Wednesday, January 7, 2009

காமத்தீயடி நீ எனக்கு !

ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.
உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.


கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்
மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்

உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க
உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க


நடப்பது என்னவென்றே அறியாமல் நான்
என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்

புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக
உன் முன்னழகும் கண்டு நான் பலியாக


உன் வளைகரம் தீண்டி வாலிபம் உருக
காமத்தீ கண்களில் ஆழியென பெருக.


அய்யகோ அடுத்தென்ன என்ற வேளையில
காதல் சூடு தாங்காமல் காமனவன் மாரி பொழிய
நனைந்த உன் கோலம் கண்டு மனம் கசக்கி பிழிய.
நிமிடங்கள் கலைந்தது மெளனத்தில்
கண்கள் உரைந்தன மோகத்தில்.

என் சிருங்கார வித்தைகளை சிங்காரி உன்னிடம்
மன்மத கலைகளை கற்றிந்த பெண்ணிடம்.
அட்டவணையிட்டு ஆற்றிக்கொள்ள
அம்மம்மா என என்னவள் எனை ஏற்றுக்கொள்ள.


காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே

27 comments:

நாமக்கல் சிபி said...

//காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே//

சபாஷ்! சூப்பர் லைன்ஸ்!

நாமக்கல் சிபி said...

இளைய கவி என்கிற பெயரை நிரூபிக்கிறேய்யா!

வால்பையன் said...

தம்பி இது உன் ப்ளாக் இல்லை
வருத்தபடாத வாலிபர் சங்கம்

இங்கே காமெடி தான் பண்ணனும்
கவிதை பாடி ட்ராஜடி பண்ணக்கூடாது!

வால்பையன் said...

இதற்கு தண்டனையாக உடனடியாக ஒரு கலக்கல் காமெடி பதிவு போட வேண்டும்

நாமக்கல் சிபி said...

//தம்பி இது உன் ப்ளாக் இல்லை
வருத்தபடாத வாலிபர் சங்கம்

இங்கே காமெடி தான் பண்ணனும்
கவிதை பாடி ட்ராஜடி பண்ணக்கூடாது!//

யாருய்யா இது காமெடி இல்லைன்னு சொல்றது!

எனக்கொண்ணும் அப்படித் தோணலையே!

வால்பையன் said...

//யாருய்யா இது காமெடி இல்லைன்னு சொல்றது!//

உங்க கஷ்டம் புரியுது அங்கிள்

நாமக்கல் சிபி said...

/உங்க கஷ்டம் புரியுது அங்கிள்//

இந்தக் கவிதை(!?)ல வரிக்கு வரி சுட்டிக்காட்டி கலாய்க்க முடியும் நம்மால்!

வால்பையன் said...

Namakkal Shibi said...

/உங்க கஷ்டம் புரியுது அங்கிள்//

இந்தக் கவிதை(!?)ல வரிக்கு வரி சுட்டிக்காட்டி கலாய்க்க முடியும் நம்மால்!//

இளையகவி டவுசர உருவ முடியும்னு சொல்ரிங்க கரைக்ட்டா!!

வால்பையன் said...

//ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.//

வாத்துபாட்டுக்கு குவா குவான்னு கத்தும்,
அது உன்னைய தான் கூப்பிட்டுச்சுன்னு எப்படி சொல்ற

வால்பையன் said...

//உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.//

வாத்துதோட பின்னாடியை பார்த்து செத்து போறிங்கரயேடா படுபாவி

வால்பையன் said...

//கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்//

மோகினி நடமாட்டம் அதிகமோ!

வால்பையன் said...

//மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்//

வேசம் எங்கய்யா போட்டுச்சு,
அது சும்மாவே குரங்கு மாதிரி தானே இருக்கு!

வால்பையன் said...

//உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க//

உருட்டு கட்டையில தங்கிச்சிகிட்ட வாங்கின அடி பத்தலையா?

வால்பையன் said...

//உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க//

நல்லா பாருடே அது உன் செல்போன் ரிங்டோனு,

கொலுசொலின்னு எவ காலையும் புடிச்சு சொறிஞ்சிராத

வால்பையன் said...

//நடப்பது என்னவென்றே அறியாமல் நான்//

போதையில இருந்தியாக்கும்

வால்பையன் said...

//என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்//

கன்பார்ம்டா போதை தான்

வால்பையன் said...

//புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக//

நீ தங்கச்சிகிட்ட தினமும் அடிவாங்குறத இப்படி ஒப்பன் ஸ்டேண்ட்மெண்ட் கொடுக்கனுமா?

வால்பையன் said...

//உன் முன்னழகும் கண்டு நான் பலியாக//

கண்ணாடி போடுடா டே!

நாமக்கல் சிபி said...

இப்ப பார்த்தீங்களா வால்பையன்! எத்தினி காமெடி இருக்கு இந்தக் கவிதைக்குள்ளேன்னு!

:))

//இளையகவி டவுசர உருவ முடியும்னு சொல்ரிங்க கரைக்ட்டா!!//

எக்ஸாக்ட்லி!

இளைய கவி said...

//காளையடக்குதல் வீரமாம் இங்கே
கன்னியடக்குதலும் வீரம் தானே//

சபாஷ்! சூப்பர் லைன்ஸ்!
ரொம்ப நன்றி சித்தப்பா

இளைய கவி said...

// வால்பையன் said...

//புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக//

நீ தங்கச்சிகிட்ட தினமும் அடிவாங்குறத இப்படி ஒப்பன் ஸ்டேண்ட்மெண்ட் கொடுக்கனுமா?//
மச்சான் நான் சரண்டர் மச்சான். ஆயிரம் தான் இருந்தாலும் நீ கம்பெனி ரகசியத்த வெளில சொல்லியிருக்க கூடாது மச்சான்

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா...
மார்க்கமான கவிதானய்யா நீர்...:)

இளைய கவி said...

//தமிழன்-கறுப்பி... said...
ஆஹா...
மார்க்கமான கவிதானய்யா நீர்...:)//

மிகவும் நன்றி ஐயா

SP.VR. SUBBIAH said...

சொற்பிழை:
அண்ணம் அல்ல அன்னம்

இளைய கவி said...

// SP.VR. SUBBIAH said...

சொற்பிழை:
அண்ணம் அல்ல அன்னம்
//

அறியா சிறுவன் செய்த சொற்பிழையை பொருத்தருள்க.

Unknown said...

///
காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே
///

புலவரே, உமது bottle, மன்னிக்கவும் உமது பாட்டில் குறை இருக்கிறது.

கன்னியடக்குதல் என்பதை விடவும் கன்னிமடக்குதல் என்று வந்திருக்க வேண்டும். ஆகவே, உமக்கு பரிசாக வழங்குகிற எம்.சி. ஃபுல் பாட்டிலில் ஒரு 90 அபராதம்....