Friday, January 29, 2010

தல, புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கபோறோம் தல!



செந்தில்:அண்ணே, ரொம்ப போரடிக்குதுண்ணே, எதாவது ஐடியா குடுங்கண்னே!

க.மணி:போரடிச்சா திருப்பி அடி, என்னை வந்து ஏண்டா உசுரை வாங்குற!

செந்தில்:அதுயில்லண்ணே, புதுசா தொழில் எதாவது செய்ய ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அப்படியா, எவ்ளோ காசு வச்சிருக்க!

செந்தில்:நாலு முறுக்கு வாங்குறதுக்கு காசு வச்சிருக்கேண்ணே!

க.மணி:டால்டா டின் மண்டையா, அதை வச்சி என்னடா தொழில் பண்றது,

செந்தில்:முதல் போடாம தொழில் பண்ண ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அந்தா இருக்கு பேரு பெருமாள் கோவிலு, அது வாசல்ல உட்கார்ந்தா செயத்தியா வசூல் ஆகும், முதலே தேவையில்ல!

செந்தில்:விளையாடாதிங்கண்ணே! என்னை பத்தி ஊரே பேசனும், அதுக்கு ஒரு ஐடியா கொடுங்க!

க.மணி:அப்படினா சாமியார் ஆகிட வேண்டியது தான்!

செந்தில்:அது ரொம்ப ஈஸியாண்ணே!

க.மணி:அதாண்டா இன்னைக்கு ட்ரெண்டே!

செந்தில்:அதுக்கு நான் என்ன செய்யனும்!

க.மணி:முதல்ல பேரை பஜ்ஜியானந்தா, பக்கிபரு மாசுதேவ் நு எதாவது மாத்தி வச்சிக்கோ!
அப்ப தான் மக்கள் மனசுல பச்சக்குன்னு உட்காந்துகலாம்!

செந்தில்:அப்புறம்!

க.மணி:பத்து பேரை வேலைக்கு வச்சிக்கோ, பஸ்டேண்டு மாதிரி மக்கள் கூடுற இடத்துல நின்னு அந்த சாமியார் வாயை திறந்தா போதும், பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்னு புரளியை நீயே கிளப்பிவுடு!

செந்தில்:மக்கள் நம்புவாங்களாண்ணே!

க.மணி:அது இல்லைனா, யாராவது நடிகர், எழுத்தாளர்ன்னு கையில வச்சுக்கோ, அவுங்க சொன்னா மக்கள் நம்புவாங்க!

செந்தில்:அப்புறம்ணே!

க.மணி:சூஃபி கதைகள், முல்லா கதைகள்னு ஒண்ணு விடாம படிச்சிக்கோ! கதையில வர்ற ஆளுங்களோட பேரை மட்டும் மாத்தி உனக்குன்னு ஒரு நாயகணை உருவாக்கிக்கோ, மக்களுக்கு கதை கேக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும் அதனால கூட்டம் வரும்!

செந்தில்:கண்டிப்பா வருமாணே!

க.மணி:பத்துபேர் வந்தா பின்னாடியே ஒரு கூட்டம் வரும்!

செந்தில்:ஒருத்தர் கொட்டாவி விட்டா பின்னாடியே இன்னொருத்தரும் கொட்டாவி விடுறாங்களே அது மாதுரியா!

க.மணி:டிஸ்க்பிரேக் மண்டயா, இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தெ!
கொட்டாவி வந்தா மூளைக்கு ஆக்சிசன் பத்தலைன்னு அர்த்தம், நீ இருக்குற இடத்துல தானே அவனும் இருப்பான், உனக்கு கொட்டாவி வந்தா அவனுக்கு ஆக்சிசன் கொரியர்லயா வரும், அதுனால தான் அவனுக்கும் கொட்டாவி வருது!

செந்தில்:வேற என்னாண்ணே செய்யனும்,

க.மணி:அப்படி கேள்றா! சாமியார் வேலைங்கிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனிய நிர்வகிப்பது மாதிரி, வர்ற போற எல்லாருடய நிலையையும் கவனிக்கனும், தப்பு ஏதும் அவுங்களுக்கு நடந்தா கண்டுக்காத! அதுவே எதாவது நல்லது நடந்தா ஆளுங்களை வச்சு அதை விளம்பர படுத்தீரு! மத்த விளம்பரங்களை விட அதுக்கு ரீச் நல்லாயிருக்கும்!

செந்தில்:அது எப்படிண்ணே!

க.மணி:இன்னைக்கு படிச்சவங்க தான் நிறைய பேர் சாமியார் கிட்ட போய் ஏமாறுறாங்க, நூத்து ஒருத்தனுக்கு வேலை கிடைக்கும், உன்னால தான் கிடைச்சதுன்னு உன் அல்லக்கைகளை வச்சு விளம்பரம் கொடு, அவனோட போன் நம்பரும் கொடுத்துரு, உன் பெருமை பேசி அவனே உனக்கு ஏஜெண்ட் வேலை பார்ப்பான்!

செந்தில்:எல்லாத்துக்கும் வேலை வாங்கி தரமுடியாதாண்ணே!

க.மணி:டேய் டின் பீர் மண்டையா, வாலு மாதிரி ஆளுங்க வந்து ஒன்பதாவது தான் படிச்சிருக்கேன், எனக்கு டாக்டர் வேலை வாங்கி கொடுன்னு கேப்பாங்க, உனக்கு எட்டுல சனி ரெண்டு வருசத்துக்கு இந்த பக்கம் வந்துறாதேன்னு தொரத்தி விட்று, அந்த மாதிரி ஆளுங்களை உள்ள விட்டேன்னா நீ உள்ள போக வேண்டியது தான்!

செந்தில்:இம்புட்டு சொல்றிங்களே, நீங்களே செஞ்சிரலாமே!

க.மணி:அடேய் பனங்கொட்டை தலையா, அதுக்கு உன்ன மாதிரி இளிச்சவாயி மூஞ்சு வேணும்டா, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இளி இளிப்ப, எனக்கு டென்ஷன் ஆனா ஓடி வந்து அப்பிபுடுவேன்! சாமியார்னா திட்டுனாலும் சொரணை இல்லாம சிரிச்சிகிட்டே இருக்கனும்டா, உனக்கு அது தான் லாயக்கு! வரட்டா, உள்ள போனா சொல்லி அனுப்பு காஜா பீடி வாங்கியாறேன்!

Wednesday, January 13, 2010

அந்த கொலையை நான் தான் செய்தேன்!

இதை பகிரங்கமாக ஒத்து கொள்வதில் எனக்கு வருத்தம் எதுவுமில்லை!
நான் ஏன் இதை மறைக்கவேண்டும், எத்தனையோ பேர் செய்யமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை நான் செய்தேன் என்பதில் எனக்கு பெருமையே.

இன்னொன்றையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்,
என் நிலையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.
இங்கே வாழும் மனிதர்கள் காந்தியைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும்,
காந்தி போல் வாழ முடிவதில்லை. எல்லோர் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

நானும் மனிதன் தான், எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு,
ஒரு நாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.
என்று திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்தானோ அன்று ஆரம்பித்தது எனக்கு அந்த பிரச்சனை, ஒரு மனிதன் பகலிலெல்லாம் வேலை செய்து இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான், அந்த நிம்மதியே கெடுவதென்றால் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பான், எனக்கும் அதே நிலை தான்.

ஈரோட்டிலே இம்மாதிரியான பொருள்களுக்கு பேர் போன கடை சங்கீதா ஷாப்பிங் சென்டர், நான்காவது தளத்தில் எனக்கான பொருள் இருந்தது, அதை பொருள் என்று சொல்வதை விட ஆயுதம் என்று தான் சொல்லவேண்டும், விளையாட்டு பொருள் போல் தெரிந்தாலும், அது மிக பயங்கரமான ஆயுதம்,

கைப்பிடியிலேயே அதன் நேர்த்தி தெரிந்தது, கடைக்காரன் இருநூறு ரூபாய் சொன்னான், என்னிலையோ அதற்காக ஆயிரம் ஆனாலும் செலவு செய்வேன். இருந்தாலும் புத்தி போகுமா, அவனிடம் பேரம் செய்தேன், இது ”நீண்ட நாள்” உழைக்கும் என்றான். விட்டால் என்னை சீரியல் கில்லர் ஆக்கி விடுவான் போலிருக்கு.

அன்றிரவு அதற்கான திட்டம் வகுத்தேன், அதற்கு மெல்லிய வெளிச்சம் தேவையா அல்லது தேவையில்லையா என்று எனக்குள் குழப்பம் இருந்தது, காரணம் எனக்கு அது புதிது, படுக்கையில் படுத்து, அந்த ஆயுதத்தை மறைவாக வைத்து கொண்டேன்,
சில நிமிடங்களில் அந்த சத்தத்தை உணர்தேன், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் வசதியாக இருக்கும் போல தோன்றியது, கொஞ்சம் காத்திருந்தேன்,

இது தான் சரியான நேரம், கையில் அந்த ஆயுதத்தை கெட்டியாக பற்றி கொண்டு வீசினேன், சட சட வென்று சத்தம், அத்தனை கொசுக்களும் உயிரற்ற நிலையில் அந்த பேட்டில் ஒட்டி கொண்டது, இதுவரை என் தூக்கத்தை கெடுத்த கொசுக்களை கொன்ற மகிழ்ச்சியில் தூங்கினேன்,அது ஒரு பேட்டரியில் இயங்கும் மின் பேட்




தயவுசெய்து மன்னிச்சிடுங்க நண்பர்களே!
சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு பஸ்ஸில் வரும் போது ஒரு பாட்டு போட்டார்கள். அதை கேட்டவுடன் இந்த மொக்கை தோன்றியது, அது என்ன பாட்டுன்னா

"கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்குதடா என்ன அடிக்கடி

கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்கவந்தா அதை நசுக்கடி"

என்ன படம்ன்னு தெரியாது
ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா

Tuesday, January 12, 2010

டேய்! நீ இன்னும் திருந்தலையா!..

எங்க வீட்ல மொத்த மூணு பசங்க, எனக்கு பின்னாடி ரெண்டு தம்பிகள் இருக்க்றாங்க, ஆனா அது பேருக்கு தான், ஊருகுள்ள என்னை தான் தம்பின்னு சொல்லுவாங்க, அம்புட்டு அடம் பிடிப்பேன் சின்ன வயசிலிருந்து, எங்க மூணு பேர்த்துக்கும் எப்ப பார்த்தாலும் சண்டை வந்துகிட்டே இருக்கும்!, ஒரு நாள் எங்கப்பா கூப்பிட்டார், செமத்தியா விழுகப்போகுதுன்னு பயந்துகிட்டே போனோம்!, சின்னவனை கூப்பிட்டு ஒரு குச்சி எடுத்துட்டு வரச்சொன்னார், அவனும் எடுத்துட்டு வந்தான், நடுதம்பியை கூப்பிட்டு வெளக்கமாத்தை எடுத்துட்டு வரச்சொன்னார், அவன் அடிவிழப்போகுதுன்னு தயங்கிகிட்டே நின்னான், அடிக்க மாட்டேன்னு சொல்லி எடுத்துட்டு வரசொன்னார், முதலில் குச்சியை ஒடித்தார், ஒடிந்தது, பின் வெளக்கமாத்தை ஒடித்தார், ஒடியவில்லை, இதிலிருந்து என்ன தெரியுதுன்னு என்னை கேட்டார், ”விளக்கமாறு மாதிரி இருக்கனும்”னு சொன்னேன்! பின் அந்த விளக்கமாறு உண்மையிலேயே உடைந்தது!

***

நான் அப்போ ஒன்பதாவது படித்து கொண்டிருந்தேன்(இன்னைக்கு வரைக்கும் அம்புட்டு தாண்டா படிச்சிருக்கே)ஈரோடு செங்குந்தர் பள்ளியில், எட்டுவரை டவுசர், அதற்கு மேல் பேண்ட், பேண்ட் போட்டவுடன் காலேஜ் செல்லும் கற்பனை வந்து விடும்! பெரிய சைஸ் புத்தக பைகளை தூக்கி செல்வதை அவமானமாக கருதுவோம், ஒரு பெரிய ரிக்கார்ட் நோட்டை கையில் சுற்றி கொண்டே செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று , மேலும் நானும் , சில நண்பர்களும் கடைசி பெஞ்சில் அமர்ந்து செவுற்று சுண்ணாம்பை தேய்த்து எடுக்கும் ரகம், அதனால் பெரிதாக ஆசிரியர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்!, ஆனால் அன்றைக்கு மட்டும் விதிவிலக்கா அமைந்தது, ஓவிய ஆசிரியரை வேறு நண்பர்கள் புத்தகம் வைத்து ஏமாற்ற முடியாது, அன்று அவரைய வேண்டியதை அன்றே அவரைய வேண்டும், நானும் இன்னும் சில நண்பர்களும் ஓவிய புத்தகம் எடுத்து செல்லவில்லை! ஆசிரியர் அனைவரையும் முட்டி போடச்சொன்னார்!

என்னுடன் முட்டி போட்டிருந்தவர்கள், கடா மாடு சைஸில் இருந்ததால் அடிக்க தயங்கி அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார், நீங்கெளெல்லாம் மாடு மேய்க்க தான் லாயக்கு என்று தான் ஆரம்பித்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படியே பன்றி வளர்க்க தாவினார், பன்னி ஆறு மாசத்தில் பத்து குட்டி போடும், அது ரெண்டு வருசத்தில் ஒவ்வொன்னும் பத்து குட்டி போடும், ஆறே வருசத்தில் நீ லட்சாதிபதி ஆயிறுவே, படிக்கிறக்கு பதிலா பேசாம நீங்கெல்லாம் பன்னி மேய்க்கப்போங்கன்னு கத்தினார், கடைசியா என்னை பார்த்து “என்ன புரியுதா” என்றார்!, நான் தலையை ஆட்டினேன்! ”என்ன புரியுது” என்றார்!, ”பன்னி மேய்க்குறதுல உங்களுக்கு நிறைய அனுபவம்”னு புரியுதுன்னு சொன்னேன்!, அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன!?

****

விடுமுறை குடிகாரனான நான், சனி, ஞாயிறு அளவில்லாமல் குடிப்பேன் என்று நண்பர்களுக்கு தெரியும், அந்த நாட்களில் வண்டி ஓட்டாமல் குடிக்காத யாராவது நண்பர்களை அழைப்பேன், அன்றும் அப்படிதான், பிலாலை வரசொல்லிவிட்டு அமர்ந்தேன்! அவன் வர லேட்டாகி விட்டதால் ஆறேழு குவாட்டர் பக்கம் போயிருச்சு! பூமி என்னை தாங்க முடியாமல் தடுமாறுது, என்னை எப்படியாவது கீழே தள்ளிவிட துடித்தது, நமக்கு இது மானப்பிரச்சனை ஆச்சே, நானும் ஆடி கொண்டே ஸ்டெடியாக!? நின்றேன்! சரியாக பிலால் வந்து நின்று நான் வண்டியில் ஏறும் போது கால் தடுமாறிவிட்டது, எதிரில் காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை, பிலால் குடிக்கவில்லை என்பதால், அதை அவன் பொருட்படுத்தவில்லை!

என்னை பார்த்த காவலர், பிலாலை அழைத்தார், அவனும் போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தேன்! நம்ம பயலை எதோ மிரட்டுறாங்களோன்னு நானும் அங்கே போனேன்!, ”அவன் தான் குடிக்கவேயில்லையே அவனை எதுக்கு சார் புடிச்சி வச்சிருக்கிங்கன்னு கேட்டேன், அவனை விட்டுட்டு என்னை ஜீப்பில் ஏறச்சொன்னாங்க, நான் தான் வண்டியே ஓட்டலையே பின்ன எதுக்கு ஏத்துறிங்கன்னு கேட்டேன், நீ நிறைய குடிச்சிருக்கே வண்டியில ஏறுன்னாங்க, ”குடிக்கிறது தப்புன்னா ஏன் அரசாங்கமே ஒயின்ஷாப் நடத்துது”ன்னு தாங்க கேட்டேன்! உடனே, ”இவன் நக்ஸ்லைட் மாதிரி பேசுறான்” ஜீப்புல ஏத்துனுடாங்க, எதோ ஈரோட்ல நாலு பேர்த்த பழக்கபடுத்தி வச்சிருந்ததால சின்ன பெட்டி கேஸோட வெளியே வந்தேன்!,

அப்ப கோர்ட்ல பார்த்த என்னோட பழைய ஃப்ரெண்டு ஒருத்தன் கேட்டான்.
“டேய் நீ இன்னும் திருந்தலையா!?”

Thursday, January 7, 2010

நீ சரக்கு, நான் சைடிஷ்!

ஒரிஜினல் இங்கே!


பாரெங்கும் இருள் சூழ்ந்திருந்த
ஒரு சண்டே மாலையில்
என் டேபிளினிலருகில் வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி போல் இருந்த அந்த இருவரும்.
அவன் குவாட்டர் மூடியை கழட்டி ஓரம் வைத்தான்.
இவன் கிளாஸ் கழுவி அருகில் வைத்தான்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவருக்கு ஒருவர் சியர்ஸ் சொல்லிக் கொண்டனர்ர்
'நீ சரக்கு நான் சைடிஷ்'
என்று சொன்னான் அவன்.
'சரக்கு இல்ல, நான் சைடிஷ்'
என்று சிரித்தான் இவன்.
என்னிடம் கேட்டபோது
சைடிஷ்தான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டான்.
அவன் அடுத்து எம்சி எம்சி எம்சி என்றான்.
இருவரும்
மட்டையாகி சாய்ந்து விட்டார்கள்
நான் போதையாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

Wednesday, January 6, 2010

பின்மண்டைத்துவவாதிகள்!

செந்தில்:என்னணே இங்க உட்கார்ந்திருக்கிங்க!

க.மணி:இங்க உட்காராம சந்திரமண்டலத்துலயா உட்கார்றது, வந்த விசியத்த சொல்றா வெண்ண வாயா !

செந்தில்:உங்களை பாக்க வீட்டுக்கு போயிருந்தேணே, நம்ம சம்சாரம் நீங்க இங்க இருக்குறதா சொன்னாங்க!

க.மணி:அடிங்க ..... , உன்னை அங்க போகூடாதுன்னு சொல்லியிருகேன்ல, பாவம் பச்சபுள்லைங்கல்லாம் பயப்படுது! அதென்ன நம்ம சம்சாரமா ?

செந்தில் : டங்கு இச்சிளிப் ஆயிருச்சுன்னே !

க. மணி : டங்கு டனாளாகி ,டகுலு பிகுலாயிரும் !

செந்தில்:என்னணே நீங்க.... கூடவே இருக்கேன், என் அறிவையும் பயன்படுத்திகோங்கண்ணே!

க.மணி:தார்டின் மண்டையா, உன்னை பயன்படுத்துற பத்தி யோசிக்கலா ஆனா அறிவ பத்தியெல்லாம் நீ பேசாத!

செந்தில்:அண்ணே வேணும்னா என்ன கேள்வி கேட்டு பாருங்க

க.மணி:ஆமா இவரு டோண்டு , நான் அனானி , இவருகிட்ட கேள்வி கேப்பாங்க

செந்தில்:கேட்க தெரியாட்டி விடுங்கண்ணே

க.மணி:டே பச்செல புடுங்கி , நாலும் நாலும் எத்தனடா?

செந்தில்:ம்ம்ம்ம் ... நாலு நாலும் நாப்பத்திநாலுண்ணே!

க.மணி:டே பனங்கொட்ட தலயா.. ஒன்ன பிதுக்காம விடறதில்ல !, நான் கூட்ட சொன்னேண்டா

செந்தில்:அப்ப விளக்கமாறு கொடுங்க

க.மணி:அய்யோ ராமா.... என்ன ஏன் இந்த கழிசட கூடெயெல்லாம் கூட்டு சேர வைக்கிற!

செந்தில்:அண்ணே, என்ன தப்புன்னு சொல்லுங்கண்ணே!

க.மணி:ஒன்னு கூட ஒன்னு சேந்தா ரெண்டு தாண்டா ஆகும், பதினொன்னா ஆகும்!

செந்தில்:அப்படி கேளுங்க, எங்க அம்மா,அப்பா ரெண்டு பேரா, இப்ப எங்க வீட்ல பதொனோரு பேரு!

க.மணி:அய்யோ மகா ஜனங்களே, இந்த பழிபாவத்துகெல்லாம் நான் ஆளாக மாட்டேன், நான் என்ன கேட்டா அது என்ன பதில் சொல்லுது பாருங்க!, .... அது என்னடா கக்கத்துல துண்டு?

செந்தில்:வர்ற வழியில ஒரே கூட்டமா இருந்துச்சுணே, எட்டிபார்த்தேன் ரெண்டு பேர் கூப்டு துண்டு போட்டுவிட்டாங்க!

க.மணி: அடிங் கொப்பன் தலைல ஆணியடிக்க ! இத என்ன நம்ப சொல்றியா, எங்க காய்ஞ்சிக்கிட்டு இருந்த கோவணத்த ஆட்டைய போட்டுட்டு வந்த?

செந்தில்:நிஜமா தான்னே, அவுங்க எனக்கு தெரிஞ்சவங்க தான், அதான் போட்டாங்க,

க.மணி:என்ன போட்டாங்க ... செருப்படியா ? அது சரி அப்படி என்னடா நீ பெருசா பண்ணிட்டே துண்டு போடுற அளவுக்கு

செந்தில்:ஒரு மாசத்துல தர்றேன்னு ரெண்டாயிரரூவா கடன் வாங்கியிருந்தேணே, ரெண்டு வருசமாகியிம் தரலயா, அதான் கழுத்து துண்டு போட்டு பணம் கேட்டாங்க!

க.மணி:அட வாஸ் பேசன் வாயா ! இத முதல்லயே சொல்லியிருக்க வேண்டியது தான, பின்ன எப்படிடா உன்ன விட்டாங்க, கைய கிய்ய தூக்கிட்டயா?

செந்தில்: இல்லன்னே , எங்கண்ணே நோட்டு அடிக்கிற மிஷின் வாங்கியிருக்காரு, ரெண்டாயிரத்துக்கு பத்தாயிர்ரமா கொடுத்துர்றதா சொல்லிட்டேன்!

க.மணி:அடே பீர்பாட்டில் மண்டையா, என்ன ஏண்டா மாட்டிவிட்ட,

செந்தில்:பின்ன என்னணே, நீங்க மட்டும் நல்லா சம்பாதிக்கிறிங்க எனக்கும் கொஞ்சம் சொல்லிதரலாமுல

க.மணி:அடேய் தயிர்சட்டி மண்டையா, அதுகெல்லாம் மூளை மண்டைக்குள்ள இருக்கனுண்டா ....

செந்தில்: அப்ப எனக்கு எங்க இருக்குன்றீங்க ?,

க.மணி:கரிச்சட்டி மண்டையனுக்கு எகத்தாளாத்த பாருங்க ஜனங்களே,

செந்தில்:கோவிச்சிகாதிங்கண்னே, சொல்லி கொடுங்கண்னே,

க.மணி:அடேய் ஹெட்லைட் மண்டையா, ஊருகுள்ள எவனுக்காவது சொத்து தகராறு வந்தா முன்னாடி நின்னு சரிசமமா பிரிச்சி கொடுக்கனும்டா, நமக்கு எதாவது கொடுப்பாங்க புரியுதா,

************

க.மணி:டேய் டேய் நிறுத்துங்கடா, எதுக்குடா அவன போட்டு அடிக்கிறிங்க,

செந்தில்:அண்ணே, நீங்க சொல்லி கொடுத்தா மாதிரி தாண்ணே செஞ்சேன், அதுக்கு எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க!

க.மணி:என்றா பண்ண

செந்தில்:ரெண்டு பசங்க பன்னை வச்சிகிட்டு பிரிக்கமுடியாம நின்னுகிட்டு இருந்தாங்க, நான் பிரிச்சிதர்றேன்னு சொல்லி வாங்குனேன், அதை ரெண்டா பிரிச்சனா, ஒரு பக்கம் அதிகமா போயிருச்சு, அதனால அதை லேசா ஒரு கடி கடிச்சேன், அப்புறம் பார்த்தா அது சிறிசா போயிருச்சு, அதனால மீதி இருந்த பன்ன ஒரு கடி கடிச்சே அப்புறம் அது சிறுசா போச்சு, அதனால ....

க .மணி : டேய் நிறுத்து !

செந்தில் :அதானே ! அப்படியே மொத்த பன்னும் காலியா போச்சுனே, அதுக்கு தான் எல்லாரும் சேத்து அடிக்கிறாங்க

க.மணி: பார்ரா ! நீ ஒன்னு கவலைப் படாத கண்ணு ! இப்பிடி வந்து கெழக்கு பக்கம் பாத்து கைய ,கால விரிச்சுட்டு நில்லு ..

செந்தில் : ம்ம் ... சொல்லுங்கண்ணே !

க மணி : காலையும் விரி ராஜா !

செந்தில் : ஐ ! நான் விரிச்சா நீ ஒதைப்பையே!

க மணி : நீ விரிக்காட்டியும் நான் ஒதைப்பேனே ! குட்டீர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ..........

Tuesday, January 5, 2010

ஜட்டி காயல, வேலைக்கு போகல!

விடாது பெய்யும் மழை
சிலருக்கு எரிச்சல்
எனக்கும் இன்று
ஜட்டி இன்னும் காயல
வேலைக்கு இன்னும் போகல
அண்டை அயலாரின்
ஜட்டி சேராது எனக்கு
சாமான்யனுக்கு இருப்பது போல்
சாதாரண இடுப்பல்ல என்னது
உன் இடுப்பு தான்
எனக்கு மட்டும் தான்
இது என் ஜட்டி பாடும் பாட்டு
தொப்பையாக நனைந்தாலும்
ஜட்டி நனைப்பது ஆணுக்கு அழகல்ல
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர்
ஆயிரத்து சொச்சத்தில்
ஜட்டி வாங்கி தர ஆளில்லை
என்ன புலம்பினாலும்
ஜட்டி இன்னும் காயல
வேலைக்கு இன்னும் போகல!



******************
முதல் நாளே புட்டிகதைகள் வேணாம்னு ஜட்டி கவிதை எழுதிட்டேன்!
எனக்கு இந்த வாய்பளித்த வா.வா சங்க தலைவர் இளா அவர்களுக்கு நன்றி!
கும்மியடித்து உங்க ஆதரவை சொல்லிட்டு போங்க நண்பர்களே




2009- சிறந்த நகைச்சுவை



வ.வா.சங்கத்தினரால் சிறந்த நகைச்சுவையாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் - படிக்காதவன்.