Sunday, June 8, 2008

இன்னிக்கு வாத்தியாராகிட்டேங்க..!

வாங்க..
வணக்கமுங்க..!

இன்னிக்கு நான் வாத்தியாராகிட்டேன்.
வந்த பய,புள்ளைங்களெல்லாம் இப்படி முன்னால உட்காருங்க.
அதாவது நம்ம வ.வா.சங்க வலைப்பதிவுகளை இப்படி ஓடியோடி வந்து பார்க்குற உங்களுக்கு புத்தியிருக்கா...

(கோச்சுக்காதீங்க..எலே விசில் எல்லாம் அடிக்காதீங்க.. என்னது அழுகின தக்காளி எடுத்துட்டு வர மறந்து போச்சா? அதை நம்ம துளசி டீச்சரோ,தூயாவோ எடுத்து வச்சிருப்பாங்க..இல்லேனா ஷைலஜா அக்காவோட மை.பா.வால கூட அடிக்கலாம்..ஆனா நான் இப்ப சொல்ல வந்ததை முழுசா சொல்லவிடுங்க மக்கா.. :)

எல்லாப் பதிவுகளையும் இப்படி ஓடியோடி வந்து பார்க்குற பாசக்காரப்பய புள்ளகளுக்கு புத்தியிருக்கான்னு பார்க்கக் கொஞ்சம் கேள்விகளோட வந்திருக்கேன்.
(பின்ன?நானெல்லாம் எப்ப வாத்தியாராவுறதாம்?)

இப்போ நான் உங்களை நறுக்குன்னு நாலே நாலு கேள்வி கேக்கப் போறேன்.
ஒண்ணுக்காவது சரியா விடை சொல்லிட்டீங்கன்னா நீங்கதாங்க புத்திசாலி :)

கேள்வியெல்லாம் ரொம்ப ஈஸி..
வழக்கம் போல எஸ்கேப் ஆகிடாம ஒழுங்காப் பதில் சொல்லிடுங்க..
இல்லேன்னா நடக்குறதே வேற..ஆமா...!

வாங்க முதல் கேள்விக்குப் போகலாம்.

கேள்வி 1
.
ஒரு ஒட்டகச் சிவிங்கியை பிரிட்ஜுக்குள்ள எப்படி அடைப்பீங்க?

இப்ப இதுக்கு விடை சொல்லுங்க பார்ப்போம்..


கொஞ்சம் யோசிங்கப்பா..

முடியலையா?

சரி நானே சொல்றேன்..

விடை :
பிரிட்ஜ் கதவைத் திறந்து ஒட்டகச்சிவிங்கியை உள்ளே போட்டு மூடி விடணும்.


ஐயோ..இவ்வளவு லேசான விடையா?பதில் சொல்லியிருக்கலாமேங்குறீங்களா?


சரி..அடுத்த கேள்வியும் இதே மாதிரிதான்.

இதுக்காவது மூளையைப் பாவிச்சு(அது இருந்தாத்தானேங்குறீங்களா?அதுவும் சரிதான்)பதில் சொல்லணும்..என்ன?

கேள்வி 2.
ஒரு யானையை பிரிட்ஜுக்குள்ள எப்படி அடைப்பீங்க?
சொல்லுங்க பார்க்கலாம்..


என்னது...அதே ஒட்டகச் சிவிங்கி வழிமுறை?வாங்க விடையைப் பார்க்கலாம்..

அனேகமாக நீங்க சொல்லியிருக்கக் கூடிய

தவறான விடை :
பிரிட்ஜ் கதவைத் திறந்து யானையை உள்ளே போட்டு மூடி விடணும்.
இதத்தானே சொல்ல வந்தீங்க..

அட இல்லைங்க..


சரியான விடை :
பிரிட்ஜ் கதவைத் திறந்து முதலில் உள்ளே இருக்குற ஒட்டகச்சிவிங்கியை வெளியே விடணும்.அப்புறமா யானையை உள்ளே போட்டு மூடிவிடுங்க.
ரெண்டு கேள்வியும் புட்டுக்கிச்சா...?
கவலைப்படாதீங்க..இன்னும் ரெண்டு இருக்கு..

ஒண்ணுக்காவது கரெக்டான விடை சொல்லணும்..சரியா?

சரி..மூணாவது கேள்விக்குப் போவோம்.

கேள்வி 3.
காட்டு ராஜாவான சிங்கம்(ஐயோ..நான் என்னைச் சொல்லலீங்க..)காட்டுக்குள்ள எல்லா மிருகங்களுக்கும் ஒரு முக்கியமான மீட்டிங் வைக்குது..அம்புட்டு விலங்குகளும் தங்களோட சாதிசனத்தோட மீட்டிங்குக்கு வந்திருக்குதுங்க..ஒரே ஒரு விலங்கு மட்டும் வரவேயில்ல..
அது என்னது?


ஏதோ சொல்ல வந்தீங்க..சொல்லுங்க..முடியலைன்னு சொல்றீங்களா..?நல்லா யோசிச்சுப் பாருங்க..சரி ..நானே சொல்லிடறேன்..

விடை :
யானை...ஏன்னா அதைத்தான் நீங்க பிரிட்ஜுக்குள்ள போட்டு மூடிட்டீங்களே.. :)இப்போ கடைசிக் கேள்வி..

இதுவரைக்கும் எந்தக் கேள்விக்குமே சரியா விடை சொல்லாத நீங்க இந்த ஒண்ணுக்காவது சரியா பதில் சொல்லணும்..

இல்லேன்னா சுத்த வெவரங்கெட்ட பயபுள்ளைகளா இருக்கீகளேன்னு நம்ம ப்ளொக் ஆத்தா வையும்.

கடைசிக் கேள்வி...உங்க புத்திக்கு டெஸ்ட் வைக்கும் இறுதிக்கேள்வியாகப்பட்டது என்னன்னா..

கேள்வி 4.
எந்தக் கேள்விக்குமே சரியா பதில் சொல்லாததால முதலைகள் வாழும் ஒரு ஆற்றுக்கு நடுவே உங்களை ஒரு ஓட்டைப் படகில் விட்டிருக்கேன்னு வைங்க.நீங்க எப்படி உயிரோட கரைக்கு வருவீங்க?


சொல்லுங்க..கடைசிக் கேள்விங்க..நீங்க ரொம்ப தைரியசாலிங்க..

குருவியையெல்லாம் பார்த்து மனசைத் திடப்படுத்திக்கிட்டவரு நீங்க..

சொல்லுங்க மக்கா..

ஓஹ் தெரியாதா?

சரி...நானே சொல்லிடறேன்..


சரியான விடை :
ஆறு,ஓட்டைப் படகுன்னா என்ன பண்ணலாம்..?
ஆற்றிலிருந்து குதிச்சு நீந்தித்தான் கரைக்கு வரணும்..!
அப்போ முதலைகள் ?

அவைதான் காட்டுராஜா சிங்கம் நடத்துற கூட்டத்துக்குப் போயிருக்குமே இப்போ.. :)

நம்ம பய,புள்ளக பூராப்பேரும் ஒண்ணுக்காவது சரியான விடை தராத சோகத்துல நான் என் வாத்தியார் பதவியை ராஜினாமா பண்றேங்க..

பில்கேட்ஸ் சார்..சப்ஜெக்ட்ல ஏதோ டவுட்னு சொன்னீங்களே..இருங்க..இதோ வந்துட்டே இருக்கேன் :)

63 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

:)

சின்ன அம்மிணி said...

முடியல, நிஜமா முடியல

கிரி said...

//அழுகின தக்காளி எடுத்துட்டு வர மறந்து போச்சா? அதை நம்ம துளசி டீச்சரோ,தூயாவோ எடுத்து வச்சிருப்பாங்க//

ஹா ஹா ஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க இதுக்கு பதிலடி தந்தே ஆகணும் :-)))

//எல்லாப் பதிவுகளையும் இப்படி ஓடியோடி வந்து பார்க்குற பாசக்காரப்பய புள்ளகளுக்கு புத்தியிருக்கான்னு பார்க்கக் கொஞ்சம் கேள்விகளோட வந்திருக்கேன்//

முடியல

அப்புறம் எங்களுக்கு கேள்வி தான் கேட்க தெரியும் ஹி ஹி ஹி

ரிஷான் நீங்க இப்படி எல்லாம் பதிவு போடுவீங்களா.. நான் கூட நீங்க ரொம்ப அமைதியான ஆளுன்னு நினைத்தேன் :-)))

Thooya said...

superb :) (sorry no tamil font)

மங்களூர் சிவா said...

ஐயா சாமி ரிசானு நீ சின்ன புள்ளதான் ஒத்துக்கிறேன்!!!

மங்களூர் சிவா said...

அதுக்காக 3 வருசத்துக்கு முன்னாடி வந்த ஃபார்வர்ட் மெயிலெல்லாம் பதிவா போடுவன்னு எதிர்பார்க்கலப்பா :(((

மங்களூர் சிவா said...

மிஷ்டர் கிரி

ஐ லைக் யுவர் ப்ரொபைல் பிக்சர்!!!!

மங்களூர் சிவா said...

//அழுகின தக்காளி எடுத்துட்டு வர மறந்து போச்சா?
//
பரவால்ல கைல செல்போன் இருக்கு அதாலயே அடிக்கிறேன்

மங்களூர் சிவா said...

/
அதை நம்ம துளசி டீச்சரோ,தூயாவோ எடுத்து வச்சிருப்பாங்க//

அவிங்க வந்த உடனே அதையும் வாங்கி அடிக்கிறேன்
:))

Anonymous said...

ayyanaroda pathivai padichu kodumai...kodumai enru inga odi wanthaa perunkodumaya illa irukku?!!??!!!shhh...yappa......nalla welai wathiyar welaiyai rajinama seytheenga......

கானகம் said...

ரிஷான் இது ரொம்ப ஓவரு.. ஆனாலும் அமர்களமான ஆரம்பம்

மதுரையம்பதி said...

நல்லாயிருப்பா...நல்லாயிரு.......... :))

கவிநயா said...

என்னமோ சொல்லுவாங்களே... அந்த மாதிரி... என்னன்னு கேக்கறீங்களா? நீங்கதான் வாத்தியாராச்சே! உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். நா வேற எதுக்கு சொல்லிக்கிட்டு :)))

ஆனா இன்னொண்ணு சொல்லியே ஆகணும்:

மைபாக்கா! எங்கிருந்தாலும் உடனே (மைபா)வுடன் வரவும்!

ஷைலஜா said...

.//.இல்லேனா ஷைலஜா அக்காவோட மை.பா.வால கூட அடிக்கலாம்..//

ரிஷூ!! நான் செய்யும் மைசுர்பாக் சாஃப்டா இருக்கும்! அதுலபோயி அடிக்கப்போறீங்களா தம்பி ?::) என்னவோ போங்க....:) வாத்தியாரானதும் நல்ல துணிச்சல் வந்தாச்சு மௌனசாமிக்கு!!!!

இலவசக்கொத்தனார் said...

ஏனப்பு, இந்த ஔரங்கசீப் காலத்து ஜோக்கை விட்ட வேற எதுவும் கிடைக்கலையாக்கும்.....

இரண்டாவது பதிலில் ஒரு சந்தேகம். உம்ம பிரிட்ஜில்தான் அம்புட்டு இடம் இருக்கே அப்புறம் ஏன் ஒட்டகச்சிவிங்கியை வெளியே எடுக்கணும். அதுவும் இருந்தா ஒண்ணுக்கொண்ணு துணையா இருந்த்துட்டுப் போகுமில்ல.....

ஷைலஜா said...

கவிநயா said...
ஆனா இன்னொண்ணு சொல்லியே ஆகணும்:

மைபாக்கா! எங்கிருந்தாலும் உடனே (மைபா)வுடன் வரவும்!

>>>> கவிநயமே! கானத்திற்கு
களிநடனம் ஆடும் பெண் மயிலே!
ரிஷானின் பதிவென்பதால்
குஷாலாய்வந்தேனே
உஷாராய் மைபாவை தவிர்த்து!!

(மை (my) பா(டல்) எப்படி?:):):)

delphine said...

சூப்பரான கேள்விகள்.. சூப்பர் பதில்கள்... சூப்பர் மூளை...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பிங்களோ?

கிரி said...

// மங்களூர் சிவா said...
மிஷ்டர் கிரி
ஐ லைக் யுவர் ப்ரொபைல் பிக்சர்!!!!//

:-))))))

தலைவி படத்த வைத்து ஒரு கவிதை போட்டீங்கன்னா சந்தோசபடுவேன் :-)))

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க சின்ன அம்மிணி..

//முடியல, நிஜமா முடியல//

முதல் தடவையா வர்றீங்க நம்ம சங்கத்துக்கு..
ஆனா வாத்தியார்க்கிட்டயே இப்படி சொல்லிக்கிட்டு வரலாமா?

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கிரி... :)

//ஹா ஹா ஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க இதுக்கு பதிலடி தந்தே ஆகணும் :-)))//

ஐயோ..தக்காளியாலயா?
அட நீங்க வேற..அவங்க எதையும் வீணாக்க மாட்டாங்கன்னு சொல்லவந்தேன்.

கொம்மெண்ட்ஸ்ல வந்து இப்படி அரசியல் பண்றீங்களே மக்கா :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ரிஷான் நீங்க இப்படி எல்லாம் பதிவு போடுவீங்களா.. நான் கூட நீங்க ரொம்ப அமைதியான ஆளுன்னு நினைத்தேன் :-)))//

ரொம்ப ரொம்ப ரொம்ப அமைதியான சின்னப்பையன் கிரி நான் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//superb :) //

நன்றி தூயா :)
அப்படியே இன்னிக்குச் செஞ்ச சூப்பால கொஞ்சம் வாத்தியாருக்கு அனுப்பிவிடுங்க :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஐயா சாமி ரிசானு நீ சின்ன புள்ளதான் ஒத்துக்கிறேன்!!!//

சிவா..அதுக்காக என் சின்ன வயசு போட்டோவை நீங்க இப்படி ப்ரொபைல் பிக்சராப் போட்டுக்குறது நல்லாயில்ல சொல்லிட்டேன்..ஆமா..

எம்.ரிஷான் ஷெரீப் said...

// மங்களூர் சிவா said...
மிஷ்டர் கிரி

ஐ லைக் யுவர் ப்ரொபைல் பிக்சர்!!!!//

அடப்பாவி மக்கா..
அதை இப்படியா வாத்தியார் முன்னாடி பகிரங்கமா ஜொல்றது?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மங்களூர் சிவா said...
//அழுகின தக்காளி எடுத்துட்டு வர மறந்து போச்சா?
//
பரவால்ல கைல செல்போன் இருக்கு அதாலயே அடிக்கிறேன்//

ஏற்கெனவே உங்க செல்போன் 1985 மாடல் பாதி செங்கல்..அதாலையெல்லாம் அடி வாங்க வேணாம்னுதான் பா நான் வாத்தியார் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மங்களூர் சிவா said...
/
அதை நம்ம துளசி டீச்சரோ,தூயாவோ எடுத்து வச்சிருப்பாங்க//

அவிங்க வந்த உடனே அதையும் வாங்கி அடிக்கிறேன்
:))//

பாருங்க டீச்சர் & தூயா..

நீங்க வாத்தியாருக்காக எடுத்துட்டு வர்ரதை எப்படியெல்லாம் வீணாக்கனும் ப்ளான் பண்ணியிருக்காரு இவருன்னு..

இதையெல்லாம் என்னன்னு கேட்க மாட்டீங்களா?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//Anonymous said...
ayyanaroda pathivai padichu kodumai...kodumai enru inga odi wanthaa perunkodumaya illa irukku?!!??!!!shhh...yappa......nalla welai wathiyar welaiyai rajinama seytheenga......//

வாங்க அனானி மாணாக்கரே...
அய்யனாரு பக்கம் போயிட்டு வந்தீகளா..?
நானும் அங்க போயிட்டுவந்துதான் இதைப் போட்டேன்.இல்லேன்னா இது மாதிரியெல்லாம் நம்ம மக்களுக்குச் செய்யமுடியுமா? :P

ரொம்ப நொந்துட்டீங்க போலிருக்கு :)
பாவமுங்க நீங்க :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க ஜெயக்குமார் சார் :)

//ரிஷான் இது ரொம்ப ஓவரு.. ஆனாலும் அமர்களமான ஆரம்பம்//

நன்றிங்க.. :)
இந்தப் பதிவுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு 3 பதிவு இருக்கும்..அதையும் படிச்சிடுங்க..நம்ம ஊர் வெயிலுக்கு சூப்பரா இருக்கும் :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//மதுரையம்பதி said...
நல்லாயிருப்பா...நல்லாயிரு.......... :)//

ரொம்ப நொந்துட்டு வாழ்த்துறீங்க போலிருக்கு? :P
நன்றிங்க :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// கவிநயா said...
என்னமோ சொல்லுவாங்களே... அந்த மாதிரி... என்னன்னு கேக்கறீங்களா? நீங்கதான் வாத்தியாராச்சே! உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். நா வேற எதுக்கு சொல்லிக்கிட்டு :)))//

அட..என்ன சொல்றதுங்க..?
எனக்குத் தெரிஞ்சத இந்தப் பயபுள்ளகளுக்கு நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு கத்துக் கொடுக்கலாம்னு பார்த்தா ஒண்ணுக்குக் கூட பதில் தெரியலையே.. :(
அதான் நான் வாத்தியார் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆனா இன்னொண்ணு சொல்லியே ஆகணும்:

மைபாக்கா! எங்கிருந்தாலும் உடனே (மைபா)வுடன் வரவும்!//

அட கவிநயா...இம்புட்டுக் கொலவெறியா?
வ.வா.சங்கத்துல ஆயுதங்கள் தடைன்னு போர்ட் வைக்கணும்..அப்பதான் எனக்கு சேப்டி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஷைலஜா said...

ரிஷூ!! நான் செய்யும் மைசுர்பாக் சாஃப்டா இருக்கும்! அதுலபோயி அடிக்கப்போறீங்களா தம்பி ?::) //

ஆனா அது கொலைவெறி ஆயுதம்னு வலைப்பதிவுலகத்துல பேசிக்குறாங்களே..?
நான் என்னத்தக் கண்டேன்..
ஒரு அஞ்சாறு கிலோ செஞ்சனுப்புங்க..
சாப்டு பார்த்து (பார்க்க நானிருந்தா) சொல்றேன் :P

//என்னவோ போங்க....:) வாத்தியாரானதும் நல்ல துணிச்சல் வந்தாச்சு மௌனசாமிக்கு!!!!//

ஐயோ..மௌன சாமியாராவே ஆக்கிட்டீங்களா? :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க இலவசக் கொத்தனாரு :)

//இரண்டாவது பதிலில் ஒரு சந்தேகம். உம்ம பிரிட்ஜில்தான் அம்புட்டு இடம் இருக்கே அப்புறம் ஏன் ஒட்டகச்சிவிங்கியை வெளியே எடுக்கணும். அதுவும் இருந்தா ஒண்ணுக்கொண்ணு துணையா இருந்த்துட்டுப் போகுமில்ல.....//

அதுவா? நம்ம பிரிட்ஜோட பில்டிங் ஸ்ட்றோங்..பேஸ்மெண்ட் வீக்கு அண்ணாச்சி..

(பயபுள்ளக ..எம்புட்டுக் கேள்வி கேக்குறாங்க பாருங்க.. :( )

எம்.ரிஷான் ஷெரீப் said...

//delphine said...
சூப்பரான கேள்விகள்.. சூப்பர் பதில்கள்... சூப்பர் மூளை...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பிங்களோ?//

நன்றிங்ணா..
ஆனா நானெங்க யோசிச்சேன்? :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//தலைவி படத்த வைத்து ஒரு கவிதை போட்டீங்கன்னா சந்தோசபடுவேன் :-))//

'பெண்களூர்' சிவா இது உங்கக் கவனத்திற்கு..!நம்ம கிரி கேட்டிருக்காரு.. :)

கவிநயா said...

//>>>> கவிநயமே! கானத்திற்கு
களிநடனம் ஆடும் பெண் மயிலே!
ரிஷானின் பதிவென்பதால்
குஷாலாய்வந்தேனே
உஷாராய் மைபாவை தவிர்த்து!!//

சூப்பர் பாட்டு, மைபாக்கா! :))அழைத்ததும் வந்தமைக்கு நன்றி! ஆனா உங்க மைபாதான் ரொம்ப மெதுவா (வேகமா அடிச்சாலும் ஒண்ணும் ஆகாதுல்ல :) இருக்கும்கிறீங்க, கையோட கொண்டு வந்திருக்கலாம்ல :(

ARUVAI BASKAR said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பப்பா !
ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரிஎலையே !
அரு பாஸ்கி

பஹீமாஜஹான் said...

பெரியவர்
இது உங்கட அந்தக் காலத்துல அடிபட்டுத் தேய்ந்த கதையப்பா...

"இப்படி ஓடியோடி வந்து பார்க்குற உங்களுக்கு புத்தியிருக்கா..."

இதுக்கெல்லாம் அழுகின தக்காளி சரிப் பட்டு வராது

Sakthy said...

தங்கல ரிஷான்..
நான் அழுதிடுவன்.. வலிக்குது

தமிழன்... said...

ஏற்கனவே பாத்த விடயங்கள்தான்னாலும்,
ரிஷான்? இப்படியெல்லாம் எழுத வருமா உங்களுக்கு... கலக்குங்க...:))

தமிழன்... said...

முத்தக்கவி வித்தகர் மங்களூர் சிவா சொன்னது...

///மிஷ்டர் கிரி

ஐ லைக் யுவர் ப்ரொபைல் பிக்சர்!!!!
//
:))
அடங்க மாட்டேங்கிறாருப்பா:)

தமிழன்... said...

முத்தக்கவி வித்தகர் மங்களூர் சிவா சொன்னது...

//அழுகின தக்காளி எடுத்துட்டு வர மறந்து போச்சா?
//
பரவால்ல கைல செல்போன் இருக்கு அதாலயே அடிக்கிறேன்///

பாத்து சிவாண்ணே அது பக்கத்தில இருக்கிறவரோடதாயிருக்கப்போகுது...

தமிழன்... said...

கிரி...சொன்னது...

// மங்களூர் சிவா said...
மிஷ்டர் கிரி
ஐ லைக் யுவர் ப்ரொபைல் பிக்சர்!!!!//

:-))))))

தலைவி படத்த வைத்து ஒரு கவிதை போட்டீங்கன்னா சந்தோசபடுவேன் :-)))

ரிப்பீட்டு...

தமிழன்... said...

சரி வாத்தியார் கல்கலா ஒரு மாவனல்லை பதிவு போடுறது...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எலே
இந்த வாத்தியார் உக்கார சீட்டுல ஏதோ வைப்பியே! அதை இப்போதே வைடா! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

வேணாம் ரிஷானு! அழுதுருவேன்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வ.வா.சங்கத்துல ஆயுதங்கள் தடைன்னு போர்ட் வைக்கணும்//

இந்த ஜூன் மாசம் முழுதும் வவாச-வில் ஆயுதங்களுக்குத் தடை இல்லை என்பதை நிர்வாகக் குழுவின் சார்பாக அறிவித்துக் கொ"ல்"கிறேன்!

அட்லாஸ் சிங்கத்தை வேட்டையாட பல தரப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தலாம்! பயன்படுத்தவும்! :-)

கயல்விழி முத்துலெட்சுமி said...

இதுபள்ளிக்கூட பிள்ளை ஜோக் இல்லை ரிஷான்.. நீங்க வாத்தியாருங்கறீங்க..

ஆனா முதல் தடவையா இந்த ஜோக்குக்கு படம் எல்லாம் போட்டு இங்க் தான் பாத்தேன்.. :))

T.V.Radhakrishnan said...

நாலைந்து பேர் இல்லம்மா ..ஒரே ஒருத்தர் தான் இப்படிப்போட்டு அறுத்துட்டார்.
முதல் கேள்வி பதில் படிச்சதுமே ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.ஆனால் அவரோ..இவன்
ரொம்ப நல்லவனாய்ருக்கானேன்னு..அடுத்தக்கேள்வியும், பதிலும் சொன்னார். அப்பவும்
நான் மசியல்லை.அடடா..இவன் என்ன செஞ்சாலும் தாங்குவான்னு சொல்லிட்டு..அடுத்த
இரண்டு கேள்வியும் பதிலும் சொல்லிட்டார்.
அந்த அறுவைத்தான்ம்மா உடம்பெல்லாம் காயம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எம்.ரிஷான் ஷெரீப் said...

// ARUVAI BASKAR said...
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பப்பா !
ஒரு கேள்விக்கும் எனக்கு விடை தெரிஎலையே !
அரு பாஸ்கி//

உங்களுக்கு மட்டுமில்ல பாஸ்கி..ஒருத்தருக்கும் தெரியல.
பூராப் பயலுகளுமே முட்டாளா இருக்காய்ங்க..அதனால தான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு பில்கேட்ஸ்க்கு அட்வைஸ் பண்ணப் போயிட்டு இருக்கேன். :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க பஹீமா ஜஹான் :)

//"இப்படி ஓடியோடி வந்து பார்க்குற உங்களுக்கு புத்தியிருக்கா..."

இதுக்கெல்லாம் அழுகின தக்காளி சரிப் பட்டு வராது //

ஐயையோ..ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியிருக்கீங்க சிஸ்டர்.. :)

அதான் வ.வா.சங்கத்துல ஆயுதங்களுக்குத் தடைன்னு போர்ட் வச்சிருக்கம்ல :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

//Sakthy said...
தாங்கல ரிஷான்..
நான் அழுதிடுவன்.. வலிக்குது//

இதுக்கே இப்படியா சினேகிதி?
இந்த வாரம் பூரா பொண்ணுங்களுக்கு மட்டும் தான் க்ளாஸ் எடுக்கப்போறேன்..
தவறாம வந்துடுங்க.. :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

// தமிழன்... said...
சரி வாத்தியார் கல்கலா ஒரு மாவனல்லை பதிவு போடுறது...//

வாங்க தமிழன் :)

நான் ஊர்லிருந்து வந்துட்டதால ஊரே களையிழந்து,சுரத்திலிருந்து,அழகிழந்து இருக்காம்..இனி எதைப் போடுறது...?

இருந்தாலும் கேட்டுட்டீகள்ல...
போட்டுட்டாப் போச்சு :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
எலே
இந்த வாத்தியார் உக்கார சீட்டுல ஏதோ வைப்பியே! அதை இப்போதே வைடா! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! //

இம்புட்டு வயசானதுக்கப்புறமும் பழைய குசும்பு உங்களைவிட்டு போகலையா அங்கிள் இன்னும் ?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//இந்த ஜூன் மாசம் முழுதும் வவாச-வில் ஆயுதங்களுக்குத் தடை இல்லை என்பதை நிர்வாகக் குழுவின் சார்பாக அறிவித்துக் கொ"ல்"கிறேன்!

அட்லாஸ் சிங்கத்தை வேட்டையாட பல தரப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தலாம்! பயன்படுத்தவும்! :-)//

கொலவெறின்னு இதுக்குத்தான் சொல்வாங்களா? கேயாரெஸ் அங்கிள்..ஒரு சின்னப்பையனைக் கொள்ள இம்புட்டு ஆயுதங்களா?
வேணாம் பா வேணாம்..
என்னைக் கொல்ல நெனச்சதுக்கே தூக்கி உள்ளே போட்டுடுவாங்க..
இந்த வயசான காலத்துல உங்களுக்குத் தேவையா அது?

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆனா முதல் தடவையா இந்த ஜோக்குக்கு படம் எல்லாம் போட்டு இங்க் தான் பாத்தேன்.. :))//

வாங்க கயல்விழி :)

படம் போட்டு விளக்கியும் இந்த பயபுள்ளகளுக்கு ஒழுங்காப் பதில் சொல்ல முடியுதா பாருங்க?
ரொம்ப வேஸ்டாப்போயிட்டாங்க எல்லோரும்... :P

எம்.ரிஷான் ஷெரீப் said...

// T.V.Radhakrishnan said... //

வாங்க சார்..பெயரிலேயே டீவி இருக்கு? ரொம்ப சீரியல் பார்ப்பீங்களோ? :P
உங்களைப் பார்த்தாலும் மெட்டி ஒலி அப்பா மாதிரியே ஜம்முன்னு இருக்கீங்க :)

//நாலைந்து பேர் இல்லம்மா ..ஒரே ஒருத்தர் தான் இப்படிப்போட்டு அறுத்துட்டார்.//

ஹி ஹி ஹி..ரொம்ப இதெல்லாம் சாதாரணம் :P

//முதல் கேள்வி பதில் படிச்சதுமே ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.//

அறுத்தா ரத்தம் வருமுங்கோ :P

//ஆனால் அவரோ..இவன்
ரொம்ப நல்லவனாய்ருக்கானேன்னு..அடுத்தக்கேள்வியும், பதிலும் சொன்னார்.//

அதான் பதிலயும் சொல்லிட்டன்ல..

//அப்பவும்
நான் மசியல்லை.அடடா..இவன் என்ன செஞ்சாலும் தாங்குவான்னு சொல்லிட்டு..அடுத்த
இரண்டு கேள்வியும் பதிலும் சொல்லிட்டார்.//

இம்புட்டு வயசாச்சே..கொஞ்சமாவது யோசிக்க வேணாம்? :P

//அந்த அறுவைத்தான்ம்மா உடம்பெல்லாம் காயம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி சார்?ஊருல முதியோர் கல்விலயாச்சும் சேர்ற வழியைப் பாருங்க :P

கானா பிரபா said...

இப்படியா கதறக் கதற ,,,,,அவ்வ்வ்வ்வ்

Asfer said...

இப்பிடி ஒரு மேதைய நான் கண்டதே இல்ல

Asfer said...

இப்பிடி ஒரு மேதைய நான் கண்டதே இல்ல

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கானா பிரபா :)

//இப்படியா கதறக் கதற ,,,,,அவ்வ்வ்வ்வ்//

இதுக்கே அழுதா எப்படி பிரபா?
இன்னும் இருக்கு நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க அஸ்பர் :)

//இப்பிடி ஒரு மேதைய நான் கண்டதே இல்ல //

எனக்குப் புல்லரிக்குதுங்க :)

Maanavan said...

Rishan,
I am late..but I am really laughing here...soooper

எம்.ரிஷான் ஷெரீப் said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க