Thursday, January 8, 2009

சங்கம் டெக்னாலஜிஸ் - IN RECESSION

நம்பர் 12 விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
துபாய் பஸ் ஸ்டாண்ட் அருகில்
துபாய்...

கடந்தப் பல ஆண்டுகளாக அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் வருத்தப்படாத தலைமையிடமாக செயல்பட்டு வருவது உலகறிந்த செய்தி... அத்தோடு மட்டுமின்றி அகில உலகச் சந்தைக்கும் சவால் விடும் பல கில்லித் தனமான மென்பொருட்களையும் தயாரித்து வினியோகித்து வரும் மென்பொருள் நிறுவன ராட்சசன் (SOFTWARE GIANT) சங்கம் டெக்னாலஜீஸின் தலைமையிடமும் அதுவே...

சற்று முன் அந்த நிறுவனத்தின் தலைவர் திரு .கே.ஆர்.எஜு ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார்...அந்த அறிக்கையோடு தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்...உலக வர்த்தக சந்தையையே அந்த அறிக்கை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது... இது பற்றி கருத்து அறிய சங்கம் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர் திரு.பார்மர் இளாவை தொடர்பு கொள்ள அவரது அமெரிக்க மேயர் இல்லத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.. அவரது செல்லில் தொடர்ந்து ஆப்பிள் ஜூஸ் குடித்தால் உடம்புக்கு நல்லது..அதனால் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்க... அப்புறமாப் பேசலாம் என்ற செய்தியே மீண்டும் மீண்டும் ஒலித்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

திரு.கே.ஆர்.எஜூ தம் அறிக்கையில் தமது நிறுவனமான சங்கம் டெக்னாலஜீஸ் கடந்த பல வருடங்களாக சாப்ட்வேர் தயாரிப்பதாக கூறி பல கஸ்டமர்களை நம்ப வைத்து.. ஆண்டு கணக்கில் தொடர்ந்து புராஜக்ட் செய்வதாக தாங்கள் கூறியதெல்லாம் வெறும் பொய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்... மேலும் அதிர்ச்சிகரமான வகையில் அவர் கூறியதாவது தமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் சாப்ட்வேர் என்றால் என்னவென்றே தெரியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்...

கடந்தப் பல ஆண்டுகளாக தமது நிறுவனம் எப்படியோ சாப்ட்வேர் செய்ய தெரிந்தது போலவே தொடர்ந்து ஒரு பில் டப்பு கொடுத்து உலக வங்கி முதல் உள்ளூர் சவுக்கார் பேட்டை சேட் வரைக்கும் குறைந்த வட்டிக்கு கணக்கு வழக்கின்றி பணம் வாங்கி குவித்த கதையையும் வெட்கம் இன்றி வெளிபடையாக ஒத்துக் கொண்டுள்ளார்.

சங்கம் டெக்னாலஜிஸ் தீடிரென கடந்த மாதம் மேக்னாஸ் பயாஸ்கோப் என்ற படக் கம்பெனி ஆரம்பித்து...அதில் முக்கிய தயாரிப்பாளர் கம் இயக்குனர் கம் நடிகராக சங்கம் டெக்னாலஜிஸின் முக்கிய போர்ட் மெம்பர் தளபதி சிபி பொறுப்பேற்றதும் சங்கம் டெக்னாலஜீஸ் மீது பொது மக்கள் அதிருப்தி கொள்ள செய்தது..அதிலும் சிபி இரு கோடுகள்.. வஞ்சிக் கோட்டை வாலிபன்.. மற்றும் நான் அவன் இல்லை போன்ற காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படங்களை தானே நடித்து ரீமேக் செய்ய திட்டமிட்டது ஷேர் ஹோல்டர்ஸ்க்கு மேலும் ரத்தக் கொதிப்பு ஏற்படுத்தி விட்டது நமக்கு தெரிந்த செய்தி...

சங்கம் டெக்னாலஜிஸை சேர்ந்த தன்னிச்சை இயக்குனர்களில் ஒருவரான ராயல் ராம் சங்கம் டெக்னாலஜீஸ் சேர்மன் இளா மீது 100 ரூபாய் தன்னிடம் கடன் வாங்கி ஏமாற்றியதாக... சூடான் கிழக்கு ஜில்லா பஞ்சாயத்தில் பிராது கொடுத்துள்ளதாக சங்கம் டெக்னாலஜீஸ் சூடான் இயக்குனர் சிவா தெரிவித்தார்...

சூடான் சந்தையில் புது சொம்பு வாங்கியதும்.. ராயல் ராமின் பிராது விசாரிக்கப்படும் என சிவா மேலும் தெரிவித்தார்...

ச்ங்கம் டெக்னாலஜீசின் மற்ற தன்னிச்சை இயக்குனர்கள் கைப்புள்ள,பாண்டி ஆன்சைட்டில் அப்ஸ்காண்டாக இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன...உள்ளூரில் இருக்கும் தேவ்.. வெட்டி பயல் பாலாஜி எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாத இந்த நிலையில் சங்கம் டெக்னாலஜீஸின் தற்காலிக தலைவராக கப்பி பொறுப்பேற்று உள்ளார்...

இன்று மாலை நிருபர்களைச் சந்தித்த கப்பி...
சங்கம் டெக்னாலஜிஸில் சில பல தவறுகள் நடந்திருக்கலாம்...அது புரிதல்களில் ஏற்பட்ட தவறு.. நிச்சயம் திருத்தி கொள்ளுவோம்...அதாவது கடந்த பல ஆண்டுகள் சாப்ட்வேர் தயாரிக்க எவ்வளவோ முயன்றோம்..அந்த முயற்சி மிகவும் உண்மையானது... எங்கள் முயற்சியின் பலனால் சாப்ட்வேரில் வேரை அடைந்து விட்டோம்... தயாரித்த வேரை இப்போது உங்கள் முன்னிலையில் கஸ்டமர்களுக்கு அளிக்கிறோம் விரைவில் மீதியையிம் கொடுப்போம் என உறுதி கூறுகிறேன்...

பத்திரிக்கைகாரர்கள் பிளாஷ் எல்லாம் மின்ன... கப்பி சங்கம் டெக்னாலஜிஸ் தயாரித்த பட்டாபட்டி அன்டர்வேர்களை சிரித்தப் படி உயர்த்திப் பிடித்து போஸ் கொடுக்கிறார்....

சூடானில் ஒரு அடர்ந்த காட்டில் ஒளிந்த படி இந்தக் காட்சியை சாட்டிலைட் டிவியில் பார்க்கும் மற்ற சங்கத்துப் பெருமக்கள்....

ஆனாலும் நம்ம கப்பிக்கு ரொம்பத் தான் தைரியம்... பச்சப் புள்ள மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு போஸ் வேற கொடுக்கிறான் பாருப்பா...

அட விடுங்க சிங்கம்ஸ் மக்கள் இதை எல்லாம் டக்குன்னு மறந்துருவாங்க...அடுத்த பிஸ்னெஸ் என்ன ஸ்டார்ட் பண்ணுறதுன்னு யோசிப்போம் வாங்க....

21 comments:

பினாத்தல் சுரேஷ் said...

அட்றா அட்றா அட்றா!

:-))))))))))))))))))))

ஆயில்யன் said...

//அதில் முக்கிய தயாரிப்பாளர் கம் இயக்குனர் கம் நடிகராக சங்கம் டெக்னாலஜிஸின் முக்கிய போர்ட் மெம்பர் தளபதி சிபி பொறுப்பேற்றதும் சங்கம் டெக்னாலஜீஸ் மீது பொது மக்கள் அதிருப்தி கொள்ள செய்தது..//


பாதிக்கப்பட்டது என்னவோ ”தள”தான்

டோட்டல் டேமேஜ் :))))

ஆயில்யன் said...

// சங்கம் டெக்னாலஜீஸின் தற்காலிக தலைவராக கப்பி பொறுப்பேற்று உள்ளார்...///


வாழ்க!

வாழ்க!

ஆயில்யன் said...

டூ கப்பி பாஸ்!


சொன்னதை விட அதிகமாவே சவுண்டா
கூவுறேனா பாஸ்???

இராம்/Raam said...

/திரு .கே.ஆர்.எஜு//

இதை நாக்கை சுழட்டி சொல்லி பார்த்தேன்....

சிப்பு சிப்பா வருது... :))

ஆயில்யன் said...

//தயாரித்த வேரை இப்போது உங்கள் முன்னிலையில் கஸ்டமர்களுக்கு அளிக்கிறோம் விரைவில் மீதியையிம் கொடுப்போம் என உறுதி கூறுகிறேன்//


சாப்ட் கொடுத்தாலும் சரி இல்ல எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டாலும் சரி நோ ப்ராப்ளம் பாஸ்!

பட் கம்பெனி இப்ப உங்க கையில :)

கோபிநாத் said...

டைமிங் போஸ்ட்டு கலக்கல் அண்ணாச்சி ;))

ஆயில்யன் said...

//ஆனாலும் நம்ம கப்பிக்கு ரொம்பத் தான் தைரியம்... பச்சப் புள்ள மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு போஸ் வேற கொடுக்கிறான் பாருப்பா...//

:)))))))))))))))

இராம்/Raam said...

//சற்று முன் அந்த நிறுவனத்தின் தலைவர் திரு .கே.ஆர்.எஜு ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார்...அந்த அறிக்கையோடு தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்...//

அந்த கடிதத்தை பொதுவில் வைக்காத போர்வாளை கண்டிக்கிறேன்... :)

கோபிநாத் said...

\\நம்பர் 12 விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
துபாய் பஸ் ஸ்டாண்ட் அருகில்
துபாய்...
\\

ம்க்கும்...இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..கோல்மால் மட்டும் துபாய் முகவரியில தான் பண்ணுவிங்க போல!!

உலகத்தரம் வாய்ந்த பதிவுன்னு இதுல இருந்தே தெரியுது ;)))

கோபிநாத் said...

\\மேலும் அதிர்ச்சிகரமான வகையில் அவர் கூறியதாவது தமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் சாப்ட்வேர் என்றால் என்னவென்றே தெரியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்...
\\

சூப்பரு ;))))

குடுகுடுப்பை said...

சங்கம் டெக்ல சாப்பிட சேர HR kku 2 லச்சம் கொடுக்கனுமாம், அது உண்மையா?

Namakkal Shibi said...

:))

கப்பி | Kappi said...

அடப்பாவிகளாஆஆஅ...மொத்த ஆப்பும் எனக்குதானா :)))

கப்பி | Kappi said...

"சங்கத்தால் வந்த பங்கம்" - அமிஞ்சகரை டைம்ஸ் அதிர்ச்சி ரிப்போர்ட்

கப்பி | Kappi said...

//சொன்னதை விட அதிகமாவே சவுண்டா
கூவுறேனா பாஸ்???//

ரொம்ம்ப ஓவராவே கூவிட்டீங்க பாஸ்..சங்கத்துக்கு ச்சியர் லீடர் பொண்ணுங்க வேணும்ன்ற உங்க கோரிக்கை ரிஜெக்டட் :))

கப்பி | Kappi said...

சங்கம் திவாலாகப் போவது தெரிந்து காலி கல்லா பெட்டியுடன் அப்ஸ்காண்ட் ஆன கைப்பு எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வருமாறு வேண்டி வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்

கப்பி | Kappi said...

சங்கத்து சிங்கங்கள் இந்த நிலை கண்டு அதிர்ச்சி கொள்ளத் தேவையில்லை. சங்கத்தை காப்பாற்றி கரை சேர்ப்பதாக தளபதி சிபி சூளுரைத்துள்ளார்.

'எவ்வளவோ
பாத்துட்டோம்.இதெல்லாம் ஜுஜுபி' என்று ஜிலேபி சாப்பிட்டபடி போர்வாள் தேவ் அறிக்கை விடுத்திருக்கிறார்.

தடைகள் பல தாண்டி களங்கள் பல கண்ட தல கைப்பு தண்டவாளத்தில் தலை வைத்தாவது சங்கத்தை மீட்டெடுக்க உறுதிபூண்டிருக்கிறார்.

புலிக்கு புல் போடும் வேலை பார்த்தாவது உலகவங்கி கடனை அடைப்பதாக சூடான் புலி சிவா தல கைப்புமேல் சத்தியம் செய்துள்ளார்.

சிங்கப்பூர் சிட்டுகளைப் பின் தொடருவதை நிறுத்திவிட்டு சீரியஸ் பதிவுகளிட்டு சீரிய முறையில் சங்கத்தை ரிசெஷனிலிருந்து வெளிக்கொண்டுவர இராயலார் உறுதிபூண்டுள்ளார்.

வெட்டிகாரும் ஜொள்ளுப்பாண்டியாரும் மாறுவேடத்தில் திரிவதால் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை.

தலைமறைவான கே.ஆர்.எஜூவின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக்கணக்குகள் கோல்மால்களில் ஏற்கனவே முன் அனுபவமுள்ள இளா தன் திறமையால் மேலும்பல தில்லாலங்கடி செய்து நிதிநிலைமையை சரிசெய்ய முனைந்துள்ளார்.


சங்க சிங்கங்கள் இந்த நிலை கண்டு கண்கலங்காமல் சங்கத்து தூண்களுக்கு முட்டுக்கொடுத்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


யெஸ் வீ கேனை. ச்சே..யெஸ் வீ கேன்.

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))

Namakkal Shibi said...

//தலைமறைவான கே.ஆர்.எஜூவின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக்கணக்குகள் கோல்மால்களில் ஏற்கனவே முன் அனுபவமுள்ள இளா தன் திறமையால் மேலும்பல தில்லாலங்கடி செய்து நிதிநிலைமையை சரிசெய்ய முனைந்துள்ளார்.//

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தலைமறைவான கே.ஆர்.எஜூவின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன//

அடப்பாவிங்களா!
அப்போ இந்த மாசம் சங்கத்துச் சிங்கங்களுக்குச் சம்பளம் கெடையாதா? :))