Showing posts with label சென்ஷி. Show all posts
Showing posts with label சென்ஷி. Show all posts

Saturday, June 5, 2010

ஆகவே, தமிழ் வலைப்பதிவர்களே...

ஆகவே,

பிரபலமாகத் துடிக்கும் பதிவர்களே.. புதிதாய் பதிவு எழுத ஆரம்பித்திருக்கும் தோழர்களே... பதிவு எழுத ஆரம்பித்தும் பின்னூட்டம் வராமல் தவிக்கும் நண்பர்களே..

பதிவை பிரபலப்படுத்த என்னென்னமோ செஞ்சிருப்பீங்க.. திரட்டிகள்ல சேர்க்கறது.. ஓட்டு போட வைக்கறது.. சரளமா பின்னூட்டக் கருத்துக்களை எல்லா இடத்துலயும் தூவுறது.. மத்தவங்க பதிவை நாம பின் தொடர்ந்து போதாம நமக்கு நாமே திட்டத்துல நம்ம பேரையும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல ஏத்திக்கறது இப்படி வலையுலகின் எல்லா விதங்களையும் பின்பற்றியும் ஹிட்ஸ் ஏறலையா உங்களுக்கு..

அவசரப்படவேண்டாம்... ஆவேசப்படவேண்டாம்.. இயல்பை இழக்கவேண்டாம்..

பதிவு எழுதி திரட்டில சேர்த்தும் எவனும் எட்டிப்பார்க்கலைங்கற கவலையில இருக்கீங்களா.. அங்கங்கே ஹிட்ஸ் லட்சக்கணக்குல தூக்கும்போது நமக்கு ஆயிரம்கூட தொடலையேங்கற வருத்தம் இருக்கா..

வருத்தமோ கவலையோ இனி படத்தேவையில்லை..

நான் சொல்ற வழியைக் கேட்டா, சூடு வச்ச மீட்டர் கணக்கா ஹிட்ஸ் ஓடிக்கிட்டே இருக்கும். மாயமில்லை.. மந்திரமில்லை.. மனசு முக்கியம்.. நம்பிக்கை வைக்கணும்.

கேஎஃப்சி கோழி போட்ட முட்டையை எடுத்து நாலு நாள் மண்ணுல புதைச்சு, அஞ்சாம் நாள் அசங்காம எடுத்து, மந்திரம் சொல்லி தண்ணியில கழுவி வெங்காயம் அரிச்சு தக்காளி போட்ட ஆம்லெட் சாப்பிட்டு செஞ்ச எந்திரம்.

நம்பாதவன்  கமெண்ட் போட்டு ஒதுங்கிப்போ.. நம்பறவன் ஓட்டு போட்டு சைடு கட்டு..

குடுகுடுப்பைக்காரன் கணக்கா சவுண்டு வுட்டுப் போறதுக்கில்லை நான் சொல்றது.. உனக்கு உதவணும்.. எதிர்காலத்துக்கு உதவணும்.. எல்லோரையும் பிரபலமாக்கணும்.. எல்லோருமே ஹிட்சை குவிக்கணும் அது மாத்திரந்தாஞ்சாமி என் ஆச.

காலையில எந்திரிச்சு குளிச்சியோ குளிக்கலையோ பல்லு விளக்கியோ விளக்காமலோ காப்பித்தண்ணியை பல்லு படாம வாயில ஊத்தி நேத்து போட்ட பதிவுக்கு ஹிட்ஸ் ஏறலைங்கற வருத்தம் இனியில்லை உங்களுக்கு..

பாகச சார்பா எல்லாருக்கும் பயன்பட செஞ்ச யந்திரம்.. இதை சைடுபட்டைல வச்சா எதிரிகள் சைடுல ஒதுங்கும்.. முகப்பு பட்டையில வச்சா முதுகு காட்டி திரும்பிப் போவாங்க.. கீழ பார்க்க வச்சா கில்லாடியா அடிச்சி விரட்டுவீங்க. மொத்தத்துல இது சுத்தற சுத்தலை பார்க்கற பொறாமைக்காரங்க தலை சுத்திப்போவாங்க. அம்புட்டு பவரு...

வலையுலக சாஸ்திரப்படி, இந்த எந்திரத்தை பாலபாரதியானந்தஸ்வாமிகள் அர்ப்பணிச்ச ஒரு பொக்கிஷம்.. எல்லோருக்கும் உபயோகப்படுமுன்னு சங்கத்து மூலமா வழங்குறோம் சாமியோவ்வ்வ்..





கீழ இருக்கற கோடிங்கை தூக்கி பதிவு வூடு உள்ள ஒட்ட வெச்சாப்போதும்..

<img src="http://i42.photobucket.com/albums/e302/kuilbala/spinning.gif" />