ரொம்ப சிம்பிள்! அதுக்கு தேவையான உபகரணங்கள் ஒரு கம்பியூட்டரும் நெட் கனக்ஷனும் இருந்தா போதும். எப்படியோ தத்தி குத்தி தமிழ்ல டைப்ப ஆரம்பிச்சுட்டு பின்ன ஒரு பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டா போதும். அத்தோட உங்க கவலை விட்டுச்சு. இனிமே கவலைப்பட போவது எல்லாம் மத்தவங்க தானே.
நானும் அப்படி இப்படி ஏதோ கிச்சு கிச்சு காட்டும் பதிவரா ஃபார்ம் ஆகிட்டேன். என்ன தான் நீங்க எல்லாம் ஒத்துகிட்டாலும் வீட்டுல ஒத்துகிட்டா தான கொஞ்சம் மரியாதை. அப்பத்தானே கல்யாணபரிசு தங்கவேல் பொண்டாட்டி மாதிரி பிளாக்கர்ஸ் வீட்டு தங்கமணிகளும் ஆப்பிள் ஜூசும், ஆட்டுக்கால் சூப்பும் தருவாங்க.
ஆனா என் வீட்டுல எல்லாம் தலைகீழ் கதை தான். இந்த தடவை நான் போனப்ப எப்படியும் என் தங்கமணியை என் பதிவு எல்லாம் படிக்க வச்சு சிரிக்க வச்சு போட்டோ எடுத்து "பாருங்க நான் எப்படி சந்தோஷமா வச்சிருந்தேன்"ன்னு என் வருங்கால சந்த்திக்கு காட்டிட ஆசைப்பட்டேன். ஏன்னா வரலாறு முக்கியம் இல்லியா?
"சரி நான் இத்தன எழுதறேனே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்ன்னு பயரியா 1431 பல்பொடி மாதிரி பேமஸ் ரைட்டரா இருக்கேனே, உனக்கு பெருமை இல்லையா அதல்லாம்?"
"ஹி ஹி, வேற பேச்சு இருந்தா பேசுங்க"
"அட நான் ஒரு காமடி எழுத்தாளன் தெரியுமா? என் பதிவை படிச்சுட்டு எத்தன பேர் சிரிக்கிறாங்க. பாரேன் இந்த பதிவை இதை படி பின்ன தான் சாப்பாடு சாப்பிடுவேன்"
மனசுக்குள்ளே (அட ஆண்டவா இவரை சாப்பிட வைக்க இந்த நரக வேதனை தேவையா)
"அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை, இப்ப சாப்பிடுங்க"
அடப்பாவமே ரமணர் சொன்னது சரிதான் போல இருக்கு. ஒருவன் பிறருக்கு கொடுப்பது எல்லாம் தனக்கே கொடுத்து கொள்வதாக அர்த்தம்’ன்னு, ஆகா நாம எத்தன பதிவிலே இதே டயலாக்கை படிக்காமலே போட்டு தாக்கியிருக்கோம். நமக்கே திரும்புதேன்னு நெனைச்சுகிட்டேன். இதை இப்படியே விடலாமா?
"அட இதுல ஹீரோ எல்லாம் கிடையாது. உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன். படி, பின்ன இதுல கேள்வி எல்லாம் கேப்பேன் எல்லாம் சரியா இருந்தா அட்லீஸ்ட் 80% வாங்கினா சாப்பாடு இல்லாட்டி சாப்பிட மாட்டேன்''.
பின்ன பத்து நிமிஷம் கழிச்சு வந்து பார்த்தா தங்கமணி கண்ணுல தாரை தாரையா கொட்டுது. என் காமடி பதிவை படிச்சுட்டு இப்படி அழுத முதல் ஆள்! என்ன்ன்னு கேட்டா "இந்த சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு வேற ஈசியா கொடுங்க"ன்னு சொன்னாங்க. விடுவனா? சரி தர்ரேன். இந்த பதிவிலே பாப்பா பாரத மாதா வேஷம் போடுறா, அதுல என்ன கஷ்டம் ஈசி சப்ஜெக்ட் தானே. சரி இந்த பதிவை படி ரொம்ப ஈசி தான் இந்த சப்ஜெக்ட் "பசுவுக்கு சவாலா" நல்லா இருக்கும் படி. பின்ன சாப்பாடு.
ஒரு வழியா 2 பதிவை படிக்க வைக்கும் முன்னே தாவு தீந்து போச்சு. ஆனா தங்கமணி தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா எப்போதும் போல "பேசாம அந்த சென்னை வரனுக்கே அப்பா முடிச்சிருக்கலாம், விதி எல்லாம் விதி"ன்னு சலிச்சுகிட்டு போனாங்க.
அடுத்த நாள் காலையிலே மாத்திரை மருந்துன்னு எடுத்து வரும் போது கண்டிப்பா சொல்லிட்டேன். சில கேள்வி எல்லாம் கேப்பேன். பின்ன தான் எந்த மருந்தும்ன்னு. சில பல கண்டிஷன் எங்களுக்கு இடையே. அதாவது அபிபாப்பா குளூ கொடுக்கலாம். ஆனா ஜாடையால் மட்டுமே. வாயால் சொல்ல கூடாது! சரின்னு ஒத்துகிட்டு சிலபஸ் கேட்டாங்க. சரி நானும் முதல்ல நம்ம வ.வா சங்கத்தையே முதல் சிலபஸ்ன்னு சொல்லிட்டேன். அதுக்கு இலவச இனைப்பா பாப்பா சங்கம்.
ஒரு மணி நேரம் அம்மாவும் பொண்ணும் விழுந்து விழுந்து படிச்ச பின்னே நான் வந்து உக்காந்தேன். என்னை ஒரு வில்லன் மாதிரியே பார்க்கிராங்க.
"சரி வவாசங்க தல யாரு"
"கைப்புள்ள"
"குட், இது கேள்வில சேர்த்தி இல்ல! சும்மா டிரையல் பால் மாதிரி(இப்படித்தான் தெரு பசங்க கிட்ட கிரிக்கெட் விளையாடும் போது நான் அவுட் ஆகும் போதல்லாம் அது டிரயல் பால்ன்னு சொல்லுவது வழக்கம்) முதல் கேள்வி கேட்கவா"
"அய்யோ நான் இந்த போங்கு ஆட்டத்துக்கு ஒத்துக்க மாட்டேன், இதும் ஒரு கேள்விதான், ஏன் சங்கத்து தல அதுக்கு கூட ஒர்த் இல்லியா? சரி அட்லீஸ்ட் இந்த பதிலுக்கு இந்த சின்ன மாத்திரை ஓக்கேவா"
"சரி ஓக்கே சின்ன மாத்திரை தானே, இப்ப கேக்குறேன் பாரு, சங்கத்தின் போர் வாள் யார்?"
"அய்யோ எடுத்த உடனே பத்து மார்க் கேள்வி கூடாது சின்ன சின்ன தா கேளுங்க 1 மார்க் கேள்வியா கேளுங்க, சிபி சம்மந்தமா, பாலாஜிதம்பி சம்மந்தமா இப்படி ஒரு மார்க் கேள்வி ஓக்கே"
"சரி ஓக்கே சிபிக்கு எத்தனை பிளாக் இருக்கு, ஊருக்கு தெரிஞ்சு எத்தனை, ரகசியமா எத்தனை?"
"அய்யோ இது அவருக்கே தெரியாது! வேற எதுனாவது பாலாஜி பத்தி கேளுங்க"
"சரி பாலாஜி பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாரு?"
"பதிவு போடுவாரு"
"அய்யோ அதிக பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாருன்னு கேட்டேன்"
அபி அப்ப குறுக்கிட்டு"அப்பா நீங்க கேட்ட கேள்விக்கு சரியான பதில் தான் இது மரியாதையா மார்க் கொடுங்க, அதனால இந்த பெரிய மாத்திரை ஓக்கேவா"ன்னு சொல்லிகிட்டே வாயிலே மாத்திரையை போட்டு தண்ணி ஊத்திட்டா.
"அப்படியா சரி இப்ப சொல்லு, புலி யாரு?"
"பிரபாகரன்"
"நோ"
"இல்லியா, அப்ப அவரு யாரு?"
"அந்த நோ இல்லை இது, சங்கத்துல யாரு புலி"
"சங்கத்துல எல்லாம் சிங்கம் தான் புலி இல்ல"
இல்ல ஒரு புலி இருக்கு நாகையிலே இருந்து"
"அய்யய்யோ நாகைல புலியா அப்ப உங்க ஆட்சி அம்பேலா?"
அதுக்கு அபி"அய்யோ அம்மா, அந்த புலி அங்கிள் புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் போட்டு குளிப்பாராம் அதான் அந்த பட்ட பேரும்மா, அதுக்கு எல்லாம் ஆட்சியை கலைக்க மாட்டாங்க"
"சரி இப்ப சொல்லு தேவ்க்கு என்ன பட்ட பேர்? "
தங்கமணி அபியை பார்க்க அபி தன் முயற்சி எல்லாம் சைகையிலே சொல்லியும் புரியாமல் விழிக்க அப்ப பார்த்து தம்பி நட்டு "வாள்"ன்னு கத்த நான் "அபி ஏன் அவன் வாள்ன்னு கத்துறான்ன்னு நான் கேட்க அபி அதுக்கு "அவன் "போர்" அடிச்சா அப்படித்தான் கத்துவான்ப்பா"ன்னு சொல்ல தங்கமணிக்கு ஞானம் வந்து "போர்வாள்"ன்னு சொல்ல நான் அப்படியே நட்டுவும் அபியும் சைகையால் உதவி செய்யாம வார்த்தையால் உதவி செய்தமையால் நான் மார்க் கொடுக்கவில்லை.
"ந்தோ பாருங்க உங்க சங்கத்து சிங்கத்துக்கு எல்லாம் பத்து பத்து புள்ள பொறந்து எல்லாம் ஆளுக்கு 8 பிளாக் ஒரிஜினலாவும், 27 பிளாக் பினாமியாவும் வச்சு எப்ப பார்த்தாலும் அவங்க அப்பா எல்லாரையும் படிச்சு கமெண்ட் போடுங்கப்பான்னும், ஆன்லைன்ல இருந்தாலும் ஆஃப் லைன்ல இருந்தாலும் லிங் கொடுத்தும், தனி மெயில்ல "நேரம் இருக்கும் போது படிங்க,இதான் என் லிங் :குறிப்பு: இன்னும் 10 நிமிஷத்துல நேரம் உங்களுக்கு கிடைக்கலைன்னா நான் திரும்பவும் ஒரு மெயில் அனுப்பி ஞாபகப்'படுத்தறேன்' எனவும் சொல்லி தொல்லை குடுக்கலை என் பேரை மாத்திகுங்க"ன்னு சாபம் விட்டுட்டு போயிட்டாங்க.
அத்தோட நான் 2 நாள் டைம் கொடுத்தேன். நல்லா படிச்சு பாஸ் பண்ணுங்கன்னு சொல்லி!
*************************
மக்கா பதிவு முடிஞ்சுது. இப்ப தலைப்பு ஓக்கேவா! ஆனா பாருங்க பதிவு தான் முடிஞ்சுதே தவிர ஒரு விஷயம். எல்லார் தங்கமணியும் ஒரு கொடுமைன்னா தாங்கிட்டு விதின்னு போயிடுவாங்க. ஆனா என் வீட்டு நிலைமை இருக்கே ரொம்ப கொடுமை. "கணவனை கொடுமை படுத்துவது எப்படி"ன்னு அடுத்த பதிவே போடும் அளவு சமாச்சாரம் இருக்குங்க. வந்தது வந்துட்டீங்க அதையும் படிச்சு தொலைங்க அந்த கொடுமையை!
*******************************
"என்னங்க இன்னுமா தூக்கம் ஆயில்யன் காலை பதிவு போடும் நேரம் ஆச்சு, விட்டா தூங்கிகிட்டே இருப்பீங்க தம்பி ஆயில்யன் மதிய பதிவு போடும் வரைக்கும்"
"அல்லோ என்னங்க பப்பு இன்னிக்கு ஸ்கூல்க்கு டிபன் வேண்டாம், சும்மா திராட்சை பழம் போதும்ன்னு சொல்லிட்டா"- இது தங்கமணி!
"ஏன் டேய் அபி என்ன நினைச்சுகிட்டு இருக்க நல்லா சாப்பிடனும்"- இது நான்
"அப்பா நான் பப்பு இல்ல பாப்பா, அம்மா சொன்னது பப்புவை பத்தி, முல்லை ஆண்டி பதிவு படிச்சிருப்பாங்க போல இருக்கு"- இது அபி!
"சாப்பாடு என்ன ஆச்சு?" இது நான்!
"இருங்க நல்லா ஸ்டெர்லைஸ் பண்ணாம தட்டு கொடுக்க கூடாதுன்னு அம்மா வலைப்பூவிலே போட்டிருந்தாங்க"- தங்கமணி
மதியம்: அல்லோ என்ன பண்ணிகிட்டு இருக்க!
தங்கமணி: இருங்க எட்டு புள்ளி எட்டு வரிசை கோலம் போட்டு ஸ்கேன் பண்ண போரேன்!
"நான் கடவுள் படம் இன்னிக்கு போலாமா"
"லக்கி நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு, அதிஷா அருமைன்னு சொல்லியாச்சு, அடுத்து 4 பதிவு ஒரே கொடுமை அதும் லேடீஸ் வர கூடாதாம். நீங்க போய் தனியா பார்த்துட்டு வாங்க"
"ஹல்லோ சாப்பாடு என்ன இன்னிக்கு"
"இருங்க அதுக்கு தான் நானும் வெயிட்டிங், தூயா எப்படியும் இன்னிக்கு ஒரு பதிவு போடுவா, இன்னிக்கு அதான் மெனு!"
"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"
"ஓ இன்னிக்கு சம்பள நாளா சரி ஓக்கே, ஆமா 6 மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு வரி கட்டனுமே அதை எப்படி நியாபக படுத்துவ?"
"அதான் டுபுக்கு பதிவு போடுவாரே அப்ப கட்டினா போதும்"
"சரி ஹீட்டர் போடு நான் குளிக்க போறேன்"
"அய்யோ ரிஷான் பதிவு படிக்கலையா உலக செய்தி, ஆப்ரிக்காவிலே ஒருத்தர் ஹீட்டர் போட்டு குளிச்சதுக்கு அமிஞ்சிகரையிலே எலக்ட்ரிக் பில் வந்துச்சாம்"
" சரி ஷூ எடு நான் விளையாட போகனும்"
"அய்யோ டெட்டால் தீர்ந்து போச்சு சேத்துல நடந்து போய் டெட்டால் வாங்கிட்டு வாங்க, டாக்டர் புரூனோ சொல்லிட்டாரு"
'சரி எதுனா அய்யனார் பதிவு வந்துச்சா?"
"அய்யோ ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு நான் கேயாரெஸ் பதிவு நறுக்குன்னு 4 எடுத்து வச்சிருக்கேன் வந்து படிங்க"
"இல்ல நாம ஒரு முடிவுக்கு வரலாம்! இனி நானும் உன்னை கொடுமை படுத்த மாட்டேன், நீயும் என்னை கொடுமை படுத்த கூடாது ஓக்கே"
51 comments:
பின்னிட்டீங்க! உங்களை ரொம்ப சீரியஸான ஆசாமின்னு நினைச்சேன்! இவ்வளவு அக்குறும்பா? :-)))
வேணு (பண்புடனிலே உங்க கூட தொடர்ந்து சண்டை போடுவேன்)
அபி அப்பா...சான்ஸே இல்லை. எல்லா பதிவரையும் ஒரே பதிவுல ஒன்னா இணைச்சு ஒரு காமெடி பதிவு. அதுலயும் டெஸ்ட் வைக்கிறதும், ஆளாளுக்கும் மாத்தி கொடுமை படுத்திக்கிற டெக்னிக்கும் கலக்கல்ஸ் ஆஃப் மாயவரம்.
:)
சபாசு!
:))
சூப்பர் பதிவு!
சிரிச்சிகிட்டே இருந்தேன் படிச்சிட்டு!
//பின்னிட்டீங்க! உங்களை ரொம்ப சீரியஸான ஆசாமின்னு நினைச்சேன்! இவ்வளவு அக்குறும்பா? //
அபி அப்பா சீரியஸான ஆசாமியா?
ஹெஹெஹ்!
ஜூப்பரு...
வேணு! உங்க வருகை எனக்கு சந்தோஷம் கொடுக்குது. நாம எப்பவும் பண்புடன்ல சண்டை போட்டுப்பது வேற. உண்மையிலேயே ஆசீப் பண்புடன் ஆரம்பிச்ச நோக்கம் இப்ப தான் எனக்கு புரியுது. அது வேற இது வேற.கட்சி என்பதும் கொள்கை என்பது தனி! ஆனா நாம எல்லாரையும் விவாதத்தால் ஒன்னு சேர்பது பண்புடன், சிரிப்பால் ஒன்னு சேர்ப்பது வ.வா.சங்கம்!
அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை
தல! ஆனா நீங்க 1 மார்க் கேள்வியாகிட்டீங்கலே என்னால தாஅங்க முடியலை!:-))
நன்னி பழமைபேசி அய்யா!
\\ அறிவிலி said...
அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை
\\
சுத்தம்! சுத்தம்! யோவ் எனக்கு வடிவேலு ,மாதிரிகோவம் வரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))
:))
சூப்பர் பதிவு!
சிரிச்சிகிட்டே இருந்தேன் படிச்சிட்டு!
//இந்த சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு வேற ஈசியா கொடுங்க"ன்னு சொன்னாங்க.//
சத்தம்போட்டு சிரிச்சுட்டேன்ங்க...
:))
:))))))))))))))
/"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"/
gopi'nu oru pathivar irukkaaraa?
நீளமா இருந்தாலும் தொடர்ந்து சிரிக்க வச்சுட்டிங்க அங்கிள் - சாரி சிங்கம்..
:)
வேணு said...
\\
பின்னிட்டீங்க! உங்களை ரொம்ப சீரியஸான ஆசாமின்னு நினைச்சேன்! இவ்வளவு அக்குறும்பா? :-)))
\\
ஹ ஹாஹா....
வேணு நீங்க இவ்வளவு சிடியஸா காமெடி பண்ணுவிங்கன்னு எதிர்பாக்கல.. ;)
:) பரவாயில்லயே.. என்னன்னாலும் சொல்லுங்க க்ருஷ்ணா ... ஒருதடவை தான் தப்பு செய்தாங்க..மத்தபடி புத்திசாலி..
\\ ச்சின்னப் பையன் said...
:))
சூப்பர் பதிவு!
சிரிச்சிகிட்டே இருந்தேன் படிச்சிட்டு\\
அட அது இருக்கட்டும் ச்சின்ன பையன்! உங்க தல ஜேகேயார் பிரந்த நாள் நேத்து! அதை நினைச்சே இன்னும் ம்க்கள்ஸ் சிரிக்குது, இதல்லாம் அதுக்கு ஈடாகுமா!:-))
\\ Thamizhmaangani said...
//இந்த சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு வேற ஈசியா கொடுங்க"ன்னு சொன்னாங்க.//
சத்தம்போட்டு சிரிச்சுட்டேன்ங்க...\\
யம்மாடீ தங்கமாங்கனி! இருக்கு அடுத்து பாப்பா சங்கத்துக்கு! இந்த பதிவு பெருசா போச்சுன்னு விட்டுட்டேன்!! நன்றிப்பா:-))
\\ நிஜமா நல்லவன் said...
/"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"/
gopi'nu oru pathivar irukkaaraa
\\
உனக்கு இன்னிக்கு இருக்குடீ! அவன் வரட்டும் நெட்டுக்கு அப்ப வச்சுப்பான் கச்சேரியை!உனக்காகவே ஒரு பதிவு போட்டு தான் ஒரு பிளாக்கர்ன்னு அவன் நிரூபிக்கலைன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... அவன் பேரை மாதுக்குங்க:-))
\\ தமிழன்-கறுப்பி... said...
நீளமா இருந்தாலும் தொடர்ந்து சிரிக்க வச்சுட்டிங்க அங்கிள் - சாரி சிங்கம்\\
வாங்க த்மிழன் கருப்பி! நான் தான் இதுக்காக சொன்னேன் முதல் பதிவிலே நானு யூத்து யூத்துன்னு திரும்பவும் அங்கிளா அவ்வ்வ்வ்வ்வ்:-))
"அப்படியா சரி இப்ப சொல்லு, புலி யாரு?"
"பிரபாகரன்"
"நோ"//
சுப்பர் பாஸ், நிஜமாவே படிச்சுத் தான் பின்னூட்டம் போடுறேன். அபி அம்மா, அபி அவஸ்தை கண்ணுக்குள் நிக்குது ;)
\\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) பரவாயில்லயே.. என்னன்னாலும் சொல்லுங்க க்ருஷ்ணா ... ஒருதடவை தான் தப்பு செய்தாங்க..மத்தபடி புத்திசாலி..\\
வாங்க முத்து அக்கா! எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துப்போம். வேண்டாம் விட்டுடுங்க! நீங்க இப்படி கொளுத்தி போட்டுட்டு போயிடுவீங்க,அடுத்துவரும் நம்ம ஆளுங்க எல்லாம் அதைஇ வச்சே கும்மி அடிக்கும் இது தேவையா:-))
\\"அப்படியா சரி இப்ப சொல்லு, புலி யாரு?"
"பிரபாகரன்"
"நோ"//
சுப்பர் பாஸ், நிஜமாவே படிச்சுத் தான் பின்னூட்டம் போடுறேன். அபி அம்மா, அபி அவஸ்தை கண்ணுக்குள் நிக்குது ;)\\
வாங்க கானாபிரபா!
மிக்க நன்றி! நகைச்சுவை தான் எல்லா காயத்துக்கும் நல்ல மருந்து! நம்மால அந்த மருந்து மட்டுமே தரக்கூடிய நிலை! நன்றி கானா!
ஹாஹஹஹஹாஆ
பல பேரை பல நாளா கலாய்க்கனும் என்று எண்ணியதை இன்னிக்கு நிறைவேத்திட்டீங்க...
இருந்தாலும் என்னைய ரொம்பவே நாசத்தி பண்ணிட்டீங்க.. மைண்ட்ல வச்சுக்குறேன் :)
சிவா நானா சிவா நானா சிவா! எல்லாம் அவள் செயல்! ஆமா அப்படின்னா நெசமாவே புலிமார்க் சீயக்காய் தூள் தானா?:-))
அவ இன்னும் 1 வருஷத்துல பதிவு போட ஆரம்பிப்பா அப்ப வச்சுக்கப்பா உன் கச்சேரிய, நான் பாவம் இல்லியா?:-))
கலக்கல்! இப்ப தான் வ.வா.ச களை கட்டுது.. :)))
வாங்க தமிழ்பிரியன்!
சங்கம் எப்பவுமே களை கட்டி தான் இருக்கும். நாம உள்ள பூந்து லந்து பண்ணும் நேரம் இது! அவ்வளவே!
ஹி ஹி ஹி:-))))
i love u abiabba
சுவையாக இருந்தது.
தங்கமணிகள் கம்பியூட்ரை உடைக்காமல் இருந்தால் சரி.
\\ vipoosh said...
i love u abiabba
Fri Mar 06, 10:07:00 PM IST
\\ நன்றிப்பா விப்பூஷ்!!
\\ டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
சுவையாக இருந்தது.
தங்கமணிகள் கம்பியூட்ரை உடைக்காமல் இருந்தால் சரி.
\\
வாங்க டாக்டர்! நான் உங்க பதிவு "நாங்க யாழ்பானத்தில் இருந்தால் புக்கை சமைச்சிருப்போம்: என்ற பதிவை அதன் தலைப்பை மாத்திரம் கிண்டல் பண்ணி எழுதினேன்!
ஆனா என் தோழி சொன்னதுக்காக அதை எடுத்துட்டேன்
டாகடர் நிங்ககூட நகைச்சுவை ரசிப்பவர் தானா அய்யா????
அபி நைனா.. சங்கத்து சிங்கத்துல்ல அல்லாருக்கும் அறிவுரை சொல்ற அந்த ஆன்மீக சிங்கத்து கிட்டே அமவுண்ட் வாங்கிட்டு சிலபஸ்ல்ல இருந்து சைலண்ட்டா அவரைப் பத்தி அதிகம் மேட்டர் இல்லாம பண்ணிட்டீங்களே...
பதிவு டாப் டக்கர் பாஸ் ஒரே பதிவுல்ல் மொத்த பதிவுலகத்தையும் பின்னி பெடல் எடுத்துட்டீங்க....கலக்கல் தொடருங்க..
:)))))
யாருப்பா இந்த அபி அப்பா? ஏன் இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தறாரு? அதுவும் சங்கத்துச் சிங்கங்களின் அன்புக்குரிய அண்ணியை? இதை நான் கன்னா பின்னாவென்று கண்டித்து பெட்டிஷன் போட்டு கையெழுத்து வேட்டை நடத்தப் போறேன்! :)
//"அய்யோ ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு நான் கேயாரெஸ் பதிவு நறுக்குன்னு 4 எடுத்து வச்சிருக்கேன் வந்து படிங்க"//
ஆகா! அண்ணி நம்ம கட்சியா? அண்ணீணீணீணீணீணீணீணீ......
:)
அண்ணே,
பதிவு கலக்கலோ கலக்கல்... ஒரே பதிவுல எல்லாரையும் கலாய்ச்சிட்டீங்களே :)
/ அபி அப்பா said...
\\ நிஜமா நல்லவன் said...
/"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"/
gopi'nu oru pathivar irukkaaraa
\\
உனக்கு இன்னிக்கு இருக்குடீ! அவன் வரட்டும் நெட்டுக்கு அப்ப வச்சுப்பான் கச்சேரியை!உனக்காகவே ஒரு பதிவு போட்டு தான் ஒரு பிளாக்கர்ன்னு அவன் நிரூபிக்கலைன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... அவன் பேரை மாதுக்குங்க:-))/
உங்க காமடிக்கு அளவே இல்லையா???? அவராவது பதிவு போடுறதாவது....ஏதாவது நடக்கிற மாதிரி சொல்லுங்க...:)
\\தேவ் | Dev said...
அபி நைனா.. சங்கத்து சிங்கத்துல்ல அல்லாருக்கும் அறிவுரை சொல்ற அந்த ஆன்மீக சிங்கத்து கிட்டே அமவுண்ட் வாங்கிட்டு சிலபஸ்ல்ல இருந்து சைலண்ட்டா அவரைப் பத்தி அதிகம் மேட்டர் இல்லாம பண்ணிட்டீங்களே...
Fri Mar 06, 11:34:00 PM IST
தேவ் | Dev said...
பதிவு டாப் டக்கர் பாஸ் ஒரே பதிவுல்ல் மொத்த பதிவுலகத்தையும் பின்னி பெடல் எடுத்துட்டீங்க....கலக்கல் தொடருங்க..\\
வாங்க போர்வாள்!நன்னி நன்னி!அதிகபட்ச டேமேஜ் ஆனாலும் வலிக்கலையே வலிக்கலையே ன்னு வந்து பாராட்டு தெரிவிக்கும் போர்வாளுக்கு நன்னி!
//அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை, இப்ப சாப்பிடுங்க///
இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு,
மத்தபடி, அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை. :-))
\\ Kathir said...
:)))))
Sat Mar 07, 02:06:00 AM IST\\
வாய்யா கதிரு! ஏற்கனவே ஒரு கதிர் இருந்தாரு துபாய்ல இப்ப நீங்க! வாங்க கலக்குங்க!
விடாம சிரிக்க வச்சிட்டீங்க சார்.
:)))
"இல்ல நாம ஒரு முடிவுக்கு வரலாம்! இனி நானும் உன்னை கொடுமை படுத்த மாட்டேன், நீயும் என்னை கொடுமை படுத்த கூடாது ஓக்கே"
:)))))))))))))
athu matter.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. போனதடவை உங்க பதிவைபடிச்சு வயிறு வலிக்குது மாத்திரை அனுப்புங்கன்னா, முள்ளை முள்ளால எடுக்கறமாதிரி பதிவு போடறேனு சொன்னீங்களே!!
அது இது தானா??
மீ த 50.
:))))))))
கலக்கல், எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ
Post a Comment