Sunday, July 19, 2009

பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... காலங்கள்

பொதுவா எனக்கெல்லாம் ஸ்கூல்ல, சின்ன வகுப்புப் படிக்கிறப்போ ஜாக்சன் தொரை கணக்கா தெரிவாங்க, ஆங்கிலோ இந்திய பசங்க. 'ஆ'ன்னு அவங்கல்லாம் பீட்டர் விடுறது பாத்து வாய் பொளக்குறது. இதுல இவங்கம்மா யாராச்சும் அதே ஸ்கூல்ல வேலைப் பாத்தா அவ்ளோதான். செம பவ்வ்வ்வ்............எல்லா டீச்சருங்களும், வீட்ல இருக்க டாக்கிட்டக் கூட டாக் இங்கிலிபீஸ்னு இம்சப்படுத்துவாங்க. அதால டீச்சர் வீட்டுப் பசங்களுக்குக் கூடுதலா இவங்க மேல கொலைவெறி இருக்கும். ஆனா தொரை லேங்குவேஜில் தில்லாலங்கடியா இருக்குறதில் கூட ஒரு பிரச்சினை கீதுன்னு, காலம் புரியவெச்சுச்சி.

நாங்கெல்லாம் ஒழுங்குப்புள்ளயா, யூகேஜிலருந்து, ஒரு விலங்குக்கு எக்சாம்பிள் கேட்டாக் கூட, ஒட்டா மக்கடிச்சு வாந்திஎடுக்குறதுதான். அப்போல்லாம் இந்தப் பசங்களோட ஆங்கில பிஸ்தை வெச்சு ஒரே ஸீனா இருக்கும். அப்டியிருக்கசொல்லோ, இந்த மேக் யுவர் ஓன் செண்டென்ஸ்னு ஆங்கிலத்துல வரும்ல, அதுல ஒருவாட்டி பீப்பிங் த்ரு அப்டின்னு வந்துச்சி. நாங்கெல்லாம் செவனேன்னு, மக்கடித்து வாழ்வாரே மெட்ரிக்கில் வாழ்வார், மற்றெல்லாம் ஐஸிஎஸ்ஸி பின் செல்பவர் அப்டின்னு எழுதுனா, நம்ம வகுப்பு தொரை மட்டும் சொந்த அறிவ உபயகோப்படுத்தி எல்லா டீச்சருங்களையும் படுத்திட்டார். அப்டியாப்பட்ட ஒரு வில்லங்கமான வரியை விரிவா விவரிச்சிட்டு ஹாயா போய்ட்டாரு. ஆனா, டீச்சரான அவங்கம்மாவுத் தான் ரொம்ப தர்மசங்கடமாகிட்டுது. அவனக் கூப்டு நாலு போட்டு கேட்டா, அவன் கொடுத்த, குற்றம் நடந்தது என்னங்கற ரிப்போர்ட் வேற செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... ஆக்கிடுச்சி எங்க சிஸ்டரை.


இத விடப் பெரிய காமடின்னா, இதுக்கு எப்டி மார்க் கொடுக்குறதுன்னு நடந்த விவாதம்தான். கொடுத்தாலும் ரொம்ப குஷ்டமாகிடும், கொடுக்கலைன்னாலும் சரியா இருக்காது. அப்போலருந்து எங்கள மாதிரி சாம்பிராணிகளுக்குக் கெடச்ச மரியாதையே வேற. பின்ன, ஆர்வக் கோளாறு கேசுங்களால ஆகுற இம்சயத்தான் பாத்தாங்கல்ல.

இதே மாதிரி மொழிப் பிரச்சினை என்கிட்டயும் வெள்ளாடிடுச்சி. எப்டின்னா, நான் பிரான்ஸ் வந்து தம்தூண்டு பிரென்ச் புரிஞ்சிக்கக் கூட எனக்கு 1 மாசம் தேவப்பட்டுச்சி. ஆனா, எங்க மாமியார் அதுக்குள்ள என்னைய பிரென்ச் கருத்துப் போலீசா மாறச் சொல்லி டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... ஆக்குவாங்க. நானும் சும்மா சுப்ரமணிய ஸ்வாமி பேச்சைக் கேக்குற நிருபராட்டம் மையமா தலையாட்டுறது. ஒரு தடவ இப்டித்தான் டிவில முதியோர் சம்பந்தமான புரோகிராம் வந்துச்சி. இவங்க வழக்கம்போல என்கிட்டே திரும்பி ஸ்பீடா பேசிக்கிட்டே போய், என் கருத்த எதிர்பாக்கராப்டி நிறுத்துனாங்க. சரி இருக்கட்டும்னு மொதல்ல அவங்க மூஞ்சைப் பார்த்தேன் நல்லா சிரிச்சிக்கிட்டுத்தான் இருந்தாங்க, அடுத்து இவ்ளோ நேரமா பேசிருக்காங்களே, எதுக்கு மையமா தலைய ஆட்டனும், பேசாம இந்த தரமாவது நல்லா ஆமோதிச்சி தலைய ஆட்டோ ஆட்டுன்னு ஷேர்ஆட்டோ கணக்கா ஆட்டி ஆதரவு தெரிவிச்சி, அவங்க மனச குளிர்விக்கலாம்னு முடிவெடுத்து, தலைய சும்மா தஞ்சாவூர் பொம்மை கணக்கா ஆட்டினேன்.

பயங்கர குஷியாகிடுவாங்கன்னு பாத்தா, அப்டியே மூஞ்சு மாறிடுச்சி. என் மாமனார், என் ரங்கமணி எல்லாரும் அப்டியே, ராமநாராயணன் படத்துல மனுஷன ஹீரோவாப் பாத்த மாதிரி செம அதிர்ச்சி எபெக்ட் கொடுக்குறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........நாம ஆதரவுதான தெரிவிச்சோம், ஒய் திஸ் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........எபெக்ட் அப்டின்னு யோசிக்கும்போதே, கண்ணீர் மல்க என் மாமியார் ஓட, பின்னாடியே இவங்க ரெண்டு பேரும் போய் '$$$$ &&& §§§§ ££££', அப்டின்னு வெளக்கம்லாம் கொடுத்து ஒருவழியா சமாதானப்படுத்திட்டு வந்தப்புறம், மெதுவா அப்டி என்னத்த நான் தப்பா பண்ணேன், அவங்களுக்குத்தான ஜால்ரா அடிச்சேன்னு கேட்டேன். அதுக்கு கெடச்ச பதில்தான் என்னைய செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............ஆக்கிடுச்சி. அப்டி என்னத்த சொன்னாங்கன்னு முக்காவாசிப் பேர் யூகிச்சிருப்பீங்க, மீதி பேருக்கு தெரியனும்ல. அவங்க சொன்னது,'வயசானவங்க எல்லாம் இருந்தாலே தொந்தரவு தானே, நான் கூட சீக்கிரமே போய்டனும், கரெக்டா?' .

12 comments:

சென்ஷி said...

மீ த ஃபஷ்ட்டு :)

Anonymous said...

mee the seconduuuuuuuuuuuuuu

சிங்கக்குட்டி said...

"'ஆ'ன்னு அவங்கல்லாம் பீட்டர் விடுறது பாத்து வாய் பொளக்குறது" கலக்கல், அப்புறம் அந்த தலைய ஆட்டுன மேட்டர்.. உண்மைல புரியாம மையமாத்தான் ஆட்டுனதா இல்லலல.......:-)

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா

ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் கொலவெறிங்க :)

பித்தன் said...

மெய்யாலுமே தெரியாமத்தான் ஆட்னியா இல்ல......

நட்புடன் ஜமால் said...

இங்கே


வாழ்த்துகள்

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா ஹா

இராம்/Raam said...

LOL... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))))

சந்தனமுல்லை said...

ROTFL ராப்! உங்க நிலைமையை நினைச்சு பார்த்தே...சிரிப்புத் தாங்கல!! மாமியார் கிட்டே இப்போ கருத்து சொல்ற அளவுக்கு முன்னேறிட்டீங்களா??! :-))

சந்தனமுல்லை said...

//மக்கடித்து வாழ்வாரே மெட்ரிக்கில் வாழ்வார், மற்றெல்லாம் ஐஸிஎஸ்ஸி பின் செல்பவர் //

எப்படி ராப்...இப்படில்லாம்?!! :-)

Anonymous said...

avvvvvvvvvvvvvvvvvvvvvv