Tuesday, February 5, 2008

தாரே கோடம்பாக்கம் பர்

பொங்கலுக்கு ரிலீஸான படங்கள் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு படம் பார்த்தவர்களுக்கு என சகலருக்கும் ஆப்பு மேல் ஆப்பாக பார்சல் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் பொங்கல் ரிலீஸ் படங்களை வரிசையாக பார்த்து மப்பேறி மட்டையாகியிருக்கும் சின்னக் கலைவாணர் விவேக் கோலி ஜோடா அடித்து ஹேங் ஓவரைப் போக்க வடபழனி க்ரீன் பார்க்குக்கு வருகிறார். அங்கே ஏற்கனவே கோலிவுட் கும்பல் ஒன்று குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது

விவேக்: அடேய்! எங்கே போனாலும் ஒரு க்ரூப்பா வந்துடுறீங்களேடா! மனுசனை நிம்மதியா சோடா குடிக்கக் கூட விடமாட்டீங்களா? இப்ப யாருக்கு சமாதி கட்ட கூடியிருக்கீங்க?

பரத்:அட ஏற்கனவே எங்களுக்கு சமாதி கட்டற நிலமைல தான் இருக்கு. பேரரசு இளநீ பழனின்னு ரைமிங்கா டயலாக் சொல்லி டைமிங்கா ஆப்படிச்சுட்டாரு. இதுலருந்து எப்படி வெளிய வர்றது..எப்படி ஹிட் கொடுக்கறதுன்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அஜீத், விஜயகாந்துன்னு வரிசையா அந்தாள் ஆப்படிச்சுட்டு வரும்போதே தெளிவாயிருக்கனும்..வெள்ளை பெயிண்ட்ல விபூதியும் கருப்பு பெயிண்ட்ல மீசையும் வரைஞ்சு விட்டதும் ஃபேன்சி டிரஸ் காம்பெடிஷன்ல கலந்துக்க போற காண்வெண்ட் பையன் மாதிரி கெளம்பிட்ட..இப்ப ஃபீல் பண்ணி என்ன ஆவப்போகுது?

பரத்: அதில்ல சார். அடுத்த படத்துல ஒரு நல்ல கதையா புடிக்கனும். எல்லாரும் ரீமேக் பண்றாங்க..இப்ப தாரே ஜமீன் பர் தான் ஹிட்டு...அதை தமிழ்ல பண்ணலாமான்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அந்த சின்ன பையனா நீ நடிக்க போறயா? அதெல்லாம் உனக்கு சூட்டாவாது. அப்படியே நாலு குத்து பாட்டு ரெண்டு லெக் ஃபைட்டுன்னு ஒரு ரூட்டைப் புடிச்சு போய் பொழச்சுக்கோ

எஸ்.ஜே.சூர்யா: ஆங்க்...இப்படி சொன்னா எப்படி ஆங்க்...நான் கதையை ரெடி பண்ணிட்டேன்..ஆங்க்

விவேக்: மொதல்ல இஎண்டி ஸ்பெஷலிஸ்ட்ட காமிச்சு உன் தொண்டைய ரெடி பண்ணனும்டா

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்ன பையனா நானே நடிக்கறேன். அதாவது வயசு 22. மனசளவுல 12. அவன் க்ளாஸ்மேட் கல்பனா, சயின்ஸ் டீச்சர் சந்தியா, டியூஷன் மிஸ் மீனா, பக்கத்து வீட்டு பத்மா, அவனோட நொண்டி விளையாடற நமீதான்னு பார்க்கற பொண்ணுங்க மேல எல்லாம் பாசத்தைக் காட்டறான். அதைப் புரிஞ்சுக்காம அந்த சின்னப் பையனை

விவேக்: சின்னப் பையனா..கலிகாலம்டா டேய்

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்னப் பையனை பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துடறாங்க. அங்க பி.டி. மாஸ்டரா இன்னொரு சூர்யா. இந்த சூர்யாவும் அந்த சூர்யாவும் சேர்ந்து ஒவ்வொரு கேர்ள்ஸ் ஸ்கூலா, ஒவ்வொரு லேடீஸ் காலேஜா போய் சைட் அடிக்கறாங்க. கடைசில சைட் அடிக்கறது ஒரு வியாதி இல்ல..அவங்களோட வாழ்க்கை அப்படின்னு மக்களுக்கு புரியற மாதிரி ஒரு மெசெஜ் சொல்றோம். நடுல அம்மா செண்டிமெண்ட்ல இருந்து ஐயிட்டம் நம்பர் வரைக்கும் எல்லாத்தையும் கொண்டு வர்றோம்...வாலி பாட்டெழுதினா அத்தன பேரும் காலி

விவேக்: டேய் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடா! யூனிபார்ம் டவுசர்ல உன்னைப் பார்த்தா தமிழ்நாட்டுல எத்தன பேர் டவுசர் கிழியப் போதோ தெரிலயேடா..எங்களை எல்லாம் மன்னிச்சு விட்டுடக்கூடாதாடா?

அப்போது "ஆமாண்ணே..இல்லண்ணே...வெறும் லைம் ஜூஸ் தாண்ணே..தண்ணி நிறைய கலந்துட்டண்ணே..இல்லண்ணே ஒரு க்ளாஸ் தான்ணே" என்று மொபைலில் பேசியபடி வருகிறார்.

விவேக்: அடப்ப்ப்பாவி...ஒரு லைம் ஜூஸ் குடிக்கறதுக்கு மிக்ஸிங் கலந்து அதுக்கு போன்ல கன்னாபின்னான்னு பெர்மிஷன் வாங்கி..என்னடா நடக்குது இங்க..

ஜெயம் ரவி: இல்லைங்க..எனக்கு லைம் ஜூஸ் புடிக்கும்ங்க..எங்கண்ணனுக்கு புடிக்காதுங்க.அதுனால கொஞ்சமா குடிக்கறேங்க

என்று மூக்கால் பேசி ஃபீலாகிறார்.

விவேக்: தனியா வந்திருக்கியே செல்லம் வீட்டுல தேட மாட்டாங்களா ராசா??

ஜெயம் ரவி: இல்லைங்க..சொல்லிட்டு தாங்க வந்தேன்..எனக்கு ரீமேக் தாங்க ஹிட்டாகும். அதான் தாரே ஜமீன் பர் டிஸ்கஷன் ஓடுதுன்னு சொன்னாங்க வந்தேங்க

விவேக்: இங்க பாருடா! ரீமேக் தான் ஹிட்டாகுதாம்..தம்பி உங்க படம் கடைசியா எப்ப ஹிட் ஆச்சு ஞாபகம் இருக்கா?

ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பரா வந்திருக்கு. ஜெனிலியா அவ்ளோ அழகா இருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க. அண்ணன் சூப்பரா டைரக்ட் பண்ணியிருக்காரு. எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க

விவேக்: ஹிட் படம் எங்கடான்னு கேட்டா வரப்போற படத்தைப் பத்தி பேசறான்.. அதுசரி..உனக்கு தெலுகு படம் தானே ஒத்துவரும்..இந்தி பக்கம் வந்துட்ட?

ஜெயம் ரவி: ஓ இது இந்தி படமா? எனக்கு தெரியாதே..எங்கண்ணன் அனுப்பினாரு..அதான் வந்தேன்

விவேக்: என்னமோ போ..அங்க யாருடா தலைல சேமியாவை சொருவிட்டு வர்றது

சிம்பு: எனக்குப் புடிக்கல..தாரே ஜமீன் பர் எனக்கு புடிக்கல

விவேக்: தெரியுமே..நாலு ஹீரோயினைப் போட்டு படமெடுத்தா ஒனக்கு புடிக்கும். இது எப்படி புடிக்கும்

சிம்பு: இல்ல சார்.எல்லாருக்கும் பொறாமை. சின்ன வயசுலயே இவ்ளோ பண்றானேன்னு. இன்னும் கலக்குவான் இந்த சிம்பு. தாரே ஜமீன் பர்ரை தமிழ்ல எடுக்கறேன் சார்

விவேக்: நீ மட்டும் என்ன பெருசா எடுக்கப் போற. எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதைல கொஞ்சம் எதுனா மாத்துவ. அவ்வளவு தானே?

சிம்பு: இதுல அப்படியே உயிரை உருவி கைல வைக்கற மாதிரியான கதையை சொல்றோம்

விவேக்: கோடம்பாக்கத்துக்கு பஸ் புடிச்சு வரும்போதே எல்லா டைரக்டரும் மனப்பாடம் பண்ற மொத டயலாக்கே இதுதானேடா..உயிரை உருவறீங்களோ இல்லையோ..ப்ரொடியூசர் வேட்டியை நல்லா உருவறீங்கடா

சிம்பு: இந்தில சின்ன பையனுக்கு தானே வியாதி..ஆனா இதுல ஹீரோயினுக்கு டிஸ்செக்ஸியா

விவேக்: டேய் அது டிஸ்லெக்சியாடா

சிம்பு: ஏதோ ஒன்னு..இதுல ஹீரோயினுக்கு அந்த வியாதி இருக்கு. அவளை அது தெரியாம மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடறாங்க. அங்க நானும் இருக்கேன்

விவேக்: கரெக்டான இடத்துல தான் இருக்க..கண்டினியூ பண்ணு

சிம்பு: அங்க அவளைப் பார்த்ததுமே எனக்குள்ள ஒரு புயல். காதல் அப்படியே பொங்கிட்டு வருது

விவேக்: டாஸ்மாக்ல வாங்கற பீர் பாட்டிலே இப்பல்லாம் பொங்க மாட்டேங்குது..அதெப்படிடா உங்களுக்கு இந்த காதல் மட்டும் அப்படி பொங்குது??

சிம்பு:அவளை பார்த்து லவ்ஸ் ஆகும்போதுதான் அந்த ஹாஸ்பிடலுக்கு டாக்டரா இன்னொரு ஹீரோயின் என்னை விட வயசுல பெரியவங்க ஒருத்தர் வர்றாங்க

விவேக்: டேய் இந்த படத்துலயுமா...முடியலடா..அவ்வ்வ்

சிம்பு: இந்த முக்கோண காதல் கதைல நடுல இன்னும் ரெண்டு ஹீரோயினைப் போட்டு, சந்தானம், சத்யனை எல்லாம் கூப்பிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டியது தான். வருவான் சார். சிம்பு வருவான்

விவேக்: உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா..அங்க யாருடா தீவிரமா யோசிக்கறது??

பேரரசு: உட்டாலக்கடி உலக்கை
வூட்டாண்ட கீறான் அல்லக்கை
தண்டவாளத்துல ரயிலு
அடிக்கிது பாரு பிகிலு

என ஃபீலிங்காக எழுதிக்கொண்டிருக்கிறார்

விவேக்: சார்..என்ன சார் எழுதிறீங்க

பேரரசு: அடுத்த படத்துக்கு டூயட் எழுதறேன் சார்..சூப்பரா வந்துட்டுருக்கு..வார்த்தை அப்படியே விழுது

விவேக்: இது டூயட்டா...என்னவோ மணிரத்னம் 'கதை மடில வந்து விழுது'ன்னு பில்டப் கொடுக்கற ரேஞ்சுக்கு நீயும் கொடுகறீயே உனக்கே ஓவரா தெரியல

பேரரசு: திருத்தணி வந்தா திருப்பம் சார்..சொல்லி அடிக்கிறோம். 'தாயே செம்மீன் பல்' படத்தை ரீமேக் பண்றோம்.

விவேக்: மொதல்ல வாயைத் தொறந்து பேசுங்க சார். தாரே ஜமீன் பர் சொல்லுங்க பாக்கலாம்

பேரரசு: விஜய் டேட் கொடுத்துட்டாரு..இனி பேச்சு இல்ல..வெறும் வீச்சு தான்

விவேக்: என்ன வீசப்போறீங்க? உங்களை வெளிய பாத்தா ஆசிட் முட்டை வீச தான் ரெடியா இருக்காங்க

பேரரசு: அத விடுங்க..கதைய சொல்றேன்..படத்துல ஹீரோ டாஸ்மாக்ல வேலை பாக்கறாரு. ஹீரோயின் திரிசா பால்வாடி ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்கறாங்க. ஒரு சின்ன பையன் டெய்லி டாஸ்மாக்ல கட்டிங் வாங்கி அடிக்கிறான். இந்த சின்ன வயசுலயே இப்படி சரக்கடிக்கறானேன்னு நம்ம ஹீரோ அவனை பெருமையா பாக்கறாரு. அவன் யாருன்னு அவன் பின்னாடியே போய் பாக்கறாரு. பார்த்தா அது அவனோட அக்கா மகன். அக்கான்னா ஹீரோவோட பெரியப்பாவோட சித்தப்பாவோட மாமா பையனுக்கு ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பேத்திக்கு மக. அவ்வளவு நெருங்கிய சொந்தம். தன் மகன் தண்ணியடிக்கறது புடிக்காம அவ அழறதை ஹீரோ பாக்கறாரு. அந்த பையனை திருத்தனும்னு அவனுக்கு டாஸ்மாக்ல சரக்கு கொடுக்காம திருத்தராரு. ஆனா அக்கா புருஷன் அதுக்கு மேல குடிக்கறான். அவனையும் அடிச்சு திருத்தறாரு. கடைசில ஏரியா கவுன்சிலரையும் திருத்தராரு. எல்லாரையும் திருத்திட்டு டாஸ்மாக்ல சேல்ஸ் இல்லைன்னு வேலையை விட்டு தூக்கிடறாங்க. அப்ப லாங் ஷாட்ல குடும்பத்தோட சாராயம் காய்ச்ச போறாரு

விவேக்: உன் கதை ஏன்டா இப்படி காறித்துப்பற மாதிரி இருக்கு

பேரரசு: அப்படிலாம் சொல்லாதீங்க சார். இந்த படமும் கமர்சியல் ஹிட்டாகும் சார். அதுக்கேத்த மாதிரி ஸ்கிரீன் ப்ளே வச்சிருக்கேன் சார்

விவேக்: தமிழ்நாட்டு மக்களை இந்த விஷயத்துல்ல தான் டா என்னால புரிஞ்சுக்கவே முடியல..உன் படமெல்லாம் எப்படிடா ஹிட் ஆகுது??

எனும்போதே "எல்லா ஹீரோவுக்கும் அல்லு கிழலனும்..நாம தான் ரீமேக் பண்றோம்" என்று சே குவேரா கெட்டப்பில் திருமாவும் "இன்னும் நான் யூத்யா..தலைமுடி பாத்தியா ஒரிஜினல் ஹேரு..தாரே ஜமீன் பர்ரு நான் நடிக்கிறேன் பாரு" என்று டீ.ஆரும் "முகத்தை மூடி அழறதுல நான் இன்னொரு எம்.ஜி.ஆர். எனக்கு இந்த ரோல் அப்படியே பொருந்துதுன்னு அசிஸ்டெண்ட்ஸ் சொல்லிட்டாங்க" என்று சேரனும் கொலைவெறியுடன் ஓடி வர அங்கிருந்து அப்பீட் ஆகிறார் விவேக்.

33 comments:

CVR said...

:-)))))))
LOL!!

கலக்கல் காமெடி!! :-D

கருப்பன்/Karuppan said...

கொல வெறியோட கெளம்பிருகானுகளா...!!! குதிச்சிருடா... குதிச்சிருடா கைப்புள்ள......

Anonymous said...

கோடம்பாக்கத்துக்கு பஸ் புடிச்சு வரும்போதே எல்லா டைரக்டரும் மனப்பாடம் பண்ற மொத டயலாக்கே இதுதானேடா..உயிரை உருவறீங்களோ இல்லையோ..ப்ரொடியூசர் வேட்டியை நல்லா உருவறீங்கடா

Nice

ஜி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு முழு நீள காமெடி கலக்கல்.... :))

Badri said...

Super.

வவ்வால் said...

புரட்சிகரமாக எழுதி இருக்கிங்க, வலைப்பதிவின் புரட்சியாளர் நீரே :-))

பின்ன என்ன ஐடெம் சாங்க், குத்துப்பாட்டு, குத்து வசனம் இல்லாத படத்தை எல்லாம் இவனுங்க ரீ மேக் செய்வாங்கனு கற்பனையா எழுதுறது கூட புரட்சி தானே :-))

இதே கதையை தமிழில் எடுக்கிறேன், கவுரவத்தோற்றத்தில் நடிங்கனு ஆமிர் கான் வந்து கேட்டாக்கூட என்னோட பேன்ஸ் ஏத்துக்க மாட்டாங்கனு ஓடுவானுங்க இவனுங்க! :-))

வெங்கடாசலம் said...

super :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

க.க.போ!
கப்பி கலக்கீட்ட போ!

//டாஸ்மாக்ல வாங்கற பீர் பாட்டிலே இப்பல்லாம் பொங்க மாட்டேங்குது..அதெப்படிடா உங்களுக்கு இந்த காதல் மட்டும் அப்படி பொங்குது??//

அடா! அடா! அடா! :-)

தேவ் | Dev said...

ரவுண்ட் கட்டி கலக்கியிருக்கப்பா கப்பி சூப்பர் காமெடி

அரை பிளேடு said...

:)

//ஐடெம் சாங்க், குத்துப்பாட்டு, குத்து வசனம் இல்லாத படத்தை எல்லாம் இவனுங்க ரீ மேக் செய்வாங்கனு//

அதுதானே :)

கைப்புள்ள said...

குலுக்கி வச்ச கோகா கோலா போல குபீர் குபீர்னு சிரிப்பு கெளம்பிடுச்சுப்பா...சூப்பர் போஸ்ட் ஞானக்குழந்தாய்.
:))

குசும்பன் said...

செம கலக்கல் காமெடி, இப்படி நடந்தாலும் நடக்கும் படுபாவிங்களை நம்ப முடியாது:)

நன்றாக சிரித்தேன்:)

ஸ்ரீ said...

சூப்பர் காமெடி அப்பு :))

முரளி கண்ணன் said...

கலக்கிட்டியே கப்பி

இராம்/Raam said...

//குலுக்கி வச்ச கோகா கோலா போல குபீர் குபீர்னு சிரிப்பு கெளம்பிடுச்சுப்பா...சூப்பர் போஸ்ட் ஞானக்குழந்தாய்.
:))//

தல கமெண்ட்'க்கு வரி வரி ரீப்பிட்டேய்.... :)

பாச மலர் said...

"தாயே செம்மீன் பல்"

சிரித்து..சிரித்து...சிரித்து..என் மகள் கேட்கிறாள் "லூசாம்மா நீ"...சிரிப்பு இன்னும் ஓயவில்லை..

ஒரிஜினல் "மனிதன்" said...

ஏய், என்னய்யா இது. விழுந்து விழுந்து சிரிச்சு மண்ட வீங்கிருச்சு.
குலுங்கி குலுங்கி சிரிச்சு கும்பி வலிக்குது.

முழுநீள காமெடி படம் பாத்த எபெக்ட்.
சூப்பரப்பு.

Anonymous said...

namma makkal edutha athu taare zameen par illa DAR
-ISTHRI POTTI

இலவசக்கொத்தனார் said...

:))

அடுத்த பகுதி உண்டா?

மங்களூர் சிவா said...

'தாயே செம்மீன் பல்'

கலக்கல்

முழு பதிவும் நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்.

ILA(a)இளா said...

கண்ணுல தண்ணி பர்..............

தருமி said...

"தாரே கோடம்பாக்கம் பர்" ..வாரே..வா... பகுத் அச்சா ..

தருமி said...

"தாரே கோடம்பாக்கம் பர்" ..வாரே..வா... பகுத் அச்சா ..

இராமநாதன் said...

:)))))))))

கோபிநாத் said...

சூப்பர் காமெடி ஞானக்குழந்தாய் ;))

Sathiya said...

அருமையா அருமை. போன வாரம் காபி வித் அனுல பேரரசுவும் பரத்தும். இந்த கதைய எழுதும் போதே பேரரசுவுக்கு பரத் தான் ஞாபகம் வந்தாராம். பரத்தும் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா மக்கள் ஏத்துப்பாங்கலானு ரொம்ப யோசிச்சாறாம். பேரரசு தான் ரொம்ப நம்பிக்கியா இருந்தாராம். இவரு ஏதோ பழி வாங்கும் படலம் நடத்திட்டிருக்காருன்னு தோணுது. அடுத்து யார் மாட்ட போறாங்களோ?

Arasu said...

:)))))))))))))

-Arasu

கப்பி பய said...

எல்லாருக்கும் டாங்கிஸுங்கோ :))

G.Ragavan said...

ஹா ஹா ஹா செம காமெடி....

அதுலயும் சிம்பு மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்குறதாச் சொல்றதும்...சரியான எடத்துலதான் இருக்கேன்னு சொல்றதும்...அடடடடா! கலக்கீட்டீங்க கப்பி.

G.Ragavan said...

ஹா ஹா ஹா செம காமெடி....

அதுலயும் சிம்பு மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்குறதாச் சொல்றதும்...சரியான எடத்துலதான் இருக்கேன்னு சொல்றதும்...அடடடடா! கலக்கீட்டீங்க கப்பி.

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹை

சிரிச்சுச்சிரிச்சு..... இப்போ

வயித்துவலி:-))))

சந்தோஷ் said...

கப்பி கலக்கல்ஸ் ஆப் கோடம்பாக்கம்.. சூப்பர்பா.

Anonymous said...

итак: отлично.. а82ч