Tuesday, February 12, 2008

காதலிப்பது எப்படி?

மு.கு: என்னை எழுதும்படி அழைத்த சங்கத்து சிங்கங்களுக்கு முதலில் என் நன்றிகள்..

சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

-------------------------------------

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.

-----------------------------------------------------------------


Happy Valentines's Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.

25 comments:

CVR said...

சூப்பரு!!!
கலக்கிட்ட போ!!

கவுஜையே பட்டையை கிளப்புது!!!

எல்லோருக்கும் என்னுடைய வேலண்டைன்ஸ் டே நல்வாழ்த்துக்கள்!!! :-)

என்சாய் மாடி!! B-)

ILA... said...

அப்புறமா படிச்சுக்கிறேன்.

வாங்க வாங்க கனவா(னே)ரே..சங்கம் மலர் தூவி வரவேற்கிறது...

கப்பி பய said...

வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!! :)))

(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)

Dreamzz said...

@CVR

//சூப்பரு!!!
கலக்கிட்ட போ!!//
நன்றி நன்றி.. ஆனால்,நான் கரண்டி இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்!

//என்சாய் மாடி!! B-)//
எதுக்கு மாடிக்கு போனும்?

Dreamzz said...

@இளா
//வாங்க வாங்க கனவா(னே)ரே..சங்கம் மலர் தூவி வரவேற்கிறது//
அது ரோஜா மாதிரியே இருக்கே... அதுவும் நீளமான காம்போட ;)
ஹிஹி.. வரவேற்புக்கு நன்றி தல!

Dreamzz said...

@கப்பி பய
//வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!! :)))

(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)//
இதுக்கு நேரா திட்டி இருக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

பட்டையை கிளப்பிட்டீங்க...

// கப்பி பய said...

வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!! :)))

(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)//

கப்பி,
ட்ரீம்ஸ் மேல அவ்வளவு கொல வெறியா???

G.Ragavan said...

// பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது. //

இது சூப்பர்... இந்தப் பார்வைக்கும் சிரிப்புக்குந்தான் நாயாப் பேயா அலஞ்சு திரிஞ்சு அடிபட்டு மிதிபட்டு காதலிக்கிறாங்க. அந்தப் பக்கம் மிஸ்டு கால் குடுப்பாங்களாம்....இவன் பாட்டுக்க ஃபோனப் போட்டு வழியுறான்...சரி. நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.

ILA... said...

சொன்னாத்தான் காதலா? அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா? ஒத்துக்கவே மாட்டேன். சொல்லாட்டாலும் காதல் காதல்தான்னு டாக்டர்.விஜய் கூட சொல்லி இருக்காரு..

ILA... said...

//நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.//
முருகனுக்கு என்ன சைடுக்கு ஒன்னு இருக்கு. இப்போ பிரச்சினையே சைட்தானே..

Dreamzz said...

@வெட்டி
//பட்டையை கிளப்பிட்டீங்க...//
நன்றி தல!

//கப்பி,
ட்ரீம்ஸ் மேல அவ்வளவு கொல வெறியா???//
நல்லா கேளுங்க :(

Dreamzz said...

@இளா
//சொன்னாத்தான் காதலா? அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா? ஒத்துக்கவே மாட்டேன். //
முரளி.. ஓகே.. நடிச்ச... னு சொல்லறீங்களே....

Dreamzz said...

@ராகவ்
//அந்தப் பக்கம் மிஸ்டு கால் குடுப்பாங்களாம்....இவன் பாட்டுக்க ஃபோனப் போட்டு வழியுறான்...சரி. நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.
//
நல்லா சொன்னீங்க! உங்களுக்கு புரியுது!

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. கெளம்பிட்டாரய்யா கெளம்பிட்டாரு..

கவிதையெல்லாஅம் மூட்டை கட்டி வச்சுட்டு டிப்ஸ் பக்கம் இறங்கிட்டீங்களா தினேஷ் அண்ணா? :-)

சரி சரி, டிப்ஸ் எழுதும்போதே அப்படியே தூங்கிடாதீங்க.. ஹீஹீ

வாழ்த்துக்கள். :-)

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆஹா.. கெளம்பிட்டாரய்யா கெளம்பிட்டாரு..

கவிதையெல்லாஅம் மூட்டை கட்டி வச்சுட்டு டிப்ஸ் பக்கம் இறங்கிட்டீங்களா தினேஷ் அண்ணா? :-)

சரி சரி, டிப்ஸ் எழுதும்போதே அப்படியே தூங்கிடாதீங்க.. ஹீஹீ

வாழ்த்துக்கள். :-)
\\

ரீப்பிட்டேய்ய்ய்

தல

சும்மா டிப்ஸ் எல்லாம் கொடுத்து தூள் கிளம்புறிங்க...;))

Deekshanya said...

//Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க).// ROTFL!!
// ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.// உண்மைங்க dreamzz...

நல்லா எழுதியிருக்கீங்க! காதலர் தின வாழ்த்துக்கள் அனைத்து வ.வா.சங்க நண்பர்களுக்கும், இதை படிக்கும் பிற நண்பர்களுக்கும்!!

வாழ்த்துக்கள்!
தீக்ஷ்

கருப்பன்/Karuppan said...

//
அவ வேற யாரையும் காதலிக்க கூடாது.
//

இந்த ஐட்டத்துல தான சிக்கல் ஆரம்பிக்குது... அவளிடம் நேரடியாக கேட்டால் உடனே நம்ம வன்டவாலம் தண்டவாளம் ஏறிவிடும். அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே எனக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறான் என்று பொய் சொல்லவும் வாய்ப்புகள் உள்ளது இல்லையா??

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தல Dreamzz
காதல் மாதச் சிங்கமே! வாழ்த்துக்கள்!
அப்பிடியே அல்லாருக்கும் வாலன்டைன் தின...ச்ச்சே...
இனிப்பான காதலர் தின வாழ்த்துக்கள்!

//மு.கு: என்னை எழுதும்படி அழைத்த சங்கத்து சிங்கங்களுக்கு முதலில் என் நன்றிகள்//

இதுல மு.கு மு.கு-ன்னு போட்டிருக்கீங்களே அண்ணாச்சி, கூடவே அதுக்கேத்தா மாதிரி ஒரு படம்...
மு.கு-ன்னா முத்தக் குறிப்பா? :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!! :)))//
இதுக்கு நேரா திட்டி இருக்கலாம் :)//

சரி...
வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!!
பாம் (பமீலா) ஆண்டர்சனுடன், வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே!! :-))

k4karthik said...

இது என்னப்பா சின்ன பசங்க மேட்டரா இருக்கே!!

இம்சை அரசி said...

கவிதை சூப்பர் :)))

கலக்கற தம்பி :)))

இம்சை அரசி said...

பொண்ணுங்க சிரிச்சு மயங்காதவங்க யாராச்சும் இருக்க்கறாங்களா என்ன? ;)))

Arunkumar said...

chance-ae illa.. super tips makka :)

Arunkumar said...

Happy V'Day to all VVS friends :-)

நாமக்கல் சிபி said...

//சொன்னாத்தான் காதலா? அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா? ஒத்துக்கவே மாட்டேன். சொல்லாட்டாலும் காதல் காதல்தான்னு டாக்டர்.விஜய் கூட சொல்லி இருக்காரு..//

Idhai Naan Vazhi(Mozhi)giren!

hihi!