Monday, July 31, 2006

தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல்

'மரணம்' என்ற தலைப்பில் நான் எழுதாத காவியத்திற்கு தேன்கூடு வாக்கெடுப்பில் மூன்றே முக்கால் ஓட்டுக்கள் விழுந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எழுதப்படாத என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த ஒண்ணே முக்கால் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (பின்ன, மீதி ரெண்டு ஓட்டும் நானே இல்ல போட்டுக்கிட்டேன்!). இதே தருணத்தில் இப்போட்டியை நடத்தும் தேன்கூடு குழுவினருக்கும், தமிழோவியக் குழுவினருக்கும், இப்படைப்பை எழுதாமலிருக்கத் தூண்டுகோலாக இருந்த வ.வா.சங்க நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த போட்டியில் கலந்து கொல்லாதது எனக்கு மிக நல்லதொரு அனுபவமாய் இருந்தது. இன்னும் அதிக வாக்குள் வாங்க எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது என்ற உண்மையை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது, மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்ற விழிப்பு எனக்கு கிடைத்தது.

எழுதப்படாத எத்தனையோ படைப்புகள் இருக்க, எனக்கு ஓட்டிட்டு (அட ஓட்டு போட்டுன்னு சொல்ல வந்தேன். ஓட்டறது பத்தி இல்லை) சிறப்பித்த இந்த நண்பர்களின் அபரிதமான ஊக்குவிப்பால் அடுத்த முறை ஒரே ஒரு படைப்புடன் நிறுத்தாமல் கதை, கவிதை, கட்டுரை என பலவற்றையும் எழுதாமல் இருப்பேன் என கூறிக் கொள்கிறேன். இந்த நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்களேயானால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல ஏதுவாக இருக்கும்.

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்றவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

டிஸ்கிக்கள்

1) இப்படி ஒரு நன்றி பதிவு போட்ட எஸ்.கேயும், போட்டிக்கு போகமலே ஆறுதல் பரிசு அடிக்கப் பார்க்கும் இட்லிவடையும் ஆளுக்கு 70 -80 பின்னூட்டம் வாங்குவதைப் பார்த்த புகைச்சலில் இந்த பதிவு எழுதப்படவில்லை.

2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.

3) இந்த பதிவில் வாழ்த்துக்கள், நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. போலீஸ்கார் எல்லாம் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் அந்தப் பதிவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4) வாத்தியார் 'மரணம்'ன்னு தலைப்பு குடுத்தாலும் குடுத்தார் 80 பேரு கதையும் கவிதையுமா எழுதித் தள்ளிட்டாங்க. போதாததுக்கு ஆளுக்கு ஒரு நன்றி பதிவு வேற. தமிழ்மண முகப்பு பூர இந்த நன்றி அறிவிப்பா இருக்கா, மாதாமாதம் இப்படி ஒரு படலம் நடக்கப் போகுதேன்னு ஒரு பயம். அதனால சும்மா ஒரு கலாய்த்தல். அவ்வளவுதான். அதுவும் இதுக்கு நேயர் விருப்பம் வேற. :)

5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி.

635 comments:

«Oldest   ‹Older   601 – 635 of 635
இலவசக்கொத்தனார் said...

//ஆப்சென்ட் ஆனவங்களுக்குத்தான் ஹோம்வொர்க்.எனக்கு எதுக்கு?//

அவங்களுக்குப் பனிஷ்மெண்ட், உங்களுக்கு ஹோம்வொர்க். என் தொழிலை நான் பார்க்கணுமில்ல.

VSK said...

ம்ம்ம்ம்ம்...வுடாதீங்க!

VSK said...

கவுத்த இளுத்துப் பிடிங்க!

VSK said...

அவ்வளவுதான்!

VSK said...

நாலு வீதில பாதிக்கு மேல தாண்டியாச்சு!

VSK said...

சேந்து இளுத்தீங்கன்னா தேரு நெலைக்கு வந்துடும்!

VSK said...

தெம்பா ஒரு டீ குடிச்சிட்டு இளுங்க சாமி!

VSK said...

//விஷயமில்லாம 10 பின்னூட்டங்கள் போடுவது எப்படி? செயல்முறையில் விளக்கவும். //

இப்ப மேல பாத்தீங்கள்ல?
அப்படித்தான்!
600-க்கு வாழ்த்துகள்!

நாகை சிவா said...

அடபாவிகளா, சொன்ன மாதிரி ஒவர் டைம் பாத்து 600 தாண்டிட்டீங்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நல்லா இருங்க மக்கா!
:)))))))))

கைப்புள்ள said...

அடங்கப்பா!

கைப்புள்ள said...

நானும் எத்தனையோ
கயமைத்தனத்தைப்
பாத்துருக்கேன். ஆனா
இப்பிடி
ப்ளாக் சரித்திரத்துல
சாதனை படைக்கிற
இப்பிடிப்பட்ட ஒரு
மெகா கயமைத்தனத்தை
இப்ப தான்
பாக்குறேன் சாமி.
இதுக்கு ரிசர்ச் ஸ்காலர்
டாக்டர்
ஐ.நா.சபை எல்லாரும்
கொத்ஸுக்கு கூட்டா?

இராம்/Raam said...

//இதுக்கு ரிசர்ச் ஸ்காலர் டாக்டர் ஐ.நா.சபை எல்லாரும்
கொத்ஸுக்கு கூட்டா? //

யாரு தல நம்ம புலிசிவா'ஆ...?

கப்பி | Kappi said...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
நாளைக்கு சனிக்கிழமை தானே??

உங்கள் நண்பன்(சரா) said...

ஹலோ... போதும்பா...நிறுத்துங்க
கொத்ஸ் போன மாசத்து அட்லூசு சாரி அட்லசு இன்னும் இவருக்குத்தான் போட்டுத் தாக்குறீங்க...

போய் ராசாவுக்கு ஆப்பு அடிங்கப்பா.. அவருக்கு யாருமே அடிக்கிறதில்லைனு பாவம் அவரு
"டவுன் பஸ்"ல எல்லாம் வர்ராரு...


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

மற்றவர்கள் பின்னூடம் போடும் வரை என் எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்.

கால்கரி சிவா said...

டீச்சர், ப்ரஸண்ட் டீச்சர். சாயங்காலம் வீட்டுக்கு போன ஒரே வேலே. ஆபிஸ்க்கு வந்து நம்ம காபின்லே சுதந்திரமா ஹோம்வொர்க் பண்ண முடியுது.

கால்கரி சிவா said...

601 முதல் 700 வரை வழங்கும் மொட்டுஞானியார் வாழ்க

கால்கரி சிவா said...

மொட்டுஞானியார் கேட்கும் ஞானக் கேள்விகள்

கால்கரி சிவா said...

1. மொட்டுஞானியார் தலைமையகம் உள்ள நகரம் எது? (Hint: இந்த நகரம் யாருக்கும் புனிதம் அல்ல ஆனால் பேரில் புனிதம் இருக்கும்)

கால்கரி சிவா said...

2. மென்மையான மொட்டுஞானியார் என்றால் யார்?

கால்கரி சிவா said...

3. நுரைக்காமல் ஞானியாரை கோப்பையில் ஏந்துவது எப்படி?

உங்கள் நண்பன்(சரா) said...

போதும் போதும் பின்னூட்டதை நிறுத்தவும்...(பின்னூட்டதை நிறுத்த எதாவது சங்கம் ஆரம்பிக்கனுமா..)

பின்னூடமிடுவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும்...


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

Ulleen aiya

todays attendance

evening 700 thandidalam

ரவி said...

கொத்தனார் - ஈஸ் திஸ் எ உலக சாதனை முயற்ச்சி ??

நட்பு வாரத்துக்கு சங்கம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை வண்மையாக கண்டிக்கிறேன்..

எல்லாரும் வெறும் பின்னூட்டத்திலேயே பிஸியா இருந்தா பதிவு யாருங்க போடுறது ?

கால்கரி சிவா said...

ஆனாலும் கொஞ்சம் வெட்கமா இருக்கு. எங்கே நம் நண்பரை பின்னூட்ட கோமாளி ஆக்கிவிடுவார்களோ என்று

ALIF AHAMED said...

இ கொ 600 அடிச்சதும் எல்லாரும் உள்ளேன் ஐயா சொல்லிட்டு போயிட்டாங்க.

ALIF AHAMED said...

மின்னல் உள்ளேன் ஐயா

ALIF AHAMED said...

தற்போதைய டார்கெட் 750

ம் எல்லாரும் ரெடியா ??

ALIF AHAMED said...

ஃபிளாஸ் பேக்

படிச்சா பயமா இருக்கே
-இ கொ

அனானி பின்னூட்டம் அனுமதி மறுப்பு
-செல்வன்

பின்னூட்ட உலகை சுமந்து சரியாமல் பாத்துக்கொண்ட கொத்ஸ்க்கு ஒரு "ஓ"
-நன்மனம்

மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துட்டோம்ல.
-செல்வன்

ALIF AHAMED said...

ஃபிளாஸ் பேக் 2

சங்கத்துல சொதப்பிட்டாங்களா?
-----
கயமைத்தனத்துக்கு மேலும் ஒரு உதாரணம்.
------
என்னவோ போங்க.
-இ கொ
==========
கொத்தனாரை கண்டிக்கிறேன்.

உங்களால் நேர்ந்த கதியை பார்த்தீர்களா?

--செல்வன்

கோவி.கண்ணன் [GK] said...

இகொ... தைவான் டவரைவிட பெருசா வந்துடுச்சிங்க பின்னூட்டம்:) ... இந்த அணில் போட்ட சின்ன கல்லு இது :)

நாகை சிவா said...

//இதுக்கு ரிசர்ச் ஸ்காலர்
டாக்டர்
ஐ.நா.சபை எல்லாரும்
கொத்ஸுக்கு கூட்டா? //
தல இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாகவே மாட்டேன். என்ன விட்டுட்டு
சாமி.

Unknown said...

enna 600leeyee innum nikkuthu?eppa 1000 adikkarathu?

poruththathu poothum koththanaare.pongki ezungkaL

ithu todays attendance

மதுமிதா said...

கொத்ஸ் என்ன நடக்குது இங்கே
போதும்
அடுத்த போட்டிக்கு வாங்க

ALIF AHAMED said...

இருக்கியால நீ

ம்

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

«Oldest ‹Older   601 – 635 of 635   Newer› Newest»