Sunday, July 5, 2009

அவ்வா அவ்வா அவ்வவ்வா

நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்ட வெச்சு ஒரு போஸ்ட் போடுவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன், ஒருத்தரும் கண்டுக்கறமாதிரி காணோம்.

இதை நான் ரொம்ப தம்தூண்டா இருக்கறச்சே(எல்லார்க்கும் இருக்காப்டி, மாதுங்கா சித்தி எங்களுக்கும் உண்டுல்ல), கேட்டது. அது கொஞ்சம் வித்தியாசமா, திருவிழா கச்சேரி கணக்கா, கொஞ்சம் பிசிறடிச்சி இருந்தது. ஆனாலும், பாட்டென்னவோ டக்கரா இருந்துச்சி. ஏதோ ஆல்பம் அப்டின்னெல்லாம் பேசிக்கிட்டாங்க, பாடுன ஆள் பேரு மட்டும் மனசுல ஓட்டல. அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாகிடுமே நமக்கு. இன்னும் ஹிந்தின்னா கேக்கனுமா, காக்ரே பூக்ரேன்னு நாமளே ஒளறவேண்டியதுதான.

அப்பாலைக்கு கொஞ்ச நாள்ல எல்லாம் பிசிறடிக்காம அதே பாட்டு இன்னும் டக்கரா ரேடியோல வந்துச்சி, அடடா நெறைய பேர் சொல்லி, அண்ணன் இன்னும் தெளிவா பாடி அனுப்பிருக்காருன்னு ஒரு சிந்தனையப் போட்டுட்டு வழக்கம்போல தப்புதப்பா கூட சேர்ந்து கத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்ச நாள்ல ஊரே இந்தப் பாட்டை முணுமுணுக்குது. ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீன் வர்சைல இன்னொரு பாட்டு கெடச்சிடுச்சுன்னு மதிமயங்கிக் கெடந்தோம்.

அப்றம்தான் நான் மொதல்ல கேட்டதுதான் ஒரிஜினல், ஹசன் ஜஹாங்கிரோடது. அதை வழக்கம்போல நம்ம மூசிக் அண்ணாத்தேக்கள் சுட்டாச்சுன்னு தெரிஞ்சிது.

ஆனா, இப்போ எவ்ளோ தேடுனாலும் சுட்ட பழம் கெடைக்கல, ஒரிஜினல்தான் கெடைக்குது. காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு தவுலு செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைங்கறத மறுக்கா உறுதிப்படுத்திச்சி இந்த மேட்டர்.
(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் சீரியல்கள் மட்டுமில்லாம, சுசித்ரா சேகர்கபூரோட தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே)
இப்போவரைக்கும், கேசட்ல பாட்டு ரிக்கார்ட் பண்ற கடைங்க எதாவது சந்துல மிஞ்சிருந்தா, இந்தப் பாட்டு கண்டிப்பா இருக்கும் அவங்கக்கிட்ட.

நான் படிச்சது, கத்தோலிக்கப் பள்ளி. அங்க எதுன்னாலும் சிறப்பு விருந்தினர் கண்டிப்பா, ஒரு பிஷப், ஒரு பாதர் இப்டி யாராச்சும் இருப்பாங்க. இவர்களில் பந்தா பரமாத்மாக்களும், தூய பரமாத்மாக்களும் சரிவிகிதத்தில் உண்டு. ஆனா, இவங்கள்ளயே பொறுமையின் சிகரம்னா, கசிமீர் ஞானாதிக்கம் அவர்கள்தான். யப்பா, அவரு மாதிரி ஒருத்தர பாக்குறதுக்கு சான்சே இல்லை. பொதுவா, அவர் பதவில இருக்கவுங்க கொஞ்சம் பெரிய லெவல் விழான்னாதான் வருவாங்க. ஆனா, இவர் திருச்சபய சேர்ந்த சின்ன பள்ளி, சின்ன விழா எல்லாத்துக்கும் பாரபட்சமே பாக்காம கண்டிப்பா வருவார்.

ஆனா, இதால அவரு அடைஞ்ச டார்ச்சர்களில் ஒன்னு, அங்க நடக்கிற கலைநிகழ்ச்சிகள். ஒருதரம், சர்ப்ரைசா(அதிர்ச்சியடைய வேண்டாம், எங்க ஸ்கூல் பத்தி அப்பாலைக்கு வெளக்குறேன்), இந்த ஹவா ஹவா பாட்டை அவர் முன்னாடி போட்டு ஆடிட்டு, அவர் ரியாக்ஷனப் பாக்கனுமே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

இதோட ரீச் தமிழ்நாட்ல எந்தளவுக்கு இருந்திச்சுங்கறத்துக்கு, ஒரு உதாரணம்.
இந்தப் பாட்டை, தமிழ்ல கூட கேட்டதா ஞாபகம். அப்போதான், ஏக் தோ தீன்லருந்து நெறயப் பாட்டை இப்டி டப்புவாங்களே.

ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை ரேஞ்ச் பின்னூட்டங்களப் போட்டுத் தாக்கலாம் வாங்க.

15 comments:

☀நான் ஆதவன்☀ said...

மீ த ஃபர்ஸ்ட்

☀நான் ஆதவன்☀ said...

அந்த செந்தில் காமெடி எனக்கு பிடிச்ச காமெடி. ஆனா அதுக்கு பின்னால இப்படி ஒரு கருப்பு சரித்திரம் இருக்கும்ன்னு இப்ப தான் தெரியுது :)

☀நான் ஆதவன்☀ said...

//"அவ்வா அவ்வா அவ்வவ்வா"//

தலைப்பு படிச்சுட்டு சிரிப்ப அடக்கமுடியல இராப் யக்கொவ்வ்வ்

சந்தனமுல்லை said...

//(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் சீரியல்கள் மட்டுமில்லாம, சுசித்ரா சேகர்கபூரோட தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே)//

ஹேய் ராப்..சூப்பர்..நானும் இந்தப் படம் வந்த்ப்போ போஸ்டர் எல்லாம் பார்த்திருக்கேன்! :-)

சந்தனமுல்லை said...

//ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை ரேஞ்ச் பின்னூட்டங்களப் போட்டுத் தாக்கலாம் வாங்க.//

LOL! :-))))))))))))

சந்தனமுல்லை said...

//அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாகிடுமே நமக்கு//


ராப்..நிஜமாவே இதுக்காக எங்க ஆயாகிட்டே திட்டு வாங்கியிருக்கேன்!! கண்ட செருப்பை காதுல மாட்டிக்கோன்னு வேற சொல்வாங்க...அவ்வ்வ்!

சந்தனமுல்லை said...

//காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு தவுலு செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைங்கறத //


தத்துவமா பழமொழியான்னு கொழம்பி கிடக்கறேன் ராப்! :-))

சந்தனமுல்லை said...

//நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்ட வெச்சு ஒரு போஸ்ட் போடுவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன்//

அவ்வ்வ்...போடனும் ராப்..ஹவா ஹவாவும் ஏக் தோ தீனும் ..கேக்காத நாட்கள்.இதுக்கு டான்ஸ் இல்லாத ஆண்டுவிழா மேடைகள் உண்டா..:-))..அப்புறம் இதேமாதிரி கல்நாயக்..:-)) நாயக் நஹி..கல்நாயக் ஹே தூ..ன்னு பாடினா வீட்டுலே மக்கள் ஆகற கடுப்பை பாக்கணுமே! LOL!

கானா பிரபா said...

அவ்வா அவ்வா அவ்வவ்வா

avvvv

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே

//

நீ அதையும் பொறுப்பா பாத்திருக்கியே

:))

$anjaiGandh! said...

:)

சின்ன அம்மிணி said...

//ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீன் வர்சைல//

இந்த வரிசைல 'சோகயா ஹை ரஸ்தா' அப்படீன்னும் ஒரு பாட்டு இருக்கு. பாட்டு நல்லாவே இருக்கும். அது அந்தக்காலம். :)

சின்ன அம்மிணி said...

//இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை//

இந்தப்பாட்டு வந்தப்போ எங்க பாட்டி ஸ்கூல் போக ஆரம்பிக்கலை, ஏன்னா அவங்க என்னிக்குமே ஸ்கூல் போனதில்லை. இஃகி இஃகி

PPattian : புபட்டியன் said...

இதுதான் இதோட தமிழ் வர்ஷன்... :)

பாட்டி பாட்டி ஏ பாட்டி
ஒம்புருஷன் பாம்பாட்டி
தாத்தாவுக்கு என்னைக்கும் நீதானே *ப்பாட்டி
ஒம்புருஷன் பாம்பாட்டி
ஆனா நீயோ சீமாட்டி
கத்தற நீ ஏழு வாட்டி
பொழச்ச நீயும் மாவாட்டி
யாருக்கு பொண்டாட்டி
நீயாருக்கு பொண்டாட்டி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவ்வா அவ்வா காமெடி ரொம்ப பிடிக்கும் செந்தில் அழகா ஆடிக்கிட்டே பாடுவாப்ல இல்ல.. :))
கவுண்ட்ஸ் .. செந்தில் என்னதான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சிக்கிட்டாலும் பாசம் காட்டுவார் பாரு..

அந்த ஹிந்தி சாங்க் இ டி சி ல கேட்டிருக்கேன்..