Sunday, July 12, 2009

டேக்சா தலையனும் டபரா மூஞ்சிகளும்

பொது அறிவு குவிஜு: இந்தியன் பேங்க் கோபால கிருஷ்ணன் இருக்காரே, அவரை குத்தவாளின்னு அறிவிச்சத வாபஸ் வாங்க சொல்லப்போறாங்களாம். ஏன்? விடை கடசீல.

கொலக் கொல கொலப் பண்றாங்கப்பான்னு கத்திட்டே ஓடனும் போல இருக்கு வர்ற பதினாலாம் தேதிய நெனச்சா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............பின்ன என்னாங்க, கொடும கொடுமன்னு கோவிலுக்குப் போனா, அங்க ரெண்டு சிவசங்கர் பாபா கல்கி அவதார வேஷத்துல டான்சாடுனாப்டி, இந்த ஹாரி பாட்டர் படம் ரிலீஸ் பண்றாங்களே.

கஷ்டப்பட்டு, குஷ்டப்பட்டுன்னு அந்த சீரீஸ் வந்தப்போ, நாமளும் கொயந்த மனம் படைத்த சுட்டிப் பெண்தான் அப்டின்னு முக்காவாசிப் பெண்களையும் ஆண்டிகளையும் போல நானும் ஒரு சீனப் போட எம்புட்டோ முயற்சி பண்ணேன். ம்ஹூம், யம்மாடி, என்னா கொடுமையா இருந்துச்சி, இத படிக்கிறத்துக்கு, எழவு, நான் எழுதுன கண்றாவி லவ் லெட்டரையே நாலஞ்சிதடவ படிக்கலாம் போலருந்துச்சி. இந்த அரலூசு ஹாசினி எபெக்டுக்கு(நன்றி சந்தோஷ் சுப்ரமணியம்) நாலஞ்சு வருஷம் முன்ன நல்ல வரவேற்பு இருந்ததால, அதைப் பாலோ பண்ண, பற்பல மங்கையர் மங்கா முயற்சியில் ஒரு முடிவோட ஈடுப்பட்டிருந்தபோது, பைந்தமிழ் மாதான நானும் செவ்வனே சீப்பால் மண்டையில் சொரிந்துக்கொண்டே இதற்காக செக்கிழுத்தேன்(முழுலூசான நீ அரலூசாக நடிக்க ஏன் கஷ்டப்பட்டேன்னு கேட்டா, உங்க சமையல நீங்க பாராட்டுறதுல இருக்கக் கஷ்டத்தைவிட உங்க மாமனார்/மாமியார் சமையலை பாராட்டுறது எம்புட்டு கஷ்டம்னு புர்தா). அடங்கொன்னியா, எங்கக்கா பையன் சொல்ற கதைல இருக்கக் கற்பனையும் இன்டிரெஸ்டிங்க் திருப்பமும் மாயாஜாலங்களும் கூட இதுல இல்லை.

சரி, புக்க படிக்கிறாப்டி பாவ்லா காமிச்சு வழக்கம்போல அட்ஜஸ்ட் பண்லாம்னு முடிவுப்பண்ணிட்டு கம்னு கெடந்தா, அப்பவும் விடாம வந்து, இதப் படிச்சிட்டு வர்ற பீலிங்கை சொல்லுன்னு ஒரு தறுதலக் குரூப்பு(பின்ன என் நண்பர்கள்னா) அலஞ்சிது. நாம என்னைக்கு இதுக்கெல்லாம் அசந்திருக்கோம், நா இப்டிங்கும்போது, இவங்க வேற எப்டி இருக்கப் போறாங்க. வேற எங்கயோ சீனப் போட, இங்க வந்து ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வோர் பீலிங்க்னு ஆட்டயப் போடுறாங்க, விக்கீயக் கூடப் படிக்காம, புருடா விட ஆளத் தேடுதுங்கன்னு புரிஞ்சிடுச்சி. விடுவனா நானு, சொம்மா சொழட்டி சொழட்டி சோழிய உருட்டுறாப்டி, கேவலக் கேவலமான திருப்பங்களோட டூப் விட்டாச்சு. அதையும் இதுங்க அட்சரம் பிசகாம நோட் பண்ணிக்கிட்டு எங்கயோத் தன் கொயந்த உள்ளத்த தேள் கணக்கா கொட்டோ கொட்டுன்னு கொட்டிருக்குங்க. இதுல டார்ச்சரின் உச்சக்கட்டம்னா, இந்த கப்சாவையும் அந்த டாம் குரூஸ்(அதாவது ஸ்லைட்டா நட்டு கழண்ட கேஸ்) கோஷ்டி ஆமோதிச்சி ஜல்லியடிச்சிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

ஏன் கொரங்கு உன்னை யாராவது பெல்டால அடிச்சு, சொவத்துல தேச்சு படிக்க சொன்னாங்களான்னு கேட்டீங்க, அப்புறம் கவுஜ பாடிடுவேன். மொதல்ல லொடுக்கு சுந்தரிகள், அல்லக்கைகள் இந்த டெர்ம்சுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சிட்டு வந்து பேசனும், ஆமா. நாங்க எந்த உருப்படியான, பெப் டிரென்ட் வந்தாலும் ஒடனே போய் அதை ஒட்டா காப்பி அடிச்சு, 'தூ' அப்டின்னு அந்த பெப் குரூப் காறித்துப்பி தொரத்திட்டு, வேற டிரெண்டுக்கு மாறுறவரை விடாம தொரத்துவோம்.

சரின்னு, ஆயிரம் கண்டிஷன் போட்டு ஒரு அபூர்வ சிகாமணியக் கண்ணாலம் பண்ணிட்டு வந்தா, ஏன் ஆயிரத்தோராவது கண்டிஷன் போடலைன்னு யோசிக்க வெக்குறமாதிரி இவரும் இந்த ஹாரி பாட்டர் ரசிகர். பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........ஆகிப்போச்சு. இதுல நான் போட்டுக் கொடுத்த பாதையான நைனையென நச்சரித்துக் காரியம் சாதிக்கும் வழிக்கு எனக்கே மேப் போட்டு காட்றாரு. பின்ன, அஞ்சப்பர் நாளைக்குப் போகனும்னா, இன்னைக்கு ஹாரி பாட்டர் பாத்தே ஆகனும்னா என்னத்தப் பண்றது. வாழ்க்கையில் சொத்தை வெச்சு வெள்ளாடுறதும், சோத்த வெச்சு சூதாடறதும் ரொம்பத் தப்புன்னு வர்ற மாரல் சயன்ஸ் கதைங்கள படிக்காதீங்க, இந்த வெளங்காமப் போன சூனியக்கார கதையப் போய் கட்டிட்டு அழுங்கன்னு ஒரு பாட்டம் குமுறினப்புறம், ஒரு சமாதான உடன்படிக்கைக்கு நாங்க வந்தோம்.

அதென்னன்னா, ஒன்லி ஹாரர் மூவீஸ் மட்டுமே திரையரங்கில் போய் பாக்குறது. இந்த கடுப்பஎல்லாம் திருட்டுத்தனமா டவுன்லோட் பண்ணி மட்டுமே பாக்குறதுன்னு ஒரு கொள்கை முடிவெடுத்தோம். ரத்தக் காட்டேரி, பேய், பிசாசு இப்டிப்பட்ட படங்களை தேடித்தேடி பாக்க ஆரம்பிச்சோம். (வேறென்ன, என்னைய ஸ்க்ரீன்ல பாத்துக்கற ஆர்வம் எனக்கு, பொண்டாட்டிய மேக்கப்பில்லாம பாக்குற ஆர்வம் அவருக்கு).

சரி அதான் பிரச்சினை முடிஞ்சிடுச்சே, இப்ப ஏன் பொலம்பி சாவடிக்கிறேன்னு கேட்டா, வேறொன்னுமில்லை மக்களா, இப்போ Daniel Radcliffe அண்ட் கோ கண்றாவியா வளந்து, பாக்க பயங்கரமா ஆகிட்டதால இதுவும் இப்ப ஹாரர் படம்தான், போய் பாத்தே ஆகனும்னு சொல்றாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

டிஸ்கி : எத்தனப் பேரு கெளம்பிருக்கீங்க இப்டி? கொயந்த உள்ளம்னு புரூவ் பண்ண, போய் கொயந்தயோட வெள்ளாடுங்க, இல்ல கண்றாவியான பால் சோறு தின்னு வாந்தி எடுங்க. இப்படியா போட்டு சாவடிக்கிறது?, அப்டின்னு டேமேஜ் பண்ண நெனைக்கிறவங்க வீட்ல எல்லாம் இருபத்துநாலுமணிநேரமும் வெறும் போகோ சானல் மட்டுமே வருமுன்னு, யாகவா முனிவர் கிமு 700ல சொல்லிருக்கார்.

விடை: டிராக் மீ டு ஹெல்(இந்தப் பதிவைச் சொல்லல) படம் பாத்தீங்கல்ல, வீட்டு லோன்ல சலுகைக் காமிக்காததால அந்தப் பொண்ணு என்னா பாடுபடுது. அப்டிப்பட்ட சூனியக்காரங்களுக்கு பயந்துதான் நம்ம கோவாலு சார் எக்கச்சக்கமா வாரி வழங்கிட்டாராம். இந்தியன் பேங்கை அவரு தன் சொந்த பேங்கா நெனச்சு, இரக்க சுபாவத்தொட பரம்பர சொத்தை பட்டாப்போட்டு கொடுக்குற உற்சாகத்தோட கடன கொடுத்திட்டு,கொஞ்சம் பயந்த சுபாவத்தால கடன வசூல் பண்ணாதது எல்லாம் ஒரு குத்தமா மக்களாய்? இதுக்குப் போய் உள்ள தூக்கி போட்டுட்டாங்களே. ச்சே என்னா நாடு இது!!!

21 comments:

madura said...

சும்மா பின்னி பெட‌ல் எடுக்குறீங்க‌ போங்க‌....எந்த‌ ஊரு பாக்ஷ இதுங்கோ! ஆனா ஒன்னுங்க‌ ம‌க்க‌ள் டீவி புக‌ழ் ந‌ன்ன‌ன் தாத்தா ம‌ட்டும் இத‌ ப‌டிச்சாருனு வையுங்க‌ நெம்ப‌ ச‌ந்தோச‌ ப‌டுவாருங்க‌..

கபீஷ் said...

கலக்கல் ராப் :-) :-)

☀நான் ஆதவன்☀ said...

//இந்த கப்சாவையும் அந்த டாம் குரூஸ்(அதாவது ஸ்லைட்டா நட்டு கழண்ட கேஸ்) //

அவ்வ்வ்வ்வ்....ஏனுங்க இப்படி அன்ணன வாருறீங்க. அப்புறம் உங்களை ஒரு தடவை அவரை பேட்டியெடுக்க வ்ச்சிருவேன் ஆமா. கை முறிஞ்சு போச்சு, கால் முறிஞ்சு போச்சுன்னு சொல்லப்படாது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இப்போ Daniel Radcliffe அண்ட் கோ கண்றாவியா வளந்து, பாக்க பயங்கரமா ஆகிட்டதால இதுவும் இப்ப ஹாரர் படம்தான்//

ஆகா.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யாகவா அப்ப கடவுள் தானா.. எங்க வீட்டுல போகோ தான் ஓடுது.. :(

இராம்/Raam said...

கலக்கல்... சிரிச்சிட்டே இருக்கேன்... :)

ஜோசப் பால்ராஜ் said...

தலைவி,
குத்து விளக்கு கோபலகிருஷ்ணணுக்கு இம்புட்டு சப்போர்ட்டா?

சந்தனமுல்லை said...

:-)))) //நாமளும் கொயந்த மனம் படைத்த சுட்டிப் பெண்தான் அப்டின்னு// எதுக்கு இந்த வேலை ராப்?!

சந்தனமுல்லை said...

/நாங்க எந்த உருப்படியான, பெப் டிரென்ட் வந்தாலும் ஒடனே போய் அதை ஒட்டா காப்பி அடிச்சு, 'தூ' அப்டின்னு அந்த பெப் குரூப் காறித்துப்பி தொரத்திட்டு, வேற டிரெண்டுக்கு மாறுறவரை விடாம தொரத்துவோம்.//

:-))))) முடியலை ராப் முடியலை...சிரிச்சி சிரிச்சி...ஹப்பாஆஆ!

சந்தனமுல்லை said...

rapp...u r rocking!!

செந்தழல் ரவி said...

நாலு வரி நடக்கறதுக்குள்ள நாப்பது முறை மண்டை சுழலுது போல..

அல்ட்டிமேட் கலக்கல் காமெடி ராப் !!!!

நேச்சுரல் ராக்கர் !!!!!!

ramalingam said...

அந்தக் காலத்து மதனகாமராஜன், பட்டி விக்ரமாதித்தன் கதைகளின் நடையழகு உங்களிடம் அமைந்துள்ளது.

Anonymous said...

//பைந்தமிழ் மாதான நானும் செவ்வனே சீப்பால் மண்டையில் சொரிந்துக்கொண்டே //

நல்லா யோசிக்கறீங்க. :)

செந்தழல் ரவி said...

vote !!!

சென்ஷி said...

வந்துட்டோமுல்ல.... :))

சென்ஷி said...

\\இப்போ Daniel Radcliffe அண்ட் கோ கண்றாவியா வளந்து, பாக்க பயங்கரமா ஆகிட்டதால இதுவும் இப்ப ஹாரர் படம்தான்//

உண்மைதான்க்கா. டிரெயிலர்ல பார்த்து பயந்துட்டேன். ஆனாலும் அநியாயத்துக்கு வளர்ந்துட்டான். இன்னும் அந்த குழந்தை முகம்தான் என் கண்ணுல நிக்குது. :(

சென்ஷி said...

//"டேக்சா தலையனும் டபரா மூஞ்சிகளும்"//

தலைப்புலயே டெர்ரரை கிளப்பறீங்கக்கா :)

ரங்கன் said...

தெரியாம வந்துட்டேன்.. மன்னிச்சுடுங்க!!

" உழவன் " " Uzhavan " said...

காமடில கலக்குறீங்க

Anonymous said...

டிராக் மீ டு ஹெல்(இந்தப் பதிவைச் சொல்லல) படம் பாத்தீங்கல்ல, வீட்டு லோன்ல சலுகைக் காமிக்காததால அந்தப் பொண்ணு என்னா பாடுபடுது. அப்டிப்பட்ட சூனியக்காரங்களுக்கு பயந்துதான் நம்ம கோவாலு சார் எக்கச்சக்கமா வாரி வழங்கிட்டாராம். இந்தியன் பேங்கை அவரு தன் சொந்த பேங்கா நெனச்சு, இரக்க சுபாவத்தொட பரம்பர சொத்தை பட்டாப்போட்டு கொடுக்குற உற்சாகத்தோட கடன கொடுத்திட்டு,கொஞ்சம் பயந்த சுபாவத்தால கடன வசூல் பண்ணாதது எல்லாம் ஒரு குத்தமா மக்களாய்? இதுக்குப் போய் உள்ள தூக்கி போட்டுட்டாங்களே. ச்சே என்னா நாடு இது!!!

yes what நாடு இது!!!
hi hi

சிங்கக்குட்டி said...

காமெடி நல்ல கலக்கல், சிரிச்சு ...சிரிச்சு... முடியல :-)