Wednesday, February 20, 2008

சால்சா மோனிகா பால் - 2

முதல் பாகம் இங்கே

என்னடா...காதல் கதைன்னு சொல்லீட்டு காதலே வரலைன்னு சொல்றீங்களா? அது வர்ரதுக்குக் காரணம் வேணும்ல. அந்தக் காரணத்துக்குத்தான் வெச்சோம் ஒரு பயணம். விமானப் பயணம். லண்டன்ல சாக்ஸ் சண்முகசுந்தரத்துக்கும் மோனிகா பாலுக்கும் சண்டை வந்துச்சுல்ல. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பாரீசுக்குப் போறாங்க. சென்னை பாரீஸ் இல்லைங்க. இது பிரெஞ்சுப் பாரீசு. அதுக்குக் காரணம் சவடால் சாண்டியாகோதான். சங்கப் போர்வாள்...தங்கத் தேர்வாள் தேவ் அந்தப் பாத்திரத்த ஏத்து நடிக்கப் போறாருன்னு ஏற்கனவே பாத்தோம்.

அந்தச் சவடால் சாண்டியாகோவுக்கு என்ன வேலை? ஏற்பாடு செய்றதுதான். அதாவது.... பிரெஞ்சு பிரதமரு, ஜெர்மன் ஜனாதிபதி, கொசாவா குடியரசுத்தலைவர்னு சிநேகிதம் பிடிச்சு வெச்சுக்கிறது. அப்படியே அவங்க வீட்டு கல்யாணம், வேலண்டைன்ஸ் டேக்கு பாட்டுக் கச்சேரிகளை ஏற்பாடு செய்றதுதான் வேலையே. அப்படித்தான் நம்ம கதாநாயகனோட சாக்ஸ் கச்சேரியையும் கதாநாயகியோட சால்சாவையும் பிரஞ்சு விவசாய அமைச்சர் வீட்டு விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காரு. அதுனாலதான் ரெண்டு பேருக்கும் ஒரே பிளைட்ல டிக்கெட் வாங்கி அனுப்பிட்டாரு.

வழக்கமா கச்சேரிக்குப் போறவங்கள்ளாம் செட்டாத்தான் போவாங்க. மோனிகா கூட அவங்கம்மா மார்க்கரெட்டு... மேக்கப் செட்டு மேரி.. பியானோ பீட்டருன்னு ஒரு படையே கெளம்பும். நாயகனோட ஒரே ஒரு ஆளுதான். அவர்தான் டிரம்ஸ் டேவிட்டு. அதுக்கு ரொம்பப் பொருத்தம் யார்னா ஆன்மீகச் செம்மல்..சண்மதச் செல்வர்...சொல்வின் செல்வர் கே.ஆர்.எஸ்தான்.




அந்த விமானப் பயணத்துல டிரம்ஸ் டேவிட் பக்கத்துலதான் மொதல்ல மோனிகா பாலுக்கு எடம் கெடைக்குது. ஆனா சாக்ஸ் சண்னுக்கு மோனிகா மேல ஒரு இதுன்னு தெரிஞ்சதுல இருந்து அந்த எடத்த கதாநாயகருக்கு விட்டுக் கொடுக்க விரும்புனாரு டேவிட்டு.. அதாவது ஆன்மீகப் புயல் கே.ஆர்.எஸ். அப்ப ஒரு டயலாம் வெக்கிறோம்.

"தம்பி... இங்க குளுறுது.....ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கு. தலையும் கிறுகிறுங்குது...நேத்து நைட்டு வெட்டுன நண்டு வறுவலும் ஹெய்னகென் பீரும் அடிவயத்துல ஜலக்ஜலக்குன்னு குலுங்குது...நான் அங்க வர்ரேன். நீ இங்க வந்துரு"ன்னு சொல்லீட்டு இடம் மாறீர்ராரு. இடம் மாறும் போது வேணுக்கும்னே மார்க்கெரெட்டா அம்மா மேல மோதுறாரு.

அப்பத்தான் மொதமொதல்ல நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் வருது. பக்கத்துல பக்கத்துல உக்காந்திருக்காங்கள்ள. அவங்க பாரீஸ் சார்லஸ் தி ஹால் ஏர்ப்போர்ட்ல எறங்குறப்போதான் சவடால் சாண்டியாகோ எண்ட்ரி ஆகுறாரு. வர்ரப்பவே கூட அப்ரசெண்டையும் கூட்டீட்டு வர்ராரு. படத்துல பாக்குறீங்களே அவங்கதான். சவடால் சாண்டிக்கு பஞ்சு டயலாக்கு நெறைய வெக்குறோம்.

"சாண்டியாகோவுக்குச் சவடால்...விவசாயத்துக்குப் பாலிடால்"

"எக்மோர்ல இருக்குற மால் பேரு அல்சா....இந்தப் பாப்பா ஆடுற டான்சுக்குப் பேரு சால்சா"

"என் பேச்சக் கேக்கனும் சாக்ஸ்சு...இல்லைன்னா ரெடியாகுது பாக்ஸ்சு"

"பிகருதான் எனக்குப் பவரு...அதப் பாத்து நீங்க முட்டிக்க இருக்கு சொவரு"

"சாண்டியாகோக்கு இருக்குற ரசிகர் கூட்டமோ லேக்ஸ்... உங்கிட்ட இருக்கிறதோ ஒரே ஒரு சாக்ஸ்"

"சாக்ஸபோன் சத்தம் கேட்டா...எல்லாரும் singu....சாண்டியாகோ சத்தம் கேட்டா எல்லாருக்கும் பாங்கு"

இதெல்லாம் சாம்பிள்தான். அவரு கலக்குனா அண்டார்டிக்காவே அண்டர்வேர் இல்லாம ஓடும். அந்த அளவுக்கு ரகளை பார்ட்டி.

எப்படியாச்சும் மோனிகாவையும் சாக்ஸையும் சேர விடக் கூடாதுன்னு முயற்சி செய்ற பாத்திரம். போட்டியைத் தடுத்து நிறுத்தப் பாக்குறாரு. ஆனா போப்பாண்டவர் முன்னாடி வாட்டிகன்ல போட்டீங்குறதால அது மட்டும் முடியலை. ஆனா விடுவாரா? இத்தாலி மாபியா லீடரப் போய் பாக்குறாரு. "இந்த மோனிகா பொண்ணு ரோம்ல உங்க கூட ரோமிங் பண்ண வேண்டியது. யாரோ ஒரு தமிழ் நாட்டு ஊதுவானுக்குப் பொண்டாட்டியா போறதா? வெள்ளைப் பாலைக் கருப்புக் காப்பீல கலக்குறதா? சீஸ்தான் பீட்சாவுக்கு பேஸ். பீட்சாவுக்கே இத்தாலிதான் பேஸ்"னு கண்டதப் பேசி மனச மாத்தீர்ராரு.

மாபியான்னா வில்லன்கள்னு ஒங்களுக்குப் புரிஞ்சிருக்குமே. இங்கதான் வில்லன்களோட எடத்துல ஒரு பாட்டு வெக்கிறோம். செமயான பாட்டு.

மாபியா மாபியா
நீங்க குடிக்கிறது
காபியா காபியா
பீட்சா பர்கர் பன்னாச்சு
உன்னைப் போட்டுத் தாக்கும் பொண்ணாச்சு

இப்பிடி ஒரு செந்தமிழ்ப் பாட்டை எழுதனும்னா வாளிபக் கவிஞரோ கவிகளின் பேரரசோ தேவையிருக்கும். அதுனால என்ன...விட்டா இந்தப் பாட்டுக்கு அவங்களே தேசியவிருதும் வாங்கிக்கிருவாங்க. நமக்கும் விளம்பரமாயிரும்.

நடுநடுவுல சாக்ஸ் சண்ணுக்கும் சவடால் சாண்டிக்கும் சின்னச் சின்ன சண்டை வருது. பாரீஸ் சர்ப் ஆப் நாத்ரதாம்ல சண் சாக்ஸ்ல ஒரு தமிழ்ப் பாட்டுதான் வாசிச்சாரு. அது யாருக்கும் புரியலைன்னு சாண்டி பிரச்சனையக் கெளப்புறாரு. அப்ப கதாநாயகருக்கு பஞ்சு டயலாக்

"தமிழ்தான் என் மூச்சு. அதுதான் என் சாக்ஸபோனுக்கும் மூச்சு" அப்படீன்னு நெத்தி நரம்பு பொடைக்க வீரவசனம் பேசுறாரு.

அப்பத்தான் சாண்டி கேக்குறாரு. "ஏண்டா....தமிழ் என்ன ஆக்சிஜன் சிலிண்டராடா? என்னவோ முதுகுல தூக்கிக்கிட்டே போற மாதிரி மூச்சு மூச்சுங்குறீங்களேடா?"

இப்பிடிச் சண்டை பெருசாகிக்கிட்டே போயிதான் மாபியா கிட்ட ஏத்தி விடுறாரு. ஆனாலும் எப்படியோ போட்டி நடக்குற நாளும் வந்துருது. போப்பாண்டவர் உக்காந்திருக்க அவரு முன்னாடி வாட்டிகன் சர்ச்சுல சாக்ஸ் வாசிக்கிறாரு கதாநாயகரு. ஆனா அங்கதான் ஒரு புதுமையப் பண்றோம். மொதமொதல்ல சாக்ஸ்ல கானா பாட்டு வெக்கிறோம். சாக்ஸ் இசையில் கானாங்குறது இசையுலகத்துல இதுவரைக்கும் யாருமே செய்யாத புதுமை. அனேகமா இந்தப் புதுமைக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கிற வாய்ப்பு ரொம்பப் பிரகாசமா இருக்கு. அதே மாதிரி கானாபாட்டுக்கு சால்சா ஆடுறதும் பெரும் புதுமை. இப்படி இவரு வாசிக்க....அந்தப் பொண்ணு ஆட...ஆகா..ரெண்டு பேரையும் பாத்தா தில்லான மோகனாம்பாள் படத்துல சிவாஜி பத்மினியப் பாத்த மாதிரியே இருக்கும்.



அப்பத்தான் சாண்டி ஏத்திவிட்ட மாபியா மாண்டி உள்ள வந்து துப்பாக்கியால சுடுறான். அதக் கதாநாயகி பாத்து தடுக்குறாங்க. ஆனா தவறி குண்டு சாக்ஸ் மேல பட்டுறுது. அதுனால ஏற்கனவே இருக்குற ஓட்டைல கூட ஒரு ஓட்டை வந்துருது. ஆக ஏழு சுரத்துக்கு மேல எட்டாவது சுரம். அந்தச் சுரத்துல ஜுரம் வர்ர மாதிரி வாசிக்கிறாரு ஹீரோ. ஏழு சுரம்னு இதுவரைக்கும் மக்களை ஏமாத்தீட்டு இருந்த இசைமேதைகளுக்கெல்லாம் நம்ம படம்தான் ஆப்பு.

இந்தக் கிளைமாக்ஸ் பாட்டுதான் படத்துல கிளைமாக்ஸ். அந்தப் பாட்டு முடியுற நேரத்துல சரியா இத்தாலி போலீஸ் வந்து சவடால் சாண்டியாகோவை அள்ளிக்கிட்டு போகுது. மாபியா மாண்டி அங்கயே திருந்தி போப்பாண்டவர் கிட்டயே பாவமன்னிப்பு கேக்குறதால அவரை மட்டும் மன்னிச்சு விட்டுர்ராங்க.

எட்டு சுரப் பாட்டு முடியுறப்போ வாட்டிகன் சர்ச்சுல இருக்குற ஏசுநாதர் கண்ணுலயும் மேரிமாதா கண்ணுலயும் ரத்தக்கண்ணீர் வருது. அப்பத்தான் காதல் பொங்கி நாயகனும் நாயகியும் அஞ்சு நிமிஷம் ஸ்லோமோஷன்ல ஓடி வந்து கட்டிப்பிடிக்குறாங்க. ரெண்டு பேரையும் ஆசீர்வதிச்சி அங்கயே போப்பாண்டவரே கல்யாணம் செஞ்சு வெக்கிறாரு.

இதுதான் சாக்ஸ் சால்சாவும் இணைஞ்சு பரோட்டாவும் சால்னாவுமா ஆன கதை.

பி.கு - அடுத்த வாரம் இசையமைப்பாளர் எம்.எஸ்.இளையமானோட ஒரு நாள்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

15 comments:

இராம்/Raam said...

Total ROTFL post.... :)

கப்பி | Kappi said...

:))))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனா சாக்ஸ் சண்னுக்கு மோனிகா மேல ஒரு இதுன்னு தெரிஞ்சதுல இருந்து அந்த எடத்த கதாநாயகருக்கு விட்டுக் கொடுக்க விரும்புனாரு டேவிட்டு.. அதாவது ஆன்மீகப் புயல் கே.ஆர்.எஸ்//

இல்ல! இல்ல!
டிரம்ஸ் டேவிட் விட்டும் கொடுக்க மாட்டான்! புட்டும் கொடுக்க மாட்டான்! எலே சாக்சு தள்ளி உக்காருலே!

//இடம் மாறும் போது வேணுக்கும்னே மார்க்கெரெட்டா அம்மா மேல மோதுறாரு//

அப்ப சரி...
வுட்டூக் கொடுத்தறான் டேவிட்டு! :-)
எலே சாக்சு வழி வுடுலே! எம்மாவோட அம்மா கூப்புடுறாக!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏண்டா....தமிழ் என்ன ஆக்சிஜன் சிலிண்டராடா//

தியேட்டர்-ல படம் பாக்கும் போது பொங்கிருவோம்ல! ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

//அவரு முன்னாடி வாட்டிகன் சர்ச்சுல சாக்ஸ் வாசிக்கிறாரு கதாநாயகரு. ஆனா அங்கதான் ஒரு புதுமையப் பண்றோம். மொதமொதல்ல சாக்ஸ்ல கானா பாட்டு வெக்கிறோம்//

போப்பாண்டவர் நம்ம கானா பிரபா அண்ணனா? அதான் கானாப் பாட்டைப் போட்டீங்களா? சூப்பரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அனேகமா இந்தப் புதுமைக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கிற வாய்ப்பு ரொம்பப் பிரகாசமா இருக்கு//

நோ சான்ஸ்! டைரக்டர் சார்...
கதையில் திருப்பம் ரொம்பவே கம்மி!
First half-ல நல்லா இருந்திச்சி! Second half-ல..ஹூஹூம்! சாரி!

நலம் தானா பாட்டு இல்லாம, சால்சா மோகனாம்பாளா? சேச்சே!
ஹவ் ஆர் யூ, சாக்சு, ஹவ் ஆர் யூ
ஹார்ட்டும் பீட்டூம், ஹவ் ஆர் யூ?
ன்னு ஒரு செந்தமிழ்ப் பாட்டை எல்லாம் வைக்கவே இல்லியே!

குமரன் (Kumaran) said...

போன பகுதியில சால்னாவுல ஊறுன பிரியாணின்னு சொன்னீங்க. அது எனக்குப் பிடிக்காது. கொஞ்சமே கொஞ்சமா ஓரத்துல ஊத்தித் தொட்டுக்கத் தான் பிடிக்கும். அதனால சண்டைக்கு வரலாம்ன்னு இருந்தேன். இந்தப் பகுதியில பரோட்டாவும் சால்னாவும்ன்னு சொல்லித் தப்பிச்சீங்க. ஆகா. புரோட்டாவைப் பிச்சிப் போட்டு சால்னாவுல ஊறவச்சு சாப்புட்டா சூப்பரா இருக்கும். இன்னைக்கு ஊறவச்சு சாப்புட்ற வேண்டியது தான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எத வேணும்னாலும் மன்னிசிரலாம்! ஆனா எங்கத் தங்கத் தாரகை எம்மா வாட்சனைப் படத்துல சரியாவே காட்டவில்லை! கனவு சீன், காதல் சீன்-னு ஒரு சீனும் போடலை!

ஏழு சுரம் வாசிச்சா ஏழிசை ஏந்தல்!
எட்டு சுரம் வாசிச்சா "எட்ட"ப்ப ஏந்தல்!!
எங்கள் தங்கம், இயக்குனர் ஜிராவுக்கு "எட்ட"ப்ப ஏந்தல்-ன்னு சிறப்புப் பட்டம் வழங்கி கெளரவிக்கிறோம்! :-))

-இப்படிக்கு
பொதுச் செயலாளர்
ஏழுலக எம்மா வாட்சன் ரசிகர் பேரவை!

ILA (a) இளா said...

:))

இராம்/Raam said...

//நலம் தானா பாட்டு இல்லாம, சால்சா மோகனாம்பாளா? சேச்சே!
ஹவ் ஆர் யூ, சாக்சு, ஹவ் ஆர் யூ
ஹார்ட்டும் பீட்டூம், ஹவ் ஆர் யூ?
ன்னு ஒரு செந்தமிழ்ப் பாட்டை எல்லாம் வைக்கவே இல்லியே!//

ஆஹா KRS...சும்மா அதிர அதிர உடுக்கை அடிக்கிறீங்களே!!!! அட்டகாசமான பாட்டு.... இதே நம்ம CVR'ஐ விட்டு முழுசா எழுதிற சொல்லலாமா??? :))

CVR said...

//அவரு கலக்குனா அண்டார்டிக்காவே அண்டர்வேர் இல்லாம ஓடும்.அந்த அளவுக்கு ரகளை பார்ட்டி. ////
அது சரி!!

//பாரீஸ் சர்ப் ஆப் நாத்ரதாம்ல சண் சாக்ஸ்ல ஒரு தமிழ்ப் பாட்டுதான் வாசிச்சாரு. அது யாருக்கும் புரியலைன்னு சாண்டி பிரச்சனையக் கெளப்புறாரு.////
அட!!!
சாக்ஸபோன்ல தமிழ்ல வாசிச்சா என்ன ,இந்தில வாசிச்சா என்ன??? எதுல வாசிச்சாலும் வார்த்தை கேட்காதே!!இதுக்கு ஒரு சண்டையா????
சாண்டிக்கு உங்களை போல சண்டை போட பிடிக்கும் போல!! :P

///சாக்ஸ் இசையில் கானாங்குறது இசையுலகத்துல இதுவரைக்கும் யாருமே செய்யாத புதும///
இது வேறையா??

//ஏழு சுரம்னு இதுவரைக்கும் மக்களை ஏமாத்தீட்டு இருந்த இசைமேதைகளுக்கெல்லாம் நம்ம படம்தான் ஆப்பு.///
ஆகா ஆகா!! ராசா மேலே உங்களுக்கு இம்புட்டு பெரிய காண்டு இருக்கும்னு தெரியாம போச்சே!! :-P

//அடுத்த வாரம் இசையமைப்பாளர் எம்.எஸ்.இளையமானோட ஒரு நாள்.////
ஆஹா!!அது எப்படி இருக்க போகுதோ!!!
என்ன ஒரு சின்ன டவுட்டு அண்ணாச்சி!!

இது வரைக்கும் அட்லாஸ் வாலிபர்னு இருந்த பெயரை நீங்க வந்த அப்புறம் அட்லாஸ் சிங்கம்னு மாத்தீட்டாங்க??? :-P
இல்லை!! ஏதோ தோனிச்சு கேட்டேன்!!

வழக்கம் போல கலகலப்பான கலக்கலான பதிவு!!
வாழ்த்துக்கள்!! :-)

G.Ragavan said...

// CVR said...
என்ன ஒரு சின்ன டவுட்டு அண்ணாச்சி!!

இது வரைக்கும் அட்லாஸ் வாலிபர்னு இருந்த பெயரை நீங்க வந்த அப்புறம் அட்லாஸ் சிங்கம்னு மாத்தீட்டாங்க??? :-P
இல்லை!! ஏதோ தோனிச்சு கேட்டேன்!! //

ஆகா.... வந்துட்டாய்யா...வந்துட்டான். இப்ப என்ன சொல்ல வர்ர? நான் மனுசன் இல்லைன்னு சிங்கம்னு எழுதீட்டாங்கன்னு சொல்ல வர்ரியா? இல்லை. வாலிபர் இல்லைன்னு சிங்கம்னு மாத்தீட்டாங்கன்னு சொல்ல வர்ரியா? எங்கயிருந்தய்யா கெளம்புறீங்க!!!!!!!!!!!!!!!!!!!!11

lucky said...

hello this is lucky and came to know that you also like playing SCRABBLE thats why this letter....i am knew to blog...visit my blog and leave your comments

கானா பிரபா said...

;-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆகா.... வந்துட்டாய்யா...வந்துட்டான். இப்ப என்ன சொல்ல வர்ர? நான் மனுசன் இல்லைன்னு சிங்கம்னு எழுதீட்டாங்கன்னு சொல்ல வர்ரியா?//

ஜிரா
நான் இருக்கும் போது கூட அட்லாஸ் வாலிபர்-னு தான் இருந்திச்சி!
நீங்க வரீங்கன்னு தெரிஞ்சி தான் மனசாட்சி தூண்டி வுட, "வாலிபர்" என்கிற சொல்லைத் தூக்கிட்டாங்களோ? :-)))

ஆனா நீங்க எப்பமே சிங்கம் தான் தலைவரே! மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம், சிரிப்புச் சிங்கம், சிந்தனைச் சிங்கம், சீரிளமைச் சிங்கம், சிங்கத்தின் சிங்கம், எங்கள் தங்கம், அண்ணன் ஜிரா வாழ்க வாழ்க!

(கொடுத்த காசுக்கு இவ்ளோ தான்பா கூவ முடியும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராம்/Raam said...
ஆஹா KRS...சும்மா அதிர அதிர உடுக்கை அடிக்கிறீங்களே!!!! அட்டகாசமான பாட்டு.... இதே நம்ம CVR'ஐ விட்டு முழுசா எழுதிற சொல்லலாமா??? :))//

ஆகா,
தல அப்படியே செய்யுங்க! சீக்கிரம் செய்யுங்க! முழுப்பாட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆனா அதுல எங்க தலைவி எம்மா வாட்சன் வருணனை கொஞ்சமாச்சும் வரனும் சொல்லிப்புட்டேன்! :-)