Saturday, May 17, 2008

கைப்புள்ள VS கட்டதுரை ! சிங்கத்துக்கே சிக்கெடுத்தவண்டா நானு !

கிராம சந்தைக் கூடும் போதெல்லாம், ரவுடி பில்டப்பில் பணம் வசூல் செய்துவருகிறார் கைப்புள்ள, அவருக்கு நான்கு அல்லக்கைகள் வேறு.

எல்லோரும் சந்தைக்கு வசூல் வேட்டைக்கு கிளம்புகிறார்கள்.
சந்தையில் கடைக்காரர்கள் கைப்புள்ளையை கண்டதும்

"கைப்புள்ள வர்றான், கைப்புள்ள வர்றான் காசை மூடுங்க, முடிஞ்சா எல்லாத்தையும் துணியைப் போட்டு மூடுங்க"

அல்லக்கை 1 : அண்ணே, உங்களப் பார்த்து எம்புட்டு பயம்

கைப்பு அவனுக்கு ஒரு அரை விட்டுவிட்டு

கைப்பு : நான் யாரு, ரவுவுடி.....பயப்படாமல் என்கூட பம்பரம்
வெளையாட கூப்பிடுவாங்களா ?

அல்லக்கை 2 : அண்ணே அங்க பாருங்க, முறுக்குகாரி உங்களைப் பார்த்ததும் முறுக்கெல்லாம் மூடி வைக்கிறா...

அனைவரும் அங்கே செல்கிறார்கள்

கைப்பு : அடியே என் பெரிய அத்தே, ஏன் மூடி வச்சு வியாபாரம் பார்க்கிறியே ?

முறுக்குகாரி : மூடி வைகலைன்னா , கண்ட நாயும் கவ்விக்கிட்டு போய்டும்

கைப்பு : நக்கலு ? சரி இன்னிக்கு எம்புட்டு வியாபாரம் ஆச்சு ?
முறுக்குகாரி : அதையேன் உன்கிட்ட சொல்லனும், இந்த இரண்டு முறுக்கை கடிச்சிக்கிட்டே எடத்தை காலி பண்ணு.

கைப்பு : அதை மொதலிலேயே கொடுத்து இருந்தா, நான் ஏன் உங்கிட்ட மல்லுக்கட்டப் போறேன்

முறுக்குகாரி : மல்லுக்கட்டிதான் பாரேன், என் புருசன் வெட்டிட்டுதான் ஜெயிலில் இருக்கான்.

கைப்பு அங்கிருந்து நகர்கிறார், அடுத்து பட்டானிக்கடைக்குச் செல்கிறார்கள்

ஒரு பிடி வறுத்த வேர்கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே

கைப்பு : இது பொறிக்கடலை தானே ?

கடைக்காரர் : உங்க ஊரில் பொறிக்கடலை, எங்க ஊரில் வறுகடலை

கைப்பு : என்னமோ ஒரு கடலை, சரி கமிசனை எடு

கடைக்காரர் : டேய் கொள்ளிக் கட்டையை வெளியே இழு

கைப்பு : எதுக்கு கொள்ளிக்கட்டையெல்லாம், இன்னிக்கு வியாபாரம் ஆகலைன்னு தன்மையாக சொன்னால் போயிடப் போறோம்

கடைக்காரர் : அட அது இல்லை, ஒரே பொகையாக இருக்கு வேற கரியைப் போடச் சொன்னேன்,

கைப்பு : சரி சரி வாரேன், சாயந்தரம் இந்த பக்கம் வருவேன் எடுத்து வை

கடைக்காரர் : இப்பயே வாங்கிட்டுப் போ, டேய் அந்த ...

செல்லிக்காமல் இடத்தை காலி செய்கிறார்

அடுத்து கட்டதுரை கறி விற்கும் இடத்திற்கு செல்கிறார்கள்

அல்லக்கை 3 : அண்ணே, கட்டதுரை பாயி ரொம்ப நாளாக ஏமாத்திக்கிட்டு வர்றாண்ணே

கைப்புள்ள : இன்னிக்கு பாரு, அவன் ஆடு வெட்டுறானா இல்லை நான் அவனை என்ன செய்கிறேன்னு பாரு

இடத்தை நெருங்குகிறார்கள்

கைப்புள்ள : டேய் கட்டதுரை ...

கட்டதுரை : வா...கைப்புள்ள....இங்கே எப்படியும் வருவேன்னு தெரியும்...என்ன வேண்டும், இன்னிக்கே வாங்கிக்கிறியா ? இல்லாட்டி ?

தள்ளி நின்று கொண்டே

கைப்புள்ள : என் ஆளை அங்கிட்டு அனுப்புறேன், அவன்கிட்ட கொடு

நெருங்கிச் சென்ற அல்லக்கைக்கு கட்டதுரையின் கையால் பலத்த அரை விழுகிறது

கைப்புள்ள : இப்ப என் ஆள அடிச்சுட்டே மன்னிச்சு விட்டுறேன்...என்மேல கைவச்சு பாரு

கட்டதுரை கைப்புள்ளையை நெருங்கி, ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டு,

கட்டதுரை : இப்ப என்ன சொல்றே ?

அசராமல்

கைப்புள்ள : ம்ம்ம்ம்ம் இரண்டாவதும் கைவச்சுதான் பாரேன்

மறுபடியும் அறை விழுகிறது

கைப்புள்ள : ஸ்டாப் ஸ்டாப் உனக்கு இரண்டு சான்ஸ் கொடுத்தேன் முடிஞ்சுட்டு, அத்தோடு முடிச்சிக்கிறனும், அது மரியாதை.

கட்டதுரை : இல்லேண்ணா ?

அதற்குள் நான்காவது அல்லக்கை செல்பேசியில் யாருனோ பேசிவிட்டு

அல்லக்கை 4 : அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு

கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச...நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து...அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி.... உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை...காப்பாத்திக்க...

கட்டதுரை : இந்தா கைப்புள்ள....வாங்கிட்டுப் போ,,,,,,,

கட்டதுரை கைகொட்டி சிரிக்கிறார்.

கைப்புள்ள மனதுக்குள், 'பாவி பய கன்னத்துல கைவச்சுட்டனே, கண்ணெல்லாம் பொறி பறக்குது...வலிதெரிகிற மாதிரி காட்டிக்கிட்டா அப்பறம் ஒரு பயலும் பயலுக்கும் பயம் இல்லாமல் போய்டும்'

அல்லக்கை 3 : அண்ணே வலிக்குதான்னே ?

கைப்புள்ள : நான் யாரு சிங்கத்துக்கே சிக்கெடுத்தவண்டா நானு...... எனக்கு வலியா ? போடா எ...வென்று...

வலியை பொறுத்துக் கொண்டு அவனை முறைக்கிறார்

பிகு : தமிழகம் செல்வதால் நேரம் கிடைக்கும் போது கர்ஜிப்போம் ! சிங்கமாமே...:))

3 comments:

ambi said...

:)))
நல்ல காமடி டிராக்.

Bee'morgan said...

மற்ற பதிவுகள் அளவுக்கு இல்லையே.. ! ஏதோ ஒன்னு குறையற மாதிரி ஒரு feel..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கலக்கல்! :-)

// தமிழகம் செல்வதால் நேரம் கிடைக்கும் போது கர்ஜிப்போம் ! சிங்கமாமே...:))//

என்னாது கர்ஜ், குர்ஜ்-ன்னுகிட்டு?
சிங்கம் முழங்கும்! தமிழ்ல் சொல்லுங்க அண்ணா!
டிபிசிடி அண்ணாச்சி, கோவியாரைக் கொஞ்சம் கவனிங்க! :-)