Showing posts with label ஜி. Show all posts
Showing posts with label ஜி. Show all posts

Monday, July 28, 2008

கவுஜ திறனாய்வு...

எல்லாரும் சொவ்மா இருக்கியளா? 'அதெல்லாம் கெடக்கட்டும்.. உன்னையையும் நம்பி சங்கத்துல இருந்து அட்லாஸ்னு ஒரு டைட்டில கொடுத்தாவ.... ஒரு மரியாத இல்லாம போஸ்டே போடாம சுத்திட்டு திரியரியாலே...'னு கேக்குதியளா?? என்னத்த பண்ண சொல்லுதிய?? ஆணி அதிகம்னு சொன்னா நம்பவா போறியா?

போன பதிவுல காதலிக்கனும்னா கவுஜ எழுதனும்னு சொன்னதுல இருந்து நம்ம நண்பர் ஒருத்தர் நான் கவுஜ எழுதியே தீருவேன்னு ஒத்த காலுல நின்னாரு. அப்புறமா... நாந்தான் அதெல்லாம் ஒரு மாதிரியா சுத்திட்டு திரியரவ எழுதுறதுல.. அதாவது... ஒரு லெவலுக்கு மேல சரக்கிருக்குறவ எழுதுறது (நீங்க தப்பா நெனச்சிடாதிய), நமக்கெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்.. உடனே பயபுள்ள சும்மா இருக்காம உங்க பதிவுலகத்துல இருந்து சில பல கவுஜைய சுட்டு என் காதலிக்கு கொடுத்திடுறேன்னு சலம்புனான்.

நமக்கும் தலைல ஒரு பல்பு எரிய, உடனே... 'எலே தம்பி... எங்க பதிவுல சமீபத்திய கவுஜ சூராவளி ஒருத்தவ இருக்காவ... அவிய எழுதுன கவுஜைய பாத்து அவனவன் அரண்டு மெரண்டு போயிருக்கான்னு BBCலையே சொன்னாவன்னா பாத்துக்கோயேன்'னு சொன்னேன். பயபுள்ளையும் நெம்ப ஆர்வமா, 'யாருடா அது?' னு கேட்டான். நானும்...'இந்த வெளிநாட்டு காரனுவ எல்லாம் தலைல கலர் கலரா பெயிண்ட் அடிச்சிட்டு, கழுத கணைக்குற மாரி கத்திட்டே இருப்பானுவளே... அந்த பாட்டு ஸ்டைலு பேரு... எது என்ன?? ஆங்... Rap... இவிங்க எக்ஸ்ட்ராவா இன்னொரு p சேத்து பேர வச்சிருக்காவ... நியுமராலஜி னு நெனக்கிறேன்'ன்னு சொன்னேன்... 'எலே தம்பி... நான் காதலிக்கிறதுக்கு கவுஜ கேக்குறேன்.. விவாகரத்துக்கு இல்லலே'னு சொல்றான்.

அப்புறம் அவனும் சில பல கவுஜைய சுட்டுப் போட்டு.. சும்மா இல்லாம, கவுண்டர் பெல்கிட்ட போய் திறனாய்வு பண்ண கொடுத்திருக்கான். அவரு சும்மா இருப்பாரா?? அவரோட திறனாய்வ நீங்களே பாருங்க...

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு


டேய் கோமட்டி தலையா... இது உனக்கே நியாயமா இருக்காடா?? அவளே என்ன பாக்குறாளா? உன்ன பாக்குறாளானே தெரியாத ஒன்றரைக் கண்ணு... அத வேற நீ மொழிபெயர்க்கிரியாடா? டேய்.. எல்.கே.ஜி ல ஏ.பி.சி.டி.யையே காப்பி அடிச்சவன்.. நீ எல்லாம் ட்ரான்ஸ்லேஷன் பத்தி பேச வந்துட்டியா?

சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.


அப்படியே பாத்துட்டு இரு... ஈவ் டீஸிங்ல புடிச்சிட்டு போக பெரிய கொண்ட போட்ட பொம்பள போலிஸ் வந்துட்டே இருக்குது... டேய் கருவாட்டு மண்டையா... உன்ன எல்லாம் மெட்ராஸ் ஐ வந்த பத்த பேர கூட்டிட்டு வந்து ஒன்றரை மணி நேரம் உடாம பாக்க வைக்கணும்டா... அப்பத்தான்டா திருந்துவ...

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்


ஏன் டா பனங்கொட்டத் தலையா... சம்பந்தமே இல்லாம சிரிச்சிட்டு இருந்தா சுத்தி இருக்குறவங்க வேடிக்க பாக்காம என்னடா பண்ணுவாங்க?? என்னமோ மூனு நாள் ஐஸ்பெட்டில இருந்து கின்னஸ் சாதன பண்ணவனாட்டம் அசிங்கப்பட்டதையும் சந்தோஷமா சொல்லிட்டு திரியிரியேடா... உன் மனசுல என்ன சுப்ரமணியபுரம் அழகர்னு நெனப்பாடா?

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?


பள்ளிக்கூடப் பரிட்சைல கைல எழுதி வச்சி பிட்டு அடிச்சவந்தானடா நீயீ... ஏன் டா... இந்த மௌனம், தனிமைலாம் உங்கள என்னடா பண்ணிச்சு... சுத்தி சுத்தி அதையே புடிச்சிட்டு நிக்கிறியேடா... உன்ன எல்லாம் காது ரெண்டையும் செவுடாக்கி மொத்தமா மௌன மொழிய கேக்க வைக்கனும்டா...

நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!


காப்பி அடிக்கிறதையும் எப்படி டீஸண்டா சொல்லுது பார்.. டேய் தேங்கா மூடி தலையா... காதல் உலக பொதுமறையா?? இது திருவள்ளுவருக்கு தெரியுமாடா?? ஏன் டா... ஒன்னாப்புல இருந்து ஏழாப்பு எட்டு வருசம் படிச்சது வரைக்கும் அவ பேர சொல்லித்தானடா அவளுக்கு அட்டண்டென்ஸ் எடுத்தானுங்க? அத விடுடா... பள்ளிக்கூட பாத்ரூம்லகூட என்னமோ எல்லோரோ ஓவியம் மாதிரி அவ பேர எழுதி வச்சிருக்கானுங்க.... இதுல அவ பேரு யாரும் எழுதாத கவிதையா??

இப்பொழுதெல்லாம்
இயற்கையோடு சண்டையிடுவது
அன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!


ஆரம்பிச்சிட்டானுங்கடா.... டேய் பஞ்சர் ஒட்டுன பிஞ்ச டயர் தலையா... ஏன்டா.. இதுக்கு முன்னால எல்லாம் நிலா, ஆறு, சூரியம், வானவில், அது இதுன்னு தனி தனியா புடிச்சி இழுத்து கவுஜ எழுதுனீங்க.. இப்ப மொத்த இயற்கையையும் வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சிட்டீங்களடா?? உங்கள எல்லாம்... டேய்.. வேண்டாம்டா... அசிங்கமா பேச கூடாதுன்னு நெனச்சிட்டு இருக்கேன் டா... வீணா ஏதாவது பேச வச்சிடாதீங்கடா...

கவுஜ மக்களே!! இந்த கவிதைகளயெல்லாம் நீங்க எழுதுனதுன்னு தெரிஞ்சிருந்தா கவுண்டர் பெல் இப்படி எல்லாம் திறனாய்வு பண்ணிருக்க மாட்டாரு.. என்னோட நண்பன், அந்த கரிச்சட்டி மண்டையன் எழுதுனதுன்னு நெனச்சித்தான் மணி அப்படி பேசிப் புட்டாரு... ஸோ... இதெல்லாம் மனசுல வச்சிக்காதிய... பாவம் காலிங்...

முந்தைய திறனாய்வு - 1
திறனாய்வு - 2

Thursday, July 17, 2008

காதலிச்சா கவிதை வருமா?

திருவள்ளுவர் காலத்துல இருந்தே தீர்க்கப் படாத கேள்வி இதுதாங்க. காதலிச்சா கவிதை வருமா? சரி... நாமதான் 'ப்ரம்மாண்டம் என்பது நமிதாவா? மாளவிகாவா?' போன்ற மில்லியன் டாலர் அறிவியல் கேள்விக்கெல்லாம் விடை காண விக்கில இருந்து வில்லுப்பாட்டு வரைக்கும் தேடுற ஆளாச்சே. சரி நமக்குத் தெரிஞ்ச சில பல காதலர்கள கேட்டுப் பாப்போம்னு தேடிப் பாத்தா, உருபடாத பயலுங்க!! எங்க செட்ல எல்லாருமே இன்னும் சிங்கிளாதான் காஃபி டேல கப்பச்சினோ குடிச்சிட்டு திரியறானுவ‌. அப்புறம் தேடி புடிச்சு கடைசியா காதலிச்சிட்டு இருக்குற ஒருத்தன் சிக்குனான்.

அவங்கிட்ட நம்ம கேள்வியக் கேட்டா 'அப்படியா?'ங்றான். 'அடப்பாவி... நீ கவிதை எழுதலைனா அது உண்மக் காதலே இல்லை'னு நாமளும் கொளுத்திப் போட, பயபுள்ள அதுக்குள்ள பேனாவையும் டைரியையும் தூக்கிட்டு பீச் பக்கமா போயிட்டான். அப்புறம் அவனும் கஷ்டப்பட்டு ஒரு கவுஜைய எழுதி அவன் காதலிக்கிட்டக் காட்டிருக்கான். அதப் பாத்துட்டு அவனோட காதலி விழுந்து விழுந்து சிரிச்சிருக்கா. அதுமட்டுமில்லாம இனி இது மாதிரி காமெடி பண்ணா அப்புறம் டைவர்ஸ் பண்ணிடுவேன்னு மெரட்டிப்புட்டா. பயபுள்ள வந்து என் மூஞ்சிலேயே குத்திருப்பான். நல்ல வேளை அவன் இந்தியாலையும் நான் புதரகத்துலையும் இருந்ததால எஸ்கேப்.

சரி.. இங்கதான் பல பேரு கவுஜன்னு டைட்டில போட்டுக்கிட்டு சுத்துறானுவளே.. அவிங்கக் கிட்ட கேக்கலாம்னு சில மக்கள புடிச்சேன். மொதல்ல, 'இந்த கவுஜைய எப்படி எழுதித் தொலயிறிய?'னு கேட்டேன்.

"மொதல்ல யாருமே இல்லாத தனிமையான நேரத்துல.."னு ஆரம்பிச்சாரு.

"என்னங்க இது... ஏதோ பெரிய வில்லங்கமான வேலய பண்ண போற மாதிரி பிட்ட போடுறீங்க?"

"சொல்லுறத முழுசா கேளுல வீணப் பயல‌... தனிமையான நேரத்துல அப்படியே விட்டத்தப் பாத்துக்கிட்டே இருந்தா..

விரைந்து வரும்
விட்டில் பூச்சியாய்
விட்டத்தில் முழைக்கும் விடியல்... கவிதை

அப்டீனு கவுஜ வரும்"னு சொல்றார்.

நானும் அப்படியே அண்ணாந்துப் பாத்தா பாட்டி வட சுட்ட படந்தான் ஓடிச்சு.

அப்புறம் அவரே... 'காதலிச்சா கவிதை வருமோ, வராதோ தெரியாது... ஆனா கவித எழுத ஆரம்பிச்சா, கவிதைல காதல் ரொம்ப ஈஸியா வரும். அப்படியே நடக்க முடியாத ஒரு மேட்டர எழுதி அது "அன்பே உன்னாலதான்"னு ஒரு பிட்ட ஆட் பண்ணிட்டா அதுதான் காதல் கவித.'னு சொன்னாரு.

சரி... நாமளும் கொஞ்சம் உக்காந்து விட்டத்தப் பாத்துக்கிட்டே வட்டம் போட்டு யோசிச்சதால வந்த விளைவுதாங்க இந்தக் காதல் கவுஜைஸ்...

---------

அடித்து திருத்தப் படாமலேயே
கவிதையாகிறது
எல்லா கிறுக்கல்களும்
உனை எழுதும் போது மட்டும்...

*****

என் நட்புப் பட்டியலில்
முந்திச் செல்கிற‌து...
நான் இல்லாத நேரங்களில்
உன் தேகம் தொட முற்படும்
வில்லத்தன மழையைத்
தடுத்து நிறுத்தும்
உன் கத்தரிப்பூ நிற‌ குடை!!

*****

சென்னைக் கண்ணையும் மிஞ்சிய‌
தொற்று நோயுனக்கு...

உன் விழிவிழுந்த நாள்முதல்
இமைகள் மூடியபின்தான்
விரிகிறது காட்சிகளெனக்கு...

*****

உன் பெயரை வைக்கச் சொல்லி
மொழி வளர்ச்சிக் கழக‌ வாயில்களிலெல்லாம்
உண்ணாவிரதமிருந்து அடம்பிடிக்கிறது
அழகு!!

*****

நீ...
புன்னகை தேசத்திலும்
போர்தொடுக்கும் சமாதான புறா...

Thursday, July 10, 2008

ஏய்ய்...டேய்ய்ய்..ஆங்ங்..கொக்கமக்க..அவ்வ்

நலிந்து வரும்(???) நடிகர் சங்கத்துக்காக மலேசியா, சிங்கப்பூர், துபாய்னு கலைவிழா அது இதுன்னு நடந்துக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல, பாய்ந்து வரும் பதிவர் சங்கத்துக்காக ஒரு விழா நடந்துட்டு இருக்குது. அதுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருக்குற சில பல பெருந்தலைகள் ரகசியமா பேசிட்டு இருந்தத அப்படியே நோட் பண்ணி இங்க லைவ் ரிலே டிலேடா பதிபரப்புறோம்...

"மொக்கையை மையமாக வைத்து பதிவிடும் பெரியோர்களே...
ஜல்லியை சல்லடைபோல் சாமான்ய மக்களுக்குக்கும் எடுத்தியம்பும் ஜாம்பவான்களே...
கொலவெறி பதிவுப் போட்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும் அன்பர்களே...
மற்றும் இங்கு பின்னூட்டம் போட்டு, பின்னூட்டம் எடுத்த கிறுக்கு கண்ணையா.... ச்சே... பழைய காமெடிய காப்பி அடிச்சு அடிச்சு அப்படியே வந்திடுச்சு... மன்னிச்சிக்கோங்க!! மற்றும் சரக்கு தீர்ந்த தருணத்தில் பஞ்சம் தீர்க்க வரும் இங்கே வீற்றிருக்கும் சிறப்பு விருந்தினர்களே...."

யாரு அந்த சிறப்பு விருந்தினர்கள்னு ஒரே கன்பியுஷனா இருக்கா? நமக்கு நாமளே ஆப்பு அடிச்சதுக்கு அப்புறம் ஸ்பெஸலா ஆப்பு அடிக்கிற கேப்டன் அண் கோ தாங்க!!

"அனைவரையும் பதிவர் சங்கத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்...", அப்டீனு ஒரு மூத்த பதிவர் வரவேற்புரை வழங்கிட்டு இருக்காரு.

"அடப்பாவிகளா!! இதுக்கும் சங்கமாடா?? சங்கம் வளர்த்த தமிழ்நாடுன்னு சொன்னாலும் சொன்னாங்க... ஆயாக்கடை பன்னை திண்ணு ஆய் போனவர்கள் சங்கம்... தகரடப்பாவை தவறவிட்ட டப்பா தலையன்கள் சங்கம்னு நம்ம ஆட்கள் எல்லாத்துக்குமே சங்கம் வைக்கிறானுங்களடா... நம்ம தமிழன் எங்க போனாலும் திருந்தவே மாட்டானாடா", முதல் வரிசையில் மும்முறமாக கவனித்துக் கொண்டிருந்த விவேக். ஸைட்ல பாத்தா நம்ம கேப்டன் கண்ணுல தவுஸ்ண்ட் வாட்ஸ்ல ஒரு ரெட் லைட்டு(அந்த மாதிரி லைட் இல்லீங்க...முந்தா நாள் அடிச்ச லோக்கல் சரக்கால வந்த இன்னும் தெளிவாகாத எஃபெக்ட் தான் அது) எரியுது.

"ஏனுங்க கேப்டன்?? ரொம்ப கோவமா இருக்கீங்க?" னு விவேக் லைட்டா பிட்ட போட

"ஏய்... வானத்துல இருக்குற சூரியானோட எண்ணிக்கை... ஒன்னு... ஒரு உறைல இருக்க வேண்டிய கத்தி... ஒன்னு"

"ஏன்டா டேய்... நீ சாதரண டையலாக்க கூட அப்படித்தான் சொல்லுவியாடா?? உன்னைய ஓட்டி ஆயிரம் பதிவுப் போட்டாலும் நீ திருந்த மாட்டடா"

"நான் சொல்றத முழுசா கேளுங்க தம்பி..."னு ஒரு கர்ஜனை சவுண்ட விட்டுட்டு, "அதே மாதிரி... இந்தியாக்கு.... இந்தியாக்கு என்ன?? இந்த உலகத்துக்கே ஒரே ஒரு கேப்டன் தான்... அது நான் தான்... எங்க இருந்தோ ஒருத்தன் ட்ரெயின பின்னால தள்ளுறதும், கூளிங்கிளாஸ் போட்டு மலைல ஏறுறதும்னு இருக்கான். அவன வைஸ் கேப்டனாக்கி என்னோட கம்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க இந்த பதிவு பசங்க..."

"அடப்பாவி!! இவிங்க கபடி ஆடுறதுக்கு இன்னொருத்தன் சிக்கிட்டான்னு சந்தோஷப் படுறத விட்டுட்டு... இப்படி ஆப்பு வாங்குறதுக்கு அட்வான்ஸ் புக்கிங்ல அட்டண்டென்ஸ் கொடுக்குறானே..."னு விவேக் கம்மி சவுண்டல கமெண்ட் கொடுக்க கேப்டன் இன்னும் கண்டினிவ் பண்றாரு.

"அதுமட்டுமா... என்னோட கஜேந்திரன் படத்துல வர்ற கயித்துச் சண்டைய பாத்து காப்பி அடிச்சு ஹாலிவுட்ல கிங் காங்கும் டைனோஸரோட கயித்துல சண்ட போடுறத எடுத்தானுங்க... அதெல்லாம் இவனுங்க விட்டுடுவானுங்க. ஆனா... ஷாக்குக்கே ஷாக் அடிக்கிற என்னோட யுனிவர்ஸல்வுட் ஐடியாஸ எடுத்து நையாண்டி பண்றானுங்க..."னு கேப்டன் கொதிப்படைகிறார்.

"இவரு போடுறது எல்லாம் மொக்க பின்னூட்டம்...
அத பாத்ததும் எல்லாரும் எடுப்பாங்க ஓட்டம்"னு இன்னொரு மூத்த பதிவர மேடைல புகழ்ந்துட்டு இருந்தது ஒருத்தர் காதுல விழ

"டேய்... யாருடா போடுறது பிட்டு??
இது மாதிரி பேசுறது எனக்கும் சிம்புவுக்குமான காப்பி ரைட்டு...
அத விட்டுட்டு...
நீ ஆகிக்கோ அப்பீட்டு..
ஏய் டண்டணக்கா ஏய் டணக்குடக்கா"னு டீ.ஆர். ஆஜர் ஆக

"அடப்பாவி!!! ஆப்படிக்குறவங்க மத்தில ஆஃப் பாயில் போட்டு வரவேற்குறானே!!! சொந்த செலவுல சூனியம் வைக்க இவனால மட்டும்தான்டா முடியும்"னு விவேக் ஜெர்க் ஆகிறார்.

கோவமா ஒக்காந்திட்டு இருக்குற கேப்டனோட பக்கத்து சீட்ல பார்க் பண்ணிட்டு அவர் காதோரமா தன் சோகத்த சொல்லி முறையிடுறாரு டி.ஆர்.

"தாங்க முடியல இவனுங்க தொல்ல...
அத தீத்து வைங்க முதல்ல...
சீரியஸா நானும் எடுக்குறேன் படம்...
அத காமெடியாக்கி பண்றானுங்க அடம்..."

"ஏன்டா டேய்... ஜுனூன் தமிழ்ல இப்படி ஒடச்சி ஒடச்சி டயலாக்லையே கவு(ச்)ஜ வாசிச்சா இவனுங்க மலர்வளையம் வைக்காம மணமாலையா சூட்டுவாய்ங்க??"னு ஸைக்கில் கேப்ல கெடா வெட்டுனாரு விவேக்.

"அவரு பொழப்பே இங்க நாறி போய் இருக்குதாம்... இதுல பரட்ட புராணத்துக்கு பின்னூட்டம் போட போறாரா இவரு... ஆங்..." னு இண்ட்ரோ இல்லாமலேயே எண்ட்ரீ கொடுக்குறார் S.J.சூர்யா.

"வாடா வா... அது என்னடா கடைசில ஒரு 'ஆங்' 'ஆங்'னு சகிலா சவுண்டு விடுற மாதிரியே சவுண்ட விடுற"

"அது என்னோட மேனரிஸம் ஆங்... எப்படி அந்த காலத்துல நம்பியார்க்குன்னு ஒரு மேனரிஸம் இருந்திச்சோ... அதே மாதிரி இது என்னோட மேனரிஸம்.. ஆங்..."னு தன்னுடைய சுயசரிதைய பாடிட்டு, "கலக்கப் போவது யாரு? அசத்தப் போவது யாரு?க்கு அப்புறம் நமக்கு அதிகமா ஆப்பு அடிக்கிறது இவனுங்க தான்... ஆங்... டி.வி. காரனுங்களாவது பரவாயில்ல... விளம்பரத்துக்காக பண்றானுங்க. ஆனா வெறும் களப்பைய மட்டும் கைல வச்சிட்டு ஸ்கெட்ச் போட்டு கலாய்ச்சிட்டு இருக்காய்ங்க இந்த ப்ளாக்கர்ஸ்..."


"இப்படி.."னு விவேக் என்னமோ பேச ஆரம்பிக்க அவர தடுத்து, சூர்யா என்னமோ சொல்றாரு.

"ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.... ஆங்..."

"சரி... சொல்லித் தொல..."

"அதான் சொல்லிட்டனே.... ஆங்..."

"டேய்... என்னமோ இருக்கு?? ஆனா இல்ல... ன்னு பில்கேட்ஸ் ரேஞ்சிக்கு பில்ட்-அப் கொடுத்த... மவன... உன்ன கலாய்ச்சி ஆயிரம் போஸ்ட் போட வச்சிருவேன்"

"அதான் சொன்னனே.. மொதல்ல 'ஆங்' சொல்ல மறந்துட்டேன்... அப்புறமா அத சொல்லிட்டேன்... ஆங்"

"அடப்பாவிகளா!!! இப்படி இவனுங்க வாய்க்கு பபுல்கம்ம கொடுத்தா... அத மென்னு திண்ணு முட்ட விடாம, மோந்துப் பாத்து ஏப்பமாடா விடுவாங்க??"

இது எல்லாத்தையும் கவனிச்சிட்டும் கவனிக்காத மாதிரி ஒருத்தர் தலைல முக்காடு போட்டு உக்காந்திருந்தார்ர். அவர தலைல இருந்த துணிய எடுத்துப் பாத்தா... அட அது நம்ம கவுண்டர் பெல்...

"என்ன சார்.. இப்பெல்லாம் நீங்க ஒரு படத்துலையும் நடிக்கிறதே இல்ல??"னு விவேக் லைட்டா பத்த வச்சாரு.

"டேய் கோத்து விடுற கோமட்டி தலையா!!! உங்க நெலமையாவது பரவாயில்லடா.... இங்க எவனுக்கு ஆப்பு அடிக்கிறதா இருந்தாலும் என் பேர போட்டு அடிச்சிடுறானுங்க. அது எல்லாமே நாந்தான் போட்டேன்னு எல்லாரும் கொலவெறில இருக்கானுங்க. அப்புறம் எப்டிடா எனக்கு படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பாங்க தயிர்ச்சட்டி மண்டையா..."னு கவுண்ஸ் டெசிபல்ல கூட்ட,

"ஆமாங்கண்ணா இவனுங்க பண்ற அக்கப்போரால, இனி எவனுமே உள்ளூர் நாயகன்னு கூட டைட்டில் போட மாட்டானுங்கண்ணா"னு விவேக் சமரசம் பண்றாரு.

"ஆமாம் குருட்டுக் கண்ணாடி தலையா.... நீ கூட சின்னக் கலைவாணர்னு சம்பந்தமே இல்லாம ஒரு டைட்டில போட்டுட்டு திரியறதா சொல்றாங்களே"னு கவுண்டர் சொல்ல விவேக் அந்த எடத்த விட்டு அளறி அடிச்சு கெளம்புறார். அப்போ பேக் ரவுண்ட்ல இருந்து ஒரு சவுண்ட் வருது.

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

எல்லாரும் திரும்பிப் பாத்தா வடிவேலு அங்க அவரோட ஸ்டைல்ல அழுதுட்டு இருக்காரு.

"நீங்களாவது பரவாயில்லீங்கடா. செமஸ்டர் பரிட்சை மாதிரி எப்பவாவதுதான் ஆப்பு வாங்குவீங்க. இங்க எனக்கு ஆப்பு அடிக்கனும்னே ஒரு சங்கத்த வச்சிருக்கானுங்க. கட்டதுர மாதிரி எதிரிங்கள கூட நம்பிடாம்லாம்டா. ஆனா, நமக்குன்னு சங்கம் வச்சி டொண்டி ஃபோர் அவர்ஸ்... இருவத்து நாலு மணி நேரம்... மூச்சுத் தெணர தெணர ஆப்படிக்கிறானுங்கடா... அது பத்தாதுன்னு மாசத்துக்கு ஒருத்தன அட்லாஸ்ங்குற பேருல அப்ரண்டீஸா சேத்துவிட்டு அடிஷனல் ஆப்ப ஆஃபர்ல அடிக்குறானுங்கடா... அவ்வ்வ்வ்வ்"னு அவரு அழ, அவரோட நெலமைய நெனச்சு எல்லாருமே உச்சு கொட்டுறாங்க.... :)))

Monday, July 7, 2008

லொல்லு சபா 'ஜெயில்'

பதிவெழுத ஆரம்பிச்ச காலத்துல வல்லவன் படத்தப் பாத்த கொலவெறில லொல்லு சபா ஸ்டைலுல ஒரு பதிவு ஒன்னு எழுதுனேன். அதே மாதிரி அப்ப வந்த வெயில் படத்துக்கும் ஒரு பதிவ எழுதி ட்ராஃப்ட்ல போட்டு வச்சிருந்தேன். சங்கத்துல இப்ப போடுறதுக்கு எதுவுமே தோன மாட்டேங்குதுங்றதுனால.... ஹி...ஹி... இங்க அந்த பதிவ போட்டுடுறேன் மக்கா..

---------------------

என் பேரு முருகேசன். சின்ன வயசுல எங்கப்பா பொறுக்கி வச்சிருந்த கட்ட பீடிய சுட்டு நானும் இழுத்துட்டேன்னு எங்க அப்பா என்ன போட்டு அடிச்சாரு. அந்த கோவத்துல, அவரு பொறுக்கி வச்சிருந்த எல்லா கட்ட பீடிகளையும் தூக்கிக்கிட்டு நான் ஊர விட்டே ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம், எங்க சுத்தியும் ஒரு ஃபிகரும் என்ன ஏறெடுத்து பாக்காததால, எங்கப்பனாவது எனக்கு ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி வைப்பான்னு, இருவது வருசம் கழிச்சு இப்பத்தான் நான் ஊருக்குப் போறேன்.


முருகேசன் அவரோட கிராமத்து வீடு பக்கம் வர்றாரு. அவரோட அப்பா, இப்பவும் அதே கட்ட பீடிய அடிச்சுட்டு திண்ணைல உக்காந்திருக்காரு.

"நைனா... நாந்தாம்பா ஒம் புள்ள முருகேசன்"

அவரு கண்டுகிடவே இல்ல.

"டேய் அப்பா... நாந்தான் டா உன் புள்ள முருகேசன்", கொஞ்சம் சத்தமாவே முருகேசன் சொன்னாரு.

"நீதான் என் புள்ளைங்றதுக்கு என்னடா சாட்சி? என் சொத்த ஆட்டையப் போடுறதுக்காக இப்படி வேசம் போட்டு வந்திருக்கியா?"

"ஆமா... இவரு பெரிய துபாய் அலி பாய்... நாலஞ்சி கப்பல் விட்டுறுக்காரு. ஏன் டா அப்பா, போடுறதுக்கு ஒரு பனியன் கூட இல்லாம, வெறும் ஒடம்புல ஒக்காந்திருக்க... ஒனக்கு இந்த ஓவர் சீன் தேவையா? உண்மைய சொல்லு, காசு இல்லாமத்தானே ஷேவிங் பண்ணாம, இப்படி பண்ணாட மாதிரி தாடி வச்சிட்டு திரியிற?"

"டேய்... வெறும் ஒடம்புல ஒக்காறது கிராம பழக்கம்டா"

"ஆமாங்கடா... உங்களுக்கெல்லாம் மனசுல அர்னால்டுன்னு நெனப்பா? அரசாங்கத்துல அரசியல் வாதிங்க சின்ன வீட்டுக்கு வூடு கட்டுனது போக, மிச்சக் காசுல இங்க கக்கூஸ கட்டுனா, அதுல போகாம, இந்த ஊரையே நாசம் பண்ணிட்டு, 'இந்த சுகம் வேற எங்கயாவது வருமா'ன்னு டையலாக் விடுறது ... இப்படி சட்டைய போடாம, போற வர்ற பொம்பள புள்ளைங்க கிட்ட சீன் போடுறது... கெழவி மூக்கு பொடிய திருடிட்டான்னு, ஒன்னே கால் ருவா மேட்டருக்கெல்லாம், பஞ்சாயித்துங்ற பேருல மூனு மணி நேரம் மொக்கைய போடுறது... கலாம் '2020 இல் இந்தியா வல்லரசு'ன்னு பேசிக்கிட்டு இருக்குற இந்த காலத்துலையும் உங்களோட அக்கப்போரு தாங்க முடியலடா..."

"நீ என்ன சொன்னாலும் உன்ன என் புள்ளைன்னு ஏத்துக்க முடியாதுடா"

என்னோட அப்பா அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் தம்பி கதிர் அங்க வந்தான்.

என் தம்பிக்கு எம் மேல ரொம்ப பாசம். சின்ன வயசுல, நான் பக்கத்து பெஞ்ச் பாண்டியம்மாவ சைட் அடிச்சிட்டு இருந்தத பாத்து, கமலா டீச்சர் என்ன வஞ்சிப் புட்டாங்க. அதுனால கோவப்பட்ட என் தம்பி, பள்ளிக்கூட சுவத்துல, 'கமலா டீச்சருக்கும், கணக்கு வாத்தியாருக்கும் காதலா?"ன்னு எழுதிப் போட்டு பழிவாங்குனான். என் தம்பிக்கு எம் மேல அவ்வளவு பாசம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, ஒரு வெளம்பர கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். ஊருல யாராவது காதல் பண்ணினாங்கன்னா, என் தம்பியோட கம்பெனித்தான் இந்த ஊருக்கே தெரிய படுத்தும். எல்லா சுவர் விடாம, விவேக் ஸ்டைல்ல, 'பாலா சன்மதி ஜங் ஜங்'னு எழுதி வைப்பான். பெரிய பெரிய அரசியல்வாதிங்கக்கிட்ட இருந்து கூட எதிர்க்கட்சிக் காரங்க வீட்டு சுவத்துல எழுதச் சொல்லி டெண்டர் வரும்
.


"டேய் கதிர்.. நான் அண்ணன் டா"

"ஏன் டா.. நெத்தில சொட்டையும், மொகத்துல தாடியும் வச்சிட்டு, பாதி கெழவனா வந்து நிக்கிற உன்னப் பாத்தாலே தெரியல... நீ என்னோட பெரியவந்தான்னு... அதுல என்ன டா நொண்ணன் டா"

"அது இல்ல டா.. சின்ன வயசுல ஓடிப் போன முருகேசன்"

'ஆஹா... இருந்த ஒரு குடிசையையும் ஆட்டையப் போட வந்துட்டானே', என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்

"அண்ணே... வாண்ணே உள்ள"

"அவன் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. ஓடிப் போனவன் சும்மாவா போனான். என்னோட செருப்பத் தூக்கிட்டு ஓடிப் போயிட்டான். அது எப்படிப் பட்ட செருப்பு. அதப் போட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறதே தெரியாது", முருகேசனின் அப்பா.

"எப்படிடா செருப்பு போட்டதுத் தெரியும். அது என்ன பாட்டா செருப்பா? பாட்டமே இல்லாத செருப்பப் போட்டுக்கிட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறது எப்டிடா தெரியும்? ஏன் டா அண்ணா... அந்த செருப்ப நாய்கூட துக்கிக்கிட்டுப் போகாதா.. நீ என் டா அத எடுத்துட்டுப் போனா.. அத விடுடா... நான் ரூட் விட்டுட்டு இருந்த பக்கத்து வீட்டு பாண்டியம்மாவ ஏன் டா இழுத்துக்கிட்டு ஓடுன?"

"அத ஏன் டா கேக்குற? அவளும் என்னைய விட்டுட்டு ஓடிப் போயிட்டாடா"

"அப்புறம்?"

"அப்புறம் என்ன... நானும் ஒரு ஊருல பயாஸ்கோப் காட்டுற ஒருத்தன்கிட்ட வேலைக்கு சேந்து கஷ்டப்பட்டு, அவனுக்கு குவார்ட்டர்ல வெசவச்சி கொன்னு அந்த தியேட்டர் ஓனர் ஆனேன்"

"ஆமாம்.. பயாஸ்கோப்புன்னா அந்த கமல் படத்துல, 'கத கேளு கத கேளு'ன்னு ஒருத்தர் தூக்கிட்டு வருவாரே அதானே"

"அது இல்லடா.. இந்த லென்ஸு, கண்ணாடிய வச்சி, வெள்ள வேட்டில வாத்தியார் படத்தப் போடுவேமே. அது"

"அடத் தூ. சரி...உன் வாழ்க்கைல காதல் வரவே இல்லையாடா"

"வந்திச்சே.. நான் பயாஸ்கோப் காட்டுற தெருவிலத்தான் மீனு வித்துட்டு இருந்தா ஒருத்தி.. அவளை எப்படியோ கரெக்ட் பண்ணி காதல் பண்ணிட்டு இருந்தேன். சரி அவள கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா, அவளோட பழைய புருசனோட புது பொண்டாட்டியோட அப்பாத்தான் நான் கொன்ன பயாஸ்கோப் ஓனர்னு என்னோட பயாஸ்கோப்ப புடிங்கி அடிச்சு தொரத்திட்டாங்க. அப்புறம்தான் இங்கன வந்தேன். ஆமாம் கதிரு நீ கூட ஒருப் பொண்ண லவ் பண்றியாமே", அன்று கதிரைப் பாத்து கண்ணடிகிறார் முருகேசன்.

"அடப்பாவி.. நானே குச்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். என் ஆளையே தள்ளிட்டுப் போகப் பாக்குறியா. உன்னெல்லாம் வீட்டுக்குள்ளையே சேக்கக் கூடாது", கதிர் முருகேசனை துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

"ஆமாம்.. இந்தப் படத்துலத்தான் ஜெயிலே வரலியே.. ஏன் 'ஜெயில்'னு பேரு வச்சிருக்கீங்க", மனோகர் கைய ஆட்டி ஆட்டி கேட்கிறார்.

"ஏன் டா டேய். உனக்குக்கூடத்தான் நல்லக்கண்ணன்னு பேரு வச்சிருக்காங்க. உன் கண்ண பாக்குறவனுக்கெல்லாம் மெட்ராஸ் ஐ வருதே. அதப் பத்தி யோசிச்சியா? பெருசா நொட்ட சொல்ல வந்துட்ட", கதிராக சந்தானம் மனோகரை துவைக்கிறார்.

Wednesday, July 2, 2008

நாங்களும் உலகநாயகந்தான்!!!

ஒலக சினிமாவ ஒரண்ட இழுத்து நெம்ப நாளாச்சேன்னு நானும் கொரியா, ஸ்பானிஷ், இத்தாலின்னு படங்கள தேடிட்டு (ஸைட்ல கப்பிக்கிட்ட கருத்து கேட்டுக்கிட்டே) இருந்த சமயத்துல மொக்கை போடுறதுக்குன்னே நட்பு ஒருத்தன் இந்தியாவுல இருந்து ஜிடாக்ல தூது அனுப்புனான். சரி பெங்களூர் ஃபிகர்கள பத்தி விசாரிக்கலாம்னு நானும் நம்பி ஒரு ஸமைலியப் போட்டு ஏழரைய ஏணிப் போட்டு வரவேத்துத் தொலச்சிட்டேன். அங்கிருந்து இன்னும் ரெண்டு பேரு கான்ஃப்ரன்ஸ்ல ஜாயிண்ட் அடிச்சானுங்க. கான்ஃபரணன்ஸ் போட்டாலே எவனோ ஒருத்தன் சிக்க போறான்னு அர்த்தம். வாடிக்கையா மாட்டுற நண்பன் அன்னைக்கு சிக்காம போக பயபுள்ளைங்க டார்கெட் என் மேல பாஞ்சி டோட்டல் ஒன்றரை மணி நேரமும் பேண்டேஜ் மேல டேமேஜ் ஆற அளவுக்கு கும்மியடிச்சிட்டாங்க. அதோட சுருவாக்கம் இங்கே...

"என்னடா.. உன்னோட ரெண்டு கியுபிக்கல் தாண்டி ஒரு சூப்பர் ஃபிகர் இருக்குதுன்னு சொன்னியே.. எப்படி இருக்கா அவ??"

"ங்கொய்யால... நான் நல்லா இருக்கேனா, இல்லையானு ஒரு கேள்வியும் கேக்கல. எடுத்த உடனே எவளோ ஒரு ஃபிகர் பத்தி கேக்குறியேடா?"

"அம்புட்டு நல்லவனாடா நீயீ?? நீ எதுக்கு என் கூட சேட் பண்ணுற‌ன்னு எனக்கு தெரியாதா?? பக்கத்து வீட்டு பவித்ரால இருந்து முக்குச் சந்து முனியம்மா வரைக்கும் விசாரிக்கத்தானே..."

"ஏன் இந்த கொலவெறி?? நண்பன் பிங் பண்றானே... பயபுள்ளைட்ட பேசலாம்னு பாசத்தோட வந்தா... ஏன் இப்படி??"

"சரி... அமெரிக்கால எப்படிடா பொழுது போக்குறீங்க?", இந்த கேள்விய அவன் கேக்கும்போதுதான் இன்னொரு ரெண்டு பேரு வந்து சேந்தாங்க.

"என்ன‌ ப‌ண்ணுவோம்?? இப்ப‌டி உங்க‌ள‌ மாதிரி யாராவ‌து கெடச்சா மூச்சு தெண‌ர‌ வ‌ரைக்கும் மொக்க‌ போடுவோம். அட்டு காமெடிக்கெல்லாம் பேக்‍ர‌வுண்ட்ல‌ ஆள‌ வ‌ச்சி சிரிக்கிற இங்க்லிஷு சீரிய‌ல்க‌ள‌ எல்லாத்தையும் ஒன்னு விடாம‌ பாப்போம். அப்படி, யாருமே சிக்க‌லைன்னு வையீ.... இருக்க‌வே இருக்கு ஆர்குட். அதுலையும் புதுசா ஒன்னு போட்டிருக்கான். நாம‌ என்ன‌த்த‌ மாத்துனாலும் எல்லாத்துக்கும் வெளிச்ச‌ம் போட்டு காட்டிடுவானுங்க‌. ஸோ... க‌மிட்டட் னு ஸ்டேட‌ஸ‌ மாத்திட்டா அப்புற‌ம் எல்லாரும் வ‌ந்து விசாரிக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌. அப்புற‌ம் அவுங்க‌ளோட‌ கொஞ்ச‌ நேர‌ம் மொக்க‌"

"இதெல்லாம் ஒரு பொழ‌ப்பு. உங்க‌ள‌ எல்லாம் ஒழுங்கா வேல‌ செய்யுங்க‌டானு ஆன்ஸைட் அனுப்புனான் பாரு... அவ‌ன‌ சொல்ல‌னும்"

"இது ம‌ட்டுமாடா?? ப்ளாகுங்கற‌ பேருல‌ இவ‌னுங்க‌ ப‌ண்ற‌ அக்க‌ப்போரு தாங்க‌ முடிய‌ல‌டா", அதுவ‌ரைக்கும் அமைதியா இருந்த‌ இன்னொருத்த‌ன் ஆர‌ம்பிச்சான்.

"அப்ப‌டி என்ன‌டா ப்ளாக்ல‌ எழுதுவீங்க‌?"

"அது ஒரு பெரிய‌ காமெடி மாப்ள‌... நான் சொல்றேன் பாரு"ன்னு ஆர‌ம்பிச்சு போட்டு தாக்கிட்டான் என்னோட‌ அந்த‌ அமைதியான‌ ந‌ண்ப‌ன். இது என்னோட‌ ந‌ண்ப‌ன் சொன்ன‌துதான் ம‌க்க‌ளே... நாந்தான் சொன்னேன்னு த‌ப்பா நென‌ச்சி போடாதிய‌... :)))

"வெயிலில் ம‌ழை, குடைக்குள் மழை, பீங்கான் ம‌ழைன்னு என்ன‌மோ வைர‌முத்துவோட‌ ஒன்னுவிட்ட‌ பேர‌ன்னு ம‌ன‌சுல‌ நென‌ச்சிட்டு த‌லைப்ப‌ வ‌க்கிற‌து. அந்த மழையும் இவிங்க கைல மாட்டிக்கிட்டு படாத பாடு படுது. ஆட்டைய‌ப் போட்ட‌ துண்டுபீட‌ய‌ அடிச்ச‌தையே ஏதோ ஐன்ஸ்டின் லெவெலுக்கு சாத‌னை ப‌ண்ண‌ மாதிரி எழுதுற‌து. அதுலையும் த‌லைப்பு வைப்பாங்க‌ பாரு... 'க‌ள‌வாடிய‌ க‌ட்ட‌பீடி'னு. அப்படியே பொலேர்னு நாலு அப்பு அப்புற மாதிரி. இவ‌னுங்க‌ என்ன‌மோ எழுதி தொல‌ச்சிட்டானேன்னு ஐயோ பாவ‌ம்னு 'உங்க‌ள் எழுத்து அருமை'னு கொஞ்ச‌ பேரு சில டெம்ப்ளேட் க‌மெண்ட‌ போடுவாங்க‌. அப்ப‌ இவிங்க‌ ஒரு டைய‌லாக் அடிப்பாங்க‌ பாரு. 'என்ன இருந்தாலும் உங்க‌ அளவுக்கெல்லாம் வ‌ர முடியுமா?'னு. கேட்டா த‌ன்ன‌ட‌க்க‌மாமாம். ஆனா, இவிங்க‌ள‌ ஒரு வித‌த்துல‌ பாராட்ட‌லாம்டா. எல்லாருமே வ‌டிவேலு மாதிரி எவ்வ‌ள‌வு அடிச்சாலும் தாங்குவாய்ங்க‌. மீச‌ முழுக்க‌ ம‌ண்ணா இருந்தாலும், ஒட்டாத‌ மாதிரியே ரியாக்ஷ‌ன் விடுவாய்ங்க‌"

"நானும் ப்ளாக் எழுதுற‌துக்கு ஏதாவது ஐடியா கொடுடா", இம்புட்டையும் கவனமா கேட்டுக்கிட்டு இருந்தவனுக்கு எப்படித்தான் இந்த ஆச வந்துச்சோ தெரியல :))

"அட‌ப்பாவி.... நீயுமா?? ச‌ரி.. சொல்லித் தொலைக்கிறேன். கேளு", ம‌றுப‌டியும் அசிங்க படுத்த ஆர‌ம்பிக்க‌ப் போறான்னு தெரிஞ்சுப் போச்சு. ந‌ம்ம‌ள‌ வேற‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்லிட்டாங்க‌. அத‌னால‌ அமைதியாவே இருந்துட்டேன். :((( அவன் சொன்ன ஐடியாஸ் கீழ்வருமாறு...

- 'க‌ன்னுக்குள் க‌ன்னிவெடி'ன்னு ஒரு ப்ளாக‌ ஆர‌ம்பிச்சு, 'அல்வாவை பிய்க்காம‌ல் திங்குவ‌து எப்ப‌டி?'னு டிப்ஸ் கொடுக்க‌லாம்.

- 'காத‌ல் கூச்செரியும் க‌ருவாட்டுக் குழ‌ம்பு'னு ஒரு காத‌ல் க‌வுஜ‌ய‌ எழுதி, 'ரெட்டை இன்றில்'னு ஒரு போர்ட‌ மாட்டி போட‌லாம்.

- ந‌ம்மூரு அழுகாச்சி சீரிய‌ல‌ பாத்துட்டு, 'சிப்பிப்ப‌ய‌'னு பேர‌ வ‌ச்சி 'உலக விம‌ர்ச‌னம்' எழுத‌லாம்.

- 'பூரிக்க‌ட்டையின் பின்ன‌ணியில் புற‌நானூறு'ன்னு, பூரிக்கட்டயால தங்கமணிக்கிட்ட அடி வாங்குன வரலாற்று சிறப்ப போட‌லாம். இந்த மாதிரி மேட்டருக்கு 'க‌ம்பி'ன்னு பேரு வ‌ச்சா அமோக‌மா வ‌ரலாம்ங்குற‌து ப‌திவுல‌க‌ நியும‌ரால‌ஜியாம்.

- வீக்கெண்ட் விக்க‌ல்னு வெள்ளிக்கெழ‌ம‌ ஆன‌ ம‌ங்க‌ள‌க‌ரமான‌ ம‌ங்கைக‌ள் ப‌ட‌த்த‌ப் போட்டு ஓட்ட‌லாம். ஆனா அதுக்கு சில‌ பேர் கிட்ட‌ இருந்து காப்பிரைட்டு வாங்க‌னும்.

- ஒரு ரெண்டு மூனு பேரா சேந்து 'பால் ட‌ம்ள‌ர்'னு ஒரு ப‌ளாக‌ ஆர‌ம்பிச்சு, ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ மொக்க‌ டைய‌லாக் எல்லாத்தையும் சேக‌ரிக்க‌லாம்.

- பாப்புலாரிட்டி வேனும்னா, 'மிட்லைட் ம‌சாலா'னு கில்பான்ஸா ஒரு டைட்டில‌ போட்டு, 'ந‌டுராத்திரியில் காய‌ வைப்ப‌து எவ்வ‌கை ம‌சாலா? அ)சிக்க‌ன் ம‌சாலா ஆ)ம‌ட்ட‌ன் ம‌சாலானு கேள்வி ப‌தில‌ போட‌லாம். ப்ளாக் பேரையும் வித்தியாச‌மா 'க‌ண்ண‌கிக் கூரை'னு வ‌ச்சிக்க‌லாம்.

- வ‌ய‌ச‌ கொற‌க்குற‌துக்குன்னே சில‌ ப‌சங்க‌ தடியன், குட்டிப்பையன், தலைப்பையன்னு பேர‌ வ‌ச்சிருப்பாய்ங்க‌. அவுங்க‌ள‌ மாதிரியே நாம‌லும் ஃபாளோ ப‌ண்ணிக்க‌னும். அப்ப‌டியே க‌மெண்ட் போடும்போதெல்லாம் 'சூப்ப‌ர் அங்கிள்', 'சூப்ப‌ர் ஆண்டி'னு இள‌வ‌ய‌சு மாதிரியே இமேஜ‌ மெயிண்டெயின் ப‌ண்ணிக்க‌னும். சில‌ பேரு 'வாலிப‌ன்'ங்குற‌ போஸ்டுக்காக‌வே ச‌ங்க‌த்துல‌ கூட சேந்திருக்காங்க‌ளாம்.

- அப்ப‌டி எதுவுமே கெடைக்க‌லைனு வையீ.. இருக்க‌வே இருக்கு சங்கிலித்தொட‌ர். 'அசிங்க‌மான‌ ஆறு' 'பைத்திய‌மாக்கும் ப‌த்து'னு ஒரு போஸ்ட்ட‌ போட்டு, நாம‌ ப‌ழி வாங்குற‌துக்கு டார்கெட் லிஸ்ட்ல‌ இருக்குற‌வ‌ங்க‌ளையும் இந்த‌ விளையாட்டுல‌ இழுத்து விட்டு கூத்துப் பாக்க‌லாம்.

பாத்தீங்க‌ளா ம‌க்கா!!! இந்த‌ போஸ்ட்ட‌ ப‌டிக்கிற‌ நீங்க‌ளே எம்புட்டு கொல‌வெறில‌ இருக்கீங்க‌. அவிங்க‌ கான்ஃப்ல‌ மாட்டுன‌ நான் என்ன‌ க‌தின்னு நென‌ச்சிப் பாத்துக்கிடுங்க‌. ச‌ரி என‌க்கு இங்குட்டு என்னல‌ ச்சோலின்னு கேக்குதியளா?? என்ன பண்ண சொல்லுதிய?? இம்புட்டு நாளா ரிஷான் அண்ணாச்சி பட்டைய கெளப்பிட்டு பின்னி பெடலுடுத்துட்டு இருந்தாவள்லா... அதனால சங்கத்துக்கு நெறய திஷ்டி பட்டுடுச்சாம். அதாம்.. அத எப்படி கழிக்கிறதுன்னு பாத்துட்டு இருந்தாவ. அதனால ஓரமா சலம்பிட்டு இருந்த என்னைய கூட்டியாந்து மொக்கயா ஏதாவது போடுப்பானு சொல்லிட்டாவ. அதான்...

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குதியளா?? இருக்குடே... இருக்கு... அத நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க...:)))

Thursday, July 5, 2007

சோடி போடுவோமா சோடி...

திருவாளர் திருமதி, சில்லுனு ஒரு சேலஞ்ச் அப்டி இப்டினு சன் டிவி, ஸ்டார் டிவி, விஜய் டிவின்னு எக்கசக்கமா போட்டிகள நடத்திட்டு வர்றாங்க. சங்கத்துச் சிங்கங்கள் பல பேர் இப்ப ஜோடி ஜோடியா சுத்துறதுனால அவிங்களுக்கும் அதே மாதிரி ஒரு போட்டிய நடத்தலாம்னு பிரபல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 'ஜி'க்கிட்ட அவரோட டைட் ஸெடிவ்ல்ல ஒரு டைம ஃபிக்ஸ் பண்ணியாச்சு. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரபல குருவி உருண்டை நிறுவனம் கண்ணம்மாபேட்டை பண்ணாடை அண்ட் கோ நிறுவனம் ரெண்டு குச்சி மிட்டாயும் ஒரு குருவி உருண்டையும் பரிசாகத் தரப் போகிறார்கள் என்பதையும் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓவர் டூ த ப்ரோகிராம்...

பக்கப்பட்டி பல்குத்தி குழுவினர் சும்மா கும்மு கும்முன்னு குத்துப்பாட்ட பேக் ரவுண்ட்ல போட்டு விட ஒவ்வொரு ஜோடியா அரங்கத்துக்குள்ள வர்றாங்க.

முதலில் சங்கத்தின் இளைய தளபதி சு(ம்)மா ஆரஞ்சு கலர் சட்டை, ஊதாவும், பச்சையும் மிக்ஸ் பண்ணின பேண்டும் போட்டுக்கிட்டு, கிளிப்பச்சை கலரு, அதுல கலர் கலரா பூப்போட்ட சேலை உடுத்தி அண்ணி சுமாவோட உள்ள நுழையிறாரு.

"என்ன வெட்டி. ராமராஜன் ஸ்டைல்ல வந்திருக்கீங்க?"

"இது ராமராஜன் காது. இளைய கேப்டன்காரு பால்யா ஸ்டைலு", படக்குன்னு சுமா அண்ணி எடுத்துவிட

'என்னது ராமராஜன் காதா? ஐயய்யோ.. அத இப்ப நளினிக்கிட்டகூட கேக்க முடியாதே..'

அடுத்தப்படியாக புது சிங்கம் தம்பியும் மஞ்சுளாவும் கை கோர்த்து நடந்து வர்றாங்க. பின்னாலையே ரெண்டு மூனு தவளையும் துள்ளித் துள்ளி வருது.

"எங்களுக்கு தவளையெல்லாம் சுத்தி நின்னாதான் லவ் மூடே வரும்", அப்படியே சேலை நுனியை கடிச்சிக்கிட்டே சொன்னாங்க மஞ்சு. வெட்கமாம். அதுக்குத்தான் அந்த ஆக்ஷன்.

எல்லாரும் ஜோடியா வந்தாங்க. ஆனா ராம் மட்டும் ஒரு பக்கம் ரஞ்சனி, இன்னொரு பக்கம் மஹாவோட உள்ள நுழைஞ்சார்.

"என்ன ராம். ரஞ்சனி அண்ணியும் மஹா அண்ணியும் உங்க வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி ஓமக்குச்சி மாதிரி இருந்தீங்க. இப்ப உசுலமணி மாதிரி ஆயிட்டீங்க?"

"யோவ் நீ வேற. ஆப்பரேஷன் கில்மான்னு எனக்கு ஆப்பு அடிச்சதால இவளுங்க ரெண்டு பேரும் ரெண்டு பக்கமும் நின்னு சாத்து சாத்துன்னு சாத்துறாளுங்க. அதுல வீங்கிப் போன ஒடம்புய்யா"னு அழாத குறையா ராம் சொன்னார். இனிமே அவர அப்படியெல்லாம் ஓட்டாதீங்கப்பா. சொல்லிட்டேன் ராம்.

அடுத்தது புலி, சூடான் கறுப்பு ஃபிகர் ஒருத்தியோட உள்ளே நுளைகிறார்.

"ஹூ இஸ் திஸ் ப்லேக் பியுட்டீ?"

"புலிக்கு ஜோடி பூனையாகுமா? அதுக்குத்தான் இந்த கறுஞ்சிறுத்தை. இவ பேரு கேத்தரின் லைட்"

'லைட்டுன்னு சொன்னீங்க. ஒரே இருட்டா இருக்கு??'

அடுத்து எண்ட்ரீ கொடுத்தார் ஜொள்ளுப் பாண்டி. பின்னால கிட்டத்தட்ட ஒரு நூறு பொண்ணுங்க.

"சார். இது ஜோடிகளுக்கான நிகழ்ச்சி"

"செல்லுகூட இல்லாம இருப்பான் மனுசன். ஆனா ஜொள்ளு இல்லாம இருக்க மாட்டான். அப்படிப்பட்ட ஜொள்ளுக்காக பேட்டையே வச்சிருக்கும் என்னைய 'ஒருத்தி'ங்ற அடைமொழில அடைக்க பாக்குறீங்களா? நெவெர்"னு சிவாஜி ஸ்டைல கற்ஜித்து,

"இன்னும் ரெண்டு லாரி ஃபிகர்ஸ் பின்னால வர்றாங்க"னு சொல்லிட்டு போனார்.

முதல் சுற்று. பாட்டுப் பாடணும்.

சொன்ன உடனே சுமா மைக்க எடுத்து "உதறவா? உதறவா?"ன்னு சொல்ல

"மைக்க உதறுனா எப்படி பாடுவ?"ன்னு கேட்க, அப்புறந்தான் தெரிஞ்சுது சந்திரமுகி ஜோவாட்டம் தெலுங்குல பாடப் போறாங்களாம். அதுக்குத்தான் அந்த அக்கப்போரு. சுமாவும் அந்தப் பாட்டுக்கு அதே காஸ்ட்யும்ல ஆடி முடிச்சவுடனே வெட்டிக்கிட்ட அவர் வாழ்க்கைல நடந்த சுவாரஷ்யமான சம்பவத்தக் கேக்க அப்படியே அழ ஆரம்பிச்சிட்டாரு.

"அல்வா பண்ணிறுக்காளேன்னு ஆசையா சாப்பிட போனாக்கூட அதுலையும் மொளவத்தல அள்ளிப் போட்டுருக்கா."னு கதர குடும்ப சண்டைல நாம எதுக்கு மூக்க நுழைக்கனும்னு அடுத்த ஆட்டக்காரர் ராமுக்குத் தாவிட்டேன்.

"ஆட்டத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம். ரெண்டு பேரு வந்தா ஜோடி. மூனு பேரா வந்தா என்ன சொல்வீங்க?"னு அறிவியல் கேள்வியெல்லாம் கேக்க, நாமத்தான் க்விஸ்ல வீக்காச்சே. எப்படி சமாளிக்கலாம்?னு யோசிச்சப்ப ஐடியா அழகுராஜா நமக்குக் காட்சித் தந்து ஒரு ஐடியாவ அருளினார்.

"மூனு பேருனா அது 'த்ரி'டி"

"ஓ. மூனு பேருங்கறதால த்ரியா?"

"இல்ல. ஜோதிகால ஜோ பக்கத்துல..."

"சூர்யா"

"யோவ். குறுக்கால பேசினா எனக்கு மறந்திடும். கம்னு இரு. ஜோ பக்கத்துல டி போட்டு ஜோடி ஆக்குனாங்க. அது மாதிரி த்ரிசால 'த்ரி' பக்கத்துல 'டி' போட்டா த்ரிடி"

"அப்போ கூட்டமா இருந்தா கூடியா?", ஓரமா கடலப் போட்டுக்கிட்டு இருந்த ஜொள்ளுப் பாண்டி எகிற

"பிரபு தேவா, சரத் குமார், கங்குலி ன்னு நக்மாக்குத்தான் ஒரு சரித்திரமே இருக்குது. அதனால கூட்டமா வந்த அதுக்குப் பேர் நக்டி"

"ஐ.. நக்டி.. நக்டி.."னு பார்வையாளர் ஒருத்தர் குஷில சவுண்டு விட, பக்கத்துல ஐஸ்க்ரீம் சாப்டுக்கிட்டு இருந்த அவரோட தங்கமணி, "யாரப் பாத்து 'டி' போட்டு பேசுற?"ன்னு பொலேர்னு அவர் மண்டைல தட்டிட்டாங்க.

"சரி. உங்கப் பாட்டு?"னு ராம் த்ரிடியக் கேக்க

"புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ரஞ்சனிக்காக"னு ரஞ்சனிப் பாட, வேகமா மைக்கப் புடிங்கி "இல்ல மஹாவிற்க்காக"ன்னு மஹாப் பாட, இதெல்லாத்தையும் கவனிக்காம ஸைட்ல போய்க்கிட்டு இருந்த ஒரு ஃபிகர்க்கிட்ட இளந்தல ASL கேக்க, ஹேண்ட் பேக்ல ரெடியா வச்சிருந்த பூரிக்கட்டைய எடுத்து ரஞ்சனியும் மஹாவும் கரெக்ட்டா ராமோட நடுமண்டைலையே தூக்கி வீசுனாங்க. பக்கத்துல அட்ரஸ் தெரியாம முழிச்சிட்டு இருந்த பொண்ணுக்கிட்ட அட்ரஸ் சொல்லிக்கிட்டு இருந்த என் மேல பூரிக்கட்டை விழுந்திடக் கூடாதுன்னு அங்க இருந்து நானும் எஸ்கேப். :))

அடுத்தது தம்பிப் பக்கம் வந்தா, தம்பியும் மஞ்சுளாவும் "என் சயின்ஸ் லேப்பில் நீ தவளையா? கரப்பான் பூச்சியா?"னு தில் பாட்ட ரீமேக் பண்ணி டைட்டானிக் ஜேக் அண்ட் ரோஸ் ரேஞ்சுக்கு டான்ஸ் ஆட,

"எவன்டா என்ற பொண்டாட்டி இழுத்துட்டு வந்தது?"னு விஜயக்குமார் வாசல்ல இருந்து கத்த, தம்பி எஸ்கேப்.

அடுத்தது புலிப் பாடணும்.

"கருவாப் பொண்ணு கருவாப் பொண்ணு"னு சிவா அந்த கறுப்பிய சுத்தி சுத்தி வர,"வாட் இஸ் திஸ்?"னு அந்தப் பொண்ணு ஜெர்க் ஆக, "தொரச்சி இங்கிலிபிஸெல்லாம் பேசுது"னு கோவை சரளா வாய்ஸ்ல பார்வையாளர்கள் சவுண்டு விட அப்படியே புலி இங்கிலிஸ்காரன் ரேஞ்சுக்கு மின்சாரக் கனவு வெண்ணிலவேப் பாட்ட ஆங்கிலத்துலப் பாடுனார்.

"White Moone, white moone, do you come by jump the sky? we want pair for playing..", அவரு பாடி முடுக்கும்போது விசிலும் கைத்தட்டலுமா அரங்கமே அதிரும்னு பாத்தா, பொண்ணுங்கக்கூட தம்மடிக்க அரங்கத்த விட்டு வெளில போயிட்டாங்க.

சரி. அடுத்தது ஜொள்ளுப் பாண்டி முறைனு திரும்பிப் பாத்தா, பாண்டியக் காணோம். விசாரிச்சுப் பாத்தாதான் தெரிஞ்சுது அது காலேஜ் விட்டு பொண்ணுங்கெல்லாம் வர்ற ஜொள்ளுற டைம். அதனால தலைவர் எஸ்கேப்.

எல்லாரும் போனதுக்கப்புறம் எதுக்கு ஜோடி விளையாட்டெல்லாம். அதான் ஆட்டத்தக் கலச்சாச்சு. :))

Wednesday, June 27, 2007

லைலாவ பண்ணு இம்ப்ரஸு...

டைட்டில பாத்தவுடனே டைவ் அடிச்சு ஓட நினைக்கிறவங்க, அப்படியே க்ளைமேக்ஸ்ல இருக்குற பஞ்ச் டையலாக்க பஞ்சமில்லாம படிச்சுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கோங்க. மத்தவங்க மேலப் படிங்க... ஸாரி... பேச்சு தோஷத்துல அப்படி சொல்லிட்டேன். நீங்க கீழப் படிங்க...

ஸைட் அடிக்கிற ஃபிகர பாக்கப் போகுமுன்னாடி, நல்லா மேக்கப் பண்ணிட்டு போங்க. ஆனா ஒன்னுங்க. அப்படி ஸைட் அடிக்கக் கெளம்பும்போது உங்கள விட கொஞ்சம் சுமாரா பசங்க யாராவது இருந்தாங்கன்னா, அவுங்கள தயவு செஞ்சு கூட்டிட்டுப் போயிடாதீங்க. அவனுக்கு செட் ஆனாகூட பரவாயில்லீங்க. அப்புறம் அவன் உங்க ஆளோட லவ் பண்ண உங்கள காவலுக்கு விட்டுறுவான். அதாவது பரவாயில்ல. நம்மள சுண்டல் வாங்கித் தரச் சொல்லி நம்ம கண்ணு முன்னாலையே நம்ம ஃபிகர் கூட கடலை போடுவான்.

நம்முடைய வீக்னெஸ், நம்ம ஃபிகரோட ஸ்ட்ராங்னஸ்ஸா இருந்துட்டா பெரும் பிரச்சனை. இப்படித்தான், நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது, எங்க க்ளாஸ்லையே சூப்பர் ஃபிகர் ஒன்னு உண்டு. அவளுக்கு எப்படியாவது பிராக்கட் போட்டு அப்புறம் ராக்கெட் இல்லாமலே சந்திரமண்டலத்துல அவகூட டூயட் பாடணும்னு திரிஞ்சவங்க எக்கச்சக்க பேர். கூட்டம் எங்க சேந்தாலும் அதுல குடியிருக்குற ஆளாச்சே நாமெல்லாம். இந்தக் கூட்டத்துல மட்டும் சேராம இருந்திடுவோமா?? ஒரு தடவ, இயற்பியல் லேப்ல ஒரு எக்ஸ்பெரிமெண்ட்ட முடிச்சுட்டு நோட்ட சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஏ.ஆர். ரகுமானும், இளையராஜாவும் கம்பினேஷன்ல டாமினேஷன் போட்டு அடிச்ச வித்தியாசமான மெல்லிய குரல் அப்படியே காதுல விழுந்து மூளைல ஒரு டிராஃபிக் ஜாமையே ஏற்படுத்திச்சு.

"ஜி"

அப்படியே திரும்பிப் பாத்தா மயில். திடீர்னு ஒரு தவுஸண்ட் வாலா சரவெடி வெடிச்ச மாதிரி பட படன்னு பி.பி.ஸி, ஸ்டார் மூவீஸ், டிஸ்கவரி ன்னு பல சேனல்கள அட் எ டைம்ல ஓபன் பண்ண மாதிரி பேசினா. ஒரு எழவும் வெளங்கல. இதுக்குத்தான் தமிழ்ல பேசுனா நாலனா ஃபைன்னு போட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்துல சேந்திருக்கணும். நம்மாளு சென்னை கான்வெண்ட். நான் என்னமோ, ஊட்டி கான்வெண்ட்ல படிச்சு வந்த பயபுள்ளைன்னு நெனச்சுட்டா போல. 'எனக்கு ஒன்னுமே புரியல', அப்டீனு எப்டி இங்கிலிஸ்ல சொல்றதுன்னு தெரியல. நாம வேற, யாராவது ஹிந்தில பேசினா, 'மே ஹிந்தி மாலும் நஹி'னு ஹிந்திலத்தான் பதில் சொல்வேன்னு அடம்புடிக்கிற பரம்பரையாச்சே. அதுலையும் ஃபிகர் கிட்ட புரியலைன்னு சொன்னா அது கௌரவக் குறைச்சல் இல்லையா? அப்பத்தான் தலைவரோட 'படிக்காதவன்' படம் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியே ஒரு ஸ்மைல தூவிட்டு, "எஸ்"னு சொல்லிட்டு வேகமா அந்த எடத்த விட்டுக் கெளம்பிட்டேன். அப்புறமாத்தான் தெரிஞ்சது, அவளுக்கு நான் செஞ்சு முடிச்ச எக்ஸ்பெரிமெண்ட சொல்லித் தரச் சொல்லி அப்படி கேட்டான்னு. ச்சே.. அவளுக்கு சொல்லித் தரக் கூடிய நல்ல சான்ஸும் போச்சு. நம்ம வீக்னெஸும் அவளுக்குத் தெரிஞ்சுப் போச்சு :((

என்னத்தான் அசிங்கப் பட்டாலும் நம்ம ஃபிரண்ட்ஸ்கிட்ட நம்ம 'கெத்'த மெயிண்டெயின் பண்ணிக்கனும். அப்புறம் அவனுங்க ஃபிகருக்கிட்ட காமெடி பண்ணும்போது நம்மள ஊறுகாயா ஆக்கிடுவானுங்க. அதுனாலத்தான், அந்தச் சம்பவம் முடிஞ்ச வுடனே, நேரா நம்ம நண்பர்கள்கிட்ட,

"மச்சான், இன்னைக்கு அந்த ஃபிகர் ஏன்கிட்ட பேசினாடா... நாந்தான் அவளுக்கு ஃபிசிக்ஸ் லேப்ல சொல்லிக் கொடுத்தேன்"னு ஒரு பிட்டப் போட்டு அவுங்க காதுலையும் வாயிலையும் புகை வர வச்சேன்.

ஃபிகர் விசயத்துல என்னைக்குமே அவசரப் படக்கூடாது. என்னோட நண்பன் இப்படித்தான் ஒரு ஃபிகருக்கு நூல் விட்டுக்கிட்டு இருந்தான். அது எல்லாருக்கும் தெரியுங்றதால எல்லாரும் அவுங்க ரெண்டு பேரையும் வச்சி ஓட்டுவாங்க. ஒரு நாள் அந்தப் பொண்ணுக்கிட்ட இருந்து மெயில் மயிலா வந்திருந்துச்சு.

"நான் படிக்க வந்திருக்கேன். உன்ன மாதிரி ஊர் சுத்த வரல. உன்னையும் என்னையும் வச்சு ஓட்டுற மேட்டர் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, அப்புறம் என்னோடப் படிப்பையே நிறுத்திடுவாங்க"ன்னு அந்த மெயில்லப் போட்டிருந்துச்சு. பயபுள்ள பயந்தடிச்சு வேகவேகமா, அவசர அவசரமா அதுக்கு ஒரு பதிலத் தட்டி விட்டான்.

"நானும் படிக்கத்தான் வந்திருக்கேன். பசங்க ஓட்டுனா, அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்.", அப்படி, இப்படின்னு எக்கச் சக்கமா அந்தப் பொண்ண வஞ்சி எழுதிப்புட்டான். அதுக்கப்புறம் என்கிட்ட வந்து மெல்லமா இந்த மேட்டர சொன்னான். 'வேற யாருக்கெல்லாம் இந்த மேட்டர் தெரியும்?'னு கேட்டேன். பயபுள்ள உண்மையான நண்பன் நாந்தான்னு என்கிட்டத்தான் மொதல்ல சொல்லிருக்கான். அப்புறம் அவன்கிட்டச் கேட்டேன்.

"ஏன்டா அவதான் அந்த மெயில அனுப்புனாளான்னு உனக்குத் தெரியுமா?"

"ஆமாம்டா. அவ மெயில் ஐடில இருந்துதான் மெயில் வந்துச்சு"

"மாப்ள. இந்த ஃபேக்மெயில்ஸ் ஃபேக்மெயில்ஸுன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? அதுல இருந்து யார் ஐடில இருந்தும் யாருக்கு வேணும்னாலும் மெயில் அனுப்பலாம்"னு லேசா சிரிச்சிக்கிட்டேச் சொன்னேன்.

அன்னைக்கு ஹாஸ்டல் முழுக்க என்னையத் தொரத்தி தொரத்தி அடிச்சான். நானும் நண்பனுக்கு செட் ஆகணும்னு ஒரு நல்லெண்ணத்துலதான் அதப் பண்ணினேன். பயபுள்ள அவசரப் பட்டதால எல்லாம் போச்சு.

ஆர்வக் கோளாறு அறவே கூடாது. ஃபிகர் செட் ஆகுறதுக்கு முன்னாடி யோசிக்காமப் பேசுனா ஆப்பு. செட் ஆனதுக்கப்புறம் யோசிச்சாலே ஆப்பு. ஒரு தடவ டூர் போயிட்டு பஸ்ல வரும்போது ரொம்ப மும்முரமா எல்லாரும் அன்தாக்ஷ்ரி விளையாடிட்டு இருந்தாங்க. நம்ம நண்பன் ஒருத்தன் அவனோட ஃபிகர இம்ப்ரஸ் பண்றதுக்காக எக்கச்சக்கமா காதல் பாடல்கள அள்ளி விட ஆரம்பிச்சான். எதிர் அணில அவனோட ஆளோட சேத்து முக்காவாசி பொண்ணுங்கதான். தலைவர்தான் இந்த அணில ஃப்ரண்ட்ல நின்னு பாடிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல நம்ம நட்போட அணிதான் பாடணும். 'எ'னு தொடங்குற எல்லாப் பாட்டையும் அதுக்கு முன்னாடி பாடியாச்சு. எதுவுமே தோணல தலைக்கு. நம்மளோட இன்னொரு நண்பன் அவன் காதுல ஒருப் பாட்ட பத்திச் சொன்னான். அவனும் ஓவர் ஆர்வக்கோளாறுல அந்தப் பாட்டையும் பாடித் தொலச்சிட்டான். அதோட நின்னுப் போச்சு அன்தாக்ஷ்ரி. என்னப் பாட்டுனு கேக்குறீங்களா? கிழக்குச் சீமையிலேயில பாண்டியன் பாடுற பாட்டுத்தாங்க... "எதுக்குப் பொண்டாட்டி..."

நமக்குத் தெரியாத மேட்டர் நம்ம ஃபிகருக்குத் தெரிஞ்சுதுன்னு வைங்க, உடனே போய் 'எனக்கு அத சொல்லித் தாயேன்'னு அப்பாவியாய் கேட்டுக்கணும். ஆனாலும் அதுலையும் ரொம்ப கவனமா இருக்கணும். என்னோட நண்பன் ஒருத்தன், ஒரு பொண்ணுக்கிட்ட, ஹிந்திக் கத்துக்கிட்டு இருந்தான். நமக்கு ஒரு ஃபார்வேர்ட் மெயில் வந்திருந்தது. அதுல பாதி ஆங்கிலத்துலையும், பாதி ஹிந்திலையும் இருந்தது. நல்ல காமெடி மெயில். ஆஹா, நம்ம பயபுள்ளைக்கு இந்த ஹிந்தி மெயில் ரொம்ப உபயோகமா இருக்குமேன்னு அவனுக்கு அனுப்பி அதுக்கு அர்த்தத்த அவக்கிட்டக் கேக்கச் சொன்னேன். அவனும் அத அவளுக்கு ஃபார்வேர்ட் பண்ணி அதுக்கான அர்த்தத்த கேட்டான். அதுக்கு அவ பதிலே சொல்லல. அவன் திரும்ப திரும்ப ஒரு அஞ்சாறு ரிமெயிண்டர் மெயில் அனுப்பி அவள உசுப்பேத்திக்கிட்டே இருந்தான். அவளும், அவன் டார்ச்சர் தாங்க முடியாம அதுக்கு பதில அனுப்பினா. அப்புறந்தான் தெரிஞ்சுது அது வெவெகாரமான ஹிந்தி 'ஏ' ஜோக்குன்னு. பயபுள்ள நம்ம மேல பாய, நம்மத்தான் 'ஏக் காவுமே, ஏக் கிஷான் ரகு தாத்தா' கும்பல்டான்னு அவனுக்கு வெளக்குனேன். அப்புறம் எனக்கு அந்த மெயில அனுப்புன பயலுக்கு ஒரு ஃபோனப் போட்டு, 'ஏன் டா வெவகாரமான மெயில் அனுப்புறதா இருந்தா ஸ்டார் போட்டு அனுப்புன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்'னு டோஸ் விட்டா, பாவம்போல அவன் சொன்னா

"எனக்கு மட்டும் ஹிந்தி தெரியும்னா நெனச்ச?"

அதுனால என்னைக்குமே அவசரப்படாம, விசாரிச்சு அப்ரோச் பண்ணனும்.

க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))

அப்பாடா... எப்படியோ நாமலும் ஒரு மெஸேஜ வச்சி ஒரு பதிவுப் போட்டாச்சு.

Tuesday, June 19, 2007

கவிதையும் கவுண்டமணியும்

கொஞ்ச நாளைக்கு முன்னாலத்தான், கவிமடத்தலைவன் ஆசிப் அண்ணாச்சி கவுஜைக்கு அணிந்துரை எவ்வளவு முக்கியம்னு சொன்னாங்க. சரி. நாமலும் கவுஜை எழுதிருக்கோம். மொதல்ல போய் ஒரு அணிந்துரைய வாங்கிட்டு வந்துடலாம்னு ஒரு பிரபல கவுஜன்கிட்டப் போனேன். அவர் எழுதித் தந்த அணிந்துரைய நீங்களே பாருங்க... நீல கலர்ல இருக்குறதுதாங்க அணிந்துரை.

காதலிக்கோர்க் கடிதம்...

காதலிக்கு கடிதம்னு சொல்லிட்டு ஏன்டா அவளோட தங்கச்சுக்கு ஒரு காப்பி அனுப்பி வச்சிருக்க??

அண்ட அழகிகளெல்லாம்
மண்டியிடும் பேரழகியே...

அடப்பாவி.. அடப்பாவி... ஆரம்பத்துலேயே ஏன்டா அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகுற? அவள லோக்கல் கண்டஸ்ட்டுக்கு அனுப்புனாலே, கேட்லையே அடிச்சுத் தொரத்திடுவானுங்க. இதுல அணடப் பேரழகி மண்டி போடும் அழகியா? டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென். தயவுசெஞ்சு இந்த அபத்தத்த மட்டும் ஐஸ்வர்யா ராய்க்கோ, சுஷ்மிதா ஷென்னுக்கோ சொல்லிறாதீங்க. அப்புறம் அவளுக ரத்த வாந்தி எடுத்தே செத்துப் போயிடுவாளுங்க.

உன் சுவாசம் தாங்கியச்
சந்தனக் காற்று
நாசி துளைத்து இதயம் நுழையும்
அனுதின சுகத்தில்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னமும் இதயம்...

ஏன்டா... காத்து மூக்கு வழியா உள்ள போனவுடனே நுரையீரலுக்குப் போகும்னு அடிப்படை அறிவு கூட இல்ல. நீயெல்லாம் ஏன்டா கவுஜ எழுதுற? மொதல்ல போய் அஞ்சாப்பு அறிவியல படிச்சுட்டு வாடா. ஏன்டா, அவ சுவாசம் தாங்கும் சந்தனக் காற்றா? ஊசிப் போன பிரியானிய மூனு நாளு மூடி வச்சி ஓபன் பண்ணா வரும் நாத்தக்காத்து உனக்கு சந்தனக் காத்தா? உன்னையெல்லாம் அவ மூக்குல இருந்து ஒரு டியுப விட்டு அவ விடுற கார்பன் டையாக்சைட உன் மூக்குல விடணும்டா. அப்பத்தான்டா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

நீ தொலைந்துபோன‌
நொடிகளிலெல்லாம்
மூர்ச்சையாகிறது
என் கைக் கடிகார முள்...

ஒன்னா ருவாய்க்கு பேட்டரிப் போட வக்கில்லை. இதுல அவ போனதுனாலத்தான் நின்னுப் போச்சுன்னு அலப்பற வேற. ஏன்டா, நீ போட்டிருக்குறது ஒரு வாட்ச்? அத பிச்சக்காரன்கிட்டக் கொடுத்தாக்கூட, அந்த வாட்ச்ச மூனு தடவ தலையச் சுத்தி எச்சித் துப்பி உன் மூஞ்சிலேயே விட்டெறிவான். அந்த வாட்ச்ச வச்சிக்கிட்டு ஊருலயில்லாத பில்ட்-அப் விடுற??

கணப்பொழுதில் கண்பறிக்கும்
மின்னலையும் மிஞ்சும்
உன் ஒற்றைப் பார்வை
ஒளிக் கீற்றில்தான்
விரிகிறது உலகம்
என் விழிகளில்...

ஆங்.. அப்படியே அத ஒரு பல்ப்ல புடிச்சு ஊருக்கு வெளக்கேத்துறது. உன் கண்ணுல கோளாறுன்னா கண் டாக்டர்க்கிட்டப் போ. அத வுட்டுப்புட்டு மின்னல் கீற்று, தென்ன மட்டைனு ஏன்டா ஒளறுற? உன்னையெல்லாம் கேப்டன் மாதிரி தவுஸண்ட் வாட்ஸ் கரெண்ட ஒடம்புலப் பாய்ச்சணும்டா.

உன் இதழ்கள் பதித்த ஓர்
முத்தச்சுவடுப் போதும்
மரித்துப்போன‌
மானுட உணர்வுகளெல்லாம்
உலகாள உயிர்த்தெழும்...

இதுக்குத்தான் இந்த பில்ட்-அப்பாடா? டேய். அவ முத்தச் சுவட வச்சி என்னடா பண்ணுவ? அத கொண்டு போய் லண்டன் மியுசியத்துல வைக்கப் போறியா? மரித்துப் போன... உயிர்த்தெழும்... எந்த மாதா கோயில் வாசல்ல இருந்துடா காப்பி அடிச்ச?

மகா ஜனங்களே... இந்த மாதிரி கவுஜ எழுதுறேன்னு சும்மா இருக்குற நிலாவ விளையாட வான்னு ஒரண்ட இழுக்குறது, பூவக் கொடுத்துத் தலைல வைங்கன்னு சொன்னா, 'நீ பூ மாதிரி இருக்க.. புலி மாதிரி பாய்ற'னு குப்புறப் படுத்தவன் பாதி ராத்திரில எழுந்திருச்சு உளற்ற மாதிரி உளறுறது, 'ஐயோ பாவம்'னு ஆண்டவன் நதி, அருவி, புல்வெளி, மழைத்துளி, மேகம்னு நமக்காகப் படச்சத, இவனுக வெரட்டி வெரட்டி, வளச்சி வளச்சி வம்பிழுக்குறது, இதே பொழப்பாப் போச்சு இந்த கவுஜன்களுக்கு. இதே மாதிரி இனி கண்டினியூவாச்சி...


--------------------------***********----------------------------

கவுஜனா கவுஜ எழுதி, கவுண்ட மணியா வாசிச்சுப் பாத்த எஃபெக்ட் இப்படியாகிப் போச்சு. மொதல்ல வேற யாராவது எழுதுனதுக்குத்தான் அணிந்துரை எழுதலாம்னு பாத்தேன். வீணா எதுக்குச் சண்டைனுதான், என்னோடதுலேயே ஆரம்பிச்சுட்டேன். யாருக்காவது அணிந்துரை எழுதணும்னா மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் வந்து செவ்வனே என்னுடையப் பணிய செய்றேன். :))

Tuesday, June 12, 2007

சைட் அடிக்கப் போனா சும்மா அதிருதுல்ல...

மணி சரியா சாயுங்காலம் 4:20. ஏந்தான் இந்த டைம்ம எங்க ஸ்கூல்ல ஸெலக்ட் பண்ணாவளோ தெரியல. ஒரு வேள எல்லா பயலுவலும் 420 கேஸ்தான் கரெக்ட்டா அந்த டைமுக்குத்தான் பெல்ல அடிச்சு எங்கள தொரத்தி விடுவானுவளோ என்னவோ?. ஆனா அது கூட ஒரு வழியில நல்லதுதான். பொம்பள புள்ள பள்ளியூடமெல்லாம் அதுக்கு அப்புறந்தானே விடுவாவ. 'நாலரை மணிக்கு என்னப் பாக்கலாம்?'னு யார்க்கிட்டக் கேட்டாலும் கரெக்க்ட்டா சொல்வாங்க, ஸ்கூல் முடிஞ்சு போற ஃபிகர்ஸ்னு. நானும் என்னோட நண்பனும் வேகமா கெளம்பி ஸ்கூல் பின்னால இருக்குற கிரவுண்டுக்கு ஓடுனோம். அங்க போய் எங்க பைல இருந்த பேண்ட எடுத்துப் போட்டுக்கிட்டே என்னோட நண்பன்கிட்டேச் சொன்னேன்.

"எல மாப்ள. பத்தாப்பு படிக்கோம். மாடு மாதிரி வளந்து நிக்கோம். இன்னும் நம்மள இந்த வாத்திமாரு மதிக்கவே மாட்டுக்கிறானுவளே. ஏம்ல?"

"எல சவுத்து மூதி. ஏற்கனவே லேட் ஆவுதுல்லா. நீ வேற என்னத்தலப் போட்டு சலம்புத?"

"இந்த ஆறாப்புப் படிக்குற ரோஸ்மேரி பயலுவெல்லாம் பேண்டு போட்டு அலையிறானுவ. பத்தாப்பூ வந்தும் நம்மள டவுசர் போடச் சொல்லுதானுவள்ல. அதத்தாம்ல சொல்லுதேன்"

"எல. அவிங்க பள்ளியூடத்துல கேள்ஸ் இருக்காவள்லா. அதான்."

"நம்மப் பள்ளியூடத்துல ஏம்ல கேள்ஸ் இல்ல?"

"பொண்ணுங்க இல்லாமலே இந்தப் பயலுவ ரவுசு தாங்க முடியல. இதுல அவிங்களையும் சேத்துப் போட்டானுங்கன்னா... நம்ம தமிழ் வாத்தியார் பீரியட்லெல்லாம் ஒரு பொண்ணாவது ஒக்காந்து அவரு பேசுறத கேக்க முடியுமா?"

"அதுக்கு இல்ல மச்சி. அவுளவலும் நம்ம ஸ்கூல்ல படிச்சாவன்னா, நாம இப்படி அலைய வேண்டியது இல்லைல. அதுக்குத்தாம்ல சொன்னேன்"

"அப்ப மட்டும் போவாம இருப்போமா? இக்கரைக்கு அக்கரை பச்ச மாப்பு"

வேகமா பேண்ட மாட்டி, சட்டைய இன்ஸெர்ட் பண்ணி, பெரிய பட்டி பெல்ட்ட போட்டுக்கிட்டு, நண்பன்கிட்ட பெல்ட், பேண்ட், சட்டை ஆங்கிளெல்லாம் கரெக்ட்டா இருக்குதான்னு செக் பண்ணச் சொன்னேன்.

"மக்கா... பாக்குறதுக்கு அஜித் மாரி இருக்கேனா?", அப்படியே தலையைச் சீவியவாறேக் கேட்டான் என் நண்பன்.

"எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாவ. கழுதைக்கு பேரு முத்துமாலைனு"

"மவனே... இன்னைக்கு உனக்கு ஒரு ஃபிகரும் மாட்டாது"

"ஆமா. இவருக்கு மட்டும் எக்கச்சக்கம் சிக்கப் போவுது?"

அதுக்கப்புறம் வேகமா ஸ்கூல் ஸைட்ல "குடிநீர். குடிப்பதற்கு மட்டும்" னு போட்டிருக்குற பைப்ல தண்ணிய கைலப் புடிச்சு மூஞ்ச கழுவி, கர்சீப்ல ஏற்கனவே போட்டு வச்சிருந்த பவுடர பூசிட்டு, எங்க தண்டர் பேர்ட் ஹெர்குலஸ் ஸைக்கில்ல கெளம்பினோம்.

"மாப்ள இன்னைக்கு எந்த ஸ்கூல்?", வெகுளியான நாந்தான்.

"சைல்ட் ஜீஸஸ் வேணாம் மாப்பு. பாத்து பாத்து போரடிச்சிடிச்சு. அதுவுமில்லாம எக்கச்சக்க மொக்க ஃபிகரா இருக்குது. பேசாம பஸ் ஸ்டாண்ட் போயிடலாம். மூனு ஸ்கூல் சஞ்சமிக்கிர எடம். சாரா டக்கர் ஃபிகரெல்லாம் டக்கரா இருப்பாளுவ. கான்வெண்ட் ஃபிகர்களும் அங்குன வருவாளுவ. அப்படியே ரோஸ்மேரி ஃபிகர்ஸும் வரும்"

"சூப்பர் மச்சி.. இதுக்குத்தான் நம்ம பாளையங்கோட்டையத் தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டுனு சொல்லுதாவளோ?"

பஸ் ஸ்டாண்ட்ல போய் நின்னா நாம ஸைட் அடிக்கிறது க்ளீனா தெரியும்ங்றதால, பஸ் ஸ்டாண்ட் போற வழில ரோஸ்மேரி ஸ்கூல் பக்கத்துல ஒரு கையேந்தி பவன் இருக்கும் அங்குன ஆளுக்கு ரெண்டு ரூபாய்க்கு பஜ்ஜிய வாங்கித் தின்னுக்கிட்டு அப்படியே பேக் ரவுண்ட்ல "கவலை மறந்தோம்.. பெண்ணைக் கண்டு"னு ஒரு ஸாங்க ஓட விட்டுக்கிட்டு அப்படியே பார்வைய மேய விடுவோம்.

5 மணி இருக்கும். ஒரு அழகான புள்ள ஸைக்கிள்ல, அப்படியே பறக்குற குதிரையப் பூட்டுன ரதத்துல போற தேவதை மாதிரி பறந்து போய்க்கிட்டு இருந்தா. அவ சைக்கிள் பெடல மிதிக்கிற ஒவ்வொரு மிதியும் சுத்தி நின்னுக்கிட்டு இருந்தவனுவ நெஞ்சுல விழுந்துச்சு. அவளப் பாத்துக்கிட்டே சூடா அம்புட்டு நேரம் திங்க முடியாம இருந்த பஜ்ஜிய அப்படியே வாயில போட்டோம். அன்னைக்குச் சாகுபடி நல்ல படியா முடிஞ்சு வீட்டுக்குக் கெளம்பிட்டோம்.

அடுத்த நாள் அதே மாதிரி 4:30 மணிக்கு கும்முன்னு அதே எடத்துல நின்னுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேக்கப். ஜீன்ஸ் பேண்ட். என்னுடைய நண்பன் என்கிட்டச் சொல்லாமலேயே ஷூவும் போட்டுக்கிட்டு வந்துட்டான். துரோகி. அதே நேரம், அதே தேவதை. அப்படியே கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் பாத்துக்கிட்டே இருந்தோம்.

"மாப்ள அவள ஃபாலோ பண்ணுவோமா?", நண்பன் வெவெகாரமா ஆரம்பிச்சான்.

"என்னடா மாப்பு சொல்லுத? ஏதாவது எடக்கு மடக்கா ஆயிறாதுல்ல?"

"அதெல்லாம் ஆவாது மாப்ள. கெளம்பு. கெளம்பு", என்னோட பதிலுக்கு நிக்காமையே வேகமா சைக்கிள அழுத்த ஆரம்பிச்சிட்டான். வேற வழி இல்லாம நானும் அவன்கூட போனேன். மெதுவா சமாதானபுரம் வழியா போய்க்கிட்டு இருந்தவ பின்னாலேயே ஏதோ நாங்க பேசிட்டே போற மாரி போனோம். நாங்க பின் தொடருறத அவ பாத்துட்டா. சைக்கிள வேகமா அழுத்துனா. அதுவுமில்லாம அப்பப்ப திரும்பி திரும்பி நாங்க அவளத்தான் ஃபாலோ பண்றோமான்னு செக் வேற பண்ணா. அவ மொகத்துல செம பயம். நேரா போக வேண்டியவ, சட்டுனு ஒரு முக்குல திரும்பி அழுத்த ஆரம்பிச்சா. நாங்க விடுவோமா?? அதே சந்துல திரும்புனா அவளுக்குச் சந்தேகம் அதிகமாயிடும்னு அடுத்தச் சந்துல திரும்பி கரெக்ட்டா அவ பின்னாடி வந்து சேந்தோம். அப்புறம் பாத்தா, அவ எங்க ஏரியாக்கேப் போறா. அப்பத்தான் நமக்கு லேசா கலக்க ஆரம்பிச்சது.

மண் புழுவப் பாத்தாலே பாம்புன்னு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடுற தைரியசாலி நாம. ஒரு பொண்ண அவ ஏரியாலையே ஃபாளோ பண்றோம். நம்ம ஏரியாவும் கூட. அவ ஆளுங்க ரெண்டு பேரு வந்து 'ஏம்ல இங்க சுத்துதிய?'னு கேட்டாலே எல்லாத்தையும் ஒளறிடுவோம். நம்ம ஏரியால வேற காந்திக்கு அப்புறம் நல்லவன் ஜி தான்னு ஒரு பேர வேற எடுத்துத் தொலச்சொட்டோம்.

"மாப்ள. மறந்தே போயிட்டேம்ல. எங்க சித்தப்பா வீட்டுக்குப் போவனும். நான் போயிட்டு வர்றேன். நீ கண்டினிவ் பண்ணு"னு எஸ்கேப் ஆயிட்டேன்.

அடுத்த நாள் பக்கத்து க்ளாஸ் நண்பன் வீட்டுக்குப் போனோம். அவன் வீட்டுக்கு அப்பத்தான் ஃபர்ஸ்ட் டைம் போனோம். பாத்தா, அந்தச் சிட்டு அவன் வீட்டுக்குப் பக்கத்து வீடு.

"எல மக்கா. இனி உங்க வீட்டுக்கு அடிக்கடி வரணும் போலையே..", லேசா ஆரம்பிச்சோம்.

"என்னல ஒரு மாரி பேசிறிய? பக்கத்து வீட்டுப் புள்ளையப் பாத்தியளோ?"

லேசாய் வழிஞ்சுக்கிட்டே, "அவ பேரு என்ன மாப்பி?"

"அவ பேரு xxxxxx (பேரப் போட்டு மாட்டிக்கிடதுக்கு நான் என்ன ராமா? இல்ல தம்பியா?). எலேய் அவள ரூட் விடுற வேலையெல்லாம் வச்சிக்கிடாதிய"

"உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தா அவ உன் ஆளா? அவ பப்ளிக் டெலிஃபோன் பூத். யாரு வேணும்னாலும் ஸைட் அடிக்கலாம்"

"எல. பக்கத்து வீட்டுல இருந்துக்கிட்டே நான் ஏன் அவள ஸைட் அடிக்காம இருக்கேன்னு சொல்லு?"

"அவுங்க அம்மா உங்க அம்மாக்கிட்ட சீனி கேட்டிருப்பாங்க. அப்படியே உனக்கும் அந்தப் பொண்ணத் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்ச பொண்ணுங்களத்தான் ஸைட் அடிக்க முடியாதே. அதுனாலத்தான் நாங்க எந்தப் பொண்ணுங்களையும் தெரிஞ்சிக்கிறதே இல்ல.", அவன்கிட்ட பேசிட்டு இருந்தாலும் நாலு கண்ணு மட்டும் அவ வீட்டையே நோட்டம் விட்டுட்டு இருந்துச்சு.

"எங்க அம்மா சீனியும் வாங்கல. உப்பும் வாங்கல. கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம சீனியர் ஒருத்தனப் போட்டாங்கள்ல. அது இந்தப் பொண்ணுக்காகத்தான்"

"என்னல சொல்லுத?" பேச்சு வாயில வர்றதுக்குள்ள எக்கச்சக்க நேராமாயிடிச்சு.

"ரெண்டு கேங்கல இருந்து இந்தப் பொண்ண ரூட் விட்டுக்கிட்டு இருந்தானுவ. அதுல ஒரு கேங்க்தான் இன்னொரு கேங்க் ஆளப் போட்டுத் தள்ளுனானுவ"

அப்படியே எங்களுக்கு வேக்க ஆரம்பிச்சது. கைல லேசா நடுக்கம். நம்ம கேங்கெல்லாம் 'அண்ணாச்சி. இவன் இங்குட்டுத்தான் ஒழிஞ்சிக்கிட்டு இருக்கான்'னு காட்டிக் கொடுக்குத எட்டப்பன் பயபுள்ளைங்களாச்சே. அந்த நேரத்துல அவ வீட்டைவிட்டு வெளில வந்து, எதுத்தாப்ல இருக்குறக் கடைக்குப் போனா. போற வழில எங்களையே மொறச்சிப் பாத்துக்கிட்டேப் போனா. அந்தக் கடைக்காரங்கக்கிட்ட வேற எங்களப் பத்தி ஏதோ சொல்லுத மாதிரி இருந்துச்சு. அப்படியே அந்த நண்பன் பக்கத்துல போய்

"மச்சான். நாங்க யாருன்னு யாராவது கேட்டா, தெரியாது. சும்மா அட்ரஸ் கேட்டாங்கன்னு சொல்லு. ஸ்கூல்ல உன்கிட்ட ஆட்டையப் போட்ட பேனாக்காக பழி வாங்கிறாதடா. இது உயிர் பிரச்சனை"னு வேகமா சைக்கிள அழுத்திக்கிட்டு அந்த எடத்தவிட்டு கெளம்புனதுதான். அதுக்கப்புறம் பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கங்கூட போகவே இல்ல.