Thursday, July 2, 2009

மனக்குஷ்டம் - பார்ட் 1

டிஸ்கி 1: இராப் என் கணவரின் குடும்பப் பெயர்.

என் பேர் முக்காவாசிப்பேருக்குத் தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்களும் இதப் படிச்சா ஈசியா கெஸ்ஸலாம்.

எனக்கு ஏன் பிளஸ்சிங் மிஸ்னு பேர் வெச்சாங்கங்கறதுக்கு ஒரு சப்பப் புராணம் இருக்கு. அதாவது, எங்கம்மாக்கு யூட்ரசை ரிமூவ் பண்ணவேண்டிய அளவுக்கு ஒரு பிரச்சினை இருந்துச்சாம், ஆனா, அறுவை சிகிச்சை பண்ணவேண்டிய அன்னைக்கு, அதை பண்ண வேண்டிய கடுகடு காளியாம் டாக்டர் இரமணி சிவராம், கால் தடுக்கி விழுந்து பல்லை ஒடைச்சிக்கிட்டாங்க. அவங்க பல்லெல்லாம் கட்டி தேறி வர்றத்துக்குள்ள பெட் ரெஸ்ட்ல இருந்த எங்கம்மாக்கு தானாவே குணமாகி, அதுக்கப்புறம் பொறந்த தெய்வக் கொயந்த நான். எனக்கிந்தப் பேரை வெச்சது எங்கத்தை. அவங்களோட பரம வைரியான ரமணி சிவராமின் பல்லை உடைச்சிட்டு, தடை பலத் தாண்டி பொறந்ததால இந்தப் பேரை வெச்சாங்க.

அட கெரகமே, உன்கிட்ட ஹலோன்னு சொன்னவங்களுக்குக் கூட இதச் சொல்லி சாவடிப்பியே, இங்கயும் அதையே ஏன் கீறல் விழுந்த ரிக்கார்டாட்டம் ரிப்பீட்டுறேன்னு கேக்குறது புரியிது. பட் யூ சி, வழக்கம்போல இத வெச்சு ஒரு கேவலமான கருத்து சொல்ல முயற்சி பண்ணப்போறேன்.

அந்தப் பேர் வெச்ச காரணத்தாலோ என்னவோ இன்னி வரை நானும் எங்கத்தையும் யாருக்கு யார் மொதல்ல சூனியம் வெக்கிறதுங்கற ரேஞ்சிலயே போட்டி போட்டுக்கிட்டு திரியற அளவுல இருக்கோம். அதோட, சின்ன வயசுலருந்தே கூடப் படிக்கிற லொடுக்கு மற்றும் 'தல'கள் அனைவரின் பேரும் சும்மா ஸோக்கா இருக்கச்சே, நம்ம பேர் மட்டும் இப்டி சுமாரா போச்சேன்னு ஒரே கவலையா இருக்கும்.

ஸ்கூலுக்கு புதுசா வர்ற கெமிஸ்டிரி வாத்திலருந்து, பிடி தாத்தா வரை எல்லாருக்கும் என் பேரை கேட்டவுடன் எகத்தாளம். அடங்கொன்னியா, மொத்தப் பரம்பரைக்கும் சேர்த்து ஒத்தப் பேரையே குத்தகைக்கு எடுத்து கித்தாய்ப்பா வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்க உங்களுக்கு இதெல்லாம் ஓவருய்யான்னு நெனச்சுக்கிட்டு லூஸ்ல விட்டிருவேன்.

சரி சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறப்பவாவது, நிம்மதியா இருக்கலாம்னா, அங்கயும் பிரிட்டனுக்கு பிரிட்டானியா பிஸ்கோத்து விக்கறவங்களாட்டம் பேரு வெக்கிறது, சுஷ்மிதா, ஸ்வேதா, பாபின்னு. கிர்ர்ர்ர்ர்ர்..............இதுல இதுங்க எல்லாம் சர்ச் பார்க் ரேஞ்ச் பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டிருக்க, சுயத்தை இழந்த(இது பின்நவீனத்துவம், நாட் சாப்டற சுய்யம்) கேசுங்களா இருந்திட்டா, நம்ம பாடு அதோகதிதான். பருப்பு சாதம் சாப்ட பாண்டாக்களாட்டும், சாதா ஸ்கூலில் படிக்கும் எங்களைப் போன்ற சோதாக்களை, எங்க பெயர்களை வெச்சே தாளிச்சிடுங்க.

இந்தச் சமயத்தில் தான் அலைபாயும் பல்லுடையப்பன் எம்பெருமான் மாதவனோட மின்னலே ரிலீசாச்சு. கால்ராவோட பொறந்த டைபாய்டாட்டும் எனக்கு வெறி புடிக்க வெச்சாரு விவேக். எங்க வகையறா பேருடயோரை அந்தப் படத்துல டோட்டல் டேமேஜாக்கிட்டார். செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............ஆகி ரொம்ப நாள் மொளகா பஜ்ஜிய முழுங்குன மூஞ்சூராட்டம் திரிஞ்சிக்கிட்டிருந்தோம். அப்பாலைக்கு புலன்விசாரணைல இறங்கினப்போதான், இவரம்மா அப்போ முதியோர் இல்லம் போயிட்டதா கெளம்புன வதந்திக்கும், அவர் பொண்டாட்டி பேர் என்னாங்குறதும், அவங்க பேருக்கும், அந்த வசனத்துக்கும் இருக்க பட்டர்பிளை எபெக்ட் தொடர்பும் தெரியவந்துச்சி. அடப்பாவிகளா, உங்க படையலுக்கு, எங்கள பலியாடாக்கிட்டீங்களேய்யான்னு அவராட்டமே வெத்தா அனத்திட்டு ஓஞ்சோம்.

சரின்னு கடலை வறுக்க அபீஷியலா கத்துக் கொடுக்குற எடத்துல போய், நிம்மதியா ஜோதில(தியேட்டர் லேது) ஐக்கியாமாகிக்கிட்டிருக்கும்போதுதான் குட்டிசாத்தான் குட்டிக்கரணம் போட்டுக்கிட்டே நடக்கறாப்டி ஒருத்தன் வந்தான். 'என்னா சீனியருக்கெல்லாம் விஸ்(ஆமா அவனுக்கு சார்ட் நேம் புகழ் சுப்பி மாதிரி ஷா சொல்ல வராது) பண்ணமாட்டியா'ன்னான். ஓவ், திஸ் இஸ் ரேகிங், யூ மை சீனியர், அப்டிங்கற பாச உணர்ச்சியோட, வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியை மண்டைல ஏத்திக்கிட்டிருக்கும்போதே, அடுத்த கேள்வியக் கேட்டான். வாட் இஸ் யுவர் நேம்னு, சொன்னா, அதுக்கு அடுத்து அவன் சொன்னதுதான், அவனோட சொட்டத் தலைய இன்னிவரைக்கும் மத்த இத்துப்போன சப்பைங்களிடம் இருந்து மறக்காம இருக்க வெக்குது. அது என்னன்னா, 'ஏன் உங்க வீட்ல காயத்திரி, நித்யா, பிரியான்னெல்லாம்(அப்பவும் இவன் யோசனை இம்புட்டுதான்) வெக்கலைங்கறான்'. ஆமாம்டாப்பா, மொட்ட புதன்ல, ஒரு குட்ட சொத்தப் பல்லன் இப்டி கேள்வி கேப்பான்னு கணிச்சு பேர் வெக்கனுமா, பாவிகளான்னு குமுறிட்டு இருக்கும்போதே தெனாவெட்டா தன் பேரை சொல்றான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................என் பேரோட ஆண்பால் அவன் பேர்.


இதுக்கப்புறம் மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 'பொருளேய்,தொப்பி, சட' இப்டின்னு பற்பல உன்னதப் பெயர்கள வெச்சுக் கூப்டதால மனக்குஷ்டம்(பின்ன கொழுப்பெடுத்துக் கவலைப்பட்டா, அது குஷ்டம்தான) கம்மியாகியது. ஆனாலும் அப்பப்போ கடுப்பாகி வீட்ல கத்துனா, தோ பாரு தலைவருக்குப் புடிச்ச பேரு. அவங்க குடும்பத்துல முக்காவாசிப் பொண்ணுங்களுக்கு இந்தப் பேருதான் இருக்கும் பாருன்னு சமாதானம் வேற. தோடா, அவுங்கள்ல முக்காவாசிப் பேர் அரசியல்ல குதிக்கச் சொல்லோதான், தாத்தா வெச்ச பேரை யூஸ் பண்ணுவாங்கன்னு சாதா தொண்டருங்களுக்கே தெரியும்போது, எனக்கு கடுக்கா கொடுக்க முடியுமா.

இதெல்லாத்தையும் விட எனக்குப் பெரிய அதிசயம்னா, எங்களோட செட்டு சேரவேண்டிய நாகரத்தினங்களும், வள்ளிகளும், ராணிகளும் ,ரூபசந்திராக்களும் கூட சேம் சைட் கோல் அடித்ததுதான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........அதால, எல்கேஜியிலேயே எக்ஸ்ட்ரா கேஜியுடன் திரிந்த பிங்கியிடம் இருந்து ஓடினேன். பிப்டி பிளஸ்சான பிடி மாஸ்டரை பிப்த் ஸ்டாண்டர்டிலேயே பக்பக் பண்ண ஸ்வேதாவிடம் இருந்து ஓடினேன். கடலை, திவ்வியமான பொழப்பு. ஆனால் அதனை கல்லூரியிலாவது நிம்மதியாக வறுக்க விட்டார்களா இந்த அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும்? இப்படி ஓட்டியவர்களிடமிருந்தெல்லாம் ஓடினேன் ஓடினேன், பைனல் இயர் வரை ஓடினேன். அன்று பிங்கிக்களும் ஸ்வேதாக்களும் அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும் ஓட்டியபோது அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், கடலையில் கட்டுடைப்பு செய்திருக்கவேண்டும், இப்பொழுது அட்வைஸ் பண்ணி பின்னூட்டம் இட வருவோர், அப்படிச் செய்தார்களா, சப்போட்டா வித்தார்களா இப்பொழுது காறித் துப்ப வருவோர்?
ஒருவழியா, பொங்குற பால்ல கூவம் தண்ணிய ஊத்துனாப்டி, ஆருமே கண்டுக்காததால கேவலமாகி தானா அடங்கிட்டேன்.

அப்பாலைக்குக் கல்யாணமாகி இங்க வந்தப்புறம் பாத்தா, என் பேர் சேர்ந்தாப்டி சகஜமானப் பெயர் இல்லைன்னாலும், பாதி பாதியா நெறயப் பேருக்கு இந்த நாமகரணம் உண்டுன்னும், நான் ஏங்கின பலரோட பெயர்கள் இங்கு நார்நாராக நாராசமாக கிழிக்கப் படுவதை கேட்கும்போதும், உன் பேரு உன் மொழியில்லயான்னு நக்கலடிப்பால் பேஜாரானோரைக் காணும்போதும், என் பெயர் நல்ல தமிழ் பெயர் என குத்துவிளக்காக நாடகம் நடிக்கும்போதும், சும்மா சித்தர் கணக்கா ஒரு தத்துவம் தோணிச்சி. அது என்னன்னா, 'பேரை வெச்சு பேரிக்கா வித்தவனும் இல்லை, உளுந்தை ஊறவெச்சு ஊறுகாப் போட்டவனும் இல்லை'ங்கறப் பேருண்மை புலப்பட்டுச்சி.

டிஸ்கி 2: அடக் கொரங்கு இது ஏன் உனக்கு இங்க புர்லன்னு கேக்குறவங்களுக்கு என் சூளுரை என்னன்னா, நான் மறத்தமிழ் மாது. அதால தொரைங்க டிக்ளேர் பண்ணினாத்தான் ஒத்துப்பேன்.

30 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறத்தமிழ் மாதே... வாழ்க...:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உன்கிட்ட ஹலோ ஹல்லோ ஹ்ல்லோல்லோ எல்லாம் சொன்ன என்னிடம் இந்த தெய்வக்கொயந்த விவரவத்தை சொல்லாததை கண்டிக்கிறேன்..

KarthigaVasudevan said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
மறத்தமிழ் மாதே... வாழ்க...:)))

:):):)

மோகன் கந்தசாமி said...

ஹலோ ராப், அண்ணன் சில்ப்பா குமார் கலக்கிய சங்கத்தில் நீங்க என்ன பண்றீங்க? :-)))))
இருந்தாலும் வாழ்த்துக்கள்!!

(அப்படி என்னத்த கலக்கினார்ன்னு கேட்கப்படாது! - http://www.vvsangam.com/2008/12/blog-post_03.html

☀நான் ஆதவன்☀ said...

இனிமே உங்ககிட்ட ஹலோ சொல்லுவேன்றீங்க....

☀நான் ஆதவன்☀ said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...
உன்கிட்ட ஹலோ ஹல்லோ ஹ்ல்லோல்லோ எல்லாம் சொன்ன என்னிடம் இந்த தெய்வக்கொயந்த விவரவத்தை சொல்லாததை கண்டிக்கிறேன்..//

சந்தோஷத்தை எப்படி வெளிகாட்டுறாங்க பாருங்க..

☀நான் ஆதவன்☀ said...

//அடங்கொன்னியா, மொத்தப் பரம்பரைக்கும் சேர்த்து ஒத்தப் பேரையே குத்தகைக்கு எடுத்து கித்தாய்ப்பா வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்க //

:))) சும்மாவா விட்டீங்க அவன்கள

☀நான் ஆதவன்☀ said...

//எங்க வகையறா பேருடயோரை அந்தப் படத்துல டோட்டல் டேமேஜாக்கிட்டார்.//

இனி மின்னலேல அந்த காமெடி பார்க்கும் போதெல்லாம் இன்னும் சிரிப்பு வரும்....

நினைச்சாலே சிரிப்பு வருது ராப்..

சந்தனமுல்லை said...

//நான் மறத்தமிழ் மாது. அதால தொரைங்க டிக்ளேர் பண்ணினாத்தான் ஒத்துப்பேன்.//

அவ்வ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

//அடங்கொன்னியா, மொத்தப் பரம்பரைக்கும் சேர்த்து ஒத்தப் பேரையே குத்தகைக்கு எடுத்து கித்தாய்ப்பா வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டிருக்க உங்களுக்கு இதெல்லாம் ஓவருய்யான்னு//

:-))))))))

Sridhar V said...

//ஆமா அவனுக்கு சார்ட் நேம் புகழ் சுப்பி மாதிரி ஷா சொல்ல வராது//

அட... டைமிங்கா அடிக்கறீங்க பாருங்க... செம கலக்கல் :))

உங்க பேரை கண்டுபிடிக்க நான் இனிமே மின்னலை படத்தை ஒன்ஸ்மோர் பாக்கனும். இதுக்கு பேரை நேரடியா எழுதியே இருக்கலாம் :))

ஆயில்யன் said...

அட கெரகமே, உன்கிட்ட ஹலோன்னு சொன்னவங்களுக்குக் கூட இதச் சொல்லி சாவடிப்பியே,

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறத்தமிழ் மாதே... வாழ்க...:)))//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!1

இராம்/Raam said...

ய்க்கோவ்,

கலக்கல்... :)

G3 said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறத்தமிழ் மாதே... வாழ்க...:)))//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இத்தனை தெளிவா உன் பேரை நீ மூணாவது வரியில் சொன்னாலும் ஸ்ரீதர் பேரை கண்டுபிடிக்க மின்னல் பார்க்கப்போறாராமே.. என்னப்பா இது.. உன் பதிவில் ஒரு மீனிங்க் கண்டுபிடிக்கவே இவருக்கு இத்தனை நேரமாகுது :(

மணிகண்டன் said...

உங்க பேரு ஐஸ்வர்யாவா ? அந்த பையன் பேரு ஐஷ்வர்யன் தான !

நாகை சிவா said...

:) உங்க மனக்குஷ்டத்தை படித்தால் எங்களுக்கே குஷ்டம் வந்த மாதிரி இருக்கு!

கலக்கல் :))

வால்பையன் said...

எல்லாம் சரி,

முனியம்மாங்குற உங்க பேரு ஏன் உங்களுக்கு பிடிக்கல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))

Beski said...

//இத்தனை தெளிவா உன் பேரை நீ மூணாவது வரியில் சொன்னாலும் //

ஓ... இதுக்குப் பேருதான் தெளிவா சொல்லுறதா?

Anonymous said...

//எனக்கு ஏன் பிளஸ்சிங் மிஸ்னு //

இது தமிழ்ப்பேர் இல்லையே.

ராப்பு , முத்தக்கா ஏன் உங்கள மடத்தமிழ்மாதுன்னு திட்டறாங்க :)

Anonymous said...

http://kaipillai4u.blogspot.com/2009/07/blog-post_2081.html

சங்கத்துசிங்கங்களே, இது போலியான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களே

☀நான் ஆதவன்☀ said...

//பிளஸ்சிங் மிஸ்//

ஆசிர்வாத(ம்) ஆசிரியை????

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் மறத்தமிழ் மாது. அதால தொரைங்க டிக்ளேர் பண்ணினாத்தான் ஒத்துப்பேன்//

தசாவதாரத்துஇல் வருவாரே அந்தத் தொரை போதுமா? அவரு சொன்னா ஒத்துப்பீங்களா? :))

//ஸ்ரீதர் பேரை கண்டுபிடிக்க மின்னல் பார்க்கப்போறாராமே.. என்னப்பா இது.. உன் பதிவில் ஒரு மீனிங்க் கண்டுபிடிக்கவே இவருக்கு இத்தனை நேரமாகுது :(//

முத்தக்கா, அதான்-க்கா பட்டர்ஃபிளை எஃபெக்ட்டு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சின்ன அம்மிணி said...
http://kaipillai4u.blogspot.com/2009/07/blog-post_2081.html

சங்கத்துசிங்கங்களே, இது போலியான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களே//

இந்த உ.குத்து, வெ.குத்து தானே வேணாங்கறது...?
இது உண்மையான்னு பாத்துச் சொல்லுங்க-ன்னு தான் சொல்வாங்க! நீங்க இது போலியா-ன்னு பாத்துச் சொல்லச் சொல்றீங்க! :)

சந்தேகம் என்ன? அது போலி சங்கமே தான்! மக்களவைத் தேர்தலில் ஒரு சீட்டு கூட வாங்காம புட்டுகிட்ட சங்கம் தான்!
ராப்-அக்கா கலக்கிக்கிட்டு இருக்கும் இந்தச் சங்கமே ஒரிஜினல் அக்மார்க் சங்கம் என்பதை ராயலார் சார்பாக தெரிவிச்சிக்கறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் அதனை கல்லூரியிலாவது நிம்மதியாக வறுக்க விட்டார்களா இந்த அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும்? இப்படி ஓட்டியவர்களிடமிருந்தெல்லாம் ஓடினேன் ஓடினேன், பைனல் இயர் வரை ஓடினேன். அன்று பிங்கிக்களும் ஸ்வேதாக்களும் அஷ்மிதாக்களும் அகான்ஷாக்களும் ஓட்டியபோது அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், கடலையில் கட்டுடைப்பு செய்திருக்கவேண்டும், இப்பொழுது அட்வைஸ் பண்ணி பின்னூட்டம் இட வருவோர், அப்படிச் செய்தார்களா, சப்போட்டா வித்தார்களா இப்பொழுது காறித் துப்ப வருவோர்?//

:))))
கலைஞர் புது படம் நீயின்றி நானில்லை-க்கு நீங்க தான் வசனமா-க்கா?

//ஒருவழியா, பொங்குற பால்ல கூவம் தண்ணிய ஊத்துனாப்டி, ஆருமே கண்டுக்காததால கேவலமாகி தானா அடங்கிட்டேன்//

தானா அடங்கட்டீங்களா? அடங்கின மாதிரி தெரியலையே!
அடங்கவும் மாட்டீங்க! உங்களால அடங்கவும் முடியாது! :)

தமிழன்-கறுப்பி... said...

hooooooooooooooooooo

hahahahahha..

:))

ஜோசப் பால்ராஜ் said...

ஆமா உங்க பேரு என்னா?

CA Venkatesh Krishnan said...

நீங்க ஏதோ ஒரு செல்வின்னு மட்டும் புரிய்து. ப்ளெஸ்சிங் (வாழ்த்து)

வாழ்த்துச்செல்வி?!

இதவிட ராப்தான் நல்லாயிருக்கு. பார்ட் டூவுக்காக வெயிட்டீஸ்