Monday, March 9, 2009

"நச்" நாராயணன் & நாராயணீஸ்!!!



சில பேர் பதிவு போட்டு நகைச்சுவைன்னு லேபில் கொடுத்தும் அது போணியாகாது. சில பேர் "சீரியஸ்"ன்னு லேபில் கொடுப்பாங்க. அதுல வந்து ஒரு பின்னூட்டம் விழும் முதல்ல! "அப்ப ICU விலே சேர்க்க வேண்டியது தானே"ன்னு! நமக்கு சிரிப்பு பிச்சுகிட்டு போகும்.



ஆக நாம இந்த பதிவிலே பார்க்க போவது சில "நச்" பின்னூட்ட நாராயணன்ஸ்& நாராயணீஸ் பத்தி தான்.
இந்த பதிவை எல்லாம் விட பின்னூட்ட சிரிப்பு இருக்கே அது ரொம்ப பெரிய சிரிப்புங்க. அப்படித்தான் நம்ம மாநக்கல் சிபி ஒரு பதி போட்டாரு "நான் ஓய்வெடுக்க போறேன்"ன்னு அதுக்கு நம்ம கொத்ஸ் வந்து "ஓய் வெடுக்குனு வா"ன்னு ஒரு சின்ன 3 வார்த்தை பின்னூட்டம். அதிலே எத்தனை சிரிப்பும் அர்த்தமும் இருக்கு பாருங்க.



அது போல இன்னிக்கு நம்ம அய்யனார் இருக்காரே (அய்யனாரை 1 வருஷத்துக்கு நானும் குசும்பனும் லீஸ்க்கு எடுத்து இருக்கோம், எங்களை தவிர வேற யாராவது கலாய்ச்சா எங்களுக்கு கப்பம் கட்டனும்) நம்ம அய்யனார் இப்ப தான் இப்படி ஆகிட்டாரு. ஆனா அவரு அடிச்ச கும்மி இருக்கே அட ஆண்டவா அதல்லாம் இப்ப புதுசா வந்த பசங்களுக்கு தெரியாது. அவரு மட்டுமா இப்ப இருக்கும் லாடுலபக்குதாஸ் எல்லாம் அப்ப கும்மி குரூப் தான். கொத்தணார் அடிக்காத கும்மியா?



ஒரு மகளிர் தினத்திலே உஷா அண்ணி கும்மின்னு சொல்வதுக்கு பதிலா கும்பின்னு சொல்லிட்டங்க! அப்ப அவந்து லக்கியும், கொத்தனாரும் வந்து முனியாட்டம் ஆடினது யாருக்கு மறக்கும்!



அது போல நம்ம போர்வாள் தேவ் அடிக்காத கும்மியா? ஒரு கட்டத்துல அய்யனார் " வாங்க தேவ் எப்படி இருக்கீங்க போன கும்மில பார்த்தது" அப்படின்னு ஒரு பின்னூட்டம்.அப்படில்லாம் இருந்தோம் அது ஒரு டைம்!
சரி அதை விடுங்க!இப்ப நான் சொல்ல வருவது! சமீபத்துல நான் ரசிச்ச சில பின்னூட்ட சிரிப்புகள்!



ஒரு பிரபல அப்பா பதிவர் தன் தங்கமணிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துட்டு " அய்யோ என் மனைவி ஸ்கூட்டியோட பயங்கர ஸ்பீடா பறக்குறாங்க"ன்னு போட்ட ஒரு பதிவுக்கு நம்ம குசும்ப சித்தர் "ஆஹா அவங்க தனியா பறப்பதே கஷ்டம் இதில ஸ்கூட்டிய வேற தூக்கிகிட்டு பறந்தாங்கன்னா உங்க குடும்பம் பெரிய ஆளுங்க தான்"



இப்படித்தான் துளசி டீச்சர் பதிவிலே ஒரு எறும்பு ஒரு ஆண் உள்ளாடையில் பத்தி ஒரு போட்டோ! அப்ப வழக்கமா வரும் மாணவ மாணவி வகுப்பறையில் வந்து உட்காரும் போது ஒரு மாணவி வந்து பிரசண்ட் டீச்சர் சொன்ன போது "வாம்மா வந்து எறும்பு இல்லாத இடமா பார்த்து உட்காரு"ன்னு டீச்சர் சொன்ன போது எனக்கு சிரிப்பு வயித்த பிச்சுகிட்டு போச்சு!



இப்ப சொல்லுங்க சிரிப்பு வருமா வராதா?
குசும்ப சித்தர் ரஹ்மான் விருது வாங்கின பின்ன போட்ட பதிவில் கீழ்கண்ட பின்னூட்டம் படித்து சிரிங்கப்பா!

//க்ராக்ஜாக் said...
//முனைவர் விஜய் said...ஸ்லம்டாகிற்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்பதால் தான் வில்லுவை போட்டிக்கு அனுப்பவில்லை..//அடேய் அரை மண்டையா .. அதான் வந்ததும் பொட்டிக்குள்ள போய்டிச்சே. அப்புரம் என்னதைட போட்டிக்கு அனுப்பறது?\\

\\க்ராக்ஜாக் said...
தேவாவின் இசையை காப்பி அடித்து ஜெய் ஹோ பாட்டுக்கு ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். அதற்கு போய் ஆஸ்கரா?அதான் எனக்கு வெருப்ப
\\

க்ராக்ஜாக் said...
//ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி//அட்ரஸ் தெரியாம குரியர் திரும்ப போய்டிச்சாம்..
\\


அதை விடுங்க சில சமயம் செந்தழல் ரவி " அய்யா நான் இதுக்கு முன்ன போட்ட கமெண்ட்டை அனானியா ஆக்கிவிடவும்" - இதுக்கு நான் 3 நாள் ரூம் போட்டு சிரிச்சேன்.



அதை எல்லாம் விடுங்க மேலே இருக்கும் போட்டோ என் சகோதரியின் மகன்! மாப்பு எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க!

நான் அதுக்கு போட நினைச்ச கமெண்ட்!
"அல்லோ RTO சார் 8 போட்டாதான் லைசென்சா? அதான் நான் 7 வரை போட்டுட்டேனே! பின்ன ஏன் எனக்கு லைசன்ஸ் தர கூடாது???"


இப்படியாக பின்னூட்டத்தில் புயல் கிளப்பும் நம்ம சகோதர சகோதரிகள் இருக்கும் வரை நமக்கு நோய் என்பது ஏது?????????

36 comments:

அபி அப்பா said...

நான் சொல்ல வந்தது என்னன்னா மக்களே உங்களுக்கு பிடிச்ச பின்னூட்டத்தை இங்க சொல்லுங்க!! அதான் நான் கேட்பது!

நாமக்கல் சிபி said...

ஆமா! அதான் 7 போட்டாச்சே! அப்புறம் என்ன?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சும்மா இருந்தால் அப்படியே குடும்பத்தோடு மொகல் கார்டன் பக்கம் வரவும். நான் வைத்திருக்கும் க்ரோட்டண்ஸ் செடிகளை பார்வை இடலாம். செக்கியூரிட்டியிடம் இந்த பின்னூட்டத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து காட்டவும்.( என்னோட கையொப்பம் வேறு போட்டிருக்கேன் , சத்தியமா செக்கியூரிட்டி நம்புவான்)//

இப்படி ஒரு பின்னூட்டம் வந்தது.. அப்பறம் அது யாரு போட்டான்னு தனியாமெயிலில் சொல்லிட்டங்க.. :)) அப்பறம் நிஜம்மாவே நான் மொகல் தோட்டமெல்லாம் போயிட்டுவந்தேன்.. அந்த பிரிண்ட் அவுட்காட்டாமலே..

நாமக்கல் சிபி said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பின்னூட்டம்

"மீ த ஃபர்ஸ்ட்டு!"

"ரிப்பீட்டேய்!"

நாமக்கல் சிபி said...

ரொம்ப ரசிச்ச எவர்கிரீன் பின்னூட்டம்

"இந்த பின்னூட்டத்தை நான் தான் இட்டேன் என்பதற்கு சாட்சியாக துண்டை போட்டுத் தாண்டுகிறேன்"

ஆயில்யன் said...

நான் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்! :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அரே, கோன் ஹே தூ...ப்லாக் மேலே புச்சா எய்துறே, டெல்லி கவர்மெண்ட் கிட்டே அனுமதி வாங்கீட்டியா// இது மன்மோகன் சிங் போட்ட பின்னூட்டம்..

பாருங்க நான் பின்னூட்டம் போடறதுக்குள்ள போட்டவரே வந்துட்டார்.. :))

நாமக்கல் சிபி said...

தீபா வெங்கட் பெயரில் வரும் எல்லா பின்னூட்டமும் பிடிக்கும்!

ஆயில்யன் said...

எனக்கு பிடிச்ச பின்னூட்டம்

கோபி தம்பியோட “கடமை”
சென்ஷி தம்பியோட ”கும்மி கவிதைகள்”
குசும்பு தம்பியோட “கமெண்ட்கள்” :)))

Anonymous said...

நாங்க போட்ட பின்னூட்டமெல்லாம் பிடிக்காதா?

பினாத்தலாரைக் கேட்டுப் பாருங்கப்பூ!

நாமக்கல் சிபி said...

ஒரு குசும்பு
குசும்பு பின்னூட்டங்கள்
பற்றி பேசுகிறது
ஆச்சரியக் குறி

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய் மீ த பத்து :))

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய் மீ த பத்து :))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
\\அரே, கோன் ஹே தூ...ப்லாக் மேலே புச்சா எய்துறே, டெல்லி கவர்மெண்ட் கிட்டே அனுமதி வாங்கீட்டியா// இது மன்மோகன் சிங் போட்ட பின்னூட்டம்..

பாருங்க நான் பின்னூட்டம் போடறதுக்குள்ள போட்டவரே வந்துட்டார்.. :))
//


அக்கா நீங்க அவரத்தான் சொல்லுறீங்களா :))))

Anonymous said...

நாங்கதான பத்து!

ஆயில்யன் said...

// நாமக்கல் சிபி said...
ஒரு குசும்பு
குசும்பு பின்னூட்டங்கள்
பற்றி பேசுகிறது
ஆச்சரியக் குறி
///
ஒரு குசும்பு
பல குசும்பு பின்னூட்டங்களை போடுகிறது ! (அடடே ஆச்சர்ய குறி)

Anonymous said...

ஒரு குசும்பு
பிற குசும்பு பின்னூட்டங்களை
பார்த்து வியக்கிறது
ஆச்சரியக் குறி!

ஆயில்யன் said...

//டீசல்யன் said...
ஒரு குசும்பு
பிற குசும்பு பின்னூட்டங்களை
பார்த்து வியக்கிறது
ஆச்சரியக் குறி!
///

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரொம்ப பிடிச்சதாண்ணே?

//அய்யனாரை 1 வருஷத்துக்கு நானும் குசும்பனும் லீஸ்க்கு எடுத்து இருக்கோம்//

:)
லீஸ்-ன்னதும் Lees ஜீன்ஸ் பேன்ட் வேற ஞாபகத்துக்கு வருது!
நீங்களும் குசும்பனும் ஒரு வருசம் அய்யானரின் ஜீன்ஸ் பேன்ட்டை எடுத்து இருக்கீங்களா?.....
சேச்சே! ஒரு வருசம் தாங்குமாண்ணே?
:))

//எங்களை தவிர வேற யாராவது கலாய்ச்சா எங்களுக்கு கப்பம் கட்டனும்//

:))
உங்க ரெண்டு பேரையும் கலாய்ச்சா அய்யனாருக்கு சேவை செஞ்சா மாதிரி இல்லையோ? :)

அறிவிலி said...

நச்

கைப்புள்ள said...

சமீபத்தில் ரசிச்ச பின்னூட்டம்

முகமது அலி ஜீன்னாவும், காந்திஜீ-ம் என்ன பேசி இருப்பார்கள்...???

பார்தீபன் said...
காந்தி : பார்ட்னர் ஒரு இழுப்பு குடேன்
ஜின்னா : அதெல்லாம் தர முடியாது நீ சப்பி எடுத்திடுவே

March 1, 2009 5:21 AM

எம்.எம்.அப்துல்லா said...

:))))

எம்.எம்.அப்துல்லா said...

:))))

Thamiz Priyan said...

:))

வெட்டிப்பயல் said...

சமீபத்தில் நான் ரசித்த பின்னூட்டம்

குசும்பன் said...
//"ச்சே அவ்ளோதானா கார்க்கி நீ?"//

உனக்கு நீயே சொல்லிக்கிட்டதால பிரச்சினை இல்லை சகா!

இதே ஒரு “பெண்” சொன்னுச்சுன்னு வெச்சுக்க அவ்வளோதா ஆள் காலி:)))))))
February 27, 2009 11:37 AM

சந்தனமுல்லை said...

ஹைய்யோ அது நிறைய இருக்கு..அதுவும் தீபா வெங்கட்..க்ராக் ஜாக் மாதிரி பெயர்க்ளில் போடுபவை ரசிக்கற மாதிரியும் இருக்கும்..அதோட ஹார்ம்லெஸ்! :-))

வால்பையன் said...

//பின்னூட்டத்தில் புயல் கிளப்பும் நம்ம சகோதர சகோதரிகள் இருக்கும் வரை நமக்கு நோய் என்பது ஏது?????????//

உங்க நோய் தீரணும்னு எங்க டவுசர அவுக்குறது நியாயமா?

வால்பையன் said...

//உங்களுக்கு பிடிச்ச பின்னூட்டத்தை இங்க சொல்லுங்க!! அதான் நான் கேட்பது!//

நமக்கு பிடிச்ச பின்னூட்டமா?
நம்மை பிடிச்ச பின்னூட்டமா?

வால்பையன் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பின்னூட்டம்


அப்பீட்டேய்ய்ய்ய்

சின்னப் பையன் said...

:-))

தமிழன்-கறுப்பி... said...

நான் முன்னல்லாம் பின்னூட்டங்கள்தான் வாசிப்பேன் பதிவுகள் ஒரு கடமைக்கு வாசிக்கிறது அவ்ளோதான்... :)

தமிழன்-கறுப்பி... said...

நான் பதிவுலகம் வருவதற்கு பின்னூட்டங்களும் ஒரு காரணம்.

நாமக்கல் சிபி said...

//நான் முன்னல்லாம் பின்னூட்டங்கள்தான் வாசிப்பேன் பதிவுகள் ஒரு கடமைக்கு வாசிக்கிறது அவ்ளோதான்... :)//

நாங்கெல்லாம் எப்பவுமே அப்படித்தான்!

ஆயில்யன் said...

//நாமக்கல் சிபி said...
//நான் முன்னல்லாம் பின்னூட்டங்கள்தான் வாசிப்பேன் பதிவுகள் ஒரு கடமைக்கு வாசிக்கிறது அவ்ளோதான்... :)//

நாங்கெல்லாம் எப்பவுமே அப்படித்தான்!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))))))

ஆயில்யன் said...

/நாமக்கல் சிபி said...
//நான் முன்னல்லாம் பின்னூட்டங்கள்தான் வாசிப்பேன் பதிவுகள் ஒரு கடமைக்கு வாசிக்கிறது அவ்ளோதான்... :)//

நாங்கெல்லாம் எப்பவுமே அப்படித்தான்!
//

எனக்கு இந்த பின்னூட்டம் நொம்ப்ப புச்சிருக்கு :))))))

Poornima Saravana kumar said...

//அல்லோ RTO சார் 8 போட்டாதான் லைசென்சா? அதான் நான் 7 வரை போட்டுட்டேனே! பின்ன ஏன் எனக்கு லைசன்ஸ் தர கூடாது???//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்