Friday, April 3, 2009

நடிகர்களுக்கு ஆப்பு வைக்க கைப்புள்ளையின் "OACF"

"இதெல்லாம் சரியா வருமா?" அபிஅப்பா.

"முடியும் நாம நினைச்சா இத செஞ்சு காமிக்கலாம்" கைப்புள்ள

"ஆமா, எல்லோரும் யார் பூனைக்கு மணிகட்டுறதுன்னு விட்டுட்டா எப்படி?. அதுனால் நாம செஞ்சு தான் ஆகனும்" தேவ்

"ஆமா இந்த ஆப்ரேஷனுக்கு என்ன பேர் வைக்கலாம்?" வெட்டிப்பயல்

"என்னது ஆப்ரேஷனா??? வேணா நம்ம புரூனே சாரை கூப்பிடலாமா?" குசும்பன்

"உன் குசும்புதனத்தை இங்க காட்டாதே. நாம சீரியஸா பேசிகிட்டிருக்கோம். இதுக்கு பேரு (O)ACF" கைப்புள்ள.

"என்னங்க இது! கான்செப்ட் தான் அந்த படத்திலயிருந்து சுட்டோம்னா...தலைப்புமா சுடனும்? வேணா கீழ அவரோட லின்ங் போட்டுடலாம். இல்ல நன்றி "ரமணா பட டீம்"ன்னு போடலாம். ஏன்னா அடுத்தவங்க படைப்பை எடுக்க கூடாது" ஒரு வித சோகத்துடன் வெட்டிபயல்.

"உன் சோகம் உனக்கு....ஆனா அதெல்லாம் இல்ல இது, "Over Acting Corruption Force" ,அதாவது படு மொக்கையா நடிக்கிறவங்களை பத்து பேர கடத்தி அதுல ஒருத்தர மட்டும் செலக்ட் செஞ்சு அவுங்க நடிச்ச படத்தையே திரும்ப திரும்ப போட்டு காமிச்சு கொல்லனும்" கைப்புள்ள

"அய்யய்யோ அப்படினா ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களையெல்லாம் கடத்தனும் போல..." குசும்பன்

"இல்ல குசும்பா முதல் பத்து பேர மட்டும் தான் கடத்த போறோம். அப்பதான் ஒவ்வொருத்தனும் நல்லா நடிக்க தொடங்குவான்" கைப்ஸ்

"நடிகன மட்டும் கடத்தினா போதுமா?" நாமக்கல் சிபி.

"இப்போதைக்கு நடிகன் மட்டும் தான், பின்னால நடிகைகள், டைரக்டர் அப்படின்னு அது நீளும்." கைப்ஸ்

"முதல்ல நடிகைகளை கடத்தலாமே. நயன் தாராவை முதல்ல கடத்தலாம்" இது சிபி.

"இல்லையா பின்ன...நம்பர் 1 மொக்க நடிகையாச்சே" குசும்புடன் குசும்பன். சிபி முறைக்கிறார்

"அதெல்லாம் அடுத்த மாசம் வர்ர அட்லாஸ் வாலிபர் பார்த்துப்பார். இப்போ இந்த பதிவே கொஞ்சம் பெருசு. இப்போதைக்கு நடிகர் மட்டும் தான்" கைப்ஸ்

"லிஸ்ட் ரெடியா" ராம்

"ம்ம்.. விஜயகாந்த், சரத்குமார்,அஜீத்,விஜய், விசால், ரித்தீஷ், சிம்பு, தனுஷ், ஷக்தி, சுந்தர்.சி" கைப்ஸ்

"எங்கள் தானக தலைவர் "ரித்திஷ்"ஐ மொக்கை நடிகர் லிஸ்டில் சேர்த்ததுக்கு நான் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்" புலி

"ரித்தீஷ மட்டும் நீக்கிடலாமா" பயத்துடன் அனைவரும்.

"என்ன பொருத்தவரைக்கும் சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான். பாசம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" கலங்கிய கண்களுடனும் கூடவே விறைப்புடன் கைப்ஸ்

"ஆமா கோபி நீ எதுவுமே சொல்லல...ஏதாவ்து சொல்லு.......................இப்ப எதுக்கு ஸ்மைல் பண்ற? ஏதாவது பேசு" அபி அப்பா

"ரீப்பிட்ட்ட்ட்ட்டே" கோபி

"சுத்தம் இதுக்கு கேட்காமலேயே போயிருக்கலாம்" என்று கப்பி சொல்ல அனைவரும் கலைகின்றனர்.

முதலில் கைப்ஸ், வெட்டி, அபிஅப்பா, சிபி, குசும்பன் அனைவரும் விஜயகாந்தை கடத்த அவர் வீட்டின் அருகே போய் நிற்கின்றனர்.

"என்னங்க இவ்வளவு பெரிய சுவரா இருக்கு, எப்படி எகிறி குதிக்க போறோம்?" அபிஅப்பா

"அண்ணே பெரிசா இருந்தா தான் சுவரு...சிறுசா இருந்தா அது படிகட்டு" குசும்பன்

"என்ன குசும்பா நக்கலா...இரு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்" அபிஅப்பா

"என்ன பண்ண போறீங்க?? இரண்டு மூட்டை சிமெண்ட் பொட்டலம் வாங்கி கொடுக்குறேன். அந்தா அங்க இருக்குற ஓட்டைய அடைக்கிறீகளா?" குசும்பு

"டேய் வேணாம்... என்னைய பத்தி உனக்கு தெரியாது... இந்த சுவரு வாசத்தை வச்சே எத்தனை மூட்டை சிமெண்ட் யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்லுவேன். வேணா இப்ப பாரு... இதுல இருபது மூட்டை சிமெண்ட் யூஸ் பண்ணியிருக்காங்க" அபிஅப்பா

"அண்ணே அது சுவர்ல இருந்து வர்ர மூத்தர வாடைண்ணே" என்றபடி சிரிக்கிறார் குசும்பன்

"இவன் இப்படி பேசிகிட்டே இருந்தான்னா நான் விளையாட்டுக்கு வரல" அபிஅப்பா

"என்னது விளையாட்டா? ஏய் சிங்கங்களா நாம விளையாட வரல..கிட்நாப் பண்ண வந்திருக்கோம்" கவலையுடன் கைப்ஸ்

"இதுக்குதான் அப்பவே நயந்தாராவை........."சிபி

"அடப்பாவி அடங்க மாட்டயா நீயி...யாராவது உள்ள போறதுக்கு ஐடியா சொல்லுங்கப்பா" வெட்டிபயல்


குசும்பன் கண்ணசைக்க வெட்டிபயல் தீபாவெங்கட்டின் போட்டாவை கீழே போட...அபிஅப்பா ஐய் தீபா என்றபடி குனிய..சட சட வென கைப்புள்ள மற்றும் குசும்பன் அவர் முதுகில் ஏறி சுவரின் அந்த பக்கம் குதித்தனர்.
வெட்டி ஏற முயற்சி செய்யும் போது அபி அப்பா உசாராகி எழ வெட்டியும், சிபியும் ஒருத்தரை ஒருத்தர் பேந்த பேந்த முழிக்கின்றனர். அபிஅப்பா டென்ஷனாகி கத்துகிறார்.

"வரட்டும் அந்த குசும்பன் எவ்வளவு தைரியம் இருந்தா அந்த போட்டாவை மண்ல போடுவான்" என்று மணலை ஊதி தொடைக்கிறார்.

அடுத்து என்ன செய்வதென்று வெட்டிபயல் யோசித்து பின்பு அபி அப்பாவிடம் ஏதோ சைகையில் பேச.... சந்தேகமான சிபி வெட்டியின் பாக்கெட்டை செக் செய்யும் போது நயன்தாரா போட்டோ கிடைக்கிறது.

"அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.

அதற்குள் சுவரின் அடுத்த பக்கத்தில் குசும்பனும், கைப்ஸூம் கயிறை வீச அதை பிடித்து அனைவரும் மேலே செல்கின்றனர்.

"அண்ணே என்ன ஒரே இருட்டா இருக்கு?" சிபி

"வரோம்ன்னு லெட்டர் போட்டுட்டா வந்திருக்கோம்" குசும்பன்

"அய்யய்யோ ஒரு நாய் வேகமா ஓடி வருது பாருங்க..கடிக்க போகுது" பயத்தில் அலறுகின்றனர்.

வந்த நாய் சுவற்றில் ஒரு கால் வைத்து இன்னொரு காலால் வரிசையாக நின்றிருந்த அனைவரையும் உதைக்கிறது.

"ஆஹா கேப்டன் வீட்டு நாயும் கடிக்காம உதைக்குதுப்பா" என்ற படி அனைவரும் ஆளுக்கொரு பக்கம் ஓடுகின்றனர். ஓடும் போது தடுக்கி விழுகின்றனர். மயக்கமாகின்றனர்

குசும்பன் கண் முழித்துப் பார்க்கிறார். தான் கயிறால் ஒரு நாற்காலியில் கட்டி போட்டிருப்பதை உணர்கிறார்.

"ஹலோ யாருங்க..யாராவது வாங்களேன். என்னைய எதுக்கு கட்டி போட்டிருக்கீங்க" என்று கத்துகிறார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. கேப்டன் உள்ளே வருகிறார்.

"டேய் நீ தானா குசும்பன்???"

"ஆ...மா"

"டேய் நீ பதிவுலகத்திற்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு. இது வரைக்கும் 285 பதிவுகள் போட்டிருக்க...அதுல உன்னோட கார்ட்டூன் குசும்பு மட்டும் 55, மத்த பதிவர்களை கலாய்ச்சது 37, மொக்கைகள் 21, கவுஜ ,காமெடின்ற பேர்ல கடுமையா மொக்க போட்டது 17+14=31, இது தவிர அய்யனார வச்சு 10 மொக்க போட்டிருக்க, பெண்ணீயம், ஜொள்ளு, கதைன்னு மாத்தி மாத்தி டார்ச்சர் கொடுத்திருக்க. இதுல உனக்கு கோவம்ன்ற லேபிள்ல வேற பதிவு போட்டிருக்க...இப்ப ஸ்டார் ஆயி தொல்லை கொடுக்குற.." என கொஞ்சம் கேப்பு விட

"அய்ய்ய் நீங்க என் ப்ளாக்கர் follower list ல இருக்கீங்களா?? உங்க பின்னூட்டத்தை நான் பார்த்ததே இல்ல. உங்க லின்ங் கொடுங்க. நான் வந்து மீ த ஃபர்ஸ்ட் போடுறேன்" ஐஸ் வைக்கிறார் குசும்பன்

"டேய் இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேணாம்..நேத்து எதுக்குடா என் வீட்டுக்கு வந்த.."

"அது வந்து...ஒரு ஆட்டோகிராப் வாங்கிட்டு உங்க கூட போட்டோ எடுத்துகலாம்ன்னு..."

உள்ளங்கையில் லேசாக எச்சில் துப்பி குசும்பன் நெத்தியில் ஒரு தட்டு தட்டுகிறார். "ங்கொய்யால..டேய் என் நாட்டுல மட்டும் இல்லடா என் வீட்டுலையும் அந்நிய சக்தி நுழைய முடியாதுடா. என் வீட்டுல இருந்து ஒரு பிடி மண்ண கூட அள்ள விட மாட்டேண்டா"

"ஆனா கல்யாண மண்டபத்த மட்டும் அலேக்கா அப்படியே குடுத்திருவீங்க" முனங்குகிறார் குசும்பன்

"பஹால்"ன்னு ஒரு குத்து விடுகிறார். குசும்பன் கண்ணுக்கு மூன்று விஜயகாந்த் தெரிகிறார்.

"டேய் மொக்க பதிவர்கள் பத்து பேர கடத்தலாம்ன்னு எங்க ACF டீம் திட்டம் போட்டிருக்கும் போது நீங்களா உள்ள வந்து மாட்டிகிட்டீங்க. அந்த பத்து பேருல நீ தான் டா முதல் ஆளு"

"அய்யய்யோ என்ன விட நிறைய பேரு நல்லா மொக்க போடுவாங்க...வேணா கேட்டு பாருங்கைய்யா"

"டேய் நீ போட்ட மொக்கையெல்லாம் கணக்கில எடுத்தா அவுங்கெல்லாம் ஜூஜிபிடா. அதுனால உனக்கு தண்டனையா நீ போட்ட பதிவையெல்லாம் நீ திரும்ப திரும்ப படிக்கனும்."

"அய்யய்யோ வேண்டாம் என்னைய விட்டுருங்க. அதுக்கு என்னை கொன்னேபுடுலாம். என் பதிவை மட்டும் படிக்கசொல்லாதீங்க. ப்ளீஸ்ஸ்ஸ்"

"இவண் கண்ணுல விளக்கெண்ணைய ஊத்துங்கடா. இவன் கண்ணு முழுச்சு விடாம எல்லா பதிவையும் படிக்கனும். பதிவ படிச்ச பின்னால கேள்வி கேளுங்க. கரெக்டா படிச்சானான்னு தெரியனும்." என்று தனது அல்லக்கையிடம் சொல்லிவிட்டு கேப்டன் புறப்படுகிறார்.

குசும்பன் கதறி கதறி அழுதுகொண்டே சத்தம் போட்டு படிக்கும் சத்தம் மட்டும் கேட்டுகொண்டே இருக்கிறது.......

78 comments:

நாமக்கல் சிபி said...

:) கலக்கல்ஸ்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

குசும்பன் பதிவை ஸ்டாரெல்லாம் ஃபாலோ செய்யறாங்களா .. அதுவும் அவரு வைக்கிற புள்ளிவிவரம் சூப்பர்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிபி சங்கத்து சிங்கங்களே பர்ஸ்ட் போட்டுக்கிறீங்களே நியாயமா...?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிபியின் பணிவு ப்ரமிக்கவைக்குது.. :)

நாமக்கல் சிபி said...

//சிபியின் பணிவு ப்ரமிக்கவைக்குது.. :)//

:) அது சரி!

நான் ஆதவன் said...

// நாமக்கல் சிபி said...

:) கலக்கல்ஸ்!//

நன்றி வாத்தியாரே

நான் ஆதவன் said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

சிபியின் பணிவு ப்ரமிக்கவைக்குது.. :)//

இப்படியா உசுப்பேத்தி விடுறது??

ஸ்ரீமதி said...

//வரட்டும் அந்த குசும்பன் எவ்வளவு தைரியம் இருந்தா அந்த போட்டாவை மண்ல போடுவான்" என்று மணலை ஊதி தொடைக்கிறார்.

அடுத்து என்ன செய்வதென்று வெட்டிபயல் யோசித்து பின்பு அபி அப்பாவிடம் ஏதோ சைகையில் பேச.... சந்தேகமான சிபி வெட்டியின் பாக்கெட்டை செக் செய்யும் போது நயன்தாரா போட்டோ கிடைக்கிறது.

"அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.//

செம செம.. :))) நல்லா சிரிச்சேன் அண்ணா.. :))) பட் சம்பந்தபட்டவர் (சிபி அண்ணா) இங்க இருக்கறதுனால கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.. ;)))

சென்ஷி said...

சூப்பர் ஆதவா.. கலக்கல் :-)

சென்ஷி said...

//"என்னங்க இது! கான்செப்ட் தான் அந்த படத்திலயிருந்து சுட்டோம்னா...தலைப்புமா சுடனும்? வேணா கீழ அவரோட லின்ங் போட்டுடலாம். இல்ல நன்றி "ரமணா பட டீம்"ன்னு போடலாம். ஏன்னா அடுத்தவங்க படைப்பை எடுக்க கூடாது" ஒரு வித சோகத்துடன் வெட்டிபயல்.//

பழைய்ய பதிவு எதையும் விட்டு வைக்கலையா நீயி... :-)

இதை சாரு பார்த்தா எவ்ளோ சந்தோஷப்படுவாரு. அவரோட லிங்கும் பேரும் கொடுத்துருக்கலாம்.

சென்ஷி said...

//"அய்யய்யோ அப்படினா ஒட்டு மொத்த தமிழ் நடிகர்களையெல்லாம் கடத்தனும் போல..." குசும்பன்//

ஹா ஹா ஹா


அல்ட்டிமேட்டு :-)

ஆயில்யன் said...

மீ த 12 (அதுக்குள்ள யாராச்சும் புடிச்சிருப்பாங்களோ....???)_

சென்ஷி said...

//
"முதல்ல நடிகைகளை கடத்தலாமே. நயன் தாராவை முதல்ல கடத்தலாம்" இது சிபி.//

எலேய்.. லிஸ்ட்ல மீரா பேர மாத்திரம் சேர்த்தீங்க..அவ்ளோதான்..

ரென்சன் ஆவாதே.. குரூப்ல என்னையும் சேர்த்துக்கன்னு சொல்ல வந்தேன் :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் ..மத்த சிங்கங்களை எல்லாம் விட்டுட்டு குசும்பனை மட்டும் ஏன் மாட்டிவிட்டீங்க.. மித்தவங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த பதிவில் இருக்கா.. ??

சென்ஷி said...

//"ம்ம்.. விஜயகாந்த், சரத்குமார்,அஜீத்,விஜய், விசால், ரித்தீஷ், சிம்பு, தனுஷ், ஷக்தி, சுந்தர்.சி" கைப்ஸ்//

ஹூ இஸ் ஷக்தி :-(

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் ..மத்த சிங்கங்களை எல்லாம் விட்டுட்டு குசும்பனை மட்டும் ஏன் மாட்டிவிட்டீங்க.. மித்தவங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த பதிவில் இருக்கா.. ??//

ரிப்பீட்டேய்..

மத்தவங்களுக்கும் பெரிய ஆப்பு வைக்கணும் :-)

என்ன வில்லத்தனம்டா இது :-)

பினாத்தல் சுரேஷ் said...

:-))))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில் தான் 12 ... ஆனா கவனம்.. மீத ---- போடறவங்களுக்கு விஜய்காந்த் என்ன தண்டனைத்தரபோறாருன்னு தெரியல..

சென்ஷி said...

//"என்ன பொருத்தவரைக்கும் சட்டம் எல்லாருக்கும் ஒன்னு தான். பாசம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" கலங்கிய கண்களுடனும் கூடவே விறைப்புடன் கைப்ஸ்//


ஆஹா.. இதுல இது வேற இருக்குதா.. ஆமா ஆமா..யாரு பேர விட்டாலும் ரித்தீஸ் பேர விடக்கூடாது. இல்லனா ராப் அக்கா ஏண்டா எங்க தலைவர் அவ்ளோ மொக்கையா இல்லையான்னு கோச்சுப்பாங்க :-)

நான் ஆதவன் said...

//
மத்தவங்களுக்கும் பெரிய ஆப்பு வைக்கணும் :-)//

தலைவா...நான் போகும் போது கடைசில சங்கத்த கலைக்க ஐடியா கொடுக்குற மாதிரி இருக்கே

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில் தான் 12 ... ஆனா கவனம்.. மீத ---- போடறவங்களுக்கு விஜய்காந்த் என்ன தண்டனைத்தரபோறாருன்னு தெரியல..//

மைண்ட்ல வச்சுகிறேன் மேடம்

சென்ஷி said...

//ஆமா கோபி நீ எதுவுமே சொல்லல...ஏதாவ்து சொல்லு.......................இப்ப எதுக்கு ஸ்மைல் பண்ற? ஏதாவது பேசு" அபி அப்பா

"ரீப்பிட்ட்ட்ட்ட்டே" கோபி//

ஆஹா.. கோபியையும் நீ விடலையா. :-)

நான் ஆதவன் said...

//
ஆஹா.. இதுல இது வேற இருக்குதா.. ஆமா ஆமா..யாரு பேர விட்டாலும் ரித்தீஸ் பேர விடக்கூடாது. இல்லனா ராப் அக்கா ஏண்டா எங்க தலைவர் அவ்ளோ மொக்கையா இல்லையான்னு கோச்சுப்பாங்க :-)//

ராப் அக்கா எங்க இருக்காங்கன்னு முதல்ல சொல்லுங்க. எனக்கென்னவோ அவுங்கள கடத்திட்டாங்கன்னு தோணுது

ஆயில்யன் said...

//இல்லையா பின்ன...நம்பர் 1 மொக்க நடிகையாச்சே" குசும்புடன் குசும்பன். சிபி முறைக்கிறார்//

இதுவும் அல்டிமேட்தான் :)))

ஆயில்யன் said...

//அதெல்லாம் அடுத்த மாசம் வர்ர அட்லாஸ் வாலிபர் பார்த்துப்பார்//

அது யாரு....????

ஆயில்யன் said...

//என்னங்க இவ்வளவு பெரிய சுவரா இருக்கு, எப்படி எகிறி குதிக்க போறோம்?" அபிஅப்பா//

இது போன்ற கொஸ்டீன் அதுவும் அபி அப்பாக்கிட்டேர்ந்தா நெவர் !

ஆயில்யன் said...

//அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.//

:)))))))))

G3 said...

//"டேய் மொக்க பதிவர்கள் பத்து பேர கடத்தலாம்ன்னு எங்க ACF டீம் திட்டம் போட்டிருக்கும் போது நீங்களா உள்ள வந்து மாட்டிகிட்டீங்க. அந்த பத்து பேருல நீ தான் டா முதல் ஆளு"//

LOL :)) Sema twistu :)))))

ஆயில்யன் said...

//குசும்பன் கதறி கதறி அழுதுகொண்டே சத்தம் போட்டு படிக்கும் சத்தம் மட்டும் கேட்டுகொண்டே இருக்கிறது.......//

பாவம் குசும்பன் அதுக்குன்னு இம்புட்டு டெரராவா தண்டனை கொடுக்குறது :(((

நான் ஆதவன் said...

//ஆஹா.. கோபியையும் நீ விடலையா. :-)///

"கடமைன்னு வந்துட்டா எனக்கு பாசம் இரண்டாம் பட்சம் தான்" கலங்கிய கண்களுடன் விறைப்புடனும் ஆதவன்

சென்ஷி said...

//"அண்ணே பெரிசா இருந்தா தான் சுவரு...சிறுசா இருந்தா அது படிகட்டு" குசும்பன்//

ரசிச்சு சிரிச்சேன் :-)

சென்ஷி said...

//"வரட்டும் அந்த குசும்பன் எவ்வளவு தைரியம் இருந்தா அந்த போட்டாவை மண்ல போடுவான்" என்று மணலை ஊதி தொடைக்கிறார்.//

ஹா ஹா ஹா....

சத்தியமா சொல்றேன்.. நீ எங்கயோ போயிட்டே ஆதவா :-)

சென்ஷி said...

சரி.. இதோட இருக்கட்டும்.
கடமை அழைக்குது.. நான் மதியத்துக்கு மேல வந்து கும்முறேன் :-)

நான் ஆதவன் said...

//பாவம் குசும்பன் அதுக்குன்னு இம்புட்டு டெரராவா தண்டனை கொடுக்குறது :(((//

நாம அனுபவிக்கிற தண்டனைய அவரு அனுபவிச்சா என்ன தலைவரே :)))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆயில் தான் 12 ... ஆனா கவனம்.. மீத ---- போடறவங்களுக்கு விஜய்காந்த் என்ன தண்டனைத்தரபோறாருன்னு தெரியல..
//

என்னது தண்டனையா????

தமிழ்மணமே பொங்கி எழும் :))))))

நாமக்கல் சிபி said...

//செம செம.. :))) நல்லா சிரிச்சேன் அண்ணா.. :))) பட் சம்பந்தபட்டவர் (சிபி அண்ணா) இங்க இருக்கறதுனால கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.. ;)))//

:))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//"அண்ணே பெரிசா இருந்தா தான் சுவரு...சிறுசா இருந்தா அது படிகட்டு" குசும்பன்//

ரசிச்சு சிரிச்சேன் :-)
//

பாஸ் நான் பஷ்டு சிரிச்சுட்டேன் அப்புறம் நொம்ப நேரம் ரசிச்சேன் :)))))

G3 said...

//"அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.//

எங்கண்ணன என்னனு நினைச்சீங்க. நயந்தாரா அண்ணின்னு ஒரு வார்த்தை சொன்னீங்கனாலே உங்களுக்காக எல்லா வேலையும் செய்வாரே :))))

ஆயில்யன் said...

பை தி பை இவ்ளோ பெரிய பதிவுல சின்னதா ஒரு நயந்தாரா படத்தையும் அதை விட சின்னதா தீபா படத்தையும் போட்டிருந்தா எங்க அண்ணாச்சிங்க மனசு ”சில்”லியிருக்கும் :))))


பரிவுடன் & பணிவுடன் கோரியவன் மீ :))

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய் 40

ஆயில்யன் said...

ஒரு காலத்துல 40 எல்லாம் ஒரு எல்லை கோடு மாதிரி அதை தாண்டினா நூறு

இப்ப எங்க..?

அதெல்லாம் சென்ஷியண்ணே யூத்தா இருந்த காலம் :((((

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சென்ஷி கிளம்பியாச்சுன்னு தெரிஞ்சதும் ஆயில்.. ம் ம்.. நடத்துப்பா..

நான் ஆதவன் said...

//பை தி பை இவ்ளோ பெரிய பதிவுல சின்னதா ஒரு நயந்தாரா படத்தையும் அதை விட சின்னதா தீபா படத்தையும் போட்டிருந்தா எங்க அண்ணாச்சிங்க மனசு ”சில்”லியிருக்கும் :))))


பரிவுடன் & பணிவுடன் கோரியவன் மீ :))//

உங்கள் கோரிக்கை பரிச்சீலிக்கப்பட்டது ஆயில்யன். அடுத்த பதிவுல சம்பந்தமே இல்லைனாலும் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்

நான் ஆதவன் said...

//அதெல்லாம் சென்ஷியண்ணே யூத்தா இருந்த காலம் :((((//

சென்ஷி சித்தப்பாவுக்கு வயசாகிடுச்சுன்னு சொன்ன ஆயில்யனை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்

தமிழ் பிரியன் said...

ஆதவன்..செமய்யான்னா வ.வா.சங்க சிங்கம்ங்க..சீக்கிரம் சங்கத்துல சேர்த்துக்கங்க

வால்பையன் said...

ஆரம்பத்தில் அபிஅப்பாவுக்கு ஓவர் டேமேஜ் கொடுக்கவும் அவர் தான் மாட்டுவார்ன்னு நினைச்சேம்.
கடைசியில் குசும்பன் மாட்டியது சிறந்த திருப்புமுனை!

VIKNESHWARAN said...

:))) கெப்டன் நாய் எட்டி உதைக்குதா... ஹா ஹா ஹா... கலக்கல்...

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சென்ஷி கிளம்பியாச்சுன்னு தெரிஞ்சதும் ஆயில்.. ம் ம்.. நடத்துப்பா..
//

பின்னே சும்மாவா....!

எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வேனாக்கும் !

(அவ்வ்வ்வ்வ்வ் திரும்பி வந்து என்னா நடக்கபோகுதோ.....!)

ஆயில்யன் said...

//G3 said...
//"அடப்பாவி அடுத்து நான் தான் பலியா....டேய் தலைவி போட்டாவை கீழ போட்டு கேவலப்படுத்த வேணாம். அதை குடு நானே குனியிறேன்" என்கிறார் சிபி.//

எங்கண்ணன என்னனு நினைச்சீங்க. நயந்தாரா அண்ணின்னு ஒரு வார்த்தை சொன்னீங்கனாலே உங்களுக்காக எல்லா வேலையும் செய்வாரே :))))
//

அப்படி ஒரு

அன்பு

பாசம்

நேசம்

எல்லாம் நயன் அம்மாவுக்கு பிறகு எங்க அண்ணாச்சிக்கிட்டதான் இருக்குதாக்கும் :))))

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய் 50

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..

பின்னுறீங்கப்பா..

அப்படியே அடுத்ததா நம்ம சிபியை சித்தி வீட்ல மாட்டிவிடுங்க..

மவன் உதைபடணும்..!

நான் ஆதவன் said...

// ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய் 50//

ஆயி...நா...எப்ப்...ந....

அட சந்தோஷத்தில வார்த்தையே வரல ஆயில்யன்..

நான் ஆதவன் said...

//ஹூ இஸ் ஷக்தி :-(//

அது நம்ம டைரக்டர் வாசு பையன் தலைவரே

ஆயில்யன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..

பின்னுறீங்கப்பா..

அப்படியே அடுத்ததா நம்ம சிபியை சித்தி வீட்ல மாட்டிவிடுங்க..

மவன் உதைபடணும்..!
///

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க அண்ணாச்சி :))))))

ஸ்ரீமதி said...

me the 55 :)

கைப்புள்ள said...

நான் ஆதவன்!

ரொம்ப சூப்பருங்க. இன்னும் சிரிச்சி முடியலை. :)

//
குசும்பன் கண்ணசைக்க வெட்டிபயல் தீபாவெங்கட்டின் போட்டாவை கீழே போட...அபிஅப்பா ஐய் தீபா என்றபடி குனிய..சட சட வென கைப்புள்ள மற்றும் குசும்பன் அவர் முதுகில் ஏறி சுவரின் அந்த பக்கம் குதித்தனர்.//


கலக்கல்ஸ்.
:)))

சந்தனமுல்லை said...

கலக்கல்ஸ்..ROTFL!

reena said...

சூப்பர் போஸ்ட்... நகைச்சுவை ததும்ப ததும்ப‌... எப்படி இதெல்லாம்? சங்கத்து சிங்கங்களை வெச்சு இப்படி காமெடி பண்ணியிருக்கீங்க? அதுவும் தீபா போட்டோவை போட்டு அபி அப்பா முதுகுல ஏறுறதெல்லாம் சான்சே இல்ல... முடிவுல பாவம் குசும்பன்... ஏன் அவர் மேல உங்களுக்கு கொலைவெறி?

நிஜமா நல்லவன் said...

:))))))))))))))))))))

இராம்/Raam said...

ROTFL....

கலக்கீட்டிங்க.... :))

கவிதா | Kavitha said...

கலக்கல்ஸ்.. :)))))))))))

வெட்டிப்பயல் said...

Kalakal Pathivu :-)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
//"என்னங்க இது! கான்செப்ட் தான் அந்த படத்திலயிருந்து சுட்டோம்னா...தலைப்புமா சுடனும்? வேணா கீழ அவரோட லின்ங் போட்டுடலாம். இல்ல நன்றி "ரமணா பட டீம்"ன்னு போடலாம். ஏன்னா அடுத்தவங்க படைப்பை எடுக்க கூடாது" ஒரு வித சோகத்துடன் வெட்டிபயல்.//

பழைய்ய பதிவு எதையும் விட்டு வைக்கலையா நீயி... :-)

இதை சாரு பார்த்தா எவ்ளோ சந்தோஷப்படுவாரு. அவரோட லிங்கும் பேரும் கொடுத்துருக்கலாம்.

//

Ada paavi.. innum marakalaiya :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கலக்கலோ கலக்கல், நான் ஆதவன்!
நீங்க தான் ஆதவன்! :)

//G3 said...
எங்கண்ணன என்னனு நினைச்சீங்க. நயந்தாரா அண்ணின்னு ஒரு வார்த்தை சொன்னீங்கனாலே உங்களுக்காக எல்லா வேலையும் செய்வாரே :))))//

"நயன்" தூக்கின் நன்மை கடலினும் பெரிது - இது தான் வள்ளுவரா அவதாரம் எடுத்து எங்க சிபி அண்ணன் எழுதிய கொறள்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுக்கு பேரு (O)ACF" கைப்புள்ள//

சிரிப்பு சிரிப்பா வந்துச்சி! கைப்புள்ள அண்ணாச்சி ACF-ல இருந்தா எப்படி இருக்கும்? சும்மா நாப்பது தொகுதியும் அள்ளீற மாட்டாரு? :)

நிலாக்காலம் said...

//வந்த நாய் சுவற்றில் ஒரு கால் வைத்து இன்னொரு காலால் வரிசையாக நின்றிருந்த அனைவரையும் உதைக்கிறது.//

இது செம கலக்கல்!! :)))))))

நாகை சிவா said...

அசத்தல் பதிவு !

தீபா வெங்கட், கேப்டன் வீட்டு நாய்! செம கலக்கல்!

அடுத்த பதிவில் விஜயை கடத்துறோம் ;)

நாகை சிவா said...

//விஜயகாந்த், சரத்குமார்,அஜீத்,விஜய், விசால், ரித்தீஷ், சிம்பு, தனுஷ், ஷக்தி, சுந்தர்.சி" //

//"எங்கள் தானக தலைவர் "ரித்திஷ்"ஐ மொக்கை நடிகர் லிஸ்டில் சேர்த்ததுக்கு நான் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்" புலி//

அதே என்னுடைய கடுமையான கண்டனங்கள், ரித்திஷ் விட்டு எஸ்.ஜே. சூர்யாவை சேர்த்துக்கோங்க ;)

கோபிநாத் said...

கலக்கல் ராசா ;))))))

குசும்பன் said...

//ஆஹா கேப்டன் வீட்டு நாயும் கடிக்காம உதைக்குதுப்பா" என்ற படி அனைவரும் ஆளுக்கொரு பக்கம் ஓடுகின்றனர். ஓடும் போது தடுக்கி விழுகின்றனர். மயக்கமாகின்றனர்
//

செம கலக்கல்!

தமயந்தி - நிழல்வலை said...

விஜயகாந்த் கணக்கா புள்ளி விவரக் கணக்கெல்லாம் கொடுக்கீங்க... பார்த்து.. உங்கள தே.மு.தி.கலருந்து கடத்திட்டுப் போகப் போறாங்க...

தமயந்தி - நிழல்வலை said...

விஜயகாந்த் கணக்கா புள்ளி விவரக் கணக்கெல்லாம் கொடுக்கீங்க... பார்த்து.. உங்கள தே.மு.தி.கலருந்து கடத்திட்டுப் போகப் போறாங்க...

தமயந்தி - நிழல்வலை said...

விஜயகாந்த் கணக்கா புள்ளி விவரக் கணக்கெல்லாம் கொடுக்கீங்க... பார்த்து.. உங்கள தே.மு.தி.கலருந்து கடத்திட்டுப் போகப் போறாங்க...

Triumph said...

ada pavingala....
பதிவு படிச்சு வந்த வயிற்று வலியே இன்னும் போகல.. அதில 73 கொம்ன்ஸ்சா? என்னால முடியல சாமி.. ஆமா நீங்க இவ்ளோ நாளா எங்க இருந்தீங்க. நான் உங்க புளொக் இன்னிக்குத் தான் பாக்கிறன்..

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு!!!

தமிழன்-கறுப்பி... said...

பழைய பதிவுகளை ஞாபகப்படுத்திருக்கிறிங்க இதுக்கே தனியா உங்களுக்கு அவார்டு குடுக்கலாம்... :)

தமிழன்-கறுப்பி... said...

குசும்பன்தான் பாவம்... :)

Anonymous said...

innamaa sinthikaraanga.............