Showing posts with label abiappaa. Show all posts
Showing posts with label abiappaa. Show all posts

Monday, March 9, 2009

"நச்" நாராயணன் & நாராயணீஸ்!!!



சில பேர் பதிவு போட்டு நகைச்சுவைன்னு லேபில் கொடுத்தும் அது போணியாகாது. சில பேர் "சீரியஸ்"ன்னு லேபில் கொடுப்பாங்க. அதுல வந்து ஒரு பின்னூட்டம் விழும் முதல்ல! "அப்ப ICU விலே சேர்க்க வேண்டியது தானே"ன்னு! நமக்கு சிரிப்பு பிச்சுகிட்டு போகும்.



ஆக நாம இந்த பதிவிலே பார்க்க போவது சில "நச்" பின்னூட்ட நாராயணன்ஸ்& நாராயணீஸ் பத்தி தான்.
இந்த பதிவை எல்லாம் விட பின்னூட்ட சிரிப்பு இருக்கே அது ரொம்ப பெரிய சிரிப்புங்க. அப்படித்தான் நம்ம மாநக்கல் சிபி ஒரு பதி போட்டாரு "நான் ஓய்வெடுக்க போறேன்"ன்னு அதுக்கு நம்ம கொத்ஸ் வந்து "ஓய் வெடுக்குனு வா"ன்னு ஒரு சின்ன 3 வார்த்தை பின்னூட்டம். அதிலே எத்தனை சிரிப்பும் அர்த்தமும் இருக்கு பாருங்க.



அது போல இன்னிக்கு நம்ம அய்யனார் இருக்காரே (அய்யனாரை 1 வருஷத்துக்கு நானும் குசும்பனும் லீஸ்க்கு எடுத்து இருக்கோம், எங்களை தவிர வேற யாராவது கலாய்ச்சா எங்களுக்கு கப்பம் கட்டனும்) நம்ம அய்யனார் இப்ப தான் இப்படி ஆகிட்டாரு. ஆனா அவரு அடிச்ச கும்மி இருக்கே அட ஆண்டவா அதல்லாம் இப்ப புதுசா வந்த பசங்களுக்கு தெரியாது. அவரு மட்டுமா இப்ப இருக்கும் லாடுலபக்குதாஸ் எல்லாம் அப்ப கும்மி குரூப் தான். கொத்தணார் அடிக்காத கும்மியா?



ஒரு மகளிர் தினத்திலே உஷா அண்ணி கும்மின்னு சொல்வதுக்கு பதிலா கும்பின்னு சொல்லிட்டங்க! அப்ப அவந்து லக்கியும், கொத்தனாரும் வந்து முனியாட்டம் ஆடினது யாருக்கு மறக்கும்!



அது போல நம்ம போர்வாள் தேவ் அடிக்காத கும்மியா? ஒரு கட்டத்துல அய்யனார் " வாங்க தேவ் எப்படி இருக்கீங்க போன கும்மில பார்த்தது" அப்படின்னு ஒரு பின்னூட்டம்.அப்படில்லாம் இருந்தோம் அது ஒரு டைம்!
சரி அதை விடுங்க!இப்ப நான் சொல்ல வருவது! சமீபத்துல நான் ரசிச்ச சில பின்னூட்ட சிரிப்புகள்!



ஒரு பிரபல அப்பா பதிவர் தன் தங்கமணிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துட்டு " அய்யோ என் மனைவி ஸ்கூட்டியோட பயங்கர ஸ்பீடா பறக்குறாங்க"ன்னு போட்ட ஒரு பதிவுக்கு நம்ம குசும்ப சித்தர் "ஆஹா அவங்க தனியா பறப்பதே கஷ்டம் இதில ஸ்கூட்டிய வேற தூக்கிகிட்டு பறந்தாங்கன்னா உங்க குடும்பம் பெரிய ஆளுங்க தான்"



இப்படித்தான் துளசி டீச்சர் பதிவிலே ஒரு எறும்பு ஒரு ஆண் உள்ளாடையில் பத்தி ஒரு போட்டோ! அப்ப வழக்கமா வரும் மாணவ மாணவி வகுப்பறையில் வந்து உட்காரும் போது ஒரு மாணவி வந்து பிரசண்ட் டீச்சர் சொன்ன போது "வாம்மா வந்து எறும்பு இல்லாத இடமா பார்த்து உட்காரு"ன்னு டீச்சர் சொன்ன போது எனக்கு சிரிப்பு வயித்த பிச்சுகிட்டு போச்சு!



இப்ப சொல்லுங்க சிரிப்பு வருமா வராதா?
குசும்ப சித்தர் ரஹ்மான் விருது வாங்கின பின்ன போட்ட பதிவில் கீழ்கண்ட பின்னூட்டம் படித்து சிரிங்கப்பா!

//க்ராக்ஜாக் said...
//முனைவர் விஜய் said...ஸ்லம்டாகிற்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் வில்லுவை போட்டிக்கு அனுப்பவில்லை..//அடேய் அரை மண்டையா .. அதான் வந்ததும் பொட்டிக்குள்ள போய்டிச்சே. அப்புரம் என்னதைட போட்டிக்கு அனுப்பறது?\\

\\க்ராக்ஜாக் said...
தேவாவின் இசையை காப்பி அடித்து ஜெய் ஹோ பாட்டுக்கு ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். அதற்கு போய் ஆஸ்கரா?அதான் எனக்கு வெருப்ப
\\

க்ராக்ஜாக் said...
//ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி//அட்ரஸ் தெரியாம குரியர் திரும்ப போய்டிச்சாம்..
\\


அதை விடுங்க சில சமயம் செந்தழல் ரவி " அய்யா நான் இதுக்கு முன்ன போட்ட கமெண்ட்டை அனானியா ஆக்கிவிடவும்" - இதுக்கு நான் 3 நாள் ரூம் போட்டு சிரிச்சேன்.



அதை எல்லாம் விடுங்க மேலே இருக்கும் போட்டோ என் சகோதரியின் மகன்! மாப்பு எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க!

நான் அதுக்கு போட நினைச்ச கமெண்ட்!
"அல்லோ RTO சார் 8 போட்டாதான் லைசென்சா? அதான் நான் 7 வரை போட்டுட்டேனே! பின்ன ஏன் எனக்கு லைசன்ஸ் தர கூடாது???"


இப்படியாக பின்னூட்டத்தில் புயல் கிளப்பும் நம்ம சகோதர சகோதரிகள் இருக்கும் வரை நமக்கு நோய் என்பது ஏது?????????