Wednesday, March 18, 2009

இரவல் சரக்கடிப்பதால் ஏற்படும் 11 சங்கடங்கள்1. முதல்ல சரக்கடிக்கப் போகிறோம் என்ற ஆவலில், ஆர்வத்தில் நாம சீக்கிரமாவே வேலைகளை( வேலைகள் இருக்கா என்ன?) முடித்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு போயிடுவோம்! இரவலா சரக்கு வாங்கித் தரேன் என்று சொன்ன நண்பர் நிதானமா வேலையை முடிச்சி கெளம்பும்போதுதான் அறவே வராத தொலைபேசி அழைபுகளெல்லாம் வந்துத் தொலையும்! எவ்ளோ நேரம்தான் பொறுமையா காத்து கிடக்குறது!

2. அப்படியே வாங்கித்தர நண்பர் வந்துட்டாருன்னு வெச்சிக்குவோம்! நாம இன்னிக்கு வி.எஸ்.ஓ.பி அடிக்கலாம்னு ஆர்வமா வந்திருப்போம்! ஆனா அவரோ எம்.சி அசிக்கலாம்னு சொல்லுவாரு! மறுத்துப் பேச முடியுமா நம்மால!

3. நாம எப்பாவாவது ஒரு தபா சரக்கு அடிக்கிறோம்! அடிக்கிறப்போ பெப்ஸி, செவனப், சோடான்னு ஏக தடபுடலா(அறுக்க மாட்டாதவன் இடுப்புல ஆயிரத்தெட்டு கறுக்கருவா கணக்கா) இருந்தாத்தான் சரக்கடிக்குற மூடே வரும்!
நம்ம நண்பர் அப்படியா? சும்மா ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி வெச்சி ஒரு ஆஃப்பை காலி பண்ணுற ஆளா இருப்பார்! நம்ம சுந்தந்திரம் என்ன ஆச்சு! அடிக்கிறதே இரவல் சரக்காச்சே!

4. அதே மாதிரிதாங்க சைட் டிஷ்ஷும்! சிக்கன் 65, சிப்ஸ், மிக்ஸர்னு எல்லாம் வெச்சிகிட்டு எல்லாத்தையும் காலி பண்ணிட்டு கூட ரெண்டாவது பெக்குல முக்காவாசிக்கு மேல குடிக்க முடியாத ஆஃப் பாயிலடிக்கிற ரேஞ்சுக்கு இருக்குற நாம எங்கே? ஒத்த ரூவா ஊறுகாப் பாக்கெட்டு ரெண்டு வாங்கித் தந்து ஃபுல் பாட்டிலும் காலி பண்ணச் சொல்லுற நம்ம நண்பர் எங்கே? என்னங்க பண்ணமுடியும் இரவல்தான் என்றாலும் இப்போதைக்கு ஸ்பான்ஸர் அவராச்சே!

5. நாம நிதானமா அழகா அவுன்ஸ் அவுன்ஸா ரசிச்சி ஒவ்வொரு சிப்பா அடிச்சிகிட்டே இந்தக் கையில ஒரு தம்மு வெச்சிகிட்டே அப்பப்போ கவிதைத் தொகுப்பு அட்டைப் படத்துக்கு போஸ் கொடுக்குற ரேஞ்சுல சிந்திச்சிகிட்டே அனுபவிச்சி குடிக்கணும்னு ஆசைப் பட்டிருப்போம்! முக்கா கிளாஸ்ல சரக்கை ஊத்தி வாட்டர் பாக்கிட்டை உடைச்சி தண்ணி கலக்குறத்துக்குள்ளே நம்ம நண்பர் அவரோட கிளாஸை ஸ்வாஹா பண்ணி முடிச்சிட்டு சீக்கிரம் அடிறா! அடுத்த பெக்கு ஆரம்பிப்போம் னு ஒரு கேவலமான லுக்கு விடுவாரு பாருங்க!......ம்ஹூம்!

6. அடிச்ச பிறகு ஆய் ஊய்னு அலப்பறை பண்ணி லந்து விடாட்டி அடிச்ச சரக்குக்கு மதிப்பு இருக்குமா? இவரு வாங்கித் தராரே ன்னு(இரவலாவே இருந்தாலும்) ஒரு லாயல்டிக்காகவது நாம அடக்கி வாசிக்க வேண்டிய அவலமான நிலைல நம்மை அறியாமலே தள்ளப்பட்டிருப்போம்!

7. என்னதான் ஆஃபாயில் போட்டே ஆகணும்ங்குற மூடு வந்தாக் கூட ஃப்ரீயா ஆஃப் பாயில் போட முடியுதா? வாங்கித் தந்தவன் என்ன நினைப்பானோ, கேவலமா பார்ப்பானோன்னெல்லாம் நினைழ்ச்சி கஷ்டப்பட்ழு அடக்க வேண்டியிருக்கும் பாருங்க...! ச்சே! இனிமே சென்மத்துக்கும் இந்த்ழ சனியழை தொடக்கூடாதுன்னு தோழும்.

8. ம்ஹூம்! அதென்னங்கழா இரவல் ச்ரக்குன்னா மட்டும் இழப்பமா என்ன? என்ன நண்பா சொல்றே நீ! இருந்தாழும் இரவல் சரக்குன்னா சங்கடங்கள்னெல்லாம் பேசுறாங்க நண்பா! அதான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு! இரு நண்பா இந்த பெக்கோட முழிச்சிக்கிழேன்!

9. அவ்வ்வ்வ்வ்வ்வ்..நண்பா யாரைப் பத்தி வேணும்ழாலும் சொல்லுவேண், உன்னைப் பத்தி ..ஹிக்.. உன்னை பத்தி ஒரு வார்த்தை பேசி இருக்கனா? எதா இருந்தாலும் முகழ்த்துக்கு முன்னாலே சொல்லிடுவேன் நண்பா! அடுத்தவன்கிட்டே போயி பேசுறதோ, அப்பாலிக்கா உன்னை பத்தி பதிவெழுதறதோவெல்லாம் செய்ய மாட்டேன் நண்பா!"


10. விடு! விடு! உன்னைப் பத்ழி எவன் என்னெ பேசிடுறான்னு பார்க்குறேன்! எவனாழ்ச்சும் மூக்கு மேல நாக்கு... இல்ல இல்ல... நாக்கு மேல மூக்கு..ச்ச்சே அதுவும் இல்ல் நண்ப்ழா.. ஆங்க்! நாக்ழு மேழே பல்லு போழ்த்து பேச விட்டுடவனா நானு! அவன் மூஞ்சிழிய உடைச்சிட மாட்டேன்!

11. "நண்பா! நான் யாழுடா! எனக்கெழ்ழால்ம் சரக்கு வாங்கித் தரயே! நான் எதாழ்ச்சும் திருப்ழிச் சேய்வேன்னு எதிர்பார்க்காம வாங்கித் தரயே! இந்த நாழ் இருக்குல்லா நாழ்! அதைவிட உனக்கு நானு விழுவாசமா இருப்பேன் நண்பா!
நீ என்னை என்ன வேணும்னாலிம் சொழ்ழு நண்பா! உனக்கு எல்ழா உரிமையும் இருக்கு நண்பா! ஆனா எனக்குத் தெரியும்.. நான் இப்பழி மப்புல ஓவரா பேசுறேன்.. அத்தனை பேழ்த்துக்கும் முன்னாதி உனக்கொ தர்ம சங்கழமா இருக்கும்னு..நல்லா ஏழிடுத்து..தலையில ரொம்ப பாரமா...அப்படியே உலகமே சுத்துது நண்பா! உனழ்க்கும் அப்பழித்தான.....! அட சட்! பாத் ழூம் எங்கே இங்கழான இழுந்தது....உவ்வ்வ்வாவ்......."

36 comments:

வால்பையன் said...

போக போக மப்பும் ஏறியது இன்னும் சூப்பர்!

தமிழ்நெஞ்சம் said...

s u p e r

கவிதா | Kavitha said...

//நண்பா! நான் யாழுடா!//

என்ன எழவு(டா) இது..!!

கவிதா | Kavitha said...

நண்பா என்ன நயன்'ஐ கடைசி பாயிண்டு வரைக்கும் காணோம்..?!!

எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு நண்பா.. !! :(

நட்புடன் ஜமால் said...

எல்லாம் நமக்கு பிரியாத மேட்டராக்கீது

எஸ்கேப்பு ...

நட்புடன் ஜமால் said...

அணிலின் ஆட்டம் இங்கையும் உண்டா

ஜவ்வாது தொல்லை said...

LOL!

F5 said...

super post!

kalakkals!

vimalavidya said...

It is our fate to see/read ??such articles---Selvapriyan-Chalakudy

நாமக்கல் சிபி said...

//It is our fate to see/read ??such articles---Selvapriyan-Chalakudy//

:))
//


:)

ரங்கன் said...

//கவிதா | Kavitha said...

நண்பா என்ன நயன்'ஐ கடைசி பாயிண்டு வரைக்கும் காணோம்..?!!

எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு நண்பா.. !! :(
//

எனக்கும் தான்..
எப்படிப்பா இப்படி எல்லாம் எழுத தோணுது உனக்கு?

ரெம்பபபபபப.. நல்லவன் பா நீனு..
கலக்கிட்ட போ..

ஆயில்யன் said...

500 அடிச்சப்பிறகுதான் சங்கத்து சிங்கமெல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாகுதுங்க போலிருக்கே....!


ரைட்டு :))))

ஆயில்யன் said...

ஐ திங்க் ஒரு வரி மிஸ்ஸிங்கோ

நண்பா மப்புல மட்டும் பேசுறேன்னு நினைச்சுக்காத உண்மையா சொல்றேண்டா...!

தமிழ் பிரியன் said...

இது நம்ம சப்ஜெக்ட் இல்லியே தள... :(

Thooya said...

:P

விவாஜி said...

கூல்!

இராம்/Raam said...

ROTFL....

/ வால்பையன் said...

போக போக மப்பும் ஏறியது இன்னும் சூப்பர்!//

அதே.. அதே..

வடபழனி அழைக்கிறது... ஆஸ்பினீ அழைக்கிறது.... :))

நாகை சிவா said...

அடங்கொப்புறானே, அதுல இம்புட்டு சங்கடங்கள் இருக்கா, இது வரைக்கும் தெரியமா இருந்துட்டேனே! :(

நாகை சிவா said...

இது போன்ற சமூக விழிப்புணர்ச்சி பதிவுகள் தொடர்ந்து இட்டு குடிமகன்களுக்கு போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு கேட்டுக்குறேன் சாமியோவ் :)

அபி அப்பா said...

ஆக எனக்கு சம்மந்தம் இல்லாத பதிவு இது. அதனால வெளி நடப்பு செய்கிறேன்:-))

நாமக்கல் சிபி said...

//ஆக எனக்கு சம்மந்தம் இல்லாத பதிவு இது. அதனால வெளி நடப்பு செய்கிறேன்:-))//

இதுக்கு அர்த்தம் நீங்க இரவல் சரக்கு அடிச்ச இல்லை என்பதுதானே அபிஅப்பா!

வெட்டிப்பயல் said...

// நாமக்கல் சிபி said...
//ஆக எனக்கு சம்மந்தம் இல்லாத பதிவு இது. அதனால வெளி நடப்பு செய்கிறேன்:-))//

இதுக்கு அர்த்தம் நீங்க இரவல் சரக்கு அடிச்ச இல்லை என்பதுதானே அபிஅப்பா!

//

Annanuku vaangi koduthu thaan pazhakam :)

annan thaan Kaliyuga Karnan :)

சுவனப்பிரியன் said...

'மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தவும் இறைவனின் நினைவை விட்டும் இறைவனைப் பிரார்த்திப்பதை விட்டும் உங்களைத் தடுக்கவே சாத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?' -குர்ஆன் 5:91

:-)

வாழவந்தான் said...

இந்தா இந்த சிக்கன சாப்பிடு....

ஆமா சொந்த காசில குடிச்சா ஓசி எம்சினு அடிக்கறவன் இரவல் சரக்குனா மட்டும் விஎஸ்ஒபி, ஆர்சி, சிக்நேச்சருனு கிளம்பிடறாங்க???

நலம் விரும்பி said...

//சாத்தான் விரும்புகிறான்//

விரும்பிட்டான்யா விரும்பிட்டான்யா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பிரேசில்-ல்ல இருந்து இப்ப தான் வந்து இறங்கினா...
சரக்கடிப்பதைப் போய் சங்கடம்-ன்னு சொல்லிப்புட்டீங்களே தள! நாட்டாமை...மொதல்ல தலைப்பை மாத்து! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வடபழனி அழைக்கிறது... ஆஸ்பினீ அழைக்கிறது.... :))//

யோவ் சிபி அண்ணா!
வடபழனி-ன்னு சொன்னதை வச்சி உம்மை முருக பக்தர், ஆன்மீகப் பதிவர்-ன்னு தப்பா நினைச்சிட்டேனே! :)

இது ஆண்டவன் வடபழனி இல்ல! ஆஸ்பினீ வடபழனியா? :))

ஹைய்யோ! ஹைய்யோ!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Annanuku vaangi koduthu thaan pazhakam :)
annan thaan Kaliyuga Karnan :)//

கர்ணன்-ன்னா சிதறிய முத்தை எடுக்கவா? எடுத்து கோர்க்கவா? கோர்த்துச் சேர்க்கவா?-ன்னு இல்லை கேட்கணும்?
அட்லீஸ்ட்...வாங்கிக் கொடுத்த சரக்கை ஊற்றவா? ஊற்றி க்ளாஸை ஏற்றவா? ஊறுகாயை மாற்றவா?-ன்னு கேட்கலாம்-ல? என்ன அபி அப்பா... இப்பிடிப் பண்ணிட்டீங்க நீங்க? :))

நாமக்கல் சிபி said...

இந்த பதிவு குங்குமம் இதழில் இடம்பெற்றிருக்கிறது!

அறியச் செய்த தேவ் அவர்களுக்கு நன்றி!

ILA said...

நம்மள வெச்சு குங்குமம் பொழைக்க ஆரம்பிச்சுட்டாங்ளா?

தமிழ்நெஞ்சம் said...

டொமைன் ரெஜிஸ்டர் பண்ணிருக்கீங்க.

குங்குமத்திலே வந்துருக்கு.

அதனால 2 ட்ரீட் எதிர்பார்க்கிறேன்


//இந்த பதிவு குங்குமம் இதழில் இடம்பெற்றிருக்கிறது!

தமிழ் பிரியன் said...

சங்கத்து சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

சிங்கம் களம் இறங்கிடுச்சிடோய்

குங்குமத்துல!

கோபிநாத் said...

\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வடபழனி அழைக்கிறது... ஆஸ்பினீ அழைக்கிறது.... :))//

யோவ் சிபி அண்ணா!
வடபழனி-ன்னு சொன்னதை வச்சி உம்மை முருக பக்தர், ஆன்மீகப் பதிவர்-ன்னு தப்பா நினைச்சிட்டேனே! :)

இது ஆண்டவன் வடபழனி இல்ல! ஆஸ்பினீ வடபழனியா? :))

ஹைய்யோ! ஹைய்யோ!
\\

தல.....அது ரொம்ப ராசியான இடம் தெரியுமா!!!!...;)))

இராகவன் நைஜிரியா said...

ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்..

என்ன இருந்தாலும் ஓசிச் சரக்கு டேஸ்டே தனிதான் இல்ல..

கும்க்கி said...

ஏழ்ன் இப்பிழி ழானத்ம வாங்கழிங்க தல...