Thursday, June 5, 2008

இதப்பார்றா....!

நான்தான் இருபது வயசாகியும் இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கேன் னு நம்ம கே.ஆர்.எஸ் அங்கிள் 'கொஞ்சம் வளர்ந்துக்கோ பையா'ன்னு மெயில் மெயிலா அனுப்புறாரு.

"மேயர் ஆகிட்டே,மேஜர் ஆகிட்டியா?" ன்னெல்லாம் கேட்டுப் போட்டுத் தாக்கிட்டிருக்காரு.

'கையில மட்டும் மாட்டுங்க..அன்னிக்கு இருக்கு மவனே உங்களுக்கு ஆப்பு'ன்னெல்லாம் என்னால பேச முடியுமுங்களா? அதான்..
"சரிப்பா..என்னைச் சொல்றீகளே..நீங்க மட்டும் ஒழுங்கா பெரிய புள்ளையா வளர்ந்துருக்கீகளா?"ன்னு அவருக்கிட்ட கேட்டுட்டேன்..

"கொழந்தாய்..நாமெல்லாம் அந்தக் காலத்துலயே பெரிய மனுஷங்க பையா..உட்டா ஒரு நசுங்கின சொம்போட ஊர் ஆலமரத்தடில குத்த வச்சு உக்காந்து பஞ்சாயத்து பண்ணவே போயிருப்பம் ல"ன்னு சொன்னார்.

சொல்லிட்டு இப்படி ஒரு பிளாஷ்பேக்கையும் ஓட்டினார்.

இது நெசமா இல்லையான்னு வாசகப் பெருமக்களே நீங்கதான் சொல்லணும்...

கிளாஸ் மேட்: மச்சான் நான் ரொம்ப அப்‌ஸெட்டா இருக்கேன் டா


கே.ஆர்.எஸ் : ஏன் டா வீட்டில எதுனா ப்ரோப்ளமா???

கிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா, அங்க ஒரு செம ஃபிகர், சுமார் ஒண்ணரை வயசு இருக்கும் அவங்க அம்மா மடியில படுத்து வாய்ல விரல வச்சுட்டு என்னப் பாத்து ஒரு லுக் விட்டா பாரு... ஐயோ.......


கே.ஆர்.எஸ்: அப்புறம் என்ன ஆச்சு???

கிளாஸ் மேட்: அப்புறம் என்ன... எங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குனு ஒரு குட்டு வச்சான், கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....

கே.ஆர்.எஸ்: இந்த அப்பன்களே இப்படித் தாண்டா பொறாமைல அலைவாங்க... நீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்!!!46 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

கும்முங்கோ..அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ..

ஸ்டார்ட் த மியூசிக்..

ஏ டண்டனக்கா..ஏ டனக்குடக்கா :D

இலவசக்கொத்தனார் said...

//கிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா,//

//கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....//

நேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா? அது எப்படிங்கண்ணா?

(எங்க தல கே ஆர் எஸ் பத்தி இப்படி எல்லாம் எழுதினா பதிவுல குற்றம் கண்டுபிடிச்சே கவுத்துடுவோமில்ல!)

கார்த்திக் said...

//நான்தான் இருபது வயசாகியும் இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கேன் //
?????

அடபாவிகள குழந்தைளியே ஆரம்பிச்ட்டிங்களா
நடத்துங்க நடத்துங்க

மங்களூர் சிவா said...

/
நீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்!!!
/

ஆமா தூக்குறோம், அவ என்கூடதான் பிரி கேஜில படிக்கிறா

மங்களூர் சிவா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...
கும்முங்கோ..அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ..


/

என்னா ஒரு ஆர்வம்!?!?

:)))))

குமரன் (Kumaran) said...

//கே.ஆர்.எஸ்: இந்த அப்பன்களே இப்படித் தாண்டா பொறாமைல அலைவாங்க... நீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்!!! //

இது அப்படியே சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல சந்தனம் பேசுற மாதிரியே இருக்குப்பூ...:-)

இரா. வசந்த குமார். said...

/*
நேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா? அது எப்படிங்கண்ணா?
*/

எனக்கும் இந்த டவுட் வந்து இதையே மெயிலா கொஞ்ச நாளுக்கு முன்னாடி, எனக்கு அனுப்பின ஃபிரண்டிடம் கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னான் : நேத்து, இன்னிக்கு.. ஆக மொத்தம் ரெண்டு நாளு ஆகிடுச்சு இல்ல...?

Thooya said...

//
கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....
//

சகோதரா இலங்கையில் செரிலக் விக்கும் விலையில் அதை சாப்பிடாமல் புறக்கணிப்பதா??

;)

கவிநயா said...

ரிஷானு, இந்த மாசம் பூராவையும் கண்ணபிரான வச்சே ஓட்டறதுன்னு திட்டமா? :) பாவம்ப்பா. வேற யாரையாச்சும் புடிச்சுக்கோங்க.. :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க இலவசக்கொத்தனார் :)

//நேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா? அது எப்படிங்கண்ணா? //

உங்க தல கேயாரெஸ் அங்கிள்டத்தான் கேட்கணும்..
அவருக்கு நடந்ததாதான் சொன்னார்... :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கார்த்திக்..

//அடபாவிகள குழந்தைளியே ஆரம்பிச்ட்டிங்களா
நடத்துங்க நடத்துங்க//

அட ஆமாப்பா..எனக்கும் ரொம்ப ஆச்சரியமாவே இருக்கு..நாம மட்டும் இவ்ளோ வளர்ந்தும் இன்னும் குழந்தையாவே இருக்கோம் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

மங்களூர் சிவா அண்ணாத்த...

//ஆமா தூக்குறோம், அவ என்கூடதான் பிரி கேஜில படிக்கிறா//

என்னா ஒரு வில்லங்கம்? :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

குமரன் அண்ணாச்சி,

//இது அப்படியே சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல சந்தனம் பேசுற மாதிரியே இருக்குப்பூ...:-)//

'சந்தோஷ் சுப்ரமணியம்' இப்ப..
நம்ம கேயாரெஸ் ஆதிகாலத்திலிருந்தே பேச ஆரம்பிச்சிட்டாரு :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க வசந்தகுமார் சார் :)

கரெக்டா சொன்னீங்க..நான் கூட ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தேன்..

நன்றி சாரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க தூயா... :)

//சகோதரா இலங்கையில் செரிலக் விக்கும் விலையில் அதை சாப்பிடாமல் புறக்கணிப்பதா??//

அட அது நானில்லீங்க..நம்ம கேயாரெஸ் சின்னப்பிள்ளையா இருக்கும் போது நடந்ததாம் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கவிநயா :)

//ரிஷானு, இந்த மாசம் பூராவையும் கண்ணபிரான வச்சே ஓட்டறதுன்னு திட்டமா? :) பாவம்ப்பா. வேற யாரையாச்சும் புடிச்சுக்கோங்க.. :))//

லிஸ்டுல நெறையப் பேரு இருக்காங்க..இனி ஒவ்வொருத்தரா வந்து என்னோட கும்மியை வாங்கிட்டுப் போவாங்க :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ//

என்னா ஒரு சந்தோசம் டா ராசா உன் முகத்துல! ஸ்பென்சர் பக்கம் நீ லுக்கு வுடப் போன போது கூட இப்படி ஒரு சந்தோசத்த உன் முகத்துல பாக்கலையேப்பா! பாக்கலையே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்!!!//

ரிஷானு! வேணாம் நண்பா! இதனால் குழந்தைகள் கொடுமை தடுப்புச் சட்டம் உன் மேல பாயும் அபாயும் இருக்கு! ஒடனே நிபந்தனை அற்ற கும்மிப்பைக் கேள்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாருங்க...கொத்ஸ் அண்ணாச்சி, கவிநயா அக்கா, மங்களூர் சிவா மாம்ஸ் எல்லாரும் பாசத்துல பொங்கறாங்க!

எதுக்கும் வூட்டுக்குள்ளாற தாப்பாள போட்டுக்கிட்டு, அரச மீனவனை (அதான்பா கிங் பிஷ்ஷர்) அளவா ஏத்திக்கிட்டு சாக்கரதையா இருந்துக்கோப்பா ரிஷானு! :-)

தமிழன்... said...

KRS ?????

தமிழன்... said...

KRS: :(:((

தமிழன்... said...

ரிஷான் : :):))

தமிழன்... said...

அட பாவிகளா அப்பவுலருந்தே அப்படித்தானா...:))

G.Ragavan said...

அடடே! இத ஒங்ககிட்டயும் கே.ஆர்.எஸ் சொல்லீட்டாரா? எங்கிட்டயும் ரொம்பப் பெருமையா சொல்லிக்கிட்டாரு!!!!! இன்னும் என்னென்ன ரகசியங்கள் இப்பிடியிருக்கோ! அவரு சொன்னதெல்லாம் பதிவுல போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :)

ILA said...

Seniornga etho pesikireenga..

துளசி கோபால் said...

எதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு?

பேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே? :-)))))

Sen22 said...

:))))))

மதுரையம்பதி said...

ஏப்பா ரிஷான், ஆக மொத்தம் உங்களுக்கு மெயில்ல அட்வைஸ் மழைன்னு சொல்லுறீங்களா?.. :))

//எதுக்கும் வூட்டுக்குள்ளாற தாப்பாள போட்டுக்கிட்டு, அரச மீனவனை (அதான்பா கிங் பிஷ்ஷர்) அளவா ஏத்திக்கிட்டு சாக்கரதையா இருந்துக்கோப்பா ரிஷானு! :-)
//

மேல இருக்கும் பின்னூட்டத்துல கூட அட்வைஸ் தெரியுது...ஜிரா கூட நீங்க சொல்றதை வழி மொழிஞ்சுருக்காரு...ஆமா நீங்க அங்கிள் அப்படின்னு சொல்றது சரிதான்.. :))

Syam said...

//Seniornga etho pesikireenga..//

enakkum piriyala....

SanJai said...

அடப்பாவிகளா.. :(

//இலவசக்கொத்தனார் said...

//கிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா,//

//கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....//

நேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா? அது எப்படிங்கண்ணா?//

செரிலாக் சாப்டற பையனுக்கு கணகெல்லாம் தெரியுமா? என்னங்க்ணா நீங்க? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஸ்பென்சர் பக்கம் நீ லுக்கு வுடப் போன போது கூட இப்படி ஒரு சந்தோசத்த உன் முகத்துல பாக்கலையேப்பா! பாக்கலையே! :-)//

என்ன ஒரு அபாண்டம் கே.ஆர்.எஸ் அங்கிள்? :(
நான் இன்னும் சிலேட்டு வாங்கக் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லையே :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

//இதனால் குழந்தைகள் கொடுமை தடுப்புச் சட்டம் உன் மேல பாயும் அபாயும் இருக்கு! //

குழந்தைகளை சட்டம் சட்டை செய்யாது அங்கிள்.நீங்க பயப்படாதீங்க..நான் தொட்டிலை விட்டு எங்கேயும் போயிட மாட்டேன் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ரிஷான் : :):))//

கையக் கொடுங்க தமிழன் :)))))

எம்.ரிஷான் ஷெரீப் said...

//அட பாவிகளா அப்பவுலருந்தே அப்படித்தானா...:))//

அப்ப மட்டுமில்ல தமிழன்..இப்பக் கூட அவரு அப்படித்தான் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க ஜிரா அண்ணாத்த,

//அவரு சொன்னதெல்லாம் பதிவுல போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :)//

என்ன ஒரு நல்லெண்ணம் உங்களுக்கு? :P

அவரு சொன்னதெல்லாம் போட ஒரு மாசமில்ல..ஒரு வருஷம் கூடப் போதாது ராசா போதாது :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

//Seniornga etho pesikireenga..//

ரொம்ப வயசாகிட்டாலே குழந்தை மாதிரிதான்னு உங்களைப் பார்த்துத் தெரிஞ்சிக்கிட்டேன் இளா :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க துளசி டீச்சர்.. :)

//எதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு?

பேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே? :-)))))//

நான் இப்போ அங்கதான் இருக்கேன்.யாரும் சொல்லிக் கொடுக்கமாட்டேங்குறாங்களே டீச்சர் :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க மதுரையம்பதி :)

//மேல இருக்கும் பின்னூட்டத்துல கூட அட்வைஸ் தெரியுது...ஜிரா கூட நீங்க சொல்றதை வழி மொழிஞ்சுருக்காரு...ஆமா நீங்க அங்கிள் அப்படின்னு சொல்றது சரிதான்.. :))//

அப்பாடா..என் பக்கத்துக்கு இன்னொரு ஆள் சேர்ந்திட்டாரு :)
ஆனா இதுக்காக எனக்கு மாலையெல்லாம் போட்டுட்டு...வேணாங்க..எனக்குக் கூச்சமா இருக்கு :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க சென் :)
என்ன ஒரே சிரிப்பா இருக்கு? :)))

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க சியாம் :)

//enakkum piriyala....//

ஓஹ்..உங்களுக்கும் ரொம்ப்ப்ப வயசாயிடுச்சா? ஓகே ஓகே :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//செரிலாக் சாப்டற பையனுக்கு கணகெல்லாம் தெரியுமா? என்னங்க்ணா நீங்க? :P//

அதானே சஞ்சய்..
சின்னப்புள்ளைங்கக் கிட்டப் போய் கணக்கெல்லாம் கேக்குறாங்க :(

மங்களூர் சிவா said...

/
எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க துளசி டீச்சர்.. :)

//எதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு?

பேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே? :-)))))//

நான் இப்போ அங்கதான் இருக்கேன்.யாரும் சொல்லிக் கொடுக்கமாட்டேங்குறாங்களே டீச்சர் :(
/

பாத்துய்யா உசுப்ப்பேத்திவிடறாங்கன்னு நீ ஆரம்பிச்சிட போற அந்த நர்ஸ்ஸ் கைல பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஊசி வெச்சிருக்கு!!!!

:))))))

T.V.Radhakrishnan said...

இப்ப பெண்கள் எல்லாம் ரொம்ப choosy ஆயிட்டங்களாம்.இப்படி குழந்தையா இருக்கறப்போவே
..ஒன்னொன்னை புடிச்சுக்கிட்டாதான் பசங்க்களுக்கு பொண்ணு கிடைக்குமாம்..இதை நான் சொல்லலை.வ.வா.சங்கத்தோட ஆய்வறிக்கை ஒன்னு சொல்லுதாம்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க சிவா அண்ணாத்த,

//பாத்துய்யா உசுப்ப்பேத்திவிடறாங்கன்னு நீ ஆரம்பிச்சிட போற அந்த நர்ஸ்ஸ் கைல பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஊசி வெச்சிருக்கு!!!!//

இதுக்குப் பயந்துதான் நான் இன்னும் கண்ணையே திறக்காம இருக்கேன்,நீங்க வேற :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார் :) ,

//இப்ப பெண்கள் எல்லாம் ரொம்ப choosy ஆயிட்டங்களாம்.இப்படி குழந்தையா இருக்கறப்போவே
..ஒன்னொன்னை புடிச்சுக்கிட்டாதான் பசங்க்களுக்கு பொண்ணு கிடைக்குமாம்..இதை நான் சொல்லலை.வ.வா.சங்கத்தோட ஆய்வறிக்கை ஒன்னு சொல்லுதாம்.//

அட அட அட..
நம்ம ஆய்வறிக்கை எங்கேயெல்லாம் பரப்பப்பட்டிருக்கு பாருங்க :)
அப்போ இப்ப இருக்குற பசங்களுக்கு கல்யாணம் பண்ண பொண்ணுங்களே கிடைக்காது இல்லையா?

பசங்களா... கேட்டுக்குங்க..!
எல்லோரும் பேசாம சாமியாராப் போயிடுங்க :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க