Monday, June 30, 2008

கடைசி விருந்து போடுறன்...எல்லோரும் ஓடி வாருங்கோவன்..

என் இனிய வலைப்பதிவு சகாக்களே வாங்கோ...

இண்டைக்கு இந்த சிங்கத்தோட கடைசி தினம்.
தினசரி வந்துட்டுப் போறியள்.
கடைசி நாளண்டாவது ஒரு விருந்து கொடுக்காமல் போகேலுமே?
அப்படிப் போறதும் சரியில்லைத்தானென்ன?
அதனால உங்க எல்லோருக்கும் விருந்தொண்டு ஏற்பாடு செஞ்சிருக்கிறனான்.


விருந்தெண்டு கூப்பிட்டுப் போட்டு சும்மா வந்த உடனே பந்தியில உட்கார வைக்க ஏலுமே ?
அதனால தான் உங்கட அனைவரிண்ட வேண்டுகோளுக்குச் செவி சாய்ச்சு நான் வ.வா.சங்கத்துச் சிங்கமான கதை சொல்லப் போறேன்.
(ஆருடா அவன்? பேசவிடாமல் கூப்பாடு போடுறது? )

அதை நினைக்கேக்க இண்டைக்கும் எனக்கு மண்டை காயுது.இருங்கோ..ஒரு சோடா குடிச்சுக் கொள்றன்.

நான் சும்மா எண்ட பாட்டுக்கு ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கேக்க இந்த கேயாரெஸ் என்று ஒரு வலைப்பதிவர் இருக்காரில்லையோ?
ஒரு நட்ட நடுராத்திரியில, நான் சுகமா நித்திரையில இருக்கேக்க கோல் பண்ணி
" தம்பி உங்கட காதல் கதையைச் சொல்லுங்கோ ..எனக்கு இங்க பொழுது போகேல்ல " என்றார்.
அவருக்குப் பொழுது போகாததுக்கெல்லாம் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கேலுமே
?

ஆனாலும் வயசுல பெரியவர் ஒருத்தரு,ஆயிரத்தெட்டுக் காதலைப் பார்த்தவரு அமெரிக்காவுலருந்து இப்படி அப்பாவிச் சிறுவன்கிட்டக் கேட்கும் போது
'என்ன அங்கிள் , உங்களுக்கென்ன விசரே ? என்னை மாதிரி அப்பாவிச் சிறுவன்கிட்டப் போய் காதல் கதையெல்லாம் கேக்குறியள் ? நான் ஏதாவது சொல்லப் போய் அதைப் பதிவாப் போட்டு பேர் வாங்குற எண்ணமே ? இப்படித்தானே வழமையாப் பதிவு போட்டு மத்தவங்களுக்கு ஆப்பு வைக்கிறியள் ?'
எண்டெல்லாம் கடுமையாகப் பேச ஏலுமே?.
அதனால ஏதேதோ தூக்கத்துல உளறி வச்சன்.

இதை மனசுல வச்சிக் கொண்டு போன மாசம் அவர் திரும்ப என்கிட்ட
"வார மாசத்து சிங்கம் நீதான் பையா..வந்து தினமும் ஒரு பதிவு எழுது.இல்லையெண்டால் அண்டைக்கு நீ சொன்னதெல்லாம் ரெக்கோர்ட் பண்ணி வச்சிருக்குறன்.அதை ஊரைக் கூட்டிப் போட்டுக் காட்டி இருக்குற மானத்த கத்தார்லிருந்தே கப்பலேத்திடுவேன் " னு கடுமையாக மிரட்டிப் போட்டதால உடனே பதவியேற்றுக் கொண்டு அவசரம் அவசரமா எழுத வேண்டியதாப் போச்சு.
உதுதான் நான் சங்கத்து சிங்கமான கதை.

அதனால சிங்கமாக்கி எழுத வாய்ப்புத் தந்த கேயாரெஸ் அங்கிளுக்கு நன்றி தெரிவிச்சுக் கொள்றதோட,

நானேதோ சும்மா மொக்கையாப் போட்ட பதிவெல்லாத்துக்கும் கூட தங்கட கூட்டம் பரிவாரத்தோட வந்து இதுவரைக்கும் 1078 பின்னூட்டம் போட்ட
கோகுலன்,ஈரோடு கார்த்திக்,மங்களூர் சிவா,மதுரையம்பதி,கவிநயா,கேயாரெஸ்,தமிழன்,இளா,ஜி.இராகவன்,சீனா ஐயா,கானா பிரபா,ஆயில்யன்,தமிழ்ப் பிரியன்,நட்சத்திரா,இலவசக் கொத்தனார்,தூயா,வெட்டிப் பயல்,ச்சின்னப் பையன்,மீறான் அன்வர், ஸ்யாம்,ராமலக்ஷ்மி,கேயார்பி,குமரன்,இரா.வசந்தகுமார்,தமிழன்,சத்யா,துளசி கோபால்,சென்22,சஞ்சய்,டீ.வி.ராதாகிருஷ்ணன்,லொட்டோ 649,ரைஹானா,கிரி.கோவி.கண்ணன்,திவ்யா,ஸ்ரீதர் நாராயணன்,வடகரை வேலன்,நாகூர் இஸ்மாயில்,சின்ன அம்மிணி,கானகம் ஜெயக்குமார்,ஷைலஜா,டெல்பின்,அறுவை பாஸ்கர்,பஹீமாஜஹான்,சக்தி,கயல்விழி முத்துலெட்சுமி,அஸ்பர்,மாணவன்,அம்பி,புரட்சித் தமிழன்,ஜாக்கி சேகர்,பிரேம் ஜி,இராம்,தமிழ் மாங்கனி,தமிழ்ப்பறவை,ஜே.ஜே.ரீகன்,நிஜமா நல்லவன்,புதுவை சிவா,வயசுப் பொண்ணு,வால்பையன்,கார்த்திக்,நாதாஸ்,மஹாராஜா,மல்லிகை,புதுகை எம்.எம்.அப்துல்லாஹ்,கோவை விஜய்,நமீதா,ராப்,விஜயகோபால் ஸ்வாமி,லதானந்த்,முரளி கண்ணன்,புதுகைத் தென்றல்,வெயிலான்,சென்ஷி,போக்கிரி பையன்,நாமக்கல் சிபி,சீவியார்,ராஜ நடராஜன்,சீமாச்சு,சித்ரா மற்றும் அனானி அண்ணாக்கள்,அனானி அக்காக்கள்
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்றன்.

அவ்வளவு பேரும் இனிப் பந்தியில உட்காருங்கோ.
இது எல்லாம் இலங்கைச் சாப்பாடுகள் தான்.
'எங்கேயடா சோறு ?' எண்டு தேடாதேயுங்கோ.
அதை இன்னும் கன காலம் கழிச்சு இந்தச் சிறுவன் நல்லா வளர்ந்ததுக்குப் பிறகு கல்யாணச் சாப்பாடாப் போடுறன்..என்ன சரியே? இனிச் சாப்பிடுங்கோ..

சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே..?

மீண்டும் வாங்கோ..உங்களிட்ட இன்னொண்ணும் சொல்ல வேண்டிக் கிடக்கு...
உங்களில நான் பெயர் சொல்றவை மேடைக்கு வாங்கோ பார்ப்பம்.


தமிழ்ப் பிரியன்,த்ரிஷா,ஜி.இராகவன்,சுவலக்ஷ்மி,மங்களூர் சிவா,நமீதா,தமிழ்ப்பறவை,சதா,மீறான் அன்வர்,சுஷ்மிதா சென்,கேயாரெஸ்,ஐஸ்வர்யா ராய்,லதானந்த்,மீரா ஜாஸ்மின்,சிம்பு,கோபிகா,புரட்சித் தமிழன்,நயண்தாரா,ஜாக்கி சேகர்,சரண்யா,அம்பி,அசின்,வால் பையன்,கோபிகா,இளைய கவி,விஜயலக்ஷ்மி,கானாபிரபா,பாவனா,சஞ்சய்,பூஜா,சீவியார்,லைலா,கோகுலன்,இலியானா

இப்போது மேடையில வந்து நின்றிருக்கும் இவங்க எல்லோரும் தான் என்ரை பதிவுகள்ல சமயத்துல வந்து நடிச்சுக் கொடுத்தவங்கள்.இவையளுக்கும் எனது நன்றிகள்.எல்லோரும் இவையளுக்குக் கும்மியடிங்கோ இனி..
என்ன குழம்பிட்டியளே?
கை தட்டுங்கோ என்று சொன்னனான்.

என்னை இப்போ தமன்னா ஓரமாக் கூப்பிடுறா..இருங்கோ ..என்னெண்டு கேட்டுப் போட்டு வாறன்.அது வரையில நீங்க இந்த ஐஸ்கிறீம்களைச் சாப்பிடுங்கோ.


ஒண்டுமில்ல..அவவுக்கு என்னோட மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டவ..
என்ரை சின்ன வயசுக் காதல் கதையைக் கேட்டவ.அவ கேட்டாப்பிறகு மறுக்க ஏலுமே?சரி..இங்கேயே போட்டுக் காட்டுறனெண்டு சொன்னனான்.நீங்களும் பாருங்கோ...!


விருந்துக்கு வந்த அவ்வளவு பேருக்கும் என்னுடைய நன்றிகள்...!

இனிச் சிங்கம் போகப் போகுது.
அழாதேயுங்கோ..தயவுசெய்து ஒருத்தரும் அழாதேயுங்கோ.
சிங்கம் வேறு எங்கேயும் போகாது.

இங்கெங்கோ தான் உலாத்திக் கொண்டிருக்கும்.
உங்களையெல்லாம் பார்த்துக்கொண்டுதானிருக்கும்.
மீண்டும் சந்திப்பம்..அதுவரையில்..

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

70 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

:P

இராம்/Raam said...

அழகு தமன்னா கூட நிக்கிற அந்த பயப்புள்ள யாரு???? :)

கோவி.கண்ணன் said...

இலங்கை சாப்பாடு கண்ணுக்கு குளிர்சியாக இருக்கு. பசியை கிளப்பிட்டு.

கவிநயா said...

அப்பாவி(?) சிங்கம் வந்து ஒரு கலக்கு கலக்கிட்டியள் :) சூப்பர் விருந்து + முத்தாய்ப்பு வீடியோ. வாழ்த்துக்கள் ரிச்சு!

மங்களூர் சிவா said...

/
சிங்கம் போயிட்டு வாரன்
/

அப்பாடா!!


கடைசி படம் ஜூப்பர்!!

மங்களூர் சிவா said...

/
ஆருடா அவன்? பேசவிடாமல் கூப்பாடு போடுறது?
/

ஏன்பா எல்லாரும் குரூப்பா சத்தம் போடறீங்க !? என்ன ரிசான் பேசக்கூடாதா

ஓகே அப்ப ரைட்டு

மங்களூர் சிவா said...

/
கேயாரெஸ் என்று ஒரு வலைப்பதிவர் இருக்காரில்லையோ?
ஒரு நட்ட நடுராத்திரியில, நான் சுகமா நித்திரையில இருக்கேக்க கோல் பண்ணி
" தம்பி உங்கட காதல் கதையைச் சொல்லுங்கோ ..எனக்கு இங்க பொழுது போகேல்ல " என்றார்.
/

அந்த ட்ராஜடிய கேட்டதுக்கப்புறம் அவர் தூங்கினாரா????

மங்களூர் சிவா said...

/
நீ சொன்னதெல்லாம் ரெக்கோர்ட் பண்ணி வச்சிருக்குறன்.அதை ஊரைக் கூட்டிப் போட்டுக் காட்டி இருக்குற மானத்த கத்தார்லிருந்தே கப்பலேத்திடுவேன் " னு கடுமையாக மிரட்டிப் போட்டதால உடனே பதவியேற்றுக் கொண்டு அவசரம் அவசரமா எழுத வேண்டியதாப் போச்சு.
/

@கேஆரெஸ்
அந்த ரெக்கார்ட் எல்லாருக்கும் ஒரு காப்பி பார்சல்.........

:))))))))))))))

மங்களூர் சிவா said...

/
இன்னும் கன காலம் கழிச்சு இந்தச் சிறுவன் நல்லா வளர்ந்ததுக்குப் பிறகு கல்யாணச் சாப்பாடாப் போடுறன்..என்ன சரியே? இனிச் சாப்பிடுங்கோ..
/

எத்தினி தடவைய்யா கல்யாணம் கட்டுவ!?!?

அதுக்கு இப்ப இருக்க உன் wife ஒத்துப்பாளா??????

:)))))))))

மங்களூர் சிவா said...

/

என்னை இப்போ தமன்னா ஓரமாக் கூப்பிடுறா..இருங்கோ ..என்னெண்டு கேட்டுப் போட்டு வாறன்.
/

அதுக்கு எதுக்கு தமன்னா கால்ல இருக்கறத கழட்டி கையில வெச்சிகிட்டு கூப்பிடறாங்க!?!?!?

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
அழாதேயுங்கோ..தயவுசெய்து ஒருத்தரும் அழாதேயுங்கோ.
சிங்கம் வேறு எங்கேயும் போகாது.
/

இங்கயே எங்கயாவதுதான் புல் மேஞ்சிகிட்டிருக்கும்!!!!

:)))))))

மங்களூர் சிவா said...

/
மீண்டும் சந்திப்பம்..அதுவரையில்..

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
/

ரிஷான் நல்லா பொழுதுபோக்கா பல பதிவுகள் தந்தீங்க! வாழ்த்துக்கள்!!

அதுக்காக சின்ன பையன் அது இதுன்னு எல்லாம் ஊரை ஏமாத்திகிட்டு திரியாதீங்க

கொலகாரன் ஆகீடுவோம்!!

:)))

கார்த்திக் said...

விருந்தும் வீடியோவும் அருமை.
பதிவுக்கு பொருத்தமா இருந்தது ரிஷான்.
நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் சிங்கம்.
வாழ்த்துக்கள்.

கிரி said...

சூப்பர் விருந்துங்கோ !

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அழகு தமன்னா கூட நிக்கிற அந்த பயப்புள்ள யாரு???? :)//

நம்ம ரிசான் பய புள்ள தான்!

ராமு! இப்ப ஒனக்கு ரிசானைக் கொன்னு போடணும் போல் இருக்குமே! :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


பத்தொன்பது பளபளக்கும் பதிவுகளைத் தந்து இளமை விருந்து படைத்திட்ட ரிசான் அங்கிளுக்கு,

வ.வா.சங்கம் சார்பாகவும், அத்தனை வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாகவும், நன்றி சொல்லிக்கறேன்!

தமிழ் பிரியன் said...

இந்த மாத விருந்து சூப்பரோ சூப்பர்... ;))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சிங்கமான கதை சொல்றீயள்!
காதலன் ஆன கதை சொல்ல மாட்டாம வெக்கம் நுங்களைத் தடுக்கிறதின் ரகசியத்தைச் சொல்ல மாட்டியளோ?

விருந்தெண்டு கூப்பிட்டுச் சும்மா பந்தியில் பனிக்கூழ் (ஐஸ் கீர்ம்) மட்டும் வைக்கறது ஏலுமோ அண்ணை?

சின்னப் பய புள்ளைக வீடியோவை எல்லாம் பதிச்சி மனசைக் கெடுக்கறீயளே! ரிசான் அசைபடங்கள் ஒன்றுமில்லையோ நுங்களிடம்?

வழமையா நுங்களைக் கோல் பண்ணி அன்பா விசாரிக்கறது எல்லாம் இனி ஏலாது அண்ணை! கொமென்ட்டுகளின் வழியாகவே ஆட்டோ நுங்க இல்லத்தக்கு வரும் என்பதைத் தக்க மரியாதைகளுடன் சொல்லிக் கொண்டு அமைகிறேன்!:-))

விரைவில் வெள்ளித் திரைகளில் எதிர்பாருங்கள்!
ரிசானும் ரிங்கினான்! அவளும் ரிங்கினாள்!

தமிழ் பிரியன் said...

தமிழ்ப் பிரியன்,த்ரிஷா, ஜி.இராகவன், சுவலக்ஷ்மி, மங்களூர் சிவா,நமீதா,தமிழ்ப்பறவை,சதா,மீறான் அன்வர்,சுஷ்மிதா சென், கேயாரெஸ்,ஐஸ்வர்யா ராய், லதானந்த்,மீரா ஜாஸ்மின்,சிம்பு, கோபிகா,புரட்சித் தமிழன், நயண்தாரா,ஜாக்கி சேகர்,சரண்யா, அம்பி,அசின்,வால் பையன், கோபிகா,இளைய கவி,விஜயலக்ஷ்மி, கானாபிரபா,பாவனா, சஞ்சய்,பூஜா, சீவியார்,லைலா, கோகுலன்,இலியானா ////

சோடியா சோடியா கூப்பிட்டு விருந்தளித்த ரிசான் அங்கிளுக்கு மிக்க நன்றி... :)))

கார்த்திக் said...

//விரைவில் வெள்ளித் திரைகளில் எதிர்பாருங்கள்!
ரிசானும் ரிங்கினான்! அவளும் ரிங்கினாள்!//

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அந்த ட்ராஜடிய கேட்டதுக்கப்புறம் அவர் தூங்கினாரா????//

சிவா அண்ணை
அந்தச் சோகக் கதையை ஏன் கேக்குறியள்?

தூக்கம் போச்சுடியம்மா போன்ற பொன்னான கானங்களைக் கேட்ட பின்பு கூட தூக்கம் வர மாட்டாமல், ரிசான் டிராஜெடியே வந்து பயமுறுத்துகிறது!

ரிசான் சொன்ன கதைகள் கேட்ட பிற்பாடு, தெனாலி போலவே எனக்கும்....
பதிவு படிக்க பயம்
கும்மி அடிக்க பயம்
கொமென்ட் போட பயம்
அடிச்சி ஆட பயம்

வழமை பயம் - பின்னூட்டக்
கயமை பயம் - கல்லூரி
வளமை பயம் - ரிசானின்
இளமை பயம்!
பயம்! பயம்! பயம்!!
எங்கிட பார்த்தாலும் பயத்தைப் பார்த்து பயமா இருக்கு அண்ணை!
:-(

cheena (சீனா) said...

அன்பின் ரிசான்
அருமையான பதிவுகள் இட்டு ஒரு மாத காலம் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி

விருந்து - சைவம் அசைவம் - அனைத்துமே அருமை. கூடவே பனிக்கூழ் ( ??) - ஓஓஒ - சாபீடு மகிழ்ந்தோம்

நல்வாழ்த்துகள்

தமிழ் பிரியன் said...

/// kannabiran, RAVI SHANKAR (KRS) said..

விரைவில் வெள்ளித் திரைகளில் எதிர்பாருங்கள்!
ரிசானும் ரிங்கினான்! அவளும் ரிங்கினாள்!///
KRS அங்கிள்!
அடுத்த ரவுண்டில் ரிசான் அண்ணனின் அந்த கதையை சொல்றீயளா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

விருந்தில் எனக்குப் பிடிச்சது இடியாப்பம், குழாப்புட்டு!

ரிசானு,
சில ஐட்டங்கள், "அதுவோ?","இதுவோ?" மாதிரி இருக்கு!
பேரைச் சொல்லக்கூடாதோ?

SanJai said...

//பாவனா,சஞ்சய்,பூஜா,//

எலே ரிஷானு.. உம்ம நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம இருக்குலே.. எனக்கு வலதும் இடதும் 2 சூப்பர் ஃபிகருங்கள நிபபாட்டி எனக்கு பிடிச்ச மாதிரியே மேடைல இடம் குடுத்திருக்கலே.. ரொம்ப நன்றிலே.. :P

---

//மங்களூர் சிவா said...

/
சிங்கம் போயிட்டு வாரன்
/

அப்பாடா!!//

ரிப்பீட்டேய்....

மங்களூர் சிவா said...

/ kannabiran, RAVI SHANKAR (KRS) said..

விரைவில் வெள்ளித் திரைகளில் எதிர்பாருங்கள்!
ரிசானும் ரிங்கினான்! அவளும் ரிங்கினாள்!
/

சீக்கிரம் சீக்கிரம்
ஆட்டோ வெயிட்டிங்!!

:))

குமரன் (Kumaran) said...

ஒரு மாதம் ரொம்ப நல்லா போச்சு ரிஷான். ரொம்ப நல்லா இருந்தது.

இன்னைக்குத் திங்கட்கிழமையா போச்சு. அசைவம் சாப்புட முடியலை. இராகவன் கிட்ட கேட்டா இன்னைக்கு திங்க கிழமை தானே, இன்னைக்குத் திங்காம எப்ப திங்கப் போறீங்கங்கறார்.

பால்பனி வகைகளும் அருமையப்பா. நன்றி.

தமிழ்ப்பறவை said...

மாஜி சிங்கம் ரிஷான் அவர்களே....
அருமையான விருந்து படைத்தீர்கள்.. நன்றி...
//வ.வா.சங்கம் சார்பாகவும், அத்தனை வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாகவும், நன்றி சொல்லிக்கறேன்!
//
ஏங்க இவர் பதிவைப் படிச்சுட்டு யாராவது வருத்தப்படாம இருந்தாங்களா என்ன? (ச்சும்மா லொலலாயி...)
உங்கட கும்மிக்கு உதவியதிலும் மகிழ்ச்சி...
கடைசி வீடியோ ச்சோ க்யூட்....
//நமீதா,தமிழ்ப்பறவை,சதா//
எனக்கு இடது புறம் பிரம்மாஆஆண்ட ஃபிகரையும்,வலது புறம் சதா போன்ற சாதா ஃபிகரையும் போட்டதில் கண்டனம் தெரிவிக்கிறேன்...
சரி விடுங்க நான் சஞ்செய்கிட்ட எக்சேஞ்ச் ஆஃபர்ல 'பாவனா'வை கரெக்ட் பண்ணிக்கிறேன்.....
//சுஷ்மிதா சென், கேயாரெஸ்,ஐஸ்வர்யா ராய்//
கேயாரெஸ் அண்ணாச்சிக்கு அவர் வயசுக்கேத்த ஆன்டிகளை செலெக்ட் செய்து (அவர்களே மறுத்தாலும்) ,அவர் அருகருகில் நிற்க வைத்ததற்கு நன்றி....

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற கிழவன்
நான். ஓசி விருந்து கொடுக்கிறியள் எண்டு கேள்விப்பட்டு உங்கிட வலைக்குள்ள பாய்ஞ்சிட்டன். சொறி குகைக்குள்ள பாய்ஞ்சிட்டன். சொறு இல்லா விருந்து தான் சும்மா சொல்லப்படாது ஜமாச்ச்ட்டீங்க போங்க.
தமிழ்ச்சித்தன்

King... said...

may i come in...?

King... said...

ரிஷான் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்களா என்று நினைத்து ஒவ்வொரு பதிவும் படித்திருக்கிறேன் இந்த மாதம் முழுவதும்...

கலக்கி இருக்கிறியள்...?

கானா பிரபா said...

வந்துட்டோம்ல ;-)

உண்மையிலேயே கலக்கல் விருந்து ரிஷான், பல பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாட்டியும் ஆஜராகியிருக்கிறேன், கலக்கிட்டீங்கப்பா

வெட்டிப்பயல் said...

இந்த மாசம் முழுக்க சங்கத்தை ஆக்டீவா வெச்சிருந்தீங்க ரிஷான்... மிக்க நன்றி + வாழ்த்துகள்!!!

கப்பி பய said...

அடிச்சு ஆடி தூள் கிளப்பிட்டீங்க!! நன்றி நன்றி!! :))

தமிழன்... said...

அடடே அதுக்குள்ள மாதம் முடிஞ்சிடுச்சா போனதே தெரியலை...
கலகலப்பான பதிவுகள் ரிஷான் கலக்கல்...

நன்றிகள்...:)

Syam said...

//பத்தொன்பது பளபளக்கும் பதிவுகளைத் தந்து இளமை விருந்து படைத்திட்ட ரிசான் அங்கிளுக்கு,

வ.வா.சங்கம் சார்பாகவும், அத்தனை வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாகவும், நன்றி சொல்லிக்கறேன்!//

ரீப்பீட்டேய்ய்ய்... :-)

(இப்படி கமெண்ட் போடுரது எவ்வளவு ஈசி)

ambi said...

ஹிஹி, ரெம்ப நன்றி ரிஷான் அண்ணா. :p


ஒரு மாதம் நன்றாக சிரித்தோம். சிங்கத்துக்கு விரைவில் சிடுக்கெடுக்க வாழ்த்துகிறோம். :))

மதுரையம்பதி said...

//ஒரு மாதம் ரொம்ப நல்லா போச்சு ரிஷான். ரொம்ப நல்லா இருந்தது//

ரீப்பீட்டே!!!


:-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// இராம்/Raam said...
அழகு தமன்னா கூட நிக்கிற அந்த பயப்புள்ள யாரு???? :) //

அது ஆரெண்டால்...
இப்படி திடீரெண்டு கேட்டால்...
அதுவும் நேருக்கு நேராக் கேட்டால் நானெப்படிச் சொல்றது..?
அடப்போங்க ராம்..எனக்கு வெட்கமாக் கிடக்கு:P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//கோவி.கண்ணன் said...
இலங்கை சாப்பாடு கண்ணுக்கு குளிர்சியாக இருக்கு. பசியை கிளப்பிட்டு.//

ஒரு நாளைக்கு நேர்ல வாங்கோவன்..இதையெல்லாம் நேரடியாவே சாப்பிடலாமல்லோ...
பயப்படவேண்டாம்..நான் சமைக்கமாட்டன் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

// கவிநயா said...
அப்பாவி(?) சிங்கம் வந்து ஒரு கலக்கு கலக்கிட்டியள் :) சூப்பர் விருந்து + முத்தாய்ப்பு வீடியோ. வாழ்த்துக்கள் ரிச்சு! //

வாங்கோ கவிநயா :)
ஒரு மாசமா எல்லாப் பதிவுகளையும் பார்த்து, கருத்துச் சொல்லி சிங்கத்தை நல்லா எழுத ஊக்கப்படுத்தினியள்.
பலத்த நன்றிங்க :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மங்களூர் சிவா said...
/
சிங்கம் போயிட்டு வாரன்
/

அப்பாடா!!


கடைசி படம் ஜூப்பர்!! //

கடைசிப் படம் மட்டுமே சூப்பர் ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஏன்பா எல்லாரும் குரூப்பா சத்தம் போடறீங்க !? என்ன ரிசான் பேசக்கூடாதா

ஓகே அப்ப ரைட்டு //

எண்ட வாயை அடைக்கிறதுல இந்த சிவாவுக்கு மட்டுமேன் இவ்வளவு ஆர்வம் ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மங்களூர் சிவா said...
/
கேயாரெஸ் என்று ஒரு வலைப்பதிவர் இருக்காரில்லையோ?
ஒரு நட்ட நடுராத்திரியில, நான் சுகமா நித்திரையில இருக்கேக்க கோல் பண்ணி
" தம்பி உங்கட காதல் கதையைச் சொல்லுங்கோ ..எனக்கு இங்க பொழுது போகேல்ல " என்றார்.
/

அந்த ட்ராஜடிய கேட்டதுக்கப்புறம் அவர் தூங்கினாரா???? //

அவர் நல்லா நித்திரை கொண்டிருப்பார். தூக்கம் வர்றதுக்காக தினமும் மாத்திரை சாப்பிடுறாரல்லோ ? பாவம்..மனுஷனுக்கு வயசாகிட்டுதில்லே.. :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மங்களூர் சிவா said...
/
இன்னும் கன காலம் கழிச்சு இந்தச் சிறுவன் நல்லா வளர்ந்ததுக்குப் பிறகு கல்யாணச் சாப்பாடாப் போடுறன்..என்ன சரியே? இனிச் சாப்பிடுங்கோ..
/

எத்தினி தடவைய்யா கல்யாணம் கட்டுவ!?!?

அதுக்கு இப்ப இருக்க உன் wife ஒத்துப்பாளா??????

:))))))))) //

இப்படியெல்லாமே ஒரு சின்னப் பெடியன்கிட்டக் கேக்குறது..?
பாருங்கோ..பெடியன் கண்ணுல கனக்க நீர் வருது :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

// மங்களூர் சிவா said...
/

என்னை இப்போ தமன்னா ஓரமாக் கூப்பிடுறா..இருங்கோ ..என்னெண்டு கேட்டுப் போட்டு வாறன்.
/

அதுக்கு எதுக்கு தமன்னா கால்ல இருக்கறத கழட்டி கையில வெச்சிகிட்டு கூப்பிடறாங்க!?!?!? //

விருந்துக்கு வர்றவையள் எல்லோரும் கால்ல இருக்கிறதைக் கழட்டிப் போட்டுட்டல்லே வந்திச்சினம்.
அதிலையும் நல்லாக் கண்ணைத் தொறந்து பாருங்கோ..
அந்தப் பிள்ளை நல்லாச் சிரிச்சிக் கொண்டல்லே நிக்கிது ? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

// மங்களூர் சிவா said...
/
மீண்டும் சந்திப்பம்..அதுவரையில்..

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
/

ரிஷான் நல்லா பொழுதுபோக்கா பல பதிவுகள் தந்தீங்க! வாழ்த்துக்கள்!! //

என்ரை எல்லாப் பதிவுக்கும் வந்து (கொலைவெறியோட ) கருத்துக்கள் சொன்னனீங்கள். பலத்த நன்றிகள். :)

//அதுக்காக சின்ன பையன் அது இதுன்னு எல்லாம் ஊரை ஏமாத்திகிட்டு திரியாதீங்க

கொலகாரன் ஆகீடுவோம்!! //

பேச்சு பேச்சா இருக்கணுமல்லோ ?
இப்படியே சின்னப்பையனைப் பயமுறுத்துறது ?

:)))

எம்.ரிஷான் ஷெரீப் said...

//கார்த்திக் said...
விருந்தும் வீடியோவும் அருமை.
பதிவுக்கு பொருத்தமா இருந்தது ரிஷான்.
நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் சிங்கம்.
வாழ்த்துக்கள். //

வாங்கோ கார்த்திக் அண்ணை..
விருந்தில நல்லாச் சாப்பிட்டியளே..
வாழ்த்துக்களுக்கு நன்றியண்ணை.. :)
மீண்டும் சந்திப்பம்

எம்.ரிஷான் ஷெரீப் said...

// கிரி said...
சூப்பர் விருந்துங்கோ ! //

வாங்கோ கிரியண்ணை..
நல்லாச் சாப்பிட்டியளல்லோ ?
சுவையா இருந்திச்சுதே ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அழகு தமன்னா கூட நிக்கிற அந்த பயப்புள்ள யாரு???? :)//

நம்ம ரிசான் பய புள்ள தான்!

ராமு! இப்ப ஒனக்கு ரிசானைக் கொன்னு போடணும் போல் இருக்குமே! :-)))) //

அவருக்கு அந்த எண்ணம் வராட்டிலும் நீங்கள் அரிவாளைத் தீட்டிக் கையில கொடுப்பியள் போலிருக்குதே அங்கிள் ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பத்தொன்பது பளபளக்கும் பதிவுகளைத் தந்து இளமை விருந்து படைத்திட்ட ரிசான் அங்கிளுக்கு,

வ.வா.சங்கம் சார்பாகவும், அத்தனை வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாகவும், நன்றி சொல்லிக்கறேன்! //

வாங்கோ அங்கிள்..!
நன்றியை நானல்லோ சொல்லவேணும் :)
இதுல 19 ன்னு என்னோட வயசை எதுக்குக் குறிப்பிட்டியள் அங்கிள் ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

// தமிழ் பிரியன் said...
இந்த மாத விருந்து சூப்பரோ சூப்பர்... ;)))) //

வாங்கோ தமிழ்ப்பிரியன்.
கனக்கச் சாப்பிட்டியளே ? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சிங்கமான கதை சொல்றீயள்!
காதலன் ஆன கதை சொல்ல மாட்டாம வெக்கம் நுங்களைத் தடுக்கிறதின் ரகசியத்தைச் சொல்ல மாட்டியளோ?//

காதலன் ஆன கதையோ ?
ஒரு முறை அதைச் சொல்லிப் போட்டுச் சின்னவன் சிங்கமானது போதாதே ?

//விருந்தெண்டு கூப்பிட்டுச் சும்மா பந்தியில் பனிக்கூழ் (ஐஸ் கீர்ம்) மட்டும் வைக்கறது ஏலுமோ அண்ணை?//

அதுதான் சாப்பாடெல்லாம் வச்சிருக்கிறனான்..காணேல்லியே ? மிகவும் வயசாகிட்டுது அங்கிள் உங்களுக்கு.. :P

//வழமையா நுங்களைக் கோல் பண்ணி அன்பா விசாரிக்கறது எல்லாம் இனி ஏலாது அண்ணை! கொமென்ட்டுகளின் வழியாகவே ஆட்டோ நுங்க இல்லத்தக்கு வரும் என்பதைத் தக்க மரியாதைகளுடன் சொல்லிக் கொண்டு அமைகிறேன்!:-))//

எப்படியோ..கொலைவெறியோட அலையுறியள் எண்டது மட்டும் நல்ல தெளிவாத் தெரியுது..ஆரிட்டச் சொல்ல ?

//விரைவில் வெள்ளித் திரைகளில் எதிர்பாருங்கள்!
ரிசானும் ரிங்கினான்! அவளும் ரிங்கினாள்!//

ஆஹா..இது என்ன புதுப் படமே..? என்ரை கதையை எடுக்கேலாது...இப்பவே சொல்லிப் போட்டன் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//சோடியா சோடியா கூப்பிட்டு விருந்தளித்த ரிசான் அங்கிளுக்கு மிக்க நன்றி... :)))//

எல்லாம் அழகுப் பெண்களா மட்டும் நிக்கவச்சா அவையளுக்கு திருஷ்டி பட்டுடுமல்லோ..
அதுதான் இடைக்கிடையே திருஷ்டிக்காக நம்மட பசங்களையும் நிக்கவச்சது..ஆரிட்டையும் சொல்லிப்போடாதேயுங்கோ தமிழ்ப்பிரியன்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

//cheena (சீனா) said...
அன்பின் ரிசான்
அருமையான பதிவுகள் இட்டு ஒரு மாத காலம் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி

விருந்து - சைவம் அசைவம் - அனைத்துமே அருமை. கூடவே பனிக்கூழ் ( ??) - ஓஓஒ - சாபீடு மகிழ்ந்தோம்

நல்வாழ்த்துகள் //

வாங்கோ சீனா ஐயா..
பெரியவர் வந்திருக்கிறியள்..எனக்குக் கனக்க மகிழ்ச்சி.
நன்றி ஐயா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
விருந்தில் எனக்குப் பிடிச்சது இடியாப்பம், குழாப்புட்டு!

ரிசானு,
சில ஐட்டங்கள், "அதுவோ?","இதுவோ?" மாதிரி இருக்கு!
பேரைச் சொல்லக்கூடாதோ? //

பெயரை மட்டும் கேட்டு என்ன செய்யப்போறியள் அங்கிள்..?

நேரிலை வாங்கோ..எல்லாம் எண்ட கையாலேயே செஞ்சி போடுறன் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//SanJai said...
//பாவனா,சஞ்சய்,பூஜா,//

எலே ரிஷானு.. உம்ம நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம இருக்குலே.. எனக்கு வலதும் இடதும் 2 சூப்பர் ஃபிகருங்கள நிபபாட்டி எனக்கு பிடிச்ச மாதிரியே மேடைல இடம் குடுத்திருக்கலே.. ரொம்ப நன்றிலே.. :P //

அவையள் ரெண்டு பேருக்கும் எப்படி திருஷ்டி கழிக்குறதெண்டு எனக்கு வேற வழி தெரியேல்ல அங்கிள்.. :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

// குமரன் (Kumaran) said...
ஒரு மாதம் ரொம்ப நல்லா போச்சு ரிஷான். ரொம்ப நல்லா இருந்தது.

இன்னைக்குத் திங்கட்கிழமையா போச்சு. அசைவம் சாப்புட முடியலை. இராகவன் கிட்ட கேட்டா இன்னைக்கு திங்க கிழமை தானே, இன்னைக்குத் திங்காம எப்ப திங்கப் போறீங்கங்கறார்.

பால்பனி வகைகளும் அருமையப்பா. நன்றி.//

வாங்கோ குமரன் அண்ணை...

நல்லாச் சாப்பிட்டியள் போல இருக்கு..
வருத்தப்படாதேயுங்கோ..இன்னொரு நாள் உங்களை நேரில கூப்பிட்டு அசைவமாச் சாப்பிட வைக்கிறன்.
விருந்துக்கு வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்றியண்ணை... :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//தமிழ்ப்பறவை said...
மாஜி சிங்கம் ரிஷான் அவர்களே....
அருமையான விருந்து படைத்தீர்கள்.. நன்றி...

வாங்கோ அண்ணை..நன்றியண்ணை :)
//உங்கட கும்மிக்கு உதவியதிலும் மகிழ்ச்சி...
கடைசி வீடியோ ச்சோ க்யூட்....//

எனக்கும் தான் மகிழ்ச்சி..அண்டைக்கு அவ்வளவு கும்மியும் எப்படியெல்லாம் தாங்கிட்டியள்? :P

////நமீதா,தமிழ்ப்பறவை,சதா//
எனக்கு இடது புறம் பிரம்மாஆஆண்ட ஃபிகரையும்,வலது புறம் சதா போன்ற சாதா ஃபிகரையும் போட்டதில் கண்டனம் தெரிவிக்கிறேன்...////

சதாவைப் போய்ச் சாதா எண்டு சொன்னால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவேனெண்டு சிவா உங்களிட்டச் சொல்லச் சொன்னவர்...


////கேயாரெஸ் அண்ணாச்சிக்கு அவர் வயசுக்கேத்த ஆன்டிகளை செலெக்ட் செய்து (அவர்களே மறுத்தாலும்) ,அவர் அருகருகில் நிற்க வைத்ததற்கு நன்றி....////

அவருக்குத் தான் வயசாயிடுச்சில்லே..உலக அழகிகளை பாதுகாப்பாக நிக்கவைக்க வேணுமெண்டால் அவர் பக்கத்திலதான் நிக்கவைக்க வேணுமெண்டு ஊருக்குள்ள சொன்னவை :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற கிழவன்
நான். ஓசி விருந்து கொடுக்கிறியள் எண்டு கேள்விப்பட்டு உங்கிட வலைக்குள்ள பாய்ஞ்சிட்டன். சொறி குகைக்குள்ள பாய்ஞ்சிட்டன். சொறு இல்லா விருந்து தான் சும்மா சொல்லப்படாது ஜமாச்ச்ட்டீங்க போங்க.
தமிழ்ச்சித்தன் //

வாங்கோ தாத்தா..
பிரியாணி போட்டு ஒருநாளைக்கு இன்னொரு விருந்து போடுவன்.கண்டிப்பா அங்கேயும் நீங்கள் வர வேண்டும் தாத்தா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// King... said...
ரிஷான் நீங்கள் இப்படியெல்லாம் எழுதுவீர்களா என்று நினைத்து ஒவ்வொரு பதிவும் படித்திருக்கிறேன் இந்த மாதம் முழுவதும்...

கலக்கி இருக்கிறியள்...?//

வாங்கோ கிங் :)
நல்லாச் சாப்பிட்டியளே..?
வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றியண்ணை :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//கானா பிரபா said...
வந்துட்டோம்ல ;-)

உண்மையிலேயே கலக்கல் விருந்து ரிஷான், பல பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாட்டியும் ஆஜராகியிருக்கிறேன், கலக்கிட்டீங்கப்பா //

வாங்கோ கானா அண்ணை.. :)
வேலைப் பளுவுக்கு மத்தியில என்ரை விருந்துக்கு வந்ததில மகிழ்ச்சியண்ணை.. :)
பலத்த நன்றியண்ணை :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//வெட்டிப்பயல் said...
இந்த மாசம் முழுக்க சங்கத்தை ஆக்டீவா வெச்சிருந்தீங்க ரிஷான்... மிக்க நன்றி + வாழ்த்துகள்!!!//

வாங்கோ அண்ணை..
இவ்வளவு வாழ்த்துச் சொல்றியள்..
உங்களை வெட்டிப்பயலெண்டு கூப்பிடச் சங்கடமா இருக்குது.. :)
மிக்க நன்றியண்ணை.. :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// கப்பி பய said...
அடிச்சு ஆடி தூள் கிளப்பிட்டீங்க!! நன்றி நன்றி!! :))//

வாங்கோ அண்ணை..
நான் தான் நன்றி சொல்லவேணும்..எண்ரை பதிவுக்கு வந்து படிச்சதுக்கு :)

மிக்க நன்றியண்ணை :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//தமிழன்... said...
அடடே அதுக்குள்ள மாதம் முடிஞ்சிடுச்சா போனதே தெரியலை...
கலகலப்பான பதிவுகள் ரிஷான் கலக்கல்...

நன்றிகள்...:)//

வாங்கோ தமிழன்...
என்ரை எல்லாப் பதிவுக்கும் வந்து கருத்துச் சொன்னியள்.
நல்லாச் சாப்பிட்டியளே..?
வருகைக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றியண்ணை :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// Syam said...
//பத்தொன்பது பளபளக்கும் பதிவுகளைத் தந்து இளமை விருந்து படைத்திட்ட ரிசான் அங்கிளுக்கு,

வ.வா.சங்கம் சார்பாகவும், அத்தனை வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாகவும், நன்றி சொல்லிக்கறேன்!//

ரீப்பீட்டேய்ய்ய்... :-)

(இப்படி கமெண்ட் போடுரது எவ்வளவு ஈசி) //

வாங்கோ ஸ்யாம் :)
ரிப்பீட்டேய்னு சொன்னியளே ?
நானேதோ நீங்கள் விருந்து நல்லாச் சாப்பிட்டுப் போட்டு ஏப்பம் விடுறியள் எண்டு நெனச்சன் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

// ambi said...
ஹிஹி, ரெம்ப நன்றி ரிஷான் அண்ணா. :p


ஒரு மாதம் நன்றாக சிரித்தோம். சிங்கத்துக்கு விரைவில் சிடுக்கெடுக்க வாழ்த்துகிறோம். :)) //

வாங்கோ அம்பியண்ணை :)
உங்களுக்கு விளங்குது..
விளங்க வேண்டியவையளுக்கு விளங்குதில்லையே..நானென்ன செய்யுறதண்ணை ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

// மதுரையம்பதி said...
//ஒரு மாதம் ரொம்ப நல்லா போச்சு ரிஷான். ரொம்ப நல்லா இருந்தது//

ரீப்பீட்டே!!!


:-) //

வாங்கோ மௌலியண்ணை...
நல்லாச்சாப்பிட்டியளே...?
கருத்துக்கு மிக்க நன்றியண்ணை.. :)
சேர்ந்த மொய்யையெல்லாம் என்ரை அட்ரஸுக்குப்பார்சல் பண்ணிடுங்கோண்ணை.. :P

Thooya said...

பசிக்குதே..இப்படியா படத்தை போடுவது..

Gokulan said...

அருமையான பதிவு.. இல்ல இல்ல .. விருந்து..

என்னொட பேரை முதல போட்டு கலக்கிட்டே....