Sunday, September 10, 2006

ஒரு வாலிபனின் வருத்த வரலாறு

ஆப்பூ என்பது நமக்கு யாரும் வைப்பது கிடையாது
ஆப்பூ ஆங்காங்கே இருக்கும்- நாம் தான்
அதன் மீது ஏறி உட்காருகிறோம்.

---- ஆப்பையா

நமக்கு ஆப்பூ வாங்குறது ஒண்ணும் புதுசு கிடையது, எப்போ ஆங்கிலம் தெரியாமல் பொறியல் படிக்க சென்னைக்கு வந்தனோ அன்னைக்கே நான் மிக பெரிய ஆப்பையாவா ஆயிட்டேன்.
நமக்கு பொதுவாவே புள்ளைகளைக் கண்டா ஒரே அலர்ஜி, சின்ன வயசு முதலே தடி பசங்க கூடவே படிச்சதனால, புள்ளயல வேத்து கிரகவாசி மாதிரியே பாத்து பழகியாச்சு.முத முதலா கோ எஜிகேசன் படிகிற மாதிரி நம்ம நிலமை ஆகி போச்சு.ஆரம்ப காலகட்டத்தில் புள்ளையல கண்டாலே தெறிச்சு ஒடுவேன். அதுக வர ஸ்டலூம் அதுக பேசுற இங்லிசும் பாத்தாலே ஒரே மிரட்சியா இருக்கும். எங்க வகுப்புல மொத மூனு பெஞ்சுலும் அந்த புள்ளையதான் உக்காந்து இருப்பாங்க அதுகள தாண்டி என் இடத்துக்கு போய் சேருகுல்ல நான் படுற பாடு எனக்குதான் தெரியும் அதுவும் என்னையக் கண்டாலே அதுகளுக்கு ஒரே குஷி. ஏய் புள்ள!! உனக்கு கூட பொறந்த அன்னண் தம்பியே கிடையாதான்னு கேக்கத்தோனும், பரவால்லை இந்த ஆப்பூ நமக்கு நாமே வச்சுகிட்டதுன்னு மனச தேத்திக்கிவேன்.


அப்புறம் கொஞ்ச காலத்தில் நட்பு வட்டம் பெருகி போச்சு, தினம் அவனுக அதுகளுகிட்ட கடலைப் போட்டுச் சாகுபடி பண்ணிட்டு திரும்பி வர வரைக்கும் தேமே ன்னு நின்னுக்கிட்டு இருகிறதே என் பொழப்பா போச்சு.இப்பிடித்தான் காவல் காத்துட்டு இருக்கும் போது நம்ம நட்பு வந்து மாப்பு அந்த புள்ள உன்கிட்ட பேசணுமாடா, நான் பதறி போய் ஏண்டா? அது ஒண்ணும் இல்லைடா நீ E.D நல்லா போடுவிலடா அதுல ஒரு டவுட்டு கேக்கணுமாடா, அட போடா அவளுக்கு சொல்லிக்குடுத்தா எனக்கு எல்லாம் மறந்துடும் சாமின்னு ஒடுனதுதான் இரண்டு நாளா காலேஜி பக்கமே வல்ல.


இப்பிடித்தான் நம்ப வாழ்கையில புள்ளய வாசனையே இல்லாம ஒடிகின்னு இருந்துச்சு.ஒரு நாள் நம்ப நட்பு ஏண்டி மாப்பிள்ள இப்பிடி சாமியாரு மாதிரியே எத்தனை நாளு ஒட்டுவே, ஏதாவது புள்ளை பாத்து சைட்டு அடிக்க வேண்டியது தானே, இல்லை மாப்பிள்ள அது ஒத்து வராது எனக்கு அழகு கிடையாது, உனக்கு என்னடா குரைச்சல் நீ கிராமத்து சிங்கம் மாதிரி இருக்கடான்னு சொல்ல, அட நம்மள சிங்கம்ன்னு சொல்லிடானேப்பா. சரி முயற்சி பண்ணி பாப்போம் ஆனா நம்ம செட்டுல எல்லா புள்ளைக்கும் நம்மல பத்தி தெரியும் அதனால ஜூனியர் செட்டுதான் சரி, ஒரு புள்ள பின்னாடி லோ லோ அலைஞ்சி ஒரு எழு எட்டு மாசம் பேசியாச்சு, அப்புறம் அந்த புள்ள கூடதான் சுத்துறது, கேண்டின்ல சாப்பிடுறது, ஒரு நாள் கேண்டின்னுக்கு வாங்க முக்கிய சேதி இருக்குன்னு சொல்ல, ஆகா சிங்கம் உனக்கு ஒர்க் அவுட் ஆயிருச்சுடான்னு நினைச்சுக்கிட்டே போனேன், படக்குன்னு ராக்கி ஏடுத்து கட்ட, நமக்கு இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் ஒத்து வராதுன்னு விட்டாச்சு, அப்புறம் சைட்டு அடிகிறதோட சரி.


சமீபத்துல சிங்கபூர்ல்ல நண்பர் விசா சம்மந்தமாக ICA போக நேர்ந்தது, டோக்கன் வாங்கிட்டு உக்காந்து இருக்கும் போது 5 வயது பாப்பா ஒண்ணு விளையாடிக்கிட்டு இருந்தது அதை பாத்து நான் சிரிக்க அதுவும் சிரிச்சது, அப்படியே பாப்பாவோட அப்பாவும் அம்மாவும் நம்மள பாத்து சிரிக்க நானும் சிரிச்சு வைச்சேன்,அவுங்களுக்கு பக்கத்துல அழகான புள்ள ஒண்ணு புடவைக் கட்டிக்கிட்டு உக்காந்து இருக்க சாதரணமாவே ஒரு வாட்டியாச்சும் லுக்(ஜொள்) விடுவது நம்ம பழக்கம் அதுவும் புடவை வேற கேக்கவா வேணும் அப்படியே அந்த புள்ளய ரொமாண்டிக்கா பாக்க ஆரம்பிச்சாச்சு, அதுகுள்ள அந்த பாப்பா நம்ம கிட்ட அன்னோனியமா பழகி விளையாட ஆரம்பித்தது, அது வரைக்கும் பேசாமல் இருந்த அந்த பாப்பாவோட அம்மா வேகமா வந்து அந்த பாப்பாக் கிட்ட அவுங்கப் பூச்சாண்டி உன்னையப் புடிச்சிட்டு போய்டுவாங்கன்னு சொல்ல, அந்த பாப்பா மெரண்டு ஒடி அவுங் அப்பாவை கட்டி புடிக்க,இதை பாத்த நண்பன் வெடிச் சிரிப்பு சிரிக்க, அந்த புள்ளயும் சேந்து சிரிக்க,நான் பேய் அரைஞ்ச மாதிரி நிக்க வேண்டியதா போச்சு.

அட(டி)பாவிகளா இத்தனை நாளா நான் லூக்கு விட்ட பொண்ணுங்க எல்லாம் என்னையப் பூச்சாண்டி ரேஞ்சுக்குதான் பாத்துதுகளா?

காலத்தால் விட்டஜொள் சிறிதுஎனினும் ---- அதனால்

வாங்கும்ஆப்பூ ஞாலத்தின் மாணப்பெரிது.


இந்த சோகத்தை நம்ம நட்புகிட்ட பகிர்ந்துகலான்னு போன் போட்டேன்,

மாப்பு என்னைய ஒரு பொண்ணு கேவலப் படுத்திட்டாடா,

இது எல்லாம் உனக்கு சகஜம் தானே என்ன புதுசா உனர்ச்சிவசபடுர,

அது இல்லைடா அவ என்னைய பூச்சாண்டின்னு சொல்லிட்டாடா

அவ பரவால்ல மாப்பு அவ உன்னைய பூச்சாண்டின்னு சொல்லி ஆறு அறிவு ஜிவனா பாத்து இருக்கா நம்ம பசங்க எல்லாம் உன்னைய கிராமத்து சிங்கம்ன்னு சொல்லி 5 அறிவு ஜிவனாதானே இத்தனை நாளா பாத்துகிட்டு இருக்கோம்,

என்னடா சொல்ற? கிராமத்து சிங்கம்ன்னா என்னா மாப்பு?

வேணாம்டா மாப்பு நீ மனசு கஷ்ட்டப்படுவே

பரவால்லடா சொல்லு


கிராமத்துல்ல ஒரு பத்து இருவது தெரு இருக்கும் அதை ஒரு சொரி புடிச்ச நாய் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து நாமதான் இந்த ஊருக்கு சிங்கம்ன்னு நெனைச்சிகிட்டு காவல் காக்கும், அத மாதிரி தான மாப்பு நீ நாங்க கடலை போடும் போது காவல் காத்த?

டேய் அப்ப என்னைய சொரிநாய்ன்னு சொல்லூரியா

அத வேற என் வாயால சொல்லணுமாடா வைடா போனை...........

அத கேட்டதுல இருந்து எனக்கு சிங்கத்தைப் பார்தாலே பெரிய சைஸ் சொரி நாய் மாதிரி தெரியுது

அப்ப சொரி நாயைப் பாத்தா ? அத வேற நான் சொல்லனுமா?

இந்தப் பதிவின் ஆசிரியர் வ.வா.சங்கத்தின் வாசகர். சிங்கப்பூரைச் சேர்ந்த இவர் நம்மைத் தொடர்புக் கொண்டு இந்தப் பதிவினை வ.வா.சவில் வெளியிட் முடியுமா எனக் கேட்டார். உலகின் எந்த மூலையில் வாலிபர்களின் வருத்தக் குரல் ஒலித்தாலும் அங்கு உடனே நம் சங்க நாதமும் உடன் ஒலிக்க வேண்டும் என்ற நம் தல யின் கொள்கையை ஏற்று நண்பரின் பதிவு இங்கு வெளியிடப்படுகிறது. நன்றி.

24 comments:

கைப்புள்ள said...

தனி ஒரு வாலிபனுக்கு வருத்தம் எனில் இச்சகத்தினை அழித்திடுவோம்.

"Varuthappadadha Vaalibars of all lands, Unite!"

ILA(a)இளா said...

நண்பா கலக்கல் வருத்தம்..

தேவ் | Dev said...

தல வர வர உங்க சொல்லுக்கு மரியாதையே இல்ல தல.. எவ்வளவு உணர்வுபூர்வமா உலக வாலிபர்க்கு எல்லாம் கொரலு உட்டு கூப்பிட்டீங்க... ஒரு பய வர்றல்லியே தல... ச்சே டோட்டல் டேமேஜ் தல

குண்டலக்கேசி said...

இதுப் படிக்க கிட்டத்தட்ட நம்ம தல வரலாறு மாதிரியே இருக்கு. உண்மைய சொல்லிருங்க

வடுவூர் குமார் said...

கவலைபடாதீங்க!!
எல்லாரும் கிராமத்து சிங்கம் தான்.
யாரோ உங்க நண்பனுக்கு தப்பா சொல்லி கொடுத்திருக்காங்க.

கைப்புள்ள said...

//எவ்வளவு உணர்வுபூர்வமா உலக வாலிபர்க்கு எல்லாம் கொரலு உட்டு கூப்பிட்டீங்க... ஒரு பய வர்றல்லியே தல... ச்சே டோட்டல் டேமேஜ் தல//

வேணாம்...என் கோவத்தைக் கெளறாதே? என்னோட இன்னொரு முகத்தைப் பாத்தின்னா நீ தாங்க மாட்டே...

தேவ் | Dev said...

//கவலைபடாதீங்க!!
எல்லாரும் கிராமத்து சிங்கம் தான்.
யாரோ உங்க நண்பனுக்கு தப்பா சொல்லி கொடுத்திருக்காங்க.//

குமார் உங்க கிட்டயும் ஒரு வரலாறு இருக்கும் போல இருக்கு:)))

தேவ் | Dev said...

இருக்க ஒரு மொகத்தையே உள்ளூர்ல்ல பாக்க யாருமில்லாம வெளியூருக்கு வனவாசம் போயிருக்கேன்னு கட்டத்துரை கோஸ்ட்டி ஊருக்குள்ளே வதந்தியை கிளப்பி விட்டுட்டு திரியறங்க.. இதுல்ல நீ வேற இன்னொரு முகம்ன்னு வெத்து சீன் போடுற..

Anonymous said...

//அத கேட்டதுல இருந்து எனக்கு சிங்கத்தைப் பார்தாலே பெரிய சைஸ் சொரி நாய் மாதிரி தெரியுது

அப்ப சொரி நாயைப் பாத்தா ? அத வேற நான் சொல்லனுமா?//

Hee Hee

சின்னபுள்ள said...

என்னப்பு இப்படி பண்ணிபுட்டிங்க..

அனானி ஆப்சன் இல்லனு பிளாக்க தொறந்துட்டு வார்ரத்துக்குள்ள......

எல்லாத்தையும் தொரந்து உட்டுபுட்டிங்க..:(

சின்னபுள்ள said...

இதுக்குதான் தலய சிங்கம் சிங்கம்முனு சொல்லுதிகளா...:)

karthik said...

:-)

தேவ் | Dev said...

அட வாங்க சின்னப்புள்ள தலயைப் பாத்து அவர் பதிவில்ல நீங்க கேட்டக் கேள்வியில்ல தலக்கு இருந்த மூளை எல்லாம் கலங்கி அதுல்ல எங்க மூளையையும் கலக்கி சங்கத்துக் கதவை எல்லாருக்கும் திறந்து விடுங்கப்பான்னு உத்தரவு போட்டார்ப்பா.

தேவ் | Dev said...

என்னச் சின்னப்புள்ள பப்ளிக்ல்ல தலயோட பெயர் காரணமெல்லாம் அலசி ஆராஞ்கிட்டு..தல ஒரு ஊருக்கு மட்டுமில்லய்யா இந்த ஒலகத்துக்கே அவர் சிங்கம் தான்....

ஏப்பூ இளா ஆமா சங்கத்துச் சிங்கம் சங்கத்துச் சிங்கம்ன்னு சொல்லிகிட்டு திரியறதுக்கும் இது தான் அர்த்தமா..அட பாவி மக்கா இதுக்கே சிம்பல் எல்லாம் வேற போட்டு படம் காட்டுகிட்டு இருக்கோம்மெய்யா...

தேவ் | Dev said...

கார்த்திக் வாங்க ஒரே ஒரு சிரிப்புத் தானா...:)

கைப்புள்ள said...

//karthik said...
:-) //

தெய்வீகச் சிரிப்பையா உமது சிரிப்பு.
:)

ILA(a)இளா said...

சே சே. தல நமக்கு ஆசையா வெச்ச பேரு சிங்கம்லே. தல சொன்னா அதுக்கு அப்பீல் ஏது. தல அடிவாங்கும் போது. ஓடிப்போய் காப்பாத்துவோம்ல, சீ சீ.. நம்மள காப்பாத்திக்க ஓடிருவோம்ல. அதனாலதான் நமக்கு இந்த பேரு. இதுக்கு வேற அர்த்தம். சங்க சிங்கத்துக்கு அர்த்த சாஸ்திரம் என்ன சொல்லுதுன்னா..(யோவ் இருங்கய்யா.. போவாதீங்க..)

ILA(a)இளா said...

//தலக்கு இருந்த மூளை எல்லாம் கலங்கி//
இல்லாத ஒன்னப்பத்தி பேசக்கூடாதுன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்

கைப்புள்ள said...

//இல்லாத ஒன்னப்பத்தி பேசக்கூடாதுன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்//

எல்லாம் சரி தான். ஆனா என் கமெண்டுக்கு நீ...உன் கமெண்டுக்கு நான்னு மாத்தி மாத்தி நாமளே கமெண்டு போட்டுக்கறது கிராமத்து சிங்கம் பொழப்பால்ல இருக்கு...?
:(

தம்பி said...

ஆப்பூ என்பது நமக்கு யாரும் வைப்பது கிடையாது ஆப்பூ ஆங்காங்கே இருக்கும்- நாம் தான்
அதன் மீது ஏறி உட்காருகிறோம்.

எவ்வளவு பெரிய வாழ்க்கை தத்துவம்!!

கைப்புள்ள said...

சங்கத்து 'தல'யா இருந்து இது நாள் வரைக்கும் நா உங்களை வெரட்டி வேலை வாங்குனது கெடையாது.

எனக்கு என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு தெரியாது...ஊருக்குள்ள போய் வருத்தப் படற வருத்தப்படாத வாலிபர்கள் எல்லாத்தையும் தல கூப்பிடுதுன்னு சொல்லி லாரில இட்டாங்க....இல்ல...
...இல்ல...இங்க ஒரு ரத்த ஆறு ஓடும்.

கைப்புள்ள said...

அப்ரெண்டீசுங்ளா! தல கடுங்கோபத்துல இருக்குன்னு சொல்ல மறந்துடாதீங்க

இலவசக்கொத்தனார் said...

உங்க தலைக்கு சொன்னதுதான் உங்களுக்கு. அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணுமப்பா.

karthik said...

//தெய்வீகச் சிரிப்பையா உமது சிரிப்பு.
:)
//

மெய்யாலுமா தல ரொம்ப டேங்க்ஸ் தல