Thursday, February 7, 2008

இயக்குனராகிறார் ஜிரா

கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். கோட்டூர்ல இருக்குற அந்த அப்பார்மெண்ட் வாசல்லயும் தெருவுலயும் கூட்டம்னா கூட்டம். நடிகர் சூரியாவும் ஜோதிகாவும் ஒரு கார்ல வர்ராங்க. கிளிக்கு கிளிக்குன்னு பலர் அவங்கள போட்டோ பிடிச்சிக்கிறாங்க.

கூட்டத்துல இருந்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தி மலேசியா மாரியாத்தா ஒரு அப்பார்ட்மெண்டுக்குள்ள கூட்டீட்டுப் போறாங்க. கூட்டம்னா....சன்னு, செயா, ஸ்டாரு, ராஜூ, கலைஞரு எல்லாருந்தான்.

"அண்ணே...சூரியா சோதிகா வந்துருக்காங்கண்ணே." மமா (மலேசியா மாரியாத்தா) அண்ணனைக் கூப்புடுறாரு. எலுமிச்ச நெறத்துல ஜிப்பா போட்டுக்கிட்டு அண்ணேன்னு கூப்புடப்பட்ட ஜிரா கும்புட்டுக்கிட்டே ஹாலுக்கு வர்ராரு. "வாங்க சூரியா வாங்க. வாங்க ஜோதிகா வாங்க"

அப்பிடியே சூரியா பெரிய ஆளுயர சந்தனமாலையை ஜிரா கழுத்துல போடுறாரு. அத ஜிராவோட இன்னொரு உடன்பிறப்பான சிவியாரு காமரால கிளிக்கிக்கிறாரு. பின்னே? மமாவும் சிவியாரும் ஜிராவோட சினிமா அப்ரசெண்டுகளாச்சே.

"நல்லா இருக்கோம் ஜிரா. உங்க படத்துல நடிக்க எனக்கு நீங்க கொடுத்த வாய்ப்புதான் எனக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கு. ஆலந்து நாட்டோட உயர்ந்த விருதான ஆலந்தூரான் விருதும் கெடைச்சிருக்கு. அதுக்கு ரொம்ப நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கோம்."

"அடடே! சூரியா. ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க. கள்ளியிலும் பால் திரைப்படத்துல நீங்க சரவணன் பாத்திரமாவே மாறீட்டீங்க. அது உங்க நடிப்புக்குக் கிடைச்ச பெருமை. நீங்களும் அசினும் பிசின் மாதிரி நடிச்ச காட்சிகள் படத்துக்குப் பெரும் பலம். அதுனாலதான் படம் ஓடீருக்கு. எங்கிட்ட என்னங்க இருக்கு. எல்லாம் முருகன் செயல்." தன்னோட பங்குக்கு ஜிராவும் படம் காட்டுறாரு.

அதுக்குள் மமா "அண்ணே...அசின் வந்திருக்காங்கண்ணே. உள்ள வந்துக்கிட்டிருக்காங்க." சொல்லிக் கிட்டிருக்கும் போதே அசின் உள்ளே வருகிறார்.

"வணக்கம் ஜிரா. நிங்களைக் கண்டு நன்னி சொல்லீட்டுப் போகலாம்னு வந்து. மலேசியாவுக்கு ஒரு ஷூட்டிங் போயி. அங்க டூரியன் பழம் கிட்டீன்னு வாங்கி வந்து. இந்தாங்க."

மமாவுக்கு முகத்தில் பல்ப் எரிகிறது. "மலேசியாவா? டூரியானா? குடுங்க குடுங்க" படக்கென்று பிடுங்கி வைத்துக் கொள்கிறார். கடமை மறவாத தம்பி சிவியார் அண்ணனும் அசினும் சேர்ந்து நிற்பதைப் படம் பிடித்துக் கொள்கிறார்.

"அடுத்த படத்துல...."ன்னு சூரியாவும் அசினும் ஒரே நேரத்துல இழுக்க.....ஜிரா 70எம்எம்ல படம் போடுறாரு. "அடுத்த படந்தான.....யோசிப்போம். பாவக்காய் செய்த பாவம்னு ஒரு கதை இருக்கு. நல்ல சேலஞ்சிங்கான பாத்திரம். துணியோபோபியா வந்த ரெண்டு பாத்திரங்களை வெச்சிக் கதை. அசினும் சூரியாவும் நடிச்சா நல்லாத்தான் இருக்கும்....."

கேக்குறப்பவே ஜோதிகாவின் முகம் மாறுகிறது. அவசர அவசரமாக சூரியாவை இழுத்துக் கொண்டு வெளியேறுகிறார். ஒரு சாயா குடித்து விட்டு அசினும் வெளியேறுகிறார்.

"அண்ணே....ஒரு விசயம்...."

"என்னடா ஆன் ஆர்பாரு...சொல்லு. சென்னைல ஃபுரோசன் இடியாப்பம் கெடைக்க மாட்டேங்குதா?"

"ஹி ஹி ஹி...அதில்லண்ணே...தளபதி வந்திருக்காரு. உள்ள வரச்சொல்லட்டுமா?"

"தளபதியா? எந்த நாட்டுக்குத் தளபதி? இந்தியாவுலயே முப்படைகள் இருக்காமே. அவங்கள்ள ஒருத்தர் வந்திருக்காரா? நம்மளை எதுக்குப் பாக்க வந்திருக்காரு."

மமா குறுக்க நுழைஞ்சி, "அண்ணே..இந்தச் சிவியாருக்கு எதையுமே ஒழுங்காச் சொல்லத் தெரியாதுன்னே. இப்பிடித்தான் ஒளறி வைப்பான். வந்திருக்குறது இ.தளபதிண்ணே....இப்பிடிப் பாடு பாடு பாடு...அவருண்ணே"

"ஓ அந்தத் தளபதியா? நம்ம தெலுங்கு நாட்டுல இருந்து தான வீர சூர கர்ணா, கஜ தொங்கா, டப்பு லேனி கதா மாதிரிப் படங்களை எறக்குமதி பண்றதில்லையே. அதுக்குத்தான் இயக்குனர் நடிகர் வெட்டியார் இருக்காரே. அங்க போகாம இங்க ஏன் வந்தாரு இ.தளபதி? சரி. சரி. போயிட்டு அப்புறமா வரச்சொல்லு. இப்பத்தான் கதைக்குப் பேரே வெச்சிருக்கோம். மெதுவா வந்தா இருக்குறதப் பாத்துச் செய்றோம்னு சொல்லி அனுப்பு."

"அண்ணே....." மறுபடியும் இழுக்கிறார் சிவியார்.

"என்னாச்சுல சிவியாரு? பொகைப்படப் போட்டீல நடுவரா இருக்கச் சொல்லீட்டாங்களா? ஓசை செல்லாவுக்கு ஃபோனப் போடு. அடுத்த படம் எடுத்து முடிக்கிற வரைக்கும் ஒனக்கு லீவு கேப்போம். முடியாதுன்னு சொன்னா...அவரை நம்ம படத்துக்குக் வசனம் எழுதச் சொல்லீரலாம்."

"அதில்லண்ணே ஸ்டார் வந்திருக்காரு...அதான்........."

"அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! தளபதி ஸ்டார்னு சொன்னா நான் யாரடா நெனைக்கிறது..எல்லாம் ஒருத்தரோட பேர் மாதிரித்தாண்டா தெரியுது. நாம என்ன ஓடி விளையாடு தாத்தான்னா படம் எடுக்கப் போறோம்? நம்ம படத்துல டச்சுல பிரெஞ்சுல இங்கிலீசுல ஜெர்மனியில டப்பு பண்ணி டப்பு பாக்குறோம்னா அதுக்குக் காரணம் என்ன? கள்ளியிலும் பால் படமெடுத்து அதுல ரெண்டரை மணி நேரம் படம்னா...ரெண்டு மணி நேரம் சரவணன் சந்தியாவின் ஆத்மார்த்தமான காதல் சங்கமங்களின் உன்னத அன்பைக் காட்டுறதாலதான். அதையெல்லாம் டூப்பு போட்டு கிராபிக்ஸ் போட்டு எடுக்க முடியாது. புரிஞ்சதா...போய்ச் சொல்லு"

"இல்லண்ணே....." மறுபடியும் சிவியார் இழுக்கும் போது மமா உதவிக்கு வந்து "அண்ணே...அவன் சொல்ல வர்ரது அ.ஸ்டார்னே. சூ.ஸ்டார் இல்ல...."

"ஓஓஓஓஓ! அ.ஸ்டாரா? ம்ம்ம்ம் இப்ப என்ன செய்யலாம்...சரி நீயே போயி மலைக்கள்ளன், ஆயிரத் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, உரிமைக்குரல், காசேதான் கடவுளடா படங்களையெல்லாம் இப்ப ரீமேக் பண்ணலை. நாம லா மிசரபிள், கம் செப்டம்பர்னு யோசிச்சிக்கிட்டிருக்கோம். அதுனால போயிட்டு அப்புறமா வரச்சொல்லு. இல்லைன்னா துளசி டீச்சர் கிட்ட கேட்டா கேரளத்துக் கதை நெறையக் கெடைக்கும். அதுனால துளசிதளத்துல சரண்டர் ஆகச் சொல்லு. அத்தோட இனிமே பாத்தாக் கொண்டா பேஸ்ஸக்கூடாது. பேசனும்னு அண்ணன் கண்டிப்பாச் சொன்னதாச் சொல்லீரு. நெக்ஸ்ட்"

அ.ஸ்டாரை வழியனுப்பப் போன மமா பயந்து கியந்து ஓடி வந்து "அண்ணே அண்ணே காப்பாத்துங்கண்ணே..."

"என்னாச்சு மமா? யாராச்சும் சம்பல் இகான் பிலிஸ் கொண்டு வந்துட்டாங்களா?...ஆனா அதுதான் ஒனக்குப் பிடிக்குமே!!!!"

"அது இல்லண்ணே...நாயகன் நாயகன்...நாயகன்...."

"ஹா ஹா ஹா...பாத்தீங்களாண்ணே...என்னையச் சொல்லீட்டு இவ ஒளர்றா...அவ சொல்றது உ.நாயகன் வர்ராருன்னு..." பழிக்குப் பழி வாங்கிய திருப்தி சிவியாரிடம்.

"ஓ! அவரா? இப்ப என்ன செய்றது? இவருக்காக Ratatoille (ரேட்டடோயி) படத்த தமிழ்ல எடுக்க முடியுமா? அதுல இவருதான் எலியா நடிப்பேன்னு அடம் பிடிப்பாரே. அதுக்கு மேக்கப் போட ஆலிவூட்டுல இருந்து ஆளக்கூட்டிட்டு வரணுமே. அந்தப் படத்துல வர்ர எலி, கதாநாயகன், நாயகி, வில்லன் எல்லாப் பாத்திரத்துலயும் இவரே நடிக்கனும்னு வேற அடம் பிடிப்பாரு. ம்ம்ம்ம்...ஏற்கனவே நவ அவதாரம்னு ஒரு படம் எடுக்குறாரு. அதுவும் Bedazzled அப்படீங்குற படத்தத் தமிழ்ல எடுக்குறாரு. காப்பீ ரைட்டும் டீ லெப்டும் வாங்குனாரான்னு தெரியலை. அதுல மல்லிகா ஷெராவத்தைச் சாத்தானா நடிக்க வைக்கிறாரு. இவர வெச்சிப் படமெடுத்தா...நமக்குச் சரிவராது. ஆனா ஒன்னு...அந்தப் பாவக்காயின் பாவம் கதைல துணியோஃபோபியா பாத்திரத்துல நடிக்க இவரு கண்டிப்பா தயாரா இருப்பாரு. ஆனாலும் நோ ரிஸ்க்கு. பகல்ல நிலா வந்தவன்னு ஒரு படத்த இருவது வருசத்துக்கு அப்புறம் எடுக்கப் போறோம். அப்ப பாக்கலாம்னு சொல்லி அனுப்பு. சிவியாரு...மமா போக வேண்டாம்...நீயே போய்ச் சொல்லி அனுப்பு."

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...தாங்க முடியல முருகா. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமப்பா!"

சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே குய்ங் குய்ங்குன்னு ஒரே சத்தம். தடால் புடால்னு விழுந்தடிச்சு வந்து சிவியாரு, "அண்ணே அண்ணே......சாருக்க்க்க்கக்க்க்க்க்க்..."

"சாருக்கு என்ன வேணும்? ஏன் இப்பிடி திக்குற?"

"அதில்லண்ணே....சாருக்கானு வந்துருக்காரு. அவருக்கு க வந்தா திக்கனும்ணே....இந்தீல அப்படித்தான் அவரக் கிண்டல் செய்வாங்க"

"யாரு சாருக்கானா? அவரு ஏண்டா இங்க வந்தாரு? நம்மள மணிரத்னம்னு நெனச்சிக்கிட்டாரா? தயிரே பயிரேன்னு இந்தீல படமெடுத்துத் தமிழ்ல டப்பு பண்ண? சரி. வரச்சொல்லு. ஒருவேளை கள்ளியிலும் பாலை இந்தீல கள்ளீ மே தூத் அப்படீன்னு ரீமேக் பண்ண நெனச்சு வந்திருப்பாரு. இவரு கிட்ட படத்தக் குடுத்தா கொதறி வைப்பாரே. அதுலயும் இந்தீல கரண் ஜோகர்னு ஒரு இயக்குனர் கிட்ட குடுத்து.....படம் முழுக்க ஜெயபாதுரிய அழ விடுவாரே. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்."

வாயெல்லாம் பல்லாக மமா ஷாருக்கானை உள்ளே அழைத்து வருகிறார்.

"ஆயீயே ஆயீயே ஷாருக் ஜி. ஆப்பூ கெய்சா ஹை?" இந்தியில் ஜிரா எடுத்து விட்டதும் கூட்டமே மிரண்டு போகிறது.

ஷாருக்கான் சிரிச்சிக்கிட்டே, "சப் டீக்கு ஹை ஜிராஜி" ன்னு கையைப் பிடித்துக் குலுக்குறாரு.

"ஓ! டீக்கு தான் இதர் ஆகய்? ஹமாரா கர் டீ பகூத் பகூத் அச்சா." ன்னு சாருக்கிடம் உளறிவிட்டு.."மமா, நல்லா ஸ்டிராங்கா ரெண்டு டீ முக்குக்கடைல இருந்து வாங்கீட்டு வா"ன்னு ஆர்டர் குடுத்தாரு ஜிரா.

"போலுங்க ஷாருக் ஜீ. மும்பை சே சென்னை ஆகய். நான் கியா கர்ரு?"

"குச் நை ஜிராஜி. ஹமாரா நெக்ஸ்ட் சினிமா ஆப் டைரக்ட் பண்ங்க. மே புரொடியூசிங்."

"ஆகா இந்தாள் தயாரிப்புல இந்திப் படமா? நமக்கு ஆப்பு வெக்காம விட மாட்டாரு போல இருக்கே. இவரு பேசுறது சரியான வசனமான்னே கண்டுபிடிக்கத் தெரியாதே நமக்கு..." ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு ஷாருக்கானிடம், "ஷாருக் ஜி, ஹமாரா தமிழ்நாட்டுல ராமநாராயணன் டைரக்டர். மங்க்கி, எலிஃபண்ட், ஸ்நேக் சினிமா அச்சா அச்சா டைரக்டிங். லோ பட்ஜெட். ஆனாலும் 500% புராஃபிட். ஆப் ஆக்டிங் மே தேக்கி. ஆப்புக்கு அவரே கரெக்ட் டைரக்டர். ஆப்பு ஷங்கரோட ரோபாட் சினிமால ரோபாட்டா ஆக்டிங். அது பகூத் அச்சா. அப்பூ நை ஆக்டிங். வெரி ரியலிஸ்டிக். நேஷனல் அவார்டு. ஆஸ்கார் அவார்டு."

ஷாருக்கானுக்கு வருத்தமாப் போயிருது. ஜிரா இப்பிடிச் சொல்லீட்டாரேன்னு. மனுசனாக் கஷ்டப்பட்டு நடிக்கிறத விட ரோபாட்டா லேசா நடிக்கிறது நல்லதுன்னு மும்பைல இருந்து வாங்கீட்டு வந்த பக்கார்வாடி பாக்கெட்டை ஜிராவுக்குக் குடுக்காமக் கொண்டு போயிர்ராரு.

ஜிரா ரொம்ப நேரம் யோசிச்சிட்டு ஒரு முடிவுக்கு வர்ராரு. மமாவையும் சிவியாரையும் கூப்டு, "அப்ரசெண்ட்ஸ், நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஏன்னா பாவக்காயின் பாவம் படத்துக்கு ஏத்த நல்ல கதாநாயகனே கெடைக்கலை...அதுனால..."

மமா குறுக்க புகுந்து, "அவசரப்படாதீங்க அண்ணே...நம்ம சீவியார் இருக்கானே...அவனையே கதாநாயகனாப் போட்டுறலாம்."

சிவியாருக்கு அடிவயிறு கலங்குது. "அண்ணே..அண்ணே....ஜிரா அண்ணே...நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே"ன்னு பாடுறாரு.

"பாடதல....நேரா விசயத்துக்கு வா..."

"அதில்லண்ணே...பாவக்காயின் பாவத்துல துணியோஃபோபியா வருதுண்ணே...நா தூங்கும் போதே பேண்ட்டு சட்டை போட்டுக்கிட்டு தூங்குறவண்ணே...நா எப்படி?"

ஜிராவுக்குச் சிரிப்பு தாங்கலை. "ஹெ ஹெ ஹெ ஹெ...வருத்தப்படாதல....பாவக்காயின் பாவத்துல உன்னைக் கதாநாயகனாப் போடுற திட்டத்த நான் டிராப் பண்ணீட்டேன்."

மமாவுக்கு எரிச்சல். மனசுக்குள், "ஜஸ்ட் மிஸ்டு..சிவியாரு..ஒன்ன ஒரு வழி செய்யாம விட மாட்டேன். இப்ப தப்பிச்சிக்கோ. அடுத்து மாட்டாம இருக்க மாட்ட"

ஜிரா தொடந்து சொல்றாரு. "படத்துக்குக் கதாநாயகனையும் முடிவு செஞ்சிட்டேன். அடுத்த கதாநாயகன் விவசாயி இளா. ரொம்பவும் இயல்பா நடிக்கிற தெறமை அவரு கிட்ட மட்டுந்தான் இருக்கு. அவரை கதை டிஸ்கஷனுக்குக் கூப்புடுங்க."

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

49 comments:

கோபிநாத் said...

மீ த பாஸ்ட்டு :))

கோபிநாத் said...

\\அதில்லண்ணே...பாவக்காயின் பாவத்துல துணியோஃபோபியா வருதுண்ணே...நா தூங்கும் போதே பேண்ட்டு சட்டை போட்டுக்கிட்டு தூங்குறவண்ணே...நா எப்படி?"\\

:))))))))))))))

சூப்பர் ஜிரா ;)))

கோபிநாத் said...

\\ஜிரா தொடந்து சொல்றாரு. "படத்துக்குக் கதாநாயகனையும் முடிவு செஞ்சிட்டேன். அடுத்த கதாநாயகன் விவசாயி இளா. ரொம்பவும் இயல்பா நடிக்கிற தெறமை அவரு கிட்ட மட்டுந்தான் இருக்கு. அவரை கதை டிஸ்கஷனுக்குக் கூப்புடுங்க.\\

விவாஜி அண்ணே தான் கதாநாயகனா!!!..சூப்பர் ஜோடி யாரு ஜிரா ;)))

குமரன் (Kumaran) said...

இராகவன். நீர் தமிழ்த் துரோகி என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். தமிழ்ப்பட கதாநாயகர்களை எல்லாம் உள்ளேயே விடாமல் விரட்டி அடித்துவிட்டு இந்திப்பேயை மட்டும் உள்ளே விட்டு ஆயிரம் ஜி போட்டுப் பேசும் ஜிரா ஒழிக ஒழிக ஒழிக.

:-))))))

ILA(a)இளா said...

ஷாருக்கான் வசனம் எல்லாம் சூப்பரு. எங்கேயாவது நடிகைங்க பேட்டிய பார்த்தா மாதிரியே இருக்கு. அதென்னைய்யா கடேசியா நம்மள இழுத்து விட்டுடீங்க.
இப்பவாவது சோடியா பிரியா மணிய போடு..... சீ சீ நடிக்க வைங்க..

குமரன் (Kumaran) said...

//இப்பவாவது சோடியா பிரியா மணிய போடு..... சீ சீ நடிக்க வைங்க..//

இளா. பாவனாவைப் போட்டா என்னங்க? சோடியா நடிக்க மாட்டேன்னு சொல்லிடுவீங்களா?

கானா பிரபா said...

கலக்கல்ஸ் ;-))

இளா பொருத்தமான தேர்வு, பிரியாமணி கால்ஷீட் இல்லேன்னா தீபிகா படுபாவியை ட்ரை பண்ணவும்

கப்பி பய said...

:))

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்களே டைரக்டர்ஜி :)))

கப்பி பய said...

எங்கள் தங்கம் புரட்சி விடிவெள்ளி சிவிஆரை கதாநாயகன் ஆக்காமல் விட்டதற்கு எதிர்ப்பினை பதிவு செய்யும் அதே வேளையிலே விண்ணில் தோன்றிய விண்மீனாம், தென்னகத்தின் தென்றலாம், வெள்ளிவிழா நாயகன், விவாஜி கண்ட இளாஜியை கதாநாயகனாக கதையின் நாயகனாக ஆக்கியமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு இயக்குனர் இமயம், தென்னகத்து அகிரா குரோசவா, தமிழ்நாட்டின் தஸ்தாவஸ்கி, மகரந்த மைந்தன் ஜிரா அவர்களின் இத்திரைப்படம் வெற்றிவிழா கண்டு பல சாதனைகளை முறியடித்து சரித்திரம் படைக்க வாழ்த்தி அமைகிறேன். நன்றி வணக்கம்!!

துளசி கோபால் said...

கலக்கல்.

நம்ம கதை இலாக்காவுக்கு சிவியாரை அனுப்பி 'வையுங்க'.

பைய(ன்)ர் பார்க்கரதுக்கு அம்சமான முகம்தான்.

நாயகனாக்கியே தீரணுமுன்னு ஒரு கூட்டம் அலையுதாமே!

ஜி said...

ஆஹா.. இந்த தடவையும் இளா மாட்டிக்கினாரா??? ;)))

வல்லிசிம்ஹன் said...

தூங்கும்போது பாண்ட் சட்டை போடறவருக்கெல்லாம் செரேயா தான் ஜோடி போடணும்:)0

CVR said...

:-)))))
சூப்பரு அண்ணாச்சி!!

சீக்கிரமே இந்த கதை நிஜமாக வாழ்த்துக்கள்!! ;) (அட நீங்க சீக்கிரமே இயக்குனர் ஆகனும்னு சொன்னேன்பா,"கள்ளியிலும் பால்" படமா பாக்கனும்னு அப்படி சொல்லல!! :-P)

///எங்கள் தங்கம் புரட்சி விடிவெள்ளி சிவிஆரை கதாநாயகன் ஆக்காமல் விட்டதற்கு எதிர்ப்பினை பதிவு செய்யும் அதே வேளையிலே விண்ணில் தோன்றிய விண்மீனாம், தென்னகத்தின் தென்றலாம், வெள்ளிவிழா நாயகன், விவாஜி கண்ட இளாஜியை கதாநாயகனாக கதையின் நாயகனாக ஆக்கியமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு இயக்குனர் இமயம், தென்னகத்து அகிரா குரோசவா, தமிழ்நாட்டின் தஸ்தாவஸ்கி, மகரந்த மைந்தன் ஜிரா அவர்களின் இத்திரைப்படம் வெற்றிவிழா கண்டு பல சாதனைகளை முறியடித்து சரித்திரம் படைக்க வாழ்த்தி அமைகிறேன். நன்றி வணக்கம்!!////

யப்பா ராசா ஒரு இத்தனூண்டு கட்டம் கட்டி கொடுத்தா ஷாஹித் அஃப்ரிடி ரேஞ்சுக்கு அடிச்சு ஆடிருவ போல!!
நடத்து நடத்து!! :-P

G.Ragavan said...

// கோபிநாத் said...
\\ஜிரா தொடந்து சொல்றாரு. "படத்துக்குக் கதாநாயகனையும் முடிவு செஞ்சிட்டேன். அடுத்த கதாநாயகன் விவசாயி இளா. ரொம்பவும் இயல்பா நடிக்கிற தெறமை அவரு கிட்ட மட்டுந்தான் இருக்கு. அவரை கதை டிஸ்கஷனுக்குக் கூப்புடுங்க.\\

விவாஜி அண்ணே தான் கதாநாயகனா!!!..சூப்பர் ஜோடி யாரு ஜிரா ;))) //

இளா ரேஞ்சுக்குச் சோடி பிடிக்கனும்னா இந்தியாவுல ஆகாது. வெளிநாட்டுலதான் தேடனும். இலங்கை சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது..சாரி..சாரி..தேடப்படுகிறது. :)

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். நீர் தமிழ்த் துரோகி என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். தமிழ்ப்பட கதாநாயகர்களை எல்லாம் உள்ளேயே விடாமல் விரட்டி அடித்துவிட்டு இந்திப்பேயை மட்டும் உள்ளே விட்டு ஆயிரம் ஜி போட்டுப் பேசும் ஜிரா ஒழிக ஒழிக ஒழிக.

:-)))))) //

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. சூரியாவை மொதல்ல உள்ள கூப்ட்டு உக்கார வெச்சுப் பேசீருக்கேன். சாருக்கானை நானா கூப்புடச் சொன்னேன்? மலேசியா மாரியாத்தாவின் செயல் அது.

// ILA(a)இளா said...
ஷாருக்கான் வசனம் எல்லாம் சூப்பரு. எங்கேயாவது நடிகைங்க பேட்டிய பார்த்தா மாதிரியே இருக்கு. அதென்னைய்யா கடேசியா நம்மள இழுத்து விட்டுடீங்க.
இப்பவாவது சோடியா பிரியா மணிய போடு..... சீ சீ நடிக்க வைங்க.. //

அடடா.....பிரியா மணியா? ரெண்டு சோடி வேணுமா? பிரியான்னு ஒன்னு..மணிமேகலைன்னு ஒன்னு...ரொம்பத்தான் ஆசை உமக்கு. :-P

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//"என்னடா ஆன் ஆர்பாரு...
சொல்லு. சென்னைல ஃபுரோசன் இடியாப்பம் கெடைக்க மாட்டேங்குதா?"//

:-)))))
இன்னுமா அந்த ப்ரோசன் கதையை எல்லாம் மறக்கல நீங்க?
அலோ மமா தங்கச்சி...நீதான் போட்டுக் கொடுத்தியா?

//எலுமிச்ச நெறத்துல ஜிப்பா போட்டுக்கிட்டு அண்ணேன்னு கூப்புடப்பட்ட ஜிரா கும்புட்டுக்கிட்டே ஹாலுக்கு வர்ராரு//

அண்ணே! எலுமிச்சை நிறம்-னா மஞ்சா தானே! நீங்களும் மஞ்ச துண்டு போட ஆரம்பிச்சாச்சாஆஆஆஆஆஅ? :-))

//டப்பு லேனி கதா மாதிரிப் படங்களை எறக்குமதி பண்றதில்லையே. அதுக்குத்தான் இயக்குனர் நடிகர் வெட்டியார் இருக்காரே//

பெத்த அவமானம்! பெத்த அவமானம்!
ஏமி ஜிரா இது! ஏமி செப்பேஸ்தாவு நூவு? ஒள்ளு கிள்ளு பாக லேதா? கானி தெலுசே மாட்லாடுதுவா? எந்த அகம்பாவம்! எந்த அகங்காரம்!! :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கானா பிரபா said...
பிரியாமணி கால்ஷீட் இல்லேன்னா தீபிகா படுபாவியை ட்ரை பண்ணவும்//

காபி அண்ணாச்சி
தீபிகா படுகோனே மேல உங்களுக்கு ஏமி இம்புட்டுக் கோவம் ஒஸ்தாவு?
உங்க வீடியோஸ்பதிக்கு கால்ஷீட்டு, கைஷீட்டு ஏதும் யக்கா கொடுக்கலியா என்ன?

அழகின் சிகரம்,இளமையின் ஃபிகரம்,
எங்க தீபிகாவைப் படுபாவி என்று விளித்த அண்ணாச்சியை எதிர்த்து நாடு முழுதும் படுபாவி எரிப்பு ச்சே...சாரி...கொடும்பாவி எரிப்பு நடத்தப்படும் என்று குஷ்பு குறுந்தொகைப் பேரவை தீர்மானம் இயற்றுகிறது! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பின்னே? மமாவும் சிவியாரும் ஜிராவோட சினிமா அப்ரசெண்டுகளாச்சே//

தங்கத் தாரகை, சிங்க வாகினி, தமிழ்ச் சினிமாவுக்கே அரிச்சுவடி அளித்த கொலைமாமணி, மலேசிய மந்தாகினி எங்கள் மாரியாத்தாவை உதவி இயக்குனர் என்று மரியாதையுடன் அழைக்காமல்....

"அப்ரசெண்டு" என்று தாழ்த்திப் பேசும் ஆணாதிக்க இயக்குனர் ஜிராவை எதிர்த்து தென்னிந்திய திரைப்பட நடிகையர் சங்கம் சாகும் வரை பிட்சா உண்ணும் விரதம் மேற்கொள்ளப் போவதாகச் சற்று முன் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. சூரியாவை மொதல்ல உள்ள கூப்ட்டு உக்கார வெச்சுப் பேசீருக்கேன்//

கூட சோதிகா வந்ததால சூர்யாவை மட்டும் கூப்பிட்டீரு!
அதுக்கப்புறம் வந்த இ.தளபதி, ஆ.ஸ்டார், உ. நாயகன்-ன்னு அத்தனை தமிழனையும் வீட்டூ வாசலில் நிற்க வைத்துப் பேசி, நீங்கள் ஒரு வடதிசை இயக்குனர் என்பதை ஐயந்திரிபற நிரூபித்து விட்டீர்கள்!

அது போதாதென்று என்னருமைத் தமிழ்த் தம்பி சீவீயாரைப் புறந்தள்ளினீர்கள்!
இந்தியில் தலைப்பு வைத்து பதிவு போட்ட ஹிந்தி அண்ணன் இளாவைக் கதாநாயகன் ஆக்கினீர்கள்!

வருத்தப்படாத வாலிபர்கள் நாங்கள் எல்லாம் வருத்தப்படுகிறோம்!
உங்கள் வடமொழிப் பற்றை பிசி ஸ்ரீராம் மூலம் "வெளிச்சம் போட்டுக்" காட்டுவோம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//"நா தூங்கும் போதே பேண்ட்டு சட்டை போட்டுக்கிட்டு தூங்குறவண்ணே...நா எப்படி?"
ஜிராவுக்குச் சிரிப்பு தாங்கலை//

ஹி ஹி ஹி....எனக்கும் தான்! :-))))))))))))))))))))))))))))))))

//ஒருவேளை கள்ளியிலும் பாலை இந்தீல கள்ளீ மே தூத் அப்படீன்னு ரீமேக் பண்ண நெனச்சு வந்திருப்பாரு//

அண்ணாத்தே! தெய்வமே!
எங்கேயோ போயீட்டீங்க!
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
கள்ளி மே தூத் அறுநூறு நாள் ஓடிச் சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

அடுத்து என்ன?
காதல் குளிர் = ப்யார் கி தண்டா
தங்க மரம் = சோனாலி பேட்
?????????????? :-))

ILA(a)இளா said...

//இந்தியில் தலைப்பு வைத்து பதிவு போட்ட ஹிந்தி அண்ணன் இளாவைக் கதாநாயகன் ஆக்கினீர்கள்!//
அவரு பெரிய லெவலுல் நினைக்கிறாரு. தமிழ்ல படம் எடுத்தா ஒரு மாநிலம் ஹிந்தில எடுத்த 25 மாநிலத்துலேயும் ஓடும். காசு நிறைய பார்க்கலாம்னு நினைச்சு இருப்பாரு. அதுக்காக கதாநாயகி மாத்துற வேலை எல்லாம் இருக்கக்கூடாது. ஒன்லி ப்ரியா மணி..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


வ.வா சங்கத்தின் இந்த மாத அட்லாஸ் வாலிபர்...
சாரி...பேரு மாத்தியாச்சுல்ல....
அட்லாஸ் சிங்கம்
எங்கள் தங்கம்
என்னுடைய அட்லாஸ் வாரிசு
அண்ணன் ஜிரா வாழ்க! வாழ்க!!

குமரன் (Kumaran) said...

//கூட சோதிகா வந்ததால சூர்யாவை மட்டும் கூப்பிட்டீரு!
அதுக்கப்புறம் வந்த இ.தளபதி, ஆ.ஸ்டார், உ. நாயகன்-ன்னு அத்தனை தமிழனையும் வீட்டூ வாசலில் நிற்க வைத்துப் பேசி, நீங்கள் ஒரு வடதிசை இயக்குனர் என்பதை ஐயந்திரிபற நிரூபித்து விட்டீர்கள்!

அது போதாதென்று என்னருமைத் தமிழ்த் தம்பி சீவீயாரைப் புறந்தள்ளினீர்கள்!
இந்தியில் தலைப்பு வைத்து பதிவு போட்ட ஹிந்தி அண்ணன் இளாவைக் கதாநாயகன் ஆக்கினீர்கள்!

வருத்தப்படாத வாலிபர்கள் நாங்கள் எல்லாம் வருத்தப்படுகிறோம்!
உங்கள் வடமொழிப் பற்றை பிசி ஸ்ரீராம் மூலம் "வெளிச்சம் போட்டுக்" காட்டுவோம்! :-)
//

RepeatE!!!!

G.Ragavan said...

// துளசி கோபால் said...
கலக்கல்.

நம்ம கதை இலாக்காவுக்கு சிவியாரை அனுப்பி 'வையுங்க'. //

அனுப்பி வையுங்கன்னு நீங்க சொன்னப் பெறகு வையாம...சேச்சே..அனுப்பாம இருப்பமா...யாருப்பா அங்க...நியூசிலாந்துக்கு ஒரு கூரியர் அனுப்பனும். :)

// பைய(ன்)ர் பார்க்கரதுக்கு அம்சமான முகம்தான்.

நாயகனாக்கியே தீரணுமுன்னு ஒரு கூட்டம் அலையுதாமே! //

நாயகன்னா அவரே...அவரன்றி நாயகனே இல்லைன்னும் அவங்கள்ளாம் சொல்றாங்க... அமெரிக்கா அலறுதாம்...இங்கிலாந்து இருமுதாம்...பாரீஸ் பதறுதாம்...ஜெர்மனிக்கோ ஜெர்க்கு...நெதர்லாந்துக்கு நெர்வஸ்னஸ்...இப்பிடி உலகைக் கலக்குறாரு... கேட்டா அதான் சீவியார்...அப்படீங்குறாரு. என்னய்யா தேங்காயையான்னு கேட்டா....இளம் பெண்களின் மனதைச் சீவியார்னு வசனமெல்லாம் சொல்றாரு.

வெட்டிப்பயல் said...

எங்கள் 24 காரெட் தங்கம், ஆன் ஆர்பர் சிங்கம், புரட்சி போட்டொகிராஃபர், சிறுகதை சூராவளி, காதல் ஆராய்ச்சியாளர், மங்கையர் மனதின் மணவாளன் CVRஐ கதாநாயகனாக போடாமல்...

ஆயிரம் நட்கள் ஓ(ட்)டிய விவாஜியின் நாயகன் இளாஜியை போட்டு இயக்குனர் "ஷ"ங்கர் இமேஜை முந்த நினைக்கும் ஜி.ராவை வாழ்த்த வயதில்லாததால், வணங்குகிறேன்

டாக்டர் விஜய் said...

கல்லியுலும் பாலு படத்தை எனக்கு நீங்க தான் ரீமேக் செஞ்சு தரணும்னு சொன்னேன். இப்படி ஏமாத்தியிட்டீகளே

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//"என்னடா ஆன் ஆர்பாரு...
சொல்லு. சென்னைல ஃபுரோசன் இடியாப்பம் கெடைக்க மாட்டேங்குதா?"//

:-)))))
இன்னுமா அந்த ப்ரோசன் கதையை எல்லாம் மறக்கல நீங்க?
அலோ மமா தங்கச்சி...நீதான் போட்டுக் கொடுத்தியா? //

புரோசன் கதைதான் மனசுல புரோசனாச்சே :)

//அண்ணே! எலுமிச்சை நிறம்-னா மஞ்சா தானே! நீங்களும் மஞ்ச துண்டு போட ஆரம்பிச்சாச்சாஆஆஆஆஆஅ? :-)) //

ஹெ ஹெ நம்ம மஞ்சள் மகிமையெல்லாம் மகிமையே மகிமை... :) நீங்க செஞ்சட்டைன்னு கேள்விப்பட்டேனே....எவ்வளவு உண்மை அதுல? ;)

////டப்பு லேனி கதா மாதிரிப் படங்களை எறக்குமதி பண்றதில்லையே. அதுக்குத்தான் இயக்குனர் நடிகர் வெட்டியார் இருக்காரே//

பெத்த அவமானம்! பெத்த அவமானம்!
ஏமி ஜிரா இது! ஏமி செப்பேஸ்தாவு நூவு? ஒள்ளு கிள்ளு பாக லேதா? கானி தெலுசே மாட்லாடுதுவா? எந்த அகம்பாவம்! எந்த அகங்காரம்!! :-)))) //

ஒள்ளு பாக உந்தி... சேசே கிள்ளும் பாக உந்தி.. ஹி ஹி... நாக்கு அகம்பாவமனி மீரு செப்தாரு.....மீக்கு நாக்குலோ அகம்பாவம்...அந்துக்கே அட்ல செப்துன்னாரு.. ;)

G.Ragavan said...

// டாக்டர் விஜய் said...
கல்லியுலும் பாலு படத்தை எனக்கு நீங்க தான் ரீமேக் செஞ்சு தரணும்னு சொன்னேன். இப்படி ஏமாத்தியிட்டீகளே //

டாக்டர் விஜய்...நீங்க சிறந்த "அறுவை"சிகிச்சை நிபுணரு. ஒங்க ரேஞ்சுக்குச் சினிமா எடுக்கனும்னா.....ஆந்திராவுல பாலகிருஷ்ணா நடிச்ச படங்களா எடுங்க....வெட்டிகாரு நெறைய படமெல்லாம் எடுக்குறவரு. இல்லைன்னா கோயமுத்தூர், மானாமதுரைன்னு கதை எழுதுனா ஒங்களக் கூப்புடுறேன். ஆமா...சங்கவி சௌக்கியமா?

அரை பிளேடு said...

உங்க கிட்ட இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

:)

கானா பிரபா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கானா பிரபா said...
பிரியாமணி கால்ஷீட் இல்லேன்னா தீபிகா படுபாவியை ட்ரை பண்ணவும்//

காபி அண்ணாச்சி
தீபிகா படுகோனே மேல உங்களுக்கு ஏமி இம்புட்டுக் கோவம் ஒஸ்தாவு?
உங்க வீடியோஸ்பதிக்கு கால்ஷீட்டு, கைஷீட்டு ஏதும் யக்கா கொடுக்கலியா என்ன?//


தல

இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கவே தீபிகாவோட விளம்பரப்படங்களையாவது தேடி எடுத்து வீடியோஸ்பதியில் போடணும் ;-)

தேவ் | Dev said...

பாவக்காய் என்ன பாவம் செய்தது? தமிழின உணவான பாகற்காயைப் பாவம் செய்வதாகக் காட்டும் ஜிரா அவர்களே வட இந்திய உணவான உருளைக் கிழங்கை வைத்து உருளை உருபடாதக் கதை என்றோ ஆலு அசிங்கப்பட்ட கதை எனவோ படம் எடுக்க நீங்கள் முயலாதது எனோ.... மதிப்பிற்குரிய ஆ.சூ.ஸ்டார் அண்ணன் குமரன் எழுப்பிய குற்றசாட்டுக்கு நீங்கள் குத்த வச்சு பதில் சொல்லும் வரை இந்த பிரச்சனை ஓயாது....

பதிவுலக ஆன்மீக லி.சூ.ஸ்டார் கே.ஆர்.எஸ் நடத்தப் போகும் பிசா போராட்டத்தில் ஹேம்பர்கர், ஹாட் டாக் போன்றவைகளையும் இணைத்து வலுவாகப் போராட்டம் நடக்கும் நீங்கள் உங்கள் தமிழ் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... போராட்டத்தில் அகில தமிழ் உலக பாவக்காய் பாசறையைச் சேர்ந்த பலக் கோடி தமிழர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது...

G.Ragavan said...

// தேவ் | Dev said...
பாவக்காய் என்ன பாவம் செய்தது? தமிழின உணவான பாகற்காயைப் பாவம் செய்வதாகக் காட்டும் ஜிரா அவர்களே வட இந்திய உணவான உருளைக் கிழங்கை வைத்து உருளை உருபடாதக் கதை என்றோ ஆலு அசிங்கப்பட்ட கதை எனவோ படம் எடுக்க நீங்கள் முயலாதது எனோ.... மதிப்பிற்குரிய ஆ.சூ.ஸ்டார் அண்ணன் குமரன் எழுப்பிய குற்றசாட்டுக்கு நீங்கள் குத்த வச்சு பதில் சொல்லும் வரை இந்த பிரச்சனை ஓயாது.... //

குமரன் எழுப்புவது பிரச்சனையே இல்லை. பாவக்காய் செய்த பாவம் என்று சொன்னால் ஆலு அலம்பல் செய்யவில்லை என்றும் உருளை உருப்பட்டிருக்கிறது என்றும் பொருளா? ஆலு டிக்கியை அஞ்சு பிளேட் வாங்கி ஆளும் பேரும் பார்க்காமல் உள்ளே தள்ளிய குமரனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? பனீர் பட்டர் மசாலோவோடு தமிழ் நாட்டுத் தோசையைக் கூட்டணி வைத்த உங்களது நயவஞ்சகம் புரிகிறது.

//// பதிவுலக ஆன்மீக லி.சூ.ஸ்டார் கே.ஆர்.எஸ் நடத்தப் போகும் பிசா போராட்டத்தில் ஹேம்பர்கர், ஹாட் டாக் போன்றவைகளையும் இணைத்து வலுவாகப் போராட்டம் நடக்கும் நீங்கள் உங்கள் தமிழ் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... போராட்டத்தில் அகில தமிழ் உலக பாவக்காய் பாசறையைச் சேர்ந்த பலக் கோடி தமிழர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது... //

தமிழ் தமிழ் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் பர்கர், பீட்சா, ஹாட்டாக் என்று வெளிநாட்டுப் பண்டங்களை உண்ணும் விரதத்தில் சேர்க்கும் அட்டூழியம் ஏன்? கேப்பைக் களி,கம்பு அடை, குதிரைவேலிச் சோறு, கத்திரிக்காய் புளிக்குழம்பு என்று ஏன் உண்ணவில்லை? மொரமொரெனவே புளித்த மோரும் வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் சேர்க்காதது ஏன்? ஏன்? ஏன்? செப்புக தேவ்...செப்புக?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தமிழ் தமிழ் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் பர்கர், பீட்சா, ஹாட்டாக் என்று வெளிநாட்டுப் பண்டங்களை உண்ணும் விரதத்தில் சேர்க்கும் அட்டூழியம் ஏன்?//

உக்கும்...இதுக்குத் தான் தமிழில் சிந்திக்கணும்ங்கிறது!:-)
ஒரு தமிழனின் போரட்டம் இன்னொரு தமிழனக்குத் தானே புரியும்?

கேப்பங்களி, கம்பங்கூழ், தேன் பிசைந்த தினைமாவு, சற்றே கருப்பட்டி தட்டிய கார அடை, குதிரை வேலிச் சோறு, செங்கரும்புச் சாறு, பாகற்காய் புளிக்குழம்பு, வெங்காயம் துவைத்துப் புளித்த மோரு
- இவை எல்லாம் மனம் மகிழ்ந்து தமிழன் உண்ணும் உணவு! எதிர்ப்பைக் காட்ட வீதியில் உண்ணும் உணவல்ல!

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
உண்ணுவது "இச்சோறே"!
எதிர்ப்பைக் காட்ட ஏய்த்தவர் வீழ்த்த
உண்ணுவது "அச்சோறே"!!

சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் மேல் அவதூறு கற்பிக்கும் இயக்குனர் ஜிராவுக்கு பாகற்காய் சப்ளை இன்றோடு நிறுத்தப்படுகிறது! :-)

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தமிழ் தமிழ் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் பர்கர், பீட்சா, ஹாட்டாக் என்று வெளிநாட்டுப் பண்டங்களை உண்ணும் விரதத்தில் சேர்க்கும் அட்டூழியம் ஏன்?//

உக்கும்...இதுக்குத் தான் தமிழில் சிந்திக்கணும்ங்கிறது!:-)
ஒரு தமிழனின் போரட்டம் இன்னொரு தமிழனக்குத் தானே புரியும்? //

ஓ அப்ப உங்களுக்குப் புரியலையா...அதுக்கு யாரும் ஒன்னும் செய்ய முடியாது. :))))

// கேப்பங்களி, கம்பங்கூழ், தேன் பிசைந்த தினைமாவு, சற்றே கருப்பட்டி தட்டிய கார அடை, குதிரை வேலிச் சோறு,//

இதுல எதுனாச்சும் தேவோ..இல்ல உண்ணும் விரதத்துல பங்கு பெறப் போறவங்களோ....எப்பவாச்சும் சாப்பிட்டிருக்கீங்களா? நீங்க வேணா சாப்பிட்டிருக்கேன்னு பொய் சொல்லலாம். அதுக்கு ஏதாச்சும் செம்மொழி அல்லது வடைமொழிப் பாட்டும் எடுத்துப் போடலாம்...ஆனா மத்தவங்க? தூத்துக்குடி சீலா மீன முழுசாப் பொரிச்சி உள்ள தள்ளுனவன் இந்த ஜிரா...உங்க அலம்பல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்...

// செங்கரும்புச் சாறு, பாகற்காய் புளிக்குழம்பு, வெங்காயம் துவைத்துப் புளித்த மோரு
- இவை எல்லாம் மனம் மகிழ்ந்து தமிழன் உண்ணும் உணவு! எதிர்ப்பைக் காட்ட வீதியில் உண்ணும் உணவல்ல! //

அப்படீன்னா பீட்சா ஹட்டு...கார்னரு..டோமினோஸ்..காபி டே, பாரீஸ்டால சாப்புடுறவங்கள்ளாம் தமிழர்களே இல்லையா... இல்ல எதிர்ப்பைக் காட்டத்தான் அங்க உக்காந்து திங்குறாங்களா? நேத்து கூட நீங்க சலாமி பீட்சா வாங்கி குஷன் சோபாவுல சாஞ்சி உக்காந்து ஃபேண்டாசியா பாத்துக்கிட்டே மொக்குனீங்களே...அது எந்தக் கணக்கு?

// எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
உண்ணுவது "இச்சோறே"!
எதிர்ப்பைக் காட்ட ஏய்த்தவர் வீழ்த்த
உண்ணுவது "அச்சோறே"!!//

சோற்றால் அடித்த பிண்டங்களாய்த் தமிழரை மாற்றப் பார்க்கும் கே.ஆர்.எஸ் அவர்களே...உங்களுக்குத் தமிழர்கள் நோ சொல்லும் காலம் நெருங்கி விட்டது. என்னுடைய அடுத்த படமான தெருமால் பெருமை என்ற படத்தில் உங்களையே கதாநாயகராக்குவது என்று முடிவு செய்து விட்டேன்.

// சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் மேல் அவதூறு கற்பிக்கும் இயக்குனர் ஜிராவுக்கு பாகற்காய் சப்ளை இன்றோடு நிறுத்தப்படுகிறது! :-) //

நன்றாகக் கவனிக்க. நான் பாவக்காய் என்றேன். பாகற்காய் எனவில்லை. ஆகையால் பாவக்காய் சப்ளையை மட்டும் நிறுத்தும் படியும்... பாகற்காயைத் தொடர்ந்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல்..இன்று குழம்பில் வேகும் நண்டோடு உங்களுக்கு நட்புறவு உண்டாகும் அபாயம் இருப்பதை மிகமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தூத்துக்குடி சீலா மீன முழுசாப் பொரிச்சி உள்ள தள்ளுனவன் இந்த ஜிரா...//

செய்யாத்தங் கரையினிலே சங்கரா மீனைச் சுறுசுறுன்னு வறுத்து நண்பர்களுக்கு வழங்கியவன் இந்த கேயாரெஸ்! :-)

//உங்க அலம்பல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்...//

உங்க சலம்பல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்!
சலம்பியது சலம்பாதது அது கண்டு நீர்
புலம்பியது புலம்பாதது அது கண்டு நான்
விளம்பியது விளம்பாதது...
அனைத்தும் அறிவோம்! :-))

//சோற்றால் அடித்த பிண்டங்களாய்த் தமிழரை மாற்றப் பார்க்கும் கே.ஆர்.எஸ் அவர்களே...//

தமிழா! உன்னைப் "பிண்டம்" என்று ஜிரா வடசொல்லால் வைகிறாரே! அது கேட்டும் வாளா இருப்பது தகுமா?

//உங்களுக்குத் தமிழர்கள் நோ சொல்லும் காலம் நெருங்கி விட்டது//

தமிழர்கள் "இல்லை" என்று தான் சொல்வார்கள்!
"நோ" சொல்லுவார்கள் என்று நீங்கள் ஆங்கிலத்தையும் நுழைக்கும் போதே தெரியவில்லையா, யாருக்கு உண்மையிலேயே "இல்லை" என்னும் "நோ" சொல்லப் போகிறார்கள் என்று!

முதலில் தமிழை வெளியில் நிறுத்தி ஹிந்தியை உள்ளே நுழைத்தீர்! இப்போது ஆங்கிலம் நுழைத்தீர்!!
தீர் தீர் என்று உம் தீமை தீர, தீர் தீர் என்று தீரராய், சூரராய் தமிழ்ப் படை புறப்பட்டதே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்னுடைய அடுத்த படமான தெருமால் பெருமை என்ற படத்தில் உங்களையே கதாநாயகராக்குவது என்று முடிவு செய்து விட்டேன்//

அய்யய்யோ! நமக்கும் துணியோ போபியா போடப் போறாரா இந்த மனுசன்?
அவனாச்சும் பரவாயில்லை! நாம பனியனைக் கூட கழட்டாம, கனவுல கூட வேட்டி சட்டை போட்டு தூங்குற பையனாச்சே!

திருச்செந்தூர் கோயில்ல சட்டைய கழட்டாம வெக்கப்பட்டு வெளியில் நின்ன கேஆரெஸ் கதையைக் கந்தலாக்காம வுடமாட்டாரு போல இருக்கே! பேசாமக் கட்சி மாறிடலாமா?

வெட்டி, கப்பி...
எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து அண்ணன் தேவைக் காப்பாத்திக்குங்க-ப்பா!

ஜிரா
பாகற்காய் எனக்கு! பொரிச்ச நண்டு உங்களுக்கு! விண்டு விண்டு சாப்பிடலாம்! ஓக்கேவா? "சப் டீக்கு ஹை ஜிராஜி?" :-)))

துளசி கோபால் said...

ஒரு சந்தேகத்தை இங்கே(யே) கேட்டுக்கவா?

அந்த சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் என்னப்பா பேர்?

குமரன் (Kumaran) said...

இங்கேயும் அசைவத்துக்குத் தான் வெற்றியா? ஹும் எப்படியோ போகட்டும். நானும் அசைவம் உண்பவன் தானே.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இங்கேயும் அசைவத்துக்குத் தான் வெற்றியா?//

குமரன்...அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க! அடுத்த பதிவின் நெலமை எப்படி இருக்கு-ன்னு பாத்துக்கிடறேன். அப்பறம் நம்ம அடிச்சி ஆடிறலாம்!
எப்பமே அச்சைவத்துக்குத் தான் வெற்றி! :-)

//துளசி கோபால் said...
//அந்த சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் என்னப்பா பேர்?//

டீச்சர்...
இந்தூருக்கு அம்மா அப்பா வந்த போது, சங்கரா மீனை Red snapper-ன்னு கண்டு புடிச்சி வாங்கியாந்தேன்.
வஞ்சிரத்தை Salmon/king fishன்னு சொல்லுறானுங்க! சிலா மீனு=seer fishன்னு கேள்வி!

G.Ragavan said...

// துளசி கோபால் said...
ஒரு சந்தேகத்தை இங்கே(யே) கேட்டுக்கவா?

அந்த சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் என்னப்பா பேர்? //

டீச்சர்... சீலா மீனுக்கு ஆங்கிலத்துல seer fishனு சொல்வாங்க.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
டீச்சர்...
இந்தூருக்கு அம்மா அப்பா வந்த போது, சங்கரா மீனை Red snapper-ன்னு கண்டு புடிச்சி வாங்கியாந்தேன்.
வஞ்சிரத்தை Salmon/king fishன்னு சொல்லுறானுங்க! சிலா மீனு=seer fishன்னு கேள்வி! ///

தப்பு கே.ஆர்.எஸ். வஞ்சிரங்குறது வடதமிழ்நாட்டு மக்கள் சீலா மீனுக்கு வெச்ச பேரு. Salmon/Zalm என்று சொல்லப்படுவது இளஞ்சிவப்பு சதையுடன் இருக்கும். சீலாவின் வெள்ளைக்காரச் சொந்தக்கார மீன் மாதிரி. சங்கரா மீன்னா செவப்பா இருக்குறதா? ம்ம்ம்ம்...முள்ளு நெறைய இருக்கும்.

Anonymous said...

Dear Said, சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் "Seer fish" -ன்னு பேர். புரிஞ்சுதோ?

துர்கா said...

:))
என்னையும் வைச்சு காமெடி பண்ணியாச்சா?
நல்லதான் இருக்கு :D
அடுத்த பகுதிக்கு waiting

துர்கா said...

:))
என்னையும் வைச்சு காமெடி பண்ணியாச்சா?
நல்லதான் இருக்கு :D
அடுத்த பகுதிக்கு waiting

துர்கா said...

//தங்கத் தாரகை, சிங்க வாகினி, தமிழ்ச் சினிமாவுக்கே அரிச்சுவடி அளித்த கொலைமாமணி, மலேசிய மந்தாகினி எங்கள் மாரியாத்தாவை உதவி இயக்குனர் என்று மரியாதையுடன் அழைக்காமல்....

"அப்ரசெண்டு" என்று தாழ்த்திப் பேசும் ஆணாதிக்க இயக்குனர் ஜிராவை எதிர்த்து தென்னிந்திய திரைப்பட நடிகையர் சங்கம் சாகும் வரை பிட்சா உண்ணும் விரதம் மேற்கொள்ளப் போவதாகச் சற்று முன் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன! :-)
//

இதுதான் கொல வெறியா அண்ணா :(
நல்ல இருங்க...

இராம்/Raam said...

சங்கத்து சூப்பர்ஸ்டார் காஞ்சிதலைவன் கப்பி'க்கு அமெரிக்கா ரீட்டர்ன் மாப்பிள்ளை கேரக்டர் இருக்கும் என நம்பிக்கை!?யில் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.... :)

இம்சை அரசி said...

hahaha... ROTFL post :)))

இம்சை அரசி said...

ஜி.ரா இவ்ளோ காமெடி பண்ணுவீங்கன்னு இத்தன நாளு எனக்கு தெரியாம போச்சே :)))

இம்சை அரசி said...

சரி... அடுத்து காதல் குளிருக்காவது சிவியார் அண்ணன ஹீரோவா போடனும்ன்றது எங்களோட கோரிக்கை... ஜி.ரா ஏமாத்த மாட்டார்ன்ற நம்பிக்கை இருக்கு ;)))

அப்புறம் நம்ம KTMஅ ஏன் சும்மா விட்டீங்க??? (ஏதோ நம்மளால முடிஞ்சது ;))))

G.Ragavan said...

// இம்சை அரசி said...
ஜி.ரா இவ்ளோ காமெடி பண்ணுவீங்கன்னு இத்தன நாளு எனக்கு தெரியாம போச்சே :)))//

ஹி ஹி இதெல்லாம் ஜகஜம் :)

// சரி... அடுத்து காதல் குளிருக்காவது சிவியார் அண்ணன ஹீரோவா போடனும்ன்றது எங்களோட கோரிக்கை... ஜி.ரா ஏமாத்த மாட்டார்ன்ற நம்பிக்கை இருக்கு ;))) //

ஆகா... ஒங்க ஆசைய நிறைவேத்தியே ஆகனுமே :)

// அப்புறம் நம்ம KTMஅ ஏன் சும்மா விட்டீங்க??? (ஏதோ நம்மளால முடிஞ்சது ;)))) //

ஒவ்வொருத்தராத்தானே... இப்பத்தான தொடங்கீருக்கோம். :)