Friday, September 29, 2006

பயில்வான் வர்றாரு...

ஒத்துங்கப்பா ஒத்துங்கப்பா... பயில்வான் வர்றாருபா. அக்டோபர் மாச அட்லாஸ் வாலிபரா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சொமக்கறதுக்கு பயில்வான் வர்றாருபா. தமிழ் பளாக்கோட 'முடி'சூடா கிங், சூப்பர் ஹெவிவெயிட் சாம்பியன்பா நம்ம பயில்வான். அவரைப் பத்தி நாங்கோ சொல்லி நீங்கத் தெரிஞ்சிக்கறதுக்கு ஒன்னுமில்ல. அல்லாருக்கும் அவரைப் பத்தித் தெரியும். எதோ நம்ம பேட்டைக்குள்ள அவரு வர ஒத்துக்குனதே நாம செஞ்ச பாக்கியம் தான். பயில்வான் சார்...அப்ப்டியே நம்ம பசங்களுக்கும் கொஞ்சம் வித்தை எல்லாம் கத்துக் குடுத்துட்டு போ சார் இன்னா?

இப்ப வாங்கய்யா...ஒவ்வொருத்தரா வாங்கய்யா...லைன்ல வரிசையா வாங்கையா. தெகிரியம் இருந்தா எங்க பயில்வான் மேலே கையை வெச்சுப் பாருங்கையா. வாங்கையா...யாருக்குன்னா இருக்கா அம்புட்டு தில்லு? கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை...மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா... இப்பவே சொல்லிட்டேன். அட! அப்படியும் நம்பிக்கை வரலியா? சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி இருக்குற அந்த பரந்து விரிஞ்ச அவரு ஜெஸ்டை பாருங்கைய்யா...பனை மரத்தை ஒத்தைக் கையாலப் புடுங்கி வீசற அந்த பராக்கிரமம் பொருந்துன சோல்டரைப் பாருங்கைய்யா...'நேர் கோடு' எடுத்து படிய சீவிக்கின்னு பால் வடியற பச்சைப் புள்ள மாதிரி ஃபேஸ்கட்ல இருக்காரேன்னு தப்புக்கணக்கு போட்டுறாதே நயினா... அப்பால பெஜாராயிடுவே இன்னா?

சட்டியா இருக்கட்டும், பல்பா இருக்கட்டும், ரசப்பொடியா இருக்கட்டும் அட லண்டனாவே கூட இருக்கட்டும்பா...நம்ம பைல்வான் அண்த்தை கையில எது கடைச்சிதுன்னாலும் வுயுந்து வுயுந்து சிரிக்கற மாதிரி ஹெவிவெயிட் காமெடி பண்ணுவாருபா. அப்படிப்பட்ட ஒரு கொயந்தை மனசு. சரி...இப்ப நான் வேற இன்னாத்துக்கு குறுக்கால நந்தி மாதிரி... எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா... நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்...ஏன்னா அக்டோபர் மாசம் அட்லாஸ் வாலிபரா வரப் போறவரு ஹெவிவெயிட் பயில்வான்..."யோசிக்கிற பீரங்கி"....அண்ணாத்தே ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ...

13 comments:

ILA(a)இளா said...

ஐயோ! ஐயோ!
வரட்டும் வந்து பார்க்கட்டும்!
வருக! வருக!

Deekshanya said...

welcome to dubukku.. gud choice kaipulla..
-Deeksh

தேவ் | Dev said...

Let Him come :)

தம்பி said...

யோசிக்கிற தொட்டி (திங்க் டேங்க்) வரட்டும், வந்து பலப்பல ஆப்புகளை வாங்கட்டும்!

இலவசக்கொத்தனார் said...

நம்ம ஆளு மாட்டிக்கினாரா? வெறி குட் வெறி குட்.

என்னாது வெறி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? அதெல்லாம் இல்லை. இந்த ஆள் கடிக்கிற லெவலுக்கு அப்படித்தான் இருக்கணும்! ஆமா!

ILA(a)இளா said...

//வெறி குட் வெறி குட்//
ங்கே....(முழிக்கிறேன்பா)

ஆ, டுபுக்கு கையில டுவாக்கியெல்லாம் வெச்சிருக்காரு.. உ உ உ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

ILA(a)இளா said...

அப்படியே பெனாத்தல் சுரேஷுக்கு ஒரு நன்றி உரை:

முதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology
ஒரு கலக்கல் ஒரு கவிதைத்தொகுப்பு

சர்தார் இது நிஜம் அய்யா- சாமி நெசமாலுமே வயிறு வலிச்சுருச்சு சாமி.

அட்லாஸ் - வாலிபன்? -கைப்பு ரேஞ்சிலே ஏறி அடித்த ஒரு சிக்ஸர் இது.

திரை முன்னோட்டம் - சிவாஜி-ஸ்பேனரைக் கையில் ஏந்திய புது தொழில்யுக்தி.

ILA(a)இளா said...

//எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா...//
தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட் தட்

//நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்//

உய்ய்ய்ய்ய்யுய் உய்ய்ய்ய்ய்ய்ய் உய்ய்ய்ய்ய் உய்ய்ய்ய்ய்ய்ய்

நாமக்கல் சிபி said...

வாவ்!!! இந்த மாதம் இனிய மாதம்!!!

தலைவா!!! வாங்க!!! வந்து பட்டைய கிளப்புங்க ;)

யாருப்பா அங்க??? ஆப்பெல்லாம் எடுத்து ரெடியா வைங்க ;)

Syam said...

ஓ போடு ஓ போடு...டுபுக்கு வரார் ஓ போடு...வாங்க டுபுக்கு வாங்க...ஒரு மாசத்துக்கு சங்கத்து சிங்கங்கள் அன்போட குடுக்கும் ஆப்ப வாங்கிட்டு போங்க...UK ல ஆப்பு வரியெல்லாம் கிடையாதுனு கேள்வி பட்டேன் :-)

கப்பி பய said...

வாராரு வாராரு டுபுக்கு வாராரு
அட்லாஸா வாராரு
ஆப்பு வாங்க வாராரு

வாங்க திங்கு டாங்கு வாங்க! ;)

ஜொள்ளுப்பாண்டி said...

தலைவா டுபுக்கு!!! என் மானசீக தல நீங்கதாங்கோ ! வாங்க வாங்க. வந்து பட்டையக் கெளப்புங்கோ :))))

Dubukku said...

ஆதரவு கொடுத்த அனைத்து சனங்களுக்கும் மிக்க நன்றி :))

ஜொள்ளுப்பாண்டி...அடா அடா அடா...ஜில்லுப்பாண்டியைய்யா நீர் :)