Monday, July 27, 2009

பிரபல பதிவர் ஆவது எப்பிடி? Guide For Dummies

எங்கன திரும்பினாலும் பிளாக் பிளாக்’னு ப்ளேக் நோய் மாதிரி பெருசா பரவி, அமிதாப் பச்சன்’லே இருந்து எங்கூரூ அரைடவுசரு வரைக்கும் பிளாக் ஆரம்பிச்சிட்டு இருக்குதுங்க.. வெள்ளைக்கார தொரை படிக்கிற டைம்ஸ் ஓப்பன் பண்ணினாலும் ப்ளாக், நாமே எழுத்துக்கூட்டி படிக்கிற இந்தியன் டைம்ஸ், இந்து’ன்னு எடுத்தாலும் ப்ளாக், தினதந்தி, தினமலருன்னு எல்லாபயலுவெல்லாம் ப்ளாக், பளாக்’ன்னு பத்த வைச்சி இப்போ தீயை கொழுந்து விட்டு எரிய விட்டுட்டாய்ங்கே..

ஆக எப்பிடியோ இதை பத்தி தெரிஞ்சி இந்த பக்கம் வந்து பிளாக்’ன்னு ஒன்னு ஆரம்ப்பிச்சி எல்லார்கிட்டேயும் ஐ யூஸ் டூ ப்ளாக்கிங்’னு பீலா விட ஆரம்பிச்சிட்டோம்’லே.. அப்பிடின்னா பேமஸ் ஆகிருக்கனுமின்னு பார்த்தா அதுவுமில்ல.. இப்போ ரெண்டு ப்ளாக்கர் மீட்டை போட்டா ”என்னாங்க நாமளும் நொங்கு நொங்குன்னு கீ-போர்ட் தேய தேய தமிழிலே தட்டச்சி பதிவெழுதினாலும் இன்னும் பிரபலமாகலே’னு மேவளையே சொறிஞ்சிட்டு பேசி கொல்லுறாங்க

அந்த மாதிரி டம்மி பதிவர்களுக்காக பாடம் சொல்லிகொடுக்க போறோம்.. ஒழுங்க கிளாஸ்’க்கு வரனும் ஆமாம் சொல்லிப்பிட்டோம்...




நீங்க எப்பிடி பதிவெழுத வந்தீங்கன்னு முதலிலே ஜீலேபி சுத்தி பார்த்து தெரிஞ்கிட்டாச்சு, அடுத்து தமிழிலே எப்பிடி பதிவெழுத வந்தமின்னும் ஒரு சுத்து சுத்தி பார்த்துக்கோங்க.. எவனோ ஒருத்தன் வீணா போனவன் சும்மா இருக்கிறதை விட்டுட்டு படிச்சதே அப்பிடியே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி மயில் தட்டி விட்டுருப்பான். நீங்களும் அதை படிச்சி பார்த்துட்டு நாமே தட்டுனா கூட தமிழிலே வருமான்னு முன்னர் காலத்திலே டைரி’லே எழுதி வைச்சதெல்லாம் டைப் பண்ணி பார்த்து சுவத்திலே திரிஞ்சிட்டு இருக்கிற பல்லிக்கு கூட பயம் வர அளவுக்கு டெர்ரா போஸ் கொடுத்தீருபீங்க... ஆக ஏரியா’விலே தமிழ் எழுத தெரியுமின்னு பில்ட்-அப் ஆனதும் ப்ளாக்வுலகத்திலே டொப்பக்குன்னு குதிச்சிருப்பீங்க. ஓகே.. அமீர்கான் தன்னோட நாய்க்குட்டிக்கு ஷாருக் பேரு வைச்சிருந்ததே தன்னோட பிளாக்’லே போட்டு பிளாக்-வேர்ல்ட்’லே ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு, சிவாஜி, எம்ஜீஆர்’னு எல்லாரையும் டரியல் ஆக்கி ஜேமோ லைம்-லைட்’க்கு வந்துட்டாரு.. இங்கன ஒன்னு ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. கைய்யா புய்யா’னு கத்துனாதான் எல்லாரும் திரும்பி பார்ப்பானுக.. எப்பிடி கத்துறதுன்னு பார்க்கலாமா?

1) போனமாசந்தான் தமிழிலே டைப் பண்ண தெரிஞ்சாலும் பத்து வருசமா ப்ளாக் படிக்கிறேன். ஏழரை வருசமா பின்னூட்டபதிவரா இருந்தேன்.. இப்போ ஒன்றரை வருசா ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்னு சொல்லனும்.. எல்லாரோட பிளாக்’ம் படிப்பேன். எல்லாரையும் கூகிள்-ரீடரிலே சேர்த்து வைச்சிருக்கேன். ஆனா படிக்கதான் நேரமில்லை’னு சீன் போடனும். ஆக எழுதுறது இல்லாட்டியும் நிறைய படிப்பாரு போலே’னு நினைச்சிக்குவாங்க. அப்போ எப்போதான் எழுதுவீஙன்னு ஆரும் கேட்டா இப்போல்லாம் எழுதவே ஒன்னுமே தோணமாட்டேங்கிதுன்னு சொல்லனும். அப்பிடின்னா என்னான்னு அவங்க கேட்டா It's kinda writing stroke’னு பீட்டரு வீட்டுட்டு வெடுக்குன்னு வந்துறனும்.. சொல்லிட்டு அங்கனெ நின்னுங்கன்னு வைச்சிக்கோங்க.. அப்புறம் அவங்க துப்பினதை தொடைக்கிறது கிலோ கணக்கிலே துண்டு வாங்கனும்...

2) இது இன்னொரு முக்கியமான பாயிண்ட்: சொல்லவந்ததை கொலைவெறியோட சொல்லனும், எப்பிடின்னா சன்னலை தொறந்தா காத்து வருதுக்கிறதே’னு எழுதுறதே கூட இப்பிடி எழுதனும், மண்ணின் அடுக்குமுறைக்கு அடங்கா வீரியமிட்டு எழுந்த விதையின் வளர்ந்த விருட்சம், தன் இருந்தலியத்தினை என் சாளரம் நுழைந்து மேனி தழுவி சென்றது காற்றாய்’ன்னு எழுதி இது தமிழா, இல்லே என்னான்னு தெறிக்க விட்டு அந்த பயலை இதுக்கெல்லாம் என்ன அர்த்தமின்னு தயவு செய்து சொல்லிருங்கன்னு கதறவிடனும். நமக்காக ஆராவது கண்ணீரு விட்டா அது ஆனந்தம் தானே? ஆக கொலைவெறி கவுஜனா பார்ம் ஆகிச்சாசு. அடுத்து கதை எழுதுறது, அது எப்பிடி தெரியுமா? ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் எல்லாத்தையும் பழைய பேப்பர் கடையிலே மொத்தமா பத்து கிலோ வாங்கிட்டு வாங்க. அதிலே இருக்கிற ஒரு பக்கத்து கதையெல்லாம் படிச்சி பாத்து அதிலே எது ஒரே மாதிரியான கதையமைப்பிலே இருக்கிறதே எல்லாத்தையும் ஒரே கதையா மாத்துங்க. உண்மையே சொல்லனுமின்னு நம்ம ஊரு பழம்பெரும் எழுத்தாளர்களெல்லாம் ஒரே கதையே கொஞ்சகாணு மாத்தி அப்புறம் தன்னோட புனைபேரையும் மாத்தி மூணு-நாலு பொஸ்தககாரவுங்களும் அனுப்பி வைச்சிருப்பாங்க, அது பிரசுரம் ஆகி வெகுமானம் வாங்கினது பத்தாமே ஏதோ ஒரு ஊரு பேரு போட்டு வாசகர்கடிதத்தை தனக்கு தானே எழுதிருப்பானுக. சரி அதை விடுங்க, நம்ம மேட்டருக்கு வருவோம். கதையே எல்லாத்தையும் கலந்து கட்டி மிக்ஸ் பண்ணிட்டிங்களா? அத அப்பிடியே ஆருக்காவது மயில் தட்டி விடுங்க, ஒன்னொன்னு இங்கன முக்கியமான விசயம், அனுப்பி வைக்கிற ஆளுக்கு அரைகொறயா தான் எல்லாமே தெரிஞ்சிருக்கனும், இல்லன்னா ஒங்களே அது இதுன்னு கேள்வி கேட்டே கொன்னுருவாய்ங்க, அதை விட முக்கியமான விசயம் ஒங்கள மாதிரியே அவரும் டீ-யானை’யா இருந்தா ஒன்னியுமே பண்ணமுடியாது. அதுனாலே பண்ணுற நாதாரிதனத்தை நாசுக்கா பண்ணுங்க.

3) தன்னோட பிளாக்’லே எழுதுறதிலே கொலைவெறி காட்டுறோமின்னு இல்லாமே மத்த இடத்திலே போய் ரத்தபூமியாக்கி, அந்த இடத்தே சொத சொதன்னு ஆக்கி, அந்த ஈரத்திலே கோலியாடிட்டு வரனும்.. அது எப்பிடின்னு கேட்கிறீங்களா? நம்மாளு தட்டுமுட்டி எப்பிடியோ (உண்மையாகவே) கதை எழுதி வைச்சிருந்தா, இதெல்லாம் எப்போவோ சுஜாதா’கிற சின்ன எழுத்தாளர் அந்த காலத்திலே கிறுக்கி வைச்சிட்டாரேன்னு சொல்லனும்.. அப்புறம் இன்னோரு நாளு அதே பதிவர் சுஜாதா பத்தி எதாவது எழுதி வைச்சிருந்தா கூட ”அவர்கள்” படத்திலே ரஜினிக்கு சோடி கட்டி நடிச்சிட்டு அவரோட உழைப்பாளி,பாபா படத்திலேல்லாம் அம்மா வேஷம் கட்டுனாங்களே அவங்களான்னு கேட்டு வைக்கனும்.. ஒடனே சுத்தி இருக்கிறவங்கல்லாம் ஆகா இவரு அவளோ பெரிய ஆளையே சும்மான்னு சொல்லுறாரே.. மண்டை பார்ட்டி’னு சொல்லிரும்.. அப்பிடியே ஃபார்ம் ஆகிறலாம்.

4) இப்போ இன்னொரு முக்கியமான பாயிண்ட்: கூட்டம் சேர்க்கிறது. அது எப்பிடின்னா பாட்சா படத்திலே ரஜினி அன்பாலே சேர்ந்தகூட்டமின்னு சொல்லுறமாதிரி கெத்தா சேர்க்கனும். கூட்டம் சேர்க்கிறது பெரிய கம்பசூத்திரமில்ல, சுமாரா எழுதுறவங்களே லிஸ்ட் எடுத்து வைச்சிக்கிட்டு நீயெல்லாம் இன்னும் எழுதினேன்னா நல்லாவருவே, இன்னும் நிறையபடி! ஒலக சினிமாகள் பாரு! அது இது’னு காதல் படத்திலே வர்ற சொட்டையரு வசனமான “நீங்க நல்லா வருவீங்க தம்பி!! நீங்க நல்லா வருவீங்க!!”னு சொல்லிட்டு வரனும். இதே கேட்கிறதுங்க ஆகா நம்மளையும் நம்புறாங்களேன்னு நீங்க அடிவாங்கிற கைப்புள்ளயா இருந்தாலும் ஒங்களை வைச்சி சங்கமின்னு ஒன்னு ஆரம்பிச்சி புது கோஷ்டி பார்ம் பண்ணிருவானுக.. அப்புறமென்னா நல்லா கூவு.. ஒரக்கா கூவு’ன்னு சொல்லிட்டு கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா போதும்.

5) அப்பிடி இப்பிடின்னு தல’ன்னு நாலு பேரு கூப்பிடுறளவுக்கு ஃபார்ம் ஆகீட்டிங்கன்னா போதாது, அப்பிடியே ரவுடியா வாழனும், வாழ்ந்துகாட்டனும்.ஆஸ்கர் வாங்கின ரகுமானிலிருந்து, இசைஞானி இளையராஜா வரைக்கும் எல்லாரையும் திட்டி தீர்த்து தள்ளனும் மைக்கேல் ஜாக்சனை பத்தி நல்லா எழுதிருந்தா கூட இடையிலே பாப்-மார்லி அளவுக்கெலாம் நானு MJ'வே மதிக்கிறது இல்லை’னு சொல்லனும். எதை எழுதனாலும் அதுக்கு நாலு பாகம் போட்டு இருக்கிறவனை கொன்னு தள்ளனும், உள்ளுக்குள்ளே ஒன்னுமில்லாட்டியும் படிக்கிற அரைப்பேக்கு’ங்க அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்க்’ன்னு மனசாட்சியே இல்லாமே சொல்லுவாங்க. எல்லாத்தையும் பெருமையா எடுத்துக்கிட்டு எனக்கு இப்போ டைம் இல்லை. சீக்கிரமே எழுதுறேன்’ன்னு பொளந்து கட்டனும். அதுக்கொ இல்லே எதுக்கொன்னாலும் சரி எதுக்குமே எதையும் ஒத்துக்க மட்டும் செஞ்சிறக்கூடாது, யாராவது துறை சார்ந்த பதிவெழுதுறேன்னு கிளம்பி வந்தா இந்த வேலையே பார்க்கிறதுக்கு நீங்க பேசாமே உருப்படியா வேலையே பார்த்து முன்னேற வழியை பாருங்கன்னு அட்வைஸ் ஆறுமுகமா அவதாரம்மெடுக்கனும். அப்பிடியும் அவரு அடங்கலைன்னு வைங்க, அவரு எழுதின ஒவ்வொரு எழுத்திலையும் குத்தம் கண்டுப்பிடிச்சி பின்னூட்ட பக்கத்திலே பாண்டியாடனும்.

இது வரைக்கும் பதிவரிலிருந்து, பின்னூட்ட பதிவராகி அப்புறம் எளக்கியவியாதி பதிவர், தல பதிவர், கலவர பதிவர்’ன்னு படிப்படியா பிரபல பதிவர் ஆகிறதுக்கு உண்டான வழிமுறைகளை பார்த்தாச்சு’லே.. எல்லாத்தையும் ஒவ்வொன்னா அதுவும் படிப்படியா பின்பற்றிட்டு சொல்லுங்க. அடுத்து மாபெரும் பிரபல பதிவராவது எப்பிடி? மா-மாபெரும் பிரபல பதிவர் ஆவது எப்பிடின்னு அடுத்த பாகம் போடுறோம்.. இப்போ ஐயம் ஷோ பிஸீ... நோ -டைம்.. யூ சீ.....

58 comments:

நாமக்கல் சிபி said...

:)) சூப்பரு!

கோவி.கண்ணன் said...

:) அடங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

முகமூடி எழுதிய பதிவு போல இருக்கு !

குசும்பன் said...

சின்ன தல செம செம கலக்கல்
//“நீங்க நல்லா வருவீங்க தம்பி!! நீங்க நல்லா வருவீங்க!!”//

நாமக்கல் சிபி மாதிரி நல்லா வருவீங்க ராம் நல்லா வருவீங்க!

//மா-மாபெரும் பிரபல பதிவர் ஆவது எப்பிடின்னு அடுத்த பாகம் போடுறோம்.. இப்போ ஐயம் ஷோ பிஸீ... நோ -டைம்.. யூ சீ.....//

மா மா பிரபலபதிவர் ஆவது எப்படின்னும் சொல்லுவீங்களா?:)

குசும்பன் said...

நல்லா கூவு.. ஒரக்கா கூவு’ன்னு சொல்லிட்டு கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா போதும்.//

இந்த டீல் எனக்கு புடிச்சு இருக்கு!

ஐந்திணை said...

(0
- O
(0

கோவி.கண்ணன் said...

//posted by இராம்/Raam at 10:05 AM on Jul 27, 2009
//

எனக்கென்னமோ LA விட்டுப் போச்சோன்னு டவுட்டாகீது.

கோவி.கண்ணன் said...

//நாமக்கல் சிபி மாதிரி நல்லா வருவீங்க ராம் நல்லா வருவீங்க!//

இதை வன்மையாக வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் said...

// கோவி.கண்ணன் said...
:) அடங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

முகமூடி எழுதிய பதிவு போல இருக்கு !
//

பிரபல முகமூடி எழுதிய பதிவு போல இருக்கு ! ன்னு சொல்லி இருக்கனும் 'பிரபல' விட்டுவிட்டது

கோவி.கண்ணன் said...

//அப்பிடி இப்பிடின்னு தல’ன்னு நாலு பேரு கூப்பிடுறளவுக்கு ஃபார்ம் ஆகீட்டிங்கன்னா போதாது, அப்பிடியே ரவுடியா வாழனும், //

:) பல ரவுடிகளைப் பார்த்தாச்சு !

இராம்/Raam said...

தள,குசும்பன், ஐந்திணை,

நன்னி! நன்னி!! நன்னி!!!

கோவி’ண்ணே,

கொளுத்தி போட்டாச்சா??? :))

ஜெகதீசன் said...

:))

வால்பையன் said...

நான் ட்ரை பண்ணி பார்க்கட்டுமா!?

நையாண்டி நைனா said...

பாஸ் இதெல்லாம் ஆயிரத்தி என்னூத்தி அம்பதிலே வெளி வந்து இருபத்து வருசத்திற்கு முன்னாடியே நான் படிச்சி பாலொவ் பண்ணிக்கிட்டு இருக்கேன். புதுசா ஏதாவது போடுங்க சாமி.

துபாய் ராஜா said...

//எங்கன திரும்பினாலும் பிளாக் பிளாக்’னு ப்ளேக் நோய் மாதிரி பெருசா பரவி, அமிதாப் பச்சன்’லே இருந்து எங்கூரூ அரைடவுசரு வரைக்கும் பிளாக் ஆரம்பிச்சிட்டு இருக்குதுங்க..//

ஆரம்பமே அட்டகாசம்.

//பத்து வருசமா ப்ளாக் படிக்கிறேன். ஏழரை வருசமா பின்னூட்டபதிவரா இருந்தேன்.. இப்போ ஒன்றரை வருசா பிளாக் எழுதிட்டு இருக்கேன்னு சொல்லனும்.. //

ஆமாங்க.நாங்கெல்லாம் சங்கம் ஆரம்பிச்ச காலத்திலேயிருந்தே சிங்கமுங்க. :))

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :))

Raju said...

அண்ணே, கொனுட்டண்ணே, கொனுட்ட...!
அப்பறம்ண்ணே, இப்முட்டு வெஷயத்தையும் ஒரே பதிவுல போட்டு வேஸ்ட் பண்ணீட்டயேண்ணே.
நானா இருந்தாக்கா, வச்சு வச்சு ஒரு மூணு பதிவு போடுவேனாக்கும்.
அப்பறம், மைக்கேல் ஜாக்சன், பாப் மார்லி யாருண்ணூ இவிய்ங்கெல்லாம். ஒரே கொள்ளக்கூட்டத்தலைவிய்ங்க பேர் மாரி இருக்கு.

இராம்/Raam said...

ஜெகு,

மூத்த பதிவராக்கீட்டிங்க.. :)

வாலுண்ணே,

நீங்களுல்லாம் எப்பவோ பிரபலம் ஆகீட்டிங்க.. இன்னுமா?? :))

நை.நை,

அப்போ நீங்க பழம் பெருச்சாளி பதிவருன்னு சொல்லுங்க... :)

இராஜா’ண்ணே,

எப்பிடிருக்கீங்க.. :)

டக்ளஸ்’ண்ணே,

அவயிங்கல்லாம் ஆருன்னு விக்கிபிடியா பார்த்து பதிவெழுதுங்க. நாங்கெல்லாம் பின்னாடியே வந்துறோம்.. :) அப்புறம் இன்னும் நீங்க சீட்டை தொட்டா ஜோக்கர் கையிலேறி வந்து ஒக்கார்ந்துக்கிதா?? :))

நையாண்டி நைனா said...

/*நை.நை,

அப்போ நீங்க பழம் பெருச்சாளி பதிவருன்னு சொல்லுங்க... :) */

ஹே... வெற்றி... ஹே வெற்றி....
( ஆமா நீங்க உண்மைலே பயந்துதானே சொல்லி இருக்கீங்க....) உங்களோட ஐடியாவிலே இருக்குற முதல் ஐடியாவிற்கு செயல்வடிவம் உங்க கிட்டே செஞ்சி பார்த்தேன் ஹே... வெற்றி... ஹே வெற்றி....

நாகை சிவா said...

பீன்னிட்ட டா.. நீ சிங்கம்.. நீ மட்டும் தான் சிங்கம்.... (பிரபல சிங்கம்) ;)

FunScribbler said...

இதுவும் ஒரு கொல வெறி பதிவா??

மதிபாலா said...

:)))))))

அபி அப்பா said...

இதான் ராம் டச்!!முதல் பாராவிலேயே டபார்ன்னு சிரிச்சேன். அடுத்து அடுத்து படிக்க பயமா இருந்ததால மூடி வச்சேன். இப்ப ரூம்ல வந்து படிச்சேன்.ராம் தம்பி நீ அயோக்கியண்டா:-)))))))))))

நர்சிம் said...

ரைட்டு ராமு..மதுரைக்கு எப்போ?

Thamiz Priyan said...

சூப்பரு... ஒத்துக்குறோம். நீங்க ஒரு பிரபல பதிவர் தான்னு ஒத்துக்குறோம்.

வல்லிசிம்ஹன் said...

ராமா, கடவுளே:))))
ரொம்ப நன்றிங்கோவ். நகைத்து நாளாச்சு.

இராம்/Raam said...

நை.நை,

அப்பிடிதான் சீக்கிரமே பிரபல பதிவராக வாழ்த்துக்கள்... :)

புலி,

நல்லா கூவு.. உரக்க கூவு... :)

ப.பா.ச.சிங்கம்,

கொலைவெறியா... யாரு மேலே?? :))

மதிபாலா,

நன்னி... அங்கன யாரை பார்த்து வெறிக்கீறிங்க??

தொல்ஸ்'ண்ணே,

மாபெரும் பிரபல பதிவர் நீங்க... :))

சேட்'ண்ணே,

இன்னும் ரெண்டு மாசம் ஆவும் வரதுக்கு!! எதுக்குண்ணே ஊருக்குள்ளே வைச்சி பொதுமாத்து கொடுக்க போறிங்களா?? :)

தமிழ் பிரியன்'ண்ணே,

நாங்கல்லாம் பிறவிலே இருந்தே பிரபல பதிவர்தான்.. :)

வல்லிம்மா,

நன்றி... எல்லாம் உங்களுடைய ஆசிர்வாதந்தான்.... :)

சுரேகா.. said...

ராம்...கலக்குறீங்க!

அப்ப...நீங்க பிரபல பதிவர்தானே!:))))))))))

நிஜமா நல்லவன் said...

:))

நிஜமா நல்லவன் said...

பிரபல பதிவர் சின்னத்தல ராம் வாழ்க!

நிஜமா நல்லவன் said...

/நாமக்கல் சிபி மாதிரி நல்லா வருவீங்க ராம் நல்லா வருவீங்க!/


ரிப்பீட்டேய்

கிரி said...

அடடா! வடை போச்சே..

ராம் முக்கிய முக்கிய தகுதியா ரஜினிய கண்டபடி திட்டனும் அதை சேர்த்துக்குங்க

வெட்டிப்பயல் said...

ராயலண்ணே,
கொன்னுட்டண்ணே!!!

டரியல் பதிவு...

வெட்டிப்பயல் said...

தள,
இது என்ன தூங்கி எழுந்ததும் எடுத்த ஃபோட்டோவா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் பதிவு

M.Rishan Shareef said...

அட எனக்கு யூஸ் ஆகும் போலிருக்கே பாஸ்..மைன்ட்ல வச்சுக்குறேன் :)

ஜோ/Joe said...

பதிவர் சந்திப்புக்கு வந்தா ஒன்ணும் தெரியாத அப்பாவி மாதிரி வாயை தொறக்காம இருக்குறது ..ஆனா என்னா குசும்புப்பா.

நகைச்சுவைல பின்னுறீங்க.

இராம்/Raam said...

சுரேகா,

நாமெல்லாம் பிறவியிலே இருந்தே பிரபல பதிவர் தான்... :)

நி.ந,

கூவினதுக்கு நன்னி... :)

கிரி,

அவங்க'லாம் பிரபல பதிவர் இல்லை... :)

வெட்டிக்காரூ,

நன்னிப்பா... :)

ஸ்டார்ஜன்,

நன்றி...

ரிசானு,

இது ஒங்களுக்கே ஓவரா தெரில? நீங்களெல்லாம் மாபெரும் பிரபல பதிவரு... :))

கமலசிவாசி,

அமைதியா இருக்கிறது தப்பா... :))

ஜோ/Joe said...

//கமலசிவாசி,

அமைதியா இருக்கிறது தப்பா... :))
//
வருத்தபடாத வாலிபர்கள் அமைதியா இருக்கது தப்புதேன்.

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு ராமண்ணே...

:))

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் பார்ம்லதான்யா இருக்கு சிங்கம்!

ரொம்ப ரசிச்சேன்.. :))

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அண்ணே யூஸ் பண்ணிக்குறேன்... :))

கோபிநாத் said...

கலக்கல் மாப்பி ;)))

இராம்/Raam said...

கமலசிவாசி,

ஹி ஹி...


தமிழன்-கருப்பி’ண்ணே,

நன்றி... :)

கோபி,

நன்றி மாப்பி.. :)

ILA (a) இளா said...

ங்கொய்யால கொலை வெறியோடத்தான் வந்திருக்கீங்க போல.


பிரபலமாகாத பதிவர்
இளா

சிங்கக்குட்டி said...

அவ்வ்வ்வ்வ்வ்..எப்படித்தான் யோசிப்பிங்கலோ..... அடுத்த கிளாஸ்’க்கு ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு ஆஜர் ஆகிறேன் :-))

கிள்ளிவளவன் said...

kalakiteenga . nalla iruku.

கைப்புள்ள said...

//அப்பிடின்னா என்னான்னு அவங்க கேட்டா It's kinda writing stroke’னு பீட்டரு வீட்டுட்டு வெடுக்குன்னு வந்துறனும்.. சொல்லிட்டு அங்கனெ நின்னுங்கன்னு வைச்சிக்கோங்க.. அப்புறம் அவங்க துப்பினதை தொடைக்கிறது கிலோ கணக்கிலே துண்டு வாங்கனும்...
//

இதை படிச்சிட்டு சத்தமா சிரிச்சிட்டேன்.
:)

ராயல்...வெல்கம் பேக்.

கைப்புள்ள said...

//மண்ணின் அடுக்குமுறைக்கு அடங்கா வீரியமிட்டு எழுந்த விதையின் வளர்ந்த விருட்சம், தன் இருந்தலியத்தினை என் சாளரம் நுழைந்து மேனி தழுவி சென்றது காற்றாய்’///

ஒத்துக்கறேன்...நீ ஒரு கொலைவெறி கவிஞ்சர் தான்...நான் ஒத்துக்கறேன்.
:)

கைப்புள்ள said...

//அப்புறம் இன்னோரு நாளு அதே பதிவர் சுஜாதா பத்தி எதாவது எழுதி வைச்சிருந்தா கூட ”அவர்கள்” படத்திலே ரஜினிக்கு சோடி கட்டி நடிச்சிட்டு அவரோட உழைப்பாளி,பாபா படத்திலேல்லாம் அம்மா வேஷம் கட்டுனாங்களே அவங்களான்னு கேட்டு வைக்கனும்.. ஒடனே சுத்தி இருக்கிறவங்கல்லாம் ஆகா இவரு அவளோ பெரிய ஆளையே சும்மான்னு சொல்லுறாரே.. மண்டை பார்ட்டி’னு சொல்லிரும்.. அப்பிடியே ஃபார்ம் ஆகிறலாம்.
///

எப்படிப்பா இப்படியெல்லாம்? சான்ஸே இல்லை. அப்போ நீ இவ்வளோத்தையும் செயல் படுத்தி பாத்துருக்கேன்னு சொல்லு.
:)

இராம்/Raam said...

விவாஜி,

இது ஒங்களுக்கே ஓவரா தெரில..? அடுத்த பாகம் பிரபல பதிவர் இளா மாதிரி ஆவது எப்பிடி'ன்னு போட்டுருவேன்.. பீ கேர் புல்லு :)

சிங்கக்குட்டி,

நன்னி...
குட்டி'ன்னு பேரு வைச்சிட்டு பிடாரி'யோட இருக்கிற சிங்கம் படம் போட்டுருக்கீங்க? :)

கிள்ளிவளவன்,

நன்றி... :)

தல,

எல்லாம் ஒங்க ஆசீர்வாதந்தான்.. :)) இன்னும் நிறைய கொலைவெறி கவுஜ'ஸ் இருக்கு... கொஞ்சநாள் கழிச்சி எடுத்து விடனும்.. :)

கவிதா | Kavitha said...

காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? -

இது பதிவுக்கும் சங்கத்துக்கும் நிறைய சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி - இதை ச்சும்மா நானா கேட்கல ... உட்கார்ந்து பொருமையா.. நேஷனல் ஜியோ' சேனல் பாத்துட்டு கேட்டு இருக்கேன்.. உங்க வ.வா.ச சிங்க உறுப்பினர்களை பாக்கும் போது எல்லாம் எனக்கு இந்த கேள்வி வருது சிரிப்பு சிரிப்பா வருது.. :)

கவிதா | Kavitha said...

//பீன்னிட்ட டா.. நீ சிங்கம்.. நீ மட்டும் தான் சிங்கம்.... (பிரபல சிங்கம்) ;)//

//புலி,

நல்லா கூவு.. உரக்க கூவு... :)
//

ஹி ஹி..ஹி ஹி... ..Hey Raam... உங்க நிலைமை இப்படி ஆகிப்போச்சேஏஏஏஏஏஏ... :)))) Lion is not a king in real life fu.... :)))))))

கப்பி | Kappi said...

தெய்வமே...எங்கியோ போயிட்டீங்க :)))

பித்தன் said...

தல....ல.... சிரிச்சி, சிரிச்சி வேளாடுரிங்க....

Anonymous said...

எங்கயோ போயிட்டீங்க!!!!!!!!!!!!!!!!

டவுசர் பாண்டி said...

//கொலைவெறி காட்டுறோமின்னு //

அஹா , நா இல்லப்பா ,

//தமிழ் எழுத தெரியுமின்னு பில்ட்-அப் ஆனதும் //

எனுக்கு , எங்க பேட்ட தமிழே தகராறு ,

//நீங்க அடிவாங்கிற கைப்புள்ளயா இருந்தாலும் //

ம்ம் , இப்ப தான் தெரியுது , ஆளாளுக்கு , என்ன ரவுண்டு
கட்டி அடிக்கிறாங்கோ !!


பதிவு , சூப்பெரோ, சூப்பரு ,

சிங்கக்குட்டி said...

ஒன்ஸ் அப் ஆன் ய டைம் படிக்கிர காலத்துல மண்டை மேல அவ்வ்ளோவ் முடி வச்சு இருந்தால நண்பர்கள் வச்ச பட்ட பேரு அது.....அதான் ஒரு பழைய மெம்மரிக்கு...:-) மித்தபடி வலை பதிவுல நான் இன்னும் குட்டி தான? ....:-))

ஒரு பேருக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா? பொறுமை பொறுமை மக்களே......ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது ... சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா அப்படியே மார்கெட்ல பார்ம் ஆகிகிரோம்..

ராமய்யா... said...

//புலி,

நல்லா கூவு.. உரக்க கூவு... :)
//

Unknown said...

நெசம்மா .... சொல்லுறேன் தம்பி.. என்னால முடியல.. இதச் சொல்லவும் பயமாருக்கு. ஏன் தெர்யுமா? நீங்க இந்த கமெண்ட்ட படிச்சுபுட்டு நேர என் பிளாக்க பாத்துபுட்டா? அந்த ஒரே காரணத்துக்காகத் தான் நான் இந்த கமென்ட எழுதுனேன்னு நீங்க நெனசுபுட்டா? வேணாம் தம்பி..