நாட்டில் உள்ள அனைத்து டிவி..பேப்பர்.. வார..மாத பத்திரிக்கை எல்லாத்தையும் கூப்பிட்டு சங்கத்தின் புதிய அலுவலகம் முன் உட்கார வைத்திருந்தார் தலக் கைப்பு
சங்கத்தின் மொத்த நிர்வாக குழுவும் அங்கே ஆஜர் ஆயிருந்தாங்க.. சங்கம் டீ ஷ்ர்ட் எல்லாம் போட்டுகிட்டு தல யைச் சுத்தி நின்னாங்க...
"இங்கேப் பாருங்கப்பா.. வெளியே வெள்ளைக்காரன் பேப்பர்ல்ல இருந்து வெறூம் வெள்ளை பேப்பர் வச்சு விக்கறவன் வரைக்கும் வந்துருக்கான்.. எல்லாம் என்னோட மகிமை...இன்னிக்கு நம்ம சங்கம் ஓலக் லெவல்ல கிரிக்கெட் புகழ் அடையப்போகுதுன்னா அதுக்கு என்னோடு உழைப்பு தான் காரணம்.. அதைப் பத்தி விலாவரியா பேட்டி எடுக்க தான் வந்துருக்காங்க.. ஒருத்தனும் வெளியே வந்து பேசபிடாது... அம்புட்டு பயலுக்கு காபி..டீ..டிபன்.. முறுக்கு வடைன்னு சப்ளை பண்றதோட நிறுத்திக்கணும்... நான் கேள்வியை எல்லாம் ஹேண்டில் பண்ணிக்குவேன் .. புரியுதா....இப்போ நான் கிளம்பட்டா...." கைப்பு கிரிக்கெட் கெட்டப்பில் கிளம்ப
"தல தனியா அவ்வளவு பேரையும் எப்படி நீங்க சமாளிப்பீங்க... நான் துணைக்கு வர்றவா" தளபதி சிபி கேட்க.. கடும் கோபத்தோடு ஒரு டஜன் முறை தல தன் சொந்த தலையை சிபியை பார்த்து திருப்புகிறார்.. அந்த வேகம் தாளாமல் சிபியோடு மொத்த சிங்கங்களும் சிலிப் ஆகி கீழே விழுகிறார்கள்...
தல வெளியே கால் வைக்கும் போது.. ஸ்பீக்கரில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே.... அப்படின்னு பாட்டு ஒலிக்குது..
"இந்தப் பாட்டு யாரோட வேலை ராஜா?"
"இந்த தேன்கிண்ணம் மேட்டர் எல்லாம் ராம் கப்பி வோட வேலைங்கறது நாட்டுக்கே தெரியுமே தல.." தேவ் பிட்டைப் போட...
"பாட்டு நல்லாயிருக்கு.. பட் லிரிக்ஸ் சின்ன சேஞ்ச் பண்ணு... வெறும் சிங்கம் வேணாம்... சிங்கம் ஒண்ணு புறப்பட்டதே..டரியல் சிங்கம் ஒண்ணு புறப்பட்டதேன்னு மாத்து.." டரியலுக்கு அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு போகிறார்.
எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு விட்டு பேட்டியை ஆரம்பிக்கிறார் கைப்பு.
"எல்லாரும் கேளுங்க... கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க....."
சூரியன் எப்.எம் 98.3 ஐ கப்பி ஆன் பண்ணி அலற விடுகிறான்...எல்லாரும் குழம்பி நிக்குறாங்க.
"ராஸ்கல் காமெடி பண்ணுறீயா... நான் என்ன எப்.எம் வெளம்பரமாக் கொடுக்குறேன்.. வந்து இருக்க நிருபரை எல்லாம் கேள்வி கேக்கச் சொன்னேன்... ஒழுங்கா காபி ஊத்தி கொடுடா இல்ல கொலை பண்ணிருவேன் உன்னை..."
"மிஸ்டர் கைப்பு... இது வரைக்கும் நடந்த எந்தப் போட்டியில்லயும் நீங்க ஆடவே இல்லையாமே...சும்மா இடுப்புல்ல சுளுக்கு அப்படின்னு சொல்லிட்டு உக்காந்துக்குறீங்கன்னு உங்க எதிர் டீமிலே உங்களைப் பத்திச் சொல்லுறாங்களே...?"
"சின்னப் பசங்க ராஸ்கல்ஸ்.. என்னைய அவனுங்கச் சரியாக் கவனிக்கல்லன்னு நெனக்கிறேன்.. போன மேட்ச் பெங்களூர்ல்ல நடந்தப்போ பவுண்டரிக்கு வெளியே.. நம்ம சிவ மணி மோளம் அடிக்க.. அந்த குட்டைப் பாவடைப் போட்ட புள்ளக கூட நான் குத்துன குத்தாட்டத்தைப் பாத்து மிரண்டு பவுண்டரில்ல நின்ன அவங்க பய ஒருத்தன் கேட்ச்சையே விட்டான் தெரியும்ல்ல...நான் ஆடல்லன்னு சொல்லியிருக்காய்ங்க,... அடுத்த வருசம் அந்த புள்ளக அவங்க ஊர்ல்ல மாதாக் கோயில் திருவிழாவுக்கு ஆடுற காண்ட்ராக்ட் கிடைச்சா சொல்லி விடுறோம் அவசியம் வந்து ஆடணும்ன்னு சொல்லிட்டுல்ல போயிருக்காய்ங்க..." சொல்லிட்டு கெத்தாப் பாக்குரார் கைப்பு
கொல்கத்தா மேட்ச்ல்ல டாஸ் போட நீங்க லேட்டா வந்தீங்கன்னு வைன் ஷார்னே கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்காரே..
அவன் ஒரு வெளக்கெண்ணெய்... டாஸ் போட சில்லரை வேணாமா... கையிலே அம்புட்டும் நூறு ரூவா தாளும் 500 ரூவா தாளுமா இருந்துச்சு..சரின்னு பக்கத்துல்ல இருக்க கடைக்குப் போய் புள்ளங்களுக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு சில்லரை வாங்கிட்டு வந்தேன்.. கொஞ்ச தாமதம் ஆகிருச்சு...
"தல எங்களுக்கு நீ குச்சி மிட்டாய் தரவே இல்லையே..." சிவா கேட்க
"ஆமா தல குருவி ரொட்டிக் கூட தர்றல்லயே" வெட்டியும் துணைக்கு சேர்ந்து கேட்க..
அது அந்த டான் ஸ் ஆடுற புள்ளகளுக்குக் கொடுத்துட்டேன்ப்பா.. அடுத்து நம்ம ஊர் திருவிழா வரும் போது அண்ணன் உங்களுக்கு இதே குருவி ரொட்டி குச்சி முட்டாயும் கூட கம்மர் கட்டும் வாங்கி தர்றேன்.. ஓ.கே...ம்ம்ம் நெக்ஸ்ட் கொஸ்டீன்?"
"சார் இன்னும் நீங்க அந்த கம்ப்ளையின்ட் மேட்டருக்கே பதில் சொல்லல்லயே.... என்ன இருந்தாலும் லேட் லேட் தானே சார்..."
"என்னய்யா லேட் என்னய்யா டாஸ் போட லேட்டா வந்தாலும் பந்து அடிக்க வந்துட்டு ஒரே பந்துல்ல சீக்கிரம் போயிட்டேன்ல்ல.. அவனை மாதிரி நான் வந்து உள்ளே நின்னு நிதானாமா பந்தை அங்கிட்டும் இங்கிட்டும் தூக்கியும் வீசியும் அடிச்சு டைம் வேஸ்ட்டா பண்ணேன்... நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி.. அவன் ஒரு பந்தை மைதானத்துக்கு வெளியே அடிச்சான்... எங்க பைய ஒருத்தன் தொலைஞ்ச பந்தை தேட வண்டி எடுத்துட்டு கொல்கத்தாவுல்ல வழி தெரியாம காணமலே போயிட்டான்... அதை எல்லாம் நான் கம்ப்ளையின்ட்டாப் பண்ணேன்.. நல்லா சொல்லுறாங்கய்யா கம்ப்ளையிண்ட்..." ஹேஹேன்னு கைப்பு சிரிக்க கூட சிங்கங்களும் சிரிக்கிறாங்க...
"தல பந்து கிடைச்சிருச்சு... இந்தா இருக்கு பாருங்க... பயபுள்ள் பொறுப்பே இல்லாம பந்தை பர்மாவுக்கு இலல் அடிச்சு அனுப்பிட்டான்...இருந்தாலும் கண்டுபிடிச்சோம்ல்ல..." கையில் பந்தோட வரும் இளா சங்கக் கூட்டத்தில் சங்கமம் ஆகிறார்.
"சரி உங்க டீம் சிறப்பு தூதரா இருந்த அந்த ஸ்டார் நடிகையை எதுக்கு எடுத்தீங்க?"
"இது கொஞ்சம் சிக்கலான கேள்வி இருந்தாலும் சொல்லுறேன்... அந்த புள்ள மேட்ச் பாக்க வந்தா தான் நாங்க நல்லா ஆடுவோம்ன்னு சிங்கமெல்லாம் சொன்னாங்க...அந்தப் புள்ளையை நானும் கெஞ்சி கதறி கான்ட்ராக்ட் போட்டு கூப்பிட்டு பவுண்டரி பக்கமா சீட் போட்டு உக்கார வச்சேன்.. படு பாவி பயலுக.. அடிக்கிறவன் பந்தை சிலிப்க்கு அடிச்சாக் கூட அதை புட் பால் மாதிரி தட்டி பவுண்டரிக்குப் போக வச்சு அந்த சாக்குல்ல இவனுங்களும் பின்னாலேயே போய் அந்த புள்ள கிட்ட கடலை வறுக்கிறானுங்க.. அதுல்லயும் அந்த சிபி இருக்காரே... பவுண்ட்ரி பக்கம் பந்தை ஏன்டா அடிக்க மாட்டேங்குறன்னு எதிர் டீம் கிட்ட சண்டைக்கே போயிட்டார்..."
"அப்புறம் உங்க டீம் ராம் எதுக்கு எல்லார் முன்னாடியும் உங்களை அடிச்சாரு....?"
"அடிச்சவனே மறந்துட்டான்.. நீங்க ஏன்டா....?"
"தல இந்தக் கேள்விக்கு நானே பதில் சொல்லவா...." ராம் பவ்யமா வந்து நின்னான்.
"ம்ம்ம் சொல்லு"
"இதுக்குக் காரணம் எங்க கோச் தான்...."
"யோவ் கொத்ஸ் நீயா ய்யா....." கைப்பு தேவை முறைக்க
"ஆமாங்க கடைசி ஓவர்ல்ல ஆறு பாலுக்கு முப்பது ரன் இருந்துச்சு... அப்போ எங்க கோச் வந்து காட்டுக் கத்தலா அடிச்சு ஆடுறா கொய்யா.... அடிச்சு ஆடுறா கொய்யா.....அப்படின்னு உசுப்பு ஏத்துனார்"
"சுத்திப் பாத்தேன்... நான் அடிக்கிற அளவுக்கு யாரும் பக்கத்துல்ல இல்ல... எதிரி டீம்ல்ல எல்லாருமே வாட்டச் சாட்டமா இருந்தாங்க.. யோசிச்சேன்... யார் அடிச்சாலும் சும்மா அசால்ட்டா தாங்குற ஒரே மனதைரியம் கொண்ட ஒப்பற்ற மனுசன்.. எங்கத் தல தான் அதான் வேகமா ஓடிப் போய் பெவிலியன்ல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த எங்கத் தல கன்னத்துல்ல பளேர்ன்னு ஒரு அரை விட்டுட்டு வந்து ஆடுனேன்... நாங்க செயிச்சுட்டோம்.. ஆனா எங்கத் தல கண்ணீர் விட்டு அழுததை டிவியிலே திரும்ப திரும்ப பாக்கும் போது தான் மனச் சங்கடமாப் போயிச்சுங்க"
"ராயலு... களத்துல்ல இறங்கிட்டா ஒரு வீரனுக்கு பிலீங் வரவேக் கூடாது.. அதுவும் நீ ஒரு டரியல் சிங்கம்... " ராயலை நெஞ்சோடு தழுவி கொள்கிறார்...
"சரி இன்னொரு கேள்வி பொதுவா கிரிக்கெட்ல்ல ட்ரிங்க்ஸ் பிரேக் வேணாம்ன்னு சொன்னீங்களாமே ஏன்?"
"ஆமாய்யா வேணாம்ன்னு தான் சொன்னேன்...போனத் தடவை இப்படித் தான் வெளையாட்டு சூடாப் போயிட்டு இருந்தப்போ நம்ம அம்பையர் அண்ணாச்சி ட்ரிங்க்ஸ்ன்னு சொல்லி நிறுத்திட்டார்... நானும் நம்ம சிங்கம்ஸும் வெளையாட்டு முடியட்டும் அப்புறம் ஒண்ணா உக்காந்து ட்ரிங்க்ஸ் எல்லாம் வச்சுக்கலாம் அப்படின்னு எவ்வளவோ சொன்னோம்... அவர் கேக்கல்ல ரூல்ஸ் அது இதுன்னு சொல்லிட்டார்... பொறவு நம்ம சிங்கம்ஸ்க்கு எல்லாம் அசலூர் சரக்கு ஒத்துக்காதுன்னு நல்ல நாட்டுச் சரக்கு வாங்கி வச்சிருந்ததை எடுத்துட்டு வந்து மைதானத்துல்ல அடிச்சோம். தனியா சாப்பிடுறது தமிழர் பண்பாட்டுக்கு இழுக்குன்னு சொல்லி அந்த எதிர் டீமுக்கு ஊத்தி குடுத்தோம்... நம்ம சிங்கம்ஸ் எல்லாம் ஸ்டெடியா நிக்குறாயங்க..ஆனாப் பாருங்க அவனுவ எல்லாம் அப்பீட் ஆயிட்டாங்க...அம்பையர் அண்ணாச்சி முதல் மடக்குல்லேயே ரீப்பிட் ஆயிட்டார்.... பொறவு கப் எங்களுக்கு கிடைச்சது..கப் கையிலேக் கிடைச்சு என்னப் பிரயோசனம் அதுல்ல ஊத்தி குடிக்க இல்லாம சரக்கு மொத்தமும் தான் தீந்துப் போயிருச்சே... அதான் சொல்லுறேன் மேட்ச் முடிஞ்சப் பொறவு தான் ட்ரீங்க்ஸ் எல்லாம் ...நான் சொல்லுறது சரி தானே..."
ஆமா ஆமான்னு சங்கத்து சிங்கம்ஸ் எல்லாம் சவுண்ட்டா சொல்ல நிருபர்கள் பக்கம் அமைதி....
ஜொள்ளுபாண்டி கேன் கேனாக டிரிங்க்ஸ் சப்ளை பண்ணி சைலண்ட்டாச் சிரிச்சுகிட்டு இருந்தான்.
உங்கள் ஆதரவைப் பொறுத்து IPLல் டரியல் சிங்கம்ஸ் செய்யும் அட்டகாசங்கள் தொடரும்ங்கோ
17 comments:
:))))
சூப்பர் :-))
ஆனாலும் ரொமபத்தான் 'அடிச்சு' ஆடுறீங்க பாவம் உங்க தல :-)
excellent!!!!
--Ravi
:)))
ஆனாலும் நான் உருப்படியா ஒரு அட்வைஸ் குடுத்தேன் என்பதும் அதுக்கு மேல அதை ராம் கேட்டான் என்பதும் எங்கள் பெருமைக்கே இழுக்கு விளைவிக்கும் செயல். இதற்காக உங்க மேல் மானநஷ்ட வழக்கு போட்டு 200 மில்லியன் ரூபாய் வாங்காம விட மாட்டேன்.
இப்படி எல்லாம் உதார் விட்டுட்டு அப்புறமா எல்லாரும் சேர்ந்து ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட உடனே, 'வம்பு வழக்கு இன்னும் எதுக்கு' அப்படின்னு போயிட மாட்டோம்.
(இந்த பாட்டைச் சொன்னதுக்காக தோப்புக்கரணம் எல்லாம் போடச் சொல்லக் கூடாது. அது உடம்புக்கே நல்லதா இருந்தால் கூட!)
சூப்பர்! கலக்குங்க!!!
/./அந்த சிபி இருக்காரே... பவுண்ட்ரி பக்கம் பந்தை ஏன்டா அடிக்க மாட்டேங்குறன்னு எதிர் டீம் கிட்ட சண்டைக்கே போயிட்டார்..."
//
:)))))
:))))
IPLல எதையும் விடலபோல இருக்கே.. சூப்பரப்பு....
கடேசி வரைக்கும் கைப்புக்கு கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லாம விட்ட நீங்க தான்யா சங்கத்து சூப்பர் சிங்கம். நயன் தாராவை கூப்பிட சிபி போயிருந்தா எல்லாமே "கன""கச்சி"தமா முடிஞ்சிருக்குமே..
;)))))
அல்டிமேட் டைமிங்யா தேவ்
:)
ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த பார்ட்டுக்கு வெய்டீஸ். :)))
kalakkal thala ;-))
yengal aatharavu yenrum oundu
'அடிச்சு' ஆடுங்க
அடுத்த பார்ட்டுக்கு வெய்டிங்.
:))))))
'பேட்' டையே நம்ம கண்ணுல
காட்ட மாட்டேங்கறாஙக்ளேன்னு
ஓரமா உக்கார்ந்து தாகசாந்தி பண்ணிகிட்டு
இருந்தா இப்படி சரக்கு சப்பளையர்
ஆக்கிட்டாரே தல... :)))))
Nice Post !
Use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.
கலக்கலோ கலக்கல்!
//அவன் ஒரு வெளக்கெண்ணெய்... டாஸ் போட சில்லரை வேணாமா... கையிலே அம்புட்டும் நூறு ரூவா தாளும் 500 ரூவா தாளுமா இருந்துச்சு//
கைப்புவை இப்பிடிப் பசையுள்ள கைப்ஸா மாட்டி வுடறத பார்த்தா தேவ் அண்ணாத்த கைப்ஸூக்குன்னு ஏதோ தனியா விசயம் வச்சிருக்காரு போல! :-))
//ஆமா தல குருவி ரொட்டிக் கூட தர்றல்லயே" வெட்டியும் துணைக்கு சேர்ந்து கேட்க//
தல எப்படியா குருவி ரொட்டி கொடுப்பாரு?
தளபதி தான் "குருவி" ரொட்டி எல்லாம் கொடுப்பாரு!
இப்படி எல்லாம் வாசாப்பா கேள்வி கேட்டு தல கைப்ஸை ரென்சன் ஆக்குறதே வழக்கமாப் போச்சு இந்த வெட்டிக்கு!
//ராயலு... களத்துல்ல இறங்கிட்டா ஒரு வீரனுக்கு பிலீங் வரவேக் கூடாது..//
ஹிஹி! Ulti :-))))
இப்போ புரியுது தல கைப்பு ராயலு மேல கம்ப்ளெயிண்ட் கொடுக்கவே மாட்டேன்-னு ஏன் ஒத்தைக் கால்-ல நின்னாருன்னு!
//பவுண்டரி பக்கமா சீட் போட்டு உக்கார வச்சேன்//
தேவ் அண்ணாத்த
அடுத்த பார்ட்-ல ஸ்டார் நடிகையோட எடத்தை சேஞ்ச் பண்ணுங்க! வாஸ்து சரியில்ல! சிபிக்கு ஒத்துக்காது! :-)
விக்கெட் பக்கம் உட்கார வைங்க! ஆல் பீபிள்ஸ் நாக் அவுட்! :-)
Post a Comment