Thursday, January 8, 2009

கலவி அல்ல இது கல்வி !!!


காலை எல்லாம் பார்திருக்க முடியவில்லை

அதனால்தான் கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்


என மாலை மாடிக்கு வரச்சொல்லி

அங்கிருந்த துணியெல்லாம் துவைத்து காயப்போடச் சொல்லி

தென்றலையும் சூடாக்கும் பெருமூச்சு விட்டிருந்து

அதை வெச்சி அப்படியே கொஞ்சம் துணிகளுக்கு இஸ்திரியும் போட்டு

மாடிப்படியை நோக்கி முக்தியடையும் முனிவன் போல்

அதாவது ஆஃபாயில் போட்டு பிளாட் ஆகும் சிட்டிசனைப் போல

காத்திருந்து காத்திருந்து அந்தியும் சாய

அப்படியே மப்பில் நானும் சாய

அத்தானை தேடியே அணங்கு நீ வந்திட

வாடகையைத் தேடி வீட்டு ஓனரும் அங்கு வந்திட

தெய்வம் கண்ட பக்தன் போல் மெய்சிலிர்ப்பில் நான்

பணிவைக் காட்டி பம்மிப் பதுங்கிட

வீட்டு கடமைகளை முடித்து களைப்பில் நீ இருந்தாலும்

கதவு ரிப்பேர், வீட்டு மெயிண்டனன்ஸ் வேலைகளின் களைப்பில் ஓனர் இருந்தாலும்

கள்ளி உன் ஒற்றைகல் மூக்குத்தி எனை கேலியாய் பார்குதடி

பின்னே ஒரு வருஷ வாடகை பாக்கியை பெருமையாவா பார்ப்பாங்க


வீட்டில் ஆரவாரம் அடங்க அரைமணி நேரம் ஆனாலும்

ஓனர் சத்தம் அடங்க ஆறு மணிநேரம் அல்லவா ஆகும்

காத்திருப்பின் அவசியத்தை கண்ணாலையே

ஒரு வருஷக் காத்திருப்பு, கண்ணால மட்டும் இல்லடா, கை காலாலயும் என ஓனர் சொல்ல

சொல்லிநான் படும் வேதனையை கண்டு

சிக்கித் திண்டாடித் தடுமாறும் என் தைரியத்தைக் கண்டு

நமட்டு சிரிப்புடன்வேலை இருக்கு நான் வ்ருகிறென் என நீ வேண்டுமென்றே சொல்ல


வேலை இல்லாம வெட்டியா இருக்கேன்னு நினைச்சியா, அப்புறமா வருவேன் மருவாதியா வாடகையை எடுத்து வையென்று அவரும் சொல்ல

வேலை எல்லாம் இருக்கட்டும் என நான் மஞ்சத்தில் உனை தள்ள

ம்ஹூம்! வாடகை கொடுக்க வக்கில்லை! ஆளுங்களைப் பாரென்று

ஊரடங்கும் வேளையிலே ஒய்யார மஞ்சத்தில் நீயும் நானும்

தெருக்கோடியிலே அவர் என் கழுத்தில் துண்டைப் போட

மின்னும் நிலவொளியில் வேர்வைத்துளிகள் முத்தாய் மின்ன


பேசவேண்டும் என வரச்சொல்லி பேச்சுக்கே வேலை இன்றி

நையப் புடைத்து என்னை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க

ஒளியிருக்க ஒலிஎதற்கென வளையல் கொலுசுகள் களைந்து

கத்தாதே என்று எச்சரிக்க என் கழுத்தில் கத்தி வைத்து

ஆலிங்கனம் அது அன்பின் உச்சம் என உணர

அவரது கடுப்பு என்பதன் உச்சம் எதுவென்று உணர்த்த

ஆன்மாவையும் அணைத்தாயடி கள்ளி

பின்னி எடுத்தாயடா சண்டாளா! அடித்துத் துவைக்க வேறு இடமா இல்லை

இது கலவி அல்ல கல்வி.

இது அறை அல்ல! தெரு! எல்லோரும் பார்க்கிறார்கள் வேடிக்கை


(பேசியபடியே ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி விட்டு நான் அக்காலி வரிகளை நிரப்பி ஒரு புதுவித கவுஜை படைப்போம் என்றழைத்த அட்லாச் இளையகவிக்கு நன்றி- நாமக்கல் சிபி)

5 comments:

ILA (a) இளா said...

இது கவிதைதான் ஆனா பின்நவீனமா இருக்கே.. அதாவது எனக்கு புரியலையே,,

என்னமோ போங்க, ஒன்னுங்கீழ ஒன்னு போட்டா கவிதையாயிருது.

சின்னப் பையன் said...

அதுக்காகத்தான் அந்த அறையை 'பள்ளி அறை'ன்னு சொல்றாங்களா.... ஆஆஆஆ..

இளைய கவி said...

// ILA said...

இது கவிதைதான் ஆனா பின்நவீனமா இருக்கே.. அதாவது எனக்கு புரியலையே,,

என்னமோ போங்க, ஒன்னுங்கீழ ஒன்னு போட்டா கவிதையாயிருது.//

என்ன பண்றது எல்லாம் இந்த சித்தப்பூவால் வந்த வினை

இளைய கவி said...

//ச்சின்னப் பையன் said...

அதுக்காகத்தான் அந்த அறையை 'பள்ளி அறை'ன்னு சொல்றாங்களா.... ஆஆஆஆ..//

ஆமாம் பாஸ் இதுக்கு மேல ஏதாவது தகவல்ல் தெரியனும்னா எங்க சித்தப்பூவை தொடர்பு கொள்ளவும்

வால்பையன் said...

ஐய்யோ மாமே எனக்கு தலை சுத்துதுதே!