Showing posts with label KRS. Show all posts
Showing posts with label KRS. Show all posts

Saturday, April 18, 2009

Wishes: ஹே ராம்! ராயல் ராம்!

* சங்கத்தின் சிங்கம்,
* மல்லியின் கில்லி,
* தென் மண்டல அமைப்பாளர் (என்னத்த அமைச்சார்?-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! அமைக்க வேண்டியதை அமைச்சாருப்பா),
* ஆட்டப்பயல் (அதாங்க ப்ளே பாய்)....

நம்ம ராயல் ராமுக்கு பொறந்த நாளுங்கோ! (Apr-19)

மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)

என்ன தான் வருசா வருசம், இவரோட ஆர்குட்டை வைச்சி டேமேஜ் பண்ணாலும், அந்த ரொமான்டிக் ஃப்ரொபைலை மட்டும் எக்காரணம் கொண்டும் மாத்த மாட்டேங்குறாரு! - எலே நீ தான்-டா சிங்கம்! :)

அதான் இந்த தபா, நாங்களே ராயலோட ஆர்க்குட் ஃப்ரொபைலை டோட்டலா மாத்த ஒரு முடீவு கட்டிட்டோம்!
என்சாய்! ஹாப்பி பர்த்தேடே ராமேய்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)



relationship status: committed...but single :)
அதாச்சும் அவங்க எனக்கு கமிட் ஆயிட்டாங்க! ஆனா நான் தான் இன்னும் கற்பைக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்! :)

birthday: April 19

age: 30-1

languages i speak: English (US), Tamil, Kannada....Recently Malay
மொழிப் பிரச்னையே கிடையாதுங்க! பாக்கவே நேரம் போதுலை! இதுல எதுல பேசினா என்ன? :)
ஆனா இங்கிலீபீஷ் மட்டும், நாம US-Englipeesh தான் பேசுவோம்! ஏன்னா அதுல தான் Grammar-யே கிடையாது! என்ன வேணும்ன்னாலும் பேசலாம்! :)

here for: girl friends, woman friends, auntie friends
இதுக்கு வெளக்கம் சொல்ல, தனியா பொஸ்தகம் தான் போடோணும்!

children: all children are my children
வேற ஒன்னும் இல்ல! ப"ற"ந்த மனசு! :)

ethnicity: asian
பின்ன, உன்னைப் பாத்து ஆப்ரிக்கன்-ன்னா சொல்லுவாங்க? அது என்னடா ஏசியன்? இந்தியன்-தமிழன்-ன்னு சொன்னா கொறைஞ்சி போயிருவியா?

religion: Agnostic
இது புது வரவு! Agnostic-னா என்னான்னு எனக்கு "கடவுள்" சத்தியமா தெரியாதுங்க! :)
சும்மா போட்டுக்கிட்டேன்! ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு எதுவும் இல்லியே? :)

தமிழ்-ல எழுதிப் பார்த்தேன் அக்கா-நாஸ்திக்-ன்னு வருது! எவன்டா அக்காவைப் பத்தி பேசுறது-ன்னு அரிவாளைத் தூக்கிட்டு கெளம்பிருவானுங்க! அதான்...அது இங்கிலீஷ்லயே இருக்கட்டும்!

humor: campy/cheesy, friendly
சத்தியமா இதுவும் என்னான்னு தெரியாதுங்கோ!
Campy = நான் ஃபிரெண்டு ரூம்லயே தான் எப்பவும் டேரா போடுவேன்! அது தான் Campஆ இருக்குமோ?
Cheesy = வெண்ணய் - அப்படிங்கறது எம்புட்டு டீசென்ட்டா இங்கிலீஷ்ல சொல்லுறாங்கப்பு?

fashion: alternative (மாற்று)
அதாச்சும் மாற்றுடையே இல்லாம, தினப்படி போட்ட ட்ரெஸ்ஸே தான் போடுவேன்! அது உள்ளாடையோ, வெளியாடையோ, மனுசனுக்கு ஆடை ரொம்ப முக்கியம்-ங்க! அதை மாத்தவே கூடாது! :)

smoking: no (from yesterday)
drinking: no (from tomorrow)
மொதல்ல இந்தா மாதிரி கேக்குறதைத் தூக்கணும்! சாதிப் பேரைக் கேட்டா எம்புட்டு தப்போ, அது போல இப்படிக் கேக்குறதும்! :)

pets: i love my pet(s)
ஆத்தி...எனக்குத் தெரிஞ்ச பெட்டு, எங்க வூட்டு பல்லி தாங்க!

living: together - with room-mate
ஆனா வாடகை மட்டும் அந்த "ஆன்ட்டியே" கொடுத்துப்பாய்ங்க!

hometown: madurai
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?

webpage: http://raamcm.blogspot.com
விருது வாங்கிய வலைப்பூ!

sports: ரம்மி, மூணு சீட்டு, மங்காத்தா
இதுக்கெல்லாம் யாரும் 20-20 நடத்த மாட்டாங்களா?

books: இன்னும் படிக்கணும்.
நான் படிக்கறா மாதிரி இன்னும் எவனுமே எழுதலை! என்னைத் தவிர! :)

music: A.R.Rahman
அவரு ஆஸ்கர் விருது வாங்கன பொறவு, இதைச் சேர்த்துக்கிட்டேன்! அவரு வாங்கினா என்ன, நான் வாங்கினா என்ன?

cuisines: "Amma" senchu kodukkira ethuvum..
அம்மா எலெக்சென்யும், கலெக்சென்லயும் பிசியோ பிசி! செஞ்சி எல்லாம் கொடுக்க மாட்டாங்க! வேணும்னா சின்னம்மாவைப் போயிக் கேளு! :)

email: raam.tamil@gmail.com, raam.kannada@gmail.com, raam.malay@gmail.com
ஹிஹி! பிகருக்கு ஏத்த மாதிரி இ-மெயிலு!

ஹே ராம்! ஹேய்...ராம்!!!

Monday, February 2, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா-வின் பிளாக்-காயணம் Part 2

ந.நா = நகைச்சுவை நாகேஷ்! குணச்சித்திரத் திலகமான மறைந்த நாகேஷ்-க்கு சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி! சிரிப்பஞ்சலியும் கூட!
பிளாக்-காயணம் - Part 1, மாதவிப் பந்தலில் துவங்கியது! இனி வரும் பகுதிகள், வ.வா. சங்கத்தில் தொடரும்! இதோ Part-2!


ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!
பாவனா என்ற ஆப்பிளைக் கண்ட மாத்திரத்தில், நம்ம இலங்கை மன்னன் காதல் மன்னன் ஆயிட்டான்-டா! கொடுங்கோலன் மனத்தில் செங்கோலி புகுந்துட்டா டா, புகுந்துட்டா!

இராவணப் பிரபாவின் வாயில் இருந்து, காதல் ரசம் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுது! இன்னிக்கு பெண்களூர் மாநகரத்தில் நாம பாக்குறோமே...பரந்து விரிந்த ஜொள்சூர் ஏரி! அது தோன்றக் காரணமானவன் இந்த இராவணப் பிரபா என்பது தல புராணம்!

அன்று பாவனா கடித்த ஆப்பிளின் விதை, பெரிய மரமா முளைச்சி நிப்பதை, இன்னிக்கும் ஜொள்சூர் ஏரியில் பார்க்கலாம்!
இந்த மரத்தில் அவிங்கவங்க பேரை வெள்ளியில் பொறிச்சி வைச்சா, உடனே காதல் கை கூடும்! அடுத்த தபா ஜொள்சூர் ஏரிக்குப் போனீங்கனா, பிரபா பேரைச் சொல்லிப் பொறிச்சிட்டு வாங்க மக்கா! :)

அண்ணலுக்குப் பாவனாவைப் புடிச்சிப் போச்சு! ஆனால் அவளுக்கு?
பிரபாவின் இதழோரமாக இருக்கும் ஒரு பெரிய மச்சத்தைப் பாத்துட்டா பாவனா! - மச்சம் பெண்களுக்கு இருந்தா அழகு! ஆனால் ஆண்களுக்கு இருந்தா பல தாரம் உண்டாமே? காம வெறி புடிச்சி அலைவாங்களாமே?
பாவனா பயப்படுகிறாள் - ஓக்கே சொல்லலாமா? வேணாமா? கன்ஃப்யூஷன்ஸ் ஆஃப் கானா பிரபா!


பிரபாவுடன் வந்த விபீஷ்-ஜிராவும் பாவனாவை லுக்குகிறார்! அண்ணன் இராவணப் பிரபாவின் மேல் முதல் முறையாகக் கோபம், பொறாமை எல்லாம் ஒன்னா வருது அவருக்கு! கறுவுகிறார்! பாவனாவின் வாய் தவறி வந்த ஆப்பிளை, "பேக்-பேக்கில் போட்டுக்கட்டுமா-ண்ணே?"-ன்னு, நைசாக லபக்கிக் கொள்கிறார் விபீஷ்-ஜீரா!


சபையில் இராமபிரான்-கேஆரெஸ்ஸும், இலக்குவ-சீவியாரும் அமர்ந்து இருக்கிறார்கள்! இருவருக்கும் மனசுக்குள் மத்தாப்பூ! அதே சமயம் சந்தேக சித்தாப்பூ!

கேஆரெஸ்: "டேய் தம்பி, லட்சுமணா! நீ அவளை பாத்தியா?"

சீவீஆர்: "டேய் அண்ணா, இராமா! நீ அவளைப் பாக்கலீயே?"

கேஆரெஸ்: "இல்லடா தம்பி! நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை! நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை!"

சீவீஆர்: "மரியாதை கெட்டுரும்! எந்த யுகத்துப் பாட்டை எப்போ பாடிக்கிட்டு இருக்கே? உன்னை நம்பித் தான்-டா அவ கிட்ட என்னை இழந்துட்டேன்! ஒழுங்கா அந்த பிளாக்கர் வில்லை வளைக்கப் பாரு! இல்லை.....
சிம்ப்ளி சீவீ-ஆரு, காம்ப்ளெக்ஸ் நம்பீ-ஆரா மாறிடுவேன்! ஆமா!"

கேஆரெஸ்: "சரிடா! சரிடா! கோச்சிக்காதே! கேர்ள்ஸ் ஆஃப் மிதிலா நமக்கே! இதோ எழுந்து போகிறேன்!"
(விஸ்வாமித்ர-கொத்தனார், தோளைப் பிடித்து அழுத்துகிறார்! உட்கார வைக்கறார்! "டேய், கேஆரெஸ், வேணாம்! வெயிட் மாடி!" )

கேஆரெஸ்: "ஏன் மகரிஷி?"

கொத்தனார்: "வெண்ணை! கேள்வி கேக்காதே! ஜஸ்ட் வெயிட்! இலவசம் சொன்னா ஈசனே சொன்னாப் போல!"

அங்கே.....பிளாக்கர் வில்லை வளைத்து வளைத்துக் களைத்து விட்டார்கள் பிளாக் தேச அரசர்கள்!
உம்ம்ம்.....ஒருவரும் பின்னூட்ட நாணை ஏத்தக் கூட முடியலை!
போலி ஆப்ஷன், அனானி ஆப்ஷன், ஓப்பன் ஐடி ஆப்ஷன்...ஹூஹூம்! ஒன்னும் வேலைக்கு ஆவலை!

இராவணப் பிரபா வருகிறார்! - பராக்! பராக்!! ஓபாமா!!!



யாருமே எடுக்க முடியாத பிளாக்கர் வில்லைக் கையில் எடுத்து விட்டார் தல! ஆகா! ஆகா! சபை வாய் பிளக்கிறது!

கேஆரெஸ் மெர்சல் ஆகிறார்! கொத்தன ரிஷியை கொன்னா தான் ஆத்திரம் அடங்கும் என்று துடிக்கிறான் சீவீயாரு!
இதோ...இலங்கை வேந்தன் பிரபா பின்னூட்ட நாண் ஏத்தறாரு! ஏத்தறாரு! இழுத்து ஏத்தறாரு!

விபீஷ்-ஜீரா: "அண்ணே, மண்டூ-அண்ணியை மனசுல நினைச்சிக்கிட்டு, நல்லா வளைச்சி இழுங்கண்ணே!"

இராவண-பிரபாவுக்கு "அண்ணி"-ன்னு பேரைக் கேட்ட மாத்திரத்தில் தூக்கி வாரிப் போடுது! தூக்கிய வில்லு தொளதொளக்குது! தோளு குளுகுளுக்குது!
"ஐயோ அவளா? கட்டாந் தரையில கப்பல் ஓட்டுவாளே! பாறாங் கல்லுல பரிசல் ஓட்டுவாளே! பரிசல்காரீ!" - பரிசல் பேரைக் கேட்ட மாத்திரத்தில் பிரபா, பேயடிச்சாப் போல ஆயிட்டாரு! :)

அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!

போன ஜென்மத்தில் இந்த ரிஷான்-சித்து ஒரு அங்க்கிளானந்தா! பூவுலக ரம்பையான சில்க் ஸ்மிதா, இவரைப் பார்த்து "அங்க்கிள்"-ன்னு கூப்பிட்டாங்களா? அதிலிருந்து மனமொடிந்து போய், கர்மா தீராமல்...இப்படிப் பாக்குறவங்களை எல்லாம் அங்க்கிள் அங்க்கிள் என்று அழைக்கும் பூர்வ ஜென்ம வாசனை! :)

ரிஷான்-சித்து: "டாடி, மாடத்தில் இருக்கும் நாலு பேர்ல, யாரை நான் சித்தீதீதீ-ன்னு கூப்பிடணும்?"

அம்பி-ஜனகன்: "வாட்? பிரபா? உங்களுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆயிருச்சா? சொல்லவே இல்ல?"

இராவணப் பிரபா, கோபத்துடன் ஒரு முறை முறைக்கிறார்! ச்சே...கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமப் போச்சே! தலை கவிழ்ந்து போய் 108.3 FM-இல் உட்காருகிறார்!


விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான் சரியான நேரம்! கேஆரெஸ்! வெற்றி உனதே! போய் பிளாக்கர் வில்லை வளை!"

கேஆரெஸ்: "தங்கள் ஆணை குருதேவா!"

எடுத்தது கண்டார்! இற்றது கேட்டார்!
பிளாக்கர் வில்லை இதற்கு முன்பே பல பேர்கள் வளைத்து வளைத்து அதை லூசாக்கி விட்டார்கள்! போதாக்குறைக்கு இராவணப் பிரபா வேற பின்னூட்ட நாணை நல்லா ஏத்திட்டான்! கேஆரெஸ் தொட்ட மாத்திரத்தில் வில் வளைந்து பொடிப் பொடி ஆகிறது!

ஜய விஜயீ பவ! ஜய விஜயீ பவ! வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே!

விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான்டா பி.க! பின்னூட்ட கயமைத்தனம்!
எப்படி....இந்தக் கொத்தன ரிஷியின் திட்டம்? ஆன்மீகப் பதிவு போட்டா மட்டும் போறாது கேஆரெஸ்! அப்பப்ப மொக்கையும் போட்டாத் தான் வில்லு மொக்கையாகும் அறிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோ!"

தமன்னா உடன் வர....பாவனா....மாடிப்படிகளில் இருந்து ஓடோடி வருகிறாள்! கைகளில் மலர்மாலை! பூமாரி பொழிகிறது! அ...த்...தா...ன்!

எதிர்ப்புக் குரல்: "நில்லு தங்கச்சி, நில்லு! "
எக்கோ: "நில்லு தங்கச்சி, நில்லு!"

சீவீஆர்: நான்சென்ஸ்! பூமாரி பொழியும் வேளையில் சோமாரி? யார் அவன்?

அங்கே......பாவனா சிஸ்டர்ஸ்-இன் பாசமிகு உடன் பிறப்புக்கள், போர்வாள் தேவ் & ராயல் ராம்!

கேஆரெஸ்: "எதுக்கு பாவனா நிக்கணும்? அவள் எனக்கு மாலையிட்ட மங்கை!"

ராயல்: "எங்களுக்கு தண்ணியிட்ட தங்கை!"
தேவ்: "ப்ளாக் லேபில் இட்ட சிங்கை!"

ராயல்: "மாலையிடும் முன் சில கண்டிஷன்ஸ் இருக்கு! சொல்றோம் கேளு இராமச்சந்திரா!"

தேவ்: "கண்டிஷன் நம்பர்#1 - தங்கச்சி பாவனா இப்போ மாலை மட்டுமே இடுவாள்! ஆறு மாசம் லிவிங் டுகெதர்! அப்பறம் பிடிச்சிருந்தா தான் கல்யாணம்!"

கேஆரெஸ்: "ஓ மை காட்! வாட் யூ கைஸ் ஆர் டாக்கிங்?"

ராயல்: "இந்தப் பீட்டர் எல்லாம் பிட்ஸ்பர்க்கோட வச்சிக்கோ! இது கன்னட நாடு! கொத்தில்லா?"
தேவ்: "ஆமாம்! கொத்திறலாம்! கொத்திறலாம்! கொத்தன ரிஷி-ன்னு ஒருத்தனைக் கூடவே கூட்டியாந்து இருக்காங்களே! கொத்தில்லாம், கொத்தில்லாம்"

ராயல்: "கண்டிஷன் நம்பர்#2 - இன்னிக்கே நீங்க நாலு சகோதரர்களும், தாய்லாந்து காடுகளுக்கு வனவாச ஹனிமூன் போகணும்! ஆனா, கூட நாங்களும் வருவோம்!
ஏன்னா, ஏன்னா....எனக்கு தாய்லாந்து போக ரொம்ப நாள் ஆசை! அங்கே பல விஷயம் பண்ணனும்-ன்னு எனக்கு ரெம்ப நாளா ஆசை!" :)

கேஆரெஸ்: "அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் வந்தா அது ஹனிமூன் இல்லடா! மெனி மூன்!"

தேவ்: "டேய் கேஆரெஸ்! இந்தச் சொல்லின் செல்வர் எல்லாம் பந்தலோட வச்சிக்கோ! கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா மாலை! இல்லீன்னா சங்கு! எது வேணும் உனக்கு?"

கேஆரெஸ் இராமன் அரை மனதாகச் சம்மதிக்க......, பாவனா லிவிங் வைபோகமே! கேஆரெஸ் லிவிங் வைபோகமே!
மற்ற தம்பிகள் எல்லாம் மின்னல் வேகத்தில் அரச மீனவன் (கிங் பிஷ்ஷர்) விமானத்தில் வந்து சேர...

"நிறுத்துங்கள் கல்யாணத்தை!"


தேவ்: "எவ அவ?"

பரசுராமன்-அபி அப்பா: "நான் தான்டா! மாய வரம் கொடுக்கும் மாயவர முனிவன்! இந்த கேஆரெஸ் ராமனுக்கும் முன்பே நான் ஒரு மூத்த ஆன்மீகப் பதிவன்! பேரு பரசுராமன்!"

ராயல்: "இவனுங்கள யாருப்பா உள்ள விட்டது? லஞ்ச் டைம் ஆனாப் போதுமே! பெர்மிஷன் போட்டுட்டு, கல்யாண மண்டபம் மண்டபமாச் சுத்துவாங்களே!"

அபி அப்பா: "மூடு வாயை! பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக பிளாக்கரை வளைத்தவன் நான் தான்! மொத்தம் 9999 பின்னூட்டம்! 999 ஃபாலோயர்ஸ்! பாவனா எனக்கே!

தேவ்: "அடங் கொய்யால! அந்தப் பொண்ணுக்கு நீ பெரியப்பா மாதிரி! உனக்கு பாவனா கேக்குதா? குஷ்பூ ஆன்ட்டி கூட உனக்குச் சரிப்பட மாட்டாங்க! கெட் அவுட்!"

அபி அப்பா: "இராமச்சந்திரா! நீ தர்மம் தெரிந்தவன்! நீ கெட்-அவுட் சொல்! நான் போகிறேன்!"

கேஆரெஸ்: "அட, பரசுராமா! இது வெறும் லிவிங் டுகெதர் தான்! கண்ணாலம் இப்போ இல்ல! நீங்க கல்யாணத்தின் போது தான் வம்பு இழுக்கணும்! எதையுமே அரைகுறையாக் கேட்டு, அரைகுறையாப் பண்ணுறதே பொழைப்பா போச்சு உமக்கு! சரி, இது லிவிங் டுகெதர்-ன்னு நம்ம ஊர் முழுக்கப் போய்ச் சொல்லி வைக்காதீங்க! இது பரம ரகசியம்! சரியா?"

அபி அப்பா: "சரி, கேஆரெஸ்! தங்கள் சித்தம், என் சிதம்பரம்!"
(ஜி-டாக்கில் லாகின் பண்ணி, முதலில் மாட்டிய நண்பரிடம்: "லிவிங் டுகெதர்-ன்னு யார் கிட்டயும் சொல்லிறாதப்பா! சரியா? ஹிஹி! இந்த அபி அப்பா வாயில் இருந்து ஒருத்தனும் ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாது! தெரிஞ்சிக்கோங்க!" :))


ஆகா...என்ன அற்புதக் கல்யாணக் காட்சி! மொய் எழுதுங்க மக்கா.....மொய் எழுதுங்க! :)
* ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! ரவி-ராமன் மணமகன் ஆனானே! பாவனா மணமகள் ஆனாளே!
* வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்! பதிவருக்கும் திரட்டிக்கும் ஆனந்தம்!!

* சத்ருக்கன-கப்பி பய வித் சுருதகீர்த்தி-தமன்னா
* இலக்குவ-சீவீஆர் வித் ஊர்மிளா-இலியானா
* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி
(உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)
* இராமபிரான்-கேஆரெஸ் வித் சீதா-பாவனா....

சீவிஆர்: வாங்க, வாங்க! போட்டோ செஷன் ப்ளீஸ்! ஆல் ஆப்ஜக்ட்ஸ், ப்ளீஸ் அலைன் யுவர்செல்ப்! அக்கார்டிங் டு Rule-Of-Thirds!
கப்பி: அடப்பாவி சீவீஆரு! நீ இன்னும் இலியானாவுக்கு மாலையே போடலையா??? மவனே! மாலையைப் போடுறா மாங்கா! :)

இலியானா குனிந்த தலை நிமிராமல்...இராமனை நோக்கி வர...
கேஆரெஸ்: "ஆங்ங்....எனக்கில்லைமா...தம்பி காமிராவும் கையுமா அங்கிட்டு நிக்குறான் பாரு! சாரி! எனக்கு எப்பமே ஒரு இல்! ஒரு வில்! ஒரு ஜொள்!" :)


தம்பதிகள் அன்றே தாய்லாந்த் காடுகளில்.....மிகவும் எளிமையான ஹனிமூன் குடிசைகளில்.....ஆனால், பூஜை வேளையில் கரடிகளாக இந்த மாமா-மச்சான் கூட்டணி, தேவ்-ராயல் கூட்டணி!

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா வா! முதலிரவுக்கு........எல்லா அலங்காரங்களும் ஏற்பாடாக....

ஆனா அப்போன்னு பாத்து....ஒரு ரூமில் இருந்து மட்டும்...குவா....குவா....குவா....

ராயல்: ஆகா...என்ன இது குழந்தை அழுவுற சத்தம்? இன்னும் முதலிரவே துவங்கலயே?
தேவ்: என்ன சத்தம் இந்த நேரம்? குவா-வா? குவா-வா?

"கொஞ்சம் மூடறியா?"-ன்னு ராயல், தேவ்-ஐ ஒரு முறை முறைக்க...
எந்த ரூமில் இருந்து சத்தம் வருது-ன்னு எல்லாரும் ஓடியே வந்து பார்க்க....
குவா குவா சத்தம் இஸ் கமிங் ஃபரம் வெட்டி-பரதன்ஸ் ரூம்...* www.vettipayal.com *

(தொடரும்.....)

Friday, January 16, 2009

சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 01:
இளமுருகு என்றும் விவ+சாயி என்றும் அறியப்படும்
சங்கத்தின் "சிங்கம்", "மாட்டுப்" பொங்கலில் பிறந்தது ஏன்?

"கேல்வி" நம்பர் 02:
ஒரு தென்றல் புயலாகும்! ஒரு சிங்கம் மாடு ஆகுமா? :)


"கேல்வி" நம்பர் 03:
பொங்கல் தினத்தைப் புத்தாண்டு என்று மாற்றி வெற்றி கண்டது போல்...
மாட்டுப் பொங்கலை, இனி, சிங்கப் பொங்கல் என்று தமிழக அரசு மாற்றுமா?

"கேல்வி" நம்பர் 04:
* அந்தப் "புரட்சி" இன்றே நடக்க, அனைவரும் கீழே விண்ணப்பத்தில் கையெழுத்து போடுவீங்களா?
* இல்லை வெட்டி பாணியில், சும்மா கை-நனைச்சிட்டும் போகலாம்!(கை நனைப்பதற்கென்றே, தண்ணி பேரல், அமெரிக்காவின் சிகாக்கஸ் மாநகரில், இன்னிக்கி ஸ்பெசலாகக் காய்ச்சப்படுகிறதாம்!)


குறிப்பு நம்பர் 05:
ஒரு சிங்கம் என்ன தான் மாடானாலும்...சிங்கம் பிறந்தது என்னவோ Jan-16 தான்! (இன்னிக்கு)
ஆனாப் பாருங்க, அது பொறந்த "அந்த" வருடத்தில் மட்டும், ஏனோ மாட்டுப் பொங்கல், அன்னிக்கே வந்து விட்டது!

இது சங்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய விடயம்! மீதிப் பொறியலை எல்லாம் நீங்களே பொறிச்சிக்குங்க மக்கா!!

விவ.....சாயி.....
போலி பொறந்த நாளா இல்லாம.....

இனிய, "உண்மையான" பொறந்த நாள் வாழ்த்துக்கள்! :))


Kid Friendly Section:
ஒரு சிங்கம் மாடான கதை! (குழந்தைகளே, படம் பார்த்துக் கதை சொல்லவும்:)

===>===>

Monday, December 15, 2008

ஊழல் பதிவர் தேவ் - சில பகிரங்கக் கேள்விகள்!

ஜங்கத்தின் ஜிங்கம், சங்கப் போர்வெல்...ச்சே போர்வாள், அண்ணன் தேவ்-க்கு சில பகிரங்கக் கேள்விகள்!

1. எப்போ வருவார், எப்படி வருவார்-ன்னு தெரியாத தலைவர் கூட எந்திரன் பட ஷூட்டிங்கைத் தொடங்கிட்டாரு! ஆனால் பல படங்களுக்குப் பூஜை போட்டு, பேமன்ட்டை மட்டும் லம்ப்பா வாங்கிய நீங்க, இப்போ "தலைமறைவா" என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க?

2. அத்தனை படத்தின் கதாநாயகிகளையும் அவர்கள் அம்மாக்களையும் அப்பவே புக் பண்ண நீங்க, ஏன் இன்னும் கதாநாயகர்களையும் அவர்கள் அப்பாக்களையும் புக் பண்ணாம இருக்கீங்க?

3. போன மாசம் அந்தக் கதாநாயகிகளில் இரண்டு பேர், தங்கள் சீமந்தப் பத்திரிகையவே சங்கத்துக்கு அனுப்பி இருக்காங்க!
இதைப் பார்த்துட்டு மனமொடிந்து போன தளபதி சிபி, சங்கத்தின் 22ஆம் மாடியில் இருந்து தற்கொலை செஞ்சுக்கப் பாத்தாரு!
ஆனா ஆஸ்பத்திரியில் இருந்த சிபிக்கு, ஒரு சாத்துக்குடிப் பழம் கூட நீங்க அனுப்பி வைக்காததன் காரணம் என்ன?

4.
* விசாவதாரம்,
* பாபாகன்,
* ஷூ லேசு,ப்ரெளன் சாக்சு,
* அஞ்சரைக்குள்ள வண்டியிலே ராம்
* வெள்ளை மாளிகை 305-இல் கேஆரெஸ்,
* பதிவர் ஜிராவின் அவனோட ராவுகள்,
- இது போன்ற ஒலகத் தரம் வாய்ந்த படங்களுக்கு போட்ட ஒப்பந்தத்தின் கதி என்ன ஆச்சு?

5. சங்கத்தின் என்றும் பதினாறான எங்கள் ராயலை இந்தியாவில் இருந்து இந்தோனிஷியாவுக்கு ஏன் நாடு கடத்தினீங்க? அவன் செய்த குற்றம் தான் என்ன?

6. நீங்க வேலூர் ஜெயிலில் இருந்த போது, உங்க சார்பா பதிவு போட்ட CHINNA BOSS, உங்க வாரிசா? பினாமியா? போலியா?

7. சுட்டி விகடனில் வந்த உங்க "ஜொள்ளுப் பேட்டை"க்கு, சென்சாரில் முறையான அனுமதி வாங்கினீங்களா?

8. கோவியின் நாடக சபா-ன்னு நீங்க பதிவு போட்ட ஒரே காரணத்தால், பதிவர் கோவி.கண்ணன் இன்று விளிம்பு நிலைப் பதிவர் ஆகி விட்டார்!
கண்ட விவசாயிகளும் அவருக்கு Blog-O-Graphy போட்டு Mammo-graphy செய்யறாங்க!

விளிம்பு நிலைப் பதிவர், கோவி. கண்ணனின் மறு வாழ்வுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

9. முன்னாள் அட்லாஸ் சிங்கங்களான
* ரிஷான் ஷெரீப்,
* இச்-சின்னப்பையன்,
* ஆயில்யன்,
* கானா பிரபா
என்ற நால்வர் கூட்டணி, உங்க கிட்ட சங்கத்தை விலை பேசறாங்களாமே? அது உண்மையா?

10. சங்கத்தின் ரெண்டு போட்டியை, எதுக்கு மூன்றில் நடத்துனீங்க?
நீங்க "அதுல" மட்டும் தானே வீக்கு? கணக்குலயுமா வீக்கு?


மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் தேவ் அண்ணாத்த மட்டுமே பதில் சொல்லணும்-னு அவசியம் இல்லை! அவர் சார்பா யார் வேணும்னாலும் பதில் சொல்லலாம்!
குறிப்பா, அனானி பதில்களுக்கு அதிக மதிப்பெண்கள் உண்டு-ன்னு சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்! :)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தேவ், இங்கு வரும் தவறான பதில்களைத் திருத்தலாம்! தன் தரப்பு பதிலைத் தாராளமாகச் சொல்லலாம்! அதற்கான முழு உரிமையும் அவருக்கு கொடுக்கிறோம்!

தேவ் அண்ணனின் ஊழலை எதிர்த்து, தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தார்மீகக் கடமையாத்தணும்-ன்னு சங்கத்துச் சிங்கங்களின் சார்பாக கர்ஜித்து அமைகிறேன்!
2009-இல் சங்கம் மந்திரிசபையின் விஸ்தரிப்புக்கு இதெல்லாம் உதவும்!

தேவ் "நாமம்" வாழ்க!
நன்றி! வணக்கம்!
(மற்ற சிங்கங்களின் மேலும் கேள்விகள்/வேள்விகள் தொடரும்...
இப்படிக்கு ஆண்மீகப் பதிவர், கேஆரெஸ்)

Wednesday, June 4, 2008

வவாச-ல அட்லாஸ் ஆகணுமா? காதலிக்கணும்! கவுஜ எழுதணும்!

"சங்கத்தில் ஜில்லுனு ஒரு காதல் சுயம்வரம் நடக்கப் போவுது! எங்கே மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலும் அதை எல்லாம் நிறுத்திட்டு, சிங்கங்கள் உடனடியாக சங்க ஆபிசுக்கு வந்து சேரவும்!
சிபியாகப்பட்டவர், கையோடு அந்த ராயலைக் கூட்டிக்கிட்டு வரவும்!"

தல கைப்பு இப்படி ஒரு சுற்றறிக்கையை, எஸ்.எம்.எஸ்-ல எல்லாருக்கும் அனுப்பிச்சி இருந்ததைப் பார்த்து சிங்கங்களுக்கு எல்லாம் ஒரே ரென்சன்! அதுவும் காதல் சுயம்வரம்! அதுக்கு ராயலைக் கையோட இஸ்துக்கினு வரச் சொல்லி இருக்காருன்னா, இதுல ஏதோ விசயம் இருக்கு டோய்!

IPL Twenty20ல சென்னை கிங்க்ஸ் ஆப்பு வாங்குன சோகத்துல இருந்தாரு தேவ் அண்ணாத்த! அவரு கிட்ட போயி இளா வம்பு பண்ணக்கூடிய நேரமா இது? ஈர வெங்காயம் பத்திக்கிட்டு எரியாதா என்ன? இது தெரியாம இந்த இளா...

இளா: அண்ணே ஒரு கிங் ப்ளேக் இருந்தா கொடுங்கண்ணே!

தேவ்: டேய்! நானே சென்னை கிங்கு எல்லாம் ப்ளேக்கான சோகத்துல இருக்கேன்! வந்துட்டான் கிங் ப்ளேக், குயின் ப்ளேக்குன்னு! சென்னைக் கிங்க்ஸை வச்சி, சென்னைக் கச்சேரில என்னென்னமோ பண்ணத் திட்டம் போட்டிருந்தேன்! எல்லாம் போச்சி!

இளா: அட! ஏண்ணே சலிச்சிக்கிறீங்க? IPL இல்லீன்னா இருக்கவே இருக்கு OPL, OPML! ஈர வெங்காயம்...விட்டுத் தள்ளுவீங்களா!

தேவ்: ஆமாண்டா! ஈர வெங்காயம், ஈரப் பூண்டு, ஈரப் பட்டை, ஈர லவங்கம்! இங்க என்ன பிரியாணியா போடுறோம்? தல கைப்போட மெசேஜ் பாத்தல்ல? என்னா சுயம்வரம் அது? உனக்கு ஏதாச்சும் விசயம் தெரியுமா?

இளா: தல இப்பிடி எல்லாம் தைரியமா சுயம்வரம் நடத்தறாரு-ன்னா இதுல ஏதோ விசயம் இருக்கு அண்ணாச்சி! அப்படி சுயம்வரம் வச்சா அதுல கலந்துக்க Eligible Bachelors வேணுமே! நம்ம சங்கத்துல யாரெல்லாம் அண்ணாச்சி தேறுவாங்க?

தேவ்: அதானே, இந்தக் கேயாரெஸ்ஸும், கப்பியும் தானே இருக்காங்க! எதுக்கு தல ராயலைக் கூட்டியாரச் சொன்னாரு? சரி வா, சங்க ஆபீஸ் பக்கம் போயாருவோம்!
வழியில காபி டே பாத்தீனா நிறுத்து டே! ஒரு சிக்கன் க்ராய்சண்ட் கடிச்சிக்கலாம்! தல இப்பல்லாம் மீட்டிங்குல சட்னி வடை கூட காட்டுறதில்ல!


சங்க அலுவலகத்தில் வவாசவின் நால்வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்குது!
எங்க பார்த்தாலும் இளம் பெண்களின் கூட்டம் தான்! ஜீன்ஸ், சுடிதார், மேக்சி, லோ-கட், ஃப்ளிப் ப்ளாப்-னு ஒரே இளமையின் திருவிழா!
அந்த ஆழிப் பேரலையில் புகுந்து, ஒரு வழியா நீந்திக் கரை சேரறாங்க தளபதி சிபியும், கையோடு கூட்டியாந்த ராயலும்!
சங்க ஆபிசுக்கு நயன்தரா வந்தபோது கூட இம்புட்டு கூட்டம் கூடி இருக்குமான்னு தெரியாது!

ராயல்: என்ன நடக்குது இங்க? இப்பிடி இத்தினி ஃபிகரும் ஒன்னா கெளம்பி வந்தா எப்பிடி? எப்பிடி எப்பிடி நான் SLR-ல ஃபோட்டோ புடிக்கிறதாம்?
இந்தத் தலைக்குக் கொஞ்சம் கூட வெவரனையே இல்ல! தனித்தனியா அத்தினி பேரையும் இன்டர்வியூக்கு கூப்பிட்டிருக்கக் கூடாது? ரூம் போட்டு ஃபோட்டோ புடிச்சிருக்கலாம்-ல?

சிபி: அடங்கு ராசா அடங்கு! இப்ப தான் சங்கமே தங்கமா மின்னுது!
தல-யின் இந்தச் சூப்பர் ஐடியாவுக்காக நான் அவருக்கு ஏலக்கா மாலை போடப் போறேன்!
டேய்...அங்க பாரு மக்கா...ஆபீஸ் மொட்டை மாடியில....நம்ம தலயா அது?

தலயின் தலயில் கோல்டன் ஹேர்டை, கூலிங்கிளாஸ், ரிவிர்சிபிள் டீ ஷர்ட், பெர்மூடா, சென்னை வெயிலுக்கு ஏத்தா மாதிரி ஒரு ரேஞ்சான கெட்டப்புல தல!
கூடவே நாலு black cat! புதுசா ஜெயிச்சி வந்த கட்சித் தலைவர் கணக்கா ஒரு கம்பீரம்! மைக்கைப் புடிக்கறாரு தல!


"மக்கள்ஸ் & ஃபிகர்ஸ்...குட் மார்னிங் டு யூ ஆல்!
சங்கத்து சுயம்வரம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போவுது! போட்டில ஜெயிக்கப் போற பொண்ணு கழுத்துல...இதோ...இந்தச் சிங்கம் மாலை சூட்டுவாரு!

மங்கையர் மனங்கவர் மணவாளன் இவரு! ஜிடாக்கில் பேஸ் மாட்டாரு! ஒன்லி கவுஜ வாசிப்பாரு! திண்ணை, கீற்று, வார்ப்பு-ன்னு எல்லா எடத்துலயும் கதை கவுஜ கவுஜ மட்டுமே வாசிப்பாரு!
அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!
ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணியே, வாங்கோ, வாங்கோ....."

கையோடு கூட்டி வரப்பட்ட ராயல், மனசுல பல பட்டர்ஃபளைக்கள் பறக்க, ஆசை ஆசையா...அவசரம் அவசரமா...முன்னேற...
ஓ மை காட்! ராயலுக்கும் முன்னாடி வேற யாரோ ஒருவன்! கையில் சுயம்வர மாலையுடன்!
ஹிஹி...
ஜூன் மாத அட்லாஸ் சிங்கமே! காதல் கவிஞரே! இலங்கை மாவனல்லை நகரத்து மேயரே! ரிஷான் ஷெரீப்! வாங்க! வாங்க!!

Thursday, November 15, 2007

மணப்பயலே வெட்டிப்பயலே, வா வா!

நவம்பர் 15, 2007.....காலை 9:00-10:30.....
மண்டபத்துக்குள்ள கல்யாண மாப்பிள்ளை ரொம்பவே கூச்சப்பட்டு என்ட்ரி கொடுத்துக்கினு இருந்தாரு! முகமெல்லாம் பவுடரும் மேக்கப்பும் போட்டு, பச்சைத் தமிழனை வெள்ளைத் தமிழன் ஆக்கி வெச்சிருந்தாங்க, சிவாஜி ஸ்டைலில்!

பட்டு வேட்டி, பட்டுச் சொக்கா பரபரக்க,
மல்லிப்பூ மாலையும் கழுத்துமாய், கைகளிலும் மல்லிப்பூ சுத்தி.
வெட்டிப்பயல், மைனர் பயல் ரேஞ்சுக்கு இருந்தாரு!!

வாழைமரம், பந்தல் எல்லாம் எங்கூரு வாழைப்பந்தல்-ல இருந்து போச்சுதாம்முல்ல!
மாப்பு முன்னரே சொல்லி வச்சிருந்தபடி, லவுட் ஸ்பீக்கரில் தெலுங்கு படக் குத்துப்பாட்டு மட்டுமே ஓட்டிக் கொண்டிருந்தார்கள்!
ரா, ரா...வெட்டி பெள்ளிக்கு ரா ரா!ன்னு தலைவர் ரஜினியே பாடி வரவேற்றுக் கொண்டிருந்தார்!

கள்ளக்குறிச்சியில கள்ளழகர் எறங்குன கதையா, VAS கல்யாண மண்டபத்துக்குள்ள நுழைஞ்சாரு நம்ம மாப்பு!
மணமகனே வெட்டிமகனே வா வா!
வலதுகாலை எடுத்துவச்சி வா வா!
குணமகனே கொல்ட்டி மகனே வா வா!
தமிழ்ப்பதிவு வாசல் தொறந்து வச்சோம் வா வா!
-ன்னு தாய்க்குலங்கள் எல்லாம் கோரஸ் பாட,
கூடவே ஏக பில்டப்பு கொடுத்துக்குனு, சங்கத்துச் சிங்கங்கள் புடை சூழ, சிரிச்சி சிரிச்சி வந்தாரு மாப்பு!

மாப்பிள்ளை மண்டபத்துல தனியா உட்காரந்திருந்தாரு! பொண்ணுக்கு இன்னும் அலங்காரம் முடியலையாம்! - வெட்டீஸ் நீ வெயிட்டீஸ்!
ச்சே......இந்த வேஷ்டி வேற இடுப்புல சரியா நிக்க மாட்டங்குது! மாப்புக்கு செம டென்சன்! இருக்காதா பின்ன? மானப் பிரச்னையாச்சே! :-)

வெட்டிக்கு எதுக்குடா வேட்டி? அதான் பேர்-லயே வெட்டி-ன்னு இருக்கே!
அத கால் வாங்கி, வேட்டி ஆக்கிடுன்னு நம்ம ராயல் ராமு வச்சாரு பாருங்க மொத மொய்யை! - அதக் கேட்டு தூறல் எழுதனவரு ஒரு தூறு தூறினாரு!
அவ்ளோ தான்! மாப்புள்ள முறுக்கு-ன்னு சும்மாவா?

மாப்புள்ள, கைப்புள்ள ன்னு அத்தினி பேரும் ஒரு மொறை மொறைக்க, எங்கிருந்தோ வந்தது, மயில்கண் பார்டர் போட்ட ஒரு பட்டு ஜீன்சு!
மாப்பிள்ளை வொயிட் ஜீன்சுக்குத் தாவி,
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் ஜீன்ஸு
ன்னு தன் மானத்தைக் காப்பாத்திக்கிட்டாரு! :-)

ஆகா...இப்போ எதுக்கு இத்தினி பொண்ணுங்க ஓடியாறாங்க?
ஓ நலங்கா?...
அட என்னங்க மாப்பு, இம்புட்டு நெளி நெளியறீங்க?
எத்தனை பேரைக் கேள்வி கேட்டே நெளிய வச்சிருப்பீங்க! லவ்ஸ்டோரி லபக்குதாஸ்-ன்ன்னு பேரு வாங்கிட்டு, இப்படி நெளியலாமா?

அது இல்லீங்க தலைவா...இந்தச் சின்னப் பொண்ணுங்க நலங்கு வைக்கறேன் பேர்வழி-ன்னு, சந்தனம் எல்லாம் என் கன்னத்துல பூசுதுங்க!
ஒரே டச்சிங்! டச்சிங்!! - ஐ டோண்ட் லைக் தட்! யூ சீ!
என் orkut profile-ல்லயே நான் "committed" ன்னு ஸ்டேடஸ் சேஞ்ச் பண்ணிட்டேன் மேன்!

அடங் கொக்க மக்கா! - இது நம்ம கப்பி!
தலைவா, அப்ப நான் வேணும்னா ஒங்களுக்குப் பதில் நலங்கு வச்சிக்கவா? அண்ணனுக்கு வச்சா என்ன? தம்பிக்கு வச்சா என்ன? - இது அன்புத் தம்பி சீவீஆரு!

டேய் ஓவர் சூடு, ஒடம்புக்கு ஆவாது! - இது தேவ்
மவனே, இங்கயுமா அடங்க மாட்டங்கறே, இந்தாப் பாரு கலப்பை, மண் "வெட்டி" - இது விவசாயி

அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா
இவ்வளவு சந்தடியிலும், கல்யாணத்துக்கு வந்த பிகர்களுக்கு மட்டும், சாக்லேட் காபி கொடுத்துக் கொண்டிருந்த தம்பி அண்ணா!
காபிய இப்படியா ஆற வச்சுக் கொடுப்பாங்க? சூடாக் கொடுறா சுள்ளா - இது சூடான் புலி!

கல்யாணத்துல மணமக்களுக்குத் திருக்குறள் ஒன்னு சொல்லுங்கப்பா!
ஜொள்ளுக ஜொள்ளை பிறிதோர் ஜொள் - அஜ்ஜொள்ளை
வெல்லுஞ்ஜொள் இன்மை அறிந்து

- இது ஜொள்ளுப்பாண்டி!

தல கைப்புவும், தளபதி சிபியும் மட்டும் கருமமே கண்ணாக....கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள் - காலை டிபன் பந்தியில் மொத சீட்!
ஒரு மெதுவடைக்கு ஒரு பக்கெட் சாம்பார் காலி ஆயிருச்சு! :-))




திடீர்னு....ஒரே சத்தம்!
வெட்டி மேளம்! வெட்டி மேளம்!! - சாரி
கெட்டி மேளம்! கெட்டி மேளம்!!

டம, டம, டம, டம, டும், டும், டும்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

- இது, யாரு சொன்னாங்கன்னு ஒங்களுக்கே தெரியும் :-)
அப்படியும் தெரியலீன்னா, இருக்கவே இருக்கு பின்னூட்டத்துல கேட்டுக்கோங்கோவ்!

வெட்டி கல்யாண வைபோகமே!

பின்னூட்ட அட்சதையத் தூவி,

வாழ்த்துங்க மக்கா!


டும், டும், டும், டும், டும், டும், டும், டும், டும்!



சார் லேட்டா வந்துட்டீங்களா! பரவாயில்லை வாங்க. அட அங்கிட்டு எங்க போறீக?
Newly Weds - Dont Disturb-ங்கிற போர்டை, அமெரிக்காவுல இருந்து இதுக்குன்னே ஸ்பெசலா வாங்கினு வந்துருக்காராம், மாப்பிள்ளை!

கல்யாணம் முடிஞ்ச கையோட, அந்த ஐயரைக் கூட, புராணத்துல கங்கைக்குப் புருசன் யாருன்னு, எடுக்கு மடக்கா கேள்வி கேட்டு, விரட்டிப்புட்டாராமுல்ல?
நாம வாங்க பந்திக்குப் போகலாம்! பந்தி மாஸ்டர் ஜிராகவன் மெசேஜ் அனுப்பிச்சிருக்காரு!

முந்திரிப் பக்கோடாவும், தயிர் வடையும், பூசணி அல்வாவும் அப்படியே மிதக்குதாம்!

கைய நனைச்சிட்டுப் போங்க-ன்னு பதிவுல வெட்டியாச் சொல்லி இருப்பாரு, கமெண்ட் பாக்ஸுல! - ஆனாப் பாருங்க, அப்பல்லாம் கைய நனைக்க ஒன்னுமே தரல!
ஆனா இப்ப...வாங்க!

நெசமாலுமே கைய நனைச்சிட்டுப் போவோம்! - அலோ, சாருக்கு ரெண்டு முந்திரி பக்கோடா எக்ஸ்ட்ரா வைங்கப்பா!

கல்யாண சமையல் சாதம்!
காய் கறிகளும் பிரமாதம்!!
இது வெட்டி வரப் பிரசாதம்!!!
இதுவே பதிவுக்குப் போதும்!!!!
ஹா ஹாஹ்ஹ ஹாஹ்ஹ ஹாஹ்ஹா! ஹா ஹாஹ்ஹ ஹாஹ்ஹ ஹா!

பதிவு: KRS

Friday, August 31, 2007

வ.வா.சங்கத்துக்குப் போட்டியா ச.சா.சங்கம்!

தங்கங்களே! நாளைய தலைவர்களே!
தங்கங்களே! சங்கத்துச் சிங்கங்களே!
அட்லாஸ் மாசம் இன்னியோட முடியுது! உத்தரவு வாங்கிக்கறேன்!

எனக்கு பள்ளிக் கூடத்துலேயே அட்லாஸ்-ன்னா பயம்!
எங்கேயோ ரோமாபுரியில் இருக்குற ஒரு குக்கிராமத்தை, அட்லாஸ்ல எந்தப் பக்கத்துக்குப் போயித் தேடிக் கண்டுபுடிக்கறதுன்னு ஒரு பயம் வந்துடும்!
வீட்டில் என்றால் பையத் தேடிக்கலாம்! ஆனாப் பள்ளியில் இந்த ஷீலா மிஸ் இருந்தாங்க பாருங்க!
ச்சே...ரொம்ப மோசம்! ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு ரொம்ப அழகா வருவாங்க. கொஞ்சம் கொஞ்சம் சிம்ரன் லுக்!

அவங்க எப்பமே என்னையத் தான் வகுப்பில் பதில் சொல்லச் சொல்லுவாங்க! அதுவும் போர்டில் தொங்கும் ஒரு பெரிய அட்லாஸ் மேப்பில் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லுவாய்ங்க!
க்ளாஸ் பொண்ணுங்க முன்னாடி போர்டுக்குப் போயித் தேடணும்!
சில சமயம் டக்குன்னு ஊரு அகப்படாது! மேப்பில் தடவு தடவுன்னு தடவறது பார்த்து, ஆல் கேர்ள்ஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாய்ங்க! அய்யோடா சாமீ! :-)

ஆனா இந்த வ.வா.ச அட்லாஸ்-ல அந்த மாதிரிப் ப்ரச்சினை எல்லாம் எதுவும் இல்லப்பா! ஜூப்பரா இருந்திச்சு! :-))
மாதவிப் பந்தல் பதிவெல்லாம் அரை மணி, ஒரு மணியில் எழுதிடலாம்!
இது போல் வாய் விட்டுச் சிரிக்கும் பதிவு எழுதத் தானுங்கண்ணா பெண்டு கழன்டிடுச்சு! :-))
நீங்க எல்லாம் எப்படித் தான் அசால்டா வெளுத்து வாங்கறீங்களோ!
சரி பிஸ்துங்க, நம்ம சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம்! - நன்றி! நன்றி!

ஒங்க அன்புக்கும் ஆதரவுக்கும் வெறுமனே "நன்றி"-ன்னு மட்டும் சொல்லிட்டுப் போக முடியுமா? அதான் என்னால முடிஞ்ச ஒரு கைங்கர்யம்!
ஒரு போட்டிச் சங்கம்! தொடங்கியாச்சு!
ச.சா.சங்கம்! - ஆன்மீகப் பதிவர்களுக்கு 0.33% ரிசர்வேசன் உண்டு! :-)

சங்கத்தின் முதல் உறுப்பினர், நீதிபதி பாஸ்டன் பாலாஜி! (snapjudge ப்பா) !
இவர் ஒரு ஆண்மீகப் புயல்! ஆண்மீகத் தல! எப்படின்னு கேக்கறீங்களா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பத்தி என்னமா ஒரு போஸ்ட் போட்டாரு! அவரை முதல் உறுப்பினராக அடைவதில் சங்கம் பெருமை கொள்கிறது!

சங்கத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,
கொள்கை பரப்புச் செயலாளர் (பெண்கள் மட்டுமே!),
மற்றும் மாவட்டம், வட்டம் - எல்லாப் பதவிகளும் நிரப்பப் படாமல் உள்ளது! பின்னூட்டத்தில் விண்ணப்பம் செய்யுங்கள்! உடனே சிங்கிள் விண்டோவில் வழங்கப்படும்!
சங்கத்தின் நிரந்தர முதல்வர் பதவிக்கு மட்டும் யாரும் விண்ணப்பம் செய்ய வேண்டாம்! அது எங்கள் ஜிரா அண்ணனுக்கு மட்டுமே! மட்டுமே!! மட்டுமே!!!


எல்லாம் சரி...அது என்னடா அது ச.சா.சங்கம்?
சபலப்"படாத" சாமியார்கள் சங்கம்! ச்ச்சே....இல்லை இல்லை!!

சபலப்படும் சாமியார்கள் சங்கம்!
ச.சா.ச! வாழ்க! வாழ்க!!


எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்!!!



கடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா? நற்றமிழுக்கா??

சிவபெருமான் முக்கண்ணனா? - யார் சொன்னா? அரைக் கண்ணு தான்!
பெருமாள் உலகத்தையே தாங்குறாரா? - யார் சொன்னா? - ஒரு ஈயைக் கூடத் தாங்க முடியலை அவரால!


சென்ற மதுரைப் பதிவில்,
நண்பர் குமரன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தாரு!
//இது என்ன ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனைக் கடிக்கிறதும்பாங்க;
நீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க?//
அவரு இந்தப் பதிவுக்கு வந்து, இன்னொன்னு சொல்றதுக்குள்ள, நானே சொல்லிடறேன்...."ஹூம்....இப்போ கடவுளையே கலாய்க்கும் டைமா?"

.......அச்சோ, கடவுளைக் கலாய்ப்பது நான் இல்லீங்க! தமிழ் இலக்கியம் தான்!
தளபதி சிபி, கலாய்த்தல் திணையைத் துவங்கினாரே!
எங்கிருந்துன்னு இப்ப தெரியுதா? எல்லாம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து தான்! :-)



ஆன்மீகப் பதிவர் ஒருவரைச் சங்கத்தில் கூப்பிட்டாலும் கூப்பிட்டாக!
பெருமாளைப் பற்றிச் சங்கத்தில் ஒன்னுமே சொல்லாமப் போனா எப்படி? நாளையோட அடியேன் அட்லாஸ் மாதமும் முடியுது! அதுக்குள்ளாற சுவாமியின் திருமுக மண்டலத்தை ஒரு வவாச பதிவிலாச்சும் போடாமப் போனா எப்படி? :-))

அதுக்காக நான் திருப்பதி பிரம்மோற்சவத்தை வவாச-வில் போட முடியுமா? அந்தப் பாலாஜி சும்மா விட்டாலும், இந்த வெட்டி பாலாஜி சும்மா வுட மாட்டாரே!
வவாச-வில் நகைச்சுவையோட கலந்து வேணும்னா எழுதலாம்! அதான் இந்தக் கலாய்த்தல் ஐடியா! சங்கத்துக்குக் காவி பெயிண்ட் அடிக்கும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஒரு விக்ரமாதித்தன்....இதோ!

வைகைப்புயல், சின்னக் கலைவாணர் என்று பல பட்டப் பெயர்கள் தமிழ்ச் சினிமாவில் இருக்கு! அதே போல் நகைச்சுவைச் செம்மல் ஒருத்தர், தமிழ் இலக்கியத்திலும் இருக்காரு! ஓகோ மேகம் வந்ததோ என்று அவரைப் பற்றிப் பாடலாம்.
சாதாரண மேகம் இல்ல அவர். கருத்த மேகம்! சிரிப்பு மேகம்!
ஒரு பொண்ணை டாவடிச்சி, லவ்ஸ் பண்ணி, அவளுக்காகத் திருவரங்கத்தில் சுடச்சுடக் கிடைக்கும் நெய் தோசையை விட்டு விட்டு, பொண்ணு பின்னாடி ஓடியாந்தாராம்!
இந்நேரம் கண்டு புடிச்சிருப்பீங்களே யார் என்று! - அவரே தான்! கவி காளமேகம்!!!


சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்?
பொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்!
ஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்!
சரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்!

துரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு?
இது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு? சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க! ஆனா, அது என்னா அரைக்கண்ணு? அவர் சொல்ற கணக்கைப் பாருங்க!

சிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.
அப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்!
அப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான்! ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம்! அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்!

அப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது!
அப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு? - அரைக் கண்ணு தான்!
எனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்! :-)))
முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்றுஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

பாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை!

அன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு! இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்!
இப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது?





சரி சிவனை மட்டும் கலாய்த்து விட்டுப் பெருமாளை விட்டுட்டா?
அது வேற இன்னொரு ப்ப்ப்ப்பெரீய்ய்ய்ய்ய்ய் சண்டையாப் போயிடுமே, பதிவுலகில்! - நம்ம ஜிரா மேல ஒரு பயம், காளமேகத்துக்கு அப்பவே இருந்திருக்கு போல! :-)
பிறப்பால் வைணவர் - காதலுக்காகச் சைவர் - அப்பறம் திருவானைக்கா அம்பாளின் உச்சிஷ்டமான, எச்சில் வெற்றிலையை உண்டதால், ஆசு கவி என்று புகழ் பெற்ற காளமேகம்!

அந்த ஆசு கவியைப் பார்த்து,
"உன்னால ஈ ஏறி மலை குலுங்கியதாகப் பாட முடியுமா டோய்?",
என்று சவால் விட்டார் ஒரு புலவர். அந்தக் காலத்து இலக்கிய அரசியல்-ல இதெல்லாம் சகஜம்! ஒருத்தர் நல்ல திறமையால முன்னுக்கு வந்துட்டாருன்னா அதைப் பார்த்து ஏற்கனவே இருந்தவங்களுக்குப் பொறாமை!

அறிவால் ஆசுகவியை அடக்கவும் முடியலை! என்னா தான் செய்யறது?
இந்த மாதிரி எடக்கு மடக்காக் கேள்விய கேக்கறது தான் வேலை! கேள்வியைத் தான் யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கேக்கலாமே! பதில் சொல்லறதுக்குன்னே பல நூறு பின்னூட்டம் வருமே! :-)))

காளமேகம் இதுக்கெல்லாம் சளைத்தவரா என்ன?
ஆனால் என்ன விஷயம்-னா, அந்த ஆற்றல் எல்லாம், பாதி நேரம் இந்த மாதிரி ஆட்களைச் சமாளிக்கவே போயிடும்! அப்புறம் எங்கிருந்து ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணி செய்யறது? ஆனா காளமேகம் அதையும் தாண்டித் தெறமையானவரு!

டோய், மலை என்னய்யா மலை!
ஈ உட்கார, அண்ட சராசரமே குலுங்கியதாகப் பாடுகிறேன் பாரு என்றார்!
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைக் கிருஷ்ணாவதாரத்தில் தாயாக வளர்த்தவள் ஒரு இடைச்சி! யசோதைப் பிராட்டி!
தயிர் கடையும் மத்தினால் ஒரு முறை குழந்தையை அடித்து விட்டாள்! அதனால் கண்ணனுக்கு பாவம், வாயில் ஒரு காயம், புண்!

சேட்டையே பையனாய்ப் பிறந்திருக்கும் பையன் அவன்! இதுக்கெல்லாம் அஞ்சுவானா? அடப் போம்மா என்று மண்ணை எடுத்து மீண்டும் மீண்டும் உண்கிறான். யசோதைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!
அடேய், வாயைத் திறடா என்கிறாள்! குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து காட்ட....

அம்மாடியோவ்...மில்கே வே கேலக்சியில் இருந்து, சகல கேலக்சியும் டெலஸ்கோப் இல்லாமலே தெரியுதே வாயில்!
சூரிய சந்திரர்கள், அண்ட சராசரங்கள்,
சமுத்திரங்கள், பூமி, பாரதம், ஆயர்ப்பாடி........
அப்படியே zoom in பண்ணா, அவனும் யசோதையும் கூடத் தெரியறாங்க!
Google Earth-இல், Zoom out/Zoom in, மொதல்ல கண்டு புடிச்சது இப்படித் தானோ? :-))

அந்த நேரம் பார்த்து,
கண்ணன் வாய்ப்புண்ணில் ஒரு ஈ வந்து மொய்க்கிறது!....
கூச்சத்தில் கிருஷ்ணனின் உடல் சற்றே குலுங்குகிறது!....

அதனால்........அவனுள் அடங்கி இருக்கும் அண்ட சராசரங்களும் குலுங்குகின்றன!
"ஈ உட்கார, உலகமே குலுங்கியது! போதுமா?" - காளமேகம் இப்படிச் சொன்னதும், ஈயாடவில்லை, அவைப் புலவன் எவன் முகத்திலும்!

இப்படி அண்டம் எல்லாம் தாங்கும் பெருமாளால், ஒரு சாதாரண ஈயைக் கூடத் தாங்க முடியவில்லை! - இது தான் காளமேகம் கலாய்ச்சல் :-)
வாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால் - நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது

(எட்டுத் திக்குகளையும் தாங்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் யானைகளும், மகா மேரு மலையும், கடலும், உலகங்களும் குலுங்கின! நன்றாகப் பண்கள் பாடும் இடைச்சியான யசோதை, பருத்த மத்தினால் கண்ணனை அடித்தாள். அந்தப் புண்ணில் ஈ மொய்த்த போது, கண்ணன் கூச்சத்தால் குலுங்க, சகலமும் குலுங்கியது!)

(அப்பாடா, ஆசை தீர, வவாச-வில் பெருமாள் படம் போட்டாச்சுப்பா! :-)

இப்படித் தமிழ் இலக்கியத்தில் பல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து , நகைச்சு வைக்கலாம்! - சங்கம் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் - எங்க ஒரு முறை உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! :-)

Sunday, August 26, 2007

மதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா?

இதைக் கேட்டுப் போட்டு என்னை அடித்து நொறுக்க,
வைகை போல் திரண்டிருக்கும், "மதுரை மாபாவியர்கள்" அனைவருக்கும் அடியேன் வணக்கம்!
தருமி சாருக்கு ஸ்பெஷல் வணக்கம்!:-)

மதுரைக்காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்து அழகான வலைப்பூ தொடங்கியிருக்காய்ங்க!
அதுல நம்ம சங்கத்துச் சிங்கம் அண்ணாத்த ராயல் வேறு, கெளரவம் மிக்க உறுப்பினர்!
மதுரை தாஜ் ஹோட்டல் பிரியாணிக்காகத் தான் அதுல அவர் சேர்ந்தாரா என்பதைப் பற்றிப் பாண்டியன் சபையில் பெருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது!:-)



கோவலன் கண்ணகி நாடகம் மிகவும் உணர்ச்சிகரமானது.
சினிமாவை விடச் சூடும் சுவையும் உள்ளது நாடகம் தான். பின்னே செட் போட்டு, கண் முன்னாடி ஒரு நகரமே எரிந்தால் சும்மாவா?
தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம் அது!

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி அறியாதார் யார்!
முத்தமிழுள் ஒன்றான நாடகத் தமிழை மீண்டும் தூக்கி நிறுத்தியவர் அவர்!
கதை-வசனம்-பாடல்கள்-ஒளிப்பதிவு-டைரக்சன் என்று வித்தை காட்டிக் கொள்ளும் இன்றைய இயக்குநர்களுக்கு எல்லாம் அவர் தான் முன்னோடி. அவர் எழுதிய நாடகம் தான் கோவலன் கண்ணகி!

பல ஊர்களில் சக்கைப் போடு போட்ட அந்த நாடகம், கடைசியில் மதுரையிலேயே நடத்தப்பட்டது! அதில் இருந்து ஒரு சீன்!
கண்ணகி பாண்டியன் சபையிலே கூக்குரல் இட்டுப் பாடுகிறாள்.
"மா பாவியர் வாழும் மதுரை ஆளும் பாண்டிய மன்னா!!!"
ட்ட்ட்டங் ட்ட்ட்டங் டொய்ங்க்....



சபையில் ஒரே பரபரப்பு, குழப்பம், கூச்சல், விசில்!
"டேய், யாரைப் பாத்து இன்னா வார்த்தை சொன்னீங்கடா, கொக்க மக்கா".....மதுரை, சென்னைக்கு ஷிஃப்டானது, தமிழில்! :-)
மாப்பிள்ளை வினாயகர் கடை சோடா பாட்டில்கள் பறக்க...பயந்து போய் திரை போட்டார்கள்!
மதுரை மக்கள் உணர்ச்சி வேகத்துடன் கேட்டார்கள்! "மாபாவியர் வாழும் மதுரை என்று எப்படிச் சொல்லலாம்? அப்ப நாங்க-ல்லாம் என்ன மகா பாவிகளா?"

சபா செக்கரட்டரி மற்றும் பலர் ஓடியாந்தாய்ங்க.
"அது இல்லீங்கப்பு! கண்ணகி, கணவனைப் பறிகொடுத்த கோபத்தில் உணர்ச்சிகரமாப் பேசறா. அதப் பாத்து நீங்க ஏதும் உணர்ச்சி வசப்படாதீங்கப்பு!"

"எலேய்...மொதல்ல நாடகத்தை நிறுத்து.
எழுதியவரை மேடைக்கு வரச் சொல்லு!
மன்னிப்புக் கேட்ட பின் தான் நாடகம் தொடர அனுமதிப்போம்!"

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி அடாவடி பண்ணுறாங்களே என்று நாடக நிர்வாகிகளுக்கும் கோபம் வந்தது. ஆனா வேறு வழியில்லை!
கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்! அதனால் சங்கரதாஸ் சுவாமிகளையே மேடைக்கு வரச் சொன்னார்கள்!

மேடைக்குச் சிரித்துக் கொண்டே வந்தார் சுவாமிகள்.
"தமிழன்பர்களே, உண்மையைத் தானே உயர்ந்த கருத்தாக எழுதினேன்.
இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாமா? தமிழ் தெரியாத கத்துக்குட்டிகளா நீங்கள்?
மதுரைக்காரங்களுக்கே தமிழ் தெரியலை என்று நாளை யாராவது பேசி விடப் போகிறார்கள்! அதனால் அமைதியுடன் நான் சொல்வதைக் கேளுங்கள்!"


"மாபாவியர்" என்றால் நீங்கள் நினைப்பது போல் ஒன்னும் மோசமான பொருள் அல்ல.
மா = மாதரசி, மங்களகரமான மகாலட்சுமி,
பா = பார்வதி,
வி = வித்தைக்கு அரசி, சரஸ்வதி.
முப்பெரும் தேவியரான திருமகள், மலைமகள், கலைமகள்!
மா, பா, வி வாழும் ஊர் தானே மதுரை?
இவர்கள் எல்லாம் உங்கள் ஊரில் வாழ வேணாம் என்றால் சொல்லுங்க, உடனே மாற்றி விடுகிறேன்".

பட பட பட பட வென்று ஒரே கைதட்டல். மதுரை மக்கள் ஆரவாரம்.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மாலை அணிவித்துப் பாராட்டி, மேலும் பணமுடிப்பு கொடுத்தார்கள்!
நாடகமும் பெருத்த அப்ளாசுடன் நடந்தேறியது!

பின்னர் சபா அங்கத்தினர்கள் சுவாமிகளிடம் ப்ரைவேட்டாக, உண்மையிலேயே அக்கருத்தில் தான் எழுதப்பட்டதா என்று கேட்டார்கள்!
"ச்சே ச்சே...இல்லை! இல்லை!
சமயத்திற்கு ஏற்றவாறு சமாளித்தேன். அவ்வளவு தான்!" என்றாராம் சுவாமிகள்.

பிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசு அளிக்கிறான் என்று பல மணி நேரம் சண்டை போட்டு விட்டுக்....கடைசியில்
அதே பிழையான பாட்டுக்குத் தானே பரிசை அளிக்கச் சொன்னார்கள்!
பாருங்க, நமக்கும் அதிகமாப் பண முடிப்பு கொடுத்துள்ளார்கள் என்று அவர் சொல்ல...
சீரியஸ் கண்ணகி நாடகத்துக்கு நடுவே, குபீரென்று சிரிப்பலைகள் எழுந்து பாய்ந்தது!
பாசக்காரப் பயலுங்கப்பா, மருதக்காரய்ங்க!

மாமதுரை போற்றுதும் மாமதுரை போற்றுதும் என்று மாற்றிப் பாடலாமா?
ச்ச்சே வேண்டாம்! அதான் ஒரிஜினலாவே போற்றிப் பாடி இருக்காய்ங்களே!

நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர்
கண்டாங்கு...


சங்கம் வைத்த, வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாக
சங்கம் வைத்த, மதுரை மூதூருக்குச்
சிரிப்பலை வணக்கங்கள்!


இப்பச் சொல்லுங்க,
இந்தப் பதிவு போட்டதுக்கு என்னைய மருத மக்கா அடிப்பாய்ங்களா இன்னா? :-)

வ.வா - மதுரை வாலிபர்கள்

வ.வா - மதுரை வாலிபிகள்

Tuesday, August 21, 2007

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCR!

இது ஒரு நண்பனின் உண்மைக் கதை: கதையல்ல, நிஜம்!
போன் போர்பர் என்ற உலக மகா நகரத்துல நமக்கு ஒரு தோஸ்து இருக்காரு. அவருக்குக் காரை ஓட்டணும்னா சுத்தமாப் பிடிக்காது!....காரைத் துரத்தத் தான் பிடிக்கும்!

ஒரு முறை நியூயார்க் நகரத்துக்கு வண்டியை விரட்டிக்குனு வந்தாரு நம்ம ஹீரோ!
உன் விரட்டு என் விரட்டு இல்ல... காளை மாடு அடக்கும் மஞ்சு விரட்டு!
(அவர் காருக்கு முன்னால மஞ்சு-ன்னு ஒரு ஃபிகர் கார்ல போயிக்கிட்டு இருந்தாங்க.
அதான் "மஞ்சு விரட்டு" விரட்டினார் என்று பின்னர் வந்த காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுச் செய்தி சொல்லியது - இதற்கு துப்பு கொடுத்தவர் சிங்க வாகனத்தில் வரும் ஒரு பெண் பதிவர்-ன்னு பரவலாப் பேசிக்கறாங்க!)

நான் இப்ப மேட்டருக்கு ஓஸ்தானு!
தன் கடமையில் சற்றும் மனம் தளராத ஒரு போலீஸ் மாமா, நண்பருக்கு பின்னாடியே வந்து லைட்டைப் போட்டாரு! ஒரங்கட்டேய்! .....

அப்பறம் நடந்த காமெடியைப் பற்றி நண்பர் ஒரு பதிவ போட்டாரு! ஆனா பாருங்க....ஏதோ தான் மட்டும் ஜென்டில்மேன் போலவும், போலீஸ் மாமா தான் ரொம்ப டகால்டி பண்ணி, கொடைச்சல் கொடுத்ததாகவும் அந்த பதிவுல அளந்திருந்தாரு!

எனவே உண்மைய ஊருக்கும் ஒலகத்துக்கும் எடுத்துச் சொல்ல,
காவல்துறை என்னைய சிறப்புச் செய்தியாளரா அப்பாயிண்டு சேஸ்தானு!
நண்பருக்கும் போலீஸ் மாமாவுக்கும் நடந்த உரையாடல் இதோ படியுங்கள்!
(முன் குறிப்பு: இது சோனி மினி டிவிடியில் டேப்பும் செய்யப்பட்டுள்ளது! - பதிவின் இறுதியில் அந்தக் காட்சிய நீங்களே பாருங்க!)



ஆபிசர்: உங்கள் ட்ரைவிங் லைசன்சைக் காட்டுங்க!
நண்பர்: அதெல்லாம் இப்ப இல்லீங்க ஆபிசர். ஏற்கனவே மூணு தபா புடிச்சி வுட்டுட்டாங்க.
நாலாவது தபா அதைப் புடிங்கிக்குனாங்க ஆபிசர், பாவிப் பயலுங்க!.

ஆபிசர்: சரி, வண்டி ஓனர் பத்திரம் எடுங்க
நண்பர்: சாரிங்க ஆபிசர். வண்டி என்னுதல்ல, நேத்து தான் டிஸ்கோ பார் வாசல்ல திருடினேன்!

ஆபிசர்: வாட்? திருட்டுக் காரா?
நண்பர்: ஆமாங்க ஆபிசர். பாருங்க நான் எப்பவும் உண்மையே தான் பேஸ்வேன் ஆபிசர்

ஆபிசர்: காரின் உண்மையான ஓனர் யார் என்று தெரியுமா?
நண்பர்: தெரியுங்க ஆபிசர். இந்த ஹேண்ட்பேக்-ல அவிங்க அட்ரெஸ் இருக்கு ஆபிசர். எடுக்கட்டுங்களா?
ஆனா உள்ளார ஒரு சின்னக் கைத்துப்பாக்கி வச்ச்சிருக்கேன் ஆபீசர்!

(ஆபிசர் ஒரு ஐந்து அடி பின்னால் நகர்கிறார், ஒரு வித வெடவெடப்புடன்)
நண்பர்: அந்தத் துப்பாக்கியால தாங்க ஆபிசர், இந்தக் காருக்குச் சொந்தக்கார பொண்ணைச் சுட்டேன்;
பின்னாடி டிக்கியில், பொணத்த கூட போட்டிருக்கேனுங்க ஆபிசர்!

(ஆபிசருக்கு வெலவெலத்துப் போய்விடுகிறது! ஒரு அம்பது அடி பின்னால் நகர்ந்து கொண்டு, பெரிய ஆபிசரை வாக்கி டாக்கியில் கூப்படறாருங்கோ!
எங்கிருந்தோ வந்தான், போலீஸ் சாதி நான் என்றான்-ன்னு, திபுதிபு-ன்னு ஒரு நாலு ஆபிசர்கள் காரை புடை சூழ்ந்து கொள்கிறார்கள்...பெரிய ஆபிசர் காரை நோக்கி ஒஸ்தானு!...)



பெ.ஆபிசர்: ஆடாதே! அசையாதே!
அப்படியே உக்காருங்க மிஸ்டர்! லைசன்ஸ் இல்லை போல இருக்கே?
நண்பர்: ஐயோ! இதோ இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, லைசன்ஸ் பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: யாரு காருங்க இது?
நண்பர்: என் காரு தான் ஆபிசர்!
பாவா வீட்டுல ஜாவா படிச்சி,
சுயமா சிந்திச்சி, கூகுளில் code தேடாம.........
ஆபீசில் பதிவு எழுதாம.....பின்னூட்டம் போடாம, நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி, பொட்டி தட்டி, சம்பாரிச்சதுங்க ஆபிசர்! இந்தாப் பாருங்க டாக்குமெண்டு!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, டாக்குமெண்டு பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: இது யாரு கைப்பைங்க, மிஸ்டர்? துப்பாக்கி இருக்கு-ன்னு சொன்னீங்க போல இருக்கே?
நண்பர்: ஐயோடா சாமீ...என் தங்கமணி பை தாங்க ஆபிசர்...
அதுக்குள்ள துப்பாக்கியா? தொறந்து பாருங்க ஆபிசர்...
ஒரே கொண்டை ஊசி, ஒம்போது சீப்பு, நாலு மேக்கப் ஷேடு, நாப்பது லிப்ஸ்டிக்கு - இது தாங்க இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் தொறந்து பாக்குறாரு, சிரிக்கிறாரு - அவரு தங்கமணியை அவரு நினைச்சிக்கிட்டாரு போல!)

பெ.ஆபிசர்: சாரி மிஸ்டர், பாத்தா பால் வடியும் பால முகமா இருக்கீங்க...
If you dont mind...கொஞ்சம் டிக்கிய ஓப்பன் பண்ண முடியுமா?
(நண்பர் ஓப்பன் செய்ய,.....அய்யோ....
டிக்கியில் நாலு ஜட்டி, ரெண்டு டென்னிஸ் பாட், எப்போதோ தூக்கி வீசிய மாங்கொட்டை, ஒரு ஸ்டெப்னி தான் காட்சி கொடுத்தது!)

பெ.ஆபிசர்: எனக்கு ஒண்ணுமே புரியலையே!
இந்த ஆபிசர் உங்களிடம் லைசன்ஸ் இல்லை, திருட்டுக் கார், துப்பாக்கி இருக்கு, பொணம் டிக்கியில இருக்குன்னுல சொன்னாரு!
யோவ், ஈகிள் 402, ஸ்ட்ரைப் 303....என்னய்யா நடக்குது இங்க?

நண்பர்: அய்யோ, அப்படியா சொன்னாங்க ஆபிசர்? பகல் கனவு காணுறாங்களா? மிட் நைட் மசாலா ஏதாச்சும் பாத்த கலக்கமா?
நான் ஓவர் ஸ்பீடுல..100 மைல் பெர் ஹவர்ல போனதாக் கூடச் சொல்லி இருப்பாங்களே, ஆபிசர்? கலி காலம்டா ஆபிசர்!

பெ.ஆபிசர்: ஆமாம்...ஆமாம்...ஈகிள் 402 அப்பிடித் தான் சொன்னாரு!
நண்பர்: (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு) அதை எல்லாம் நீங்க நம்புறீங்களா ஆபிசர்?

பெ.ஆபிசர்: சேச்சே...ஏதுமறியாப் பச்சிளம் பாலகன் போல இருக்கீங்க! பால் மணம் மாறாச் சிறுவனைப் போல இருக்கும் உங்களைப் போயி.....
ஐ ஆம் வெரி சாரி மிஸ்டர் VCR!......நீங்கள் போகலாம்!
தொந்தரவுக்கு மன்னிக்கவும்! உங்கள் பயணம் இனிய பயணமாய் அமையட்டும்!
(பெ.ஆபிசர் திரும்பி, ஆபிசர்களை எல்லாம் ஒரு முறை முறைக்க....)


நண்பரின் கார் நியூயார்க்கை நோக்கிப் பறக்கிறது!...காருக்குள் சிடியில்...
அண்ணே அண்ணே...சிப்பாய் அண்ணே
நம்ப ஊரு, நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டுப் போச்சண்ணே!
அதச் சொன்னா வெக்கக் கேடு
அதச் சொல்லாட்டி மானக்கேடு...
அண்ணே அண்ணே...


நியூயார்க் நகரத்து டிஸ்கோ பார் வாசலில், (Cop)காப்புக்கே ஆப்படித்த கடமை வீரரை, ப.பா.சங்கத்தினர் ஒரு வித வெட்கத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.
நண்பர் நேரே டிஸ்கொத்தேவில் கலந்து ஐக்கியமாக, நமீதாவுடன், காதல் யானை வருகுது ரெமோ! இதோ!



அன்பு அண்ணன் வீசீஆரை-ஐ, வீசி வரவேற்கத் (தக்காளி தான் வேறென்ன?) துடியாய்த் துடிக்கும் 23ஆம் வார்டின் அன்புத் தொண்டர்கள், படம் வரைந்து கட்-அவுட் வைத்த பாச உடன்பிறப்புக்கள்:
பாசமலர் மலேசிய மாரியாத்தா, மற்றும் மற்றும் கனவு நாயகன் DreamZZZ, மற்றும் cdk

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCRக்கு, "ஆப்பம்" வாங்கித் தருவோம் வாங்க.
டமிள் கூறும் பதிவர்களே, வந்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்து விட்டுப் போங்கள்! :-)







Tuesday, August 14, 2007

டெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள்! - 3

வெட்டி வேரு வாசம், வெட்டிப் பயல் மோசம் ன்னு பாடல் பேக்கிரவுண்டில் ஒலிக்க...வெட்டியை நோக்கி வீறுநடை போட்டார் கவுண்டர். சற்றே திரும்பிப் பார்க்க, சிபியை அங்கே காணோம்! ஆளு எஸ்கேப்பு! கவுண்டர் இதுக்கெல்லாம் கலங்குறவரா என்ன?
அங்கே போயி பார்த்தால்...அம்ச தூளிகா மஞ்சத்தில் வெட்டி...
கன்னியர் புடை சூழ...forbidden appleஐச் சுவைத்துக் கொண்டு இருக்கிறார்! அதைப் பார்த்து ஜெர்க்கான கவுண்டர், கண் சிவக்கிறார்!
முந்தைய பாகங்கள் இங்கே!
Part 1
Part 2

கவுண்டர்: டேய், நரகலோகத்துல என்னாடா இது நாராசம்?
வெட்டி: நரகத்துல உன்னை விட பெரிய பாவி யாரும் இல்லை...அதனால யாருக்கும் பயப்படாதே!
அதே மாதிரி உன்னை விட சின்ன பாவி யாரும் இல்லை...அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!
- அதே நா ப்ளாக்கு ஸ்லோகன்னு - நான் ஓட்டறது மாருதி வேகன்னு - நூ ரா கண்ணு!

கவுண்டர்: டேய் டயலாக்கு வாயா. எம தூதர்கள் கிட்ட சொன்னேன் வையி - உன் டயலாக்கு வாயி எல்லாம், டங்கு வாயி ஆயிடும் ஜாக்கிரதை!
அது சரி, நீ எப்படியும் இங்க வர வேண்டிய ஆளு தான்! அதுல டவுட்டு லேது!
ஆனா நீ எப்படிடீ ஆன்மிகப் பதிவு பசங்களோடு வந்து சேர்ந்த?
வெட்டி: ஓ அத கேக்கறீங்களா, மிஸ்டர் ஜீ!

கவுண்டர்: டேய்...இன்னா சொன்ன நீ?
வெட்டி: மிஸ்டர் ஜீ...ஏன் மரியாதையா தானே கூப்பிட்டேன்?.
கவுண்டர்: ஓ அப்படியா, மிஸ்டர் வி?
டேய், டேய். நம்மள வச்சி பதிவு போட்டுக்குனு நம்பளுக்கே நெக்கலா?
டெவில் ஷோ-ன்னு ஆரம்பிச்சு அளப்பற பண்ண இல்ல?. அதான் டெவிலுங்க இருக்குற இடத்துக்கே கரெக்டா வந்து சேந்துருக்க!

வெட்டி: கோச்சிக்காதீங்க கவுண்டரே! என்னைப் போல ஒரு பக்திமானை நீங்க பாத்துருக்கவே முடியாது.
கவுண்டர்: ஆமா இவரு அப்படியே துள்ளி துள்ளி ஓடற பக்திமானு...அன்னிக்கி இட ஒதுக்கீடு உண்ணாவிரதப் போராட்டத்துல, இருபது இட்லி துன்னுட்டு, அந்தமான் ஜெயில்ல இருந்தவன் தானடா நீயி? அந்தமான்-ல இருந்தவன்லாம் பக்திமான், சக்திமான் ரேஞ்சுக்கு பேசறாங்களடா சாமீ!


வெட்டி: நான் கர்ணன்-கண்ணன்-ன்னு பதிவு போட்டவன். கங்கைக்குப் புருஷன் சிவனா-சந்துனுவா-ன்னு பதிவு போட்டவன். சுப்ரபாதத்துக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டவன். அதுனால கொஞ்சம், பாத்து பாத்து, பாத்து பேசண்டி.
கவுண்டர்: ஆமா...பேசண்டி, பாசந்தின்னு, ஆனா ஊனா தெலுங்குல எதுக்குடா பிட்டு போடுற? அவ்ளோ தைரியம் இருந்தா தெலுங்குமணத்துல போயி எழுத வேண்டியது தானே! எதுக்குடா இங்க எழுதி இவனுங்க உயிர எடுக்குற?
சுப்ரபாதத்துக்கு பின்னூட்டம் போட்டானாம்!
டேய் ஒனக்கு குளுருதுன்னா ஒங்க வூட்டுல தீக்காஞ்சிக்கோ? எதுக்குடா சுப்ரபாதப் பதிவ போயி பத்த வச்ச?

வெட்டி: ஹிஹி...சுப்ரபாதம் சூடானா தானே, வெண்பொங்கல் சூடா கெடைக்கும் அதான்!
கவுண்டர்: அடப்பாவி...ஒனக்கு எதுக்குடா கங்கைக்குப் புருஷன் யாரு-ன்னு ஆராய்ச்சி எல்லாம்?
அதுவும் இவரு நாலே நாலு வரியில பதிவு போடுவாராம்! அதுக்கு நாப்பது பேரு, நானூறு பின்னூட்டம் போட்டு மண்டைய ஒடச்சிக்குவாங்களாம்! நான்சென்ஸ்! ஏண்டா டேய்,
அவனவன் தெலுங்கு கங்காவுல தண்ணி வரலைன்னு, அழுவறான்.
நீ என்னாடான்னா கங்காவுக்கு புருஷன் வரலைன்னு பதிவு போட்டுக்கினு இருக்க. நெல்லிக்கா மண்டையா, நொங்கிடுவேன் நொங்கி!

வெட்டி: அப்படி எல்லாம் பேசாதீங்கண்ணே! பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது!
கவுண்டர்: மவனே!
பதிவ படிச்சாலும் அனுபவிக்கணும்,
ஒன் கால ஒடிச்சாலும் அனுபவிக்கணும்...
இப்ப நீ அனுபவி, ஆராயாத இன்னா? Guards, இவன அண்டாவுல போடுங்க!
(Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள்)

கவுண்டர்: அடச்சீ...வாய மூடுங்கடி...பாவா பாவான்னு சொன்னீங்க பேத்துடவேன்...பாவீ பாவீ ன்னு சொல்லுங்க!
(பெண்கள் எல்லாரும் வெட்டியைப் பாவீ பாவீ-ன்னு கைதட்டிக் அழைக்க, வெட்டி நொந்து போகிறார். அன்று கரிக்கைச் சோழியைக் கரியாக்கியவர், இன்று அவரே கரிக்கை வெட்டி ஆகிறார்...கரிந்து போன அண்டாவில்)

கவுண்டர்: டேய், நீ ஒரு ஃபேமஸ் கண்ணன் பாட்டு போட்டியாமே! எங்கே, அதைப் பக்தியோடு பாடு! இந்த அண்டா ஜில்லுன்னு ஆகுதா பார்ப்போம்!
வெட்டி: கண்ணா - இதோ உன் பாட்டு! நீ - வந்து அருள் காட்டு!
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி. அவனைச் சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
கவுண்டர்:
Guards, இவன இதே அண்டாவுல அப்படியே திருப்பிப் போட்டு வாங்குங்க! (வெட்டியைப் பார்த்து)...டேய்...பரவை முனீம்மா ஒனக்கு பரவை நாச்சியாரா?
இப்ப பாடுறீ...கண்ணன் பாட்டை! நான் பாக்குறேன் நீ படுற பாட்டை!

சேவகர்கள் இரண்டு பேர் ஓடோடி வருகிறார்கள்...கவுண்டரிடம் ஒரு ஓலை கொடுக்கிறார்கள். படித்துப் பார்த்த கவுண்டர்...
ச்சே...இந்த இந்திரன் பயலுக்கு வேற வேலையே இல்ல போல! எதுக்கு இப்ப நம்மள கூப்புடறான்?...கத்திரிக்கா மண்டையன்! ஜி-டாக்ல வர்றத வுட்டுபுட்டு...இவன நேரா வேற போயி பாக்கணுமாம்!
ஃபோன்ல பேசணும்னாலே நாம ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி ஃபோகஸ் பன்ணி பேச வேண்டியிருக்கும்...இதுல நேர்ல வேறயா? ச்சீ....சாட்டிங்-க்ல வாடா பேட்டிங் தலையா!


இந்திரன்: வருக கவுண்டரே!
செந்தில்: நலந் தானா? நலந் தானா? நரகத்தில், உடலும் உள்ளமும் நலந் தானா அண்ணே?
கவுண்டர்: டேய், திரும்பி வந்தேன்னு வையி, உன்னைத் தில்லானா வாசிச்சுடுவேன். பொத்திக்கினு உக்காரு. நீங்க சொல்லுங்க ஆபிசர். எதுக்கு அவசரமா கூப்டீங்க? எனி அர்ஜண்ட் ப்ராப்ளம்?
இந்திரன்: ஆமாம் கவுண்டரே...இன்னிக்கு உங்களுக்கு ஆப்புரைசல்.
கவுண்டர்: அப்பிடீன்னா என்ன ஆபிசர்?...

இந்திரன்: மேலதிகாரியான நான், உங்களுக்கு எது புடிச்சிருக்கு எது புடிக்கலைன்னு அன்பா விசாரிச்சிட்டு, எது புடிக்கலையோ, அதையே அன்பாக ஆப்படி்ச்சிக் கொடுத்துடுவேன். அதுவே புதிய மேனேஜ்மெண்ட் டெக்னிக்!
கவுண்டர்: ஓ, நல்ல சிஸ்டம். இப்ப அதுக்கு நான் என்னா செய்யணும்?
இந்திரன்: உங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப் போகிறோம்! உங்களுக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு வேலை செய்யலாம்! சொல்லுங்க, சொர்க்கத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க, நரகத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க! எங்க வேலை பார்க்க பிடிச்சிருக்கு?

கவுண்டர்: (மனசுக்குள்ளேயே...சொர்க்கத்துல வேலை பார்த்தா ஒரே லாபம் இந்தக் குஜால் பிகருங்க தான்...ஆனா அதுக்காக இந்த வாழைப்பழ வாயன் கிட்ட எல்லாம் விகடகவியா வேலை பாக்க நம்மால முடியாது.
அங்கேன்னா, அப்பாவி ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் இருக்கானுங்க! வாயில்லாப் பூச்சிங்க! பிரிச்ச மேய அதான் நமக்குச் சரியான இடம்...நம்ம வாழ்வே நம்ம வாயி தானே!)

ஆபிசர்...நான் நரகத்துல இப்ப பாக்குற வேலயே பாத்துக்கறேன் ஆபிசர்! ஐ லைக் இட் வெரி மச்சி ஆபிசர்!
இந்திரன்: ஓ...அப்படியா! சரி இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், இதில் கையெழுத்து போட்டு விட்டு, உங்கள் விருப்பம் போல் போய் வாங்க! ஆல் தி பெஸ்ட்!
(கவுண்டர் கையெழுத்து போட்டு விட்டு, நரகலோகம் செல் நம்பர் 420க்குத் திரும்புகிறார்)

நரகலோகம் செல் நம்பர் 420யே இருண்டு கிடக்கிறது! ஆல் அண்டாஸ் ஆஃப் ஆயிக் கிடக்குது!
ஆன்மீகப் பதிவன் ஒருத்தனையும் காணோம்!
ஜெர்க் ஆகிறார் கவுண்டர்!

கவுண்டர்: Guards...எங்கடா இங்க இருந்த பாவிப் பசங்க? நான் கொஞ்ச நேரம் அந்தாண்ட போயிட்டு வரதுக்குள்ள பதிவு போடப் போயிட்டானுங்களா? இல்ல எங்காச்சும் கும்மி அடிக்கப் போயிட்டானுங்களா?
எங்கடா அந்த ஜீரா ஜோரா, கேயாரஸ்ஸு டவுன்பஸ்ஸூ எல்லாரும்?
(சேவகர்கள் எல்லாம் கவுண்டரைப் பரிதாபமா பாக்குறாங்க!)
என்னங்கடா இஞ்சி துன்ன இளிச்ச வாயனுங்க கணக்கா லுக்கு வுடறீங்க? வேர் ஆர் தீஸ் பக்கர்ஸ்? டெல் மீ மேன்...டெல் மீ....

சேவகர்கள்: அவிங்க எல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் இல்லீங்கண்ணே!
கவுண்டர்: பின்னே கோன்மீகப் பதிவருங்களா?

சேவகர்கள்: இல்லீங்கண்ணே...அவங்க எல்லாரும் போலி!
கவுண்டர்:
வாட்! போலியா? அப்படீன்னா...?

சேவகர்கள்: என்னங்கண்ணே....நீங்க தமிழ்மணம் படிக்கறதே இல்லையா? போலி-ன்னா இன்னான்னு தெரியாம இப்படி அப்பாவியா இருக்குறீங்களே!
அவிங்க எல்லாரும் போலிப் பதிவருங்கண்ணே! போலிப் பதிவருங்க!
கவுண்டர்: (இடிந்து போய்) டேய்...என்ன தாண்டா நடக்குது இங்க? புரியிறா மாதிரி சொல்லித் தொலைங்கடா, சொரக்காத் தலையனுங்களா!

சேவகர்கள்: அண்ணே...ஒங்களப் பாத்தாப் பாவமா இருக்குண்ணே!
ஒங்க லொள்ளைத் தாங்க முடியாம, நடிகருங்க நடிகைங்க டைரக்டருங்க எல்லாரும் பாற்கடலுக்குப் போயி கன்ணபிரான் கிட்ட மொறையிட்டாங்க!
கவுண்டர்: அதான் எல்லாச் சினிமாவுலயும் பாக்குறது தானே! நாலு பாட்ட பாடுவானுங்க...அவரு நான் பாத்துக்கறேன்னு சொன்னதும் அந்தாண்ட ஓடுவானுங்க! அப்பறம் என்னடா ஆச்சு?

சேவகர்கள்: என்ன தான் லொள்ளு பண்ணாலும், ஒங்களுக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியா இருக்கா! அதான் ஒங்கள நேரடியா போட்டுத் தாக்காம, ஒங்களையே ஒப்புக்க வச்சி, ஒங்க கையாலயே எழுதி வாங்கிட்டாய்ங்க!
நீங்களும் போலிப் பதிவருங்க-ன்னு தெரியாம, ஏதோ எல்லாரயும் டபாய்க்கிற குஷியில, இங்கயே இருந்துக்கறேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டீங்கண்ணே!
கொஞ்சம் யோசிக்கக் கூடாதாண்ணே?...ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் எப்படிண்ணே நரகத்துக்கு வருவாய்ங்க?

கவுண்டர்: அடங் கொக்கா மக்கா! டோட்டல் ஃபிராடு பண்ணி இருக்கானுங்களே! அத்தனையும் போலியா?
டேய், டேய், எனக்குத் துன்னுற போளி தாண்டா தெரியும்! இது என்னாடா இது போலி, ஜாலின்னு, காலி பண்ணுறீங்க?
சேவகர்கள்: எல்லாமே மாயை-ன்ணே, மாயை!
போலியே மாயை! மாயையே போலி!
பாற்கடல்-ல போட்ட திட்டம்-ன்ணே திட்டம்!
பக்தர்களைக் காக்கவும் சொக்தர்களை பேக்கவும் போலியாய் இறங்கி வருவேன்-னு டயலாக் எல்லாம் நீங்க கேட்டதில்லையாண்ணே?

கவுண்டர்: இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தவன் எவன்டா? அந்த பேரிக்காத் தலையன் செந்திலா?
சேவகர்கள்: ஐயோ, அவுரு நல்லவருண்ணே! கடைசியா நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க பாருங்க, ஒரு தில்லாலங்கடி தாங்கு!

கவுண்டர்: ஆமாம், ஏதோ வெட்டிப்பயல், குட்டிப்பயல்-ன்னு பேரைச் சொன்னானுங்களே!
சேவகர்கள்: அவரே தான்! அவரே தான்!
அவரு தான் நாரதர்-ண்ணே! நாரதரோட அவதாரம் தான் இந்த வெட்டிபயல் என்கிற பதிவரு! அவரு போட்ட மாஸ்டர் பிளான்-ல தாண்ணே நீங்க மாட்டிக்கிட்டீய்ங்க!
ஏதோ ஒங்கள வச்சி டெவில் ஷோ நடத்தறேன்னு, டெவில் ஷோ நடத்தறேன்னு நல்லா வசூல் பண்ணாரு! நீங்களும் ஏதோ அவுரு, ஒங்க புகழைப் பறப்பறதா நெனச்சிக்கீட்டங்க! கடைசில இப்படி ஆயிட்டீங்களேண்ணே!

கவுண்டர்: வெட்டின்னு வெட்டின்னு இப்பிடி வெட்டிப்புட்டானே...கடங்காரன்!
இதுக்கு குட்டி குட்டின்னு நானு சொர்க்கத்துலேயே இருந்திருப்பேனே!
அடேய் வெட்டி, புட்டி, குட்டி, சட்டி, ரொட்டி....

இடி மேல் இடியாக இறங்கிய கவுண்டர், இடி தாங்கியாகத் தரையில் உட்கார்ந்து புலம்ப....
பேக்கிரவுண்டில் பாடல் ஒலிக்கிறது....
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வெட்டியே வகுத்தடடா! - கவுண்டா!
வருவதை எதிர்கொள்ளடா
!
ட்டொங் டொங் டொய்ங்க்.....ட்டொங் டொங் டொய்ங்க்.....
சுபம்!!!

Wednesday, August 8, 2007

டெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒண்டி! - 2

நரகத்தில் மாட்டுப்பட்ட ஆன்மீகப் பதிவர்களை நோக்கி, நம்ம கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் தளதள என்று மிதக்கும் கண்ணபிரான் ரவிசங்கர்! முந்தைய பாகம் இங்கே!

கவுண்டர்: ஹே மேன்...வாட் இஸ் யுவர் நேம்?
ரவி: அடியேன் Kannabiran Ravi Shankar (krs)
கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?
ரவி: யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்!
கவுண்டர்: டேய் பள்ளி கொண்ட மண்டையா, இது தானே வேணாங்கறது! அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா?

சரி...அது இன்னாடா அது மாதவிப் பந்தல்? ஒனக்கு வேற பேரே கெடைக்கலியா?
கலைஞர் கண்ணகிக்கு சிலை வச்சாரு சரி!....நீ இன்னா அவருக்குப் போட்டியா, மாதவிக்கு பதிவு வைக்கறியா?
டான்ஸ் ஆடுற பொண்ணு பேர எல்லாம் எதுக்கு மேன் பதிவுக்கு வைக்கறீங்க?

ரவி: ஐயோ கவுண்டரே! அது சிலப்பதிகார மாதவி இல்லை....
கவுண்டர்: பின்னே ராஜ பார்வையில் கமல் கூட ஜோடி போட்டுச்சே, அந்த மாதவியா?
டேய் திருப்பதி லட்டு மண்டையா...வைக்கறது தான் வைக்கற!
ஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ?
வந்துட்டானுங்க மாதவிப் பந்தல், தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல்-ன்னு...பந்தல் போடறதுக்கு!

ரவி: ஐயோ, என்னைப் பேச விடுறீங்களா! இது அந்த மாதவி எல்லாம் கிடையாது!
கண்ணன் வீட்டில் ஒரு பந்தல் இருக்கும்; அதில் செண்பகப்பூ கொடிகள் படர்ந்து இருக்கும்; அதுக்கு மாதவிப் பந்தல்-ன்னு பேரு.
கவுண்டர்: டேய், நீ இன்னா கண்ணன் வூட்டு கேர் டேக்கரா? இல்ல ட்ரவுசர் போட்ட தோட்டக்காரனா?
என்னமோ செடி வளருதாம், கொடி வளருதாம்! கதை வுடறானுங்கப்பா....
ரவி: அச்சோ அச்சோ, "மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்" ன்னு திருப்பாவையில் வருமே! நீங்க படிச்சதில்லையா கவுண்டர் ஐயா?

கவுண்டர்: ஐயோ! கொல்லுறானே, கொல்லுறானே! அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க?
பாடாதீங்கடா...பேசுங்கடா...அதுவும் புரியறாப் போல தமிழ்-லலலலல பேசுங்கடா.....
நான் எப்படிப் பேசுறன்? பாக்கற இல்ல? அது போல பேசுடா!

ரவி: அது எப்படிங்க ஐயா, உங்களால் மட்டும் இப்படி எல்லாம் "அடித்துப்" பேச முடிகிறது?
கவுண்டர்: டேய்! அதுக்கெல்லாம் அறிவு வேணும்டா! எனக்கு ஒடம்பு பூரா மூளை டா!
ரவி: ஒடம்பு பூரா இருந்தா அதுக்குப் பேரு கொழுப்புண்ணே. மூளை மண்டையில் மட்டும் தான் இருக்கணும். மண்டையா மண்டையா-ன்னு அடுத்தவங்களை எப்ப பார்த்தாலும் கூப்படறீங்க...ஆனா இது தெரியலயே ஒங்களுக்கு?

(கவுண்டர் செம டென்சன் ஆகிறார்...)
கவுண்டர்: டேய், என்னையே எதிர்த்துப் பேசுறியா நீயி! Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க! அப்ப தான் அடங்குவானுங்க!
(கோபமே வராது என்று சொல்லிக் கொள்ளும் ரவிக்குக் கூடக் கோபம் வந்து விடுகிறது...கவுண்டரை நெற்றிக்கண் ரேஞ்சுக்கு முறைக்கிறாரு ரவி)...

கவுண்டர்: ட்ட்ட்டேய்...இன்னா லுக்கு வுடறே?
மாதவி-ன்னு பேரு வச்சிக்கினு...
கண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற? நோண்டிடுவேன் ஜாக்கிரதை!.....
(அன்பு நண்பர் ரவியைக் காப்பாற்ற எண்ணுகிறார் ஜிரா.
கவுண்டரைத் திசை திருப்ப, உரத்த குரலில், சுசீலாம்மா பாட்டை எடுத்து விடுகிறார்...யார் யார் யார் அவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ??...)


கவுண்டர்: யாரு மேன் அது காட்டுக் கூச்சல் போடறது? ஓ நீயா! உன் பேரு என்னடா? krsஆ இல்லை grsஆ?
ஜிரா: நான் பக்தியுடன், ஜி ராகவன்
கவுண்டர்: அப்ப நாங்க என்னா, சக்தியுடன், ஜி. மணியா?
இந்த நக்கல் தானே வேணாங்கறது! சரி, அது இன்னாடா அது ஜிரா?....
ஸ்நேகா ஸ்வீட் ஸ்டால்ல, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போட்டுக்கினு இருந்தியா நீயி? - ஜிரா, ஜீரா-ன்னுகிட்டு! ஒரே பிசு பிசுன்னு!

ஜிரா:அவலா கொன்றோ மிசையா கொன்றோ...அவ்வழி நல்லை வாழிய நலனே!
கவுண்டர்: டேய்...மவனே யாரப் பாத்து கொன்றோ கொன்றோ -ன்னு மிரட்டுற நீயி? என்னைக் கொன்னுடுவியா நீ? பிச்சிப்புடுவேன் பிச்சி!
ஜிரா: ஆகா! பிச்சி!.... என்ன ஒரு சொல்! சொல் ஒரு சொல்!
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாள்!
விச்சியாள், அவள் பிச்சியாள்! தலை உச்சியாள். தமிழ்க் கட்சியாள். வெற்றி வெட்சியாள்!

கவுண்டர்: ஆமாண்டா, மச்சியாள், நம்ம மச்சியோட ஆள்.
டேய் டேய், அடங்குங்கடா! அடங்குங்க!.....இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, ஒனக்கு மட்டும் அண்டாவைத் தூக்கிவிட்டு குண்டாவுல காய்ச்ச சொல்லிடுவேன்! நமக்குன்னு வரானுங்கு பாரு! பிச்சி,மச்சி,குச்சி-ன்னு! ச்சே.....

(கவுண்டரின் செல் போன் அடிக்கிறது....)
கவுண்டர்: அலோ, ஐ ஆம் ஆல்-இன்-ஆல் அழகுராஜ், கவுண்டர் ஸ்பீக்கிங்...யாரு மேன் லைன்-ல?
கவுண்டரே வணக்கம், நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! @$%‍">@#$%‍&*())

கவுண்டர்: அப்படீங்களா மேடம். ஆல்ரைட் மேடம். ஓக்கே மேடம். கவலைப்படாதீங்க மேடம். நான் பாத்துக்குறேன் மேடம். வைச்சிடறேன் மேடம்!
(ஜிராவைப் பார்த்து...) வாடி ரங்கநாயகி...வாயக் கொடுத்து மாட்டிக்கினியா நீயி? Guards...இவனுக்குச் சாப்பிட என்ன கொடுக்கறீங்க?
Guards: உப்புக் கருவாடும்..ஊற வைச்ச சோறும், மோரில் துவைத்த வெங்காயமும், கார அடையும்......
கவுண்டர்: ஸ்டாப்..ஸ்டாப்...ஸ்டாப்! இது என்ன நரகலோகமா? இல்லை நளந்தா பேலஸா?

இனிமே இவனுக்கு வெறும் ஓட்ஸ் உப்புமா கொடுங்க, போதும்.
மேலிடத்தில் இருந்து ஸ்ட்ராங்கான உத்தரவு!
குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!


அடுத்து யாரு மேன் லைன்ல?
குமரன்: அடியேன் சிறிய ஞானத்தன். கூடல் குமரன்.
கவுண்டர்: ஓ நீயும் அடியேன் தானா? இப்பல்லாம் அடியேன், என்னை இன்னொரு தபா அடியேன்-ன்னு, அடியைக் கேட்டு கேட்டு வாங்கறானுங்கப்பா.
சரி...அது இன்னா மேன் அது, பின்னூட்டக் கோனார் நோட்ஸ்?
இந்த வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கு எதுக்கு மேன்?
குமரன்: யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

கவுண்டர்: ஐ..ஐ...ஐ....
இவரு பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமாம்!
ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!
இன்னா தப்பு செஞ்சிட்டு மேன் இங்க வந்த நீயி?

குமரன்: ஐயகோ! என்னடி மீனாட்சி! சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி!
கவுண்டர்: ஏய், இன்னா, மீனாட்சி-ன்னு சத்தமாக் கூவினா, மதுரைக்காரங்க எல்லாம் செட்டு சேந்துக்கலாம்-னு திட்டம் போடறியா நீயி?
அது எல்லாம் என் கிட்ட நடக்காது! ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர்! யூ நோ?

அது இன்னா மேன் அது? ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?
இப்பல்லாம் பூலோகத்துல, பசங்களுக்கு ஒன்-டு-த்ரீ எண்ணறதுக்கு, உன் ப்ளாக்-கைத் தான் முன்னாடி வைக்கறாங்களாம்!
பசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்குற கணக்கு டீச்சர் கனகாவே, உன் கணக்குல கன்ப்யூஸ் ஆயிட்டான்னா பாத்துக்கோ! - இது எல்லாம் தேவையா மேன் உனக்கு?
குமரன்: :-)
கவுண்டர்: இந்தச் சிரிப்புக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல! அடுத்து யாரு மேன்?


VSK: நாதவிந்து கலாதீ நமோ நம! மயிலை மன்னாரு டீயோ கமோ கம!
கவுண்டர்: உன் பேர் என்ன மேன்?
VSK: என்னை SKன்னு கூப்பிடுங்க.
கவுண்டர்: நீ சொல்லி நான் என்ன மேன் கூப்பிடறது? நான் VSKன்னே கூப்டுக்கறேன். எதுக்கு மேன் மெட்ராஸ் பாஷையில திருக்குறள் நோட்ஸ் போடற நீயி?

அதப் படிச்சிட்டு, பசங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்குப் போயி, மெட்ராஸ் பாஷைல திருக்குறள் எழுதி ஃபெயிலாயிட்டு வருதுங்களாம்.
இப்படி எல்லாம் டகால்டி வேலை பண்ணறியே! இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?

VSK: லப் டப்...லப் டப்...லப் டப்...
கவுண்டர்: ஓ...நீங்க மருத்துவர் வேற இல்லை? (மனசுக்குள்: சரி...ரொம்ப நோண்ட வேண்டாம்...நமக்கும் ஹார்ட்டு வீக்கு...நரகத்துல சிகிச்சைக்கு இந்த ஆளு உதவி தேவைப் பட்டாலும் படலாம்)
யார் அங்கே? இந்த ஆளுக்கு தினமும் ஒரு கப் கூழு எக்ஸ்ட்றா ஊத்துங்க! என்ஜாய் மேன் VSK!


கவுண்டர் அப்படியே நகர்ந்து, ஞானவெட்டியான் ஐயாவைப் பார்க்கிறார்...(மனசுக்குள்: ஐயோ மிலிட்டிரி ஆளு போலத் தெரியுதே...வம்பே வேணாம்)
ஹாய் மேன், ஹவ் ஆர் யூ என்று கை குலுக்குகிறார். இருந்தாலும் இயற்கையா இருக்கும் லொள்ளு அவருக்குத் தானாத் தலை தூக்குகிறது!

முனைவர் நா.கண்ணனைக் காண்கிறார்...
ஹாய் மேன், இது இன்னா நரகத்துல வந்து தொப்பியும் கூலிங் க்ளாஸும்? இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலை?
தானா வாயக் கொடுத்து மாட்டிக்கின மேன் நீயி. அது இன்னா கிகா பைட்டும், பாவ புண்ணியம்-னு உன் பதிவு?
இந்த ஐடியாவை பிக்-அப் பண்ணி நரகலோகம் ஃபுல்லா கிகா பைட் ஆக்கிட்டாங்க!
டோட்டலா கம்ப்யூட்டர் பண்ணிட்டாங்க மேன்! இனிமே பாவக் கணக்க முன்ன பின்ன மாத்திக் கூட எழுத முடியாது... இது தேவையா மேன் ஒனக்கு?


வல்லி சிம்ஹனைக் காண்கிறார்...
கவுண்டர்: நீங்க தான் வல்லியம்மா-வா?
வல்லியம்மா: ஆமாண்டா குழந்தே! நல்லா இருக்கியா நீ?
கவுண்டர்: ஏய் ஏய்...நோ சென்டி ஓக்கே! நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே!....இனிமே டெய்லி நான் காபி குடிக்கும் போது வந்து ஒரு பாட்டு பாடணும்...இன்னா சரியா?

வல்லியம்மா: பாடிட்டாப் போச்சு; காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா?
கவுண்டர்: அடங்கொக்க மக்கா...காபி குடிக்க கூட ஒரு ராகம் கண்டுபுடிச்சிட்டானுங்களா? இசை இன்பம்னு வலைப்பூ தொடங்கி இம்சை இன்பம் பண்ணுறானுங்கடா சாமீ!


கவுண்டர்: நெக்ஸ்ட்...
கார்ட்ஸ்...எங்கே அந்த ட்வின் பசங்க? என்றென்றும் ஆப்புடன் பாலா and தேசி தேசிகன்?
Guards:
சார்....அவிங்க ரெண்டு பேரும் சுஜாதாவோட கிரிக்கெட் ஆட ஸ்ரீரங்கம் போயிருக்காங்க சார்!

அப்படியே அவரு கிட்ட நைசாப் பேசி, சிவாஜி படத்துல சிவாஜியா நடிக்கற ஹீரோ பேரு ரஜினி-ன்னு, ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சிக்குனு வருவாங்க சார்....
கவுண்டர் தலையில் அடித்துக் கொண்டு நகர்கிறார்...கீதா சாம்பசிவம் அவர்களை நோக்கி...



கவுண்டர்: ஹாய் மேன்! ஹவ் ஆர் யூ?
கீ.சா: ஐ ஆம் நாட் மேன்! ஐ ஆம் வுமன்!
பர்ஷ்டு அண்டர்ஸ்டாண்ட் தட்! அண்டு ஆல்சோ கால் மீ...தலைவி!
கவுண்டர்: சொறிங்க தலைவி....சாரி...சாரீங்க தலைவலி!
இன்னா, எனக்கே ஆர்டர் போடுற அளவுக்கு திமிரா? தலைவிங்கிற தலைக்கனமா?

சரி சரி...அந்த அம்பிப் பையனை எதுக்கு ஆனா ஊன்னா பின்னிப் பெடல் எடுக்கற நீயி? நல்லவங்க நாலு பேரை சும்மா வுடலீன்னா தூக்கமே வராதா?
கீ.சா: நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு....எல்லாம் சிதம்பர நாதனைப் பற்றிப் பதிவு எழுதும் எனக்குத் தான் தெரியும்.
கவுண்டர்: உக்கும்...எல்லாம் தெரிஞ்ச மகராசி...இதையும் தெரிஞ்சுக்கோ...அந்த அம்பி தான் ஒன் மேல பெட்டிஷனாத் தட்டி வுட்டு, இப்ப இங்க வந்து நிக்கறீங்கோ! - இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ!


நெக்ஸ்ட்...
பித்தானந்தா நாமக்கல் சிபி....
கவுண்டர்: டேய் நீ நம்ம ஆளுல்ல...நீ எங்கடா இங்க?.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே! வேறெங்க வருவ? சரி, வந்தது வந்துட்ட! வா, ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்!
சிபி: அண்ணே, முக்கியமான ஒரு ஆள நீங்க வுட்டுட்டீங்கண்ணே!
போட்டுக் கொடுக்கறதா நெனைச்சுக்காதீங்க! நான் போடாமத் தான்-ணே கொடுக்கறேன்!
கவுண்டர்: யாருடா அவன்?
சிபி: வெட்டி-ண்ணே!

கவுண்டர்: ஓ...அந்த கொல்ட்டி மண்டையனா!
சிபி: அவனே தான்! லவ் ஸ்டோரி லபக்குதாஸ் அவன் தான்ணே!
கவுண்ட்ர்: சரியான குசும்பு புடிச்சவன்-பா அவன்! அவன் எப்படி இவனுங்க ஆன்மீக லிஸ்ட்-ல வந்து சேந்தான்?
சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!
கவுண்டர்: கொதிக்கற அண்டாவோட சூடு தெரியல உனக்கு? அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல? - நல்ல ஷிப்புடா இந்த பிரெண்டுஷிப்பு!

சரி வா, உன் ஆசைக்கு அவனைப் போயி ஒரு நொங்கு நொங்கிட்டு வரலாம்! அது சரி, இவனுங்க எல்லாம், எப்படி இங்க வந்து மாட்டுனானுங்க-ன்னு கேட்டு, எமனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வச்சேன்....
எருமை மாட்டு வேகத்துல பதில் வந்துக்குனு இருக்கு போல!

(தொடரும்....அடுத்த பகுதியில் நிறையும்!)