Tuesday, March 17, 2009

இளமுருகாற்றுப்படை

இது ஒரு மொய் பதிவு. சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு அரும்பணியாற்றி வரும் எங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் உரிய விவசாயி அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக வெளிவரும் சங்கத்தின் 501ஆம் பதிவு. சங்கத்துக்கு இளா அவர்கள் ஆற்றிய அரும்பணியினைப் பாராட்டி ஒரு பதிவு எழுதி தருமாறு சங்கத்தின் தளபதியும் அறங்காவலருமான சிபியைக் கேட்டோம். அவர் அளவிலாத குரோதம் கொண்டு பின்னங்காலைக் கொண்டு பிடரியில் அடித்து "என்னையா பதிவெழுதச் சொன்னாய். நான் புத்தகமே எழுதியிருக்கேண்டா" என்று ஒரு புத்தகத்தை மேசை மீது வீசினார். அந்த புத்தகம் "இளவாக்கிய சிபியடியார் ஸ்ரீலஸ்ரீ பித்தானந்தா சுவாமிகள் அருளிச் செய்த இளமுருகாற்றுப்படை". இந்த புத்தகத்தில் இருந்து உங்களுக்கு பரிட்சை வைக்கப் போகிறேன் என்று அரை மணி நேரம் கொடுத்தார். அந்த அரை மணியில் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெட்ரூ செய்து பிட் அடித்து ஒருவாறு பரிட்சையை எழுதி முடித்தோம். சிபியடிகள் வழங்கிய வினாத்தாளும் அதற்கு எங்களின் பதில்களும் இனி உங்கள் பார்வைக்கு.

1. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக
"வளிநாணும் வெண்புரவி மீதமர் கொற்றவ
நின்மதி கண்டு நாணி புறந்தள்ளியோடும்
புறந்தட்டி எழும்வேளை இலைமறை காயென
இளகும் கன்னியர் நிலையறிவரோ அண்ணியார்"
மேற்கண்ட இச்செய்யுளில் உள்ள அணிநயத்தையும் விளக்குக.




பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றை விட வேகமாகப் பாயக் கூடிய வெண்மையான குதிரையின் மீது ஏறி அமர்ந்து பயணிக்கும் கொற்றவனே. சங்ககால இலக்கியத்தின் படி கொற்றவனே அப்படின்னா கொட்டு வாங்கறவனே என்று பொருள். அந்த குதிரையை நீ செலுத்த முற்படும் போது, "என்னை விட வேகமாக வேலை செய்யக் கூடிய மதியைப் படைத்த என் தலைவனைத் தாங்கிப் பயணம் செய்யக் கூடியது என்னால் இயன்ற செயல் தானோ" என்றெண்ணி நாணப்பட்டு உன்னை கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. கீழே விழுந்த எம் மன்னவனான நீ மண்ணாலான மீசையையும் உன் பின்புறம் அப்பியிருக்கும் மண்ணையும் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையால் தட்டி விட்டு விட்டு கண்டவர் விண்டிலாத பாங்கோடு ரே பான் கண்ணாடி அணியும் அழகை இலை மறை காய் போல ஒளிந்திருந்து பார்க்கும் பெண்கள் மயங்கி ரசித்து இளகி ஆனந்த கண்ணீர் வடிப்பதை அண்ணி அறிவாரா என்று கேட்கிறார் ஆசிரியர். இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி இடம்பெற்றிருக்கிறது. அதாவது சொல்ல வந்த கருத்தை நேரிடையாக தெரிவிக்காமல் குறிப்பால் உணர்த்துவது. காற்றை விட அதி விரைவாக ஓடக் கூடிய குதிரையும் நாணப்படும் அளவுக்கு பல வித வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்பதும், தமிழ்மணத்தில் இவர் இட்ட பல பதிவுகளைக் கணப் பொழுதில் காணாமல் போக வைக்கும் இவருடைய வல்லமையையும் பாடலாசிரியர் வியந்து போற்றுகிறார்.

மாணவர் பெயர் : கைப்புள்ள
சுழல் எண் : 00.07
பள்ளி : இளமுருகு வித்யாஷ்ரம், சென்னை


2. மனப்பாடப் பகுதி - இளமுருகாற்றுப்படை

ஆணிபுடுங்கு காதையில் "பிசியோ பிசி" எனும் ஈற்றடி கொண்ட பாடலை அடி பிறழாமல் எழுதுக.

மாதமோ மார்ச்
விவாஜி நம்ம சங்கத்துக்கு டார்ச்
பதிவில்ல கிடையாது மேட்டர்
ஆனா போடுற பதிவெல்லாம் ஹீட்டர்

எப்படியோ ஏறிடும் ஹிட் மீட்டர்
அதுல்ல எங்க அண்ணன் பெரிய பீட்டர்
படிச்சிட்டு பிகிலு அடிச்சா
அண்ணன் செலவுல்ல ஆளுக்கொரு
குவாட்டர்..குவாட்டர்..குவாட்டரு..

பொறந்தது பவானி பக்கத்துல்ல
வளர்ந்தது தாவணி ஏக்கத்துல்ல
பிகரு பாத்தா கண்ணுல்ல ஏறும் கிளாஸ்
நகரு நகரு விவாஜிக்கு எப்பவுமே தனி மாஸ்



நட்புக்கு விவாஜி ஹோல்சேலு
நடப்புக்கு விவ்ஸ் டோட்டல் கோல் மாலு..
தமிழ் நாட்டுல்ல பொறந்த வில்லு
பெங்களூரு வீதியிலே திரிஞ்ச ஜொள்லு அசலூர்

ஆப்பிள் தோட்டக் காவல்காரன்
அந்தூர்ல்ல சேட்டுப் புள்ளக்கும்
அண்ணன் தான் ஏவல்காரன்
மெகா சீன் போடுறதுல்ல மில்லியனரு
போட்ட சீன் கிழிஞ்சா போதும்

அண்ணன் மில்லி யேறுனவரு...
பாசக்கார பயபுள்ள
பதிவுலகம் தந்த இந்த மாப்புள்ள
அண்ணனுக்கு ஆல்வேஸ் பதிவு பசி
பிங் பண்ணி பாருங்க அவரு 24 அவர்ஸும்

பிசியோ பிசி....

மாணவர் பெயர் : தேவ்
சுழல் எண் : 00.089
பள்ளி : இளா ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சென்னை


3. புதரகத்து புரட்சி தலைவர் மக்களுக்கு ஆற்றிய பணியினை தூதுவன் வாய்மொழி சொல்வதாய் விளக்குக?

பழம்பெரும் பதிவரான இளா அவர்கள் புதரகத்தில் பல்லாண்டாய் தஞ்சம்புகுந்து ஆணி புடுங்குவதுமாதிரி பாவனை செய்வது நாமெல்லாரும் அறிந்ததே.... இதை நாம் தூதுவன் குவார்டர்க்கடியான் வாய்வழி விளக்கமாகக் காணலாம்.

சங்கத்து சிங்கங்களின் தூதுவனாக அதாவது ஒற்றனாக ஆகிய நான் இளா என விளிக்கப்படும் இளமுருகு'வே பின்படர்தலில் எனக்கு கிட்டிய சில கூறுகள்.

இளமுருகு'னு இவருக்கு பேரு வைச்சாலும் வைச்சாங்க... வயது 40 தாண்டியும் நான் யூத்'னு சொல்லிக்கிறதுக்காக மழை பெஞ்சாலும் சரி,வெள்ளை பனி மழை மட்டு மட்டுன்னு தலையிலே விழுந்தாலும் குருட்டு கருப்பு கண்ணாடியே மாட்டிக்கிட்டு பண்ணுற அலும்பு இருக்கே... அதெக்கெல்லாம் நூறு பக்கத்திலே ஜோக் புத்தகமென்னு போடலாம்.. அதிலே எங்க விவாஜி பேசுற இங்கிலிபிசு இருக்கு தெரியுமா? அதுவும் எஸ்பெசலி 100 மீட்டர் பின்னாடி அட்டுபிகர் நடந்து வர்றது தெரிஞ்சதும், ஓரே பீட்டர் மயம் தான்... அவரு பேசறதெல்லாம் இங்க போட்டா படிச்சு பார்க்கிற ஒங்களுக்கெல்லாம் கொஞ்சநஞ்சம் தெரியுற இங்கிலிபிசு'ல்லாம் மறந்து போயிரும்.

இது கூட ஓகே ஆப்பிசர்ஸ், நார்மலா எல்லா ஆம்பிளகளும் போடுற சீன் தான்.. இவரு பையன் படிக்கிற ஸ்கூல் டீச்சர் கொஞ்சம் அழகா இருக்குன்னு அவங்க ஸ்டூண்ட்'ஸ்கெல்லாம் Hot-Dog, ஆனியன் ரிங்'னு லஞ்சமா வாங்கி கொடுத்து ஃபிரண்ட் பிடிக்கிறாரு.. ஆனா அதெல்லாம் வாங்கிதின்னுட்டு அந்த பிள்ளைகள் வாயை தொறக்கலைகிறது வேற மேட்டரு...

மேற்கண்டவைகள் அனைத்தும் வெளியே நடந்தது. இனி வீட்டிற்குள் நடக்கும் சில அக்கப்போருகள்:-

எப்பவும் 'ஐம் ஷோ பிஜ்ஜீ'ன்னு ஸ்டேட்மெண்ட் விடுவாரு... சரி ஆப்பிசிலே தான் டேமேஜரா இருக்குற இவரு வேலை பார்க்க மாட்டாருன்னு நினைச்சி ஊடு போயி சேர்ந்ததும் ஃபிரியா இருப்பாருன்னு நினைச்சா.. அம்மணி உத்தரவுக்காக ஊட்டு முன்னாடி இருக்கிற பனி அள்ளறது பத்தாமே எதிர்த்த ஊட்டு மார்வாடி பொண்ணுக இருக்கிற அபார்ட்மெண்ட் வாசலிலேயும் சுத்தம் பண்ணிட்டு இருக்காரு... கேட்டா போறதுக்கு வழி வேணுமாம்...

தன்னோட ஊட்டு காரை கிளின் பண்ணுறது பத்தாமே பக்கத்து ஊட்டு கெழவி காருக்கெல்லாம் ஃப்ரி வாட்டர் வாஸ் பண்ணிட்டு இருக்காரு.... நோண்டி நொங்கு உருவி பார்த்ததும் தான் தெரியுது, அந்த கெழவி'க்கு பேத்தி ஒன்னு பாஸ்டன்'லே படிச்சிட்டு இருக்கிறது.. கொஞ்சநாளா ஆப்ஷிய்ல் வொர்க்'க்கா 'ஐ ஹவ் டூ கோ பாஸ்டன்'னு சொன்னப்பவே புரிஞ்சு போச்சு... இதையும் கொஞ்சம் எடுத்து சொல்லி ரெண்டாவது கோடி புண்ணியமும் வாங்கிக்கோங்க...

(பி.கு : மதிப்பிற்குரிய திரு.Evaluator ஐயா அவர்களுக்கு. நான் மிகவும் கஷ்டப் பட்டு இப்பரிட்சையை எழுதியிருக்கிறேன். இவ்விடையில் முதல் இரண்டு வரிகளைத் தவிர ஏனைய வரிகளை என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் கூட குறைச்சல் இருந்தாலும் தயவு செய்து என்னை பாஸ் செய்து விட்டு விடவும். மிக்க நன்றி)

மாணவர் பெயர் : ராயல் ராம்
சுழல் எண் : 3 3/4
பள்ளி : டி.வி.எஸ் இளா மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, மதுரை


4. புதரகம் புகு காதையில் வரும் இளாவின் திருவிளையாடல் காட்சிகளைக் குறித்து விளக்கமாக எழுதுக.

அவரின் விளையாடலை விளக்கமாக எல்லாம் எழுதினால் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அழிந்து போவோம், அதை ஒரு மெகா தொடர் கதையாக தான் எழுத வேண்டும். அதனால் கொஞ்சமாக அவரை பற்றிய சிறு குறிப்பு

விவசாயி.... விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி

பிறந்தது - பவானி கரையோரம்
பிழைப்பது - சுகந்திர தேவி சிலையோரம்
பிரிக்க முடியாதது - இளாவும், டாலரும்
பிரிய கூடாதது - இளாவும், கடலையும்
சேர்ந்தே இருப்பது - இளாவும், கருப்பு கண்ணாடியும் (மிட் நைட்ல கூட கழட்ட மாட்டாரு)
சேராத இருப்பது - முன்னாள் பிகரும், இன்னாள் பிகரும் கடலையும்
சொல்லக் கூடாதது - தங்கமணியிடம் தண்ணி அடிப்பதை
சொல்லக் கூடியது - வயசு ஆனாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையல
பார்க்க கூடாதது - கார் + கேமரா (உடனே போஸ் தான் )
பார்த்து ரசிப்பது - நமீதாவின் குத்தாட்டம்

மாணவர் பெயர் : புலிக்குட்டி நாகை சிவா
சுழல் எண் : 2 1/4
பள்ளி : அரசினர் இளமுறுக்கு மேனிலைப் பள்ளி, நாகை.


(பரிட்சையை எங்க திறனுக்கு ஏற்ப நாங்க எழுதிட்டோம். இப்போ யாராருக்கு என்னென்ன மார்க் போடலாம்னு நீங்க தான் சொல்லனும்...தேறிடுவோமா?)

28 comments:

கோவி.கண்ணன் said...

500 க்கு வாழ்த்துகள் !

போதை ஏறிடுச்சின்னு நினைக்கிறேன்

Namakkal Shibi said...

//போதை ஏறிடுச்சின்னு நினைக்கிறேன்//

:))

சந்தனமுல்லை said...

ROTFL!

//சுழல் எண்// னா என்ன?

பள்ளி பெயர்கள் சான்ஸே இல்லை!

:-)))

கைப்புள்ள said...

//500 க்கு வாழ்த்துகள் !

போதை ஏறிடுச்சின்னு நினைக்கிறேன்//

வளர நன்னி கோவி சார்.

கைப்புள்ள said...

//ROTFL!

//சுழல் எண்// னா என்ன?

பள்ளி பெயர்கள் சான்ஸே இல்லை!

:-)))//

நன்றி முல்லை. சுழல் எண்னா Roll number.
:)

இராம்/Raam said...

ஹி ஹி ஹி

சந்தனமுல்லை said...

//சுழல் எண்னா Roll number.//

!!!

Iyappan Krishnan said...

:)) nice

நாமக்கல் சிபி said...

//ROTFL! //

சந்தனமுல்லை டிரேட் மார்க்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

500 க்கு வாழ்த்துகள்

SUBBU said...

லூசாப்பா நீ :))))))))

Anonymous said...

500 க்கு வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

ஹாஹாஹா. :)
500க்கு வாழ்துதுக்கள்..

Tech Shankar said...

இம்புட்டு நேரம் இதைத்தான் எழுதினீங்களா.

ஊட்டுல 1உம் சொல்லலியா

G3 said...

ROTFL :))

//(பி.கு : மதிப்பிற்குரிய திரு.Evaluator ஐயா அவர்களுக்கு....தயவு செய்து என்னை பாஸ் செய்து விட்டு விடவும். மிக்க நன்றி)//

:))))))))))))) Evaluator அம்மாவா இருந்தா.. ராமூ நீரு ஃபெயிலு தான் :D

G3 said...

501-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :))

vimalavidya said...

Iyaa ! How u r writing like this ?
It is really a great job>>Difficult job..I could not understand any words and any sentences>.OOOO This is a blog ???!!!Only we have understand ??mmm
----------Selvapriyan --Chalakudy.

சிவக்குமரன் said...

///சங்ககால இலக்கியத்தின் படி கொற்றவனே அப்படின்னா கொட்டு வாங்கறவனே என்று பொருள்.///

நிஜமாவா?

கைப்புள்ள said...

/////சங்ககால இலக்கியத்தின் படி கொற்றவனே அப்படின்னா கொட்டு வாங்கறவனே என்று பொருள்.///

நிஜமாவா?//

சிவக்குமரன்,
இதுல என்னங்க உங்களுக்கு சந்தேகம்? நிஜமா தாங்க.

சங்க காலம்னு சொல்லிருக்கேன் இல்லை? இங்கே சங்கம்னா வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்னு எடுத்துக்கனும்.
:)

Unknown said...

சங்கத்தின் 501ஆவது பதிவிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் இளமுருகாற்றுப்படை புத்தகங்கள் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன...

இதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடுத்து....கைப்புள்ளையாற்றுப்படை? :)))

அதை விட கைப்புள்ளக் குறவஞ்சி சூப்பரா இருக்கும்...கும்மிக்கு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பரிட்சையை எங்க திறனுக்கு ஏற்ப நாங்க எழுதிட்டோம். இப்போ யாராருக்கு என்னென்ன மார்க் போடலாம்னு//

எல்லாம் ஐநூத்துக்கு....

தேவ், சுழல் எண் : 00.089
இளா ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சென்னை
= 356 1/4

கைப்புள்ள, சுழல் எண் : 00.07
இளமுருகு வித்யாஷ்ரம், சென்னை
= 420 1/8


நாகை சிவா,சுழல் எண் : 2 1/4
அரசினர் இளமுறுக்கு மேனிலைப் பள்ளி, நாகை.
= 499 3/4

ராயல் ராம், சுழல் எண் : 3 3/4
டி.வி.எஸ் இளா மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, மதுரை
= 500 5/5

:)))
மாநிலத்திலேயே முதலாவதாக வந்த டி.வி.எஸ் இளா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் "ரா"-யல் ராமுக்கு வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

Exclnt Post! என்னத்த சொல்ல பதிவுலகம் வந்தா ஒன்னும் இல்லைன்னு சொல்றது ஒரு fashion! காலை வாரி விட காலும், விழுந்தவுடன் தாங்கிபிடிக்க தோளும் இருக்குன்னு சொல்லி மானத்தை (வாங்கி) காப்பாத்திட்டீங்களே.

சொந்தம்ஸ், என் சிங்கம்ஸ்.. உறவூஸ்.. என்ன சொல்ல ..

நாகை சிவா said...

கைப்ஸ், தேவ்ஸ் பதில்களை கண்ட பிறகு பாஸ் மார்க் கிடைக்குமா என்றே டவுட்டாகீதே !

நாகை சிவா said...

கே.ஆர்.எஸ்... 499 மா... ஆனாலும் எனக்கு சந்தோசம் தான்... என்னைய இந்த அளவுக்கு கேவலப்படுத்தியதை விடவும் ராமை ஒரு மார்க் கூட போட்டு அசிங்கப்படுத்தி இருக்கீங்க பாருங்க, அதனால்... ;)))))

நாகை சிவா said...

//பள்ளி பெயர்கள் சான்ஸே இல்லை! //

முல்லை, இப்படியெல்லாம் பள்ளிகளுக்கு பெயர் வைக்க சான்ஸே இல்லனு சொல்ல வறீங்களா... இது வரைக்கும் இல்லனா எங்க விவாஜி யு.எஸ். ல இருந்து வந்தவுடன் சிவாஜி மாதிரி பல பள்ளிகள் திறந்து இந்த பெயர்கள் எல்லாம் வைப்பார்... இது நிச்சயம்....

தமிழன்-கறுப்பி... said...

எப்புடிய்யா...?
இப்படியொரு கற்பனை வளம்..

மூத்த பதிவர்கள் மூத்த வதிவர்கள்தான் ! :))

தமிழன்-கறுப்பி... said...

500!!!!!!!!!!!

கலக்கல்...

சங்கத்துக்கு வாழ்த்துக்கள்...!