Tuesday, March 31, 2009

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை பாகம் 1


டேய் பசங்களா நாம வரும் வெள்ளி கிழமை டூர் போறோம்! நேரா மாயவரத்தில் இருந்து கிளம்பி சிதம்பரம் கடலூர் வழியா பாண்டிச்சேரி அங்க ஹார்பர் பார்க்கிறோம். பின்ன அங்க இருந்து கிளம்பி மரக்காணம் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு அது பார்க்க வேண்டிய ரோடு ஒரே நேரா இருக்கும், அதை பார்கிறோம். அது வழியா திருகழுகுன்றன் போறோம். அங்க கழுகு வந்து சாப்பிடுவதை பார்க்கிறோம். பின்ன நாம சாப்பிடுறோம். அங்க இருந்து செஞ்சி கோட்டை போறோம். அதன் மேல சுத்தி பார்த்துட்டு அப்ப்டியே ராத்திரி சாத்தனூர் டேம் போறோம். அங்க முதலை பண்ணை போறோம். அது அப்படியே பெங்களூர் மாதிரி இருக்கும். அங்க இருந்து அப்படியே மகாபலிபுரம் போறோம், அங்க ராத்திரி ஒரு ஸ்கூல்ல தங்குறோம். காலை முழுக்க மகாபலிபுரம் பின்ன ராத்திரி மாயவரம் ரிட்டர்ன், ஒரு டிக்கெட் 30 ரூவா!

சார் இப்படி சொன்ன பின்ன A குரூப்பில் இருந்த நான் C குரூப்பில் இருந்த ராதாவை பார்க்க ஓடினேன். அவன் முதல்ல கேட்ட கேள்வி " டேய் இன்னிக்கு தான் தேதி 3 ஆச்சே உன் கிட்ட மாச பீஸ் கட்ட 20 இருக்குமே இருக்கா?"'ன்னு கேட்க நான்" இல்லடா அப்பா கிட்ட சில்லரை இல்லை 100 ரூவா கொடுத்தாங்க"ன்னு சொல்ல அதை வச்சு இந்த பதிவை ஆரம்பிச்சிட்டோம். ஸாரி எங்க விளையாட்டை!


வெள்ளி கிழமை டூர் என்பதால் வியாயன் ராத்திரியே எல்லாரும் ஸ்கூல்க்கு வர சொல்லிட்டாங்க. விடிய காலை 4 மணிக்கு கிளம்பனும். எல்லாரும் வந்தாச்சு. என்னையும் ராதாவையும் பார்த்தாலே சிவசங்கரன் பி டி மாஸ்டருக்கு ஒரு டர். ஆளுக்கு ஒரு மஞ்ச பையும் 20 இன்ச் பெல்பாட்டமும் பட்டை பெல்டும் போட்டுகிட்டு வந்தாச்சு. சரி படுத்து தூங்குங்கடான்னு சார் சொன்னப்ப ராதா சொன்னான் "பத்தியா ஓடம் ஒரு நாள் வண்டியில ஏறும்"ன்னு ன்னு ஏதேதோ சொன்னான். ஏன்னா நான் அதே கிளாஸ்ல தூங்கினதுக்கு மரத்துக்கு தண்ணி ஊத்த அனுப்ப பட்டேன். (அப்படி நான் வளர்த்த மரம் தான் இப்ப இருக்கும் பெரிய வேப்ப மரம்)


கொஞ்ச நேரம் கழிச்சு ராதா சுரண்டினான். "மாப்ள நாளைக்கு பாயும் புலி ரிலீஸ் இன்னிக்கு போய் மன்னவன் வந்தானடி பியர்லெஸ்ல பார்த்தா எதுனா டிரெய்லர் போடுவான்ன்னு சொல்ல எனக்கும் சரியா பட்டுச்சு. ரெண்டு பேரும் நைசா எழுந்து போனோம்.


ராதா சொன்னது போலவே பாயும் புலி டிரைலர் போட்டாங்க. தக்காளி வண்டி பக்கத்திலே "கொட்டிகிட்டு ஊத்துதடி வானம்" பாட்டு 2 வரி கழுகு பார்வையில் பார்த்தோம்.


பின்ன படம் முடிஞ்சு வந்து ஸ்கூல் பக்கம் பார்த்தா அய்யோடா எல்லோரும் போயாச்சு. நானும் ராதாவும் பதறி போய் வாட்ச் மேன் கிட்ட கேட்டா "எல்லாரும் போயாச்சு"ன்னு சொல்லிட்டார்!


எங்க 2 பேருக்கும் டூர் பாழாய் போனது கூட முக்கியமா இல்ல! வீட்டிலே ஊருகாய் நினைச்சா பயமா இருந்துச்சு. "ராதா நாம இப்ப முக்கியமான முடிவு எடுக்கனும் உன் கிட்ட என் கிட்ட சேர்த்து 97 ரூவா தனியா இருக்கு நாம நேரா பாண்டிக்கு போயிடலாம் அங்க நம்ம பஸ் பிடிச்சிடலாம்"ன்னு சொன்னேன். சரின்னு அந்த ராத்திரி 3 மணிக்கு கிளம்பியாச்சு பாண்டிக்கு நாங்க 2 பேரும்.


இதிலே என்ன கூத்துன்னா "பிரபாகரன்" பஸ் சர்வீஸ் பஸ் ரிப்பேர் ! அவங்க அடுத்த பஸ் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் பஸ் தருவேன்ன்னு சொல்லிட்டாங்க! அதனால சார் எல்லாரையும் அவங்க அவங்க வீட்டுக்கு போக சொல்லிட்டாரு! ஆனா நானும் ராதாவும் தான் கிளம்பிட்டோமே டூர்க்கு அது தெரியாம!


அடுத்து என்னன்னு ஆச்சர்யமா இருக்கா வெயிட் பிளீஸ்!!!

15 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்டு!

நாமக்கல் சிபி said...

//இதிலே என்ன கூத்துன்னா "பிரபாகரன்" பஸ் சர்வீஸ் பஸ் ரிப்பேர் ! அவங்க அடுத்த பஸ் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் பஸ் தருவேன்ன்னு சொல்லிட்டாங்க! அதனால சார் எல்லாரையும் அவங்க அவங்க வீட்டுக்கு போக சொல்லிட்டாரு//

:))

Anonymous said...

அடடே.. பாயும் புலி டிரையிலர் பியர்லஸ்லேயும் போட்டானா... வெரி இன்ட்ரஸ்டிங்...

நான் ஏதோச்சையா அம்மா கூட டார்லிங், டார்லிங், டார்லிங் பார்க்க விஜயா தியேட்டர் போக,, அங்கே இண்டர்வெல்லில் பாயும்புலி டிரெயில்ர்.. ராதாவை பைக்குல ஏத்திக்குனு தலைவர் பறக்க... அன்னிக்கு ஆரம்பிச்ச ஆட்டம்தான்.. :-))))

ராம்கி

கோபிநாத் said...

\\அடுத்து என்னன்னு ஆச்சர்யமா இருக்கா வெயிட் பிளீஸ்!!!\\

ரைட்டுக்கோ..! ;)

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா, உண்மையில் உங்க அம்மாவை நினைச்சுப் பரிதாபமா இருக்கு. இப்படி ஒரு சேட்டையா!!!!!!!

ம்ம். அப்புறம் என்ன???:)))

மிஸஸ்.தேவ் said...

//வல்லிசிம்ஹன் said...
அபி அப்பா, உண்மையில் உங்க அம்மாவை நினைச்சுப் பரிதாபமா இருக்கு. இப்படி ஒரு சேட்டையா!!!!!!!

ம்ம். அப்புறம் என்ன???:)))//


வல்லிம்மா சொன்னதை நான் வழிமொழிகிறேன் .

பிள்ளைங்களா நீங்க...பிசாசுங்களாட்டம் இல்ல இருக்கு செய்கை எல்லாம் !!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கொட்டிகிட்டு ஊத்துதடி வானம்" பாட்டு 2 வரி கழுகு பார்வையில் பார்த்தோம்.//

அந்த ரெண்டு திருக்கழுக்குன்றம் கழுகு நீங்க தானா?
கழுகுப் பார்வை பாக்கறப்பவே நினைச்சே-ண்ணே! :))

இந்த ராதா, ராதாகிருஷ்ணனா?
நான் அனுராதா இல்லை வெறும் ராதா-ன்னுல்ல நெனச்சி ஓடியாந்தேன்! :)

தமிழ் பிரியன் said...

:))))

T.V.Radhakrishnan said...

:-))))

ஆயில்யன் said...

//அடுத்து என்னன்னு ஆச்சர்யமா இருக்கா வெயிட் பிளீஸ்!!!//

நோ ஆச்சர்யம் !

அடுத்து என்னன்னு பக்காவா டிசைட் பண்ணிட்டோம் அதேதான் நடந்திருக்கும் இருந்தாலும் வெய்ட்டீஸ் :)))

ஆயில்யன் said...

//சரி படுத்து தூங்குங்கடான்னு சார் சொன்னப்ப ராதா சொன்னான் "பத்தியா ஓடம் ஒரு நாள் வண்டியில ஏறும்"ன்னு ன்னு ஏதேதோ சொன்னான். ஏன்னா நான் அதே கிளாஸ்ல தூங்கினதுக்கு மரத்துக்கு தண்ணி ஊத்த அனுப்ப பட்டேன். (அப்படி நான் வளர்த்த மரம் தான் இப்ப இருக்கும் பெரிய வேப்ப மரம்)//


:))))))))))))))

நாகை சிவா said...

:)))

கலக்கல்...

இதே போல் நான் ஒரு தடவை டூர் க்கு பஸ் விட்டுட்டு காரைக்கால் வரைக்கும் விரட்டி அப்புறம் சீர்காழி வரைக்கும் விரட்டலாம் என்று முடிவு பண்ணி பாதியில் வீடு வந்தாச்சு!

ஜோசப் பால்ராஜ் said...

சித்தப்பூ,
அடுத்த பாகம் எங்க?
காணோம்?

ஜோசப் பால்ராஜ் said...

சித்தப்பூ,
நீங்களே இம்புட்டு தாக்கு தாக்கியிருக்கீங்களே, என் தம்பி நட்டு என்னென்ன கூத்து அடிக்க போறானோ, அத நினைச்சா கொஞ்சம் டெரராத்தான் இருக்கு சித்தப்பூ.

ramachandranusha(உஷா) said...

வல்லி, இந்த மாதிரி குறும்பு செய்யும் பிள்ளைகள் முகத்தைப் பார்த்தால் இந்த பூனையும்
பாலைக்குடிக்குமா ரேஞ்சுக்கு இருக்கும். ஒரு கடமையாய் வால்தனம் செஞ்சிக்கிட்டு இருக்கும்.
அம்மாக்களுக்கோ, எல்லாம் கூட இருந்து கெடுக்குதுங்கன்னு அக்கம் பக்கம் இருக்கிறதுகள்தான்
நம் பிள்ளையை கெடுக்குதுங்க என்று திடமான நம்பிக்கையுடன், இதுகள் செய்யும் வால்தனத்தை
சொன்னாலும் நம்ப மாட்டார்கள். சரிதானே அபி அப்பா :-)