Monday, April 6, 2009

ஹலோ!வரேன்னீங்க.. என்ன ஆளையே காணோம்?

"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல . இந்த தப்பு இன்னொரு தடவை செஞ்ச அப்புறம் அசிங்கமாயிடும்" டிசைனர் கோபமாக கத்தினார்.

இது புதுசல்ல.... ஒரு ஏழு மாத காலமாய் இதே போல பல திட்டுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது செய்திருப்பது கொஞ்சம் பெரிய தவறு. (கொஞ்சமா? இல்ல பெருசா?) ஏன் ஏழு மாசம் கேட்கிறவங்க போய் என்னோட ப்ரொபலை போய் பாருங்க. (யார்டா அவன்... திட்டின இந்த டிசைனர் வேலைக்கு வந்து ஏழு மாசம் ஆகுதுன்னு கரெக்ட்டா சொல்றவன்)

போய் பார்த்தீங்களா (எப்படியெல்லாம் விளப்பரம் செய்ய வேண்டியிருக்கு). ஆமாம் ப்ளாக்கர் ஆரம்பித்து ஏழு மாதம் ஆகிறது. இப்போதெல்லாம் எப்பொழுதாவது தான் வேலை செய்ய தோணுகிறது. அப்படி செய்யும் போதும் இது போல திட்டு வாங்க வேண்டியிருக்கிறது.

வெக்கமாக இல்லை என்று கேட்கிறான் அவன். அதற்காக நகத்தை கடித்து கொண்டு கால் விரலில் கோலம் போடவா முடியும்?. அசிங்கபடுத்திவிடுவானாம்..அவனிடம் "இந்த ஆதவன் சின்ன வயசிலயிருந்து பல இடத்தில அசிங்கப்பட்டு தான் சார் இங்க வந்திருக்கிறான். இதுக்கெல்லாம் இந்த ஆதவன் அசர மாட்டான் சார்" என்று சொல்ல வந்த வாய், அட்லீஸ் அடுத்த அப்ரைஸலிலாவது கிடைக்கும் என்று நம்புகிற இன்கிரிமெண்டுக்கு இவன் கையெழுத்தும் முக்கிய காரணமென்பதால் அடங்கிப்போயிற்று.

அவனை மன்னிக்கலாம்...அவனுக்கெப்படி தெரியும் நான்காவது வயதில் பக்கத்து வீட்டு நிஷாசேச்சியுடன் விளையாடும் போது, நான் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது தன் விரலால் ஓங்கி உதட்டில் சுண்டி, நான் அழுவதை பார்த்து அவள் சிரித்த போது தொடங்கியது இந்த அசிங்கப்படுதல்.....(ஆறாத வடு வாத்தியாரே :(((

காலம் கடந்து காதல் வயப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்யும் போது என் நண்பனை காதலிப்பதாக சொல்லி என்னை தூது போகச் சொன்ன காதலியிடம் சிரித்து பின்பு அவள் அறியாது வாயைப் பொத்தி அழுத போது (கக்கூஸ்ல இல்ல மக்கா) அசிங்கப்படுதல் தொடர்ந்தது...(போன லீவுல கைக்குழந்தையோடு பார்த்தேன் :))

நான் விடும் எல்லா உதார்களையும் நம்பும் என் கல்லூரி தோழிகளுடன் தேவி காம்பெளக்ஸில் படம் பார்க்க போன போது, இந்த தியேட்டருக்கு நான் வாரா வாரம் வருவேன் என்று சொன்ன என்னை நம்பி, நான்கு அரங்குகள் உள்ள அந்த தியேட்டருக்குள் நாங்கள் செல்லும் அரங்கத்திற்கு செல்ல என்னிடம் வழி கேட்க, நான் அவர்கள் அறியாது ஊழியரை ஒருவரை வழி கேட்ட போது மறைந்திருந்து பார்த்த தோழிகள் ஒரு மாதம் மறக்காமல் கலாய்த்ததும்......பாவம் இவருக்கு தெரியாது மாசக்கணக்கில் அசிங்கப்பட்டது.

சும்மா போன CT பொண்ணை Mechக்கே உண்டான கெத்தோடு(யாருப்பா அது கைதட்டுறது...ஓ நீங்களும் மெக்கா) கலாய்த்தபோது, "ம்ம்ம் செருப்பு" என்று அவள் சொன்ன ஒத்த வார்த்தை கேட்டபோதும் இதெல்லாம் ஜகஜம் என்றபடி போன என்னை பாலாஜி வழி மறித்தான்.

என்றோ "டீ"யும் சமோசாவும் வாங்கி குடுக்காததை மனதில் வைத்து, அங்கிருந்த மெக் மாணவர்களிடம் "சூர்யாவை ஒரு CTபொண்ணு செருப்புன்னு சொல்லுச்சுடா" என்று பாலாஜி கூற ஸாரி கூவ, "செருப்பு" "செருப்பால அடிப்பேன்"னாகி பின்பு "செருப்பெடுத்து காண்பிச்சாடா"வாகி பின்பு "செருப்பால அடிச்சுட்டாடா"என்று மருவி...நான் கதற கதற இல்லையென்ற போதும் பாழாய் போன மெக்கானிகல் கெத்து 60 மாணவர்களுடன் CT லேபிற்கு முன் அழைத்து சென்றது. CT நண்பர்கள் சமாதானம் கூற கலைந்து சென்றனர்.

அதன் பின் அந்த CT பெண் என்னை கடந்து போகும் போதெல்லாம் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்த போது ....ஓ ஆண்டவனே........ அப்படி "செத்து செத்து பிழைத்தது"ம் அசிங்கபடுதல் தான் என்று அவருக்கு தெரியாது........

என் கம்பெனியின் நேபாளி செக்கியூரட்டி, பேங்கிற்கு ஒரு லெட்டர் எழுதி கொடுக்கமாறு கேட்ட போது உள்ளுக்குள் ஒரு வித கர்வத்துடன் நான் வழக்கமாக எழுதும் "As i am ...." என்று எழுதிகொடுத்த அடுத்த இரண்டு நிமிடங்களில் அதிலுள்ள மூன்று தவறுகளை அவன் சரி செய்து திரும்பவும் எழுதி கொடுக்க சொன்ன போது....ச்சே வெட்கி தலைகுனிந்து நான் கடவுளிடம் கேட்டது ஒன்று தான்... (வேறேன்ன அவன் யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு தான். அந்த பக்கி Msc மேக்ஸாம்...வேற வழி இல்லாம இந்த வேலைக்கு வந்துதாம். அப்புறமா தெரிஞ்சுகிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்) நான் நேபாள் வரை அசிங்கப்பட்டதும் அவருக்கு தெரியாது...

கடந்த முறை விடுமுறையில் மதுரைக்கு வைகை பாசஞ்சரில் செல்லும் போது, எதிரே அமர்ந்திருந்த பார்க்க அழகான கிராமத்து பெண்ணாக தாவணியில் இருந்தவளோடு பேச்சு கொடுத்து, அவளிடம் அடிக்கடி ஆங்கிலத்தில பேசி பின்பு "ஸாரி அதுக்கு டமிழ்ல என்ன"ன்னு கேட்கும் போதெல்லாம் சிரித்த முகமாக பதிலளித்த அவள்..........என்னிடம் ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது (இது கக்கூஸ்ல தான் மக்கா)....இந்த பன்னாடை டிசனருக்கு தெரியாது

இன்னும்.........இங்கு வந்த புதிதில் செவன் அப்போடு சோடா கலந்து "வொயிட் ரம்" என கொடுத்து, மறுநாள் சேட்டன்மார்கள் கலாய்த்தார்களே அதை சொல்லவா??

ஒரு இண்டர்வூயில் சராமாரியாக கேள்வி கேட்டு எதுவும் தெரியவில்லை என்றதும் அந்த ஆள் பொறுமையும் கருணையும் இழந்து அசிங்கமாக கத்தியதை சொல்லவா???

முதன் முறையாக விமானத்தில் சார்ஜா வரும் போது விமானம் திருவனந்தபுரத்தில் நின்ற போது, விமானத்தில் இருந்த 10 பேரும் இறங்கியவுடன், நானும் பெட்டியோடு இறங்க கதவருகே சென்ற போது பணிப்பெண் என் டிக்கெட்டை சரி பார்த்து சிரித்து கொண்டே நீங்கள் இங்கு இறங்ககூடாது என்று சொல்லியதை சொல்லவா???

சொப்னாவிடம் மொட்டைமாடியில் கைப்பிடித்து காதல் சொல்லி கன்னத்தில் அறை வாங்கியதை சொல்லவா??

பின்னால் அப்பா வந்து நிற்பது தெரியாமல் நடுஇரவில் கலர் படம் (நீலநிறம்தானுங்க..) பார்த்து, அட்வைஸ் என்ற பெயரில் "தப்பில்ல...ஆனா தப்பு" என்று மொக்கை போட்டு நான் அசிங்கப்பட்டதை சொல்லவா??

எதை சொல்வது?? எதை விடுவது??? நான் ஏன் தவறுகள் செய்தேன்??? ப்ளாக்கர் ஆரம்பித்தது என் தவறா? இல்லை எழுதி ஒரு போஸ்டும் ஹிட் ஆகாதது என் தவறா? நன்றாக எழுதி என் ஆர்வத்தை தூண்டியது அவர்கள் தவறா?? அல்லது அவ்வாறு எழுத எனக்கு அறிவை கொடுக்காத ஆண்டவன் தவறா??(எவன் டா அவன் சிரிக்கிறது??பிச்சுபுடுவேன் பிச்சு). மொக்கைகளை அறிமுகம் செய்த குசும்பனின் தவறா?? இல்லை இண்டெர்நெட் கனெக்சன் கொடுத்த கம்பெனி தவறா?? யார் தவறு?????????????????

கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.....

"ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க..ஆளேயே காணோம்?"

35 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

அசிங்கப்படாத இடமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு ஒரு லிஸ்ட் போட்டீருக்கீங்க பாஸ்

பட் ஒரு ஒத்துமை இருக்கு இதுல


பலரும் பல காலகட்டத்தில் அசிங்கப்பட்டதை நீங்க அப்படியே அப்ஸ்ட்ராக்டா சொல்லியிருக்கீங்கோ :))))))))

சென்ஷி said...

மீ த தேர்டு :-)

ஆயில்யன் said...

//எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல //


நாம ஏன் பாஸ் வெக்கப்படணும்! அவ்ளோவாட்டியும் திரும்ப திரும்ப திட்டிக்கிட்டிருக்கிறதுக்கு அந்த பயபுள்ளத்தானே வெக்கப்படணும் வேதனைப்படணும்!!!
:))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சொ.செ.சூ இந்த பதிவு... :)

சென்ஷி said...

//கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.....

"ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க..ஆளேயே காணோம்?"//

தோ வந்துட்டோம்டி மாப்ள :-)

நான் ஆதவன் said...

//ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்!//

மானத்தை காப்பாற்ற வந்த சிங்கமே...நீர் வாழ்க

நான் ஆதவன் said...

//அசிங்கப்படாத இடமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு ஒரு லிஸ்ட் போட்டீருக்கீங்க பாஸ்//

பின்ன நாம தான் "வருத்த படாத வாலிபனாசே"
----------------------------------------
// முத்துலெட்சுமி-கயல்விழி said...

சொ.செ.சூ இந்த பதிவு... :)//

மேடம் இதுக்கெல்லாம் வருத்தபடாதவன் தான் சங்கத்தில இருக்க முடியும் :))
-----------------------------------------
//
தோ வந்துட்டோம்டி மாப்ள :-)//

ஆஹா...இதுக்கெல்லாம் அசர மாட்டான் இந்த ஆதவன்

சென்ஷி said...

//"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல .//

அத்தனை தடவை திட்டியுமா உங்களைப்பத்தி அவருக்கு தெரியல

ஸ்ரீமதி said...

அண்ணா சூப்பர் கலக்கல் :))))))))

ஸ்ரீமதி said...

//சென்ஷி said...
//"எத்தனை தடவை உன்னை திட்டுறேன். உனக்கு வெக்கமா இல்ல .//

அத்தனை தடவை திட்டியுமா உங்களைப்பத்தி அவருக்கு தெரியல//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கணினியைம் இணையத்தையும் கண்டுபிடிச்சவன் தவறு.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

விளம்பரத்தையே விளப்பரம்ன்னு அவசரமா டைப்படிக்கிறீங்க. அதான் அந்த டிசைனர் திட்டறார்.. ..

ஆமா நேபாளி எம் எஸ்ஸின்னா ஏன் தானா எழுதலை.. செக் செய்திருப்பாரோ...?

நான் ஆதவன் said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

கணினியைம் இணையத்தையும் கண்டுபிடிச்சவன் தவறு.. :)//

கரெக்டா சொன்னீங்க. இது இல்லைன்னா நான் இங்க வேலைக்கு வந்திருக்க மாட்டேன்
---------------------------------------------
//ஆமா நேபாளி எம் எஸ்ஸின்னா ஏன் தானா எழுதலை.. செக் செய்திருப்பாரோ.//

இதையே நானும் கேட்டேன். அவன் டூட்டில இருக்குறேன் அர்ஜெண்டா எழுதி கொடுங்கன்னான். சீக்கிரம் போஸ்ட் பண்ணனும்ன்னான். அதுவும் கணினியில். அவன்கிட்ட கணினி இல்ல

கோபிநாத் said...

ஆகா!!! என் செல்வமே ஆதவா....மனம் புரித்தது...கண்கள் பணிக்கிறது...உன்னோட அசிங்க பிடிச்ச பதிவை பார்த்து..எத்தனை எத்தனை அசிங்கள் யப்பா முடியலடா சாமி......நீ ஒரு வீரன்....ஆமாம் அசிங்கம் பிடிச்ச வீரன்டா நீ ;)

குழந்தையில் இருந்து ஆரம்பித்த அசிங்கம் இன்னும் நிருத்தப்படவில்லை....!!! வேதனை...வேதனை..;(

கவலை வேண்டாம் கண்மணியே அணு அனு(ணு)வாக அசிங்க படு...அகிம்சைக்கு காந்தியை போல அசிங்கத்துக்கு நீ டா என் கண்மணி.

குசும்பன் said...

//As i am ...." என்று எழுதிகொடுத்த அடுத்த இரண்டு நிமிடங்களில் அதிலுள்ள மூன்று தவறுகளை அவன் சரி செய்து //

haa haa கலக்கல்

Bleachingpowder said...

//அடுத்த அப்ரைஸலிலாவது கிடைக்கும் என்று நம்புகிற இன்கிரிமெண்டுக்கு இவன் கையெழுத்தும் முக்கிய காரணமென்பதால் அடங்கிப்போயிற்று.
//

இங்கே நானும் அதுனால தான் தல, டேமேஜர் சொல்லுற மொக்க ஜோக்குகெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேன். அப்ரைசல் முடியட்டும் அப்புறம் அவனுக்கு காட்டுறேன் இந்த ப்ளீச்சிங்க பவுடர் யாருன்னு.

//நான்காவது வயதில் பக்கத்து வீட்டு நிஷாசேச்சியுடன் விளையாடும் போது, நான் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது//

ஓ...அப்பவே ஈவ் டிசீங்கா?? பிஞ்சுலேயே பழுத்துட்டீங்க தல.

//காலம் கடந்து காதல் வயப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்யும் போது என் நண்பனை காதலிப்பதாக சொல்லி//

இது எவ்வளவோ பரவாயில்ல தல, உங்களுக்கு நண்பன் தான் எதிரியானான் ஆனா எனக்கு என் தம்பி அவ்வ்வ்வ்வ்வ்வ்.

//அவளிடம் அடிக்கடி ஆங்கிலத்தில பேசி பின்பு "ஸாரி அதுக்கு டமிழ்ல என்ன"ன்னு கேட்கும் போதெல்லாம் சிரித்த முகமாக பதிலளித்த அவள்..........என்னிடம் ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது //

ஹாஹாஹாஹா..தல புரியுதோ புரியலையோ எதாவது ஒரு ஆங்கில நாவலை கையில வச்சுகிட்டு உக்காருங்க, சில நேரம் ஒர்கவுட் ஆகும்.

//இங்கு வந்த புதிதில் செவன் அப்போடு சோடா கலந்து "வொயிட் ரம்" என கொடுத்து, மறுநாள் சேட்டன்மார்கள் கலாய்த்தார்களே அதை சொல்லவா??
//

விடுங்க தல எனக்கு செவனப்பையே ஒயிட் ரம்முன்னு சொல்லி கொடுத்து, ஹாஸ்டலையே நாறாடிச்சானுங்க. ஆனா நானும் அத குடிச்சுட்டு உளரிக்க கூடாது.

நாகை சிவா said...

விடுங்க பாஸ்...

அறியா பயபுள்ள

உங்க சரித்திரம், பூகோளம் தெரியாம வஞ்சிப்புட்டான்....

நாங்க எல்லாம் 4 வயசிலே பொது வாழ்க்கைக்கு வந்துட்டோம்ப்பானு அடிச்சு சொல்லுங்க அந்த நாதாரிக்கிட்ட....

Senthil said...

Eppadi thala ungalaale mattum mudiyudhu?

Senthil,Dubai

நான் ஆதவன் said...

@ஸ்ரீமதி

நன்றி தங்காச்சி
-------------------------------------------
// கோபிநாத் said...

ஆகா!!! என் செல்வமே ஆதவா....மனம் புரித்தது...கண்கள் பணிக்கிறது...உன்னோட அசிங்க பிடிச்ச பதிவை பார்த்து..எத்தனை எத்தனை அசிங்கள் யப்பா முடியலடா சாமி......நீ ஒரு வீரன்....ஆமாம் அசிங்கம் பிடிச்ச வீரன்டா நீ ;)

குழந்தையில் இருந்து ஆரம்பித்த அசிங்கம் இன்னும் நிருத்தப்படவில்லை....!!! வேதனை...வேதனை..;(

கவலை வேண்டாம் கண்மணியே அணு அனு(ணு)வாக அசிங்க படு...அகிம்சைக்கு காந்தியை போல அசிங்கத்துக்கு நீ டா என் கண்மணி.//

கழ(ல)த்தின் தலைவா...நீ இருக்கும்வரை இதுபோல் பல அசிங்கபடுதலை தாங்கும் மனவலிமை கிடைக்கும்

நான் ஆதவன் said...

// குசும்பன் said...

haa haa கலக்கல்//

நன்றி குசும்பன்
--------------------------------------
//Bleachingpowder said...
இது எவ்வளவோ பரவாயில்ல தல, உங்களுக்கு நண்பன் தான் எதிரியானான் ஆனா எனக்கு என் தம்பி அவ்வ்வ்வ்வ்வ்வ்.//

தல இது இன்னும் கொடுமை...ஆனாலும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் தான் :)

நான் ஆதவன் said...

// நாகை சிவா said...

விடுங்க பாஸ்...

அறியா பயபுள்ள

உங்க சரித்திரம், பூகோளம் தெரியாம வஞ்சிப்புட்டான்....

நாங்க எல்லாம் 4 வயசிலே பொது வாழ்க்கைக்கு வந்துட்டோம்ப்பானு அடிச்சு சொல்லுங்க அந்த நாதாரிக்கிட்ட....//

சொல்லதான் போறேன் சிவா..அடுத்த அப்ரைஸம் முடியட்டும்..இருக்குது அவனுக்கு
----------------------------------------------
// Senthil said...

Eppadi thala ungalaale mattum mudiyudhu?

Senthil,Dubai//

வாங்க செந்தில்...அதுவா வருது

ஜொள்ளுப்பாண்டி said...

வீரத் திருமகனே ஆதவா.... நீ என் இனமடா...!! :)))

பின்னி பெடல் எடுத்து வச்சிருக்கீருவே...:))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//நண்பனை காதலிப்பதாக சொல்லி என்னை தூது போகச் சொன்ன காதலியிடம் சிரித்து பின்பு அவள் அறியாது வாயைப் பொத்தி அழுத போது (கக்கூஸ்ல இல்ல மக்கா)//\

விடுமா விடுமா... லூஸ்ல விடுமா... :))))

ஜொள்ளுப்பாண்டி said...

//சும்மா போன CT பொண்ணை Mechக்கே உண்டான கெத்தோடு(யாருப்பா அது கைதட்டுறது...ஓ நீங்களும் மெக்கா) //

ஆதவா திரும்பத் திரும்ப புல்லரிக்க வைக்கிறியேய்யா.... ஆமா நாங்களுந்தேன்... ;)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//"செருப்பு" "செருப்பால அடிப்பேன்"னாகி பின்பு "செருப்பெடுத்து காண்பிச்சாடா"வாகி பின்பு "செருப்பால அடிச்சுட்டாடா"என்று மருவி...நான் கதற கதற இல்லையென்ற போதும்//

நமக்கெல்லாம் தேவை இல்லாததுதான் மருவுது... :((((
இது ஒரு வெளி ஃப்ராஞ்ச் சதி தல....:))))

ஜொள்ளுப்பாண்டி said...

//சொப்னாவிடம் மொட்டைமாடியில் கைப்பிடித்து காதல் சொல்லி கன்னத்தில் அறை வாங்கியதை சொல்லவா??//


இங்க கொஞ்சம் தப்புபண்ணீட்டியளே... சொப்னா கையப் புடிச்சதுக்கு சொப்னாவையே புடிச்சு சொல்லி இருக்கலாம்ல...?? ;))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஐ.ஐ.டியில் பி.டெக் படிப்பதை மட்டும் தாமதமாக சொன்ன போது வாயை திறந்து சத்தம் போட்டு அழுதது (இது கக்கூஸ்ல தான் மக்கா)....இந்த பன்னாடை டிசனருக்கு தெரியாது//

ஆதவா.... இது என்ன கொடூரமா இருக்கே.... !! :(((

கண்ட... காணாத... இடத்தில எல்லாம் கன்னா பின்னானு பின்னி இருப்பாங்க போல...!! ஆனா இதுக்கெல்லாம் நாம அசந்தா வேளைக்காகுமா..? :)))))


சூப்பரா இருக்கு போஸ்ட்.... !!!!

நான் ஆதவன் said...

// ஜொள்ளுப்பாண்டி said...

வீரத் திருமகனே ஆதவா.... நீ என் இனமடா...!! :)))

பின்னி பெடல் எடுத்து வச்சிருக்கீருவே...:))))))//

வாங்க வாங்க ஜொள்ளுபாண்டியண்ணே வாங்க.

நான் ஆதவன் said...

//இங்க கொஞ்சம் தப்புபண்ணீட்டியளே... சொப்னா கையப் புடிச்சதுக்கு சொப்னாவையே புடிச்சு சொல்லி இருக்கலாம்ல...?? ;))))))//

அதுவும் சரிதான்..ஆனா அது மொட்டைமாடியா இருந்ததால என் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லண்ணே...

//ஆதவா திரும்பத் திரும்ப புல்லரிக்க வைக்கிறியேய்யா.... ஆமா நாங்களுந்தேன்... ;)))))//

காலையிலருந்து நீங்க ஒருத்தர் தான் மனசுக்கு ஆறுதலா வந்திருக்கீங்க...

//
சூப்பரா இருக்கு போஸ்ட்.... !!!!//

நன்றி ஜொள்ளு பாண்டி

இளைய பல்லவன் said...

avvvvvvvvv

thevanmayam said...

"ஹலோ எப்படி இருக்கீங்க...என்ன நேத்து அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க..ஆளேயே காணோம்?"//

நிறையப் பேர் எனக்கு முன்பே வந்து விட்டார்களே!!

மந்திரன் said...

//(போன லீவுல கைக்குழந்தையோடு பார்த்தேன் :))
//
உங்க comment எல்லாம் சூப்பர்
தலை (??!!!) ரொம்ப நல்லா இருக்கு ..
வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவரை பற்றி நான் ஒன்னு எழுதி இருக்கேன் ..
கொஞ்சம் படிச்சு பாருங்க ...

வாழவந்தான் said...

//
எதை சொல்வது?? எதை விடுவது??? நான் ஏன் தவறுகள் செய்தேன்???
//
விடுங்க பாஸ் இவங்க எப்பவும் இப்படிதான்

ஊருல இருக்கற பெரிய பெரிய ஆளெல்லாம் நம்மள கேவலமா திட்ட முடியாம வாய்வலித்தாங்காம ஓடிபோயிருக்கான்.. இப்ப இந்த டிசைனரு வந்திருக்காரு.

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/