Friday, September 22, 2006

தலயா கொக்கா!!!


இது சங்கத்து சிங்கங்களின் கல்லூரியில் நடந்த ஒரு ரணகளமான நிகழ்ச்சி!!!

பிராக்டிக்கல் முடித்து காண்டீனில் ஓசி டீ குடித்து கொண்டிருக்கிறார் நம்ம தல கைப்பு!!!

ஜொள்ளு பாண்டி வேகமாக ஓடி வருகிறார்...

ஜொ.பா: தல... இந்த தடவையும் நம்ம தளபதிக்கு லேப்ல ஆப்பு வெச்சிட்டாங்க!!!

கைப்பு: என்னது!!! லேப்ல குத்திட்டாங்களா?சங்கத்து ஆளுனு சொன்னியா??

ஜொ.பா: சொன்னதுக்கு அப்பறம்தான் குத்துனாங்க!

கைப்பு: அந்த HODக்கு நம்மல சீண்டி வெளயாடுறதே வேலையாப்போச்சு. அவருக்கு ஹெட் லெட்டர் சரியில்லன்னு நினைக்கிறேன்...ஸ்டார்ட் பண்ணுங்கடா வண்டிய!!!

ஜொள்ளு பாண்டி இஞ்சினாக மாற, அவர் பின்னால் விவசாயி இளா, கை தேவ், வெட்டிப்பயல், நாகை சிவா நால்வரும் ரயில் பொட்டிகளாக மாற வண்டியில் இணைகிறார் கைப்புள்ள.

ரயில் வண்டி டிப்பார்ட்மெண்டு அருகே நின்றது.

டிப்பார்ட்மெண்ட்க்கு வெளியே தளபதி நின்று கொண்டிருக்க, உள்ளே HOD மற்றும் அவருக்கு அல்லக்கையாக இரண்டு வாத்தியார்கள்.

கைப்பு (கோவமாக) : சங்கத்து ஆள ஃபெயில் பண்ணவது யாரு?

HOD: என்னது? ஒன்னும் கேக்கல... உள்ள வந்து சொல்லு

கைப்பு: உள்ளயா?? நானா?? (கைப்பு தனது வழுக்கமான வீர சிரிப்பை சிரிக்கிறார்).நானும் டிப்பார்ட்மெண்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது...ஆமாம் சொல்லிட்டேன்... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

HOD: ஏன்டா அவன ஃபெயில் பண்ணா உனக்கு என்னடா?

கைப்பு: எங்க சங்கத்துல இது வரைக்கும் யாரும் கப் வெச்சது இல்ல (பெருமையாக சொல்கிறார்)

HOD: ஏன்டா போன செமெஸ்டர்ல தான நீ வாஷ் அவுட் ஆன?

கைப்பு (நக்கலாக): அது போன செம்மு... நான் சொல்றது இந்த செம்மு

HOD (பக்கத்திலிருப்பவருடன்): இவன் அடங்க மாட்டான் போலிருக்கு... அந்த மார்க் ஷீட்ட எடுத்துட்டு வாங்க. தொலஞ்சு போறானுங்க இல்லைன்னா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதே சாதிப்பானுங்க

கைப்பு (தளபதியிடம்): பாத்த இல்ல... அண்ணன் சொன்னா ரிடர்ன்வரப்படாது. கொண்டு போய் குடுத்துட்டு வா.
மார்க் லிஸ்ட் HOD கைக்கு வர, அதில் ஏதோ திருத்தம் செய்கிறார்.

HOD: சரி.. உன் விருப்பப்படி அவன பாஸ் பண்ணிட்டேன்... (கைப்பு பெருமையாக சிரிக்கிறார்)ஆனால் என் விருப்பப்படி உன்னைய ஃபெயில் பண்ணிட்டேன்...

சங்கத்து சிங்கங்கள் எல்லாம் பெருமை பொங்க கைதட்டுகிறார்கள்.

தளபதி: தல!!! நீ சாதிச்சிட்ட தல! பரிட்ச எழுதாத என்னையே பாஸாக வெச்சிட்டன்னா நீ சாதாரண ஆளே இல்ல தல???

கைப்பு: என்னாது??? நீ பரிட்சையே எழுதலையா???

ஜொ. பா: ஆமாம் தல!!! நேத்து நைட்டு தளபதிக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு. அதனால நாந்தான் நீ பரிட்சை எல்லாம் எழுத வேணாம்... நம்ம தல பாத்துக்குவாருனு சொல்லிட்டேன்... நீ சாதிச்சிட்ட தல...

தேவ்: பரிட்சை எழுதாமலே பாஸாக வைத்ததால் இன்றிலிருந்து நீங்கள் "பரிட்சை கொண்டான்"னு அழைக்க படுவீர்கள்.

கைப்பு (மெதுவாக): பட்டத்த வேற கொடுத்துட்டானுங்களா! இனிமே எதுவுமே பேச முடியாதே...

அனைவரும் மறுபடியும் ரயில் வண்டியை ஆரம்பிக்க, இந்த முறை தளபதியும் இணைகிறார்.

பக்கத்து டிப்பார்ட்மெண்ட் வழியாக செல்லும் போது காதில் விழுந்தது."பரிட்சை எழுதாத சிபியையே பாஸ் பண்ண வெச்சிட்டானே நம்ம கைப்புள்ள.. இந்த தடவ அவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் தான்"...

கைப்பு:இப்படி பேசி பேசிதாண்டா இன்னும் என்னிய பர்ஸ்ட் இயரையே தாண்டவுடாம பண்ணிட்டீங்க.

33 comments:

ஆவி அம்மணி said...

இப்பதான் தெரியுது,

உங்க தள எப்படி எந்த செமஸ்டர்லயும் கப் வெக்காம பாஸானாருன்னு!

சின்னபுள்ள said...

::)

ILA(a)இளா said...

//எந்த செமஸ்டர்லயும் கப் வெக்காம பாஸானாருன்னு//
என்னாது எங்க தல பாஸானாரா? எங்கே? எப்போ? ஆவி,இந்த மாதிரி புரளியெல்லாம் கிளப்பி தலய அசிங்கப்படுத்தக்கூடாது, ஆமா

சின்னபுள்ள said...

/./
ILA(a)இளா said...
என்னாது எங்க தல பாஸானாரா? எங்கே? எப்போ? ஆவி,இந்த மாதிரி புரளியெல்லாம் கிளப்பி தலய அசிங்கப்படுத்தக்கூடாது, ஆமா
/./

நல்லா பாருங்க இளா..

இப்படி தள தான் தல இல்லை.

ஆவி சொன்னா பயந்துடுறதா..

தம்பி said...

கலக்கிட்ட வெட்டி!

ILA(a)இளா said...

ஏம்பு, சம்பந்தமே இல்லாம வெட்டிப்பயல் எங்கிருந்துப்பா இந்த சங்கத்துக்குள்ள வந்தாருன்னு யாருமே கேள்வி கேட்க மாட்டீங்களா?

சின்னபுள்ள said...

தலயோட ஆப்ப வாங்க விருந்தாளிய

எதுக்கு வந்த?

எப்படி வந்த?

ஏன் வந்தனு?

கேள்வி கேட்டா பின்ன யார் வருவா மொத்தத்தையும் வாங்க..:)

ஆவி அம்மணி said...

அவரு பேரே வெட்டிப்பயல். சங்கத்துக்குள்ள இத்தனை நாளா ஏன் வரலைன்னுதான் கேப்போம்!

ப்ரியன் said...

:)

Anonymous said...

:)

இராம் said...

//ஏம்பு, சம்பந்தமே இல்லாம வெட்டிப்பயல் எங்கிருந்துப்பா இந்த சங்கத்துக்குள்ள வந்தாருன்னு யாருமே கேள்வி கேட்க மாட்டீங்களா? //

யெஸ், சம்திங்க் ராங்க்..... :-))))

Anonymous said...

//ஏம்பு, சம்பந்தமே இல்லாம வெட்டிப்பயல் எங்கிருந்துப்பா இந்த சங்கத்துக்குள்ள வந்தாருன்னு யாருமே கேள்வி கேட்க மாட்டீங்களா?//

என்னாது சரியா கேட்கள. பக்கத்துல வந்து சொல்லு.
இல்ல சங்கத்து ஆள அனுப்பு..

மேக்ரோமண்டையன்.

நாமக்கல் சிபி said...

//அமானுஷ்ய ஆவி said...
இப்பதான் தெரியுது,

உங்க தள எப்படி எந்த செமஸ்டர்லயும் கப் வெக்காம பாஸானாருன்னு!
//

ஆவி,
எல்லாம் எங்க தலயோட மகிமைதான்...

ஏன் சங்கத்துல எல்லாம் "தல"ய தல மேல வெச்சி கொண்டாடறோம்னு இப்ப புரியுதா??? ;)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
கலக்கிட்ட வெட்டி!
//
தம்பி,
மிக்க நன்றி :)
உங்கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய எதிர்ப்பாக்கறேன் ;)

நாமக்கல் சிபி said...

//சின்னபுள்ள said...
தலயோட ஆப்ப வாங்க விருந்தாளிய

எதுக்கு வந்த?

எப்படி வந்த?

ஏன் வந்தனு?

கேள்வி கேட்டா பின்ன யார் வருவா மொத்தத்தையும் வாங்க..:)
//
சின்னபுள்ள,
ஆப்பு எங்கள் "தல"க்கு மட்டுமே சொந்தமான ஒன்று...
அத அவர் வாங்கறதுக்காக சங்கத்துல இருக்கவங்க எல்லாம் பாடுபடறோம் ;)

நாமக்கல் சிபி said...

//அமானுஷ்ய ஆவி said...
அவரு பேரே வெட்டிப்பயல். சங்கத்துக்குள்ள இத்தனை நாளா ஏன் வரலைன்னுதான் கேப்போம்!
//
ஆவி,
உன் அறிவுக்கு நீ அங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ;)

பதில்ல தல வந்து சொல்லும்... வெயிட் பண்ணு ;)

Anonymous said...

இத்தனை படப்டப்புக்கு மத்திலையும்.. உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..

மேக்ரோமண்டையன்

நாமக்கல் சிபி said...

ராம் said...
//யெஸ், சம்திங்க் ராங்க்..... :-)))) //
இதுல என்னங்கண்ணே ராங்க்???

சங்கத்துல எல்லாமே ரைட்டுதான் ;)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
//ஏம்பு, சம்பந்தமே இல்லாம வெட்டிப்பயல் எங்கிருந்துப்பா இந்த சங்கத்துக்குள்ள வந்தாருன்னு யாருமே கேள்வி கேட்க மாட்டீங்களா?//

என்னாது சரியா கேட்கள. பக்கத்துல வந்து சொல்லு.
இல்ல சங்கத்து ஆள அனுப்பு..
//
மேக்ரோ,
ஆஸ்திரேலியாக்கு எல்லாம் ஆள் அனுப்ப முடியாது...
எல்லைய நீயும் தாண்டக்கூடாது நாங்களும் தாண்ட மாட்டோம்!!!

பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்...

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
இத்தனை படப்டப்புக்கு மத்திலையும்.. உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..

மேக்ரோமண்டையன்
//

கிளுகிளுப்பா??? எங்கப்பா???

இராம் said...

//இதுல என்னங்கண்ணே ராங்க்???//

ஹீ ஹீ நத்திங் இஸ் ராங்க்.. ஐ வாண்ட் ரிசன் அபவுட் கைப்பூ சம்திங்,தட்ஸ் ஆல்.... நாட் பார் யூ மைடியர் தம்பி :-))))

//சங்கத்துல எல்லாமே ரைட்டுதான் ;) //

வீ நோ தட் அபவ் பாயிண்ட்,

தம்பி said...

//உங்கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய எதிர்ப்பாக்கறேன் ;)//

என் டயலாக் எனக்கேவா?? சரி கேட்டாச்சு வாழ்த்தாம போறது நல்லதில்ல!! அதனால இந்தா புடிச்சிக்கோ!

வ.வா.சங்கத்து ஆப்புகளை பெருந்தன்மையுடன் தனதாக்கிக்கொள்ள வந்திருக்கும் வெட்டியை மேன்மேலும் பல ஆப்புகளை வாங்கி பெருமாப்புவெட்டி என்னும் பெயர்பெற வாழ்த்துகிறேன்.

Anonymous said...

//மேக்ரோ,
ஆஸ்திரேலியாக்கு எல்லாம் ஆள் அனுப்ப முடியாது...
எல்லைய நீயும் தாண்டக்கூடாது நாங்களும் தாண்ட மாட்டோம்!!!//
தல சேம் சைடு கோல் போடதா

மேக்ரோமண்டையன்

கப்பி பய said...

:))

ஸ்டார்ட் ம்யூசிக்!!

நாமக்கல் சிபி said...

//ஹீ ஹீ நத்திங் இஸ் ராங்க்.. ஐ வாண்ட் ரிசன் அபவுட் கைப்பூ சம்திங்,தட்ஸ் ஆல்.... நாட் பார் யூ மைடியர் தம்பி :-))))//
தல கட்டதுரையோட ஒரு மிக்கியமான மீட்டிங்ல இருக்காரு... சீக்கிரம் வந்து பதில் சொல்லுவாரு ;)

நாமக்கல் சிபி said...

//என் டயலாக் எனக்கேவா?? சரி கேட்டாச்சு வாழ்த்தாம போறது நல்லதில்ல!! அதனால இந்தா புடிச்சிக்கோ!
//
தம்பி,
காதல் படத்துக்கு நீயா டயலாக் எழுதன??? சொல்லவே இல்ல ;)

//
வ.வா.சங்கத்து ஆப்புகளை பெருந்தன்மையுடன் தனதாக்கிக்கொள்ள வந்திருக்கும் வெட்டியை மேன்மேலும் பல ஆப்புகளை வாங்கி பெருமாப்புவெட்டி என்னும் பெயர்பெற வாழ்த்துகிறேன். //
ஆப்பு "தல"க்கு வாங்கி கொடுக்கறதுதான் சங்கத்து சிங்கங்களின் பணி...

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
:))

ஸ்டார்ட் ம்யூசிக்!!
//
:-))

நாமக்கல் சிபி said...

////மேக்ரோ,
ஆஸ்திரேலியாக்கு எல்லாம் ஆள் அனுப்ப முடியாது...
எல்லைய நீயும் தாண்டக்கூடாது நாங்களும் தாண்ட மாட்டோம்!!!//
தல சேம் சைடு கோல் போடதா

மேக்ரோமண்டையன் //
தல சீக்கிரம் வந்து பதில் சொல்வாரு :)

Syam said...

என்ன வெட்டி இப்படி பர்ஸ்ட் இயர் னு சொல்லி தல மானத்த வாங்கிட்டீங்க...அவரு +2 ல 12 வருசம் பெயில் ஏதோ இந்த வயசுல அரை டவுசர் போட்டுட்டு இருந்தா நல்லா இருக்காதேனு சும்மா காலேஜ் பக்கம் போயிட்டு வரார் :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
என்ன வெட்டி இப்படி பர்ஸ்ட் இயர் னு சொல்லி தல மானத்த வாங்கிட்டீங்க...அவரு +2 ல 12 வருசம் பெயில் ஏதோ இந்த வயசுல அரை டவுசர் போட்டுட்டு இருந்தா நல்லா இருக்காதேனு சும்மா காலேஜ் பக்கம் போயிட்டு வரார் :-)
//
ஐயய்யோ அந்த கதை தெரியாத உங்களுக்கு??? தல +2ல 20 வருஷமா ஃபெயில் ஆனத பாராட்டற வகைல தமிழ்நாடு அரசே அவரை பாஸ் பண்ணி இஞ்சினியர் சீட்டும் வாங்கி கொடுத்துடுச்சு ;)

ராசுக்குட்டி said...

அட நம்ம வெட்டி...
என்னப்பா சங்கப்பணி ஆற்ற வந்துட்ட, ஏற்கனவே 'தல' பாவம்... ஹூம் இனிமேல் அந்த ---- தான் வந்து காப்பாத்தனும்!

ஆனா நல்லா இருக்குய்யா...நெறய எழுதனும் இந்த மாதிரி என்ற அன்புக் கட்டளையுடன்....
;
;
;
(எங்கயும் போகல இங்கதான் இருக்கேன் இன்னும்!)

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...
அட நம்ம வெட்டி...
என்னப்பா சங்கப்பணி ஆற்ற வந்துட்ட, ஏற்கனவே 'தல' பாவம்... ஹூம் இனிமேல் அந்த ---- தான் வந்து காப்பாத்தனும்!
//
அத பத்திதான் ஒரு பதிவே போட்டாச்சே!!!

'தல'யக் காப்பாத்தனுமா??? எதுக்கு??? எதுல இருந்து??? எங்கள காப்பாத்தத்தான் தலயே இருக்காரு ;)

//ஆனா நல்லா இருக்குய்யா...நெறய எழுதனும் இந்த மாதிரி என்ற அன்புக் கட்டளையுடன்....
;
;
;
(எங்கயும் போகல இங்கதான் இருக்கேன் இன்னும்!)
//
கண்டிப்பா!!! உங்க அன்பு கட்டளையை மீற முடியுமா?

ILA(a)இளா said...

// சும்மா காலேஜ் பக்கம் போயிட்டு வரார் //
எந்த காலேஜ்ன்னு சொல்லவே இல்லியே?