Sunday, June 29, 2008

ஆபிஸில் அதிகம் ஆணி பிடுங்குபவர்களுக்கு...!

ஆப்பிஸர்களுக்கு வணக்கம்..!

வாங்க ஆப்பிஸர்களே..!


இன்னிக்கு வ.வா.சிங்க வாத்தியார் என்ன சொல்லித்தரப் போறேன்னா ஆபிஸ்ல புடுங்குற ஆணிகளால ஏற்படுற மன அழுத்த நோய்களுக்கு என்ன பண்ணலாம்? அதையெப்படி தவிர்க்கலாம்னு பார்க்கலாம்,வாங்க !

ஞாயித்துக்கிழமையான இன்னிக்கு ரொம்ப ஜாலியா உக்காந்து இதைப் படிச்சிட்டிருக்கீங்க.
ஆனா நாளைக்கு வேலைக்குப் போகணும்னு நெனச்சாலே சும்மா அதிருதுல்ல..
அப்படி அதிர்ந்தா உங்களுக்கும் ஆபிஸ்ல பிடுங்குற ஆணிகள் காரணமாக லேசா மன அழுத்தம் ஏற்பட்டிருக்குன்னு புரிஞ்சுக்கலாம்.

பொதுவாகவே ஆபிஸ்கள்ல அதிகமதிகமா ஆணி பிடுங்குறவங்களும்,ஆணியே பிடுங்காம சும்மா தூங்கி,சாப்பிட்டு சம்பளம் வாங்குறவங்களுக்கும் இந்த மன அழுத்தம்குற நோய் பாதிப்பு கட்டாயம் ஏற்படுமாம்.

சரி..இந்த நோய் பாதிச்சா என்ன ஆகும்குறதை முதல்ல இந்த 10 செக்கண்ட் வீடியோக்கள்ல பாருங்க.




பார்த்துட்டீங்களா?

இது மாதிரி சண்டை போடுற,கோபப்படுற மனநிலை எதனால ஏற்படும்னா ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ,இல்லேன்னா விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ அதுவும் இல்லேன்னா தெரியாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ ஏற்படுமாம்.

இதை புரிஞ்சுக்கிட்ட சில ஆபிஸ்கள், வேலை செய்றவங்க நலனுக்காக பல நல்ல நடவடிக்கைகளை எடுத்திருக்காங்க.

ஆபிஸுக்குள்ளேயே சின்னச் சின்ன விளையாட்டுக்கள்,மசாஜிங்க் செண்டர்கள்,கொஞ்ச நேரம் தூங்கியெழும்புறதுக்கான ஓய்வறைகள் னு சில விஷயங்களை ஆபிஸுக்குள்ளேயே வைக்கிறாங்க.இதனால என்ன பயனுன்னு கேட்டீங்கன்னா வேலை பார்க்குறவங்களுக்கு வேலையில சலிப்போ,களைப்போ ஏற்படும் போது இதுல ஏதாவது ஒண்ணுல போய் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.
இது சுவிட்சர்லாந்துல உள்ள கூகுள் நிறுவனத்தில பண்ணியிருக்கிற ஏற்பாடுகள் சில.









அடுத்து இந்த மன அழுத்தத்தை குறைக்க ப்ரீத்தி ஸிந்தா அக்கா என்ன சொல்றாங்கன்னா உங்க மேனேஜரோ இல்லைன்னா உங்கக்கிட்ட வேலை பார்க்குறவங்களையோ அடிக்கடி இப்படி அன்பா அரவணைச்சிக்கிட்டா யாருக்கு மன அழுத்தம் இருக்கோ அது அப்படியே காணாமப் போயிடுமாம்.




இப்போ நம்ம காதல் மன்னன்,சீனியர் சிங்கம்,சீனியர் ஆப்பிஸர்,சீனியர் பதிவர்,கேமராக் கவிஞர் சீவியார் அண்ணாச்சி இருக்காரில்லையா?
( இப்படியெல்லாம் சொல்லலேன்னா என்னோட கல்யாணத்துல fப்ரீயா போட்டோ எடுத்துக் கொடுக்க மாட்டேன்னுட்டார்.அதான்..)

அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 மணித்தியாலம் ஆபிஸ்ல ஆணி புடுங்குறவரு. 'தசாவதாரத்தையே' மிட் நைட் ஷோ வாகத்தான் பார்த்து மிரண்டிருக்கார்னா பார்த்துக்குங்களேன்..!

அப்படிப்பட்டவர்க்கிட்ட ஆபிஸ் பத்தி, மன அழுத்தம் பத்தியெல்லாம் கேட்காம இருக்க முடியுமா?

அதனால அவர்க்கிட்ட 'ஆபிஸ்ல ரொம்ப ஆணிக்கு மத்தியில இருக்கீங்க..மன அழுத்தம் ஏற்பட்டா என்ன செய்வீங்க ?'ன்னு கேட்டேன்.
(அவர் போட்டோ பார்த்துட்டு 'முற்றத்துல சேர்ந்திருக்கிற சருகுகள் மேல போய் ஆனந்தமா படுத்துக்குவேன்'னு சொல்லியிருப்பார்னு நீங்க நெனச்சிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லப்பா )

அவர் என்ன சொல்றார்னா ,

* மன அழுத்தம் இருக்குற மாதிரி உணர்றவங்க முதல்ல போய் நல்ல ஒரு கேமரா வாங்கிக்கணுமாம்.
அதுல கண்டதையும் போட்டோ எடுத்து ஆபிஸ்ல இருக்கும் போதே பிக்காஸாலயோ,இல்லேன்னா ஜிம்ப் லயோ போய் ஏதாவது செஞ்சு அழகுபடுத்தி அதையே பார்த்துட்டிருந்தா மன அழுத்தம் காணாமப் போயிடுமாம். இந்த நேரத்துல டீ யோ, காப்பியோ குடிச்சுக்கலாம்.

* அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு இருக்கில்ல..அதுல போய் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இருக்குற ஒவ்வொரு பதிவா பார்த்துட்டிருக்கணுமாம்.இப்படியே பார்த்துட்டிருக்கும் போது சாப்பாட்டு நேரம் வருமாம்.அப்போ நல்லா சாப்பிட்டா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.

* இப்போ சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா ? உடனே லேசா ஆபிஸுக்குள்ளயே சின்னக் குட்டித் தூக்கம் ஒண்ணு போட்டுட சொல்றார்.
குட்டித் தூக்கம்னா என்னன்னு தெரியாதவங்களுக்காக இந்தப் படங்கள்.
(ஏர் போர்ட்ல எடுத்தது - கடைகளைத் திறந்து வச்சிட்டு என்னமாத் தூங்குறாங்க..ஹ்ம்ம் )












* தூங்கி எழுந்ததுக்கப்புறம் ஏதாவது பதிவு எழுதணுமாம்.பதிவு என்ன சம்பந்தமா வேணும்னாலும் இருக்கட்டும்னு சொல்றாரு.அவர் கூட அமெரிக்கால கார் ஓட்டி போலிஸ்ல மாட்டிக்கிட்ட கதையை அப்படித்தான் எழுதினாராம்ல..

* இப்போ பதிவெழுதி முடிச்சதுக்கப்புறம் உங்க ஆபிஸ் வேலை நேரம் முடிஞ்சிடுமாம். உடனே கேமராவையும் எடுத்துட்டு வெளிய வந்து பஸ் புடிச்சி,ட்ரையின் புடிச்சி அப்புறம் பைக் ல அப்பப்ப போட்டோ எடுத்துக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.

இதுல இருந்து அவர் ஆபிஸ்ல வேலையே பார்க்கலைன்னு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல ஆப்பிஸர்களே... !

அதனால இனிமேல எல்லோரும் நம்ம சீனியர் சீவியார் சொல்ற வழிமுறையை பின்பற்றுவோமா ஆப்பிஸர்களே ?

38 comments:

M.Rishan Shareef said...

:P

நாமக்கல் சிபி said...

/அதனால இனிமேல எல்லோரும் நம்ம சீனியர் சீவியார் சொல்ற வழிமுறையை பின்பற்றுவோமா ஆப்பிஸர்களே ?//

கண்டிப்பா!

நாமக்கல் சிபி said...

/இப்போ நம்ம சீனியர் சிங்கம்,சீனியர் ஆப்பிஸர்,சீனியர் பதிவர்,கேமராக் கவிஞர் சீவியார் அண்ணாச்சி இருக்காரில்லையா?//

காதல் மன்னன் என்கிற டைட்ட்டிலை இருட்டடிப்பு செய்தமைக்கு என் கண்டனங்கள்

CVR said...

அடப்பாவமே!!
இம்புட்டு வேலை செய்யறீங்களே...வேலை பளு மறக்க என்ன செய்வீங்கன்னு அன்பொழுக கேட்டது இதுக்கு தானா?? :P

//* மன அழுத்தம் இருக்குற மாதிரி உணர்றவங்க முதல்ல போய் நல்ல ஒரு கேமரா வாங்கிக்கணுமாம்.
அதுல கண்டதையும் போட்டோ எடுத்து ஆபிஸ்ல இருக்கும் போதே பிக்காஸாலயோ,இல்லேன்னா ஜிம்ப் லயோ போய் ஏதாவது செஞ்சு அழகுபடுத்தி அதையே பார்த்துட்டிருந்தா மன அழுத்தம் காணாமப் போயிடுமாம். இந்த நேரத்துல டீ யோ, காப்பியோ குடிச்சுக்கலாம்.
///
என் ஆபீசுல புதுசா சாட்வேர் எதுவும் இன்ஸ்டால் பண்ணமுடியாது பா!!

//* அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு இருக்கில்ல..அதுல போய் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இருக்குற ஒவ்வொரு பதிவா பார்த்துட்டிருக்கணுமாம்.இப்படியே பார்த்துட்டிருக்கும் போது சாப்பாட்டு நேரம் வருமாம்.அப்போ நல்லா சாப்பிட்டா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.
///
எங்க ஆபீசுல ப்ளாக்கர்/ப்ளாக்ஸ்பாட் எல்லாம் தடை செஞ்சுட்டாய்ங்கப்பா...

//* இப்போ சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா ? உடனே லேசா ஆபிஸுக்குள்ளயே சின்னக் குட்டித் தூக்கம் ஒண்ணு போட்டுட சொல்றார்.
குட்டித் தூக்கம்னா என்னன்னு தெரியாதவங்களுக்காக இந்தப் படங்கள். (ஏர் போர்ட்ல எடுத்தது - கடைகளைத் திறந்து வச்சிட்டு என்னமாத் தூங்குறாங்க..ஹ்ம்ம் )
////
இப்படியெல்லாம் தூங்கினா கொடுத்திருக்கற வேலையை எப்போ முடிக்கறது???

///
* தூங்கி எழுந்ததுக்கப்புறம் ஏதாவது பதிவு எழுதணுமாம்.பதிவு என்ன சம்பந்தமா வேணும்னாலும் இருக்கட்டும்னு சொல்றாரு.அவர் கூட அமெரிக்கால கார் ஓட்டி போலிஸ்ல மாட்டிக்கிட்ட கதையை அப்படித்தான் எழுதினாராம்ல..
//
அதான் ப்ளாக்கரு தடை செஞ்சிட்டாய்ங்கன்னு சொன்னேன்ல!! :P

//
* இப்போ பதிவெழுதி முடிச்சதுக்கப்புறம் உங்க ஆபிஸ் வேலை நேரம் முடிஞ்சிடுமாம். உடனே கேமராவையும் எடுத்துட்டு வெளிய வந்து பஸ் புடிச்சி,ட்ரையின் புடிச்சி அப்புறம் பைக் ல அப்பப்ப போட்டோ எடுத்துக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம். ////
இருக்கற வேலையை முடிச்சிட்டு திரும்பி வந்து சேர்ரதுக்குள்ளையே தாவு தீர்ந்து போகுது!! இதுல இதெல்லாம் வேறையா??? :-ஸ்


//// சீனியர் சிங்கம்,சீனியர் ஆப்பிஸர்,சீனியர் பதிவர்,கேமராக் கவிஞர்/////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏன் இந்த கொலை வெறி?? :P
நல்ல காலம்...இதோட நிறுத்திக்கிட்டியே ராசா!!!

மங்களூர் சிவா said...

/
ஆபிஸ்ல புடுங்குற ஆணிகளால ஏற்படுற மன அழுத்த நோய்களுக்கு என்ன பண்ணலாம்?
/

ஜொல்லுப்பா ரொம்ப முக்கியமான விசயம் போலதான் இருக்கு

மங்களூர் சிவா said...

/
ஞாயித்துக்கிழமையான இன்னிக்கு ரொம்ப ஜாலியா உக்காந்து இதைப் படிச்சிட்டிருக்கீங்க.
/

இல்லைங்க ஆப்பீசர் இத இன்னைக்கு ஞாயித்துக்கிழமை ஆப்பீஸ்ல உக்காந்துதான் படிச்சிகிட்டிருக்கேன்
:(((

மங்களூர் சிவா said...

/
அப்படி அதிர்ந்தா உங்களுக்கும் ஆபிஸ்ல பிடுங்குற ஆணிகள் காரணமாக லேசா மன அழுத்தம் ஏற்பட்டிருக்குன்னு புரிஞ்சுக்கலாம்.
/

ஓஹோ
:)

மங்களூர் சிவா said...

/
சரி..இந்த நோய் பாதிச்சா என்ன ஆகும்குறதை முதல்ல இந்த 10 செக்கண்ட் வீடியோக்கள்ல பாருங்க.
/

அது சரி என் ஆப்பீஸ்ல வந்து எப்ப விடியோ எடுத்தீங்க!?!?!?

மங்களூர் சிவா said...

/
ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ,இல்லேன்னா விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ அதுவும் இல்லேன்னா தெரியாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ ஏற்படுமாம்.
/

அதனாலதான் ஆப்பீஸர் ஆணியே புடுங்கறதில்ல!!

:))))))

மங்களூர் சிவா said...

/
மசாஜிங்க் செண்டர்கள்,கொஞ்ச நேரம் தூங்கியெழும்புறதுக்கான ஓய்வறைகள் னு சில விஷயங்களை ஆபிஸுக்குள்ளேயே வைக்கிறாங்க
/

ஹிஹி அந்த கம்பெனிக்கு மொதல்ல அப்ளிகேசன் போடணும்பா

:))

மங்களூர் சிவா said...

/
அடுத்து இந்த மன அழுத்தத்தை குறைக்க ப்ரீத்தி ஸிந்தா அக்கா என்ன சொல்றாங்கன்னா உங்க மேனேஜரோ இல்லைன்னா உங்கக்கிட்ட வேலை பார்க்குறவங்களையோ அடிக்கடி இப்படி அன்பா அரவணைச்சிக்கிட்டா யாருக்கு மன அழுத்தம் இருக்கோ அது அப்படியே காணாமப் போயிடுமாம்.
/

லேடி மேனேஜரா இருந்தா ஈவ் டீசிங் கேஸ் ஆகீடாதா ஆப்பீஸர் ரிசான்???

மங்களூர் சிவா said...

/
நாமக்கல் சிபி said...

/இப்போ நம்ம சீனியர் சிங்கம்,சீனியர் ஆப்பிஸர்,சீனியர் பதிவர்,கேமராக் கவிஞர் சீவியார் அண்ணாச்சி இருக்காரில்லையா?//

காதல் மன்னன் என்கிற டைட்ட்டிலை இருட்டடிப்பு செய்தமைக்கு என் கண்டனங்கள்
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
மன அழுத்தம் இருக்குற மாதிரி உணர்றவங்க முதல்ல போய் நல்ல ஒரு கேமரா வாங்கிக்கணுமாம்.
அதுல கண்டதையும் போட்டோ எடுத்து ஆபிஸ்ல இருக்கும் போதே பிக்காஸாலயோ,இல்லேன்னா ஜிம்ப் லயோ போய் ஏதாவது செஞ்சு அழகுபடுத்தி அதையே பார்த்துட்டிருந்தா மன அழுத்தம் காணாமப் போயிடுமாம்.
/

அதுக்கு பிள்ளைக கோச்சுக்க மாட்டாங்களா ஆப்பீசர் ரிசான்!?!?!?

கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்!!

:)))

மங்களூர் சிவா said...

/
அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு இருக்கில்ல..அதுல போய் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இருக்குற ஒவ்வொரு பதிவா பார்த்துட்டிருக்கணுமாம்.இப்படியே பார்த்துட்டிருக்கும் போது சாப்பாட்டு நேரம் வருமாம்.அப்போ நல்லா சாப்பிட்டா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.
/

ஓ இதனாலதான் எனக்கு மன அழுத்தம் எந்த பிரச்சனையும் இல்லையோ!?!?!?

மங்களூர் சிவா said...

/
இப்போ சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா ? உடனே லேசா ஆபிஸுக்குள்ளயே சின்னக் குட்டித் தூக்கம் ஒண்ணு போட்டுட சொல்றார்.
/

என்னாஆஆது குட்டிகூட தூக்கமா!?!?!?
அதுவும் ஆப்பீஸ்குள்ளவேவா!?!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
தூங்கி எழுந்ததுக்கப்புறம் ஏதாவது பதிவு எழுதணுமாம்.பதிவு என்ன சம்பந்தமா வேணும்னாலும் இருக்கட்டும்னு சொல்றாரு.
/



/
இப்போ பதிவெழுதி முடிச்சதுக்கப்புறம் உங்க ஆபிஸ் வேலை நேரம் முடிஞ்சிடுமாம். உடனே கேமராவையும் எடுத்துட்டு வெளிய வந்து பஸ் புடிச்சி,ட்ரையின் புடிச்சி அப்புறம் பைக் ல அப்பப்ப போட்டோ எடுத்துக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.
/

நல்ல டிப்ஸ் மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!

:))))

கானா பிரபா said...

வெள்ளை மாதவன் என்ற பட்டத்தை போடாததற்கு கண்டிக்கின்றோம் ;-)

ஓ அது தான் தல ரொம்ப நாளா புகைப்படக் கண்காட்சியை கண்ணில் காட்டவில்லையா?

M.Rishan Shareef said...

//அதனால இனிமேல எல்லோரும் நம்ம சீனியர் சீவியார் சொல்ற வழிமுறையை பின்பற்றுவோமா ஆப்பிஸர்களே ?//

//கண்டிப்பா!//

அப்போ இனிமேலாவது ஒழுங்கா வேலை பார்ப்பீங்களா சிபி அங்கிள் ?

M.Rishan Shareef said...

//காதல் மன்னன் என்கிற டைட்ட்டிலை இருட்டடிப்பு செய்தமைக்கு என் கண்டனங்கள் //

அதான் போட்டுட்டம் ல :P

ராஜ நடராஜன் said...

எனக்கெல்லாம் இந்த மாதிரி தொந்தரவுகளே இல்லீங்க!அலுவலகம் கடந்தால் அதன் நினைவுகள் அடுத்த நாள் இருக்கைக்கு வரும்வரை நினைவிலிருக்காது.வீட்டுக்குபோனால் வீட்டு நினைவுகள் மட்டுமே.எதிர்மாறாக நண்பரும் அவர் மனைவியும் ஒரே துறையைச் சார்ந்து பணிபுரிவதாலோ என்னவோ இருந்தால் அலுவல் பேச்சு,உட்கார்ந்தால் அலுவல் பேச்சு.

டிஸ்கி: ஐயோ வருத்தப்படாத வாலிபர்கள் சங்கமா? நான் கதவு எண்ணைப் பார்க்காமல் வந்து விட்டேன்.மன்னிக்கவும்.

Kavinaya said...

வீடியோக்களைப் பார்த்தே மன அழுத்தம், ரத்த அழுத்தம், எல்லாம் வந்துரும் போலருக்கு :)

thamizhparavai said...

தல கடைசில இருக்கிற 10 புகைப்படத்துல முதல்ல இருக்கிற 4ம் 'குட்டி' தூக்கத்துக்கு (சிறுசு,பெருசு)எடுத்துக்காட்டு. மீதி 6ம் தேவை இல்லை தல.

நீங்களும் ஆப்பீஸ்ல அளவா ஆணி புடுங்குங்க.. இல்லைன்னா இப்பிடி சம்பந்தமில்லாத படமா போட ஆரம்பிச்சுருவீங்க...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:p

நாதஸ் said...

ஸ்பாம் மெசெஜிக்கு கூட மறுமொழி போடும் ரொம்ப நல்லவனான எங்க தல சிவியார கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் :P

சீமாச்சு.. said...

//அவர் கூட அமெரிக்கால கார் ஓட்டி போலிஸ்ல மாட்டிக்கிட்ட கதையை அப்படித்தான் எழுதினாராம்ல//

எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கே...

நானும் இப்பதான் இந்தக் கதையை எழுதி.. நாள் முழுக்க சூடான இடுகைகள்ல நிக்கிது...

எனக்குத்தான் பழுத்தது 200-300 டாலர்னு நெனச்சேன்.. அதுலயும் ஒரு அனானி.. 200-300 இல்லல்.. 400 டாலர் அண்ணாச்சி-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு..

ஹூம்...

நான் அமெரிக்காவில் கார் ஓட்டி போலீஸில் மாட்டிக்கொண்ட கதை கேட்க இங்கே க்ளிக்கவும்..

M.Rishan Shareef said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க

M.Rishan Shareef said...

// CVR said...
அடப்பாவமே!!
இம்புட்டு வேலை செய்யறீங்களே...வேலை பளு மறக்க என்ன செய்வீங்கன்னு அன்பொழுக கேட்டது இதுக்கு தானா?? :P //

ஹி ஹி ஹி..
அப்படிக் கேட்டாத்தானே உளறுவீங்க அண்ணாச்சி :P

//என் ஆபீசுல புதுசா சாட்வேர் எதுவும் இன்ஸ்டால் பண்ணமுடியாது பா!!//

புதுசு எதுக்குங்க அண்ணாச்சி..? இருக்குறதை வச்சே நல்லா எழுதிட்டுத்தானே இருக்கீக..:P

//எங்க ஆபீசுல ப்ளாக்கர்/ப்ளாக்ஸ்பாட் எல்லாம் தடை செஞ்சுட்டாய்ங்கப்பா...//

உடான்ஸு உடான்ஸு..
ஆரும் நம்பிடாதீக மக்கா..

//இப்படியெல்லாம் தூங்கினா கொடுத்திருக்கற வேலையை எப்போ முடிக்கறது??? //

அதை வேலை கொடுக்குறவங்க இல்ல யோசிக்கணும் ? உங்களுக்கு எதுக்கு கவலை அண்ணாச்சி..?நீங்க உங்க பாட்டுக்கு தூங்குங்க..ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கணும்ல ? :P

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏன் இந்த கொலை வெறி?? :P
நல்ல காலம்...இதோட நிறுத்திக்கிட்டியே ராசா!!! //

இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போகும்..? அப்போ வைக்கிற ஆப்பு இதை விடப் பலமாயிருக்கும் அண்ணாச்சி :P

M.Rishan Shareef said...

// மங்களூர் சிவா said...
/
ஆபிஸ்ல புடுங்குற ஆணிகளால ஏற்படுற மன அழுத்த நோய்களுக்கு என்ன பண்ணலாம்?
/

ஜொல்லுப்பா ரொம்ப முக்கியமான விசயம் போலதான் இருக்கு ///

அதான் படம் போட்டு சொல்லிட்டேன் ல :P

M.Rishan Shareef said...

//இல்லைங்க ஆப்பீசர் இத இன்னைக்கு ஞாயித்துக்கிழமை ஆப்பீஸ்ல உக்காந்துதான் படிச்சிகிட்டிருக்கேன்
:((( //

அட..சிவா வேலை பார்க்குற ஆப்பிஸ் ரொம்ப நல்ல ஆப்பிஸ் போலிருக்கே..
இப்படியே வருஷம் முழுக்க அவரோட 60ம் கல்யாணத்துக்கோ,பேராண்டியோட கல்யாண நாளுக்கோ கூட லீவு கொடுக்காம இருக்கணும்.. :P

M.Rishan Shareef said...

//அது சரி என் ஆப்பீஸ்ல வந்து எப்ப விடியோ எடுத்தீங்க!?!?!?//

ஓஹோ..இப்படித்தான் நீங்களும் உங்க ஆபிஸுல பிகருங்க கூட சண்டை போடுவீங்களா சிவா ? :P

M.Rishan Shareef said...

//
லேடி மேனேஜரா இருந்தா ஈவ் டீசிங் கேஸ் ஆகீடாதா ஆப்பீஸர் ரிசான்???//

ஆஹா..எனக்கே ஆப்பு வைக்கப் பார்க்குறீங்களா சிவா?
அடுக்குமா இது..?

நடக்காது..நடக்கவே நடக்காது..

M.Rishan Shareef said...

//ஓ இதனாலதான் எனக்கு மன அழுத்தம் எந்த பிரச்சனையும் இல்லையோ!?!?!? //

சிவா அண்ணாத்த..
அந்த வியாதி வர்றதுக்கு மனசு மட்டும் இருந்தாப் போதாது..கொஞ்சூண்டாவது மூளையும் இருக்கணும் :P

M.Rishan Shareef said...

//கானா பிரபா said...
வெள்ளை மாதவன் என்ற பட்டத்தை போடாததற்கு கண்டிக்கின்றோம் ;-)//

என்னங்க கானா அண்ணாச்சி நீங்க..நம்ம ஜிரா கோச்சுக்கப் போறாரு..அவருதான் அந்தப் பெயருக்கு காப்பிரைட் வாங்கியிருக்காராம் ல :P

//ஓ அது தான் தல ரொம்ப நாளா புகைப்படக் கண்காட்சியை கண்ணில் காட்டவில்லையா //

ஆமாங்க...ஆனா எல்லாத்தையும் சுட்டுட்டுத்தான் இருக்காரு..கேமராவால :P

M.Rishan Shareef said...

//ராஜ நடராஜன் said...
எனக்கெல்லாம் இந்த மாதிரி தொந்தரவுகளே இல்லீங்க!அலுவலகம் கடந்தால் அதன் நினைவுகள் அடுத்த நாள் இருக்கைக்கு வரும்வரை நினைவிலிருக்காது.வீட்டுக்குபோனால் வீட்டு நினைவுகள் மட்டுமே.//

அட...கொடுத்துவச்சவர் நீங்க..
ஆனாலும் ரொம்பத்தான் மத்தவங்க வயித்தெரிச்ச்சலையும் காதுல புகையையும் உண்டாக்கி ஸ்ட்ரெஸ்ஸ் நோய்க்கு ஆளாக்கிடுவீங்க போலிருக்கே:P

M.Rishan Shareef said...

//கவிநயா said...
வீடியோக்களைப் பார்த்தே மன அழுத்தம், ரத்த அழுத்தம், எல்லாம் வந்துரும் போலருக்கு :) //

பார்க்குற உங்களுக்கே இப்படியிருக்குன்னா ,அப்படி நடந்துக்குறவங்களுக்கு எப்படியிருக்குமுங்க ?

M.Rishan Shareef said...

// தமிழ்ப்பறவை said...
தல கடைசில இருக்கிற 10 புகைப்படத்துல முதல்ல இருக்கிற 4ம் 'குட்டி' தூக்கத்துக்கு (சிறுசு,பெருசு)எடுத்துக்காட்டு. மீதி 6ம் தேவை இல்லை தல. //

ஆஹா...
குட்டித் தூக்கம் பத்திப் பேசினா, 'குட்டியோட' தூக்கம் பத்திப் பேசுறீங்களே..
நான் சின்னப்பையனுங்க..இப்படி வம்புல மாட்டி உட்ராதீக..

M.Rishan Shareef said...

//nathas said...
ஸ்பாம் மெசெஜிக்கு கூட மறுமொழி போடும் ரொம்ப நல்லவனான எங்க தல சிவியார கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் :P //

இதுக்குப் பேரு தாங்க உலகமகா ஐஸ்ங்குறது..
எப்படியெல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்கப்பா..

M.Rishan Shareef said...

வாங்க சீமாச்சு..

//எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கே...

நானும் இப்பதான் இந்தக் கதையை எழுதி.. நாள் முழுக்க சூடான இடுகைகள்ல நிக்கிது...

எனக்குத்தான் பழுத்தது 200-300 டாலர்னு நெனச்சேன்.. அதுலயும் ஒரு அனானி.. 200-300 இல்லல்.. 400 டாலர் அண்ணாச்சி-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.. //

ரொம்பத்தான் நொந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.ம்ஹ்ம்ம்..என்ன பண்றது ? :P