Tuesday, May 20, 2008

ரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated

வணக்கம் மக்களே!! ரெண்டு போட்டியில் பட்டையைக் கிளப்பும் உங்க பங்களிப்புல மகிழ்ச்சிக் கடலில் கைப்புவை தள்ளிவிட்டுட்டு மத்த சிங்கங்கள் படகுல மிதந்துட்டிருக்கோம். போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் ஏற்கனவே சொன்னது போல் உங்களின் முதல் இரண்டு பதிவுகளையோ அல்லது இந்தப் பதிவில் நீங்க சொன்ன இரண்டு பதிவுகளையோ முதல் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்த்திருக்கோம்.போட்டியில் கலந்துகொள்ளும் பதிவுகளின் முழுப்பட்டியல்:


செல்விஷங்கர்

1. இரண்டடியில் இன்பம்

2. இரண்டு மனம்

பாஸ்டன் பாலா

1. ரெண்டுக்கு வந்த கோலாகலம்

அம்பி

1. ரெட்டை ஜடை வயசு

2. தமிழ் Vs உதித் நாராயண்

சென்ஷி

1. என் இரண்டாம் காதலி

2. உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

ச்சின்னப் பையன்

1. எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

2. கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

தமிழரசன்

1. ஜோடிப் புறா

2. ப்ளாஸ்டிக் பூக்கள்

கோவி.கண்ணன்

1. சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

PPattian : புபட்டியன்

1. இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

2. குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

ramachandranusha(உஷா)

1. தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

KING

1. வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...


பாச மலர்

1. நதியொன்று விதி தேடி..

2. நிறைமதி காலம்

ஆயில்யன்

1. இது ”ரெண்டுக்கு” மேட்டர்

2. ”இரண்டு”ங்கெட்டான்


திகழ்மிளிர்

1. இதயம் இரண்டாகிறது

2. அன்பே சிவம்

கண்மணி

1. ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...


இரா. வசந்த குமார்

1. எனவே, நான், வேண்டாம்.

2. இது நாடகம்?


அபி அப்பா

1. வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!

2. தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!


சுல்தான்

1. இரண்டுமே அவள்தான்


பினாத்தல் சுரேஷ்

1. இதென்ன கலாட்டா?

2. இரண்டும் ஒன்றும்


இளைய கவி

1. வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"


நிஜமா நல்லவன்

1. ரெண்டாவது அட்டம்ப்ட்!!

2. யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


சிறில் அலெக்ஸ்
1 இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்


மங்களூர் சிவா

1. ரெண்டு


இரவு கவி

1. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...


Sen22

1. எனது புலம்பல்கள்_(9)


லக்கி லுக்

1. திரும்பிப் பாருடி!

2. ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..


KRP

1. கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...

2. கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்Radha Sriram
1. இரட்டை பதிவர்கள் இம்சை...


Sathiya

1. இரண்டக்க இரண்டக்க...

2. ரெண்டே ரெண்டு ஆசைதான்...


தமிழ் பிரியன்

1. தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

2. ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்..

சந்தோஷ்

1. இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

2. இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்


NewBee

1. ஒரே ஒரு கதை

2. டாக்டர் புதுவண்டின் பரிந்துரை


நிலா

1. நிலாவுக்கு இன்று இரண்டு


கல்யாண்ஜி

1. இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்

2. இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை


ஓகை

1. ரெப்பா கியர்.


சகாதேவன்
1. யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்

2. கல்யாண சமையல் சாதம்


ஷைலஜா

1. எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்


ஜாம்பஜார் ஜக்கு

1. இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.


பொன்வண்டு

1. அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )

1. முருகன் கொடுக்காத இரண்டு


அருட்பெருங்கோ

1. தண்டவாளப்பயணம்

கபீரன்பன்

1. ஒரு ஜோடி நாற்காலியின் கதை


சக்தி

1. அன்பு மகனே

TBCD

1. இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

68 பதிவுகளையும் படிச்சுட்டீங்களா? வோட்டுப் பொட்டி கீழே இருக்கு. உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க. ஒவ்வொரு பதிவுக்கும் பக்கத்தில் இருக்கற பொத்தானை க்ளிக்கினாலே வோட்டு விழுந்துடும். எல்லா வாக்கெடுப்பும் போல இங்கயும் ஒருத்தருக்கு ஒரு வோட்டு தான். சங்கத்துல புகுந்து யாராவது வாக்குப்பொட்டியைத் தூக்கனும்னு நினைச்சா தல தன்னோட தலையை அடமானம் வச்சாவது வாக்குப்பொட்டியைக் காப்பாத்துவாரு.

பூத் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை திறந்திருக்கும். ஒரு வாரத்துக்குள்ள எல்லா பதிவுகளையும் படித்து உங்களுக்குப் பிடித்த ஒரு 'ரெண்டு' பதிவுக்கு வோட்டு போடுங்க. இந்த வாக்கெடுப்பின் மூலம் இருபது பதிவுகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.


போட்டியில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

கீழே இருக்க பொட்டியில் உங்க பொன்னான வாக்குகளை கன்னாபின்னான்னு போட்டுத் தாக்குங்க!! ஸ்டார்ட் மீஜீக்க்!!

Update: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு.....சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தமா வெடிச்சிருச்சு....

Zoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...வோட்டு போட்டதும் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் வரும்(எரிதமாகக்கூட(Spam) வரலாம்)..அந்த மின்மடல் மூலம் உங்க வாக்கை உறுதிசெய்யனும்..மறந்துடாதீங்க..வோட்டு பொட்டி தூக்கியாச்சு!!

39 comments:

TBCD said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

என் பதிவு ஆட்டைக்குச் சேர்த்தி இல்லையா...

இரண்டில் ஒன்று !!!

ambi said...

அண்ணா! என்னங்கண்ணா! வோட்டு போடற பொட்டி எல்லாம் தெரியவே இல்லை. :(

ஏதேனும் கோளாறா?னு கொஞ்சம் பாருங்க பா!

இராம்/Raam said...

TBCD,

விரைவில் சரி பார்க்கிறோம்...

அம்பி,


ஆபிஸ் நெட்வொர்க்'லே zoho.com'ஐ தடை பண்ணியிங்களான்னு பாருங்க..!!

ambi said...

//zoho.com'ஐ தடை பண்ணியிங்களான்னு பாருங்க..!!
//

@raam, இல்லையே, அந்த சைட் வருதே!

PPattian : புபட்டியன் said...

Cookie based poll ஆ இது? குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்..

பொன்வண்டு said...

// Cookie based poll ஆ இது? குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்.. //

ஆமாங்க.. முயற்சி செய்தேன்.. மீண்டும் ஓட்டுப் போட அனுமதிக்கிறது...
(கள்ள ஓட்டு போடலைன்னு சொன்னா நம்பணும் :)))) )

ambi said...

//Cookie based poll ஆ இது? குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்..

//

ஆஹா! இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே?

என்ன கொடுமை கைப்பு? :)))

இளைய கவி said...

ஆஹா! இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே?

என்ன கொடுமை கைப்பு? :)))

என்ன நடக்குது இங்க எனக்கும் ஓட்டு பெட்டி தெரியல.

இளைய கவி said...

ஹே யூ எஸ்சூஸ்மீ ! வேர் இஸ் மை ஓட்டு பெட்டி மேன்..

இராம்/Raam said...

அம்பி & இளையகவி,

எந்த Browser உபயோகப்படுத்துறீங்க? இல்லை'ன்னா கூகுள் ரீடர் மூலமா படிக்கிறீங்களா???

இது Iframe உபயோகப்படுத்தி எழுதப்பட்ட நிரல்... அதுனாலே இந்த பிரச்சினை பிரவுசர்'னாலதான் நம்புறோம்.... வேற பிரவுசர் உபயோகப்படுத்தி சொல்லுங்க...

PPattian : புபட்டியன் said...

//ஆஹா! இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே?

என்ன கொடுமை கைப்பு? :)))//

அம்பி. "ம்"னு சொல்லுங்க.. உங்க பதிவுக்கும் குத்தி தள்ளறோம்.. :)))

கப்பி பய said...

Update: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு...வெடிச்சிருச்சு..சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தத்துல வெளாங்காம போயிருச்சு....

Zoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...மின்மடல் மூலம் உங்கள் வாக்குகளை உறுதி செய்வது அவசியம்!! மறந்துடாதீங்க!

கப்பி பய said...

TBCD

உங்க பதிவு இதற்கு முந்தைய அறிவுப்பு பதிவுகள் எதிலும் பின்னூட்டத்துல தருவதற்கு மறந்துட்டீங்க போல..போட்டியில் இணைச்சாச்சுங்க!!

அம்பி

இப்ப பொட்டி தெரியுதா பார்த்து சொல்லுங்கண்ணா :))

புபட்டியன்

பூத் கேப்சரிங் 'தல' இருக்க வரைக்கும் நடக்காது..முடியாது :))


பொன்வண்டு

நீங்க கள்ள ஓட்டு போட்டிருக்க மாட்டீங்க தெரியும் :))

நீங்க மட்டுமில்ல..மக்கள் யாரும் கள்ளவோட்டு போடமாட்டாங்கன்ற நம்பிக்கைல தான் இந்த மாதிரி வாக்குப்பதிவு வைக்கறது :))இளைய கவி

இப்ப ஓட்டு போடுங்க பாஸ்!!

கபீரன்பன் said...

இவ்வளவு பதிவுல ரெண்டே விருப்பம் தானா! ரொம்ப கஷ்டமுங்கோ. கொறஞ்சது 5 பதிவுக்காவது தெரிவு செய்ய அனுமதி வேணும்.
அப்புறம் எப்படி கணக்கு பண்ணனுங்கறதஇந்த பதிவுல சொல்லியிருக்கேன் பாருங்க

கபீரன்பன் said...

மன்னிக்கணும். ஏதோ காரணத்தினால மேலே நான் கொடுத்த இணைப்புச்சுட்டி வேலை செய்யவில்லை. பதிவுக்கான சுட்டி இங்கே

http://nirmal-kabir.blogspot.com/2007/04/blog-post_29.html

நன்றி

தமிழ் பிரியன் said...

///உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க///
ஒரு ஓட்டுக்கு மட்டுமே அனுமதிக்கின்றது...

ambi said...

//இப்ப பொட்டி தெரியுதா பார்த்து சொல்லுங்கண்ணா :))
//

@kappi, என் வயத்துல பீரை சே! பாலை வார்த்தீங்கண்ணா. பொட்டி தெரியுது. :))

NewBee said...

//தமிழ் பிரியன் said...
///உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க///
ஒரு ஓட்டுக்கு மட்டுமே அனுமதிக்கின்றது...

//

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :((((

இராம்/Raam said...

தமிழ்பிரியன் & NewBee,

அது ரெண்டு பதிவுகள் இல்லை.. எதாவதொரு "ரெண்டு" பதிவு.... :))

இப்போ புரிஞ்சதா??? ;)

NewBee said...

//இராம்/Raam said...
தமிழ்பிரியன் & NewBee,

அது ரெண்டு பதிவுகள் இல்லை.. எதாவதொரு "ரெண்டு" பதிவு.... :))

இப்போ புரிஞ்சதா??? ;)

//

ஆ! ஆ! ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இது ரொம்ப அநியாயம்.ஏங்க இவ்வளவு பதிவுகள் இருக்கு,ஒண்ணே ஓண்ணா.கொஞ்சம் தயைக் கூறுங்களேன்.:(.

யாராவது இதைக் 'கண்டபடி'வழிமொழியுங்களேன்.

கப்பி பய said...

NewBee

//இது ரொம்ப அநியாயம்.ஏங்க இவ்வளவு பதிவுகள் இருக்கு,ஒண்ணே ஓண்ணா.கொஞ்சம் தயைக் கூறுங்களேன்.:(.//


ஆளுக்கு ஒரு ஓட்டு தானங்க..ஆனா இதுல ஒரே ஒரு பதிவை மட்டும் தேர்ந்தெடுக்க போறதில்ல..இதுல இருந்து தலை இருபது பதிவுகளை இரண்டாம் கட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் போறோம்..கவலையே வேண்டாம் :))

செல்விஷங்கர் said...

வாக்க்கு பதிவாகி விட்டது என செய்தி வருகிறது - நான் இதுவரை வாக்குப் போட வில்லை.

மறுபடியும் முயற்சி செய்ததில் நேரடியாக பதிவுகளின் மதிப்பெண் பட்டியலுக்குச் சென்று விட்டது.

என் வாக்கு என்ன வாகும் ??

வெட்டிப்பயல் said...

பி.க :-)

Anonymous said...

தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டா ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பி.க - "2"

கப்பி
இதுவும் ரெண்டு போட்டிக்கு சேத்துக்க ராசா :-)

வெட்டிப்பயல் said...

//தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டா ?//

உண்டு... ஆனா எங்க பதிவுல இல்லை.. உங்க பதிவுல ;)

Blogeswari said...

Would have loved to vote, but the series of irritating mails from a fellow-blogger begging for votes put me off!

KRP said...

பதிவர்கள் ஓட்டு போடலாமா கூடாதா ?

அன்புடன்
கே ஆர் பி

PPattian : புபட்டியன் said...

யாராவது அத்தனை படைப்பையும் படிச்சு பாத்துட்டு ஓட்டு போடறாங்களா?

எல்லாரும் அவங்கவங்க பதிவுக்கோ (நான் உள்பட) அல்லது, அவங்க நண்பர்களுக்கோ கண்ணை மூடிட்டு குத்தறாங்க.. :(

நாட்டம.. தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு சொல்லப்போறாங்க...

PPattian : புபட்டியன் said...

ஏன் முதல் இருபது பதிவை வ.வா.சவே தேர்ந்தெடுத்து, அதுக்கப்புறம் இந்த ஓட்டு டெக்னிக்ல பத்து பதிவை இறுதிக் கட்ட போட்டிக்கு செலக்ட் செய்யக்கூடாது...

KRP said...

Saththiyamaana UNMAI

ithai naan aamothikkiren

anbudan
KRP

கப்பி பய said...

Blogeswari

மக்கள்ஸ் பிரச்சாரம் பண்ணுவாங்க..நீங்க எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு உங்களுக்கு விருப்பமான பதிவுக்கு வாக்களிங்க! தேர்தல்ல எல்லா வேட்பாளரிடமிருந்தும் 'அன்பளிப்பு' வாங்கிக்கொண்டு ஒருத்தருக்கு மட்டும் ஓட்டு போடறதில்லையா..அது மாதிரி தான் இதுவும்..உங்கள் தேர்வுக்கு தவறாமல் வாக்களிங்க!!


KRP

//பதிவர்கள் ஓட்டு போடலாமா கூடாதா ?//

தாராளமாக போடலாம்...போட்டியில் கலந்துகொள்பவரும்கூட எல்லா பதிவுகளையும் படித்து பாரபட்சமின்றி அவர் சிறந்ததாகக் கருதும் பதிவுக்கு வாக்களித்தால் சிறப்பு!!


புபட்டியன்

இது சங்கம் ஆண்டுவிழாவை அனைவரோடும் சேர்ந்து கொண்டாட நடத்தப்படும் போட்டி..அதனால எல்லோரும் சேர்ந்து சிறந்த பதிவுகளுக்கு பரிசு தந்தால் சிறப்பு என்ற எண்ணத்தில்தான் சங்கமே பதிவுகளை தேர்ந்தெடுக்காமல் வாக்களிப்பு நடத்தறோம்..

மக்கள்ஸ் எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு தங்களுக்கு பிடிச்ச பதிவுக்கு ஓட்டு போடுவாங்க என்ற நம்பிக்கைல தான் இந்த மாதிரி வாக்கெடுப்பு நடத்தறோம்...ஆனா நீங்க சொல்வது போல் சிலர் வாக்களிப்பது துரதிர்ஷ்டமே!!

இங்க நட்புக்கு மரியாதை செய்து கொண்டே 'எங்க வார்ட் கவுன்சிலர் ரோடு காண்ட்ராக்டை அவரோட மச்சானுக்கே வாங்கிக் கொடுத்துட்டார்..எல்லா இடத்துலயும் ஊழல், வாரிசு அரசியல்" என்று கருத்து சொல்லிட்டு இருப்பாங்க!!

PPattian : புபட்டியன் said...

//இங்க நட்புக்கு மரியாதை செய்து கொண்டே 'எங்க வார்ட் கவுன்சிலர் ரோடு காண்ட்ராக்டை அவரோட மச்சானுக்கே வாங்கிக் கொடுத்துட்டார்..எல்லா இடத்துலயும் ஊழல், வாரிசு அரசியல்" என்று கருத்து சொல்லிட்டு இருப்பாங்க!!//

:))))))))))))))))))

இரா. வசந்த குமார். said...

விமர்சனங்களை சேத்துக்கோங்க...!

ரெண்டு : விளம்பரமும், விமர்சனங்களும்.

கப்பி பய said...

வசந்தகுமார்

நன்றிங்க!

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி கப்பிBoy....

இரா. வசந்த குமார். said...

என்னங்க... போட்டி நிலவரம் என்னங்க ஆச்சு...! சத்தத்தையே காணோம்...?

ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சு!!

இனிமேல வ.வா.ச. போட்டின்னா கலந்துக்கவே யோசிக்கணும் போல...!!!

இராம்/Raam said...

//இரா. வசந்த குமார். said...

என்னங்க... போட்டி நிலவரம் என்னங்க ஆச்சு...! சத்தத்தையே காணோம்...?

ஒரு மாசம் ஓடிப் போயிடுச்சு!!

இனிமேல வ.வா.ச. போட்டின்னா கலந்துக்கவே யோசிக்கணும் போல...!!!//


வசந்த்,போட்டி முடிவுகளுக்கு கொஞ்சம் அதிகமான நாட்கள் எடுத்துக்கிட்டோம்'கிறது உண்மைதான்... இப்போ ரெண்டாம்க்கட்ட தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டாச்சு பாருங்க....

kalyan kumar said...

ஏம்பா சங்கத்த்து ஆளுங்களே! ரெண்டுன்னு ஒரு போட்டி வச்சீங்களே, அதோட முடிவுதான் என்னாச்சு? நானும் அதுல கலந்துகிட்டேன். ஆனா ஒரு தகவலும் இல்லையே? தயவு செய்து சொல்லுறீகளா? கல்யாண்ஜி,kalyangii.gmail.com
kalyaje.blogspot.com