Tuesday, February 19, 2008

பொண்ணு எப்படி இருக்கனும்டா...

சரி.. மாதம் முடிய போது.. இன்னும் ஒரு பதிவு போடலனா எப்படி! (குட்டி பதிவு தானுங்க..)

இந்த கல்யாண வயசு கிட்ட வந்தாலே, அம்மா மெதுவா கேட்பாங்க... ஆமாடா கண்ணா பொண்ணு எப்படி இருக்கனும்.. அப்படினு.. நாம பே பே அப்படினு உளறுவோம். எப்படி... இப்படி...

சரி.. சீரியஸா பேசுவோம்.. (அப்போலோ ஓகேயா?)
இப்படி தான் பொதுவா இந்த பேச்சு போகும்...

அம்மா: உனக்குனு, பொண்ணு இப்படி தான் இருக்கனும்னு ஏதும் இருக்காடா?

பையன்: அதா.... ம்ம்ம்...

அம்மா: சும்மா கூச்ச படாம சொல்லுடா...

பையன்: ம்ம்ம்ம்ம்....... கொஞ்சம் example சொல்லுங்கம்மா.. (example code பார்த்தே வாழ்க்கை பூரா code செய்துட்டேனே.. சொந்தமா specs கேட்டா, வர மாட்டேன்யுதுய்யா!)

அம்மா: எனக்கு... பொண்ணு குறைந்தது 5 feet உயரமாச்சும் இருக்கனும்.. ரொம்ப வெள்ளையா வேண்டாம், உன் லைன்ல படிச்சு இருக்கனும், அவிங்க வீடு கொஞ்சம் வசதியா இருக்கனும், (இப்படி ஒரு 5 நிமிஷம், script ஏ பார்க்காம ஒரு நீளமான டயலாக்.. அவிங்க பேசும் போது நமக்கு தண்ணி தாகம் எடுக்கும்...) .............
............ இவ்ளோ தாண்டா.. இப்போதைக்கு

பையன்: (அடங்கொக்கமக்கா.. இவ்ளோ தானாவா) ஓ... நீங்க சொன்னா சரிதான்மா..

அம்மா:
சரிடா.. உனக்கு எப்படி இருக்கனும்

பையன்: (இன்னுமா???? அதான் உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் நீங்க சொல்லிடீங்களே.. நான் என்னத்த சொல்ல) ம்ம்ம்ம்........

அம்மா: சரி.. ஏதும் மனசுக்குள்ல இருக்கானு தான் கேட்டேன். இருந்தா சொல்லு.. இல்லனா நாங்க பார்த்துப்போம்..

பையன்: ஹி ஹி...இல்லைமா..ஹா ஹா.. (நான் கோடு போடாமலேயே ரோடு போடுறீங்க.. இதுல நான் அத வேற சொன்னேன்.. விளங்கினாப்ல தான்)

அதுனால, நம்ம பயலுகளுக்கு எல்லாம் உபயோகமா இருக்கனுமேனு தான் இது...

இப்போ இந்த பொண்ணு கண்ணு இருக்கு பாருங்க.. அது... மீன் மாதிரி இருக்கனும். ( அதுவும் Gold Fish கணக்க இருந்தா ரொம்ப அழகா இருக்குமாங்க!) இப்போ மீன் என்ன செய்யும்.. அங்க இங்க நீந்திட்டே இருக்கும். நம்ம கண்ணும் அதை சுத்தியே போகும்... என்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா..

அடுத்த மேட்டரு, மூக்கு. எங்க Guess செய்யுங்க. சரி தான்.. அதே தான்.. கிளி மூக்கு தான்! இது ஏன்னு நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்.. தனியா ரூம் போட்டேன்.. ஒரு கிளி கூட (நிஜ கிளிங்க) ரூம் போட்டேன்.. ஒன்னும் தோணல. சரி, ஆராய வேணாம்னு விட்டாச்சு. உங்களுக்கு எதுனா தோணுதுங்களா?

அடுத்து கார்மேகம் மாதிரி கூந்தல். ஏன் அது ஜீப் மேகம், SUVமேகம் னு எல்லாம் இருக்க கூடாதானு நீங்க கேட்கும் முன்ன, கார்மேகம் னா, மழை தர மேகம் மாதிரி கருப்பா முடி இருக்கிறனு அர்த்தம்னு சொல்லிகிறேன்.. (Sorry people.. Blondes go out of the equation here :( )

அடுத்த மேட்டர்.. உதடு. Strawberry உதடு. இதுக்கு அழகா நான் சொன்ன விளக்கம் சென்ஸார் போர்டு நிராகடிச்சிடுச்சு..

சரி.. இது வரை சொன்ன மேட்டரெல்லாம் மொத்தல்ல ஒரு பொண்ணுக்கு இருந்தத எப்படி இருக்கும்னு பார்ப்போமா.....பொண்ணு, ஸ்நேகா மாதிரி, சூப்பரா இருக்குல.. ஹிஹி!
இது போக, ஆப்பிள் கண்ணம், சங்கு கழுத்து, நிலவு முகம் அப்படினு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா... (ஸ்நேகா வீட்டுல இருந்து எனக்கு ஆட்டோ வரும்.. வேறென்ன! (ஒரு வேளை அதுல ஸ்நேகாவும் வருமோ...))

11 comments:

CVR said...

///ஒரு கிளி கூட (நிஜ கிளிங்க) ரூம் போட்டேன்.////
நல்ல காலம் விளக்கமா சொன்ன,இல்லனா.....!!

///மழை தர மேகம் மாதிரி கருப்பா முடி இருக்கிறனு அர்த்தம்னு சொல்லிகிறேன்.. (Sorry people.. Blondes go out of the equation here :( )
////
LOL!!

போட்டோஷாப்பு ஒன்னு கையில கெடைச்சா இப்படியா ராசா புகுந்து வெளையாடறது????

நடத்து நடத்து!! :-D

கப்பி பய said...

:)))

கைப்புள்ள said...

//பொண்ணு, ஸ்நேகா மாதிரி, சூப்பரா இருக்குல.. ஹிஹி!//

ஆமா...ஆமா...கலக்கல் பதிவுங்க.
:)))

யாத்திரீகன் said...

அகில உலக இரசிகர் மன்றத்தின் சார்பாக இப்பதிவின் கடைசி வரிகளை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் .. யய்யா டிரிமஸ் , இதெல்லாம் அநியாயம் ..

புதுகைத் தென்றல் said...

:))))))))))))))))))))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// (ஸ்நேகா வீட்டுல இருந்து எனக்கு ஆட்டோ வரும்.. வேறென்ன! (ஒரு வேளை அதுல ஸ்நேகாவும் வருமோ...))//

வரும்யா, வரும்!
ஸ்நேகா இருக்க மாட்டாங்க ஆட்டோவுல! ஒரே ஸ்நேக்கா வரும், உனக்கு மகுடி வாசிக்க!

தல
எதோ அம்மா பேச்சை எடுத்தாங்க-ன்னு சொன்னியே பதிவுல!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்! :-)

இராம்/Raam said...

//பொண்ணு, ஸ்நேகா மாதிரி, சூப்பரா இருக்குல.. ஹிஹி!//

ஹிம்... ஆமாம்... :))

கோபிநாத் said...

\\ஒரு வேளை அதுல ஸ்நேகாவும் வருமோ...))\\

தல

நினைப்பு தான்...!!

\\தல
எதோ அம்மா பேச்சை எடுத்தாங்க-ன்னு சொன்னியே பதிவுல!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்! :-)\\

ஆகா...தல வாழ்த்துக்கள் ;))

நெல்லை காந்த் said...

//
(ஸ்நேகா வீட்டுல இருந்து எனக்கு ஆட்டோ வரும்.. வேறென்ன! (ஒரு வேளை அதுல ஸ்நேகாவும் வருமோ...))
//

Auto varum, Snehaumm varum, appuram avenga Appaumm varuvarr,
ethuku...

Ungkaluku ponnu pasha than...

அருட்பெருங்கோ said...

/example code பார்த்தே வாழ்க்கை பூரா code செய்துட்டேனே.. சொந்தமா specs கேட்டா, வர மாட்டேன்யுதுய்யா!)/

:-))))) உண்மைய இப்படி உரக்க சொல்லலாமா?

aruna said...

அடடா என்னப்பா இது உனக்குப் போய் இப்பிடி ஒரு பொண்ணா? பாவம்டா நீ!!!
அன்புடன் அருணா