Thursday, April 30, 2009

போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

நியாயமா என்னைய பில்கேட்ஸ் அவர் கம்பெனில வேலைக்கு சேர்த்திருக்கனும். .....

"முத்து" படத்தில ரஜினி ஒரு சேர்ல உட்கார்ந்த உடனயே அவருக்கு வீரம் வந்து எல்லாரையும் கலாய்ச்சு ரவுசு விடுவாரு. அந்த மாதிரி ஒரு சேர் தான் இந்த வ.வா சங்கத்து "அட்லாஸ் வாலிபர்" பதவி. எல்லாரையும் கலாய்கிறதுக்கு ஒரு தைரியம் வரும். அதே மாதிரி யாரை கலாய்ச்சாலும் அவுங்க ஜாலியாவே எடுத்துப்பாங்க.

எனக்காக இந்த பதவிய ஒரு மாசம் கையில அளேக்கா கொடுத்திருந்தாங்க. ஆனா என்னால முழுமையா நினைச்சது எல்லாத்தையும் செய்ய முடியல...

அதே சமயத்தில போட்ட சில பதிவும் எல்லாருக்கும் பிடிச்சிருந்ததான்னும் தெரியல...

இதுல போடுற பதிவு பெஸ்ட்டா இருக்கனும்ன்னு பாதி எழுதி எனக்கு நிறைவு தராம நிறைய டிராப்ட்லயே இருக்கு...

வேலை வேலைன்னு வலையுலகம் பக்கமே வராம, யாருக்கும் சரியா பின்னூட்டமும் போட முடியாம இருந்த என்னை நியாயமா பில்கேட்ஸ் கம்பெனில வேலைக்கு கூப்பிடலாம்.

நல்லவேளை இந்த மாதிரி வேலை நேரத்தில தமிழ்மணம் நட்சித்திரம் பதவி தரல..தந்திருந்தா அங்கேயும் பதிவு போட முடியாம போயிருக்கும். எல்லாம் நல்லதுக்கே.

ஓகே இனி சென்டிமெண்ட்......எனக்கு இந்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை கொடுத்து, தூரமாவே இருந்து வாழ்த்திய வ.வா.சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கும், நீ என்னவேணாலும் செஞ்சு கலக்கு இராசான்னு ஒதுங்கியே இருந்த தளபதி நாமக்கல் சிபிக்கும் , சங்கத்து சிங்கத்துக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திய என் இனிய இரசிக இரசிகை பெருமக்களுக்கும் நன்றிகள் பல.

இனி "குப்பைத்தொட்டி"யில பார்க்கலாம்...ஓகே....


போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

26 comments:

இளைய பல்லவன் said...

ஆதவன், இவ்வளவு சீக்கிரமாவா

பட்டய கெளப்புவீங்கன்னு பாத்தா
பட்டுனு கெளம்பிட்டீங்க.

ஆனாலும் உங்க பதிவு ஒவ்வொண்ணும் முத்து
அது எங்க (சங்கத்து) சொத்து.
(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?!!)

ரொம்ப நல்லா இருந்துது. நன்றி. வாழ்த்துக்கள்.

இளைய பல்லவன் said...

ஆஹா ஆதவனுக்கு மீ தி ஃபஷ்டு போட ஒரு சான்ஸ் கெடச்சுது!!

மீ தி ஃபஷ்டு

மீ தி ஃபஷ்டு

மீ தி ஃபஷ்டு

SUBBU said...

:))))))))))
"போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்"

நான் ஆதவன் said...

"ஈ" ஓட்டி கொண்டிருந்த பதிவில் முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்ட, மேலும் மதுரை பாண்டியனின் மானத்தை காத்த பல்லவா நீர் வாழ்க. உன்கொற்றம் வாழ்க

நான் ஆதவன் said...

//ஆனாலும் உங்க பதிவு ஒவ்வொண்ணும் முத்து
அது எங்க (சங்கத்து) சொத்து.
(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?!!)//

இதுக்கும் அதே பதில் தான்.."இதுக்கு என்னைய நேர்ல இரண்டு அறை விட்டிருக்கலாம்"

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

ஆஹா ஆதவனுக்கு மீ தி ஃபஷ்டு போட ஒரு சான்ஸ் கெடச்சுது!!

மீ தி ஃபஷ்டு

மீ தி ஃபஷ்டு

மீ தி ஃபஷ்டு//

பல்லவா என்ன இது??? சிறுபிள்ளை தனம்?? உன் பதிவில் நானும் என் பதிவில் நீயும் பின்னூட்டம் போடாமல் வேறு யார் போடுவார்கள்??

யார் இருக்கா நமக்கு??அவ்வ்வ்வ்வ்வ்

நான் ஆதவன் said...

// SUBBU said...

:))))))))))
"போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்"//

ஓகே ஜூட்ட்ட்ட்

வால்பையன் said...

நல்லா பண்ணியிருந்திங்க ஆதவன்!

நிறையா எதிர்பார்த்தோம் அது ஒண்ணு தான் குறை!

ஆயில்யன் said...

//அட்லாஸ் வாலிபர்" பதவி. எல்லாரையும் கலாய்கிறதுக்கு ஒரு தைரியம் வரும். அதே மாதிரி யாரை கலாய்ச்சாலும் அவுங்க ஜாலியாவே எடுத்துப்பாங்க.
//

விஜயகாந்த அப்படியே ஜாலியா எடுத்துக்கிட்டாலும் அவரது ரசிகர்கள் அவ்ளோ ஜாலியா எடுத்துக்க மாட்டாங்க! அட்லாஸ் சீட்டை புடுங்கட்டும் அப்பாலிக்கா நாம வெளையாடலாம்ன்னு வெயிட்டிங்க்ல இருக்கறதா ஒரு சேதி! :))))

ஆயில்யன் said...

பை தி பை செண்டிமெண்ட் !

நல்லா பண்ணியிருந்தீங்க!

பதிவுகள் கம்மின்னாலும் பட் நல்லா கலக்கலா பட்டைய கிளப்புற மாதிரி/நல்லா ரசிக்கிற மாதிரி இருந்துச்சு !

:))

வெட்டிப்பயல் said...

Aadhavan,
Your posts were too good and very creative. Continue your good work

சென்ஷி said...

ஓக்கே.. டாட்டா பைபை...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ரைட்டு.. :)

//குப்பைத்தொட்டியில்//.... :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அதிகம் இல்லை ஜென்டில்மேன் மாதிரி அதிகம் இல்லை ஆதவன்-ன்னு சொன்னாலும்.....

தந்த பதிவு எல்லாமே சூப்பர்! மாறுபட்டவையும் கூட! அதுவும் அந்த "அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க, ஆளேயே காணோம்" மாறுபட்ட சூப்பர்!

சங்கத்தின் சார்பாக நன்றி + நல் வாழ்த்துக்கள் ஆதவன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//விஜயகாந்த அப்படியே ஜாலியா எடுத்துக்கிட்டாலும் அவரது ரசிகர்கள் அவ்ளோ ஜாலியா எடுத்துக்க மாட்டாங்க!//

ஆதவன் கல்யாண மண்டபம் எல்லாம் இன்னும் கட்டலை! ஸோ, நோ ப்ராப்ளம் ஆயில்ஸ் அண்ணே! :)

//அட்லாஸ் சீட்டை புடுங்கட்டும் அப்பாலிக்கா நாம வெளையாடலாம்ன்னு வெயிட்டிங்க்ல இருக்கறதா ஒரு சேதி! :))))//

ஆயில்ஸ் அண்ணே...ஒங்க ஒட்டகக் குட்டி வெளியில் வந்துருச்சி டோய்! :)))

கோபிநாத் said...

உங்கள் அட்லாஸ் வாலிபர் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தது .

மேலும் கலக்குங்கள் ஆதவன் ;)

நான் ஆதவன் said...

நன்றி வால்பையன்
-----------------------------------
ஆயில்ஸ் அண்ணே ஏற்கனவே பீதியில இருக்கேன். இதுல பேதி வர்ர மாதிரி சேதி சொல்றீங்க...

இருந்தாலும் கேப்டன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன்னா அவர் ரொம்ப நல்லவருருருருருரு

நான் ஆதவன் said...

நன்றி சென்ஷி சார். நீங்க சொன்ன பதிவு ஒன்னு போடல பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க :)
-----------------------------------
நன்றி முத்துலட்சுமி-கயல்விழி மேடம். இனி அங்க நம்ம அட்டகாசம் தொடரும் :)
-----------------------------------
நன்றி வெட்டிபயல்.

நான் ஆதவன் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அதிகம் இல்லை ஜென்டில்மேன் மாதிரி அதிகம் இல்லை ஆதவன்-ன்னு சொன்னாலும்.....

தந்த பதிவு எல்லாமே சூப்பர்! மாறுபட்டவையும் கூட! அதுவும் அந்த "அசிங்கப்படுத்துறதுக்கு வரேன்னீங்க, ஆளேயே காணோம்" மாறுபட்ட சூப்பர்!

சங்கத்தின் சார்பாக நன்றி + நல் வாழ்த்துக்கள் ஆதவன்!//

நன்றி KRS. உங்கள மாதிரி சங்கத்து ஆளுங்க கொடுத்த உற்சாகத்தில வந்தது தான் அந்த பதிவுகள் :)

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...

உங்கள் அட்லாஸ் வாலிபர் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தது .

மேலும் கலக்குங்கள் ஆதவன் ;)//

ரைட்டு தலைவா :)

சுரேஷ் குமார் said...

//
நல்லவேளை இந்த மாதிரி வேலை நேரத்தில தமிழ்மணம் நட்சித்திரம் பதவி தரல..தந்திருந்தா அங்கேயும் பதிவு போட முடியாம போயிருக்கும். எல்லாம் நல்லதுக்கே.
//
என்னதல.. இப்டி சொல்லி சங்கத்த ஏறக்கிட்டியே.. எங்க நட்சத்திரமா இருந்தாலும் நட்சத்திரம் நட்சத்திரம்தான்..

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
இதுக்கும் அதே பதில் தான்.."இதுக்கு என்னைய நேர்ல இரண்டு அறை விட்டிருக்கலாம்"//

அண்ணா அப்போ நானு?? நானு?? ப்ளீஸ் அண்ணா... ;)))

ஸ்ரீமதி said...

பதிவெல்லாம் நல்லா இருந்தது.. :)) ஆனா, இன்னும் உங்ககிட்டயிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.. ;)))

ஸ்ரீமதி said...

லேட்டா கமெண்ட்டுரனோ?? ;))

தமிழர்ஸ் - Tamilers said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

வாழவந்தான் said...

சங்கம் மங்குவது ஏனோ?
கிட்டத்தட்ட ஒரு மாதமாக பதிவுகள் எதுவும் இல்லை.
சங்கம் கலைக்கபட்டதா? இல்லை கட்டைதுரைகளுக்கு பயந்து அடங்கிவிட்டதா?
[இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ரண பலி ஆகுவோம்ல]