Showing posts with label நாமக்கல் சிபி. Show all posts
Showing posts with label நாமக்கல் சிபி. Show all posts

Thursday, April 2, 2009

தல, தேவ் மற்றும் இளாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்புள்ள தல கைப்புள்ள, போர்வாள் தேவ் மற்றும் விவசாயிஇளா ஆகியோருக்கு சங்கத்து சிங்கங்கள் சார்பா நாமக்கல் சிபியின் மனம் திறந்த மடல்.

வ: மோகன்ராஜ் (எ) கைப்புள்ள,

தல! வருத்தப் படாத வாலிபர் சங்கம் னாலே கைப்புள்ளைதான்! கைப்புள்ள என்றதும் மத்தவங்க மனசுல ஞாபகம் வரது அந்த வருத்தப் படாத வாலிபர் சங்கமும் தல வாங்கும் ஆப்புகளும்தான்! அப்படிப்பட்ட தலக்கு இன்னைக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறோம்னு நினைச்சி மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா தல!

அட! ஆணி பிடுங்குற அவஸ்தைல நீ வேணா மறந்திருக்கலாம் தல! சங்கத்த வெச்சி பிழைப்பு ஓட்டுற நாங்க மறங்க முடியுமா? ஆமா தல! சங்கம் ஆரம்பிச்சி ஒத்தோட மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு தல்!

மூணு வருஷமும் மத்தவங்களுக்கு வந்த ஆப்பைக்கூட தானா வந்து தாங்கிகிட்டு "ரொம்ப நல்லவன்"னு பேரெடுத்தியே தல! உனக்கு இந்த நேரத்துல நன்றி சொல்ல நாங்களெல்லாம் கடமைப்பட்டிருக்கோம் தல!

தல! நீ என்னென்னிக்கும் இதே மாதிரி மத்தவங்களுக்காகவாச்சும் எங்களை எப்பவும் சிரிக்க வைச்சி அழகு பார்க்கவாச்சும் நீ 1000 வருஷம் அதே கெத்தோட வாழணும் தல!

வ: போர்வாள் தேவ்
தேவ்,
சங்கம் ஆரம்பிச்ச நாளில் இருந்து சங்கத்தைப் பத்தி யாராச்சும் நாக்கு மேல பல்லு போட்டு பேசினா டெரரா ஒரு அறிக்கை விட்டு அறிக்கை விட்ட ஆசாமிகளை டரியலாக்கி நம்ம தலகிட்ட சரண்டர் ஆக வைக்கிற திறமையும், நம்பிக்கையும், கம்பீரமும் உள்ள ஒரு நீதான் தேவ்!

தல! தன் கொள்கைய விட்டுக்கொட்டுக்காம பார்டரைத் தாண்டி உள்ளே போயி கட்டத்துரையோட கை கால வாங்காம இருக்கணும்னு கட்டதுரையைக் காப்பாத்த பார்டர் தாண்டி நீ போன காட்சி இன்னும் எங்க கண்ணுக்குள்ள இருக்குது தேவ்!

இன்னிய தேதிக்கு சங்கத்தோட மூணாவது வருஷத்தை கிராஸ் பண்ணப் போறோம்! பார்டர் கிராஸ் பண்ணி தலயைக் காப்பாத்தின உன்னை இன்னிக்கு ஞாபகப் படுத்தலைன்னா எப்படி தேவ்?

தேவ்! நீயும் இன்று போல என்னிக்கும் நல்லா இருக்கணும் தேவ்!

ச: விவசாயி (எ) இளா

வயல்ல சாகுபடி பாத்திருக்கோம்! வயலும் வாழும்ல கேள்விப்பட்டிருக்கோம்! ஒரு வாழும் கடலை சாகுபடியை சங்கத்துக்கு அறிமுகப் படுத்தினதே நீதானே விவ்ஸ் இளா! நீ இல்லாட்டி சங்கம் புரடக்ஷன்ல விவாஜு தி பாஸ்னு ஒரு படம் எடுத்திருக்க முடியுமா? டெக்னிக்கல் விஷயங்கள் எவ்வளவு எங்களுக்கு கத்து கொடுத்திருக்கே!

அப்படித்தான் பாஸ் ஆப்படிப்பாங்க! அதையெல்லாம் பார்த்தா ஆணி பிடுங்க முடியுமா ன்னு தலக்கு தைரியம் கொடுக்குறது யாரு!
இந்த மூன்றாமாண்டு நிறைவு நாள் வரும்போது உன்னையெல்லாம் பெருமைப்படுத்தி சொல்லாட்ட்டி எங்க கட்ட வேகுமா இளா?

இன்று போல என்றும் வாழணும் இளா!

மற்றும் நம்ம சங்கத்து சிங்கங்கள், புலிகள் அனைவரையும் மனமார நினைவுகூர்ந்து என் மனம் திறம்த மடலை இத்தோட முடிச்சிக்கிறேன்

Wednesday, March 18, 2009

இரவல் சரக்கடிப்பதால் ஏற்படும் 11 சங்கடங்கள்



1. முதல்ல சரக்கடிக்கப் போகிறோம் என்ற ஆவலில், ஆர்வத்தில் நாம சீக்கிரமாவே வேலைகளை( வேலைகள் இருக்கா என்ன?) முடித்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு போயிடுவோம்! இரவலா சரக்கு வாங்கித் தரேன் என்று சொன்ன நண்பர் நிதானமா வேலையை முடிச்சி கெளம்பும்போதுதான் அறவே வராத தொலைபேசி அழைபுகளெல்லாம் வந்துத் தொலையும்! எவ்ளோ நேரம்தான் பொறுமையா காத்து கிடக்குறது!

2. அப்படியே வாங்கித்தர நண்பர் வந்துட்டாருன்னு வெச்சிக்குவோம்! நாம இன்னிக்கு வி.எஸ்.ஓ.பி அடிக்கலாம்னு ஆர்வமா வந்திருப்போம்! ஆனா அவரோ எம்.சி அசிக்கலாம்னு சொல்லுவாரு! மறுத்துப் பேச முடியுமா நம்மால!

3. நாம எப்பாவாவது ஒரு தபா சரக்கு அடிக்கிறோம்! அடிக்கிறப்போ பெப்ஸி, செவனப், சோடான்னு ஏக தடபுடலா(அறுக்க மாட்டாதவன் இடுப்புல ஆயிரத்தெட்டு கறுக்கருவா கணக்கா) இருந்தாத்தான் சரக்கடிக்குற மூடே வரும்!
நம்ம நண்பர் அப்படியா? சும்மா ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி வெச்சி ஒரு ஆஃப்பை காலி பண்ணுற ஆளா இருப்பார்! நம்ம சுந்தந்திரம் என்ன ஆச்சு! அடிக்கிறதே இரவல் சரக்காச்சே!

4. அதே மாதிரிதாங்க சைட் டிஷ்ஷும்! சிக்கன் 65, சிப்ஸ், மிக்ஸர்னு எல்லாம் வெச்சிகிட்டு எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கூட ரெண்டாவது பெக்குல முக்காவாசிக்கு மேல குடிக்க முடியாத ஆஃப் பாயிலடிக்கிற ரேஞ்சுக்கு இருக்குற நாம எங்கே? ஒத்த ரூவா ஊறுகாப் பாக்கெட்டு ரெண்டு வாங்கித் தந்து ஃபுல் பாட்டிலும் காலி பண்ணச் சொல்லுற நம்ம நண்பர் எங்கே? என்னங்க பண்ணமுடியும் இரவல்தான் என்றாலும் இப்போதைக்கு ஸ்பான்ஸர் அவராச்சே!

5. நாம நிதானமா அழகா அவுன்ஸ் அவுன்ஸா ரசிச்சி ஒவ்வொரு சிப்பா அடிச்சிகிட்டே இந்தக் கையில ஒரு தம்மு வெச்சிகிட்டே அப்பப்போ கவிதைத் தொகுப்பு அட்டைப் படத்துக்கு போஸ் கொடுக்குற ரேஞ்சுல சிந்திச்சிகிட்டே அனுபவிச்சி குடிக்கணும்னு ஆசைப் பட்டிருப்போம்! முக்கா கிளாஸ்ல சரக்கை ஊத்தி வாட்டர் பாக்கிட்டை உடைச்சி தண்ணி கலக்குறத்துக்குள்ளே நம்ம நண்பர் அவரோட கிளாஸை ஸ்வாஹா பண்ணி முடிச்சிட்டு சீக்கிரம் அடிறா! அடுத்த பெக்கு ஆரம்பிப்போம் னு ஒரு கேவலமான லுக்கு விடுவாரு பாருங்க!......ம்ஹூம்!

6. அடிச்ச பிறகு ஆய் ஊய்னு அலப்பறை பண்ணி லந்து விடாட்டி அடிச்ச சரக்குக்கு மதிப்பு இருக்குமா? இவரு வாங்கித் தராரே ன்னு(இரவலாவே இருந்தாலும்) ஒரு லாயல்டிக்காகவது நாம அடக்கி வாசிக்க வேண்டிய அவலமான நிலைல நம்மை அறியாமலே தள்ளப்பட்டிருப்போம்!

7. என்னதான் ஆஃபாயில் போட்டே ஆகணும்ங்குற மூடு வந்தாக் கூட ஃப்ரீயா ஆஃப் பாயில் போட முடியுதா? வாங்கித் தந்தவன் என்ன நினைப்பானோ, கேவலமா பார்ப்பானோன்னெல்லாம் நினைழ்ச்சி கஷ்டப்பட்ழு அடக்க வேண்டியிருக்கும் பாருங்க...! ச்சே! இனிமே சென்மத்துக்கும் இந்த்ழ சனியழை தொடக்கூடாதுன்னு தோழும்.

8. ம்ஹூம்! அதென்னங்கழா இரவல் ச்ரக்குன்னா மட்டும் இழப்பமா என்ன? என்ன நண்பா சொல்றே நீ! இருந்தாழும் இரவல் சரக்குன்னா சங்கடங்கள்னெல்லாம் பேசுறாங்க நண்பா! அதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு! இரு நண்பா இந்த பெக்கோட முழிச்சிக்கிழேன்!

9. அவ்வ்வ்வ்வ்வ்வ்..நண்பா யாரைப் பத்தி வேணும்ழாலும் சொல்லுவேண், உன்னைப் பத்தி ..ஹிக்.. உன்னை பத்தி ஒரு வார்த்தை பேசி இருக்கனா? எதா இருந்தாலும் முகழ்த்துக்கு முன்னாலே சொல்லிடுவேன் நண்பா! அடுத்தவன்கிட்டே போயி பேசுறதோ, அப்பாலிக்கா உன்னை பத்தி பதிவெழுதறதோவெல்லாம் செய்ய மாட்டேன் நண்பா!"


10. விடு! விடு! உன்னைப் பத்ழி எவன் என்னெ பேசிடுறான்னு பார்க்குறேன்! எவனாழ்ச்சும் மூக்கு மேல நாக்கு... இல்ல இல்ல... நாக்கு மேல மூக்கு..ச்ச்சே அதுவும் இல்ல் நண்ப்ழா.. ஆங்க்! நாக்ழு மேழே பல்லு போழ்த்து பேச விட்டுடவனா நானு! அவன் மூஞ்சிழிய உடைச்சிட மாட்டேன்!

11. "நண்பா! நான் யாழுடா! எனக்கெழ்ழால்ம் சரக்கு வாங்கித் தரயே! நான் எதாழ்ச்சும் திருப்ழிச் சேய்வேன்னு எதிர்பார்க்காம வாங்கித் தரயே! இந்த நாழ் இருக்குல்லா நாழ்! அதைவிட உனக்கு நானு விழுவாசமா இருப்பேன் நண்பா!
நீ என்னை என்ன வேணும்னாலிம் சொழ்ழு நண்பா! உனக்கு எல்ழா உரிமையும் இருக்கு நண்பா! ஆனா எனக்குத் தெரியும்.. நான் இப்பழி மப்புல ஓவரா பேசுறேன்.. அத்தனை பேழ்த்துக்கும் முன்னாதி உனக்கொ தர்ம சங்கழமா இருக்கும்னு..நல்லா ஏழிடுத்து..தலையில ரொம்ப பாரமா...அப்படியே உலகமே சுத்துது நண்பா! உனழ்க்கும் அப்பழித்தான.....! அட சட்! பாத் ழூம் எங்கே இங்கழான இழுந்தது....உவ்வ்வ்வாவ்......."

Monday, January 5, 2009

சுயம் - சங்கத்தான்ஸ் விசிட்

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப் பட்ட பிரம்மரசம் மற்றும் ரெண்டு போட்டியின் வெற்றியாளர்கள்
சார்பாக அவர்களுடைய பரிசுத்தொகையை இவ்வருடம் சுயம் அமைப்பிற்கு நன்கொடை அளிப்பதாக தீர்மானித்தபடி கடந்த ஞாயிறு (ஜனவரி 4, 2008) அன்று சுயம் அமைப்புன் டிரஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் செய்தோம்.

முதலில் வின்னர்ஸ் லிஸ்ட்

பிரம்ம ரசம்

முதல் பரிசு : வெங்கி
இரண்டாம் பரிசு : அம்பி

ரெண்டு போட்டி

முதல் பரிசு : அருட்பெருங்கோ
இரண்டாம் பரிசு : லக்கி லுக்
பெனாத்தல் சுரேஷ்

ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் தல கைப்பு, தேவ், நாகை சிவா மற்றும் நாமக்கல் சிபி ஆகிய நால்வரும் சென்ட்ரல்-வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் சுயம் அமைப்பின் டிரஸ்ட் அலுவலத்தை அடைந்தோம்!

முதல் நாளே லிவிங்க் ஸ்மைல் வித்யா அவர்களிடம் எங்கள் விசிட் பற்றி கூறி முகவரி தொலை பேசி எண்கள் ஆகியவை வாங்கி வைத்திருந்தோம். லிவிங் ஸ்மைல் வித்யா தனக்கு ஞாயிறன்றும் அலுவலகம் இருக்கிறதென்று அவர் அங்கு இல்லை!

நிர்வாக அலுவலர் திரு முத்துராம் அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்கைகள் கொடுத்து அமரச் செய்தார்.

முதலில் எங்களைப் பற்றி சிறிய அறிமுகம் கொடுத்தோம்! பதிவுலக நன்பர்கள் என்று ஏற்கனவே வித்யாவும் கூறி வைத்திருப்பதாகக் கூறினார் .

அதன் பின்னர் தங்கள் அமைப்பின் நோக்கம், எப்பொழுது, எப்படி ஆரம்பித்தார்கள், எந்த அளவு சவால்களை/சிரமங்களை எதிர்நோக்கினார்கள் என்று தங்கள் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி பற்றியும் இப்போதைய சவால்கள் தேவைகள் பற்றியும் விவரித்துக் கூறினார்.

அந்த அமைப்பின் ஆரம்பம், வளர்ச்சி பற்றி பின்னர் பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்!

இதன் பின்னர் அவ்வமைப்பில் உள்ள ஊழியர்களின் கைவண்ணத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், குழந்தைகள் வரைந்த ஓவியங்களுடன் கூடிய லெட்டர் பேக்ஸ், கைப்பைகள், ஃபைல் போல்டர்கள் ஆகியவற்றையும் காண்பித்தனர்.

இப்படியே நேரம் ஆகிக்கொண்டிருந்த படியாலும் அங்கே மேலும் சில விசிட்டர்கள் வர இருப்பதை அறிந்ததாலும் புறப்பட ஆயத்தமானோம்!

தல கைப்பு அவர்கள் மொத்த பரிசுத் தொகையான ரூ10,000 க்கான காசோலையை நிர்வாக டிரஸ்டி திரு முத்துராம் அவர்களிடம் சேர்ப்பித்தார்.

அப்போது நாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓரளவே பார்வை உடைய 7 வயதுச் சிறுவன் ஒருவன் எங்களிடையே வந்து தானாகவே அறிமுகப் படுத்திக் கொண்டான். கணிதத்தில் அவன் ஜீனியஸ் என்று நிர்வாக டிரஸ்டி எங்களிடம் அறிமுகப் படுத்தியபோது அவனது முகத்தில் தெரிந்த பிரகாசமும், மகிழ்ச்சியும் எங்களை என்னவோ செய்தது!

வருங்கால கணித நிபுணர் என்று நினைத்து கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்!

மேலும் இவ்வமைப்பைப் பற்றிய விவரங்களுக்கு:

சுயம்

Suyam Charitable Trust- Projects

சிறகு

உங்களால முடிஞ்ச உதவிகளை பொருட்களாகவோ, நிதியாகவோ நீங்களும் இந்த அமைப்புக்கு கொடுக்கலாம்!

Tuesday, March 18, 2008

போர்டு மீட்டிங் - பிரம்ம ரசம்

"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"





என்று உற்சாகமாகப் பாடியவாறே சங்கத்து பில்டிங்கினுள் நுழைகிறார் கைப்பு!





அங்கே இளா, தேவ், ஜொள்ளுப் பாண்டி, புலி, தம்பி கதிர், 'ராயல்' ராம் ஆகியோர் கவலையோடு முகத்தைத் தொங்கப் போட்ட படி அமர்ந்திருக்க வீடியோ கான்பரன்ஸில் கப்பி, வெட்டி மற்றும் நாமக்கல் சிபி ஆகியோரும் கவலை தோய்ந்த முகங்களுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.





"என்னாது சங்கத்துல சலசலப்பேயே காணோம்!"


என்றவாறே எல்லோரையும் ஒரு கணம் உற்று நோக்குகிறார் தல!





தல : "அட என் அப்பிரண்டிசுகளா! ஏன்யா எல்லாரும் கவலையா இருக்கீங்க?"





தம்பி : "தல எங்களை ஒண்ணும் கேக்காதீங்க! நாங்க வருத்தமா இருக்கோம்"





தல : "வருத்தமா இருக்கீங்களா? என்னாத்துக்கு? அட சிங்கங்களா! இது வருத்தப் படாத வாலிபர் சங்கம்யா! இங்கன இருந்துகிட்டு அதுவும் நானும் இருக்கும்போது வருத்தப் படலாமா? என்னன்னு சொல்லுங்கய்யா"





கப்பி : "வேணாம் தலை! விட்டுடுங்க! நாங்க பாத்துக்குறோம்"





தல : "என்னாது இது! சின்னப் புள்ளத் தனமா! ராஸ்கல்ஸ்! இவ்ளோ நேரமா கேக்கிறேன்! ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறீங்க! இப்ப மட்டும் சொல்லலே! அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது சொல்லிட்டேன்! ஆமா"





என்று ஒரு அதட்டல் போட சிங்கங்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப் போய்விடுகின்றனர்!





நாமக்கல் சிபி ஒரு நிமிடம் ஆஃப் லைனில் சென்று விட்டு வருகிறார்!





இளா : "சரி தல! நீங்க இவ்ளோ தூரம் கேக்குறீங்க! அதனால சொல்றோம்"





தல : "ம் சொல்லு!"





இளா :"அதாவது தல! சங்கத்தோட ரெண்டாவது ஆண்டு விழா வருதில்லையா?"





தல : "ஆமா அதுக்கென்ன இப்போ?"





புலி : "அதுக்கொண்ணும் இல்லை தல! ரெண்டாவது ஆண்டு விழா வருதுல்ல"





தல : "அட ஆமாய்யா! சொல்றதையே திருப்பி திருப்பி சொல்றானே! ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!"





கப்பி : "ஆமா தல! சங்கத்துல பத்து பைசா இல்லாத இந்த நிலைமைல ஆண்டு விழா போட்டிக்கு பத்தாயிரம் ரூவான்னு பரிசு அறிவிச்சிருக்கீங்களே"





தல : "அடப் பாவிகளா! நீங்களெல்லாம் சேர்ந்துதாண்டா போடச் சொன்னீங்க"





கப்பி : "இவ்ளோ நாளா நீங்க சங்கத்துப் பக்கம் வராம இருந்தபோது எல்லாத்தையும் நாங்களே பார்த்துகிட்டோம்! இப்போ ரெண்டாவது வருஷ போட்டிக்கு அறிவிப்பு நீங்கதான் போடணும்னு நாங்க ஏன் ஒத்தக் கால்ல நின்னோம்னு யோசிச்சீங்களா தல?"





தல : "ஆமா! ஒட்டு மொத்தமா சொன்னீங்களேடா! நீங்க போட்டாத்தான் ஒரு மதிப்பா மரியாதையா இருக்கும்னு! அதனாலதாண்டா அறிவிச்சேன்! அப்போ அதுக்கில்லையா! அப்ப என்னாத்துக்கு? "





தேவ் : "அதாவது தல! எல்லா இடத்துலயும் நாம சேர்ந்து போயி சவுண்டு விடுவோம். ஆனா கடைசியில அடி வாங்கி அவல் ஆகி, உடம்பை ரணகளமாக்கிக்குறது மட்டும் நீங்க! நீங்க அடிவாங்கும் போது மட்டும் நாங்க எல்லாரும் அடுத்த ஷாட்ல மாயமா மறைஞ்சிடுறோம் இல்லையா!"





தல : "ஆமா! அதான் ஒவ்வொரு இடத்துலவும் ஆப்பை வாங்கி கொடுத்துட்டு அடுத்த நிமிஷம் எஸ் ஆகிடுறீங்களே! அதுக்கென்ன இப்போ"





வெட்டி : "ஆனா பாருங்க தல! சமீப காலமா இதை பிராக்டீஸ் பண்ண எங்களுக்கு வாய்ப்பே அமையலை! அதனால ஒரு மேட்ச் பிராக்டீஸ் மாதிரி உங்களை போஸ்ட் போடச் சொன்னோம்!"



தல : "மாட்ச் பிராக்டீஸா! அதுக்கும் நான் போஸ்ட் போட்டதுக்கும் என்னப்பா சம்மந்தம்?"





சிபி : "அதாவது பரிசு பத்தாயிரம்னு அறிவிச்சது நீங்க! சரியா! போட்டில கலந்துகிட்டு ஜெயிக்குறவங்க பரிசு எங்கேன்னு உங்களைத்தான் கேப்பாங்க! அந்த டைம்லே நாங்க எல்லாரும் எஸ் ஆக பிராக்டீஸ் பண்ணிக்குவோம்!"





தல : "அடப் பாவிகளா! வெச்சிடீங்களேடா ஆப்பு!"





சிபி : "ஒரு போர்வீரனா இருந்தாலுமே கூட பயிற்சி இல்லைன்னா போர்க்களத்துல போயி தோத்துடுவான் தல"





ஜொள்ளுப் பாண்டி : "ஆமா பிராக்டீஸ் ஈஸ் அ மஸ்ட்"





தல : "சரி! அதுக்கும் இப்ப நீங்க சோகமா இருக்குறதுக்கும் என்னய்யா தொடர்பு?"



ஜொள்ளுப் பாண்டி : "நிறைய பேரு போட்டில கலந்துக்குவாங்கன்னு எதிர்பார்த்தோம்! ஆனா இதுவரைக்கும் ரெண்டே பேருதான் கலந்துகிட்டிருக்காங்க"



தல: "அதனால...........!"


ஜொள்ளுப் பாண்டி: "வெறும் ரெண்டே ரெண்டு பேர் கும்முறதெல்லாம் ஒரு கும்மா தல! நினைச்சிப் பார்க்க எங்களுக்கே அசிங்கமா இருக்கு! உங்களுக்கு எப்படி இருக்கும்! அதை நினைச்சித்தான் தல எங்களுக்கு கவலையா இருக்கு!


அங்க பாருங்க! அந்த கவலையை மறக்கத்தான் சிபி திரும்பவும் பீர் அடிக்க உக்காந்துட்டாரு"



தேவ் : "ஆமா தலை! சும்மா கும்முறதுலே எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை! எல்லாரும் சேர்ந்து சும்மா பின்னிப் பெடலெடுக்கணும் அப்பத்தான் நீங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு! நாங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு"

சிபி : " நீங்கதான் எங்க கவலையைத் தீர்த்து வைக்கிறேன்னு சொன்னீங்களே தல! தீர்த்து வையுங்க! எவ்ளோ செலவு ஆனாலும் நாங்க பார்த்துக்கிறோம்"


தல : "அடப் பாவிகளா! என்னை பஞ்சராக்க ஆள் பத்தலைன்னு என்கிட்டயே கவலைப் பட்டு பிட் போடுறீங்களா? உங்களை........."


என்று தல கோபமாக எழுந்திருக்க



சிங்கங்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் எஸ்கேப் ஆகிறார்கள்!

Sunday, March 2, 2008

வயசை மறைப்பது எப்படி?

சங்க்கத்துப் பக்கம் எட்டிப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு! ஆஹா ஆப்பீசுல நம்மளையும் அநியாய ஆபீசரா உயர்த்தி வெச்சிட்டாங்களேன்னு பார்த்தா, கூடவே தினமும் பலகை முழுவதும் எக்கச்சக்கமா ஆணியை அடிச்சி கைல கொடுத்துடுறாங்க! என்ன பண்ணுறது! எத்தினி நாளைக்குத்தான் வேலை பாக்குற மாதிரியே நடிச்சிகிட்டிருக்க முடியும்!

விதியேன்னு ஆணி பிடுங்கிகிட்டிருந்தா வருஷக்கணக்கா சங்கத்துப் பக்கம் தலை காட்டலேன்னு அப்புறமாத்தான் தெரியுது! அதனாலதான் பதிவுலகத்துல கூட என்னய்யா அநியாய ஆப்பீசராகிட்டயான்னு கேக்குறாங்க!

இந்த ஒரு வருஷ காலத்துலே சங்கத்து சிங்கமெல்லாம் எப்படியெப்படியோ கர்ஜனை பண்ணி இருக்காங்க! எத்தனையோ அட்லாஸ் வாலிபர்லாம் வந்து போயிருக்காங்க! எல்லாரும் முதல்ல ஒரு நன்றியைச் சொல்லிக்கிடுறேன் மக்கா!

இப்பக் கூட ஒரு வாலிபர் (அம்பியை ஏன் வாலிபர்னு சொல்றாங்க? அவரு பார்க்க குட்டிக் குழந்தையா ல்ல இருக்காரு) அளப்பரை வுட்டுகிட்டு இருக்காரு! அவருக்கும் என்னோட நன்றி!

உள்நாட்டுப் பலகை கொடுத்ததோடு மட்டுமில்லாம ஆன் சைட் ஆணியும் புடுங்குப்பான்னு மலேஷியாவுக்கு அனுப்பிட்டாங்களேன்னு சந்தோஷமா வந்தேன்! இங்க வந்து பார்த்தா எங்க ஆப்பீஸ் அணியை விட பத்து மடங்கு பலகைல அடிச்சி வெச்சிகிட்டு ரெடியா உக்காந்துகிட்டிருக்கான் எங்க கஸ்டமர்!

மலேஷியா வந்திறங்கி செரம்பான்க்கு கார்லே போயிட்டு, அன்னிக்கே திரும கோலலம்பூர் வந்து போய், வாரம் ரெண்டு நாள் கோலாலம்பூர்லயும், மத்த நாளில் செரம்பான்ல ஒரு ஆஸ்பத்திரிலயும நம்ம ஆணி பிடுங்கற வேலை பயங்கரமா போயிகிட்டிருக்கு!

சங்கத்துப் பக்கம் தலை காட்டாத விஷயம் எப்படியோ மலேஷியா வரைக்கும் தெரிஞ்சி போயிடுச்சு போல!

கோலாலம்பூர்ல ஒரு பொண்ணு(பொம்பளை) ரயில்வே ஸ்டேஷன்லெ

"அங்கிள்! இந்த டிரெயின் செரம்பான் போகுமா"ன்னு கேட்டுது பாருங்க! அப்பத்தான் தூக்கி வாரிப் போட்டது.

அப்புறம் நான் தங்கி இருக்கும் ஹோட்டல்க்கு கீழே "பாவோ" விக்குற கடை போட்டிருக்குற ஒரு சீனப் பொண்ணு(அட! இதுவும் பொம்பளைதாங்க)
பார்க்குறப்போ எல்லாம்

"பாவோ! டிரை பண்ணுங்க அங்கிள்"னு சொல்லுது!

அட! பாக்குறவங்கெல்லாம் இப்படிச் சொல்றாங்களே என் காதை நானே தடவிப் பார்த்துகிட்டேன்! இத்தனைக்கும் "பாவோ" பொண்ணு கேக்குறப்போ சங்கத்து டீஷர்ட்தான் போட்டுகிட்டிருக்கேன்! இருந்ததலும் வருத்தப் படாத "வாலிபர்"னு ஒத்துக்க மாட்டேங்குறாங்க!

அதான் திரும்பவும் சங்கத்துல ஒரு ரவுண்டு எட்டிப் பார்த்துட்டுப் போவோம்! அதுக்குப் பிறகாவது ஒத்துக்குறாங்களான்னு பார்ப்போம்!


தம்பி ஜொள்ளுப் பாண்டிக்கு:
நம்ம ஜொள்ளுப் பேட்டைலயும் கடும் வறட்சியா இருக்காம்! எதிர்பார்த்து வர ரசிகைகள் எல்லாம் காலி குடத்தை எடுத்துட்டு வேற இடம் பார்க்க கெளம்பீட்டாங்களாம்! தம்பி பாண்டி "ஜொள்ளுப் பாண்டி" இப்போ "வெறும்" பாண்டி யா ஆகிட்டாருன்னு பேச்சு வரதுக்குள்ளேஎ சூதனமா உஷாராயிடு!

Friday, June 22, 2007

ரகசிய ஏஜெண்ட் 007 (மீள் பதிவு)


அந்த மதில்சுவரைக் கடந்து சத்தமின்றி அடிமேல் அடிவைத்து மெல்ல நகர்கிறது அந்த கறுப்பு கோட் அணிந்த உருவம் . அந்த வீட்டின் சுற்றுப்புறங்களில் சந்தடியே இல்லை. அவ்வப்போது எவரேனும் வருகிறார்களா என்று திரும்பிப்பார்த்துக்கொண்டே அவ்வுருவம் சென்று கொண்டிருக்க ஓட்டின் மேலிருந்து திடீரென பாய்கிறது அந்த ஒரு பூனை. சட்டென சுதாகரித்துக் கொண்ட அந்த உருவம் உடனே பக்கவாட்டில் நகர்ந்துகொள்ள இப்போது பூனை மதில் மேல் தடுமாறி நிற்கிறது.


மெதுவாக அவ்வீட்டின் சன்னலருகே சென்றடைந்த அந்த உருவம் உள்ளிருந்து வரும் பேச்சுக் குரல்களைக் கேட்டதும் உஷாராகி தன்னுடைய நீண்ட கறுப்புக் கோட்டின் பாக்கெட்டில் இருந்து அந்த மினி டேப் ரெக்கார்டரை எடுத்து தயார் படுத்திக் கொள்கிறது.


அப்படியே தன் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்ட அந்த உருவம் உள்ளே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யத் துவங்குகிறது.


"எல்லாரும் நல்லாக் கவனிக்கணும், இதுதான் அந்த இடத்தோட வரை படம், மெயின் காம்பவுண்ட் கேட் இந்தப் பக்கம் இருக்கு, நாளைக்கு லீவுங்கறதால அந்த கேட் பூட்டிதான் இருக்கும், 20 அடி தள்ளி இன்னொரு சின்ன கேட் இருக்கும், அங்கதான் ஒரு வாட்ச் மேன் இருப்பான்"


"சரியா 8.30 மணிக்கு நீங்க ரெண்டு பேரும் அந்த சின்ன கேட் வழியா உள்ளே போறிங்க சரியா? வாட்ச்மேன்கிட்ட ஏற்கனவே பேசியாச்சுல்ல.. எவ்வளவு கேக்குறான்"


இன்னொரு குரல்"இப்போ கெடுபிடி எல்லாம் ரொம்ப ஜாஸ்தியாம்! பத்து எல்லாம் முடியாது பதினெஞ்சு வேனும்ங்கறான்"


மீண்டும் முந்தைய குரல்"ஓ! சரி தலைக்கு பதினைஞ்சுன்னா அறுபது கொடுத்திடுவோம், மீதி ரெண்டு பேரு காம்பவுண்ட் சுவர் ஏறித்தான் வரணும், கொஞ்சம் ரிஸ்க்தான், இருந்தாலும் வேற வழியில்லை"


"சரி! ஆகட்டும்"


"8.30 உள்ளே வந்தவுடன் ஆள் நடமாட்டம் எந்த அளவுக்கு இருக்குன்னு பார்த்துக்கணும்"


"நீங்க ரெண்டு பேரும் சரியா 8.45 மணிக்கு கேட் வழியா உள்ள வரணும். வரும்போது மறக்காமல் தேவையானதை எல்லாம் மறைச்சு உள்ளே எடுத்து வந்துடணும், உள்ளே ஏற்கனவே இருக்குற இரண்டு பேரும் கிளைமேட் சரி இல்லைன்னு சொன்னா உடனே புரிஞ்சிகிட்டு வந்த மாதிரியே திரும்பி போயிடணும், சொதப்பக் கூடாது, புரிஞ்சிதா?"


அந்த இருவரும் ஒரு சேர "புரிந்தது" என்கின்றனர்.


"நீ அந்த ஆள் நடமாட்டம் அதிகமா இல்லாத இடம் எதுன்னு பார்த்து வெச்சிட்டியா?"


"பார்த்துட்டேன், கெமிஸ்ட்ரி லேப்பின் பின்புறம் அவ்வளவா நடமாட்டம் இருப்பதில்லை"என்றது இன்னொரு குரல்.


"சரி! உள்ளே போயி கிளைமேட் நல்ல இருந்துச்சுன்னா, உடனே 8.55 மணிக்கு குழி பறிக்க ஆரம்பிச்சிடணும், ஆரம்பிச்சு சரியா 15 நிமிஷத்துல வேலை முடியணும் அதாவது 9.10 க்கு எல்லாம் தயாரா இருக்கணும்"


"சரியா 9.15 மணிக்கு மீதி ரெண்டு பேரும் காம்பவுண்டு சுவர் வழியா ஏறி உள்ளே குதிச்சி வரணும், நல்லா கவனிச்சிக்குங்க யார் கண்ணிலும் படக் கூடாது, 9.20ல் இருந்து 9.30 வரை வார்ம் அப் பண்ணிக்கணும், சரியா 9.30 மணிக்கு ஆரம்பிச்சிடணும்"


எல்லோரும் கோரஸாக சரி என்கின்றனர்.


"இப்ப நாம கலையலாம். பீ கேர்ஃபுல்"


"சிபி இதை மறந்து இங்கயே வெச்சிட்டுப் போறியே, கவனமா கொண்டு வரணும், காஸ்ட்லியானது"


"ஓ.கே. டன்"


சிபி என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சட்டென தனக்குத்தானே சொடக்குப் போட்டுக் கொள்கிறது அந்த உருவம். உடனே அங்கிருந்து வந்த சுவடு தெரியாமல் விறுவிறுவென நகர்ந்தவேறெ தன் கோட் பையில் இருந்து சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்த தனது செல்போனை எடுக்கிறது.


மறுநாள் காலை.மணி 8.30: அந்த இருவர் சிறிய கேட்டை நெருங்க, வாட்ச்மேனிடம் பணம் கைமாறுகிறது. இருவரும் உள்ளே செல்கின்றனர்.


மணி 8.45: இன்னும் இருவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


மணி 8.50: நான்கைந்து வாட்டசாட்டமான ஆட்கள் சாலையில் எதிர்ப்புறம் இருந்து வந்து வாட்ச் மேனை கொத்தாய்ப் பிடிக்கிறார்கள்.


"எங்கடா பணம்?"


"எந்த பணம் சாமி?"


பொளேரரென்று கன்னத்தில் விழுகிறது.

"நாங்க யாருன்னு தெரிஞ்சிக்கணும்ல, அதுக்குதான் இது! இப்ப சொல்லு! அவங்க குடுத்த அறுபதாயிரம் எங்கே?"


"இன்னா சார் சொல்றீங்க! அறுபதாயிரமா?....யாரு குடுத்தா?"


"இவனை இப்படி கேட்டா சொல்லமாட்டான், உள்ளே கூட்டிகிட்டு வாங்க, விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லாம் தெரியும்"


மணி 9.15: காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உள்புறமாக குதிக்கின்றனர் இருவர்.

"என்னப்பா எல்லாம் தயாரா, ஆரம்பிக்கலாமா?"எல்லோரும் ஆமோதிக்கிறார்கள்.


"சிபி அந்த குண்டுகளை எடு"

சிபி பாக்கெட்டுக்குள் கையை விட


"ஸ்டாப் இட்..!" என்று சத்தம் வர திரும்பிப்பார்த்தால் மரத்தின் பின்புறம், புதர்கள் இவற்றில் இருந்து எல்லாம் ஐந்தாறு ஆஜாணுபாகுவான உருவங்கள் எழுந்து இவர்களை நோக்கி வர, இவர்களோ ஒன்றும் புரியாமல்"ங்கே......" என்று விழிக்கின்றனர்.


அதற்குள் அவர்கள் அனைவரையும் அந்த கும்பல் சுற்றி வளைத்துக் கொள்கிறது. வாட்ச் மேனை பிடித்தவர்களும் அங்கு வந்து சேர்கின்றனர்.


"யார் நீங்களெல்லாம், இங்க என்ன செய்யுறீங்க? உங்க பேரு என்ன?" என்று சரமாரியாக கேள்விகளை வீசுகின்றனர்.


"என் பேரு கைப்புள்ளை.." என்று ஆரம்பிக்கிறார் கைப்புள்ளை.


"என் பேரு தேவ்"


"என் பேரு இளா என்கிற விவசாயி"


"என் பேரு சிவா, நாகை சிவா.."


"என் பேரு பாண்டி, ஜொள்ளுப் பாண்டி"


"ஓ நீதான் சிபியா என்று அமைதியாக நிற்பவரைப் பார்த்து அக்கும்பல் கேட்க

"ஆமாம்" என்று பரிதாபமாய் தலையசைக்க


"நீதான் குண்டு வெச்சிருக்கியா? எங்கே வெச்சிருக்கே?" என்றவாறு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் சிபியை நெருங்க,


"இதோ இங்கதான் வெச்சிருக்கேன்"

என்றவாறே தன் கால்சட்டைப்பையில் கைவிட்டு விளையாடக் கொண்டுவந்த ஆறு புதிய கோலி குண்டுகளை எடுத்து அப்பாவியாய் காட்டுகிறார்.


"டேய் எங்ககிட்டயே விளையாடுறீங்களா?"


"க்கும்...எங்கே விளையாட விட்டீங்க" என்று கைப்புள்ளை முனக...


எரிச்சலின் உச்சத்திற்கு போகிறது அந்த கும்பல். அதற்குள் அந்த வாட்ச்மேன் "இன்னாபா இது நாலு பேருன்னு சொல்லிட்டு அறுபது ரூபாய குடுத்துட்டு இங்கே 6 பேரு இருக்கீங்களே, இவங்க என்னடான்னா அறுபதாயிரம் எங்கேன்னு கேட்டு அடிக்கறாங்கப்பா, ஏம்பா நீங்களாச்சும் சொல்லுங்கப்பா ஆருபது ரூபாதான் கொடுத்தீங்கன்னு"எண்ரு புலம்ப அதுவேறு எரிச்சலை இன்னும் அதிகமாக்குகிறது.


பற்கலை நறநறவென கடித்துக்கொண்ட அந்த குழுவின் தலைமை அதிகாரி "எங்கய்யா அந்த தகவல் கொடுத்த ஆசாமி..?' என்று கோபமாகக் கத்த


"சார்.... அந்த ஆள் எஸ்கேப் ஆயிட்டான். அங்க பாருங்க" என்று இன்னொரு அதிகாரி கைகாட்ட, அவர் காட்டிய திசையில் அனைவரும் திரும்பிப் பார்க்க

தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது அந்த கறுப்பு கோட் அணிந்த உருவம்.



(இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர் வந்த அன்னிக்கே நான் அவரைக் கலாய்ப்பேன்னு உரிமையோட சொன்னதுக்கும் இந்த மீள் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லீங்கோ............!)

Friday, May 4, 2007

ஏதிர் விருந்து

நமக்கு யாராவது விருந்து குடுத்தா எதிர் விருந்து கொடுக்குறதுதான் நம்ம பம்பாடு அப்படிண்ணு எங்க தல அடிக்கடி சொல்லுவாரு. இதுல ஆப்பு மட்டும் விதிவிலக்கு. இதையும் அவரேதான் சொல்லுவாரு.

அதான் எங்களை அழைச்சி ஆப்படிச்ச ச்சே விருந்து குடுத்த பயபுள்ளைக பாசக்கார சங்கத்துக்கு நாம ஏதாச்சும் பண்ணனும்யான்னு தல ஃபிளைட்ல பறந்துகிட்டே அவசரமா கட்டளை போட்டுட்டாரு. அதான் உடனடியா ஒரு அவசர எதிர் விருந்து(எதிரி விருந்து அல்ல) ஏற்பாடு.











ப.பா.ச உறுப்பினர்களே! இதையே சங்கத்து சார்பா என் அழைப்பா ஏத்துகிட்டு எல்லாரும் வந்து கலந்துக்குங்க!

என்னதான் நீங்க காரத்தைப் போட்டு, புளியைக் கரைச்சி கொடுத்தாலும் நாங்க அப்படி செய்யமாட்டோம்! ஏன்னா ப.பா.ச எங்களோட சிஸ்டர்ஸ் கன்சர்ன் ஆச்சே!

Thursday, February 1, 2007

நான் ஒரு தடவைச் சொன்னா..



அதிகாலை பத்து மணி. தூரத்தில் பாலைவன மணலில் கால் புதைந்து வரும் கைப்புள்ளையக் கண்டதும் டீக்கடை காரருக்கு திக் என்கிறது.
"ஐயோ.. இவன் இப்போ ஒட்டகப்பால் கேட்டு வம்பிழுப்பானே.. சரி.. சமாளிப்போம்"

டக்கென்று அரை டம்ளர் பாலில் கொஞ்சம் மைதாவைக்கலந்து திக்கான பாலாக்குகிறார். அதில் கொஞ்சம் டிக்காஷனை ஊற்றி டீயாக்கி மட்பாண்டத்தில் ஊற்றி தயாராக வவத்துக்கொள்கிறார்.

"வாங்க கைப்புள்ளை, சூடா டீ சாப்பிடறீங்களா? ஒட்டகப் பால்ல டீ போட்டிருக்கேன்"

"ஒட்டகப் பால்லயா! சரி குடு!"

வாங்கி டீயை ஒரு வாய் உறிஞ்சியவுடன் "த்த்தூ... என்ன இது ராஸ்கல்! டீ இவ்ளோ கெட்டியா இருக்கு? இப்படியெல்லாம் டீ போட்டா மனுஷன் குடிப்பானா?"

"என்னப்பா நீ! நீதான அன்னிக்கு ஒட்டகப்பால்ல டீ வேணும்ணு கேட்டே!"

"ஓ! அதான் இவ்ளோ திக்கா இருக்கா! ஆமா! என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே!"

"இன்னாப்பா இது! உன்னன வெச்சி நான் காமெடி பண்ணுறதாவது?"
(தனக்குள்ளேயே) "உன்னை வெச்சி நீ பண்ணிக்குற காமெடியே போதாதா"

"என்னாது? என்னா அங்கே முணகுறே"

"ஒண்ணுமில்லைப்பா, அங்கன ஒக்காந்து டீயக் குடிச்சிட்டு நடையக் கட்டு"
அங்கே இருக்கும் பெஞ்சின் மேல் அமர்ந்து டீயை ரசித்துக் குடித்து விட்டு, மட்பாண்டத்தை கீழே போட்டு உடைக்கிறார் கைப்புள்ளை.

"ஆங்! இன்னிக்கு பேப்பர்லே என்ன நியூஸு...?" என்று தனக்குத்தானே பேசியவாறு ஒரு பேப்பரை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு பேப்பரில் மூழ்குகிறார்.

சாலை திருப்பத்திலிருந்து "ஐயோ..யாராவது காப்பபத்துங்களே... ச்சீ.. போ..போ.. யாராவது காப்பாந்துங்களே" என்றவாறே ஒருவர் மூச்சிரைக்க ஓடிவர பின்னாலேயே ஒரு நாய் துரத்தி வருகிறது. சப்தம் கேட்டு கவனம் கலைந்த கைப்புள்ளை பேப்பரிலிருந்து தலையை எடுத்து எட்டிப் பார்க்க
அந்த நாய் அந்த ஓடிவந்த நபரை சுற்றி வளைத்து ஓட விடாத வண்ணம் மரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த நபர் பதறியபடியே "யாராவது காப்பாத்துங்க" என்று கதறுகிறார்.
கூட்டம் கூடியவாறு நின்று அனனவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சட்டென எழுந்த கைப்புள்ளை மிடுக்காக இடமும் வலமும் திரும்பிப் பார்த்து
"அந்த நாயை விரட்டக் கூட யாருக்கும் தெகிரியம் இல்லல.. எல்லாத்துக்கும் நாமளே போக வேண்டியிருக்கு" என்று தனக்குத் தானே பேசியவாறு அருகில் செல்கிறார்.

சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கருங்கல் கிடைக்கிறது.
சட்டென கல்லை கையிலெடுத்த கைப்புள்ளை, நச்சென்று ஒரே போடாக நாயின் தலையின் மீது எறிய, தலை நசுங்கி "அவ்..அவ்.." என்று முனகியவாறே உயிரை விடுகிறது.

"அப்பாடா தப்பினோம்.." என்ற நிம்மதியுடன் ஓடிவந்த அந்த நபர் கண்களில் நன்றியுடன் கைப்புள்ளையைப் பார்த்துக் கையெடுத்து கும்பிடுகிறார்.

"அண்ணே.. நல்ல வேளை ஆண்டவன் போல வந்து காப்பத்துனீங்க.. இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று ஒரு வித ஃபீலிங்குடன் கூற கைப்புள்ளையையும் அந்த ஃபீலிங்க் தொற்றிக் கொள்கிறது.

"என்ன தம்பி இப்படியெல்லாம். பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு, தம்பிக்கொரு கஷ்டம்னா அண்ணன் நான் வராம வேற யாரு வருவா.?"

"சரிண்ணே நான் கெளம்பறேண்ணே".

"பார்த்து பத்திரமா போப்பா, போ!" என்று கண்ணில் நீருடன் வழியனுப்பி வைக்கிறார் கைப்புள்ளை.

அதற்குள் வெகுவாக கூடிவிட்ட கூட்டத்தைப் பார்த்து தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். "ம்ஹூம், இவ்ளோ பேரு இருக்கானுவ, எவனுக்காவது காப்பாத்தணும்னு தோணிச்சா? அதான். அதான்யா இந்த கைப்புள்ளை"

கூட்டம் கலைவதற்குள் சர்ர்..என்று ஒரு போலீஸ் ஜீப் கைப்புள்ளைக்கு வெகு அருகில் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கைப்ஸை ஏற இறங்க வெகு ஏளனமாக பார்த்து கூட்டத்தை நோக்கி திரும்புகிறார்.

"இந்த நாயைக் கொன்னது யாரு?" என்று சத்தமாகக் கேட்கிறார்.

"ஏன் என்னைப் பார்த்தா கொன்ன மாதிரி தெரியலையா? நம்மகிட்ட கேக்குறது?" என்று படு பந்தவாக கைப்புள்ளை கேட்க

"யோவ், உன் வேலையைப் பாருமைய்யா...சாவு கிராக்கி, செத்த நகரு அந்தப் பக்கம்,..." என்று ஒதுக்கி விட்டு மீண்டும் சத்தமாகக் கேட்கிறார்.

"இந்த நாயைக் கொன்னது யாரு?"

"நாந்தான் சொல்றனில்ல! இன்னும் என்ன வெசாரணை, சின்னப்புள்ளத்தனமா?"

"ம்ஹூம், சோப்ளாங்கி போய்யா அந்தப்பக்கம்... கேக்குறனில்லே சொல்லுங்க!
யாரு கொன்னது?"

கூட்டத்திற்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.

"கைப்புள்ளதான் கொன்னாரு!" குரல் வந்த திசையிலிருந்து கூட்டத்தை
விலக்கிக் கொண்டு வெளியில் வருகிறார் தேவ்.

"ஆமாம், கைப்புள்ளைதான் கொன்னாரு! " இன்னொரு பக்கம் இருந்து வருகிறார் நாகை சிவா.

"கைப்புள்ளைதான்!" என்று கூறிக் கொண்டே வேட்டியை மடித்துக் கட்டிக்
கொண்டே வந்து நிற்பது விவசாயி.

"எலேய்! எடுபட்ட பயலுவலா! எங்க தலை கைப்புள்ளை கொல்லாம வேற யாரு கொல்ல முடியும்" என்று எகத்தாளமாகக் கேட்டபடி ஜொள்ளுப் பாண்டி.
இப்படியே சொல்லிக்கொண்டு ராயல் ராம், வெட்டிப் பயல், சிபி ஆகியோரும்
கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியில் வந்து பாட்ஷா படத்தில்
பாட்ஷாவின் அடியாட்கள் போல் பில்டப் கொடுத்து அணிவகுத்து நிற்க

"ஓ! அப்போ உங்க கைப்புள்ளைதான் கொன்னாருன்னு சொல்றீங்க!, இதை எங்க வேணும்னாலும் வந்து சொல்வீங்களா?" என்று அந்த போலீஸ் காரர் கேட்கிறார்.

"ஓ.. சொல்வமே!" கோரஸாய் பதில் வருகிறது.

"ஓ! அப்ப சரி!, யோவ் கைப்புள்ளை வண்டில ஏறு?"

இதைக் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்து போன கைப்புள்ளை
"வண்டிலயா? என்னாத்துக்கு?" என்று வழக்கம்போல கேட்கிறார்.

"என்னாத்துக்கா..? ஏண்டா! கஷ்டப்பட்டுத் தேடிகிட்டிருந்த தீவிரவாதிய எங்க
போலீஸ் நாய் கண்டு பிடிச்சி விரட்டிட்டு வந்தா, அந்த நாயை நீங்க கொன்னுட்டு பாட்ஷா ஸ்டைல்ல பில்டப்பு வேற கொடுப்பீங்களோ? ஏறு வண்டில, உன்னையெல்லாம் லாக் அப்புல போட்டு முட்டிக்கு முட்டி தட்டணும்"

"என்னாது? போலீஸ் நாயா! சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
என்று ஆரம்பிக்கிறார் கைப்புள்ளை.

Thursday, January 25, 2007

மீண்டும் அரியாசனத்தில்...!

அந்தப்புறத்தில் இத்தனை ஆடிப் பாடிக் களைத்துவிட்டு மீண்டும் அரியாசணத்திலேறி ஆட்சி புரிய வந்துவிட்டார் எங்கள் தலை கைப்பு!
பராக்...பராக்... பராக்....
ஊழலின்றி தயாரிக்கப்பட்ட பீட்டாயுதத்தோடு போர்க்களங்கள் காணப் புறப்பட்டுவிட்டார்.

மீண்டும்.........
அரசவை கூடட்டும்!
ஆப்புகள் தொடங்கட்டும்!
சங்க நாதம் ஒலிக்கட்டும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................................!

Friday, September 22, 2006

தலயா கொக்கா!!!


இது சங்கத்து சிங்கங்களின் கல்லூரியில் நடந்த ஒரு ரணகளமான நிகழ்ச்சி!!!

பிராக்டிக்கல் முடித்து காண்டீனில் ஓசி டீ குடித்து கொண்டிருக்கிறார் நம்ம தல கைப்பு!!!

ஜொள்ளு பாண்டி வேகமாக ஓடி வருகிறார்...

ஜொ.பா: தல... இந்த தடவையும் நம்ம தளபதிக்கு லேப்ல ஆப்பு வெச்சிட்டாங்க!!!

கைப்பு: என்னது!!! லேப்ல குத்திட்டாங்களா?சங்கத்து ஆளுனு சொன்னியா??

ஜொ.பா: சொன்னதுக்கு அப்பறம்தான் குத்துனாங்க!

கைப்பு: அந்த HODக்கு நம்மல சீண்டி வெளயாடுறதே வேலையாப்போச்சு. அவருக்கு ஹெட் லெட்டர் சரியில்லன்னு நினைக்கிறேன்...ஸ்டார்ட் பண்ணுங்கடா வண்டிய!!!

ஜொள்ளு பாண்டி இஞ்சினாக மாற, அவர் பின்னால் விவசாயி இளா, கை தேவ், வெட்டிப்பயல், நாகை சிவா நால்வரும் ரயில் பொட்டிகளாக மாற வண்டியில் இணைகிறார் கைப்புள்ள.

ரயில் வண்டி டிப்பார்ட்மெண்டு அருகே நின்றது.

டிப்பார்ட்மெண்ட்க்கு வெளியே தளபதி நின்று கொண்டிருக்க, உள்ளே HOD மற்றும் அவருக்கு அல்லக்கையாக இரண்டு வாத்தியார்கள்.

கைப்பு (கோவமாக) : சங்கத்து ஆள ஃபெயில் பண்ணவது யாரு?

HOD: என்னது? ஒன்னும் கேக்கல... உள்ள வந்து சொல்லு

கைப்பு: உள்ளயா?? நானா?? (கைப்பு தனது வழுக்கமான வீர சிரிப்பை சிரிக்கிறார்).நானும் டிப்பார்ட்மெண்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது...ஆமாம் சொல்லிட்டேன்... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

HOD: ஏன்டா அவன ஃபெயில் பண்ணா உனக்கு என்னடா?

கைப்பு: எங்க சங்கத்துல இது வரைக்கும் யாரும் கப் வெச்சது இல்ல (பெருமையாக சொல்கிறார்)

HOD: ஏன்டா போன செமெஸ்டர்ல தான நீ வாஷ் அவுட் ஆன?

கைப்பு (நக்கலாக): அது போன செம்மு... நான் சொல்றது இந்த செம்மு

HOD (பக்கத்திலிருப்பவருடன்): இவன் அடங்க மாட்டான் போலிருக்கு... அந்த மார்க் ஷீட்ட எடுத்துட்டு வாங்க. தொலஞ்சு போறானுங்க இல்லைன்னா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதே சாதிப்பானுங்க

கைப்பு (தளபதியிடம்): பாத்த இல்ல... அண்ணன் சொன்னா ரிடர்ன்வரப்படாது. கொண்டு போய் குடுத்துட்டு வா.
மார்க் லிஸ்ட் HOD கைக்கு வர, அதில் ஏதோ திருத்தம் செய்கிறார்.

HOD: சரி.. உன் விருப்பப்படி அவன பாஸ் பண்ணிட்டேன்... (கைப்பு பெருமையாக சிரிக்கிறார்)ஆனால் என் விருப்பப்படி உன்னைய ஃபெயில் பண்ணிட்டேன்...

சங்கத்து சிங்கங்கள் எல்லாம் பெருமை பொங்க கைதட்டுகிறார்கள்.

தளபதி: தல!!! நீ சாதிச்சிட்ட தல! பரிட்ச எழுதாத என்னையே பாஸாக வெச்சிட்டன்னா நீ சாதாரண ஆளே இல்ல தல???

கைப்பு: என்னாது??? நீ பரிட்சையே எழுதலையா???

ஜொ. பா: ஆமாம் தல!!! நேத்து நைட்டு தளபதிக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு. அதனால நாந்தான் நீ பரிட்சை எல்லாம் எழுத வேணாம்... நம்ம தல பாத்துக்குவாருனு சொல்லிட்டேன்... நீ சாதிச்சிட்ட தல...

தேவ்: பரிட்சை எழுதாமலே பாஸாக வைத்ததால் இன்றிலிருந்து நீங்கள் "பரிட்சை கொண்டான்"னு அழைக்க படுவீர்கள்.

கைப்பு (மெதுவாக): பட்டத்த வேற கொடுத்துட்டானுங்களா! இனிமே எதுவுமே பேச முடியாதே...

அனைவரும் மறுபடியும் ரயில் வண்டியை ஆரம்பிக்க, இந்த முறை தளபதியும் இணைகிறார்.

பக்கத்து டிப்பார்ட்மெண்ட் வழியாக செல்லும் போது காதில் விழுந்தது."பரிட்சை எழுதாத சிபியையே பாஸ் பண்ண வெச்சிட்டானே நம்ம கைப்புள்ள.. இந்த தடவ அவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் தான்"...

கைப்பு:இப்படி பேசி பேசிதாண்டா இன்னும் என்னிய பர்ஸ்ட் இயரையே தாண்டவுடாம பண்ணிட்டீங்க.

Thursday, August 3, 2006

ஒன்று இரண்டாவது எப்படி?

நம்முள் பலருக்கு தண்ணியடித்தால் ஒன்று இரண்டாவதாகத் தெரிவது எப்படி என்ற ஐயம் காலம் காலமாக இருந்து வருகிறது. என்னிடம் கூட நண்பர்கள் கேட்பதுண்டு. அப்படி என்னதான் இருக்குன்னு தண்ணியடிக்கறே என்று? அதைக் கண்டு பிடிக்கத்தான் மச்சி தொடர்ந்து அடிக்கிறேன். கண்டு பிடிச்சி திஸீஸ் சப்மிட் பண்ணியவுடன் நிறுத்திடுவேன் என்று கூறுவேன். அவர்களும் (அப்புறமா மப்பூ ஓவரா பூடுச்சுனா அலம்பல் தாங்கறது யாரு? என்று)அத்தோடு கப்சிப் ஆகிவிடுவார்கள்.
சரி இத்தனை நாள் அடித்ததில் கண்டறிந்த அந்த உலக ரகசியம் என்னவென்று பார்ப்போம்.
கணித ரீதியாகவே விளக்குகிறேன்.

முதலில் ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வட்டத்திற்கு எத்தனை குவார்ட்டர்? (அதாவது எத்தனை கால் பாகம்) - 4. வட்டத்திற்கு மொத்தம் எத்தனை - 360 பாகை (இது யாஹூ 360 அல்ல)

அப்போ ஒரு குவார்ட்டருக்கு - 90 பாகை. முழு வட்டத்திற்கு 360 பாகை. சரியா.

இப்போ சரக்குக்கு வருவோம்.
ஒரு குவார்ட்டருக்கு எத்தனை 90? இரண்டு. அதாவது (2X90) அதாவது 180. அப்போ ஒரு ஃபுல்லுக்கு எத்தனை மில்லி - 4 குவார்ட்டர் ( 4X180) ஆக மொத்தம் 720 மி.லி.

இப்போது இரண்டையும் ஒப்பிடுவோம்.

குவார்ட்டர் (வட்டம்) : குவார்ட்டர்(சரக்கு)
90 : 180

ஃபுல்(சர்க்கிள்) : ஃபுல்(சரக்கு)
360 : 720

ஆக கிடைக்கும் விகிதம் 1 : 2
அதனால்தான் சரக்கு அடிக்கும்போது மட்டும் ஒன்று இரண்டாககத் தெரிகிறது.

அது ஏன் வட்டத்துடன் சரக்கை ஒப்பிடவேண்டும். தலை சுற்றுகிறது என்று சொல்லும்போது வட்டத்துடன்தானே ஒப்பிடவேண்டும்!

அப்படியே சொல்லியும் பாருங்க! காரணம் என்னன்னு விளங்கும்!

சர்க்கிள் : சரக்கில்

Sunday, July 30, 2006

அட்லாஸ் வாலிபருக்கு அட்லாஸ்ட் நன்றி!

சங்கப் பலகையில் சங்கத்து முகங்களையே பார்த்து அலுத்துப்போன பெருவாரியான வாசக உள்ளங்களுக்கு மாற்றம் தரும் வகையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களுக்கு(ம்) ஆப்பு வாங்கித்தரும் விதமாக
எங்கள் முதல் அட்லாஸ் வாலிப விருந்தாளியாக ஆப்புகளை அள்ளிக் கொள்ள இலவசக் கொத்தனார் அவர்களை அழைத்திருந்தோம்.

அவரும் அயராத அலுவலகப் பணிகள் மற்றும் எழுத்து, தமிழ் வளர்ப்பு, வெண்பா வடித்தல் போன்ற வலையுலகப் பணிகளுக்கிடையிலும் எங்கள் அழைப்பை ஏற்று அட்லாஸ் வாலிபராக ஆப்புகளைத் தாங்கியதோடு மட்டுமின்றி, பின்னூட்ட எண்ணிக்கையில் அவரது பழைய சாதனைகளையும் முறியடித்து, சங்கத்திலும் சாதனையை ஏற்படுத்தி சங்கத்தை சிறப்பித்திருக்கிறார்.

இதோ இன்றோடு அவரது அட்லாஸ் வாலிப பருவம் முடிவடையும் இவ்வேளையில் சங்கத்தின் தலை கைப்பு மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான போர்வாள் தேவ், வேளாண் தோழர் விவசாயியார், புதரகத் திரும்பி ஆற்றலரசியார் பொன்ஸ், எள் என்றாலே நினைவுக்கு வரும் எண்ணெய் போல் ஜொள் என்றாலே நினனவில் வரும் பாண்டித்தம்பி ஆகியோர் சார்பாகவும், அலைகடலென திரண்டிருக்கும் சங்கத்தின் ஏனைய சிங்கங்களின் சார்பிலும் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்படுக்கிறேன்.

இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் இமாலய நன்றிகள்
சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரை மனதார மகிழ்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அரை மனதோடு, சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தரும் இத்தருணத்தில் எங்கள் அன்பு அண்ணன், தல கைப்பு அவர்கள் "விருந்தாளிகளை வெறுமனே வழியனுப்புதல் நமது பாரம்பரிய மரபு அல்லவே!" என்று அன்புக் கட்டளை இட்டதால்
சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக அன்பு அண்ணன் இலவசக்கொத்தனார் அவர்களுக்கு
"பின்னூட்டப் புயல்"
என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறோம்.
பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க!

Tuesday, July 4, 2006

இரண்டு மகிழ்ச்சியான செய்திகள்



சங்கத்துல இன்னிக்கு ரெண்டு ஸ்பெஷல் நியூஸ்!


செய்தி 1:

இத்தினி நாளா கேள்வி கேப்பாரு இல்லாம இஷ்டத்துக்கு பேச்சுலரா சுத்திட்டிருந்த நம்ம சங்கத்து உறுப்பினர் துபாய் ராசா இனிமே பேச்சு இலரா ஆகப் போறாராம். அவரே அழைப்பிதழையும் அனுப்பியிருக்கார். சங்கத்து சார்பா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

செய்தி 2:


சங்கத்தின் போர்வாள், கைப்புள்ளையின் கை என்றெல்லாம் அழைக்கப்படும்
நம்ம சென்னைக் கச்சேரிக்காரர் தேவ் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அட! ஆமாங்க! நேத்து காலையில கோவை வந்துட்ட அவரு சாயங்கலாமா நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனாருங்க! ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகி இருக்கிறாருங்கோவ்.



சங்கத்து உறுப்பினர்கள் சார்பா அவருக்கும் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தம்பி பாண்டி அவர்கள் இரண்டு சந்தோஷ சங்கதிகளுக்காகவும் சேர்த்து உடனடியாக ஒரு பெரிய அளவுல பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யணும்னு தலை கைப்புள்ளை ஃபேக்ஸ் அனுப்பி இருக்காரு!

அப்புறம் என்ன! கொண்டாடிட வேண்டியதுதான!

Sunday, June 4, 2006

தளபதியின் அறிக்கை

சங்கத்தின் புதிய சிங்கங்களாம் புதிய தோழர்கள் சங்கத்துப் பணியை செவ்வனே செய்வதோடு கடமையை எள்ளளவும் மறக்காது கேள்விகள் எழுப்புகின்றனர். இவற்றிற்கு விளக்கம் கொடுப்பது ஆற்றலரிசி பிகிலு அவர்களின் கடமை எனினும் சங்கத்து சிங்கங்களுக்கு தலை கைப்புவின் அனுமதியோடு ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.

உடன் பிறப்புகளே..... சங்கத்து வரலாற்றை கொஞ்சம் உன்னிப்பாய் ஆராய்ந்து பாருங்கள். சங்கத்து உறுப்பினர்கள் எப்பொழுதெல்லாம் சற்று கண்ணயர்ந்து காணப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் இது போன்ற பிரச்னைகள் தலை தூக்குகின்றன. இவற்றின் காரணம் என்ன?

நமக்குள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை பயன்படுத்தி சூழ்ச்சிகளால் சங்கத்தில் கலகம் ஏற்படுத்தி சங்கத்தின் புகழையும், அதிவேக வளர்ச்சியையும் கெடுக்க நினைக்கும் வீணர்களின் வேலை என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் சங்கத்தின் கொ.ப.செ வான தங்கத் தலைவி, ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் அவர்கள் மேல் களங்கத்தை சுமத்தி, கேள்விகள் கேட்பதும் நம் சங்கத்தின் உறுப்பினர்களே என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கி சங்கத்தில் சலசலப்பை உண்டாக்குவதே இது போன்ற புல்லுருவிகளின் வேலை. இத்தகு விஷமங்களுக்கு இனி நாம் இடம் கொடுக்கலாகாது.

இனி நாம் கைப்புள்ளயை எப்படியெல்லாம் புதிது புதிதாய்க் கலாய்ப்பது என்பது குறித்து உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலையில், இது போன்ற வெளி கலாய்த்தல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்கலாமா?

சற்றே சிந்திப்பீர்.

வாழ்க வ.வா.சங்கம். வளர்க நமது கடமைகள்.

Wednesday, May 10, 2006

மாவட்ட செய்திகள் - நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல், கைவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் இளங்கலை மாணவிகளை உறுப்பினர்களாகக் கொண்ட நமது வ.வா.சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மகளிர் அணிக் கிளையின் உறுப்பினர் ஒருவரை கடந்த ஞாயிறு அன்று சந்தித்தேன்.

அவர்களும் தங்கள் கல்லூரியில் நமது சங்கத்தின் கிளையொன்றை நிர்வகித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார். அவர்தம் கல்லூரியில் நமது சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாடினேன்.

அப்போதுதான் இக்கிளை அக்கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக நிர்வகிப்பட்டு வருவதாகவும், தினமும் நம்ம தலை கைப்புவின் வீர வரலாற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்று வருவதாகவும் கூறினார்.


என்னே கைப்புவின் புகழ்! என்னே சங்கத்தின் வளர்ச்சி!

Thursday, May 4, 2006

நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்


சமீபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிங்கப்பூரில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

தலைமை : தலை கைப்பு
முன்னுரை : ஜொள்ளுப் பாண்டி, வெண்பா வாத்தியார் ஜீவா
சிறப்புரை : பிகிலு பொன்ஸ் மற்றும் கானா கீதா
நன்றியுரை : பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் மற்றும் ஆர்த்தியக்கா
ஒருங்கிணைப்பு : மாநில செயற்குழு தலைவர் தேவ்
சிறப்புப் பேச்சாளர் : நடிகை நயன்தாரா