Wednesday, September 13, 2006

போலி வரு.வா.சங்கம் - 3

பாகம் 1 படிக்க
பாகம் 2 படிக்க

"என்னது இது தல சவுண்ட் கேக்குது....தளபதியை வேறக் காணும் "

"யோவ் வாங்க அய்யா... போய் என்னன்னு பாப்போம்"

விவசாயி ஆல் இன் ஆல் அழகுராஜ் கடையில் வாடகைக்கு எடுத்த பெட்ரமாக்ஸ் லைட்டை உயர்த்திப் பிடிக்க சிவா, பாண்டி, நான் எல்லாரும் பின்னாடி மெதுவாக பூனை நடை நடந்துப் போனோம்.பழையக் கட்டடம் கடைசியா ஜெய்சங்கர் நடிச்ச CID சங்கர் படம் சூட்டீங் நடந்து இருக்கும் போல... மெகா அமைதி...

"ஆமா.. தலச் சத்தம் கேட்டுச்சு.. இங்கிட்டு இப்போ மனித நடமாட்டமே இல்ல..."

"தலயும் தளபதியும் சிக்கிட்டாங்கய்யா.. இன்னேரம் சிதறி இருப்பாயங்கன்னு நினைக்கிறேன்"

"அப்படித் தான் நானும் நினைக்கிறேன்...இந்தா இது தலயோடு சில்க் சட்டை மாதிரி இல்ல..."

"ஆமா கெக்கிரான் மெக்கிரான்னு அரேபிய மொழியிலேக் கூட எழுதி இருக்கு பாருங்க"
யாருக்கும் அரபிய மொழி தெரியாத போதும் ஆமாம் ஆமாம் என்று ஒத்துக் கொண்டோம்.

"இது தலயோடு சிலுக்கு லுங்கி மாதிரியே இருக்கு..." பாண்டி கண்டெடுத்த லுங்கியைப் பார்த்ததும் எங்களுக்கு லேசா வெலவெலக்க ஆரம்பித்தது.

"அய்யய்யோ இது தலயோட...." என்று ஆரம்பிக்கப் போன சிவாவின் வாயை நான், விவசாயி, பாண்டி மூணு பேரும் சேர்ந்துப் பொத்தினோம்.

"வேணாம் லேடீஸ் எல்லாம் படிப்பாங்க..அப்புறம் தலக்கு வெக்க வெக்கமாப் போயிரும் சொல்லக் கூடாது ஆமா"

"அடச்சே நிறுத்துங்கப்பா இது தலயோட கர்சீப்ன்னு சொல்லவந்தேன்" சிவா சீற்றலாய் சொல்லி முடிக்க.

"அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே" விவசாயி முணுமுணுக்க...

"தமாஸ் பண்றதை நிறுத்துங்கப்பா.. தலயைத் தேடுங்கப்பா...."

"விவ் விவ்.. இங்கேப் பாரு... ஒரு எலுமிச்சம் பழத்தின் நடுவே குங்குமப் பொட்டு அதுக்கு பக்கத்துல்ல மை.. அதுல்ல நூல் கோர்த்து ரெண்டு மிளகாய் ஒண்ணு சிகப்பு காஞ்ச மிளகா.. இன்னொண்ணு பச்சை மிளகா.. அதுக்கு கீழே....அய்யோ.. ஒண்ணும் இல்ல"

"இளா.... ஏன்?"

"என்னங்கடா ஏன்ன்னு என்னைப் பாக்குறீங்க?"

"வேட்டையாடு விளையாடு படம் பார்த்து அன்னிக்கே நீங்க பீலிங் ஆவும் போதுக் கூட நான் இப்படி நினைக்கல்ல... கடைசியிலே.. ச்சே"

"டேய் தேவ்... என்னச் சொல்ல வர்ற நீ?"

"அந்தப் படத்துல்ல வர்ற முதல் கொலை மாதிரி நீங்கத் தலயை.. அய்ய்யோ..."

"தேவ் ஓவர் இதெல்லாம் ஆமா.. எதை வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்த நீ..."

" காரணம் ஒண்ணு உங்கப் பேர் இளா...
காரணம் ரெண்டு தலயோட டிரெஸ் எல்லாம் அங்கங்கே கிடக்குது
காரணம் மூணு இந்த எலுமிச்சம் பழம்
காரணம் நாலு வேட்டையாடு விளையாடு படம் நீங்க பார்த்துட்டீங்க..."


"அடிங்க... நானும் உங்க கூட உக்காந்து பிஸ்கொத்துச் சாப்பிட்டுட்டு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காம விக்கி தலயோட அலறல் கேட்டுத் தானா விக்கல் நின்னு எந்தரிச்சு கூட வந்தா எனக்கே ஆப்பு வைக்கிறீயா நீ...வேணாம் விவகாரம் ஆயிடும் சொல்லிட்டேன்"

"ஸ்டாப் ஸ்டாப்... கேக்குதா" சிவா கேட்டான்.
"ஒண்ணும் கேக்கல்ல" இது நான்.
"ஆகா எனக்குக் கேக்குது....எனக்குக் கேக்குது....ஜொள்ளுபேட்டை டீ கடையிலே நிதம் நிதம் ஒலிக்கும் தெய்வீக ராகமாச்சே.. நல்லா கேக்குது"

எல்லோரும் காதுகளைத் தீட்டினோம்....ஆங் அதே பாட்டுதான்...

பொன்மேனி உருகுதே ஜகஜகஜக் புல் வால்யுமீல் பாடல் அலற.....

நாங்க நாலு பேரும் பாட்டு வரும் திசை நோக்கி நகர ஆரம்பித்தோம்.. பாட்டு முதல்மாடியில் இருந்து தான் கேட்டது. காலடி ஓசை படாமல் மெல்ல படிகளில் ஏறினோம். முதல் மாடி காலியாக இருந்தது. இரண்டாவது மாடிக்குப் போகவும் பாட்டு சத்தம் நின்று போனது.

விவசாயி விளக்கு வேறு அணைந்து அவிந்துப் போனது. செய்வதறியாது நாங்க தவித்து நிற்க.. மெல்லிய சவுண்டில் அடுத்தப் பாட்டு ஆரம்பித்தது..இந்த முறை நாங்கக் கேட்ட பாட்டு இன்னொரு காலத்தால் அழியாத கந்தர்வ கானம்.

"நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா....."

கானம் கேட்டு பாண்டியின் பற்கள் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல் பீறிட்ட உற்சாகத்தில் பளிச்சிட்டது. அந்த வெளிச்சத்தில் நாங்கள் கண்ட காட்சி எங்களை மிரள வைத்தது....

ரத்தம் உறைந்துப் போனது. சித்தம் சிதறிப் போனது. பித்தம் ஏறி புத்தி பதறி கிட்டத்தட்ட கண்டப்படிக் கதறும் நிலைமைக்கு நாங்கள் ஆளாகிப் போனோம்.

அப்படி ஒரு ஆயுள் காலமிரட்டல் காட்சி அது...

உலக வருத்தப்ப்டாத வாலிபர்களின் ஒரேத் தலைவரானக் கைப்புள்ள... தன்னுடைய சில் அவுட் ஸ்டில் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திய கருஞ்சிறுத்தை இளைஞன்... மேலுக்கு ஆடை அணியாமல் கனடாத் தேசத்து மாப்பிள் இலைகளை இடுப்பில் உடுத்தி அந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக மைக்கேல் ஜாக்சன் பாணியில் நடனமாடிக் கொண்டிருந்தார்.

விவசாயி கோபத்தின் உச்சிக்கு ஏறி சென்று... ஸ்டாப் இட்.. என்று அலற....

" எவ் அவ.......???????????" பயங்கர உக்கிரமா வந்தக் குரலின் திசையில் திரும்பினால் அடுத்த அதிர்ச்சி.

அங்கு........ தள...தள..தளபதி.... பயங்கர கெட்டபில் நின்று கொண்டிருந்தார்.

தளபதி....என்று நாங்கள் ஒரேகுரலில் அலற...

" ஹே..ஹே.. நான் தளபதி இல்லடா.... இன்னிக்கு சனிக்கிழமை... நான் அமானுஷ்யனாந்தாடா இவன் என் பிரதம சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப்புள்ளடா.. .இவனையும் சிலுக்கையும் சேத்து வைக்கப் போறேன்டா அதுக்கு தான் இந்த யாகம் நடத்துறேன் நான்....

தல இருக்கப் பக்கம் நாங்கத் திரும்ப தல கையை இலையோடுப் பொத்தி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனப் பரிதாபமாக எங்களைப் பார்த்து சங்க நாதம் எழுப்ப முயன்றார்.

"எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்களா.. அம்புட்டையும் உருவி விட்டுட்டு இலையாக் கட்டி ஆட விட்டுட்டான்ய்யா ஆட விட்டான்யா.. ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்... நாலு நாளா அடைச்சு வச்சு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்ய்யா இந்த ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட.. ராஜ குலத் திலக.. ராஜ குலோத்துங்க 23ஆம் புலிக்கேசிவழி வந்த வாலிப வயசுகார கைப்புள்ளைய காப்பாத்துங்கய்யா.. காப்பாத்துங்க..."

கைப்பு அழ... நாங்க அழ... கோபவேசத்துல்ல இருந்த தளபதி அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பிச்சார்.

அதுக்குள்ளே நாங்க கைப்பைக் காப்பாத்தி டவுசர் எல்லாம் மாட்டி விட்டு கிளம்பச் சொன்னோம். தளபதி மெல்ல கண் திறந்தார்.

"என்னாச்சு.. நாம் எல்லாம் எங்கே இருக்கோம்.. சாம்பு யார்ன்னு கண்டுபிடிச்சாச்சா? போலீஸ் யார்ன்னு தெரிஞ்சுப்போச்சா... எல்லாம் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கியாச்சா?" என எதோ பிதற்ற ஆரம்பிக்க....பாண்டி கையோடு கொண்டு வந்திருந்த சரக்கைத் தளபதிக்குப் பிடித்த மாதிரி வட்டமாக்கி ஊற்ற.... தளபதி மெல்ல சுய நினைவுக்குத் திரும்பினார்...

"யப்பா தளபபபபதி சொன்னாக் கேட்கணும்... இந்த அமானுஷ்யம் தாயத்து இப்படி ரொம்பத் திரியப் பிடாது.. ராத்திரி மணி பத்து அடிச்சாப் படுத்து தூங்கணும்.. அந்தைக் கணக்கா அத்துப் பிடுங்கிட்டு அலையப்பிடாது... இப்படி எல்லாம் செஞ்சா தேகம் சேதாராமாகி மூளை மந்தாராமாகிப் போயிரும் நயந்தாரா நயகாரான்னு எல்லாம் பிதட்டப் பிடாது... போலி.. கோலின்னு எல்லாம் கனவுக் கண்டு இந்தாப் பார் என்னக் காரியம் செஞ்சு வச்சிருக்க கிராதகா..." தலப் பொறுமையாப் பேச ஆரம்பித்தார்.

"தல என்னச் சொல்லுற நீ... தள எங்ககிட்ட எல்லாம் சங்கம் வளக்கப் போறேன்னு பாசமாப் பேசி பிஸ்கொத்து எல்லாம் கொடுத்து பிளான் எல்லாம் போட்டாரே... அப்போ அது எல்லாம் உட்டாலக்கடியா?"

"அடேய் சண்டாளா..தமில்ல தானேச் சொல்லிகிட்டு இருக்கேன்.... இந்தாப் பார் தளபதி கண்ணைத் திறந்துட்டான்... இந்த டவுசரை உருவினாலும் உருவிருவான் நான் போறேன் சாமி"

"டேய் நானூ பிடற்த்லல்லாணாந்தாடா.. அமானுஷ்ய சக்தி எல்லாம் ஒண்ணுக் கூடியிருச்சு.. சாம்புவைப் பிடிச்சுட்டேன்... ஆங் எங்கேடா என் சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப் புள்ள"

"கிளம்பிட்டார்ய்யா கிளம்பிட்டார்ய்யா சங்கத்தைக் கலைச்சிட்டு கட்டத்துரைக்கிட்ட்யே கொடுத்துட்டு ஓடுங்கடா"

17 comments:

கைப்புள்ள said...

அப்பப்பா! அன்னிக்கு நடந்ததை நெனச்சா இப்பக் கூட மேல் எல்லாம் பதறுது. செதறாம சேதாரம் இல்லாம ஊடு வந்து சேந்ததுக்கு மொதல்ல ஒரு செதறு தேங்கா வுட்டுட்டு வரேன்...

உங்கள் நண்பன்(சரா) said...

//அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே" விவசாயி முணுமுணுக்க...//

:))))))))))

தேவ் இந்தத் தொடர் முழுதும் அருமையாக இருந்தது,தலையவும், தளபதியாரையும் வைத்து எழுதிய இந்த தொடர் அருமை,
மெதுவாக அப்போ அப்போ டைமிங் கமெண்ட் அடிக்கும் ஆல்-இன்-ஆல் விவ் மற்றும்,ஜொள்ளூப் பாட்டைக் கேட்ட உடன் வாயில்தவுசண்ட் வாட்ஸ் எரியவிட்ட நண்பன் பாண்டி அருமை!ஆகா மொத்தத்தில் இது நல்ல ஒரு நகைச்சுவைத் தொடர்,
தொடர்ந்து தொடரவும்,


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

தல தேங்காயைச் சிதற உட்டீயா.... தேங்கா விக்குற விலையிலே பொறுப்பில்லாம சிதற விட்டுட்டு சும்மாவா வந்த அதை அப்படியே அலக்கா பொறுக்கிட்டு வந்திருந்தா ராத்திரி நீயே சுட்டு நீயே திங்கற தீஞ்சத் தோசைக்குச் சட்னிக்கு ஆச்சு இல்ல.. என்னத் தல இப்படி பண்ணிட்டே நீயு

Unknown said...

வாய்யா சரா.. ஊர் எல்லாம் நல்லா இருக்கா...
ஊருக்குப் போய் ஓடக்கார மாரிமுத்து... அப்படின்னு அடுப்புல்ல வெந்த ச்சே சாரி அரவிந்த சாமி மாதிரி பாட்டு எல்லாம் பாடுனீயா....

செல் போன்ல்ல ஐஸ் வச்சு வித்தைக் காட்டுறவன் ஆச்சே... ஊருல்ல என்ன என்ன வித்தைக் காட்டுனீயோ... விவரமாப் பதிவு போடு ராசா...

சரா தொடர் பற்றிய உன் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த தொடர் இதோடு முற்றும். விரைவில் வேறு புதிய தொடர் வரும் பார்.

ILA (a) இளா said...

//அப்புறம் தலக்கு வெக்க வெக்கமாப் போயிரும் சொல்லக் கூடாது//

கைப்பு: அப்படின்னா என்னையா? சொல்லித்தரகூடாதா?

ILA (a) இளா said...

//தேங்கா வுட்டுட்டு வரேன்... //
பார்த்து, தேங்காயில பாம் இருக்காம்,

Syam said...

//காரணம் ஒண்ணு உங்கப் பேர் இளா...//

இளா இடைவேளைனு சொல்லிட்டு போய்ருக்கார்...அடுத்த டார்கெட் யாரோ...எல்லோரும் சந்தோசமா இருக்கர அதே வேளைல கொஞ்சம்சாக்கரதயாவும் இருங்க :-)

Syam said...

//ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்... நாலு நாளா அடைச்சு வச்சு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்ய்யா//

நல்ல வேளை தல ஆட்டத்த நிறுத்தல...இல்லனா தள நாறி போய்ருப்பாரு :-)

இலவசக்கொத்தனார் said...

//தல தேங்காயைச் சிதற உட்டீயா.... தேங்கா விக்குற விலையிலே பொறுப்பில்லாம சிதற விட்டுட்டு சும்மாவா வந்த அதை அப்படியே அலக்கா பொறுக்கிட்டு வந்திருந்தா ராத்திரி நீயே சுட்டு நீயே திங்கற தீஞ்சத் தோசைக்குச் சட்னிக்கு ஆச்சு இல்ல.. என்னத் தல இப்படி பண்ணிட்டே நீயு//

அவரு அப்பிடி எல்லாஞ் செய்வாரா? நீங்க கண்டெடுத்த சிலுக்கு லுங்கியில அப்படியே அந்த தேங்காயை பதவிசா சுத்தி, அப்படி மெதுவா தரையில அடிச்சி, தேங்காய உடைக்கிறா மாதிரி உடைச்சி, வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டாரு இல்ல.

ஆவி அம்மணி said...

ஸ்ஸப்பா! இந்த சாமியார் நம்மளை சும்மா இருக்க விட மாட்டார் போல இருக்கே!

ILA (a) இளா said...

//இளா இடைவேளைனு சொல்லிட்டு போய்ருக்கார்//
வந்துருவேன் இன்னும் சில மாதங்களில், அதுவரைக்கும் பின்னூட்டம் போட மட்டுமே நேரம் கிடைக்குதுங்க.

இராம்/Raam said...

//ஸ்ஸப்பா! இந்த சாமியார் நம்மளை சும்மா இருக்க //

ஏய் போலிஆவி இங்கேயும் வந்திட்டியா நீயீ.....

ஆவி அம்மணி said...

இன்னிக்கு எங்க (பாழடைஞ்ச) பங்களாவிலகோ.வி 65தான் டின்னர்.

Santhosh said...

தேவு கலக்கிட்டே போ..

//அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே" விவசாயி முணுமுணுக்க...//
தலையோட மானத்தை இப்படி எல்லாம் பறக்கவிட்டுறதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.:))

//எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்களா.. அம்புட்டையும் உருவி விட்டுட்டு இலையாக் கட்டி ஆட விட்டுட்டான்ய்யா ஆட விட்டான்யா.. ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்... //
மானம் காத்துல பறக்குதுன்னு சொல்லுவாங்களே அது இது தானா?

சும்மா அதிருதுல said...

::)))

ILA (a) இளா said...

யாருய்யா இந்த சின்னபுள்ள், கைப்புள்ளையோட பினாமியா இருக்கும்மோ? என்னய்யா இந்த பதிவுக்கு தகுந்த மாதிரி எல்லாமே மர்மமா இருக்கு. பின்னூட்டம் போடுறவங்கள பார்த்தாலும் பயமாவே இருக்கே. கம்னு, தளபதிகிட்ட இருந்து ஒரு தாயத்த இறக்குமதி பண்ணி சங்கத்துல தொங்கவிட்டுறலாமா?

ஆவி அம்மணி said...

ஓ! "தலை"யவே "தழை: கட்டி ஆட வெச்சிட்டாரே உங்க "தள"

:-)