Showing posts with label Kana Prabha. Show all posts
Showing posts with label Kana Prabha. Show all posts

Friday, April 2, 2010

பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?

கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.

என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)

வழிமுறை 1

ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.

வழிமுறை 2

காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.

வழிமுறை 3

ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.

வழிமுறை 4

மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.

வழிமுறை 5

காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.

வழிமுறை 6.

இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)

இது ஒரு மீள்பதிவு-எழுதியது- கானாபிரபா

Tuesday, April 29, 2008

வ.வா.சங்கத்துக்கு நன்றியுடன் என் தொகுப்பு

இரண்டு மாசம் முன் வ.வா.சங்கத்தில் இருந்து சங்கத்தின் ஒரு மாதப் பதிவுகளை எழுதும் படி கேட்டிருந்தார்கள். ஏப்ரல் மாசம் வச்சுக்கலாமா என்று கேட்டேன். அதற்கும் ஓகே என்றார்கள். எல்லாம் சரி ஆனால் என்ன எழுதுவது என்பது குறித்துத் தீர்க்கமாக ஏப்ரல் வரும் வரை நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சங்கத்தின் விதிகளுக்கேற்ப ஏதோ என்னாலான அளவு பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றேன் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குறும்புத்தனமான ஆசைகள், கனவுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் நம்மில் பலர் அதை வெளிக்காட்டாது எமக்கு நாமே போலியான முகமூடி கொடுக்கின்றோம். சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் வரும்போது இந்த உள்ளக்கிடக்கைகளுக்கு வடிகாலாய் இந்த வ.வா.சங்கம் அமைத்துத் தரும் பதிவுக்களம் அமைகின்றது. பின்னூட்டங்களில் கூட கலாய்ப்புக்களும் சிரி சிரிப்புக்களும் நிறையவே உண்டு. இங்கே கலாய்க்கவும், சிரிக்கவும் மட்டுமே வழி உண்டு. வழிமாறி வருபவர்களும் உண்டு ;-)

இந்த மாசத்துடன் தனது இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சங்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.

அந்த வகையில் இந்த நல்ல சந்தர்ப்பத்தை வழங்கிய சங்கத்துச் சிங்கங்களுக்கும், தொடர்ந்து உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-) மீண்டும் சந்திப்போம்.

ஏப்ரல் மேயிலே பாட்டு பாருங்க

"பெளர்ணமி நேரம் பாவை ஒருத்தி" பாட்டுக் கேளுங்க

இதுவரை சங்கத்தில் நான் கொடுத்த பதிவுகள்.

Software engineers' Dream Girl - 100% ஜொள்ளு பதிவு

எடுத்த எடுப்பிலேயே பில் கேர்ட்ஸ் மகள் என்று நினைத்துப் ஜொள்ளுப் புதிர் போட்டு மண் கவ்விய பதிவு.

பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook

I am a tamil, I can speak tamil ;-)

வெளிநாட்டில் வளரும் இந்தத் தமிழ்ப்பையன் தமிழ் பேசுவாராம், தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் குழைத்துப் பாடுகிறார்.பாடல்: பூபாளம் இசைக்குழுவின் தமிழ் ரெகே.

Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!

Computer programmer காதல் கடிதம் எழுதினா எப்படியிருக்கும், இப்படி இருக்குமா?
யாரோ எழுதியது, பிடித்ததால் பகிர்கின்றேன்.

யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-)

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......

வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)

கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்)

பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள்

இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக

மொக்கை சூப்பர் ஸ்டார் ரித்திஷ் குறித்த பதிவு

பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

பதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்

நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை.

Saturday, April 26, 2008

பதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்

இப்பவெல்லாம், ரீமிக்ஸ், ரீமேக் யுகம். ஆளாளுக்கு மொக்கைப் படம் எடுப்பதை விட்டு விட்டு பழைய படத்தையே மைக்ரே வேவ் இல் சூடாக்கிக் கொடுக்கிறார்கள். அந்தவகையில் நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை. படத்தலைப்பு மட்டும் தான் மேட்டரே, அந்தப் படத்தை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதோ சில பதிவர்களும், அவர்களுக்குப் பொருத்தமான பழைய படத் தலைப்புக்களும்:

சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்)

வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி - Amma Naana O Tamila Ammai (தொடர்ந்து தெலுங்குப்பட மேட்டர் கொடுப்பதால்)

இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா)

இராம் - மதுரைக்காரத் தம்பி or மதுர (வைகைப்பதிவுக்காரர்) or பாய்ஸ் (வா வா சங்கத்துத் தூண்களில் ஒன்று)

ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்)

ஜி.ராகவன் - ஜகன் மோகினி ( தங்க மரம் என்ற வெற்றிகரமான மர்மம் பிளஸ் மாயாஜாலத் தொடர் கொடுப்பதால்)

கொழுவி - நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது)

தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்)

கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு (விளக்கம் தேவையா?)

சயந்தன் - இது ஒரு தொடர்கதை ( நிறையத் தொடர்களைத் தன் வலைப்பதிவில் ஆரம்பித்து முதல் பாகத்தோடு அல்லது அறிமுகத்தோடு நிறுத்திக்கொண்டதால், கிட்டத்தட்ட ஐம்பது தொடர்கள் தேறும்)

சோமிதரன் என்கிற சோமி - வெள்ளித்திரை ( இயக்குனர் ஆகும் கனவுடன் கடந்த 20 வருஷமாக கோடம்பாக்கத்தை வளைய வருவதால்)

டிபிசிடி - புரியாத புதிர் ( புரியல தயவு செய்து விளக்கவும்)

வந்தியத்தேவன் - யாரடி நீ மோகினி ( கொழும்பில் ஊரடங்கு போட்டாலும் சலனமின்றி கொன்கோர்ட் சென்று நயன்தாராவின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதால்)

கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை ( கிருஷ்ணபகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்)

துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்)

.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல)

அமீரகப் பதிவர்கள் கூட்டு - பாலைவன ரோஜாக்கள்

Thursday, April 24, 2008

பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?

கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.

என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)

வழிமுறை 1

ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.

வழிமுறை 2

காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.

வழிமுறை 3

ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.

வழிமுறை 4

மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.

வழிமுறை 5

காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.

வழிமுறை 6.

இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)

Wednesday, April 23, 2008

இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக...

இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாகக் களம் இறங்குகிறதாம் இப்படம். திரையுலகம் மட்டுமல்ல எல்லா உலகத்திலும் இது தான் பேச்சு. நாயகன் ரித்திஸ் இப்பவே வெள்ளி விழா நோட்டீஸ் எல்லாம் அடிச்சிருப்பார். ஸ்டில் இல் இருக்கும் பாண்டியராஜனைப் பாருங்க ஒரு நிமிஷம், அப்படியே படம் குறித்த எதிர்பார்ப்பை குறிப்பா சொல்றார்.கலைஞர் திரையுலகத்துக்காக எவ்வளவோ செய்றார், இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதோ?

Saturday, April 19, 2008

கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 2

பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள். வித்தியாசமான கற்பனையில் நகைச்சுவையான படைப்பாக இது இருக்கின்றது. யார் மனதையும் புண்படுத்தவல்ல. இந்த ஒலிவழி நகைச்சுவையின் இரண்டாம் பாகத்தை இங்கே பகிர்கின்றேன்.

பாகம்1

பாகம் 2

Thursday, April 17, 2008

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......

வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.
பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)

பாடல்: பூபாளம் இசைக்குழு.

பாடல் வரிகள்:

Come on Mohan, come on..don't cry
mummy will be here in a minute

சோ றற சோ.......றொகான் சோ றற சோ

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா

சோ றற சோ...... றொகான் சோ றற சோ

சோறு கறியோ வெறி சொறியப்பா
களைச்சுப் போனேன் ரேக் எவே என்பா
உங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா
ஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா

சோ றற சோ...... றொகான் சோ றற சோ

வீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா
நீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா
நாலுபேர் போல் நாங்களுமப்பா
வாங்க வேணும் புதுக்கார் என்பா

உடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்
ஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா
எங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்
இண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா

செலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்
ஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா
நன்மை தீமையேதும் சொல்லிப்போட்டனெண்டால்
நல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா

சோ றற சோ...... றொகான் சோ றற சோ

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா

Tuesday, April 15, 2008

யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு முன்பே, தாய்நாட்டில் வாழா வெட்டி வாலிபர் சங்கம் அமைத்து குட்டிச் சுவர் மாநாடெல்லாம் நடாத்தியிருந்தோம் என்று முந்திய பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-) விடுபட்டவை பின்னர் வரும்.

1. காய் - பிகரு, பொண்ணு
2. எறிதல் - சைட் அடித்தல்
3. காய் பார்த்தல் - பிகரை சைட் அடித்தல்
4. சுழட்டல் - பிகர் ஏரியாவில் ரவுண்ட்ஸ்
5. காயிதம் - லவ் லெட்டர்
6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்
7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்தல்
8. வில்லன், நம்பியார் - காதலியின் அப்பா, அண்ணன்
9. வில்லி - காதலியின் அக்கா
10. தேவதாஸ், ராஜேந்தர் - காதலில் தோற்றவர்
11. சரக்கு - வடிவான (அழகான) பெண்களை அழைக்கும் பொது வார்த்தை

சந்திக்கும் இடங்கள்
1. டியூசன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் நேரம்.
2. கோயில் திருவிழா காலங்கள்
3. காய் (பிகர்) வீட்டின் வெளிக் குந்தில் (திண்ணையில்) காத்திருக்க,
சைக்கிளில் மாம்ஸ் ரவுண்ட் அடிப்பார்.
4. பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்
5. கிடுகுவேலி மறைப்புக்கள்

குண அம்சங்கள்
நிறைய மனோ, சித்ரா ஜோடிப்பாடல்கள் கேட்டல் - அண்ணன் சந்தோசமா இருக்கிறார் எண்டு அர்த்தம்

இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை எண்டு அர்த்தம்

நிறைய ஆனைக்கோட்டை நல்லெண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.

தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.

Friday, April 11, 2008

Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!

Computer programmer காதல் கடிதம் எழுதினா எப்படியிருக்கும், இப்படி இருக்குமா?
யாரோ எழுதியது, பிடித்ததால் பகிர்கின்றேன்.

Wednesday, April 9, 2008

கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 1

பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள். வித்தியாசமான கற்பனையில் நகைச்சுவையான படைப்பாக இது இருக்கின்றது. யார் மனதையும் புண்படுத்தவல்ல. இந்த ஒலிவழி நகைச்சுவையின் முதற்பாகத்தை இங்கே பகிர்கின்றேன்.

Sunday, April 6, 2008

I am a tamil, I can speak tamil ;-)

வெளிநாட்டில் வளரும் இந்தத் தமிழ்ப்பையன் தமிழ் பேசுவாராம், தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் குழைத்துப் பாடுகிறார்.பாடல்: பூபாளம் இசைக்குழுவின் தமிழ் ரெகே.

Wednesday, April 2, 2008

Software engineers' Dream Girl - 100% ஜொள்ளு பதிவு

தாயகத்தில் இருந்த அந்தப் படிக்கிற வயசிலே நம்ம நண்பர்களோடு சேர்ந்து வாழாவெட்டி வாலிபர் சங்கம் அமைச்சு வெற்றிகரமா குட்டிச்சுவர் மாநாடு எல்லாம் செய்திருந்தோம். அந்தக் கதையெல்லாம் சொல்லப்போனா இன்னொரு "பாலைவனச் சோலை" படம் எடுத்தது மாதிரியாகிவிடும். அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போதைக்கு நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு மாத கெளரவப்பதவியில் அமர்த்தியிருக்கு. சங்கத்துக்கு ஒரு நன்றி போட்டு ஜொள்ளு, லொள்ளு, கலாய்ப்பு பதிவு மாதிரி ஏதாவது கொடுக்கலாம் என்றிருக்கின்றேன். சகிக்கக்கடவுது ;-)

முதல் பதிவே ஒரு புதிரோடு வருது. இந்தப் பதிவில் இருக்கும் அம்மணி ஒரு பிரபலத்தின் மகள், அந்தப் பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.

பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook
எனவே கேள்வி நேரம் மூடப்படுகின்றது ;)