Tuesday, July 21, 2009

கொழுப்பைக் கொறிக்கலாம் வாங்க

ஒடனே பிரியாணியத் திங்காதே இல்ல குண்டான் கோழியக் கண்டவுடன் காலி பண்ணுங்கர மாதிரிக் கொலைவெறி காயகல்பப் பதிவுன்னு நெனச்சு ஓடாதீங்க. உங்க சைடுக்கா நான் ஸ்டேன்ட் ஆகி சொல்றேன், கெட் அவுட்(எங்க லெக்சரர் ஒருத்தருக்கு திடீர்னு கெட் இன் மறந்துப் போய்டுச்சி, டபால்னு எங்க சைடுக்கா குதிச்சு வந்து நின்னுட்டு, கெட் அவுட்டுன்னு ஒரு போடு போட்டு எங்களைத் தெகைக்க வெச்சாரு, அதான் இங்க மீ தி காப்பியிங்).

கம்மிங் டு தி பாயின்ட், அம்மா அப்பாக்கிட்டருந்துக் கூட அசிங்க அசிங்கமா திட்டு வாங்காத கேர்ல்ஸ் அண்ட் பாயிஸ் நெஜமாவே கெட்டவுட்.

பர்ஸ்ட் அண்ட் ஸ்பெஷல் என்டிரன்ஸ் டு என்னைய மாதிரியான ஞானசூனியம்ஸ் அண்ட் கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்.

மக்களாய் என்னாயிற்று நாம் கொண்ட கொலைவெறி லட்சியத்திற்கு?
நாம் பிறவிஎடுத்ததே சின்னக்கவுண்டர் செந்திலாட்டம் பேசி, பவ்வ்வ்வ்வ்வ்வ்.......ஆக்கத்தானே?
வீரத்தளபதியின் வழி வந்த சிங்க இனமே,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார், என்ற குறள் உன் கொரவளையை நெரிக்கவில்லயா? பிறவிப் பயனை பழைய பனியன் கணக்காய் பயன்படுத்தாமல் பூட்ட கேசாக்கியதேன்? நம் தாய் திருநாட்டில், நாம் பெற்ற புண்ணாக்கு பெயர், இன்று அந்நிய நாட்டில் அந்நியமாகிப் போகும் அபாயம் உள்ளது உனக்குத் தெரியவில்லையா? நம் புகழ்விளக்கு அணையா வண்ணம் அட்டகாசம் செய்யும் பொறுப்பு உன் கையில் என்பதை மறந்துவிட்டாயா மாணிக்கமே. வழக்கமாய், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த ஜோதியாய் எந்நாட்டிலும் நாம் தனித்துத் தெரிவதன் காரணமென்ன? கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?

அஞ்சப்பர் அண்ணாத்தயிடம் போய் பாரீஸ் முழுக்க தோசா கார்னர் ஆரம்பிக்குமாறு பிசினஸ் மேக்னாட்டாக பைசா பிரயோஜனமில்லாத ஐடியா கொடுத்துவிட்டு, நைசாக ஒரு தோசை வாங்கி அதை இரண்டு பேர் ஷார் செய்து ஆளுக்கு அரை தோசை தின்று, அவர் மண்டையை கிறுகிறுக்க வைத்த அஞ்சாநெஞ்சமெங்கே?

கண்ணாலம் காட்சிஎன்றால் நேராகப் போய் சூப்பர் டிரெஸ் எடுத்து வந்து, டெக்னிக்கலாக டேகை சுருட்டிவிட்டு, பீத்துவதற்கென்றே சென்ற பங்க்ஷன் முடிந்து ஜங்க்ஷனுக்கு வந்தவுடன் அதை மறுபடி மடித்து, மங்காத முறுவலுடன் முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?

தாய் திருநாட்டில் எஸ்எம்எஸ் பிரீ என்று ஒரு செய்தி கிட்டினாலே, வெரல் வீங்கி வைத்தியம் பாக்குமளவுக்கு செல்போன் கம்பெனிக்காரங்களை கிடுகிடுக்க வைத்த நாம், இன்று இங்கு பிரீ கால் இருந்தும் பம்மிப் போய் பேஜாராகியிருப்பதேன்? பின்னொரு காலத்தில் பேஜர் கம்பெனிக்காரன் வைத்த சூனியத்தாலா?

வாய்பாட்டு சொல்லிக்கொடுக்கக் கெளம்பிய வரதராஜன்களை கர்ணகடூரமாகப் பாடி பயமுறுத்தி, வராதராஜன்களாக மாற்றிய தீரமெங்கே?பரதநாட்டியம் பயிற்றுவிக்க பிறவியெடுத்த பானுக்களின் காலொடித்து, பனுவாக்கிய பயமறியாப் பாவைகள் எங்கே? பதில் தெரியா கேள்விகளுக்கு பிதுங்கிப் பிழியாமல் பழமொழிக் கூறியே பயமுறுத்திய பாசமிகு பாண்டியரெங்கே?

நம் வீட்டுக் குப்பையைக் கேதர் செய்து குறிபார்த்து பக்கத்து வீட்டில் போட்டு, கேவல கேவலமாகத் திட்டு வாங்கியே பழக்கப்பட்ட நாம், திடீரென குப்பைத்தொட்டியில் குப்பையை போடும் கபீர் போக்கின் காரணமென்ன? நாம் பாடுபட்டு வளர்த்த பண்பாடு என்னாவது?

கலாச்சாரக் காவலராகும் காலம் நெருங்கிவிட்டது, குப்பையை நடுரோட்டில் கொட்டி, மண்டையில் கொட்டு வாங்குவோம் வா.
சல்சா நடனத்தைக் கண்டுபிடித்தவர் ஜலஜாவா எனக் கேட்டு காண்டாக்குவோம் வா.
ஈபில் டவருக்கே ஈயம் பூசுவோம் வா.
ஸ்விம்மிங் கத்துக் கொடுக்கும் கோச்சை விம்ம வைப்போம் வா.
ஹத யோகாவை ஷில்பா ஷெட்டியே வந்து சொல்லிக்கொடுப்பாரா எனக் கேட்டு கடுப்படிப்போம் வா.
அட்லாண்டிக் சிட்டியில் அட்ராசிட்டி கிடைக்குமா எனக் கேட்டு குபீர் கெளப்புவோம் வா.
அக்வாஜிம்மில் அக்வாபீனா கொட்டினால்தான் ஆச்சு என்று அடம்பிடித்து அடிவாங்குவோம் வா.
ஐநா சபையில் இந்த மைனாவிற்கு இடமில்லையா எனக் கேட்டு, இத்துப் போன டைமிங் சென்சால், பிளேடு போட்டே, பயங்கரவாதிகளின் லிஸ்டில் இடம்பிடிப்போம் வா.

மண்டையிலுள்ள மசாலாவைக் கிளற உகந்தது மசாலாப் பாலா, மசால் தோசையா என நீ விவாதித்துக் கொண்டிருக்கும் இந்நேரம், பாகிஸ்தான்காரன் நைசாக
பல பப்பாளி பிளான்களை வைத்து நம்மை முந்துகிறான் பார். பங்க்லாதேஷ்காரன் பல்டியடித்தே முந்தி விட்டான் பார். பொறுத்தது போதும் பொங்கியெழு. ஆஸ்திரேலியாக்காரர்கள் இந்த அதிபயங்கர குஷ்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி அரலூசாகட்டும். ஏற்கனவே நம் திறமையை துல்லியமாக வெளிப்படுத்திய சிக்காகோ நகரின் மகாத்மா காந்தி/ஜின்னா/முஜிபுர் ரகுமான் என்ற பட்டாத் தெரு, பம்மிப் பதுங்குபவர்களுக்கு பப்பரப்பாவெனப் பதில் கூறட்டும். கிளர்ந்தெழு, பொங்கிவிடு, புறப்படு.

இறுதியாக உன்னை உற்சாகப்'படுத்தியெடுக்க', சற்று நேரம் உற்று கவனித்தாலன்றி பாடியவர் ஆணா பெண்ணா என ஸ்ரீவித்யா மேடமே கண்டுப்பிடிக்க முடியாதபடியுள்ள, செல்டிக் காபி கம்பெனி ஓனரான ஹாரிஸின், முதல் முதலாகப் பாடலின் சில வரிகள்,

முதல் முதலாக முதல் முதலாக மொத்த மொத்தமாக மொத்து மொத்து வாங்க வா வா வா இனமே,
ஓஹோ, தனித் தனியாகத் தன்னந்தனியாக இலவசமாக செம வசவாக வாங்க
வா வா வா இனமே.

15 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அஞ்சப்பர் அண்ணாத்தயிடம் போய் பாரீஸ் முழுக்க தோசா கார்னர் ஆரம்பிக்குமாறு பிசினஸ் மேக்னாட்டாக பைசா பிரயோஜனமில்லாத ஐடியா கொடுத்துவிட்டு, நைசாக ஒரு தோசை வாங்கி அதை இரண்டு பேர் ஷார் செய்து ஆளுக்கு அரை தோசை தின்று, அவர் மண்டையை கிறுகிறுக்க வைத்த அஞ்சாநெஞ்சமெங்கே?//
இது எனக்கு ரொம்ப பிடிச்சது... :)

சென்ஷி said...

முடியலை. இப்படி எழுதறதையே தனி ஷ்டைலா ஆக்கிட்டீங்க போலருக்குது :)

சந்தனமுல்லை said...

:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா ராப்?!!

சந்தனமுல்லை said...

//பர்ஸ்ட் அண்ட் ஸ்பெஷல் என்டிரன்ஸ் டு என்னைய மாதிரியான ஞானசூனியம்ஸ் அண்ட் கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்.//

அவ்வ்வ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?
//

ஹிஹி

சந்தனமுல்லை said...

//பங்க்ஷன் முடிந்து ஜங்க்ஷனுக்கு வந்தவுடன் அதை மறுபடி மடித்து, மங்காத முறுவலுடன் முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?//

ஆஹா....நல்ல ஐடியாவா இருக்கே!! ப்ரெண்ட்ஸ்கிட்டே, பக்கத்து வீட்டுலே வாங்கினதெல்லாம் போய் நேரா கடையிலே கடனுக்கு வாங்கறதுதான் இப்போ ஃபேஷனா!! :-))

☀நான் ஆதவன்☀ said...

//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?
//

:)))))))))))))

☀நான் ஆதவன்☀ said...

ஒரு ம.ச.மு.தெ.கன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு ஊர் முழுக்க முதல்ல போஸ்டர் ஒட்டுறோம்......ஆளுங்கள விட்டு அதுல சாணி அடிக்க சொல்றோம்....பேனர் வைக்கிறோம்.

அப்பாலிக்கா நீங்க இங்க பண்ணுன எல்லாத்தையும் அங்க சுலவா பண்ணிடலாம்

சந்தனமுல்லை said...

//தனித் தனியாகத் தன்னந்தனியாக இலவசமாக செம வசவாக வாங்க
வா வா வா இனமே.//

lolz

இராம்/Raam said...

கவுஜாயினிக்கா செம கலக்கல்.. :)))

நாகை சிவா said...

கலக்கல்ஸ் :)

ஆயில்யன் said...

பாஸ் செம கலக்கல் வரிக்குவரி சிரிச்ச்சேன் சிரிச்சேன் !

அஞ்சப்பர் ஐடியா & எஸ் எம் எஸ் ஃபீலிங்க்ஸெல்லாம் :)))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்//

நெறைய கொழந்தைங்களுக்குச் சரளமாப் பேரு வச்சிருக்கீங்க போல! அனுபவம் பேசுது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சந்தனமுல்லை said...
:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா ராப்?!!//

அட, யக்கா எப்பவோ கட்சி ஆரம்பிச்சி, உள்ளாட்சி, வெளியாட்சி, படையாச்சி-ன்னு பல லெவலுக்குப் போயி, இப்போ டெல்லியில ரசாபாச ச்ச்சே ரசாயன மந்திரியா இருக்காக! நீங்க வேற! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?//

ஹிஹி! சூப்பரு! :)