Thursday, July 9, 2009

ஒலக லெவல் பிரபலத்துக்கு வந்த உன்னதக் கடிதம்

டிஸ்கி 1 : இது சோம்பேறி மனச புண்படுத்தும்னு யாராச்சும் நெனச்சாக்கா, ஹி ஹி, இப்டி காப்பியடிச்சாச்சும் சோம்பேறி மனச புண்படுத்த முடியுமான்னு பாக்கத்தான் செய்றேன்னு பெத்த ஸ்மைலுடன் தெரிவிச்சிக்கிறேன். இது கன்பர்ம்டா அதுக்கான முயற்சிதான்.

டியர் ஜாக்சனு,

நீங்க ரொம்ப நல்லா ஆடுறீங்க மச்சி. முக்கியமா "ஐ லவ் டு டூர்" அப்டின்னு உங்க நடிப்ப யூட்யூப்ல பாத்து பாத்து வயிறே புண்ணாக்காகிடுச்சு. அதில் வரும் மேக்கப் அக்காக்களின் நக்கலும் சிரிப்பும் மனதில் இன்னும் நிற்குது(எப்டியும் அது உங்களுக்கு நெனவிருக்காதுன்னு அதையும் அனுப்பிருக்கேன் பாருங்க).

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது இராப்புக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் வாங்கனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். உங்கள இராப்பின் "கேசட் கால தல" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க சமீபத்துல "ஜஸ்ட் பீட் இட்னு" ஒரு பாட்டு பாடிருப்பீங்க, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே பாடி ஆடுறத நிறுத்தின ஒதைப்பேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mrs. கொலைவெறி குப்பன், தில்லி பஜார்மை டியர் மிசஸ்.குப்பலாரி, சாரி பஜாரி , ஓவ் ஸாரி மிசஸ். கொலைவெறி குப்பன், தில்லி பஜார் ,

நான் போய் சேர்ந்து ரெண்டு வாரமாகுது, இப்பயா லெட்டரு போடற? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

அது ஏன் உனக்கு மட்டும் கண்ணால பாத்தா வயிறு புண்ணாகுது?

நீ நெஜமாவே மிஸஸா, இல்ல மிஸ்டரா? ஏண்டா டுபுக்கு, மேக்கப் அக்காங்களோட சிரிப்பு மனசுல நிக்குதுன்னு ஒரு பிட்டப் போட்டுட்டு, பேச்சா பேசுற வெண்ணை. இந்த டுபாக்கூர நான் உசிரோட இருக்கும்போதே நம்பிருக்கமாட்டேன். இப்ப நான் ஆவியா சுத்தறதுதான் சிஎன்என்லருந்து எல்லாத்துலயும் அலறுதே, பாக்கலையா(நீ எங்கருந்து பாத்திருக்கப் போற, எண்பத்திரண்டுல வந்த பாட்டையே சமீபத்துலன்னு சொல்லி பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........ஆக்குற). அடேய் டேய் அடடடேய், என் பேட்டிய எனக்கேப் போட்டு படங்காட்டுறியா? டேய் வேணாண்டா, என் ரெண்டாவது சம்சாரம் கொடுத்த பகீர் பேட்டியப் பாத்தல்ல, என்னா மாட்டி விட்டுறவா அவங்கக்கிட்ட? அவங்கக் கைல கெடச்சே கைமாதாண்டி மாப்ள.

அடங்கொன்னியா, சரக்கடிச்சு மட்டயாகுற சப்ப ரேஞ்சுல நானிருந்தா, ஏண்டாப்பா ஒரு மருந்துக் கடைய ஏலத்துல எடுத்து வெச்சு, முப்பது டாக்குடருங்கள இப்போ வம்புல மாட்டி விட்டிருக்கப் போறேன். இப்ப வேணா செத்து செத்து வெள்ளாடுற வெள்ளாட்டிருக்கு, சேர்ந்து ஆடலாமாடாப்பா?

அடேய் நீ சொல்லிருக்க மத்ததக் கூட தாங்கிப்பேண்டா, ஆனா இராப்புங்கற கொரங்கோட பதிவ பாத்துதான் என்னையத் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லுறப் பாரு அதிலிருந்தே தெரியுதுடா, நீ பாப்பரசிக்கு பொறந்த பாப்பரசின்னு. டேய், இங்க வந்தாலும் விடமாட்டீங்களாடா? நீ தில்லின்னு போட்டுட்டா, நாங்க பாரின்னு பயந்து பம்மிடுவமாடா?

அடேய், மார்டின் பஷீர் தலையனுங்களா, அதான் என்னைய நிம்மதியா ஆவியாக்கூட உலாத்தவிடாம, ஒலகம் முச்சூடும் மூவாயிரம் சேனல்லருந்து, ட்விட்டர் வர போட்டு தாக்கோ தாக்குன்னு தாக்குறீங்களேடா. இதுல செல கெரகம் புடிச்சவங்க, நான் இன்னும் உசிரோடத்தான் திரியறேன், செத்துப் போனாப்டி சீனப் போடறேன்னெல்லாம் கெளப்பி விட்டு, இப்போ இங்கிருக்க பாதி ஆவிங்க என்னைய ஆவியே இல்லன்னு சந்தேகப்பட்டு செட்டு சேத்துக்க மாட்டேன்னு சாவடிக்குதுங்க, மீதி ஆவிங்க வந்து ஆட்டோகிராப் கேட்டும், மூக்க கிள்ளியும், சூரியனான்டக் கூட்டிட்டுப் போய் என் கலர சோதிக்கிறேன் பேர்விழின்னு அறிஞர் அண்ணாக்கிட்டக் கூட்டிட்டுப் போயும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்குதுங்க. இப்போ திருப்தியாடாப்பா உங்களுக்கு. இருக்கப்ப கருங்கொரங்கு ரத்தத்தை சூப் வெச்சு சிம்பன்சிக்குக் கொடுத்தேன்னு பீதியக் கெளப்பி விட்டுக் கும்மியடிச்சது போதாதாடா?

அந்த பிரின்ஸ் பயல போட்டுத் தாக்கறத்துக்காக நான் ஒன்னைக் கெளப்பி விட்டா, நீங்க ஒம்போதை கெளப்பிவிட்டு, உங்க டோப்புக்கு என்னைய ஏஜண்டாக்கிட்டீங்களேடா. ஆளவிடுங்கடா சாமி.


டிஸ்கி 2: அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி, இதனை செவ்வனே செஞ்சேன்.

14 comments:

சின்ன அம்மிணி said...

மீ த பர்ஸ்ட்

சின்ன அம்மிணி said...

//இருக்கப்ப கருங்கொரங்கு ரத்தத்தை சூப் வெச்சு சிம்பன்சிக்குக் கொடுத்தேன்னு பீதியக் கெளப்பி விட்டுக் கும்மியடிச்சது போதாதாடா?//

ஏன் இந்தக்கொலைவேறி ராப்பு, கொஞ்சம் சைவமா மாறக்கூடாதா :)

சந்தனமுல்லை said...

ROTFL!

சந்தனமுல்லை said...

//அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி,//


:-))))))))))))))))

தீஷு said...

சூப்பர்!!

♫சோம்பேறி♫ said...

ராப், இந்தப் பதிவை நான் கொஞ்சம் காப்பி அடிச்சு ஒரு பதிவை போடலாமா? நீங்க பர்மிஷன் தருவீங்களா?

sshathiesh said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

sshathiesh said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

sshathiesh said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

////அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி,////

ROTFL :)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))
மறத்தமிழ்மாதுன்னு திரும்ப திரும்ப நிரூபிக்கிரிங்க.. :)

செந்தழல் ரவி said...

:)))))))))))

தமிழன்-கறுப்பி... said...

:))))

மணிகண்டன் said...

கலக்கல் ராப்.