Thursday, June 5, 2008

வாலிப அப்பாக்களுக்கு மட்டும்...(குறிப்பா குழந்தை இருக்குறவங்க மட்டும்)

இந்த வீடியோ சும்மா..லுலுலாயிக்கு..!
பார்க்குறவங்க பார்க்கலாம்..
பார்த்துட்டு அதிலுள்ள ஃபிகருங்க மாதிரி அதிர்ச்சியடையலாம்.

அதுக்கு நான் பொறுப்பில்ல.
என்னோட மேட்டர் கீழ இருக்கு.
வீடியோவப் பார்த்துட்டு வந்தீங்களா? பார்க்காம வந்தீங்களா?
இருந்தாலும் வாங்க.. :)

மேட்டர் என்னன்னா...

என்னதான் உங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் (அது ஆகி மட்டும் என்ன குறைச்சல்,கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?ன்னு உங்க வீட்டுக்காரம்மிணி சொல்றது காதுல விழுது,இருந்தாலும் மேட்டருக்கு வாங்க..) ,

என்னதான் உங்களுக்கு நாலஞ்சு கொழந்தைங்க இருந்தாலும் ( பெரிய ஹிட்லர் னு நெனப்புன்னு புள்ளைங்க பெருமூச்சு விடுறது கேட்குது..இருந்தாலும் மேட்டருக்கு வாங்க..)

உங்க மனசுக்கு நீங்க இன்னும் குழந்தை தாங்க..!

நீங்க எவ்ளோ பெரிய ஆபிஸரா இருந்தாலும்,
வெட்டியா ஊர் சுத்திட்டு இருந்தாலும்,

நற்பணி மன்றங்கள்ல நாற்காலிய சூடாக்கிட்டு இருந்தாலும்,
நமீதா போஸ்டரையே நாலு மணி நேரம் பார்த்துட்டு திரிந்தாலும்

உங்க மனசுக்குள்ள நீங்க இன்னும் குழந்தையாத் தான் தவழ்ந்துட்டு இருக்கீங்க.. !

அப்படியிருக்கிற உங்களை உங்க வீட்டுக்காரம்மிணியும் உங்க குழந்தைங்களும் புரிஞ்சுக்கிட்டு உங்களைக் குழந்தையாவே...

இப்ப என்னடா சொல்ல வர்ரே ன்னு நீங்க பல்லைக் கடிச்சு மண்டை காயுறது புரியுது..சரி சரி..படங்களைப் பாருங்க..


/
/

/
/

/
/
43 comments:

lotto 649 said...

Such a nice blog. I hope you will create another post like this.

Raihaanah said...

those are amazing pictures! goes to show how diverse God's creations are.

இலவசக்கொத்தனார் said...

:))

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஹி ஹி ஹி :D

குமரன் (Kumaran) said...

வீடியோ பார்த்து சிரித்து முடியலை சாமி. ரொம்ப நல்லா இருந்தது. படங்களும் நல்லா இருக்கு.

கிரி said...

:-)))

கவிநயா said...

ஹாஹா :)) வீடியோ பாத்து சிரிச்சு சிரிச்சு... :))) எவ்வளவு பேருக்கு கருணை மனசு பாருங்க.. அதுவும் பொண்ணுங்களுக்கு :)) படங்களும் அருமை!

சூப்பராக் கலக்கிட்டீங்க ரிஷானு!!

மங்களூர் சிவா said...

வீடியோ ஜூப்பரு.
எல்லா பொம்மணாட்டிகளும் ஒரே மாதிரி ஜெர்க்கு குடுக்கறாளுவ!?!?!?

கோவி.கண்ணன் said...

கலக்கல் !

Divya said...

Funniest video:))


Pictures too funny & cute:)))


You hv made the viewers of this page laugh a while, by posting those amazing photos & video clipping, great job Rishan!

மீறான் அன்வர் said...

// "வாலிப அப்பாக்களுக்கு மட்டும்...(குறிப்பா குழந்தை இருக்குறவங்க மட்டும்)" //

மக்கா உனக்கான பதிவ நீயே போட்டிருக்கியே நீ நெசமாவே நல்லவந்தான்பா

வீடியோவுல நான் இருப்பேன் பார்த்து உன்ன பார்த்ததுல மக்களுக்கு எவ்வளோ அதிர்ச்சி பாத்தியா

மத்தபடி போட்டோக்கள்ள உன்னையும் உங்க பேரக்குழந்தைகளையும் பார்த்த திருப்தி :)

கலக்கு மக்கா மறுபடியும் சொல்றேன்
நீ நல்லவன் நீ நல்லவன் நீ நல்லவன்
(இது நீ போனவாட்டி பாக்குறப்போ ஒரு டீ அதிகமா வாங்கி குடுத்துட்டல்ல அதுக்குத்தான் யான் வர்ட்டே )

Gokulan said...

சூப்பரப்பு..

இந்த பிக்சர் எல்லாம் எங்கதாண்டா புடிக்குற?

ஆமா, உம்புள்ள யாருன்னு சொல்லவே இல்ல :)

Gokulan said...

//நற்பணி மன்றங்கள்ல நாற்காலிய சூடாக்கிட்டு இருந்தாலும்,
நமீதா போஸ்டரையே நாலு மணி நேரம் பார்த்துட்டு திரிந்தாலும்//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ச்சாகணும்..

எதுக்கு எப்பவுமே நமீதாவயே இழுக்குற..

ம்ம்.. ஹூம்...

Sridhar Narayanan said...

//வாலிப அப்பாக்களுக்கு மட்டும்...(குறிப்பா குழந்தை இருக்குறவங்க மட்டும்) //

குழந்தை இருந்தாத்தான் அப்பா-ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன் இதுவரைக்கும் :-))

நீங்க கேஆர்எஸ் சிஷ்யரா? அப்படியே அவர் பதிவை படிக்கிற மாதிரியே இருக்கு. வாழ்த்துகள் :-)

கானா பிரபா said...

ஆஹஹ்ஹ்ஹ்ஹ் ;-)))

ஏன் இந்தக் கொல வெறி

எம்.ரிஷான் ஷெரீப் said...

Sure..Thank you lotto 649 :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

Thanks for the comment Raihana :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க இலவசக்கொத்தனார்,

உங்க குழந்தை ரொம்ப வேலை வைக்குதுன்னு நினைக்கிறேன்.

//:))//

ரொம்பப் பெரிய பின்னூட்டம் போட்டிருக்கீங்க :)
நன்றிங்கோ :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க குமரன் :)

//வீடியோ பார்த்து சிரித்து முடியலை சாமி. ரொம்ப நல்லா இருந்தது. படங்களும் நல்லா இருக்கு.//

நன்றி நண்பரே !
நீங்களும் திரும்ப இப்படியானா எப்படியிருக்கும் ? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கிரி,

//:-)))//

அட,நீங்களுமா? :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கவிநயா :)

//ஹாஹா :)) வீடியோ பாத்து சிரிச்சு சிரிச்சு... :))) எவ்வளவு பேருக்கு கருணை மனசு பாருங்க.. அதுவும் பொண்ணுங்களுக்கு :)) படங்களும் அருமை!//

அதான் ஆச்சரியமா இருக்கு..
'அழுகுரல் கேக்குதே,ஆரு பெத்த புள்ளையோ'ன்னு அம்மிணிகள் தான் வந்து எட்டிப்பார்க்குதுங்க.. :(

//சூப்பராக் கலக்கிட்டீங்க ரிஷானு!!//

நன்றிங்க :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//வீடியோ ஜூப்பரு.
எல்லா பொம்மணாட்டிகளும் ஒரே மாதிரி ஜெர்க்கு குடுக்கறாளுவ!?!?!?//

சிவா அண்ணாத்த..
உங்களை மாதிரி ஒருத்தர் இப்படிப் பயமுருத்தினா ஜெர்க்குக் குடுக்காம முத்தமா குடுப்பாங்க? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கண்ணன் :)

//கலக்கல் !//

நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க திவ்யா :)

//Funniest video:))


Pictures too funny & cute:)))


You hv made the viewers of this page laugh a while, by posting those amazing photos & video clipping, great job Rishan!//

நன்றி சினேகிதி :)
வாய்ப்புத் தந்த கேயாரெஸ்ஸுக்கும் நன்றி சொல்லணும் இந்த நேரத்துல :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க மீறான் அன்வர் :)

//மத்தபடி போட்டோக்கள்ள உன்னையும் உங்க பேரக்குழந்தைகளையும் பார்த்த திருப்தி :)//

அண்ணா,கண்ணாடியைப் பார்த்து சொல்லிக்கிறீங்களா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு :P

//கலக்கு மக்கா மறுபடியும் சொல்றேன்
நீ நல்லவன் நீ நல்லவன் நீ நல்லவன்
(இது நீ போனவாட்டி பாக்குறப்போ ஒரு டீ அதிகமா வாங்கி குடுத்துட்டல்ல அதுக்குத்தான் யான் வர்ட்டே )//

ஒரு பாழாப்போன டீ க்காக இப்படி உள்வீட்டு ரகசியமெல்லாத்தையும் எல்லார் முன்னாடியும் போட்டு உடைச்சிட்டியே மக்கா..அடுத்தவாட்டி கடுங்காப்பி வேணுமா,வேணாமா? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கோகுலன் :)

//ஆமா, உம்புள்ள யாருன்னு சொல்லவே இல்ல :)//

அது தெரியாமத்தான் நானும் அல்லாடிட்டிருக்கேன் நண்பா :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ச்சாகணும்..

எதுக்கு எப்பவுமே நமீதாவயே இழுக்குற.. //

பேச்சுல சுத்தம் வேணும் கோகுலன்.இப்படியெல்லாம் பேசி ஒரு சின்னப் பையன் மனசைக் காயப்படுத்தக் கூடாது..ஆமா..
அதுவும் இது எவ்ளோ அப்பட்டமான பொய்?கேட்டதுமே மனசுக்கு எவ்ளோ கஷ்டமாயிடுச்சி தெரியுமா?


ஆமா..சின்னப்பையன் இழுத்தா, வர்ற மாதிரியா அவங்க இருக்காங்க? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க ஸ்ரீதர் நாராயணன் :)

//குழந்தை இருந்தாத்தான் அப்பா-ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன் இதுவரைக்கும் :-))//

அப்படியில்லைங்க :)
நமக்குக் குழந்தை இல்லாட்டியும் சித்தப்பா,பெரியப்பா ஆகலாமுங்க :)

//நீங்க கேஆர்எஸ் சிஷ்யரா? //

ஹி ஹி ஹி..
அவர் எனக்கு அங்கிளுங்க :)

//அப்படியே அவர் பதிவை படிக்கிற மாதிரியே இருக்கு.//

எனக்குத்தான் அவர் வந்து பதிவை படிக்கிறாரா இல்லையான்னே தெரியலைங்க :(

// வாழ்த்துகள் :-)//

நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கானாபிரபா :)

//ஆஹஹ்ஹ்ஹ்ஹ் ;-)))

ஏன் இந்தக் கொல வெறி //

கொலவெறியா? எம்புட்டு நல்லவன் நானு :(

இப்பத்தானே கல்யாணம் பண்ணியிருக்கீங்க..
இன்னும் கொஞ்சம் நாள் போகும்போது இப்படித்தான் பீல் பண்ண ஆரம்பிப்பீங்க :)

தமிழன்... said...

சூப்பரு...

படங்கள் முடியலைப்பா...:))

தமிழன்... said...

வாலிப அப்பாக்களா?? நீங்க பாட்டுக்கு இப்பிடிச்சொல்லிடடிங்க இனி எல்லோருமே தங்களை வாலிபர்கள்னு சொல்லிக்கப்போறாங்க ரிஷான்,
முக்கியமா அபி அப்பா...:)

தமிழன்... said...

ரிஷான்...said...

\\\வாங்க கானாபிரபா :)

//ஆஹஹ்ஹ்ஹ்ஹ் ;-)))

ஏன் இந்தக் கொல வெறி //

கொலவெறியா? எம்புட்டு நல்லவன் நானு :(

இப்பத்தானே கல்யாணம் பண்ணியிருக்கீங்க..
இன்னும் கொஞ்சம் நாள் போகும்போது இப்படித்தான் பீல் பண்ண ஆரம்பிப்பீங்க :)\\\

ஆஹா... இது எப்ப நடந்திச்சு சொல்லவேயில்ல அண்ணன்...:)

வடகரை வேலன் said...

விடியோ நல்லா இருந்திச்சு.

உஙளுக்கு மட்டும் எப்படி கிடைக்குதுன்னுதான் தெரியல.

Thooya said...

கிகிகிகிகிகி

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க தமிழன் :)

//வாலிப அப்பாக்களா?? நீங்க பாட்டுக்கு இப்பிடிச்சொல்லிடடிங்க இனி எல்லோருமே தங்களை வாலிபர்கள்னு சொல்லிக்கப்போறாங்க ரிஷான்,
முக்கியமா அபி அப்பா...:)//

அப்போ அவர் வாலிபர் இல்லையா? சும்மா பேருல மட்டும்தான் அப்பா இருக்குற மாதிரி சொன்னாரே :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆஹா... இது எப்ப நடந்திச்சு சொல்லவேயில்ல அண்ணன்...:)//

நெசமாலுமே விஷயம் தெரியாதா தமிழன்?

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க வடகரை வேலன் :)

//விடியோ நல்லா இருந்திச்சு.//

நன்றிங்க :)

//உஙளுக்கு மட்டும் எப்படி கிடைக்குதுன்னுதான் தெரியல.//

அது மட்டும் ரகசியம்..யாருக்கும் சொல்லமாட்டேனே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க தூயா :)

//கிகிகிகிகிகி//

ஓஹ்..வீடியோ பார்த்து நீங்களும் பயந்துட்டீங்களா சகோதரி? :D

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நீங்க கேஆர்எஸ் சிஷ்யரா? அப்படியே அவர் பதிவை படிக்கிற மாதிரியே இருக்கு. வாழ்த்துகள் :-)
//

ஐயா ஸ்ரீதரு!
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிட்டதா நெனப்பா?
அடுத்த தபா மாதவிப் பந்தலுக்கு வருவீக-ல்ல! அப்ப இருக்கு உமக்கு! :-)

ரிஷான், இதுக்கெல்லாம் நீயி கவலைப்படாதப்பா! நான் இருக்கேன் உனக்கு!

//நமக்குக் குழந்தை இல்லாட்டியும் சித்தப்பா,பெரியப்பா ஆகலாமுங்க :)
//

மக்களே, இப்ப புரியுதா, ரிஷான் வாயில் இருந்து உண்மை வந்துரிச்சிப் பாருங்க! அவருக்கு இப்ப குழந்தை இல்லாட்டியும் அவரு எனக்குச் சித்தப்பா ஆயிட்டாரு!
ஹா ஹா ஹா!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ரிஷான், இதுக்கெல்லாம் நீயி கவலைப்படாதப்பா! நான் இருக்கேன் உனக்கு! //

டேங்கிஸ் கேயாரெஸ் அங்கிள் :P//மக்களே, இப்ப புரியுதா, ரிஷான் வாயில் இருந்து உண்மை வந்துரிச்சிப் பாருங்க! அவருக்கு இப்ப குழந்தை இல்லாட்டியும் அவரு எனக்குச் சித்தப்பா ஆயிட்டாரு! //

அங்கிள்..இங்க சித்தப்பான்னு நான் சொன்னது உங்களை உதாரணமா வச்சுத்தான் அங்கிள்.. :P

nagoreismail said...

படமும் எழுத்து நடையும் தரமான நகைச்சுவை

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க இஸ்மாயில் சார் :)

// nagoreismail said...
படமும் எழுத்து நடையும் தரமான நகைச்சுவை //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க