Thursday, January 8, 2009

நில் கவனி பதிவிடு

 
ஆன்லைனில் ஸ்டோரேஜில் தாங்கள் தங்கள் படத்தை சேமிப்பவரா??
இன்று வலைஉலகில் புகைப்படங்களை இலவசமாக சேமிக்க பல இணைய தளங்கள்இலவச சேவைகளை தருகின்றன ( www.photobucket.com, www.imageshock.com )இவ்வாறன சேவைகளை நாம் பயன்படுத்தும் போது மிககவனமாக இருத்தல் வேண்டும்.இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வலை உலகத்திற்க்கு வெட்டவெளிச்சமாகிவிடும்.


தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்தயவு செய்து தங்களின் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்யவும்இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வேறு ஏதாவது பயன்பாட்டிற்க்கு உங்களுக்கு தெரியாமலேயே பயன்படுத்தப்படாலாம்.


இவ்வாறான ஆனலைன் சேமிப்பு சேவைதரும் இணையதளங்களில் தேடுதல் பொறியும் இருக்கும்எனபது பல பேருக்கு தெரிவதில்லை. வேறு ஒரு தேவைக்காக ஒரு புகைப்படத்தை இவ்வாறான இணையம் ஒன்றில் தேடிய போது ஒரு இளம் பெண் கணிணி வல்லுனரின் ஆல்பம் ஒன்று அவரின் அன்றாட வாழ்கையை வெளிச்சம் போட்டு காட்டியது மிக வருத்தத்தை அளித்தது. படித்த வலை உலக நெளிவு சுளிவு தெரிந்த கண்ணி வல்லுனர்களே இவ்வாறு செய்யும் போது புதிய வரவுகள் எம்மாத்திரம்?


முடிந்த அளவிற்க்கு அந்தரங்க புகைப்படம் எடுக்காதீர்கள், அவ்வாறு எடுத்தாலும் ஆன்லைனில் சேமிக்காதீர், அவ்வாறு சேமித்தாலும் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்ய மறக்காதீர்.இவ்வாறு புகைப்படங்களை பதிவிடவே டெடிகேட்டட் இணையங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா ??

4 comments:

ILA (a) இளா said...

சரிங்க ஆபீசர்

தமிழன்-கறுப்பி... said...

ரைட்டு...

இளைய கவி said...

//
ILA said...
சரிங்க ஆபீசர்

Thu Jan 08, 01:31:00 AM IST


தமிழன்-கறுப்பி... said...
ரைட்டு...

Thu Jan 08, 02:45:00 AM
//

மக்கா நான் சீரியஸா பதிவு போட்டிருக்கேன்..

வால்பையன் said...

//மக்கா நான் சீரியஸா பதிவு போட்டிருக்கேன்..//

காமெடி பண்ணவேண்டிய இடத்துல சீரியஸா எழுதுற
உன் ப்ளாக்குல காமெடி பண்ணி வச்சிருக்க!

என்ன கொடுமை சார் இது!