Friday, May 9, 2008

இதுவும் காதல் தானோ ?!

முதன் முதலில் அவளை கோவிலில் தான் சந்தித்தான், ஒரு சின்னக்குழந்தை அவளைப் பார்த்து எதோ சொல்ல... சில்லைரையைக் கொட்டியது போன்று அவளின் சிரிப்பு, திரும்பிப் பார்த்தான்,

கையில் இருந்த தட்டில் உடைந்த தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தன.

அவன் பார்பதை கவனித்துவிட்டதாலோ, வேறு காரணத்தினாலோ விறுவிறுவென்று
கிளம்பி சென்று விட்டாள்,

அடுத்து ஒருவாரம் சென்று, அதே கோவில் வாசலில் அவள்,

அவனை கண்டுகொண்டு, பார்த்து புன்னகைத்தாள், இப்படி ஒரு பெண்ணுக்குத்தான்

இங்கே தினமும் வந்து, காத்துக் கிடந்தது போல் அவனுக்கு மனசு குளிர்ந்தது .

அவள் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவன்

"எ....என்ன ஒருவாரம் இருக்குமா ? இங்கே வந்து"

அவளும் தயங்கி தயங்கி,

"இங்கே யாரும் நல்லவர்களே வருவதில்லை, பூரா காலி பசங்க, என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், அதுதான் இப்பெல்லாம் கபாலிஸ்வரர் கோவிலுக்கு போய்விடுகிறேன்"

"ஓ...! அங்கே பரவாயில்லையா ?"

"ம் அப்படித்தான் நினச்சு போனேன், போய்வர பஸ் செலவு அது இதுன்னு...அலைச்சல், பேசாமல் பழையபடி இந்த கோவிலுக்கே.."

அவள் இயல்பாக பேசுவதை வைத்து, தயங்காமல் சட்டென்று கேட்டுவிட்டான்

"என்னைய உனக்கு பிடிச்சிருக்கா, ஒருவாரமாக உன் நினைவில் தான் இருக்கேன்"

"பிடிக்கலைன்னா பேசுவனா ?" வெட்கப்பட்டாள்

"அது என்ன தட்டுல, ஏன் மூடி வச்சிருக்கே..."

"கொரங்கு தொல்லைதான்... திறந்து இருந்தால் தட்டிப்பறிச்சுட்டு ஓடிடும்"

"...ம் சரிதான்...நீ எவ்வளவு நாளாக இந்த கோவிலில்"

"நான் கேட்கவேண்டிய கேள்வி, உங்களை போனவாரம் தான் முதன் முதலில் பார்த்தேன்"

"ஆமாம், நான் காரணீஸ்வரர் கோவிலுக்கு போவது தான் வழக்கம், அங்கும் கூட்டமாகிவிட்டது, ஒரே கூட்டம் எனக்கு சரிப்பட்டுவராது...அப்பறம் எப்படி அங்கேயே....அதுதான் இந்த கோவிலுக்கு வந்தேன்"

"சரி சரி ... முதலில் வரிசையைப் பிடிக்கனும்... வாங்க பக்கத்திலேயே கொஞ்சம் தள்ளி உட்காருங்க"

"ம் சரிதான் நம்ம கதையை இனி தினமும் பேசுவோம்"

அதன் பிறகு அவர்கள் இருவரும்,வரும் போகும் பக்தர்களைப் பார்த்து, கோரசாக

"அம்மா, ஐயா, தாயே தருமம் செய்யுங்கம்மா... புள்ளக் குட்டிகெல்லாம் புண்ணியமாப் போவும்"

****

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இல்லை. ச்சும்மா டுவிஸ்டு சிறுகதை(?) - அடிக்கவராதிங்க. பிச்சைக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் காதல் வருமே, துணை தேவைப்படுமே. ஒரு படத்தில் விவேக் - கோவை சரளா (பிச்சைக்காரியாக), இருட்டுக்குள் நடக்கும் காமடி நினைவு வந்தது, இதை எழுதி தொலைத்தேன்.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ? அவர்களை விலங்குகளைவிட கேவலமாக நினைக்கிறதா உலகம் ? உடலியலாமை என்ற காரணம் தவிர்த்து பிச்சை எடுப்பது இழிவான செயல்தான், ஆனால் திருடர்களை ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லையே, கேட்டுதானே வாங்குகிறார்கள்.

கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?

6 comments:

ஜெகதீசன் said...

பிச்சைக்காரர்களைக் கிண்டல் செய்யும் உங்களுக்கு கடும் கண்டனங்கள்......
:P

FunScribbler said...

ஹாஹா, ரசித்து படித்தேன். சிரித்தேன். எனக்கு இத படிச்ச பிறகு, பல படங்களில் வந்த கவுண்டமணி ஜோக்குகள்தான் ஞாபகத்துக்கு வருது. ஹாஹா.. ஒரு படத்துல(என்ன படம்னு பெயர் தெரியல) அதல இவர் ஒரு பொண்ண rickshawவில் தினமும் bank வேலைக்கு போகுதுன்னு அழைச்சுகிட்டு போவாரு. ஆனா கடைசியில பாத்தா அந்த பொண்ணு கோயில் முன்னாடி பிச்சை எடுக்கும்.

இன்னொரு படத்துல, கவுண்டமணியே பிச்சைக்காரரா வருவார். அப்பரம் எல்லா பிச்சைக்காரர்களையும் இங்கிலீஷில் பிச்சை எடுக்க சொல்வார்.
ஹாஹாஹா...

//அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ?//

தேவையில்லாத விஷயங்களுக்கு போர்கொடு எழுப்பினால் இந்த மாதிரி விஷயங்களை பார்க்க எங்க நேரம் இருக்கும்?

//கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?//

அவ்வ்வ்வ்... காலையிலே யோசிக்க வச்சுட்டீங்களே!!!

Anonymous said...

இது தான் " பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது "


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

ambi said...

நல்லா இருக்கு, ஆனா ஈசியா யூகிக்க முடிஞ்சது. தப்பா எடுத்துக்காதீங்க. :))


உடல் குறை உள்ளவர்களை மன்னிக்கலாம், ஆனா பிஞ்சு குழந்தைகளை வெய்யிலில் வாட்டி வதக்கி, சிக்னலில் நம் கருணையை தூண்டும் வகையில்(sympathy creation) பிச்சை எடுப்பவர்களை கண்டால் கோபம் தான் வருகிறது.

ரசிகன் said...

//எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ?//

பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு..:P

துளசி கோபால் said...

ஊருக்குப்போறீங்கன்னு கேள்விப்பட்டேன்.

ஊருன்னதும் இதுபோல நினைவு வந்துருது இல்லே?