சென்னை மாநகர பேருந்து ஒன்றில் நடத்துனராக இருக்கிறார் கைப்புள்ள
கைப்பு : டிக்கெட் டிக்கெட்...டிக்கெட் வாங்கதவங்கெல்லாம் டிக்கெட் எடுத்துடுங்க பின்னால செக்கர் வந்தா அம்புட்டுதான்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பார்த்தி ஏறுகிறார்.
கைப்பு : இவன் ஏன் இங்கிட்டு வந்தான்
பார்த்தி தெரியாதது போல்,
பார்த்தி : தேனாம்பேட்டைக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : தேனாம்பேட்டையெல்லாம் போகாது
பார்த்தி : என்னது தேனாம் பேட்டை போகாதா ? தேனாம்பேட்டை என்னைக்கு போச்சு இன்னிக்கு போக, எனக்கு தெரிஞ்சு அங்கேயே தான் இருக்கு
கைப்பு : ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான், இந்த பஸ்ஸு அங்கிட்டு போகாதுன்னு சொல்ல வந்தேன்
பார்த்தி : அத தெளிவாகச் சொல்ல வேண்டியது தானே
கைப்பு : இப்ப சொல்லிட்டேன்ல இறங்கு
பார்த்தி : இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா ? நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், ஏன் இந்த பஸ் எங்கே போவுதோ அங்கே போவேன்
கைப்பு : அட நீ எங்கிட்டாச்சும் போப்பா, மொதலில் டிக்கெட் எடு
பார்த்தி சுற்றிலும் பார்த்துவிட்டு, மெதுவாக
பார்த்தி : ஆமாம் உனக்கு சம்பளம் என்ன கிடைக்குது ?
கைப்பு : அத ஏன் கேட்கிறே, என்ன பிடித்தமெல்லாம் போவ எட்டாயிரம் இருக்கும்
பார்த்தி : இப்ப விக்கிற வெல வாசியில் உன்னால தாக்கு பிடிக்க முடியுதா ?
கைப்பு : ஆமாம்பா, வாங்குற காசு கந்துவட்டிகே சரியாப் போயிடுது
பார்த்தி : நான் ஒரு யோசனை சொல்றேன்
கைப்பு : உனக்கு புன்னியமா போச்சு. சொல்லு என்ன செய்யனும்
பார்த்தி : என்கிட்ட டூப்ளிகேட் டிக்கெட் இருக்கு, 100 ரூபாய்க்கு 500 டிக்கெட் தருகிறேன்
கைப்பு : அத வச்சு சீட்டுக்கட்டு விளையாடச் சொல்றியா ?
பார்த்தி : மடையா, ஒர்ஜினல் டிக்கெட்டு பதிலாக இந்த டிக்கெட்டை ஜனங்களுக்கு கொடுத்தா, வசூலாகும் அம்புட்டும் உனக்குத்தான், கூடவே ஒரிஜினல் டிக்கெட்டும் கொஞ்ச கொஞ்ச கொடுக்கனும், அப்பறம் வசூலில்லை என்று சந்தேகம் வரக்கூடாது இல்லையா ?
கைப்பு : நல்ல யோசனையாக இருக்கே, இந்த 100 ரூபாய், 500 டிக்கெட் கொடு
பார்த்தி பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கட்டு கட்டுகளைக் கொடுக்கிறார்
கைப்பு : என்னைய ஏமாத்த முடியாது
பார்த்தி : ?? (முழிக்கிறார்)
கைப்பு : பத்தியா பத்தியா, நீ இன்னும் டிக்கெட் வாங்கலைன்னு சொன்னேன்
பார்த்தி : (மனதுக்குள் சிரித்துக் கொண்டு) ஒன் அறிவுக்கு நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. சரி பஸ்ஸு போகும் கடைசி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : அது...! என்ன தான் இருந்தாலும் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கே.
டிக்கெட்டை கொடுக்கிறார்
பார்த்தி : ஏய் என்கிட்டேயே என் டிக்கெட்டா, ஒரிஜினல் டிக்கெட்டைக் கொடு,
கைப்பு : ச்சும்மா சோதிச்சு பார்த்தேன்...சோதிச்சு
பார்த்தி : மனதுக்குள் 'இருடி உனக்கு இருக்கு' என்னையே ஏமாத்த பார்க்கிறியா ?
ஒரிஜினல் டிக்கெட்டை வாங்கிக் கொள்கிறார். அடுத்த ஐந்து ஸ்டாபிங்குற்குள் ஏறும் பயணிகளுக்கு டூப்ளிக்கேட் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, பணப்பை நிறம்பிவிட்டதா என்று குலுக்கி குலுக்கி பார்க்கிறார் கைப்பு
ஆறாவது ஸ்டாபிங்கில் செக்கர்கள் ஏறுகிறார்கள்
ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள், பாதி டூப்ளிகேட் டிக்கெட்
பார்த்தி : சார், இதுவும் டூப்ளிகேட்டா பாருங்க, நான் அவசரமாகப் போகனும் - என்று டிக்கெட்டைக் காட்டுகிறார்
செக்கர் : ஒரிஜினல் தான், நீங்க எறங்கிப் போகலாம் என்கிறார்.
பார்த்தி கைப்புவைப் பார்த்து,
பார்த்தி : நான் வரட்டா ? என்கிறார்
கைப்புக்கு பார்த்திதான் டூப்ளிகேட் டிக்கெட் கொடுத்தார் என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் செக்கர்களைப் பார்க்க
செக்கர் : உன் மேல என்கொயரி வைக்கிறோம், வண்டியை விட்டு இறங்கு
கைப்பு : மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ........ஆப்பு.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்று சொல்லியபடி செக்கர்களுடன் இறங்கிச் செல்கிறார்
10 comments:
நான்தான் First...
:))))))))))))))))
கலக்கல்....
:-)))))
ஆஹா :-))))) அருமையான காமெடி. அப்படியே படத்தில உபயோகிக்கலாம்.
கோவி சார்,
டிக்கெட்...டிக்கெட்...டிக்கெட் எடுங்க
:)
//Sen22 said...
நான்தான் First...
:))))))))))))))))
//
துண்டு போட்டதற்கு நன்றி !
//TBCD said...
கலக்கல்....
Wed May 07, 10:55:00 AM IST
///
அடுத்து ஒண்ணு வருது !
:)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
:-)))))
//
KRS,
காமடி தேறுதா ?
//பிரேம்ஜி said...
ஆஹா :-))))) அருமையான காமெடி. அப்படியே படத்தில உபயோகிக்கலாம்.
//
பார்த்திபனுக்கு மார்கெட் இல்லையே.
:)
//கைப்புள்ள said...
கோவி சார்,
டிக்கெட்...டிக்கெட்...டிக்கெட் எடுங்க
:)
Thu May 08, 06:41:00 AM IST
//
கைப்புள்ள,
நான் தான் பார்த்தியா வந்ததே, எனக்கே டிக்கெட்டா.
:)
Post a Comment