்டை மண்டையா? அடிபட்டு உங்கப்பா ஆஸ்பத்திரில படுத்து கெடந்தாருன்னு சொன்ன, அந்த நேரத்துலகூட நர்ச சைட் அடிக்கறயே நீயெல்லாம் என்னாதாண்டா நினைச்சிட்டு இருக்கே?

ஜொ:"அண்ணே ஒரு கடமைவீரனுக்கு அவனோட கடமைதானே முக்கியம்! எந்தவொரு நெருக்கடியிலும் தன்னோட கடமையிலிருந்தும் கடுகளவு கூட தடம் மாறக்கூடாதுன்னு பெரியவங்க சொல்ல கேட்டுருக்கேண்ணே? அதுதான்"

க: "இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சு என்னந்தான் பண்ணப்போறே நீயி? ஏதோ பாட்டு எழுதன ஆளு ஒரு எதுகைமோனைக்கு எழுதினா அதை வைச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு திரியுறே? ஏண்டா குட்டிச்சுவரா போனவனே , குட்டி குட்டி'ன்னு நூறு மொறை சொல்லிட்டு நாய்க்குட்டிய சொன்னேன்னு பசப்பினலே, உண்மைலயே நாய்க்குட்டியதான் சொன்னியா?"

ஜொ: "அண்ணே! அது நாயி இல்லிங்கண்ணா! பூனைங்கண்ணா!"

க:"ஆமாம் ரொம்பமுக்கியம், ஒன்னையெல்லாம் ஒரேநேரத்திலே எல்லாம் பேட்டியெடுக்க முடியாது போலே? இப்போ மணி நாலாக போவுது! இந்நேரம் காலேஜ்'லாம் விட்டு கிளியா வெளியா பறக்க ஆரம்பிச்சிருக்கும், போயி ஒன்னோட கடமையை ஆற்றிட்டு வா? நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டீக்கடையிலே ஆத்துறமாதிரி ஒன்ன ஆத்துறேன் அப்புறமா?"

கவுண்டர் பிரேக் விட்டதும் பாண்டி வில்லிருந்து புறப்படும் அம்பென தன் களப்பணியாற்ற கிளம்புகிறார்......

Friday, March 2, 2007

ஹோலியா???

நம்ம ஊர்ல சோறு- அவிங்க ஊர்ல ரொட்டி

நம்ம ஊர்ல சாம்பாரு- அவிங்க ஊர்ல பன்னீரு

நம்ம ஊர்ல அரைக்கீரை- அவிங்க ஊர்ல பாலக்

நம்ம ஊர்ல வேட்டி- அவிங்க ஊர்ல பைஜாமா

நம்ம ஊர்ல காஞ்சிபுரம் பட்டு- அவிங்க ஊர்ல சுடிதாரு

நம்ம ஊர்ல அச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு - அவிங்க ஊர்ல அச்சம் மட்டும்தாங்க

நம்ம ஊர்ல முத்தம்- அவிங்க ஊர்ல சும்மா

நம்ம ஊர்ல சர்தார்ஜி- அவிங்க ஊர்ல மதராஸி

ஏன் இவ்வளவு வித்தியாசம்.. ஏன் இவ்வளவு இடைவெளி

நம்ம ஊர்ல மஞ்ச நீராட்டு- அவிங்க ஊர்ல ஹோலி

இவ்வளவுதான் நாங்க சொல்ல வந்தது.

அதனால் எல்லாரும் தண்ணீ அடிச்சு, தப்பா நினைக்கப்படாது, கலர் கலரா தண்ணி அடிச்சு
பாங்கு குடிச்சு, சட்டைய எல்லாம் நாசமாக்கி




"சந்தோசமா ஹோலி கொண்டாடுங்க" மக்கா



கிழே இருக்கிறத copy பண்ணி Browser Address bar'லே போடுங்க.... :)

javascript: i=0; c=["red","green","blue","yellow","magenta","orange","black","cyan"]; a=document.links;setInterval('i++;a[i % document.links.length ].style.color=c[i % c.length]',10);void(0); alert("'Dear friend, wish you a Very HAPPY HOLY’,\ ..******..");

Friday, February 16, 2007

டவுசர் பாண்டி (vol-2)

காதலர்தினம் ஒரு வழியா முடிச்சுபோச்சு, காதலன் காதலிக்கிட்டே பேசுறதும், காதலி காதலன்'கிட்டே பேசுறதும் பார்க்கிறப்போ 'அப்பிடியே நம்மையறியாமே உள்ளுக்குள்ளே ஒன்னு பொங்கி வந்து அவனுகளை தலைமுடியை பிடிச்சு நறுக் நறுக்குன்னு நாலு குட்டு வைக்கணும் போலே தோணும். வீட்டுலே உட்கார்ந்து எழுதி வந்து மேடையிலே பேசுறமாதிரி பேசிட்டு திரிவானுக... அதுவும் நம்மளை மாதிரி காஞ்சுபோன கேஸ்களுக்கு அவனுக பேசுறத கண்டா அப்பிடியே பத்திட்டு வரும், அதாவது நம்மளை மாதிரி'ன்னு சொன்னது காதலர் தினத்தை அன்பர் தினம் , அதிசயமாய் வேலை பார்க்கும் தினமா கொண்டினவங்களுக்கு தான் சொல்லுறேன். வேற யாரும் டென்சன் ஆகவேணாம்....!!!!!

லவ் பண்ணிட்டு திரியறவயங்கே கூட ஆளுக்கு ஒருத்தர் துணை ஒன்னு இருப்பாய்ங்கே... அப்பிடி உட்கார்ந்து கிடந்த நம்ம டவுசரு பாண்டி சொல்லுறத கேளுங்க.





"எங்கவீட்டுலே யாராவது பொண்ணுக கூட பேசிட்டு இருக்கிற பார்த்தா பிரச்சினை ஆகிறும்.. ஸோ கொஞ்சம்கூட வாடா! நாமெல்லாம் இருந்தா கூட்டமா சேர்த்து கும்மாளம் போடற மாதிரி இருக்கும்'ன்னு சொல்லி கூட்டிட்டு போறீங்களே, உனக்கு அங்கே துணை இருக்கு, எனக்குன்னு யாராவது இருக்காங்களான்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?"

"டேய்! இன்னிக்கு எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை'டா! அவளை திட்டிட்டு வந்துட்டேன்! இப்போ என்ன ஆனாளோ? சாப்பிட்டாளா? தூங்குனாளோ?? இப்பிடி பல வகையா திங்க் பண்ணீறீங்களே..அவிஞ்சு போன அடுப்புலே வெந்து போன சாமிகளா? ஒங்ககூடவே குரங்கு குட்டியாட்டம் திரியுற எங்களுக்கு எப்பாவது வடையும் டீயும் வாங்கி தரனுமின்னு யோசிச்சுருக்கீங்களடா போண்டா தலையனுகளா?"

"ஊரெல்லாம் தொத்து வியாதி பரவிறுக்கே! நம்ம பயப்புள்ள'க்கு என்னாச்சோன்னு பார்க்கவந்த இடத்திலேயும் "ரெண்டு மூணு நாளா அடிச்ச காயச்சலிலே வெளியே எங்கயும் போகமுடியலை! அவளையும் பார்க்கமுடியலையே? ஐயோ ஐயோ'ன்னு கதருற ஒங்களை எல்லாம் ஏண்டா சிக்கன்குனியா டைனோசர் வந்து கடிச்சு வைக்கலை??"

"நம்ம பண்ணுற லவ்'லே எப்பாவது அடி கிடி வாங்க வேண்டியாதிருந்தா இந்த பயப்புள்ளயும் வாங்கட்டுமின்னு கூட்டிட்டு போறே பாசக்கார மச்சானுகளா!... ஊரோட ஒத்து வாழனுமின்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி அடிக்க வர்றவங்களோட சேர்த்து நாங்களும் குடுப்போமிடா எண்ணை சட்டியிலே வெந்து எந்திரிச்ச கோழிமண்டயனுகளா"

Wednesday, February 7, 2007

கவுண்டர் Devil Show - வெட்டிப்பயல்



கவுண்டர் நடத்தும் டெவில் ஷோ நம்ம வெட்டிப்பயல் பதிவில் படித்து இருப்பீர்கள். கவுண்டர், சினிமா நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்டு அலுத்துவிட்டபடியால் ஒரு மாற்றாக நம்முடைய வலைப்பதிவர்களிடம் அவருடைய பேட்டியை தொடரலாமின்னு முடிவு செய்கிறார். எப்பவும் அடுத்தவருக்கும் நமக்கு நாமே ஆப்புகள் பலவகையாய் வைத்து பழகிய சங்கத்து சிங்கங்களிடம் ஆரம்பிக்கிறார். முதன்முதலாக கவுண்டரிடம் சிக்கி சின்னபின்னாவென ஆனவரை பற்றி அறிய மேலும் படியுங்கள்.

கவுண்டர்:- வாங்க சங்கத்து இளையதளபதி, பாஸ்டன் புயல் , அறிவுச்சுடர், வெட்டிப்பயல் பாலாஜி அவர்களே!

வெட்டிப்பயல்:- என்ன வரவேற்ப்பெல்லாம் பலமா இருக்கு! எதுக்கு இவ்வளோ அடைமொழிகள் எல்லாம்??

க: பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே! அதுக்கு வேற அவனுக்கு முருக்கு பொட்டலம் லஞ்சமா வேறே குடுத்திருக்கே! இங்கே வந்து நல்லவன்மாதிரி ஆக்ட் குடுக்கிறீயா பல்புமண்டயா?

வெ: சரி சரி விடுங்க... யாரும் பார்க்கலை! அப்பிடியே மெயிண்ட்ண் பண்ணிக்குவோம்.



க:அப்பறம் என்னடா உன்னை எல்லாரும் வெட்டி வெட்டினு சொல்றாங்க?

வெ: அது என்னோட ப்ளாக் பேருங்கண்ணா!

க: எதுக்குடா அந்த பேரை வெச்ச?

வெ: வெட்டியாத்தானே இருக்கோம் ஏதாவது உருப்படியா பண்ணுவோம்னு ஆரம்பிச்சாதாலஅந்த பேரையே வெச்சிட்டேன்!

க: ஓ!!! அப்படினா உன்னை பொருத்த வரைக்கும் வெட்டியா இருக்கவங்க தான்ப்ளாக் எழுதறாங்கனு சொல்லற!

வெ: தெய்வமே! நான் அப்படி சொல்லலை... மத்தவங்க எல்லாம் பல வேலைகளுக்கிடையேசெய்யும் போது நாம வெட்டியா இருக்கும்போது ஏன் செய்யக்கூடாதுனுஆரம்பிச்சதால அந்த பேரு...

க: ஹீம்! சரி என்னந்தான் வேலை பார்க்கிறேன்னு சொல்லு?

வெ: நான் என்ன பண்ணுறன்னு இந்த உலகத்துக்கே தெரியுமே?

க: ஆமாம் இவரு.. பெரிய அமெரிக்க ஜனாதிபதி புஷ், இவரை ஊர்உலகத்துக்கே தெரியுது, அரை வேக்காடு மண்டயா, என்னப்பண்ணுறேன்னு ஒழுங்க சொல்லு, இல்லே அப்பிடியே வந்து காதை கடிச்சி வைச்சிருவேன்!

வெ: நானு சாப்ட்வேர் இஞ்சினியர், வேலை நிமித்தமா பாஸ்டன்'லே தங்கியிருக்கேன்.

க: உன்னோட ஹாபியை சொன்னே.... உன்னோட மெயின் வேலை என்னாது?? அதை சொல்லு?

வெ: அப்பிடி மடக்கிறீங்களா? கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன், கட்டுரை எழுதுவேன், படவிமர்சனம் எழுதுவேன்.

க: டேய் டவுசர் மண்டையா, நிப்பாட்டுடா! மனசிலே என்ன தலைகாணி உறையை அப்பிடியே முழங்காலு வரைக்கும் போட்டு அலையிற எழுத்தாளன்னு நினைப்பா?

வெ: அய்யோ! அதெல்லாம் இல்லீங்கண்ணா! ஏதோ சும்மாயிருக்கிற நேரத்திலே ஏதோ எழுதுறேன், அவ்வளவுதான்!

: ஏண்டா டேய்! நீ ஏதோ அரைவேக்காட்டுதனமா நீ எதாவது பேசுறது ,செய்யுறதையெல்லாம் கூட வேறே எவனோ ஒருத்தன் இதெல்லாம் பண்ணுவான், அவனுக்கு கூட நாங்க கோழின்னு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுவோமின்னு சொல்லி அதை அப்பிடியே இங்கே எழுதி படிக்கிற மக்களை ஏமாத்துறே இல்லே???

வெ: ஐயோ! இப்பிடியெல்லாம் யாருங்ண்ணா உங்களுக்கு தப்புதப்பா தகவல் சொன்னது???

: உன்னை பத்தி தகவல் சொல்ல ஏஜெண்ட் 007'ஆ வருவான், நீ இப்போ பேசுறப்பவே தெரியலை, அந்த கோழி நீதான்னு??

வெ: அது நானில்லை! நானில்லை!

க: நானில்லை? நரியில்லைன்னுட்டு? ஏண்டா பாப்பாயி மண்டயா! நீ பெங்களூரூலே இருக்கிறப்போ, டெய்லி பாயை பிடிச்சி பிராண்டுறது, சுவத்தை பார்த்துக்கிட்டே "எக்கட உந்தி, நம் அம்மாயி" பொலம்பிக்கிட்டே இருப்பியாமே!! அதை பாஸ்டனிலே சும்மா உட்கார்த்திருக்கிற நேரத்திலே கதையா எழுதிட்டே இல்லே??

வெ: கவுண்டருண்ணா, நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்க? அது என்னோட கற்பனை கதைங்கண்ணா!

க: டேய், பீட்டாதலையா! இதையே எத்தனை பேருக்கிட்டே சொல்லிட்டு திரிவே, அதெப்பிடிடா தூறல் கதையிலே ஏரியா, பஸ்ரூட் எல்லாமே எழுதுனே இல்லே, உனக்கு அதெல்லாம் முழுசா தெரிஞ்சாதானே உன்னோட டைரியிலே எழுதமுடியும்??

வெ: நான் உத்தமன் தான்கிறதே புருப் பண்ண என்ன செய்யணும், சொல்லுங்க?

க: ஆமா இவரு பெரிய நடிகர்திலகம் நடிச்ச உத்தமபுத்தரு, எல்லாத்தையும் எத்தனை நாளுதான் ஏமாத்தப்போறீயோ?? தொரை வெறும் தெலுங்கு படந்தான் பார்ப்பிங்களா, அதை பார்த்திட்டு வந்த அடுத்த அஞ்சுநிமிசத்திலே அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுறது?

வெ: அது ஏன்ன்னு கூட நான் சொல்லிருக்கேன், வேணுமின்னா என்னோட பொன்னான பதிவை படிச்சிப் பாருங்க, உங்களுக்கே காரணம் புரியும்?

க: அடடேய் எலமண்ட் தலையா! படம் பார்த்ததும் இல்லமா அதெப்பிடியெல்லாம் நக்கல் பண்ணி ரவுசு விடுறே, ஒரு சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டநஷ்டமிருக்குமின்னு தெரியுமா?

வெ: அண்ணே, சினிமா எடுக்கிற கஷ்டநஷ்டம் பத்தி எனக்கு தெரியாது, ஆனா அதை போயிபார்க்கிறப்போ எங்களுக்கு கஷ்டமும் , காசு நஷ்டமும் தான் வருது!

க: அடேய் ஆட்டுகல் மண்டையா! என்கிட்டே ரவுசா? அது ஏண்டா கரம் வைச்சு கேப்டனை வம்பிழுக்கிறே??

வெ: அய்யோ! நான் தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணுறதில்லை.. அதெல்லாம் தெரியாமே நடக்கிறதுங்ண்ணா?

க: அடேய் ! அடேய் ! அப்போ நீ கேப்டனை கலாய்க்கிறது தெரியாமே நடக்கிறதா??

வெ: அப்பிடிலீங்கண்ணா! நான் கேப்டன் படம் பார்க்கிறது என்னை அறியாமே நடக்கிற தப்புங்கண்ணா? அந்த தப்பை சரி செய்யிறதுக்கு அதை பத்தி கலாய்ச்சிட்டா சரியா போயிருமில்லை???

க: அடேய்! அவரு பைட்'லே காலை சுழட்டி அடிக்கிறது தெரியுமில்லே...??

வெ: ரொம்ப தாங்ஸிண்ணோவ், அடுத்த பதிவுலே அவரோட பைட் ஸ்டைல் வச்சு கும்மிறலாம்!!

க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்மிருவே? ஏண்டா சினிமா படமெடுக்க எவ்வளோ கஷ்டமின்னு சொன்னா? நக்கல்நையாண்டியா பண்ணுறே?

வெ: நாங்க பிளாக் எழுதுறதுக்கு எவ்வளோ கஷ்டப்படுறோம், ஆனா நீங்க அதை வந்து இப்போ நக்கல் பண்ணலையா ,அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு , போங்க...!!

Friday, February 2, 2007

டவுசர் பாண்டி.. பராக்...பராக்...

நேத்திலிருந்து காதல் மாசம் ஸ்டார்ட் ஆகிருச்சு, ஆனா நமக்கு காதலே இன்னும் வரலை. வந்தாதானே அதெல்லாம் கொண்டாடமுடியும், இவிங்கங்களோட சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கலாம். அது எவிங்க தெரியுமா, வருத்தமே படமாட்டோமின்னு சொல்லிப்பிட்டு பிளாக்கர் பிரச்சினைக்காக லபோதிபோன்னு குதிச்சு அம்புட்டு பேத்தையும் அல்லோகலப்படுத்தி ஸ்கூப் நீயுஸ் போடவைச்சு அதை அப்பிடியெல்லாம் இல்லைன்னு சொல்லி அன்னிக்கு அதை நசநசன்னு ஆக்கி அப்பாப்பா.....

சரி விடுங்க மேலே இருக்கிறதலே உங்களுக்கு என்னா புரிஞ்சாலும் பரவாயில்லை. இது ஒரு விஷயத்தை ஈயடிச்சான் காப்பியடிச்சது மாதிரி ஒன்னு பண்ணமின்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதை இப்போ நிறைவேத்த போறேன். முன்னாடி ஆனந்தவிகடனிலே பராக் பாண்டின்னு ஒரு பகுதி வருமில்லை. இப்போ என்ன காரணமோ நிப்பாட்டிட்டாங்க. அதை நம்மளை மாதிரி காதல் வராத ஆசாமிகள் புலம்பினமாதிரி பொலம்பவிட்டுற வேண்டியதுதான், ஆனா அவரு இங்கே தன்னோட பேரை பராக் பாண்டியிலிருந்து டவுசர் பாண்டின்னு மாத்திட்டாருப்பே.





ஏண்டா அங்க,இங்கன்னு அலம்பலை கொடுத்து எப்பிடியாவது ஒத்தை சொத்தை பிகரையாவது கரெக்ட் பண்ணி, வாழ்கையிலே நாமல்லும் வாலன்டெஸ் டே கொண்டாலாமின்னு பார்த்தா அதுக்குள்ளே டுலெட் போர்டு பார்த்ததும் ஒடனே அட்வான்ஸே போட்டு கெரயத்தை முடிச்சிரீங்களே.. எங்கேயிருந்துடா மொளைக்கிறீங்க ரீஸிஸ்டர்ஆபிஸ் மண்டையனுகளா?

அவனவன் சோத்துக்கு அல்லாடுறப்போ,இப்போதான் மட்டன் பிரியாணி தின்னுட்டு வந்தேன்னு சொல்லி வெறுப்பேத்துற கணக்கா, இந்த வாலன்டெஸ் டே'க்கு நாங்க அங்க போறோம், இங்க போறோம்மின்னு சொல்லி ஏண்டா வெறுப்பேத்தீருங்க பஞ்சர்வாயனுகளா?

எங்கப்பாரு குடுக்கிற டீக்காசிலே செல்லுக்கு ரீசார்ஜ் பண்ணினா, "மச்சான் ஒரெயெரு கால் பண்ணிட்டு தந்துறேன்"னு சொல்லிட்டு ஒன்னை முக்கா மணி நேரமா "ம்ம், சரி, சொல்லு..ஒகே" னு இத்துப்போன ரீக்கார்ட் செவசெவன்னு இராகம் பாடுறமாதிரி பேசி எல்லா காசையும் ஒப்பேத்திறீங்களே. எந்த புத்து'லேயிருந்துடா புறப்படுறீங்க செத்தபாம்புகளா?

அடேய் என்னோட சக்திக்கு மீறீ இந்த பைக்கை வாங்கி தந்துருகேன்னு அப்பாருக அதை எடுக்கிறோப்போ ஓயாமா சொன்னதக்கூட செவன்னேனு கேட்டு வாங்கிட்டு வந்தா, டேய் அஞ்சு நிமிசத்திலே வந்துறேன்னு சொல்லி வாங்கிட்டு போயி அதுகளே கம்ப்யூட்டர் கிளாஸிலே டராப் பண்ணிட்டு உங்க கத்திரிகாயையும் டெவலப் பண்ணிரீங்கீளே.. வால் மொளைக்காத மாருதிகளா?

Wednesday, January 24, 2007

சிங்கங்களின் வாழ்த்து(க்)கள்!!!

ஆண்டொன்று போனால் வயசொன்று கூடும்,
வயசொன்று கூடினால் அழகு இன்னும் ஏறும்,
அழகும் கூடினால் கூட்டமும் கூடும்,
கூட்டம் கூடினால் அலைபேசி தொடர்புகளும் எகிறும்.
.........


ஸ்டாப் கவிஜ'ஸ்...

அப்பிடின்னு யாராவது சத்தமா கத்திருந்திங்கன்னா இன்னொரு தடவையும் கத்தி சொல்லுங்க,பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா'ன்னு!



எங்கள் தங்க அண்ணன் பாலபாரதிக்கு ஒரு தனிமடல் அனுப்ப வசதியில்லாத காரணத்தினால் கிழே ஒரு படம் அனுப்பியுள்ளோம், அதை பாலபாரதி பெயர் கொண்டவர் மட்டுமே பார்க்கவும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Tuesday, December 26, 2006

புத்தம் புதுசாய்....

"ஆப்புகள் ஆயிரம் கோடி வாங்கி... வேட்டிகளை வெளிநாடுகள் என்றும் பாராமல் பறக்க விட்டு... குப்புற விழுந்து கொமாட்டுல்ல கும்மாங்குத்து வாங்கி... இடுப்பிலே இடியை விட பலமான மிதிகளை வாங்கி...மூஞ்சி மொகரையில் புயல் வேகத்தில் லெப்ட் ரைட் என அறை வாங்கி அஞ்சாறு ஊருக்கு கேட்கிறமாதிரி மைக் இல்லாமலே அலறல் விட்டு... ஓடம்புல்ல ஒரு லட்சம இடத்துல்ல டிசைன் டிசைனா அடியை வாங்கி...டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு அல்லோலப்பட்டு.. டன் கணக்கல்ல டின் கட்டப்பட்டு... அங்கிட்டு இங்கிட்டு என எங்கிட்டும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கெத்து குலையாம எங்க தல கட்டுன வீர விவசாயப் பூமி எங்க சங்கம்...

அதே பிளாக்ல பீடாப் போட்டோம்.. பதிவுலே வெத்தலப் போட்டோம்... அப்படின்னு விளக்கம் சொன்னா.. விட்டுருவோமாய்யா.. வீதிக்கு வீதி விளம்பரப் படுத்தி வித்தைக் காட்டி எங்க தல பவர் என்னன்னு ப்ருவ் பண்ண மாட்டோம் நாங்க..."

"ஏலேய், போர்வாளு நிப்பாட்டு! என்ன உன்னோட பிரச்சினை எதுக்கு இப்போ சந்தையிலே வித்தை காட்டுறவன் மாதிரி சவுண்ட் விட்டுக்கிருக்கே...??"

"தல! சங்கம் பீட்டா, பாட்டா'ன்னு என்னோமோ ஆகிப்போச்சு! அதுதான் இப்பிடி சவுண்ட் விட்டேன்!"

"என்னாலே சொல்லுறே? பீட்டா'வா?"

"ஆமா நம்மளை கூடி கும்மியடிக்கிறே கோஷ்டிகளுக்கு பூராப் பேத்துக்கும் வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிட்டு பீட்டாவுக்கு மாத்த சொல்லிறாங்க!"

"சரிதான் இழுந்து வைச்சு கலகம் பண்ணுறாய்ங்களா??? சரி விட்டுதள்ளு! தானமா கிடைச்ச மாட்டே எதுக்கு பல்லை பிடிச்சு பார்க்கணும்???"

"சரி தல! நானு என்னோட அறிவிப்பை தொடர்ந்துக்கிறேன்..!"



மக்களே,

மேலே இருக்கிறமாதிரி அட்டவணை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கும் போது நமக்குன்னு ஒரு ரிலாக்ஸ் செஞ்சுக்கிற இடமா இருந்த சங்கம் இப்போ சின்ன பிரச்சினைலே இருக்கு.

ஆமாம் நம் தலையின் இனிய எதிரிகள் கட்டதுரையும், பார்த்திபனும் இணைந்து நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கந்தகோலம் ஆக்கிவிட்டனர். அதுக்கா நாம் அசரப்போகிறோம்...

இந்தா மறுபடியும் எங்க சிங்கத்தைச் சீவி சிங்காரிச்சி கூட்டிட்டு வந்துருக்கோம்ய்யா.. கூடவே தலக்கு சப்போர்ட்டா அண்ணன் பஞ்ச் பாலாவும் வந்து இருக்காகாக...



விரைவில் சங்கம் முற்றிலும் புதுப் பொலிவுடன் புத்தம் புதுசாய் மலர இருக்கிறது!!!

லோக்கல் ஆப்பு ரிஜக்டட்.. கலக்கல் ஆப்பு அக்சப்ட்ட...

அப்புறம் என்ன தாரைத் தப்பட்டைகள் எல்லாம் கிழிந்துத் தொங்க வேண்டாமா.. கிளப்புங்கள் பீதியை...

வழக்கம்போல் உங்களை சிரிக்கவைக்க இதோ கிளம்பிட்டோம்... மக்கா கிளம்பிட்டோம்மய்யா.....

Sunday, December 10, 2006

களை கட்டும் "தல" கச்சேரி

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.


அதுக்கப்புறம் தல பலவாறு யோசிச்சி யோசிச்சி நம்ம பயலுவே என்னமோ பெரிய பெரிய பேரா சொல்லுறானுவே. நமக்கு தமிழே விட்டா வேறே பாசை எதுவும் தெரியாது. நமக்கு தெரிஞ்ச தமிழில்லாத ஒரு பாட்டு சிங் இன் த ரெயின்'தான். இப்போ வேறே என்ன பண்ணுறது, என் இனிய எதிரி வேறே ஒன்னோட கொரலு நல்லாயிருக்குன்னு வேறே சொல்லிட்டாப்பலே..! அதுக்காக இந்த சீசன்லே கச்சேரியும் பண்ணிரலாமின்னு சபா ஒன்னுலே வேறே துண்டை போட்டு இடத்தே வேறே பிடிச்சி குடுத்துருக்காரு. நமக்கு நல்லாதான் பாடவருமின்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இது ஒரு சத்தியச்சோதனையா ஆகிறுமே. நல்லா பாடலேன்னா மொதல்லா கல் கொண்டு எறியறப் பயலுவே நம்ம சங்கத்து சிங்ககள்தான், அதுவே நல்லா இருந்தா போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டுறது பத்தாதுன்னு வெள்ளைமாளிகையிலிருந்து ஐநா சபை வாசல் வரைக்கும் ஒட்டி அமர்க்களப்படுத்துவானுக.!

அடபாவி அடபாவி என்னை இப்பிடி தனியா புலம்ப வச்சிட்டானுவேலே!! சரி அவிங்ககிட்டே கேப்போம் ஏதாவது ஐடியா இருக்கான்னு??

தல தன் அறையிலிருந்து மின்னலென வெளிவருகிறார். அங்கு வெட்டி கணக்கு லெட்சரில் ஏதோ எழுதி கொண்டிருப்பதை பார்க்கிறார்.

"ஏலேய் கட்டரு, என்னா எழுதுறே?"

"தல, அ.வா'வுக்கு வரவேறப்புக்கு ஆன செலவே பற்று வைக்கிறேன்!"

"ஓ எம்பூட்டு"

"கொஞ்சம்தான் எவ்வளவு அதிலே பணமின்னு இருந்துச்சோ அதே விட 15000 ருபா கூட "

"அடபாவிகளா, சங்கத்து கணக்கிலே இருந்த பணத்தே தீர்த்ததும் பத்தமே அதிலே நஷ்ட கணக்கு வேறே எழுதுறீங்களா? அப்பிடியென்னா செலவு பண்ணீங்க??"

"சவுண்ட்பார்ட்டிக்கு ஒரு ஆளு உசரத்துக்கு ஸ்பீக்கரு கட்டினோம்."

"என்னாது? ஸ்பீக்கரு பெட்டியா? வெளியே ரெண்டு கொழா ரேடியாதானாய்யா கெடக்கு? அதிலே ஒன்னுலே கொண்டையே வேறே காணோம்? ஆனா உங்களே மாதிரி புரட்டு கதையை சொல்லுறதுக்கு அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!"

"ஏன் தல உள்ளேதானே இருந்தீங்க? இப்போ எதுக்கு வெளியே வந்து சவுண்ட்?" ன்னு போர்வாள் எகிற

"கேட்டியா ஒரு கேள்வி.. ரைட்டுதான் அந்த கேள்வி! செவனேனு தானய்யா இருந்தேன். நான் எந்த வம்பு தும்புக்காவது போயிருக்கேனா..சொல்லு ? இது டிசம்பரு மாசம் நாமெல்லும் கச்சேரி வச்சிருவோமின்னு எனக்குள்ளே இருந்த சங்கீத ஆசையே தூண்டிவிட்டிங்க.. இப்போ அது அனலா தகிச்சு தீயா கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு."

சட்டென்னு ஏதோ ஞாபகம் வந்ததாய் தேவ்.. தலையே கோணலா திருப்பி விட்டத்தே வெறிக்கிறார்.

"ஆமா தல.. அந்த கச்சேரிலே விளம்பரம் செய்யினுமின்னா சென்னை கச்சேரியே அணுகவுமின்னு நோட்டிஸ் பண்ணினேன், ஆனா இப்போ அதிலே மா மன்னாரு சாப்ட்வேர் கம்பெனி வேறே போயிட்டிருக்கு!"

"ராஸ்கல்! சங்கம் டெக்னாலாஜிஸ்'க்கு போட்டி கம்பெனி ஆரம்பிக்கிறீயா நீயி?"

"அதெல்லாம் இல்லே தல... சங்கத்து டெக்னாலாஜிஸோட இணைந்தே இதுவும் நடக்கும்."

"என்னோமோ போ ஒன்னை மாதிரியே அதுவும் பிராடுத்தனம் பண்ணமே இருந்தா சரி!"

"தல ஒனக்கு இப்போ என்னா வேணும்?"ன்னு கோபமாய் தேவ் கேட்க

"எனக்கு குச்சி மிட்டாயி வேணும்! ஏலேய் அப்போயிருந்து என்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்னு தெரியலேயா? நான் கச்சேரிலே பாட்டு பாடணும் அதுக்கு நீங்கெல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்கன்னு வந்தேன்."

"தல ஒன்னோட குலப்பெருமையே சொல்லுற Sing the Rain பாட்டே தமிழிலிலே முழிபெயர்ந்து அதே அப்பிடியே பாடிருவோமா." ன்னு சிபி கேட்க, தல சட்டென்னு டென்சனாகி, சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க, இப்பிடியே முறை வச்சு முறைப்பு படலமா இருக்கிறப்போ தீடீரென்னு ஒரு கொரல், குடுத்தது கட்டரு..

"தல, தள நீங்க ரெண்டு பேரும் முறைச்சத யாராவது சினிமாகாரன் பார்த்திருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டி சாங் போட்டுறுப்பான்! பாட்டுக்குள்ளே ரெண்டு பேரும் சண்டை, வாக்குவாத போருன்னு கொண்டு வந்திருப்பாங்க"

"அயோக்கிய அப்ரெண்டிஸ்! இங்கே என்ன நடக்கிதுன்னு தெரியமே என்னா பேச்சு பேசுறே? இதுக்குதான் ஓவரா தெலுங்கு படம் பார்க்காதேன்னு சொல்லுறது, இது ஒரு பார்வை பரிமாற்ற போர்முறை, இதே நீ சீக்கிரமே கத்துக்குவே!"

"தல ஒன்னு பண்ணுவோமோ! நீங்க மேடையிலெ ஒட்கார்ந்து பாடுறமாதிரி ஆக்ட் கொடுங்க, நான் பின்னாடி இருந்து டேப்ரிக்கடருலே பாட்டு போட்டு விடுறேன்."ன்னு பாண்டி சொல்ல

"ஏலேய்! தெரியுமில்லெய் ஒன்னோட வேலை என்க்கிட்டே ஆவாதிடி, யாரவது அங்கிட்டு ஒரு பொண்ணு போச்சின்னா அது பின்னாடியே நீப்பாட்டுக்கு போயிட்டேனா நான் இங்கிட்டு ஒரெ பாட்டே திரும்ப திரும்ப பாடறமாதிரி அவிங்ககிட்டே மாட்டிக்கிட்டு ஒதை'தான் வாங்கணும்."

"தல ஒன்னு பண்ணலாம்! ஏதாவது ஒரு பாட்டு வாத்தியாருக்கிட்டே போயி செவனெனு பாட்டு கத்துக்கிட்டு வந்திரு, அப்பிடியே ஃபிரஷ்'ஆ நாலு பாட்டு பாடி அப்ளாஸ் வாங்கிரலாம்"

"யாருப்பா இது விவ்'ஆ., ம்ஹீம் நான் கும்பக்கோணத்துக்கு வழிக் கேட்டா கொட்டைப் பாக்கு ரூபாய்க்கு அஞ்சுன்னு ஏத்தமா பதிலே சொல்லுறே! ஏலேய் அப்ரெண்டிஸ்களா நீங்களாவது ஒரு ஐடியா சொல்லுங்க சாமீகளா"

"தல எம்.ஜீ.ஆரோட நாலு பாட்டு, சிவாஜியோட நாலு பாட்டு அதெய்யலாம் மேடையிலே பாடிரு, அதெல்லாம் இப்போ இருக்கிற ஆளுகளுக்கு சரியா தெரியாது, அதெல்லாம் ஒன்னோட பாட்டுன்னு நினைச்சிருவாங்க! என்னா சொல்லுறே" இது கட்டர்

"இது நல்ல ஐடியாதான், ஆனா சிலப்பேருக்கு அந்த பாட்டெல்லாம் தெரியும், ராயல் நீ என்ன சொல்லுறே??"

"தல, பழைய பாட்டுன்னா யாருக்குமே தெரியமே இருக்கிறது மகாலிங்கம்,தியாகராஜர் பாகவதர் பாட்டெல்லாம்தான். நீ அதேவே பாடிறலாம்!"

"ரைட்டேய், இதெல்லாம் மைண்ட்'லே வச்சிருக்கேன்.சரி நான் கச்சேரிக்கு போட்டுக்கிறதுக்கு டிரெஸ் வாங்கிட்டு வந்திய்யா ராயலு?"

"ம் இருக்கு தல! இந்த மஞ்சபையிலே சுருட்டி வைச்சிருக்கேன், இந்தா பாருங்க!"

"அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா?"

"தல நீதானே சொன்னே? எதுவுமே ஒரு அட்ராக்டா செய்யினுமின்னு? அதுதான் போடுற டிரெஸிலே அட்ராக்டிவான கலரா தேடி கண்டுப்பிடிச்சேன்.!"

"சரி அதெல்லாம் ஓகே! யாராவது ஐடியா சொல்லுங்கய்யா?? எப்பிடி மேடையிலே பாடுறதுன்னு??"

"தல மேடையிலே ஏறி ஒனக்குன்னு இருக்கிற இடத்திலே உட்கார்ந்து, மைக்கே எடுத்து வாயை திறந்து பாடணும்!!"

"டேய் ராஸ்கல், ஒனக்கு வரவர ரொம்ப ஏத்தமா போச்சுலே பாண்டி! நான் என்ன கேட்டா நீ என்ன பதிலே சொல்லுறே? சுருதி சுத்தமா எப்பிடிய்யா பாடுறது? யாராவது சொல்லித் தொலைங்கய்யா சாமிகளா... சும்மா இருக்கிறவனே சொறிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சுலே???"

"தல நான் ஒரு ஐடியா சொல்லுறேன்"ன்னு சிபி முன்னுக்கு வருக்கிறார்.

"ம் சொல்லு என்னருமை தளபதியே?"

"தல ஒரு வரியே நாலு அஞ்சு தடவை சும்மா திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இரு, அது போதும், அப்பிடியே கேட்கிறவங்களுக்கு ஒரு கச்சேரி கேட்கிற எபக்ட் வந்திரும். இதேமாதிரி செஞ்சேன்னு வை, ஒரு பாட்டே பாடி முடிக்க 15லிருந்து 20 நிமிசம் ஆகிறும், அப்பிடியே நாலுப்பாட்டுக்கு ரெண்டு மணிநேரமா இழுந்திரலாம். என்னா சொல்லுறே??"

"அதெல்லாம் சரிதான்! இப்போ என்ன பாட்டே பாடுறது? எனக்கு நல்ல குரல்வளம் இருக்கான்னு தெரியலே?"

"தல நீ பார்க்கதான் பென்சில்லே கோடு வரைஞ்சமாதிரி சரிரம்! ஆனா நீ பாடினா அது கட்டை சாரீரம்!"

"என்னாமோ தள! ஒன்னோட பேச்சே மலை மாதிரி நம்புறேன். இந்த ராகம்,தாளம்,பல்லவியோட பாடணுமே? அதுக்கு என்னா பண்ணுறது?"

"இப்பிடி பண்ணலாம்! கோவைக்கு ஒன்னோட ஹெலிக்காப்டருலே வந்துரு! நீயும் நானும் ராகம்,தாளம்,பல்லவிக்கு போயி ஒவ்வோரு ஷோ'வா பார்த்துட்டு படத்திலே இருக்குற நல்ல பாட்டெல்லாம் கச்சேரிலே வந்து சேர்த்து வச்சு பாடிரு! ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் ஒரு போர்டு'லே இது ராகமிலே பார்த்தது, தாளத்திலே பார்த்தின்னு சொல்லிறலாம்!!!"

"ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சு போச்சு! உங்களளே எனக்கு ஒன்னத்துக்கும் சல்லிக்காசு'க்கு பிரயோசனமில்லன்னு நல்லவே தெரிஞ்சு போய்யா சாமிகளா??? போங்க போய் எனக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு அமெரிக்காகாரன் அடுத்த நாட்டு மேலே குண்டு போடுறதுக்கு யோசிக்கிறமாதிரி பெரிய விஞ்ஞானிகளாட்டம் திங் பண்ணுங்க..."

தல இம்மாதிரி மனசொடிந்து பேசும் பேச்சைக் கேட்டு சங்கத்து சிங்கம்கள் அனைவரும் கவலையுறுகின்றனர்.

"தல நாமே ஒன்னு பண்ணலாம்! நமக்குதானே தெரியலே? வேறே யாராவது அதேபத்தி தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுப்பார்போமா?"

"ஆங்..பரவாயில்லேயே விவ், இம்பூட்டு நேரமா அமைதியா இருந்தாலும் நல்ல வாசகமா அதுவும் திருவாசகமாதான் சொல்லிருக்கே! இப்போதாய்யா எனக்கு நல்ல ஐடியா'வே வருது! நம்ம சங்கத்து தீரா தலைவி(வலி)யே காண்டக்ட் பண்ணுங்க.. இல்லேன்னோ அந்த விக்கிபசங்களே உசுப்பி விடுங்கய்யா?? அவங்க வந்து என்ன கர்ஜிக்கிறாங்கன்னு பார்ப்போம்... எனக்கு எப்பிடியாவது கச்சேரி பண்ணியே ஆவணும். ஐ வாண்ட் டூ இட் நவ்...

"தல இன்னோன்னு பண்ணலாம்? எனக்கு தெரிஞ்சு பெரிய பெரிய தலைங்கயெல்லாம் பாட்டு பாடி குழந்தைகளை கவர் பண்ணுவாங்க.. நீயும் குழந்தை குழந்தையா இருந்தாதான் பிடிக்குமின்னு சொல்லிறுக்கே?? அதுனாலே மொதல்லே குழந்தைகளை கவர் பண்ணு! அதுக்கப்புறம் கைப்பு அங்கிள்! கைப்பு அங்கிள்! உன் பின்னாடியே எல்லாரும் வந்திருவாங்க.."

"வேணாம் கட்டரு! நானெல்லாம் ஏற்கெனவே பெரிய தலையா ஆகிட்டேன். எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி'தான்... பார்ப்போம் அந்த விக்கிபசங்க எம்பூட்டு நாளைக்குள்ளே சொல்லிதாரங்கன்னு?? அவங்கதான் என்னா சந்தேகம் கேட்டாலும் தீர்ந்து வைக்கப்பாலேமே?? எனக்கு இப்போ மீஜீக்'லே பேசிக் நாலெச் வேணும்??"

தலயோட இந்த அறிவிப்பை கேட்டு சங்கத்து சிங்கக்கள் எல்லாரும் அமைதியாகிறார்கள். விக்கிப்பசங்கதான் பாவம் நம்ம தல கேட்கிறகேள்விக்கெல்லாம் எப்பிடிதான் சமாளிக்க போறாங்களா..!! அய்யோ.. அய்யோ!!!!

Monday, November 27, 2006

கன்னிப்பதிவு (புது வ.வா)

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க... பயந்துதான் போனையே எடுத்தேன்.

"ஹலோ யாருங்க பேசுறது?"

"நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!"

"ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?"

"தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!"

"என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?"

"அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??"

"எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??"

"ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!"

"இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!"

"சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்... அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!"

"ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல'க்கு?"

"அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!"

"என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?"

"கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!"

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

"ஹலோ யாரு பேசுறது"

"சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!"

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்'ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்



நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு "ஹாய் ராயலு"ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை




"வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?"

"எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??"

"ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!"

"நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா'க்கான தகுதி இருக்கு???"

"ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!"

"சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!"

"1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!"

"ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்'ன்னு வேறே ஏதாவது இருக்கா???"

"ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??"

"சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்"

ஆப்பு ஆயிண்மெண்ட்



"உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்'தான் தடவணும்"

"வொய்"

"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"

"ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???"

"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

"நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா"

"ம் சொல்லு!"

"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"