வெற்றிகரமா ஐநூறு பதிவு போட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நம் சங்கத்து மக்களுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது, கவுண்டரை ஏன் சங்கத்துக்கு கூப்பிட்டு வர கூடாதுனு ஒரு யோசனை. என்ன இருந்தாலும் ஒரு காமெடியன் மனசு இன்னொரு காமெடியனுக்கு தானே தெரியும்னு எல்லாரும் முடிவு பண்ணி, கவுண்டரை டெவில் ஷோ நடத்த சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். பொதுவா டெவில் ஷோக்கு மக்கள் தான் கவுண்டரை தேடி போவாங்க, இது சங்க விழாங்கறதால கவுண்டரை நாங்க சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். இப்ப டெவில் ஷோக்கு போகலாம்.
க: "வழக்கமா தனியா ஒருத்தனை புடிச்சி கும்மிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு கூட்டத்தையே கும்மனும்னு நம்மல கூப்பிட்டு வந்திருக்கானூங்க பசங்க. பொதுவாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே. சரி, இப்ப நிகழ்ச்சிக்கு போவோம். சரி இங்க கூட்டமா நிக்கறானுங்க. ஒவ்வொருத்தனையா கூப்பிடுவோம். டேய் அரை டவுசர் மண்டையா. நீ முதல்ல வா. வந்து உன்னைப் பத்தி சொல்லு"
இளா : "நான் தான் விவசாயி"
க: "எங்க இங்க அப்படியே உழவு ஓட்டிக் காட்டுப் பார்ப்போம்"
இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"
க: "டேய் விவா மண்டையா, கடலைப் போடறவனெல்லாம் விவசாயினு உனக்கு எவன்டா சொல்லக்கொடுத்தது. முதல்ல உன் பேரை மாத்துடா!"
இளா: Done.
க: "டேய் டன் மண்டையா. எதுக்கெடுத்தாலும் டன், கூல், ஃபைன் அப்படினு ஒரு வார்த்தைல பதில் சொல்றதுக்கு நீ என்ன மணிரத்னம் படத்துலயா மேன் நடிக்கிற. இனிமே எதை பேசினாலும் நாலஞ்சி வார்த்தை சேர்த்து வாக்கியமா சொல்ற. சரியா?"
இளா : ஓகே.
க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு. சரி, அடுத்த அந்த நாடக நடிகர் காஸ்டியூம்ல இருக்கற திருட்டு முழி முழிச்சிட்டு இருக்கற ஆள் வா. சரி உன்னை பத்தி சொல்லு"
சிபி : "நான் நாமக்கல் சிபி. நான் தான் இந்த சங்கத்து தளபதி"
க: "ஆமாம். இது பெரிய சோழ பேரரசு. இதுக்கு இவர் தளபதி. டேய் மாநக்கல் மண்டையா, இந்த டப்பா வீட்டுக்கு பேரு ஒரு சங்கம். இதுக்கு நீ ஒரு தளபதி. எங்க ஒரு கத்தி சண்டை போட்டுக் காட்டு"
சிபி: "டேய் யாருடா அது எங்க தலயைப் பத்தி தப்பா பேசினது. தைரியமிருந்தா அவர் மேல கையை வெச்சி பாருடா"
க: "டேய் தளபதி மண்டையா. என்ன மேன் பண்ண?"
சிபி: "நீங்க தானே ”கத்தி” சண்டை போட சொன்னீங்க. அதான்"
க: "ஜோக்கா'ம்டா. கஷ்ட காலம்டா சாமி. உன்னையெல்லாம் வெச்சி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ. சரி, தி நெக்ஸ்ட்"
தேவ்:"அம் தேவ். நான் தான் இந்த சங்கத்து போர் வாள்"
க: "என்னது? திரும்ப சொல்லு"
தேவ்: "நான் தான் இந்த சங்கத்துப் போர் வாள்"
க: "டேய் சிபி மண்டையா. இங்க வா"
சிபி: "சொல்லுங்க கவுண்ட்ஸ்"
க: "சரி, இந்த போர் வாளை தூக்கி ஒரு சொழட்டு சொழட்டி காட்டு பார்ப்போம்"
தேவ், சிபி இருவரும் எஸ்கேப்.
க: "நீ யார்டா என்னை பார்த்து மொறைச்சிக்கிட்டே இருக்க. உன் பேரு என்ன?"
புலி : "என் பேர் நாகை சிவா. ஆனா மக்கள் எல்லாம் என்னை புலினு தான் சொல்லுவாங்க"
க: "கொட்டை எடுத்ததா இல்லை கொட்டை எடுக்காததா?"
புலி : "ஹலோ நான் சொல்றது கடிக்கிற புலி."
க: "எங்க, அந்த சைட்ல நிக்கறானே அவனை கொஞ்சம் கடிச்சிக் காட்டு"
சிபி: "புலி, கோபத்துல என்னைக் கடிச்சிடாத. வேணும்னா நம்ம தலயை ஒரு நாலு கடி கடி. சதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா வரும்"
க: "எதுக்கெடுத்தாலும் அவன் தல தலனு சொல்லிட்டு இருக்கான். யார்டா அது தல"
சிபி: "இதோ இவர் தான் எங்க தல கைப்புள்ள."
கவுண்டர் மேலும் கீழும் பார்க்கிறார்.
க: "இது கைப்புள்ளையா மேன். இது கைப்புள்ளையா? எங்க கொஞ்சம் இதை இடுப்புல தூக்கி வெச்சிட்டு ஒரு வாக் போயி் காட்டு"
KRS: "கவுண்டமணி ஐயா"
க: "Who is the disturbance... ஓ நீயா? சொல்லுடாப் பையா?"
KRS: "கைப்புள்ள என்பது வேறு கைப்பிள்ளை என்பது வேறு, இதை தான் ஏழாம் நூற்றாண்டில் காக்கைப்பாடினியார் கைப்பிள்ளை காவியம் என்று பாடியுள்ளார். அதை இந்த அப்பாவி சிறுவனாகிய நான் சமீபத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்துள்ளேன்"
க: "ஆறடி உயரம் இருந்துட்டு நீ அப்பாவி சிறுவனா மேன்? கார்த்திக் ஸ்டைல்ல கூலிங் கிளாஸ் போட்டு கேப் போட்டுக்கிட்டா உன் வயசு தெரியாதா? நீயெல்லாம் ஜனலை திற. நாத்தம் வரட்டும்னு குமுதத்துலயோ, குங்கமத்துலயோ எழுத வேண்டிய ஆளு. இங்க இருந்து ஓடிப்போயிடு. போ மேன் போ. அவனை சொன்னா நீ என்ன மேன் மொறைக்கிற. நீ வா. உன்னைப் பத்தி சொல்லு"
வெட்டி : "என் பேரு வெட்டிப்பயல். நான் தான் சங்கத்தோட இளைய தளபதி"
க: அது என்னடா பேரு வெட்டிப்பயல், சட்டிப்பயல்னு. உங்களுக்கு எல்லாம் நல்ல பேரே கிடைக்கலயா? அப்பறம் அது என்ன இளைய தளபதி? எங்க அந்த காமெடிக்காரன் விஜய் மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடிக்காட்டு பார்க்கலாம்.
வெட்டி: ?!
க: "இனிமே இந்த மாதிரி வீணாப் போன பேர் எல்லாம் வெச்சிட்டு திரியாத. சரி இந்த கலவரத்துலயும் அங்க ஒருத்தன் ஜன்னல் பக்கத்துல் நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கானே. அவன் யாரு"
சிபி: "அவர் தான் ஜொள்ளுப்பாண்டி"
க: "சரி சரி. இந்த பேர்ல இருந்தே தெரியுது அவன் அங்க இருந்து என்ன பண்ணிட்டு இருக்கானு. ஆனா, இங்க இருந்து பார்த்தா அந்த இட்லிக்கடை ஆயாத்தான் தெரியுது. அதைக் கூடாவாடா விட்டு வைக்க மாட்டீங்க."
சிபி: "அவர் எதுக்கும் பார்ஷியாலிட்டி பார்க்கறதில்லை"
க: "ஆமாம், அங்க ஒருத்தன் பயங்கரமா வேலை செஞ்சிட்டு இருக்கானே. அவன் யாரு?"
சிபி: "அவன் தான் ராயல் ராம். சேட்டிங்ல கடலை போட்டுட்டு இருக்கான்"
க: "விளாங்கனாப்போல தான். ஆமாம், ரொம்ப நேரமா, நானும் யூத்து தான் . நானும் யூத்து தான். நானும் யூத்து தான்னு சொல்லிட்டு இருக்காரே இந்த பெரியவரு. இவர் யாரு"
அபி.அப்பா: "நான் தான் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர்"
க: "டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா. வேணும்னா அட்லாஸ் வாலிபருக்கு பதில் வயோதிக வாலிபர்னு பேர் வைங்க. இல்லை உங்க சங்கத்துக்கு சிவராஜ் சித்த வைத்திய சாலைனு பேர் வைங்க. சரியா இருக்கும். சரி, எனி படி ஐ மிஸ்"
சிபி: "எங்க சங்கத்து யூத்து கப்பி ஊருக்கு போயிருக்காரு. அவர் மட்டும் மிஸ்ஸிங்"
க: "சரி, சரி எங்க போயிட போறான். அவனுக்குனு ஒரு நாள் டெவில் ஷோ தனியா போட்டிடுவோம்"
தல: "அதெல்லாம் முடியாது.. எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."
க: "டேய், முழுசா வேகாத ஆப்பாயில் தல மண்டையா, இவ்வளோ நேரமா ஞானக்குழந்த, கவிஞ்ஞர், சொரிஞ்சர்'னு நக்கல்விட்டுடு என்கிட்டே பெருமைப்படுத்தனுமின்னு வேற கேட்கிறியா?"
கப்பி: "அவ்வ்வ்வ்..... தல'க்கு எம்மேலே அம்புட்டு பாசம்"
க: "ஏன்டா நீ கெட்டகேட்டுக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம், ஆர்குட்'லே அம்பது கம்யூனிட்டியா? ஒனக்கே ஓவரா தெரியல"
சிபி: "கப்பி வாழ்க!! நமிதா வாழ்க!!!"
தல: "அதெல்லாம் முடியாது.. எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."
க: "டேய், முழுசா வேகாத ஆப்பாயில் தல மண்டையா, இவ்வளோ நேரமா ஞானக்குழந்த, கவிஞ்ஞர், சொரிஞ்சர்'னு நக்கல்விட்டுடு என்கிட்டே பெருமைப்படுத்தனுமின்னு வேற கேட்கிறியா?"
கப்பி: "அவ்வ்வ்வ்..... தல'க்கு எம்மேலே அம்புட்டு பாசம்"
க: "ஏன்டா நீ கெட்டகேட்டுக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம், ஆர்குட்'லே அம்பது கம்யூனிட்டியா? ஒனக்கே ஓவரா தெரியல"
சிபி: "கப்பி வாழ்க!! நமிதா வாழ்க!!!"
க: "இந்த வெட்டி கூவல் வேறயா? ஏண்டா ஒங்களுக்கெல்லாம் மனசாட்சியா இல்லையா? அந்த பீப்பா'வுக்கு இந்த பாப்பா மூஞ்சி மண்டயன் சரியான ஆளுதான்!! "
சிபி: "என்னோட அக்கவுண்ட்'க்கு அமெண்ட் போட்டிங்கன்னா, ஒங்களுக்கு ஸ்பெசலா கூவுவோம்... "
க: "இதெல்லாம் ஒரு பொழப்பாடா? நல்ல சங்கம்டா சாமிங்களா... சரி சரி, வந்ததுக்கு கடைசியா, இதே மாதிரி எல்லாரையும் சிரிக்க வைச்சிட்டு இருங்க. டாட்டா. பை பை."
54 comments:
கலக்கல் தல
:)
கலக்கல்!
500 வது பதிவுக்கு தல,சங்கத்து சிங்கங்கள் மற்றும் இத்தனை நாளாகத் தொடர்ந்து நல்லாதரவு நல்கி வரும் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
கங்க்ராட்ஸ் சிங்கஸ்!
வாசகர்கள் அனைவருக்கும் சங்கத்து தல, மற்றும் சக சிங்கங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
500க்கேத்த கலக்கல் பதிவு
சூப்பரூ :))))))
//டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா///
இதெல்லாம் கொஞ்சம் ஓவரூண்ணு ஃபீல் பண்ணி மாயவரம் மாஃபியா குரூப்லேர்ந்து ஒரு சவுண்டு வுட்டுக்கிறேன்ப்பா :))))))
:)))))))))))))
500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
//அந்த பீப்பா'வுக்கு இந்த பாப்பா மூஞ்சி மண்டயன் சரியான ஆளுதான்!! "//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
500 பதிவுகளா!! வாழ்த்துகள்!
இனி அடுத்து ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீங்களே மறுபடியும் இச்சங்கத்துக்கு சிங்கங்களா பொறக்கனும்!!! :)
சிங்கத்தையெல்லாம் அசிங்கப்படுத்திட்டீங்களே
அட்டகாசம் வெட்டி
நீங்க கவுண்டருக்கு வசனம் எழுதப் போனா வடிவேலும்,விவேக்கும் அவுட்டு
சிங்கத்தையெல்லாம் அசிங்கப்படுத்திட்டீங்களே
அட்டகாசம் வெட்டி
நீங்க கவுண்டருக்கு வசனம் எழுதப் போனா வடிவேலும்,விவேக்கும் அவுட்டு
எங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ஆதரவு தந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தந்துதவ வேண்டுகிறோம். நன்றி! நன்றி! நன்றி!
/எங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ஆதரவு தந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தந்துதவ வேண்டுகிறோம். நன்றி! நன்றி! நன்றி!///
வழிமொழிகிறேன்.... :))
500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)
500 Cheers :)))
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
சங்கத்து சிங்கங்களுக்கு என் வாழ்த்துகள் :)
// Thamizhmaangani said...
500 பதிவுகளா!! வாழ்த்துகள்!
இனி அடுத்து ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீங்களே மறுபடியும் இச்சங்கத்துக்கு சிங்கங்களா பொறக்கனும்!!! :)//
அவ்வ்வ்... ரொம்ப நன்றிங்க...
//முரளிகண்ணன் said...
சிங்கத்தையெல்லாம் அசிங்கப்படுத்திட்டீங்களே//
இது கவுண்டர் பண்ண டெர்ரர் :)
சங்கத்துக்கு விருந்தாளியா வந்ததால அவர் தப்பிச்சாரு :)
//
அட்டகாசம் வெட்டி
நீங்க கவுண்டருக்கு வசனம் எழுதப் போனா வடிவேலும்,விவேக்கும் அவுட்டு
Mon Mar 16, 02:03:00 PM IST//
நன்றி நன்றி!!! தன்யனானேன் :)
சங்கத்துக்கும் சிங்க்ங்களுக்கும் வாழ்த்துகள்!! :-)
கலக்கல்!
500 வது பதிவுக்கு தல,சங்கத்து சிங்கங்கள் மற்றும் இத்தனை நாளாகத் தொடர்ந்து நல்லாதரவு நல்கி வரும் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
கங்க்ராட்ஸ் சிங்கஸ்!
இப்படிக்கு யூத்
//
அட்டகாசம் வெட்டி
நீங்க கவுண்டருக்கு வசனம் எழுதப் போனா வடிவேலும்,விவேக்கும் அவுட்டு//
முழுக்க முழுக்க 300% உடன்படுகிறேன். கலக்கல் வெட்டி. வாழ்க வளமுடன்!
50,000வது பதிவுக்கு வாழ்த்துக்கள், ரெண்டு ஜீரோ அதிகம் போடலை, உங்க ஒவ்வொரு பதிவும் நூறு பதிவுகளுக்கு சமம்.. (சிபி, பொட்டி வந்துரணும், எம்ப்டி பொட்டி இல்லை, பணத்தோட)...
இந்த மைல்ஸ்டோனுக்கான கலக்கல் பதிவு...
ஒரு வருத்தம், இப்போவெல்லாம் பதிவு அதிகமா வரதில்லை, இந்த மூணு மாசத்தில மொத்தமாவே 20 பதிவுதான் வந்திருக்கு.. ரிசஸ்சன் டைம்ல எங்களை எல்லாம் கொஞ்சம் அதிகமாவே சிரிக்க வெக்கலாமே...(ங்கொய்யால, ரிசஸ்சன் எங்களுக்குந்தாண்டா.. அப்படின்றீங்களா?)
//உங்க சங்கத்துக்கு சிவராஜ் சித்த வைத்திய சாலைனு பேர் வைங்க. சரியா இருக்கும்//
சேச்சே! சிவராஜா?
மோகன்-ராஜ் சித்த வைத்திய சாலை-ன்னு வேணும்னா பேரு வைக்கறோம்! என்ன கைப்ஸ் சொல்றீங்க? :))
//இந்த டப்பா வீட்டுக்கு பேரு ஒரு சங்கம். இதுக்கு நீ ஒரு தளபதி. எங்க ஒரு கத்தி சண்டை போட்டுக் காட்டு"//
தள...
ஓடியாங்க! பின்னூட்டம் ஃபுல்லா நீங்க தான் உரக்க, கத்தீ சண்டை போடறீங்க!
//இதை தான் ஏழாம் நூற்றாண்டில் காக்கைப்பாடினியார் கைப்பிள்ளை காவியம் என்று பாடியுள்ளார்//
ஏழாம் நூற்றாண்டுல காக்கை மட்டும் தான் இருந்துச்சி! பாடினி எல்லாம் யாரும் இல்ல! உங்க கப்சாவுக்கு ஒரு அளவில்லையா? :)
//கார்த்திக் ஸ்டைல்ல கூலிங் கிளாஸ் போட்டு கேப் போட்டுக்கிட்டா உன் வயசு தெரியாதா?//
"ஓ நீயா? சொல்லுடாப் பையா?"-ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நீங்களே "பையா"-ன்னு தான் சொன்னீங்க கவுண்டரே! :))
//நீயெல்லாம் ஜனலை திற. நாத்தம் வரட்டும்னு குமுதத்துலயோ, குங்கமத்துலயோ எழுத வேண்டிய ஆளு//
ஜன்னலைத் திற! ஜலஜா வருவா! -ன்னு சரியாச் சொல்லுங்க கவுண்டரே! :)
//என் பேரு வெட்டிப்பயல். நான் தான் சங்கத்தோட இளைய தளபதி//
டேய்! அது இளைய தலவலி டா! இளைய தளபதி இல்ல!
ஒழுங்கா நாலு வார்த்தை தெலுங்குல கூட பேசத் தெரியலை! நீயெல்லாம் எப்படிடா தமிழ்ல பதிவு போடற? :)
//க: "ஆமாம், அங்க ஒருத்தன் பயங்கரமா வேலை செஞ்சிட்டு இருக்கானே. அவன் யாரு?"
சிபி: "அவன் தான் ராயல் ராம். சேட்டிங்ல கடலை போட்டுட்டு இருக்கான்"//
க: "அடச்சீ! போடறது கடலை! அப்பறம் என்ன ராயல், கோயல்-ன்னுகிட்டு?
நியாயமாப் பாத்தா, கடலை சாகுபடி பண்ற இவன் தானே விவசாயி! எதுக்குடா இவனை விவசாயின்னு சொல்லாம் ராயல்-ன்னு சொல்றீங்க?"
சிபி: "அப்படியெல்லாம் ராயலை மட்டும் சொல்லாதீங்க! அவர் நிசமாலுமே ராயலு"
க: "டேய்! எந்த ஊருக்குடா அவன் ராயல்?"
சிபி: "ஐயோ! கவுண்டரே! ராவா அடிக்கிறதால அவன் ரா-யல்! பெப்சி கூட ஊத்திக்க மாட்டான்! பெப்சி உமா கிட்ட கூட பேசமாட்டான்-ன்னா பாருங்களேன்!"
க: "அடச்சீ...சாகுபடி, தண்ணி, வெவசாயி...என்னய்யா பொழைப்பு இந்தச் சங்கத்துல...?" :)
500 க்கு வாழ்த்து(க்)கள்~!
இந்த பதிவுல ஒரு வரலாற்றுத் தவறு இருக்கு.. எங்க தள தூக்கத்தில் கூட நயன்தாரா வாழ்க அப்படித் தான் சொல்வார்.. நமீதாவாம்ல்.. நமீதா..
//சிபி: "எங்க சங்கத்து யூத்து கப்பி ஊருக்கு போயிருக்காரு. அவர் மட்டும் மிஸ்ஸிங்"//
க: யார் கூட கிஸ்ஸிங்? :)
//எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."//
கைப்புள்ள: "தள, காஞ்சித் தலைவன் பட்டத்தை வுட்டுட்டீங்களே"
க: "என்னாது? காஞ்சித் தலைவனா? அவரு அப்படியே பேரறிஞர் அண்ணா, இவரு கர்ம வீரர் காமராஜரு! ஒருத்தொருக்கு ஒருத்தர் பட்டம் கொடுத்துக்கறானுங்க!"
தள: "ஐய்யோ! நெசமாலுமே கப்பி, KT கப்பி தான் கவுண்டரே"
க: "KT-ஐ தமிழ்ல சொல்லுடா! கேடி கப்பி-ன்னு சொல்லு!
அது காஞ்சித் தலைவன் இல்லடா! காஞ்சத் தலையன்! தலைக்கு எண்ணெய் வைக்காம காஞ்சத் தலையன்!" :)))
//க: "சரி, இந்த போர் வாளை தூக்கி ஒரு சொழட்டு சொழட்டி காட்டு பார்ப்போம்//
தேவ்: "யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள் கவுண்டர் ஐயா!
நான் இது வரை வாளையும் பிடிச்சதில்ல! யார் காலையும் பிடிச்சதில்லை! ஐ வான்ட் நெஞ்சுக்கு நீதி"
க: "ஆமா! நெஞ்சுக்கு நீதி, வயித்துக்கு பேதி...வேற என்னடா வேணும் ஒனக்கு?"
தேவ்: "பதிவுலகமும் அதைச் சார்ந்த ஆதி பதிவர்களின் வரலாறு புவியியல் புள்ளியியல் எதுவும் அறியாமல் காலம் மடியில் கொடுத்தக் கணிணியை விரலிடுக்கின் வித்தைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சீமான்களும் கோமான்களும் கனவான்களும் கவுண்டர்களும் என்னைக் கேலி செய்கிறார்களே! உடன் பிறப்பே"
க: "அடப் பாவி! நீ மட்டும் எப்படிடா இப்பிடியெல்லாம் பேசுற? நீ ஒருத்தன் போதும்டா இந்தச் சங்கத்துக்கு" :))
Done,
well done,
Okay,
Congrats
Bye
good!
//இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"//
க: "ஓ...அப்போ அது மக்கள் உங்களுக்குக் கொடுத்த பட்டம் இல்லீயா? நீங்களா வச்சிக்கிட்டது தானா? :))"
விவ்ஸ்: "யெஸ்...பட் ஐம் ஆல்சோ கால்ட் விவாஜி"
க: "டேய், என்னாது விவாஜியா? ஏதோ சிவாஜி கணக்கா சொல்லுற? சிவாஜி வாயில ஜிலேபி-ன்னு எப்படி போட்டாலும் சிவாஜி வருவார்டா! விவாஜி வாயில ஜிலேபி-ன்னு போட்டா, நீ வருவியாடா? ஈர வெங்காயம் கூட வராதுடா! அடங்குங்கடா" :)
க: "டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா.
:))))))))
இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"
Super
//ILA said...
Done,
well done,
Okay,
Congrats
Bye//
ஹிஹி!
க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு :))
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
வெண்பூ,
மிக விரைவில் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கிறோம்... :)
KRS,
தொறந்து கிடக்கிற கடையிலே தனி ஆவர்த்தனமா??? நல்லா ஆத்துங்க உங்க டீ'யே.... :))
தமிழ் பிரியன்,
அடுத்த வரியை படிச்சீங்களா???? நமீதா'ன்னதும் எல்லாமே மறந்து போச்சா இல்ல மறைஞ்சு போச்சா??? :))
ஐயா பச்சை அனானி,
என்னத்துக்கு இங்கன இந்த C&P வேலை????
//எங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ஆதரவு தந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தந்துதவ வேண்டுகிறோம். நன்றி! நன்றி! நன்றி!//
நன்னி நன்னி நன்னி..... :))))
//KRS,
தொறந்து கிடக்கிற கடையிலே தனி ஆவர்த்தனமா??? நல்லா ஆத்துங்க உங்க டீ'யே.... :))//
ராமேய்...
அபி அப்பாவுக்குத் தான் வெயிட்டிங்! 500-கும்மிக்கு வராம, 500-மில்லிக்கு போயிட்டாரோ? :)
\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//KRS,
தொறந்து கிடக்கிற கடையிலே தனி ஆவர்த்தனமா??? நல்லா ஆத்துங்க உங்க டீ'யே.... :))//
ராமேய்...
அபி அப்பாவுக்குத் தான் வெயிட்டிங்! 500-கும்மிக்கு வராம, 500-மில்லிக்கு போயிட்டாரோ? :)
\\
1000 அடிச்சாலும் அசராத அவிஅப்பாவுக்குஇன்னிக்குன்னு பார்த்து வேலை அதீகமாகிடுச்சு சிங்கங்களா! தோ வந்துட்டேன்! கும்மிக்கு நான் ரெடி! சரி ஒரு பந்தயம் இந்த பதிவுக்கு நான் 5000 கமெண்ட் வரும்ன்னு சொல்ரேன்! நீங்க?
என் தம்பி ஆயில்ஸ்! நீ நிருப்பிச்சிட்டடா என் தங்கமே தம்பி உடையான் படைக்கு அஞ்ச்சான்னு!!!
500க்கு சங்கத்தான்ஸ்க்கு வாழ்த்துக்கள்!
இது வரை தொடர்ந்து நல்லாதரவு வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் !
டெம்பிளேட் சூப்பர்... அதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் - சங்கத்தின் தொழில்நுட்ப குழுவிற்கு ( அது எல்லாம் வச்சு இருக்கோம்ல) ;0
500 வது பதிவு என்பது சின்ன விஷயம் இல்லை. அதுவும் தினமணியில் 2007 ஜூன் 18 தேதியில் அரை பக்கம் வந்த போது அப்போ நான் என் மகன் பிறந்த 1 நாள் ஆகியிருந்த நேரம். ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். நான் கூட அந்த பேப்பர் பார்க்கவில்லை. நம்ம சென்ஷியின் அம்மா நம்ம அம்மா தான் கையில் அந்த பேப்பர் வத்திருந்தாங்க. வாங்கி பார்த்தேன். ஆச்சர்யமான அதிர்ச்சி. நான் சொன்னேன் அம்மா அம்மா இதல்லாம் யார் தெரியுமா எனக்கும் சென்ஷிக்கும் ரொம்ப தெரிஞ்சவங்க" அப்படின்னு. பின்ன முத்து வந்த போதும் அதை முத்துலெஷ்மி ஆமாம்ன்னு சொல்ல அந்த ஹாஸ்பிட்டல் ர்ரூமே அப்ப சந்தோஷத்துல மிதந்துச்சு. அப்படி நாங்க எல்லாருமே சங்கம் அப்படின்னா கட்டுண்டு கிடக்கோம் என்பதை சொல்லிக்கிறோம்!
//என்ன இருந்தாலும் ஒரு காமெடியன் மனசு இன்னொரு காமெடியனுக்கு தானே தெரியும்னு எல்லாரும் முடிவு பண்ணி, //
எங்கள் வச்சு காமெடி பண்ணுவதுனு அவன் முடிவு பண்ணிட்டு எப்படி சமாளிக்குறான் பாருங்க ஜனங்களே...
நானும் சங்கத்தில் சேர்ந்த காலத்தில் இருந்து பாக்குறேன், இவன் லொள்ளு தாங்க முடியலங்க. எப்படியாச்சும் ரசிக்க வச்சுடுறான்.
வெட்டி கலக்கல், சூப்பர் போஸ்ட்
//இளா: Done.
க: "டேய் டன் மண்டையா. எதுக்கெடுத்தாலும் டன், கூல், ஃபைன் அப்படினு ஒரு வார்த்தைல பதில் சொல்றதுக்கு நீ என்ன மணிரத்னம் படத்துலயா மேன் நடிக்கிற. இனிமே எதை பேசினாலும் நாலஞ்சி வார்த்தை சேர்த்து வாக்கியமா சொல்ற. சரியா?"
இளா : ஓகே.
க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு//
// ILA said...
Done,
well done,
Okay,
Congrats
Bye//
ஜனங்களே நல்லா பாத்துக்கோங்க, இந்த பாவத்துக்கு எல்லாம் நாங்க ஆளாகவே மாட்டோம்.....
//ஜன்னலைத் திற! ஜலஜா வருவா! -ன்னு சரியாச் சொல்லுங்க கவுண்டரே! :)//
ஆக அப்படி ஒரு வரலாற்று காவியம் படைக்கும் எண்ணம் இருக்கு னு சொல்லுங்க கே.ஆர்.எஸ்....
சரோஜாவை மிஞ்சனும் அது தான் என் ஆசை :)
அபி அப்பா!
தேதி எல்லாம் சொல்லி அசுத்துறீங்களே (உடன்பிறப்பு ஆச்சே இது கூட இல்லாட்டி எப்படி ;) )
உங்களை போன்றவர்கள் ஆசி தான் எங்களுக்கு எப்பவும் வேண்டும் :)
நன்றிகள் பல :)
அட்ரா சக்கை !!! அட்ரா சக்கை !!! அட்ரா சக்கை !!! அட்ரா சக்கை !!!
நீங்கல்லாம் சங்கத்துல நல்லாவே கலாய்க்கரிங்க !!
பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்
அபி அப்பா said...
\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//KRS,
தொறந்து கிடக்கிற கடையிலே தனி ஆவர்த்தனமா??? நல்லா ஆத்துங்க உங்க டீ'யே.... :))//
ராமேய்...
அபி அப்பாவுக்குத் தான் வெயிட்டிங்! 500-கும்மிக்கு வராம, 500-மில்லிக்கு போயிட்டாரோ? :)
\\
1000 அடிச்சாலும் அசராத அவிஅப்பாவுக்குஇன்னிக்குன்னு பார்த்து வேலை அதீகமாகிடுச்சு சிங்கங்களா! தோ வந்துட்டேன்! கும்மிக்கு நான் ரெடி! சரி ஒரு பந்தயம் இந்த பதிவுக்கு நான் 5000 கமெண்ட் வரும்ன்னு சொல்ரேன்! நீங்க?//
ஹி ஹி ஹி
// அபி அப்பா said...
500 வது பதிவு என்பது சின்ன விஷயம் இல்லை. அதுவும் தினமணியில் 2007 ஜூன் 18 தேதியில் அரை பக்கம் வந்த போது அப்போ நான் என் மகன் பிறந்த 1 நாள் ஆகியிருந்த நேரம். ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். நான் கூட அந்த பேப்பர் பார்க்கவில்லை. நம்ம சென்ஷியின் அம்மா நம்ம அம்மா தான் கையில் அந்த பேப்பர் வத்திருந்தாங்க. வாங்கி பார்த்தேன். ஆச்சர்யமான அதிர்ச்சி. நான் சொன்னேன் அம்மா அம்மா இதல்லாம் யார் தெரியுமா எனக்கும் சென்ஷிக்கும் ரொம்ப தெரிஞ்சவங்க" அப்படின்னு. பின்ன முத்து வந்த போதும் அதை முத்துலெஷ்மி ஆமாம்ன்னு சொல்ல அந்த ஹாஸ்பிட்டல் ர்ரூமே அப்ப சந்தோஷத்துல மிதந்துச்சு. அப்படி நாங்க எல்லாருமே சங்கம் அப்படின்னா கட்டுண்டு கிடக்கோம் என்பதை சொல்லிக்கிறோம்!//
அண்ணே... எங்கள் கண்கள் பனிக்கிறது.. இதயம் இனித்தது.....
தேதிவாரியா சொல்லி எங்களை அநியாத்துக்கு Grass itching பண்ண வைச்சிட்டிங்களே.... :))
நன்றி! நன்றி!! நன்றி!!!
congrats!!!
:-))))))))))))))))
சங்கத்துக்கு வாழ்த்துக்கள்
சங்கம் இன்னும் ஒரு மாசத்துல்ல மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போவுது.. அதற்குள் 500 என்னும் இலக்கை அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷ்யம்..அதற்கு முக்கிய காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாசமுள்ள பதிவுலகத்திற்கும் சங்கத்தின் சிங்கங்கள் எலலாருமே நன்றி சொல்லிட்டு வர்றோம்... இந்த வெற்றி சிரிப்புக்கும் சந்தோசத்திற்கும் கிடைத்த வெற்றி.. தொடர்ந்து சிரிப்போம்..சந்தோசம் கொள்வோம்...சங்கத்தோடு இணைந்திருப்போம்...
Post a Comment