Wednesday, April 1, 2009

அட்ரா சக்கை..அட்ரா சக்கை..

"ஐயா இந்த மாசம் நம்ம க்ளைண்ட் ஆஸ்திரேலியாவில மீட்டிங் வச்சிருக்காரு. என்ன டேட் குடுக்கலாம்?"

"அந்த மீட்டிங்க மே மாசத்தில வைக்க சொல்லு"

"ஐயா அதுனால நமக்கு பல கோடி லாஸ் ஆகும்"

"பரவாயில்லை...அடுத்து வேறென்ன?"

"நம்ம சிங்கப்பூர் டிவிசன்ல ஏதோ ஒரு ப்ராஜெக்ட்ல பெரிய டவுட்டாம். உங்களை வரச்சொல்லி கடந்த இரண்டு மாசமா கூப்பிட்டிட்டுருக்காங்க. அங்க அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்திடலாம?"

"யோவ் அவனுக்கெல்லாம் இப்ப என்ன அர்ஜெண்ட்? அந்த ப்ராஜெக்ட ஹோல்ட் பண்ணச் சொல்லு."

"அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"

'நயன் தாரா இனிமே எப்பவுமே ப்ரீ தான்யா, அதுக்கென்ன அர்ஜெண்ட். இப்ப வரமுடியாதுன்னு சொல்லுய்யா"

"அப்ப ஊருக்கு போலாமா? அம்மா வேற, போன வருஷம் நீங்க அம்பத்தூர் போறேன்னு வீட்ல இருந்து கிளம்புனீங்களாம். அதுக்கப்பறம், வியாசர் பாடி, காசிமேடு, அயோத்திகுப்பம், தண்டையார்பேட்டை, மணலி, இப்ப எண்ணூர் வரைக்கும் வீட்டுக்கே போகாம பிஸினஸ், பிஸினஸூன்னு உலகத்தை சுத்தி சுத்தி வந்து உடம்ப கெடுத்துகிறீங்களாம். சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க"

"அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. அத விட முக்கியமான வேலை இருக்குதய்யா"

"ஏன் சார் இவ்வளவு வருத்தமா இருக்கீங்க, அதுவும் இந்த வாலிப வயசுல"

"ஹேய் யார்டா வருத்தப்படுறது........நாங்கெல்லாம்

சோன் சோன் பப்பர மிட்டாய்
சிங்கள் டீ டபுள் ஸ்ட் ராங்

எங்களுக்கே பாப்பின்ஸ் மிட்டாயா?

இதுவரைக்கும் நான் வாலிபன் தான் ஆனா இனிமே நான் "வருத்த படாத வாலிபன்"டா போய் இத ஊரு புல்லா சொல்லு. ஐயா இனி ஒரு மாசத்துக்கு எந்த அப்பாயிண்ட் மெண்டும் யாருக்கும் கொடுக்க மாட்டாரு. ஐயா சங்கத்தில அட்லாஸ் வாலிபரா இந்த மாசம் ஒரு உயர்ந்த பொறுப்புல இருக்க போறாரு. "

"இருங்கைய்யா...திடு திப்புன்னு கவிதை சொல்லிபுட்டீங்க நோட் பன்ணிக்கிறேன், இதோட 1327 கவிதை சொல்லியிருக்கீங்க, அதையெல்லாம் கூட இந்த மாசம் சங்கத்தில சமர்பணம் செஞ்சிருங்கைய்யா. இது விட்டா வேற நல்ல இடம் கிடைக்காதைய்யா. அசம்பாவிதம் நடந்தாலும் சங்கத்துக்கு தான் நடக்கும்"

"டேய் டகால்டி தலையா. சங்கத்தில மொக்கை போடலாம்டா ஆனா தற்கொலைய தூண்டுற மாதிரி எதுவும் செய்ய கூடாது. இது சங்கத்து ரூல்ஸுக்குஎதிரானதுடா. வேணா சிபி அங்கள கேளு"

"அய்யா என்னது சிபி அங்கிளா??? அப்ப இது வாலிபர் சங்கம் இல்லையா?"

"டேய் தகரடப்பா தலையா. இதெல்லாம் அரசியல சகஜம்டா. அபி அப்பாவையே வாலிபரா ஏத்துகிட்ட சங்கத்துக்கு சிபி அங்கிள் எல்லாம் ஜூஜிபிடா"

"சரி இதுல இப்போதைக்கு உண்மையான வாலிபர் நீங்க தான். இருக்குற வேலையில அதுவும் மே மாசம் அம்மாவ பார்க்க ஊருக்கு வேற போறீங்க, எல்லா ப்ரொஜெக்டையும் முடிச்சு கொடுக்கனும். இதுல சங்கத்தில எப்படி பதிவை போடுவீங்க"

"டேய் அதெல்லாம் அப்பப்ப பாத்துகலாம்டா. சங்கத்தில இருந்து கூப்பிட்டதே பெரிய விசயமுடா. இதுல பாரு.... நான் பிஸின்னு உனக்கு தெரியுது ஆனா இந்த பதிவுலகத்துக்கு தெரியாது பாரு?. அதுனால் நீ தான் இத அப்பப்ப எல்லாருக்கும் எடுத்துச் சொல்லனும் சரியா?"

"சரிங்கைய்யா.... கவிதை ஒத்தப்படலையிலே நிக்குது. இன்னும் ஏதாவது ஒன்னு சொல்லிட்டு போங்கய்யா"

"டேய் அதெப்படிடா கேட்ட உடனே கவிதை சொல்றது. இதென்ன பிரதமருக்கு எழுதுற கடிதம்ன்னு நினைச்சயா? அடிக்கடி எழுதுறதுக்கு"

"அண்ணே ப்ளீஸ்ணே.. எனக்காகண்ணே.. இரண்டு வரி இருந்தாலும் போதும்ணே, திருக்குறள் மாதிரி"

"டேய்...ச்சு"

"அண்.."

"ஹே..ச்சீ..எப்படிடா?"

"அண்ணே இரண்டு வரி...."

"சரி சொல்றேன் கேட்டுக்கோ..

கம்மாயில கடுக்கா
மிட்டாயில மிடுக்கா


(ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்)

37 comments:

நாமக்கல் சிபி said...

ஆதவன்! வாங்க வாங்க!

நாமக்கல் சிபி said...

//(ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்)//

ஹெஹெ!

நாமக்கல் சிபி said...

//அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"//

நமக்கே ஆப்பு வைக்க ஐடியா செஞ்சா நடக்குமா என்ன?

Thekkikattan|தெகா said...

சிபியை கைப்புள்ளயா நினைச்சு கும்மி எடுத்துட்டீகளே "நயனை" வைச்சு... தல, அழுவாதீங்க சொல்றேன் ;-)

சென்ஷி said...

சும்மாவே இவன் அலும்பு தாங்கல.. இதுல சங்கத்தையும் தூக்கி கொடுத்துட்டீக.. கடவுளே. சங்கத்தை நீதாம்லே காப்பாத்தணும்.. :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

போன ஊரு லிஸ்டல்லாம் சிலபல கிமீட்டர்ல முடிஞ்சாலும் பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. :)

சங்க சிங்க மானதுக்குக்கு வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

அட வாழ்த்து ஜொள்ளிக்க மறந்துட்டேன்..

வாடா ஆதவா வாலிபனாயிட்டே...
வாயில முட்டாய் வச்சுக்க சொல்லிட்டே

:-))

வாழ்த்துக்கள் ஆதவா

சென்ஷி said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

சங்க சிங்க மானதுக்குக்கு வாழ்த்துக்கள்..//

சங்க சிங்க மானத்த வாங்குறதுக்கு எதிர்ப்பு கொடுப்பீங்கன்னு நினைச்சேன் :-)

சென்ஷி said...

இனிமே கைப்பு கிடைக்கற ஆப்ப அனிமேசன்ல பார்க்கலாம் :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\சென்ஷி said...

இனிமே கைப்பு கிடைக்கற ஆப்ப அனிமேசன்ல பார்க்கலாம் :-)//
முதல் ப்ராஜகட் வந்துடுச்சேய்..


@ சென்ஷி X-(

சென்ஷி said...

//"அட்ரா சக்கை..அட்ரா சக்கை.."/

ரிப்பீட்டே :-))

சென்ஷி said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\சென்ஷி said...

இனிமே கைப்பு கிடைக்கற ஆப்ப அனிமேசன்ல பார்க்கலாம் :-)//
முதல் ப்ராஜகட் வந்துடுச்சேய்..//

ஆமாம். அப்புறம் நினைச்சு நினைச்சு ஒவ்வொருத்தவங்க பேரா சொல்வோம். சிபிக்கு மாத்திரம் ஸ்பெசல் அசைன்மெண்ட். :)

சென்ஷி said...

"ஐயா இந்த மாசம் நம்ம க்ளைண்ட் ஆஸ்திரேலியாவில மீட்டிங் வச்சிருக்காரு. என்ன டேட் குடுக்கலாம்?"

"அந்த மீட்டிங்க மே மாசத்தில வைக்க சொல்லு"//

மே மாசத்துல அந்த ஆலமரத்து பஞ்சாயத்து இருக்கே நாட்டாம.. அதுக்கென்ன செய்யறது :)

சென்ஷி said...

//
"அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"//

தள... இதெல்லாம் நொம்ப ஓவரு... கொஞ்சம் ஜொள்ளி வைங்க..

சென்ஷி said...

மீ த 15

சென்ஷி said...

//(ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்)//

ஹி...ஹி... :)

தமிழ் பிரியன் said...

கலக்குங்க நான் ஆதவன்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் ஆதவன் :)

ஆயில்யன் said...

எதை வேணும்னாலும் செய்யுங்க ஆனா இந்த ஒரு மாசமும் - அப்படியே கண்டினியூவா - இந்த உலகம் உங்கள உத்து பார்த்துக்கிட்டே இருக்கக வைக்கணும் அம்புட்டுத்தேன்.....!

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் மீ த டெவெண்டீஈஈஈஈ

VIKNESHWARAN said...

சூப்பர்... :))

கைப்புள்ள said...

வாங்க நான் ஆதவன்! வாங்க! வாங்க!

////அப்ப ரெஸ்ட் எடுக்கனும் கேரளாவுக்கு போய் நயன் தாரா கையால மசாஜ் பண்ணனும்னு சொன்னீங்களே. அவுங்களும் வில்லு படத்துக்கு பிறகு ப்ரீ தானாம். இந்த மாசம் புக் பண்ணிடலாமா?"//

நமக்கே ஆப்பு வைக்க ஐடியா செஞ்சா நடக்குமா என்ன?//

ஆரம்பமே அசத்தல் :))

உங்களோட போட்டோ பதிவுகளை ரொம்ப எதிர்பாக்கறோம். பசுநேசனுக்குப் போட்ட மாதிரி கேப்டனோட புது படத்துக்குப் போடப்பிடாதா?
:)

தமிழ்நெஞ்சம் said...

நல்லது...

//ஜாக்கிரதை....மொக்கைகள் இம்மாதம் முழுதும் தொடரும்

கோபிநாத் said...

வந்துட்டியா ராசா..ம்ம்ம்ம்...இனி எல்லாம் ஆதவன் செயல் தான் ;))

வாழ்த்துக்கள் ஆதவன் ;)

கோபிநாத் said...

\\இருக்குற வேலையில அதுவும் மே மாசம் அம்மாவ பார்க்க ஊருக்கு வேற போறீங்க,\\

இதெல்லாம் செல்லாது ராசா...;))

புதுகை.அப்துல்லா said...

//சென்ஷி said...
சும்மாவே இவன் அலும்பு தாங்கல.. இதுல சங்கத்தையும் தூக்கி கொடுத்துட்டீக.. கடவுளே. சங்கத்தை நீதாம்லே காப்பாத்தணும்.. :-)

//

ப்ப்ப்ப்ப்ப்பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய ரிப்பீட்டு :)

நான் ஆதவன் said...

நன்றி சி(பி)ங்கமே....உன் ஆசியுடன் தொடங்குகிறேன்

//
ஹெஹெ!///

என்ன சிரிப்பு ராஸ்கல் இது...

//நமக்கே ஆப்பு வைக்க ஐடியா செஞ்சா நடக்குமா என்ன?//

இதுக்கே இப்படியா???

நான் ஆதவன் said...

// Thekkikattan|தெகா said...

சிபியை கைப்புள்ளயா நினைச்சு கும்மி எடுத்துட்டீகளே "நயனை" வைச்சு... தல, அழுவாதீங்க சொல்றேன் ;-//

வாங்க தெகா. ஒரு மாசத்தில இன்னும் நிறைய கும்மலாம்

நான் ஆதவன் said...

தனியாக என் மானத்தை காக்க கும்மியை தொடங்கிய வள்ளலே.... யாரும் வரவில்லையென்றதபோதும் கும்மியை விடாது முயற்சித்த தங்கமே...சங்கத்தில் இல்லாத சிங்கமே.... நீர் வாழ்க சென்ஷி

நான் ஆதவன் said...

@தமிழ்பிரியன்

நன்றி தமிழ்பிரியன்
------------------------------------

நன்றி ஆயில்யன். நம்மளால முடிஞ்ச வரை ட்ரை பண்ணுவோம். தொடர்ந்து ஆதரவு குடுங்க

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

போன ஊரு லிஸ்டல்லாம் சிலபல கிமீட்டர்ல முடிஞ்சாலும் பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. :)

சங்க சிங்க மானதுக்குக்கு வாழ்த்துக்கள்..//

வாங்க மேடம். வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல...

//முதல் ப்ராஜகட் வந்துடுச்சேய்..//

தொடங்கிடுவோம் :)))
------------------------------------------
நன்றி விக்கி
------------------------------------------
//உங்களோட போட்டோ பதிவுகளை ரொம்ப எதிர்பாக்கறோம். பசுநேசனுக்குப் போட்ட மாதிரி கேப்டனோட புது படத்துக்குப் போடப்பிடாதா?
:)//

போட்ருவோம்........டாங்ஸ் தல
------------------------------------------
நன்றி தமிழ்நெஞ்சம்
-----------------------------------------
@கோபி - தல நம்புங்க உண்மையிலேயே பிஸி தான் :))
------------------------------------------
நன்றி அப்துல்லா அண்ணே

நாகை சிவா said...

வாங்க வாங்க ஆதவன்!

ஆரம்பவே பவுண்டரியுடன் ஆரம்பிச்சு இருக்கீங்க...

இந்தியன் பீரிமியர் லீக் மிஞ்சனும் உங்க ஆட்டம்.

வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//அபி அப்பாவையே வாலிபரா ஏத்துகிட்ட சங்கத்துக்கு சிபி அங்கிள் எல்லாம் ஜூஜிபிடா"//

உங்க நுண்ணரசியலை ரசித்தேன் :)

Anonymous said...

Anna ! kindly order and send me a jail.i will be happy than rading your "MOKKAI"
-R.Selvapriyan-Chalakudy

நட்புடன் ஜமால் said...

\\'நயன் தாரா இனிமே எப்பவுமே ப்ரீ தான்யா, அதுக்கென்ன அர்ஜெண்ட். இப்ப வரமுடியாதுன்னு சொல்லுய்யா"
\\

அட்ரா சக்கை

அண்ணேன் இந்த பெயர உச்சரிக்காட்டி பொழுதும்

விடியாது

சாயாது

ஓயாது

♥ தூயா ♥ Thooya ♥ said...

கிகிகி

கும்க்கி said...

ஜமாய்ங்க ஆதவன்.